உலகிலேயே அதிகமான மக்களால் துரதிர்ஷ்டவ சமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். இதன் காரண காரியங்களை ஆராயும்போது குற்றவியல் சட்டமும் அதில் அடங்குகின்றது. உலகில் அமைதி நிலவ,சமத்துவம் சகோதரத்துவம், தழைத்தோங்க அன்று தன் அழகிய நிலைப்பாட்டை எடுத்து இயம்பியது,இன்று இயம்புகின்றது. என்றும் இயம்பும் உலக முடிவு நாள் வரை.
இந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டம் எவ்வளவு தெளிவானது.அறிவுபூர்வமானது. நடைமுறைபடுத்த தகுதியானது பகிரங்கமானது. குற்றங்களை குறைக்க வல்லது என்பதை எடுத்து முன் வைப்பதுதான் இந்த பதிவு.
ஏற்றத்தாழ்வு
ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் நன்மைகளை வாரி வழங்குவதில் இஸ்லாம் என்றுமே முன்னிலை வகிக்கின்றது. இயற்கையிலேயே இறைவன் படைப்பில் மனிதன் எல்லா வகையிலும் ஏற்றத்தாழ் வோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு கூட்டம் பலம் பொருந்தியதாக இருந்தால் , மற்றொரு கூட்டம் பலகீனமாக படைக்கப்பட்டிருக்கும், ஒருவன் செல்வந்தனாக இருந்தால் ஒருவன் ஏழையாக படைக்கப்பட்டிருப்பான். ஒருவன் குலத்தில் உயர்ந்தவன் என்றிருப்பான், ஒருவன் தாழ்ந்தவன் என்றிருப்பான்.இப்படி ஏற்றத்தாழ்வு , வறுமை செல்வம், வலிமை, பலகீனம் என்பது இறைவனின் இயற்க்கை படைப்பு.
வலிமை மிக்கவன் பலகீனமானவனை அடக்கி ஆளுதல், அவன் மீது தன் அதிகாரத்தை பிரயோகித்தல்,அவனுக்கு அநீதி இழைத்தல்.தன் வலிமையைக்கொண்டு அவன் சொத்து சுகங்களை சூறையாடுதல் எதிர்த்து நிற்பவர்களை தன் வலிமையைக்கொண்டு அடக்குதல் போன்ற அரசின் குற்றவியல் சட்டத்திற்கு கொஞ்சம் கூட பயமின்றி குற்றத்தை அவனால் அரங்கேற்ற முடிகின்றது. இது ஏன் நடைபெறுகின்றது?
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணம். அங்கே பொம்மைகளை கடையில் வாங்குவதுபோல் மிகவும் சர்வசாதரணமாக வாங்கி விடுகின்றனர். அதன் பின் விளைவுகளை அதிகமாக தெரிந்து வைத்திருந்தும் பள்ளிக்கு செல்லும் மாணவன் கூட சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு அதன் விபரீதம் வெளியான பின்னே சிந்திக்கத்தலைப்படுகின்றனர்.
குற்றங்களின் பின்னணியும், அதை செயல்படுத்திய விதமும் சர்வசாதாரணமாக ஆராயப்பட்டு குற்றங்களுக்குண்டான தண்டனை குற்றவாளி திருந்தி வரும் தண்டனையாக இருப்பதில்லை.மாறாக முன்பிருந்ததைவிட படுமோசமான மூர்க்கனாக வெளி வருகின்றான். அதைவிட பன்மடங்கு கொலைக்கு வித்திடும் ஒரு மாபாதக செயலின் முன் திட்டத்தோடு வெளியில் வருகின்றான். அநியாயக் கொலைக்கு கொலை என்றிருந்தால் குற்றங்கள் சங்கிலித்தொடராகும் வாய்ப்பே இல்லாமல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போகும். ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழி பிறக்கும். இதை இவர்களும் புரிந்திருக்க வில்லை.
ஆதலால் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இவர்களுக்கும் தோல்வியே முடிவாக இருக்கின்றது. காரணம் கொடுக்கப்படும் தண்டனையில் வீரியம் இல்லை. தண்டனை பெற்றவன் இனி இக்குற்றத்தை கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு தண்டனை பகிரங்கமாக இருக்கவேணும். இந்த தண்டனையை பார்க்கும் சமூகம் அந்த குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனையில் கடுமை வேணும் இதை செய்யாதவரை மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது என்றும் ஒரு கேள்விக்குறியாகத்தான் சமூகத்தில் இருக்கும்.
ஏற்றத்தாழ்வு ஒரு காரணம்
ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்குபோது இயற்கையிலேயே மனித மனம் அவனை குற்றத்தில் ஈடுபட வைக்கின்றது . எல்லோருமே எல்லாவிதத்திலும் சரி சமமாக படைக்கப்பட்டிருந்தால் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஒருவனிடம் இருக்கும் செல்வம், வலிமை ,குலப்பெருமை, ஆற்றல் அதிகாரம் மற்றும் அனைத்து உலக விஷயங்களில் மற்றவனை விட மேம்பட்டு இருக்கும்போதுதான் அவனை அவன் மனம் தவறு செய்ய அவன் அதிகாரத்தையோ, அவன் ஆற்றலையோ பயன் படுத்தத்தூண்டுகின்றது. வலிமை குன்றியவனுக்கு நீதி கிடைப்பது என்பது அரிதாகின்றது. இருவருமே பலத்தில் சமமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே ஒருவன் மீது ஒருவன் தன் வலிமையை பிரயோகிக்க வாய்ப்பில்லாமல் போகின்றது.
ஆனால் உலகில் மனிதன் படைக்கப்பட்ட நியதியில் ஏற்றத்தாழ்வு என்பது இப்புவியின் இயக்கம் நிற்கும் வரை தொடர்வதாகும். ஆதலால் குற்றங்களே நிகழாத உலகை காண்பது என்பது கும்மிருட்டில் நடுக்கடலில் கடுகை தொலைத்து விட்டு தேடுவதுபோல் தான். ஆதலால் உலக முடிவு நாள் வரை குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்றாலும்,இக்குற்றங்களை களைய வழியே கிடையாதா? இதை தடுப்போர் யாருமில்லையா ? அதற்க்கு இவ்வுலகில் வேறு ஏதாகிலும் சக்தி இல்லவே இல்லையா ? இது தொடர் கதை தானா ? என்பதற்கு இல்லவே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் இவ்வுலகின் கணிசமான குற்றங்களை கண்டிப்பாக துடைத்தெறிய முடியம் என்பதற்கு தீர்வு ஒன்றுதான். அதுதான் இஸ்லாத்தின் அல் -குரானின் குற்றவியல் சட்டங்கள்.
தண்டனையில் கடுமை தேவை
உலகின் மற்ற எந்த சட்டத்தாலும் இன்றுவரை உலகளவில் குற்றங்களை குறைக்க முடியாமல் விழி பிதுங்கி ஒவ்வொரு நாடும் அமைதி வேண்டி ஆளாய் பறக்கும்போது. அதற்கு வடிகாலாய் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் நம் முன்னே விரிகின்றது. இதன் அறிவுபூர்வ குற்றவியல் சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. மாற்றம் தேவை இல்லாதவை.
உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்துவதில் இன்றுவரை தோல்வியைத்தான் தழுவி இருக்கின்றன. ஏனனில் குற்றங்களுக்காக கொடுக்கப்படும் தண்டனை குற்றவாளியை எந்த விதத்திலும் திருத்துவதாக இல்லை. மாறாக தண்டனை என்னும் பெயரில் அவர்கள் உள்ளே வாழும் சொகுசு வாழ்க்கை , நாம் தண்டனை பெற்று உள்ளே வந்து இருக்கின்றோம் என்ற அச்ச உணர்வை ஏற்ப்படுத்தாததுதான்.
அறைகூவல்
இந்த குற்றவியல் சட்டத்திற்கு முஸ்லிம்களாகிய நாம் உரிமை கொண்டாடும் அதே வேளையில், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பில்லாத தேசத்தின் பிரஜைகளாக நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் குற்றவியல் சட்டத்தின் பொறுப்பில் உள்ள அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதை ஒரு அறைகூவலாகவே விடுக்கின்றோம்.
நீங்கள் உண்மையிலேயே நம் தேசத்தின் மீதும், நம் நாட்டின் இறையாண்மையின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்களாக இருந்தால். நம் நாட்டில் சட்டமும் ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டு குற்றங்கள் குறைய வேணும் என்று உண்மையிலேயே விரும்பினால், பெண்களின் கற்பும், மானமும், பாது காக்கப்படவேனும் என்று உள்ளத்தில் உண்மையில் மனப்பூர்வமான உறுதி இருந்தால்,இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சட்ட திட்டங்களில் உள்ளது என்ற குறுகிய வட்டத்தில் பார்க்காமல், இது மனிதக்கரங்களுக்கு அப்பாற்பட்ட , ஒரு இறை சக்தியின் மூலம் வந்தது என்று நினைத்து, குற்றத்திற்குண்டான சட்டமாக அமுல் படுத்திப்பாருங்கள் அதன் அற்புத விளைவை வெகு சீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்.
அப்படியின்றி, குற்றங்கள் மலிந்தாலும் பரவாயில்லை, நாட்டில், லஞ்சம், லாவண்யம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு,அயோக்கியத்தனம், மிரட்டல், இன்னும் என்னென்ன தீமைகள் உலா வருகின்றனவோ அவை அனைத்தும் தொடர்கதையானாலும் பரவாயில்லை , ஒரு சிறுபான்மை மக்களின் மார்க்கத்தின் குற்றவியல் நடைமுறை சட்டத்தை நாட்டின் குற்றவியல் சட்டமாக அறிமுகப்படுத்தத்தயாரில்லை என்று பகிரங்கமாக நீங்கள் சொல்வதைத்தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடியும்.
மனித சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது
மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பலகீனமான,ஆத்திரம், அவசரம், மற்றும் சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட ஒரு ஜீவன்.இறைவனால் படைக்கப்பட்ட மூளையைத்தவிர வேறொன்றும் நம் சிரசில் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட அளவில்தான் சிந்தித்து எதையுமே முடிவு எடுத்து இறுதி கட்டத்திற்கு வரும். அந்த சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட மூளையைக்கொண்டு மனிதனும் தான் மனிதன் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தும் சட்டத்தைத்தான் தன் சிந்தனையில் கொண்டு வந்து சட்டமியற்ற முடியும்.
இது காலத்திற்கு ஏற்பவும் , குற்றத்தின் தன்மை, இடம், பொருள், ஏவல் அனைத்தின் தன்மையைப்பொறுத்து கண்டிப்பாக மாற்றங்களுக்கு உள்ளாகியே தீரும்.
ஆனால் இறைவனின் குற்றவியல் சட்டமோ எக்காலமும் எக்குற்றத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றத்திற்கு இடமின்றி மாறி வரும் காலத்திற்கும் மாற்றத்தேவையில்லாத ஒரு அறிவாற்றல் மிக்க சட்டமாகும். இப்பூவுலகில் அமைதிப்பூங்கா என்னும் குற்றமற்ற மனித சமூகம் எங்கும் உருவாக,குற்றத்தை ஒருவன் செய்யுமுன் அவனை ஒரு கணம் யோசிக்க வைக்கும் கடுமை நிறைந்த சட்டமாகும்.
ஒருவன் ஒரு திருட்டுக்குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். நம் நாட்டு குற்றவியல் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, அரசு செலவில் சாப்பாடு, மற்றும் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்க வைத்துவிட்டு அவனை சிறையிலிருந்து விடுதலை செய்தால், சிறைத்தண்டனை அவனை எந்தவிதத்தில் மாற்றி இருக்கும். ஒரு விளைவும் அதனால் ஏற்ப்பட்டு இருக்காது. இதனால்தான். 15முறை சிறை சென்றவன் மீண்டும் கைது என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோமா இல்லையா ?
குற்றத்தின் தண்டனை எப்படி இருக்கவேணும் ? இந்த குற்றத்தை செய்தவன் இனிமேல் செய்யாத அளவுக்கு இருப்பதோடு, அவனுக்கு கொடுக்கும் தண்டனை பகிரங்கப்படுத்தப்பட்டு, இனிமேல் சமூகத்தில் அந்த குற்றமே நிகழாத வண்ணம் இருக்க வேண்டுமல்லவா ? இதைத்தான் இஸ்லாம் சொல்கின்றது.
மனித உறுப்பை சேதப்படுத்தினால் :
:உயிருக்கு உயிர் என்ற சட்டத்தில்தான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றது என்று அருள் மறை குரான் அதிரடி சட்டத்தை அறிவுபூர்வமாக அள்ளித்தருகின்றது. ஒருவன் உயிருக்கு அநியாயமாக குறி வைப்பவனின் உயிருக்கும் குறி வைக்க சொல்கின்றது.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல், என்று சட்டத்தை வரையறுத்து ஒருவனுக்கு அநியாயமான முறையில் தன் உறுப்புகளில் ஒன்று மற்றவனால் சேதப்படுத்தப்பட்டால், அவன் எந்த உறுப்பை சேதப்படுத்தினானோ, அதே உறுப்பை சேதப்படுத்தவேனும். அதை ஆளும் அரசே செய்யவேணும். அதையும் பகிரங்கமாக செய்யவேணும். என்று சொல்கின்றது.
ஒருவனின் உரிமையுள்ள பொருளை அவனுக்கு தெரியாமல் திருடி விட்டானா அவனது கையை வெட்டு . பின்பு பார் ஓராயிரம் கைகள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும், ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டதா ? கொடு அவனுக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் பெண்களின் கற்பு பாது காக்கப்படும்
ஒருவன் உன் கன்னத்தில் ஞாயமின்றி அறைந்தானா ? அவனும் கன்னத்தில் அறையப்பட்டவேனும். ஒருவன் உன் பல்லை உடைத்தானா ? அவன் பல்லும் உடைக்கப்படவேனும்.இவை அனைத்தும் ஒரு அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டத்தின் மூலம் குற்றத்தின் தன்மையில் அதில் பாரபட்சம் இல்லாமால் நடைமுறைப்படுத்தினால் குற்றமற்ற தேசத்தை நம் கண் முன்னே அரசில் கோலோச்சும் ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் காணமுடியும். உங்கள் முன் தெளிவான அழகான குற்றவியல் சட்டங்கள் இருந்தும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்கள்.
ஒரே ஒருமுறை நடை முறைப்படுத்தி பாருங்கள் ஒரு 5 வருட காலத்திற்கு.இதன் உண்மை உலகுக்கு தெரியவரும். எவ்வளவு மாபாதக செயல் என்று கருதப்படும் குற்றங்களும் இருந்த இடம் தெரியாமல்,,உண்மை ஜனநாயகத்தின் காலில் போட்டு மிதிக்கப்பட்டு அமைதிப்பூங்காவாக ஒட்டு மொத்த தேசமும் குற்றமற்ற தேசமாக மலரும்.
இதனை சட்டமாக்கினால் ஏற்படும் நன்மைகள் :
1. குற்றங்கள் கணிசமாக குறையும்.
2. வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படாது.
3. சிறை குற்றவாளிகளினால் நிரம்பி வழியாது.
4. சிறை சாலைகளை அதிகப்படுத்த வேணும் என்ற அவசியம் இருக்காது.
5. நீதிபதிகள் எண்ணிக்கையையும், அரசு வழக்கறிஞர்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவேனும் என்ற அவசியம் இருக்காது.
6. சிறை சாலையில் குற்றவாளிகளுக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும். அந்தப்பணத்தை வேறு அரசின் பொது நலக்காரியங்களுக்கு பயன் படுத்தலாம்.
7. வழக்குகளுக்கான நீதி கிடைப்பது துரிதப்படுத்தப்படும்.
8. பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழி வகை பிறக்கும்.
9. குற்றம் புரியும் எண்ணமுள்ளவனுக்கு குற்றம் செய்வதற்கு முன் பயத்தை ஏற்ப்படுத்தும்.
10.தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்னும் அவல நிலை அகலும்.
இக்குற்றவியல் சட்டத்தை அமுல் படுத்த தலைப்படும்போது, எந்த நாடு இதற்கு முன்னுரிமை கொடுத்து முந்திக்கொள்கின்றதோ அது அமைதிப்பூங்காவாக, குற்றமற்ற சமுதாய மக்கள் வாழும் பிரதேசமாக உண்மை ஜனநாயகம் என்னும் ஆலமரம் வேரூன்றி நிழல் தரும் நாடாக கண்டிப்பாக மாறும், இச்சட்டம் மாற்றிக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
* இன்னும் எத்தனையோ அலப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் தகுதி பெற்றது இந்த சட்டம்.
* குற்றவாளியை குலை நடுங்கவைக்கும் தன்மை பெற்ற சட்டம்.
* மனிதாபிமானத்தை ஆதரிக்கும் சட்டம்.
* எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காத , கொடுக்கக்கூடாத சட்டம்.
* நீதி செலுத்துபவன் உறவினரே பாதிக்கப்பட்டாலும் நீதியை நிலை நாட்டத்தவறாதே என்று நீதிபதிக்கு உரத்த குரல் கொடுக்கும் சட்டம்.
* நாணல் போல வளைந்து விடாமல் , தர்மத்தாய்க்கு நிழல் கொடுக்கும் சட்டம்.
* உண்மை தன்னை ஊனப்படுத்திவிடாமல், அதற்கு தலைகுனிவு வந்துவிடமால், தடுமாற்றத்திற்கு இடமில்லா சட்டம்.
* இப்புவி கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டிய புனிதம் பொருந்திய சட்டம்.
* இறைவனின் இக்குற்றவியல் சட்டம்.
* அமுல் படுத்தி ஆதரித்து, அதன் பலனை வாழ்நாளிலேயே காணும் அரசு உண்டா?
* உண்டென்றால் அங்கே குற்றமற்ற சமுதாயமும் உண்டு.
* குற்றமற்ற அரசும் உண்டு .
வாருங்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தின் நிழலில்
குற்றமில்லாச் சமுதாயமாக.
அமைதியின் ஆனந்தத்தை நோக்கி...!
அபு ஆசிப் என்ற அப்துல் காதர்
22 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
காதர்,
இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை 'காட்டுமிராண்டித்தனமானது' என்று குற்றம் சாட்டும் ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்களுக்கு கண்டு கேட்டு ஆராய்ந்து தீர்மாணிக்கத் தெரியாது. அவரவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே பட்டுத் தெரியும் கூட்டம் அது.
நேற்று தந்தி டிவி யில் வழக்கு எண் என்னும் நிகழ்ச்சியில், ஒரு சிறுமியை பாலியல் குற்றம் புரிந்து கொன்று சுவற்றுக்குள் வைத்து பூசி மறைத்த ஒருவனைப் பிடித்து கைது செய்த காட்சிகளை காட்டினார்கள்.
அதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பேட்டியைப்பார், "அந்த மிருகத்தை அணுஅணுவாகச் சித்திரவதைச் செய்து எங்கள் பிள்ளை பட்ட அத்தனை வேதனைகளையும் அவனை அனுபவிக்க வைத்து சித்ரவதைச் செய்து கொல்ல வேண்டும்"
இதுதான் பாதிக்கப்படுபவர்களின் நிலை. ஆனால், மூன்றால் நிலையில் இருந்துகொண்டு, கமல் போல, மரண தண்டனை கூடாது என்று எதிர்ப்பவர்கள்கூட தனக்கு ஏற்படும்போதே தலைவலியையும் வயிற்றுவலியையும் உணர்வார்கள்.
பெரிய கடல் போன்ற பேசுபொருளை மிக அழகாகச் சுருக்கித் தந்திருக்கிறாய்.
நன்றியும் வாழ்த்துகளும்
//அதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பேட்டியைப்பார்//
ஐ மீன், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரின் பேட்டியைப்பார்.
சபீர், நீ சொன்னதை இன்னும் படிக்கவில்லை.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
எந்நாட்டிற்கும், எக்காலத்திற்கும் பொருத்தமான குற்றவியல் சட்டத்தைத்தான் நமக்கு அளித்திருக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இச்சட்டம் அன்றும் குற்றத்தை குறைக்க வல்லதாய் இருந்தது. இன்றும் இருக்கின்றது. என்றும் இருக்கும்.
நீ சொல்லும் அந்த சிறுமியின் பெற்றோர்களின் நிலையில் , இன்று காட்டுமிராண்டி சட்டம் என்று வசைபாடும் இவர்கள் இருந்தால். இதைவிட ஒரு அறிவான சட்டம் வேறொன்றுமில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வருவார்கள்.
அதனால்தான் இஸ்லாம் நெத்தியடியாக பாதிக்கப்பட்டவன் நிலையிலிருந்து பார் என்று சட்டத்தை அமுல்படுத்துபவர்களுக்கும், அதை நிறைவேற்றுபவனுக்கும் எடுத்து முன் வைக்கின்றது.
நாட்டில் குற்றம் கலைந்திட தெளிவாக விடுக்கப்ப்பட்ட அறைகூவல்!
நாடு அமைதியும் நிம்மதியும் காண ஆதரிப்பீர் அப்துல் காதராக்காவின் அழகிய வழிமுறையை!!
Dear Abdul Kadir,
I was waiting for this subject to be published here. Your way of explanation is very good. And infact i want to touch on how IPC [ Indian Penal Code ] is mislead by some politician.
Sabeer's comments is commendable. If he did not touch that subject, i will do it. Since he written, he made my work easy.
Most of the time when a muslim explains about these kind of matters, often they are 'stamped' as very arrogant / un educated / draconian law makers.
But when people from so called "higher cast" people affected every body want islamic law to be estabilished...what a hypocrisy.
//ஒருவனின் உரிமையுள்ள பொருளை அவனுக்கு தெரியாமல் திருடி விட்டானா அவனது கையை வெட்டு . பின்பு பார் ஓராயிரம் கைகள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும், ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டதா ? கொடு அவனுக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் பெண்களின் கற்பு பாது காக்கப்படும் //
This writing must be in banner or a bill board near Parliament/ Legislative assembly ..so that the law maker won't forget to make it as a law.
//This writing must be in banner or a bill board near Parliament/ Legislative assembly ..so that the law maker won't forget to make it as a law.//I
zakir,
If I am a member in parliament , sure I will make this bill board as you have mentioned. But unfortunately,even i'm not a local councilor in our town. What I have to do ?
But I'm sure one day they will fall in this intelligent criminal law of Islaam .
That day they will come to know the real affect of this LAW.
INSHAA ALLAH.
laws to crack down on the heinous crime of human smuggling.Human smuggling is a serious criminal offence that endangers human lives and benefits criminal organisations.
Some of them in western countries have imposed a minimum sentences and fines for those convicted.
people who using a ways of irregular arrivals.According to the law and implementation they knows about the 'Quraan' very well what he saying in Islam.
இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகள் எல்லாம் இஸ்லாம் கூறும் கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது நிதர்சனமான பேருண்மை. இப்பொழுதுப் பாதிக்கப்பட்டவர்கள் உணரத்தலைப்பட்டு விட்டனர். ஒரு தீர்ப்பில் மரணத் தண்டனை வழங்கிய பின்னார் “இப்படித்தான் இருக்க வேண்டும் சட்டம்” என்று மக்கள் மனத்தினில் தீர்ப்புக் கூறிக்கொள்கின்றனர். நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பதும்/ கேட்பதும் இப்படித்தான்; இதற்கான காட்டுகள் நிரம்ப உள.
நித்யானந்தாவின் லீலைகள் கசியத்தொடங்கிய காலத்தில், என் அலுவலக ஊழியர்கள் (ஹிந்துச் சகோதரர்கள்) பேசிக் கொண்டது என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன இவ்வாறு:
“முஸ்லிம்களைப் போல் 4 மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் இருந்தால் இப்படிக் கள்ளத்தொடர்பும் வழக்குகளும் தேவையற்றதாகி விடும்; முஸ்லிம்கள் பின்பற்றும் சட்டப்படிப் பெண்களுக்கு அந்தஸ்தும், கவுரவமும் கிடைக்கின்றன”
“சவூதி போல நடுவீதியில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றினால் தான் இந்தக் காமக்கொடூரர்களிடமிருந்து நம் பெண்கள் தப்ப முடியும்”
இப்படியாக அவர்கட்குள்ளாகவே பேசிக்கொள்வதைக் கேட்டதும், “யா அல்லாஹ்! என்னுடைய எந்த ஆற்றலுமின்றி என்னை முஸ்லிமாக ஆக்கி வைத்த உனக்கே எல்லாப் புகழும்” என்று நன்றி கூறிக் கொண்டேன்.
//people who using a ways of irregular arrivals.According to the law and implementation they knows about the 'Quraan' very well what he saying in Islam. //
Bro, can you please explain more about your statement so that I can understand.
Using a ways? U mean, 'using a way' or 'using ways'?
they knows ? You mean, 'they know'?
அன்பின் தம்பி அபூ ஆசிப்! அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களது சட்ட வகுப்புக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.
அற்புதமான ஆய்வு - எச்சரிக்கை.
டில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு நாம் கேளாமலே உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிய குரல்களின் விரிவாக்கமே உங்களின் கட்டுரை.
பாராட்டுக்கள்.
சில ஆங்கிலப் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது நல்ல வேலை ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு என்றோ ஓடிவிட்டான் என்று தோன்றுகிறது.
Bro.Sabeer abu shahruk,
Can you explain more about your statement so that I can understand ?
'U mean' instead of You mean? is it correct?
படைத்தவனுக்கு தெரியும் படைப்பினங்களுக்கு என்னென்ன சட்டங்கள் தேவையென்று / அவைகளை எப்படி அதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று...அல்லாஹ் கடைப்பிடிக்கசொன்ன சட்டங்களை உலக நாடுகளின் சட்டமாக்கினால் உலகில்”அமைதி” என்றுமே நிலவும்..சிறந்த ஆக்கம் காக்கா
எக்ஸ்கீயூஸ் மீ அ.நி....நான் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு ஆதரவு சொன்னது..சில சகோரர்களின் பின்னூட்டத்தில் இருந்து எதாவது கற்றுக்கொள்ளலாம் என்று...ஆனால் இராத்திரி முழுவதும் புரண்டு புரண்டு படுக்கின்றேன்....வெளங்கல
Yasir சொன்னது…
//எக்ஸ்கீயூஸ் மீ அ.நி....நான் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு ஆதரவு சொன்னது..சில சகோரர்களின் பின்னூட்டத்தில் இருந்து எதாவது கற்றுக்கொள்ளலாம் என்று...ஆனால் இராத்திரி முழுவதும் புரண்டு புரண்டு படுக்கின்றேன்....வெளங்கல//
நீங்க புரண்டு படுத்தாலும் போத்திக்கிட்டு படுத்தாலும் வெளங்கி தொலையாது இது மாதிரி விசயங்களை மறந்து தொலைப்பதே நல்லது
//எக்ஸ்கீயூஸ் மீ அ.நி....நான் ஆங்கில பின்னூட்டத்திற்க்கு ஆதரவு சொன்னது..சில சகோரர்களின் பின்னூட்டத்தில் இருந்து எதாவது கற்றுக்கொள்ளலாம் என்று...ஆனால் இராத்திரி முழுவதும் புரண்டு புரண்டு படுக்கின்றேன்....வெளங்கல//
நீங்க புரண்டு படுத்தாலும் போத்திக்கிட்டு படுத்தாலும் வெளங்கி தொலையாது இது மாதிரி விசயங்களை மறந்து தொலைப்பதே நல்லது
நீங்கள் தேவலாம் . நான் இரண்டு கைகளாலும் தலையைப் போட்டுப் பிரண்டிக் கொண்டுவேறு இருந்தேன்.
வெளங்களெ இதுக்கு தீர்வு தமிழே!
உவர்கள் உங்கவர்களுக்கெல்லாம் தமிழ் பொறுப்பல்ல!
வாழ்க தமிழ்!
நான்போத்திகிட்டுபடுத்தேன்வெளங்கலே;
படுத்துக்கிட்டுபோத்துனேன்வெளங்கலே;
போத்தாமே படுத்தேன்வெளங்கலே!.
Too complicated for layman.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
//இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள்//
இந்த கட்டுரைக்கு கருத்துப் போட யாருடைய அனுமதி பெறவேண்டும்?
கருத்துகளை சொல்பாவர்களுக்கு என்ன என்ன தகுதி வேண்டும்?
யார் கையெழுத்திட்ட தகுதி சான்றிதழ் வேண்டும்?
பெரிய மேதாவிகள்தான் கருத்துகளை சொல்ல வேண்டுமா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை! குழப்பமாக இருக்கிறது !
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அப்துல் காதர் காக்கா,
நல்ல நினைவூட்டல்கள் காக்கா..
//உலகிலேயே அதிகமான மக்களால் துரதிர்ஷ்டவசமாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்//
என் அன்புச்சகோதரர் அபுஆசிப் அப்துல்காதிர் அவர்களே!
உங்கள்ஆதங்கம்புரிகிறது. ஆனால், தவறு புரிந்து கொள்வோரிடம் இல்லை. புரிய வைப்போரிடமே உண்டு!
நான் அறிய இஸ்லாமிய மார்க்கத்தை ஒரு சிலர் மட்டும் தங்கள் ஏகபோக சொத்தாக,' கையடக்க பதிப்பாக எண்ணி தங்கள் சட்டை பைகுள்ளேயே வைத்து படித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வை ஒரு பயங்கரவாதி போல் சித்தரித்து 'கதை'விட்டார்கள். மாற்று மதத்தினருடன் சேர்ந்து பழகி அவர்களிடம் நடப்பு முறையில் மார்க்கத்தை எடுத்து சொல்லவில்லை.
எதற்கு எடுத்தாலும் “அல்லாஹ் அடிப்பான்! அல்லாஹ் அடிப்பான்” என்று பயமூட்டினார்கள். இதை கேட்டவர்கள் மனதில் “அல்லாஹ் எப்போதும் கையில் கம்பும் தடியுமா இருப்பான்! எதற்கு எடுத்தாலும் அடிப்பான்! அங்கே போய் அடிவாங்குவதை விட இருந்த இடத்திலேயே அடி வாங்காமல் இருப்போம்!” என்று 'இருந்து விட்டார்கள். இதுபோல் மிரண்டு ஓடியது நிறைய உண்டு.
ஆக மொத்தம் இஸ்லாம் இருந்த இடத்திலேயே இருந்தது.
ஒரு எடுத்துக் காட்டு நான் ஒரு முறை சென்னை அருகில் உள்ள கோவலம் சென்றிந்த போது அங்கிருந்த ஒரு பள்ளியில் தொழுதுவிட்டு கீழே இறங்கி வரும் போது ஒரு உர்து பேசும் முஸ்லிம் உர்து மொழியில் ஏதோ ஒன்று கேட்டார். “உர்துநகி மாலும்ஜி!” என்றேன்.
ஒ! உர்து தெரியாதா? நீ ஒரு காஃபீரா” என்றார். இது ஒரு கிண்டலாக நீ ஒரு முஸ்லிமாக இருந்தால் உருது தெரியணுமே!.'' என்றார் நான் சும்மா விடுவேனா “ரசூலுல்லாஹ்வுக்கு உர்து தெரியுமா?” நான் கேட்டேன்.
அவருக்கு கோவம் வந்தது. பேச்சு முத்தியது, கடல்கரை தெருகாரர் ஒருவர் அங்கே குடிய குடித்தனமா இருக்கார். அவர் கையில் அங்குள்ள மீனவர்கள், ரவடிகள் அடக்கம். எனக்கு துணையாக வந்தவர் அவரிடம் போய் சொல்லி ஆட்களுடன் வந்து விட்டார். ஆட்களை கண்ட உர்து பேசும் முஸ்லிமுக்கு கையும் ஓடலே! வாயும் ஓடலே!
உர்து மொழி வாலைச் சுருடிக் கொண்டு ஓடிவிட்டது. எதையும் சொல்ல வேண்டிய பக்குவத்தில் சொன்னால் காரியத்தில் வெற்றி பெறலாம். கிண்டல் நையாண்டி கோபம் வெறி இவையெல்லாம் நம் குறிக்கோளை அடைய துணை வராது.
பிறமத நண்பர் ஒருவர் கேட்டார் “வெள்ளிக் கிழமை தொழுகையில்” யாருடனோ போரிடுவது போல் ஆவேசமாக பேசுகிறார்களே! ஏன்?” என்றார்.
“இன்றைக்கு வீட்டில் இறைச்சிக் கறி! பேசுவதை சீக்கிரம் பேசிவிட்டு போனால் சூட்டோடு இறைச்சி சாப்பிடலாம்'னு அவசரத் தோடும் இறைச்சி தின்னும் ஆவலுடனும் பேசுகிறார்” என்று பதில் சொன்னேன். நான் சொன்னது சரிதானா?!
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
Post a Comment