அதிரைநிருபர் பங்களிப்பாளர்களில் முதன்மையில் இருப்பவர்களில் ஒருவரான எங்கள் அன்புச் சகோதரர் MSM நெய்னா முஹம்மது அவர்களின் அருமைத் தாயார் அவர்கள் இன்று அதிகாலை 1:30 மணிக்கு வஃபாத்தான செய்தி அறிந்து வருந்துகிறோம். சகோதரர் MSM-நெய்னா முஹம்மது அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பினை பொறுத்துக் கொள்ளும் சக்தியையும் சாந்தியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டி நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
சகோதரா,என்ன செய்துவிடமுடியும் ?
உன்னால்
என்னதான் செய்துவிடமுடியும்?
உறுப்புக் கெட்டுபோனால்
உன்னுறுப்பை
அறுத்துக் கொடுப்பாய்,
இரத்தம் திரிந்துவிட்டால்
நித்தம் கொடுப்பாய்,
உயிரைப் பகிர
உம்மாவுக்குப் புகட்ட
உன்னால் முடியுமா?
கண்ணுக்கு இமையென
உம்மாவைக் காத்தாய்
கண்மூடிய பின்பும்
கண்ணான உன்னைக்
காக்கும் உன்தாயின் துஆ
அகவை முதிர்ந்த உம்மாவைப்
பறவை தன் குஞ்சைச்
சிறகைக் கொண்டு காப்பதுபோல்
உறவைக் கொண்டு பார்த்தாய்
சொற்களாகவும் செயல்களாகவும்
உன்னுள் வாழும் உம்மா
இறப்பதில்லை சகோதரா
உள்ளத்தை உருக்கி
கண்ணீராய் உதிர்க்கும் நீ
உம்மாவின் நினைவை
உதறிவிட முடியாது என
பதறிவிடாதே
பறிகொடுத்ததை எண்ணி
தன்னிலைச்
சிதறிவிடாதே
நீ
அடக்கம் செய்து வைத்த
உம்மா
உன்னைத்
தொடக்கம் செய்துவைத்தது
முடக்கம் கொள்ளவல்ல
தந்தவன் எடுத்துக்கொள்வதும்
வந்தவர் செல்வதுவும்
கணக்குச் சரிதான் என்று
தனக்குத் தானேசொல் ஆறுதல்
உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா
எல்லா துஆக்களும்
ஒலித்து ஓயும்
உம்மாவின் துஆ மட்டுமே
நிலைத்து நீளும்
வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறது!
(அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்)
அதிரைநிருபர் பதிப்பகம்.
25 Responses So Far:
எங்கள் அன்புச் சகோதரர் MSM நெய்னா முஹம்மது அவர்களின் அருமைத் தாயார் அவர்கள் இன்று அதிகாலை 1:30 மணிக்கு வஃபாத்தான செய்தி அறிந்து வருந்துகிறோம். சகோதரர் MSM-நெய்னா முஹம்மது அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பினை பொறுத்துக் கொள்ளும் சக்தியையும் சாந்தியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டி நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
சகோதரர் MSM-நெய்னா முஹம்மது அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பினை பொறுத்துக் கொள்ளும் சக்தியையும் சாந்தியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டி நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
அன்புச் சகோதரர் M.S.M..நெய்னா முஹம்மது அவர்களின் அன்புத் தாயார் அவர்கள் வபாத்தான செய்தியறிந்து வருந்துகிறேம்.
[நாமெல்லாம் அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே திரும்பச் செல்வோம்] அன்னார் மீது அல்லாஹ் தன் சாந்தியும் சமாதானத்தையும் பொழிந்து அவனால் நல்ல்ருள் வழங்கப்பட்டவர்களின் நல்லடியார் கூட்டத்தில் சேர்க்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். ஆமீன்.
அன்புச் சகோதரரே! உங்கள் துயரில் நானும் என் குடும்பத்தாரும் பங்கு கொள்கிறோம்...
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
நெய்னா மச்சானிடம் வாசித்துக் காட்டினேன்,
இது மாதிரி ஆறுதல்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை வருமுன்னே வந்தது கண்ணீரே.
என்னையே எதாவது நேசங்களுக்கு எழுது என்றார்.
அவரின் சார்பாக அவருக்குகாக நானும் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன். அவரின் தாயை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.
தாய்ப் பாசத்துக்கு இவருக்கு நிகர் இவரே!
நீ
அடக்கம் செய்து வைத்த
உம்மா
உன்னைத்
தொடக்கம் செய்துவைத்தது
முடக்கம் கொள்ளவல்ல
தந்தவன் எடுத்துக்கொள்வதும்
வந்தவர் செல்வதுவும்
கணக்குச் சரிதான் என்று
தனக்குத் தானேசொல் ஆறுதல்
உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா
சிறுவயதிலிருந்து நான் அதிகம் கேட்ட குரல், எங்கள் செந்தம் சகோதரர் நெய்னா உம்மாவின் குரல்...
அவர்களுடைய ஆகிரத்து வாழ்வை அல்லாஹ் சிறப்பானதாக்கி வைப்பானாக.
எப்படி ஆறுதல் செல்லுவது என்றே தெரியவில்லை.. சகோதரர் நெய்னாவுக்கு அவரின் தாயின் இழப்பு உண்மையில் பேரிழப்பு. சகோதரர் நெய்னாவுக்கும், அவரின் தகப்பனாருக்கும், சகோதரிகளுக்கும் அல்லாஹ் பொருமையும் நிம்மதியும் கொடுப்பானாக.
//தாய்ப் பாசத்துக்கு இவருக்கு நிகர் இவரே!//
இதையே நானும் வழிமொழிகிறேன்...
அல்லாஹ் உங்களது தாயின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கப்பானாக .ஆமீன்.
சிறுவயதிலிருந்தே அவதானித்து வந்தவர்கள் நாங்கள் !
மகனுக்கு தாயின் இழப்பு பேரிழப்பு, எங்களைப் போன்ற அண்டை வீட்டாருக்குத்தான் தெரியும் அந்த தாய்மையின் ஆளுமை MSM(n) வீட்டிலும் அந்தச் சூழலிலும் !
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பானதாக்கி அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அருள்புரிவானாக !
இழந்து வாடும் அன்னாரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் மனதிடத்தை வழங்குவானாக !
//எல்லா துஆக்களும்
ஒலித்து ஓயும்
உம்மாவின் துஆ மட்டுமே
நிலைத்து நீளும்//
உம்மாவை அவர்தம் வயிறுகுளிர பார்த்துக்கொண்ட அவர்தம் மனசு நிறைந்த மகனாரே, தங்களின் தாயார் அவரகளின் ஆகிரத்து வாழ்வை சுவர்க்கமாக்கி வைக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.
அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளுவோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.. அன்னாருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் நற்பதவியை அளிப்பானாக ஆமீன்
சகோ எம்.எஸ்.எம் நெய்னாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பொருமையையும் மன அமைதியையும் அல்லாஹ் அருள்வானாக என்று துஆ செய்தவனாக..
ஜஃபருல்லாஹ்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எனது அன்பு நண்பர் நெய்னாவின் தாயார்
அவர்களுடைய ஆகிரத்து வாழ்வை அல்லாஹ் சிறப்பானதாக்கி வைப்பானாக.
To Brother MSM Naina,
மரணம் வருத்தத்தை தந்தாலும் "இதெல்லாம் சேர்ந்ததுதான்" வாழ்க்கை என்ற உண்மைக்கு வந்து விட வேண்டும். உங்கள் தாயாருக்காக செய்யும் துஆ மட்டும் அவர்களுக்கு சேரும்.
காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து தரும்.
எங்கள் காக்கா அபுல் ஹசன் அவர்களின் அன்பு மகளார்,சபா அவர்கள் மரணச்செய்தி கேட்டு துயருற்றேன். அன்னாரின் கபுர் வாழ்க்கையும், கியாமத்து வாழ்க்கையும் ஈடேற்றம் பொருந்தியதாக அமையவும் அவர்களின் குடுபத்துக்கு அல்லாஹ் பொறுமையெனும் பொக்கிஷத்தைக் கொடுக்கவும் போதுமானவன்
அவனிடமிருந்தே வந்தோம் மீண்டும் அவனிடமே மீளுவோம்
அபு ஆசிப்.(மு.செ.மு.)
தம்பி எம் எஸ் எம் நெய்னா !
//உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா//
உங்களுக்கு இறைவன் அந்த வல்லமையைத் தருவானாக!
இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் அவர்கள் பாவத்தை மன்னிப்பானாக, அவர்களுக்கு நல்லருள் பாலிப்பானாக. அவர்கள் குடும்பத்தார்களுக்கு சிறந்ததை வழங்குவானாக.
மு.செ.மு. அப்துல் கபூர்.
துபை
Assalamu Alaikkum
Innalillahi wa innailaihi rajivoon...
My heartfelt condolences to MSM Naina Mohammed. May Allah forgive the sins of the mother, and enter her in highest grade of paradise. InshaAllah.
I request brother Naina and family and friends to keep patience and increase the prayers. May Allah give you strength to bear this loss.
B. Ahamed Ameen from Dubai.
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொறுமையை நல்குவானாக!
ஏற்பட்ட இழப்பிற்கு அதைவிட சிறந்ததை அல்லாஹ் அவன் புறத்திலிருந்து உங்களுக்குத் தருவானாக!
உங்கள் தாயின் வாழ்வை ஈருலகினிலும் அல்லாஹ் கன்னியப்படுத்துவானாக!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்பு நண்பர் நெய்னாவின் தாயார் அவர்களுடைய மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கப்பானாக .ஆமீன்.
அவனிடமிருந்தே வந்தோம் மீண்டும் அவனிடமே மீளுவோம்
( எனக்காக உன்னலமிழந்து எனைக்காத்த உம்மாவே !
நீ இருக்கும் வரை எனை அணுகா வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி சுமையாகிப் போனது!
என் சோகங்களின் சுமைதாங்கி நீ
சிறு பிள்ளை தன் தாயிழந்த துயர் எனை வாட்டுகிறது
கோழிக் குஞ்சுகளாய் உன்னுள் நானிருந்த நாட்களைத் தேடுகிறேன் !
இறுதி வரை உன் முகம் காணாது போனதற்காய் ஏங்குகிறேன்!
எப்புத்தகத்திலும் அச்சிலில்லை உன்னிடம் நான் கற்றவைகள்! )
என் அன்பு சகோ நெய்னா, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லையப்பா?
உன் தாய்க்கு அல்லாஹ் சொர்க்கத்தில் சகலமும் கொடுக்கட்டும் ,ஆமீன்
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொறுமையை நல்குவானாக!
ஏற்பட்ட இழப்பிற்கு அதைவிட சிறந்ததை அல்லாஹ் அவன் புறத்திலிருந்து உங்களுக்குத் தருவானாக!
உங்கள் தாயின் வாழ்வை ஈருலகினிலும் அல்லாஹ் கன்னியப்படுத்துவானாக!
தாயாரின் ஆகிரத்து வாழ்வு சிறப்பாக்கித் தர எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்..துஆ வும்,சபூரும் உண்டாகட்டும்.ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.
இன்று காலை நெய்னா சாச்சாவிடமும்,அவர்களது வாப்பாவிடமும் அலைப்பேசியில் பேச வாய்ப்பு கிடைத்தது.. மனம் தளராது நீண்ட நேரம் பேசியதில் மகிழ்ச்சி.. AN ல் ஒரு பதிவு வந்திருக்கின்றதாமே என்று கேட்டு,அதை பார்க்க நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்..
தற்போது தாய் பற்றிய துயர் குறையும் வேலையில் தந்தை பற்றிய கவலை அதிகரித்துள்ளது.. காரணம், MSM மொய்னப்பா வீட்டு வாருசகளில் வயதான ஜோடிகள் அனைத்தும் ஜோடி இல்லாமல் இருக்கின்றதே (வயதான் காலத்தில் கணவன், மனைவி என்ற இருவரில் எவராவது ஒருவர் இவ்வுலகில் நம் குடும்பத்தில் இல்லை) என்ற வருத்தத்தை சொல்லி எம்மை சிந்திக்க வைத்தார்கள்..
அவரது தற்போதைய இந்திய எண்: +918870286131
MSM Meerashah Rafia
அல்லாஹ் உங்களது தாயின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கப்பானாக .ஆமீன்.
Post a Comment