Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 11 34

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...!

முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த வாரமும் உணர்ச்சிப்பூர்வமாக மற்ற சஹாபாக்களையும் சுட்டிக் காட்டி தொடர்கிறது.

இஸ்லாத்திற்கு நபி(ஸல்) அவர்கள் பொதுவில் அழைப்பு விடுத்த தருணத்தில் நபிகளாரின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் மற்றும் பாசமிகு தோழர் அபூபக்கர்(ரலி) அவர்கள் தவிர பின்னர் தொடர்ந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களில் முதன்மையானவர்கள் அன்றைய சமூகத்தினரால் ஒடுக்கப்பட்ட, பிறப்பால் ஊனமுற்ற, அடிமைத் தனத்தினால் அள்ளல்பட்ட மக்களே. அவர்களில் முன்னணியில் இருந்தவர்கள், பிலால்(ரலி) யாசிர்(ரலி), சுமையா(ரலி) அம்மார்(ரலி), சுஹைப்(ரலி), மிக்தாத்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) போன்றோர்களே. இவர்களே தூய இஸ்லாத்தினை ஏற்றார்கள். இதுபோன்ற அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு சமூக அந்தஸ்தை அவர்களுக்கு பெற்றுத் தந்த இஸ்லாத்திற்காக உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை நிரூபித்தும் காட்டிய அவர்களின் உறுதிக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமில்லை சென்று சொன்னால் அது மிகையில்லை.

அன்றைய சமூகத்தில் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் பலர் இஸ்லாத்தை ஏற்பதற்கு சற்றே தயக்கம் காட்டினார்கள், காரணம் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். நம்முடைய அடிமையாக இருந்தவர்களுடன் ஒன்றாக நாம் இருப்பதா? என்று வரட்டு கவுரம் அவர்களை தடுத்தது உண்மை. ஆனால், இதுபோன்ற சமூக அந்தஸ்து எனும் கர்வத்தில் இருந்தவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்ற பிறகு அவர்களிடம் இருந்த கருப்பு வெள்ளை, முதலாளி, தொழிலாளி, ஆண்டான், அடிமை, பணக்காரன், ஏழை, என்ற ஏற்றத் தழ்வுகளை தூக்கி எறிந்தார்கள். இஸ்லாத்தில் இணைந்த எல்லோரும் சரிசமமானவர்கள் என்ற மனநிலைக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களை வார்த்தெடுத்தார்கள்.

கடந்த காலங்களில் தூய இஸ்லாத்தினை ஏற்ற நம்முடைய மூதாதையர்களில் பலர் இந்த சமூகத்தில் பல்வேறு தரங்களில் உயர்ந்தவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலிலோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தெரு, குடும்பம் என்ற பாகுபாடுகளும் பிரிவினையை தூண்டும் உணர்வுகளும் இன்னும் உள்ளது. இது இஸ்லாமிய வழிமுறையா? என்பதே பின்வரும் சம்பவங்களில் நாம் பெரும் படிப்பினைகளாகும்.

சமூகத்தில் ஏற்றத் தழ்வினால் பாதிக்கப்பட்டு, அன்றைய குரைஷிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தியாகச் செம்மல் பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களை தன்னோடு வைத்துக் கொண்டதோடு அல்லாமல், தன்னுடைய பொருளாதாரத்தை நிர்வகிப்பவராகவும் வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுச் சம்பவங்களைப் படிக்கும் போது உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு முறை பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் செலவீணங்கள் பற்றி கேட்கப்படுகிறது. அப்போது பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள், “நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நான் தான் அவர்களுக்கு செலவீணங்களை நிர்வகித்து சரி செய்து சமப்படுத்திக் கொடுப்பவனாக இருந்தேன். யாராவது இஸ்லாத்திற்கு வருவார்கள், அவர்களுக்கு துணி உணவு கொடுக்க வேண்டும், அந்த சமையத்தில் காசு இல்லை என்றால், நபி(ஸல்) அவர்களுக்கு நான் வெளியில் அலைந்து கடன் வாங்கி கொடுப்பேன், பின்னர் ஃபைத்துல் மாலுக்கு காசு வரும், நபி(ஸல்) அந்த காசை வாங்கி கடனை அடைத்து விடுவேன். இப்படி ஆரம்ப கஷ்ட காலம் ஓடியது” என்று கூறினார்கள்.

இப்படி கடன் எடுத்து அலைவதை பார்த்த ஒரு காஃபிர், நம் உத்தம நபியின் உன்னத பிலால்(ரலி) அவர்களிடம் “ஏன் இப்படி கடன் கேட்டு அலைகிறீர் நான் உங்களுக்கு கடன் தருகிறேன்” என்று சொல்லி கடன் கொடுத்தான். கடன் கொடுத்த அந்த காஃபிர், சில காலம் கழித்து பிலால்(ரலி) அவர்கள் சந்தித்து “இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது, கொடுத்த கடனை திருப்பி தந்துவிடு, இல்லாவிட்டால் நீ எப்படி இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு இருந்தாயோ அதே நிலைக்கு உன்னை ஆளாக்கி விடுவேன்” என்று மிரட்டி விட்டுப் போனான். 

என்னதான் பெருளாதார கஷ்டங்கள், பசி பட்டினி இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்று சுதந்திர மனிதனாக வாழ்ந்து வரும் பிலால்(ரலி) அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள். நபி(ஸல்) அவர்களிடம் சென்று “நான் உங்களுக்காக கடன் எடுத்தேன், கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் என்னை அந்த காஃபிர் மீண்டும் அடிமையாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறான், நான் எனக்காகவா கடன் எடுத்தேன்? உங்களுக்காக, இஸ்லாத்திற்காகத்தானே கடன் எடுத்தேன். அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அப்துற்றஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) போன்ற செல்வந்தர்களிடம் காசு இருக்கிறது அவர்களிடம் கேட்டு அடைத்து விடுங்கள் யா ரசூலுல்லாஹ்” என்று எந்தச் சூழலிலும் சொல்லவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் மேல் உள்ள அன்பால் பிலால்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “உங்களிடமும் பணமில்லை, என்னிடமும் பணமில்லை, அந்த காஃபிரிடம் வாங்கிய கடனை நான் திருப்பி செலுத்த வேண்டும். நான் வேறு ஊருக்கு சென்று பணம் சம்பாதித்து விட்டு வருகிறேன் யா ரசூலுல்லாஹ் எனக்கு அனுமதி தாருங்கள்” என்று அனுமதி பெற்று மதினாவை விட்டு கிளம்பிச் செல்லத் தயாரானார் அந்த உளத்தூய்மையின் உத்தமத் தோழர் பிலால்(ரலி) அவர்கள்.

மறுநாள் வெளியூருக்கு சென்று கொண்டிருந்த பிலால்(ரலி) அவர்களை வழியில் நிறுத்தி ஒரு தோழர் “உங்களை நபி(ஸல்) அவர்கள் வரச் சொன்னார்கள்” என்று கூறினார். பிலால் (ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே பதறிப்போன பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தம்முடைய ஆருயிர் தோழர் பிலால் அவர்களிடம் சொன்னார்கள் “எனதருமை பிலாலே வெளியில் கட்டப்பட்டுள்ள ஒட்டகங்கள் அனைத்தும் உங்களுக்கு, எனக்கு ஒரு மன்னன் நேற்று இரவு பரிசாக தந்தார், நீங்கள் அதனை எடுத்து உங்கள் கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விடுங்கள், என்னை இதிலிருந்து விடுவியுங்கள் பிலாலே” என்று கூறியதோடு அல்லாமல் பிலால்(ரலி) அவர்கள் அத்தனை கடன்களையும் அடைக்கும் வரை தன் வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலே மூன்று நாட்கள் நபி(ஸல்) இருந்தார்கள் என்று நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். இப்படி ஒரு தலைவரை போன்று வரலாற்றில் வேறு எந்த ஒரு இடத்திலும் காண இயலாது.

ஒரே ஒரு அடிமை தானே போய்விட்டார் என்று இருக்கவில்லை நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள். அல்லாஹ்வுடைய ஏற்பாடாக ஒரு மன்னனிடமிருந்து அன்பளிப்பு வந்தது. உடனே பிலால்(ரலி) அவர்களை கூப்பிட விட்டார்கள். “என்னுடைய தோழர் பிலால் எனக்கு வேண்டும். இஸ்லாத்தை ஏற்றதினால் அடிபட்டு கஷ்டப்பட்டு ஈமானில் உறுதியுள்ள என் சகோதரர் பிலால் எனக்கு வேண்டும். பசியோடும் பட்டினியோடும் என்னோடு வாழ்ந்த என்னுடைய உடன் பிறவாத சொந்தம் பிலால் எனக்கு வேண்டும். சுடுமண்ணில் போட்டு துன்புறுத்தியும் ஈமானை இழக்காத இறையச்சமுடைய என்னுடைய பிலால் எனக்கு வேண்டும். மக்களை தொழுகைக்கு அழைக்க பாங்கு, இகாமத்துச் சொல்ல என்னுடைய பிலால் எனக்கு வேண்டும். அந்த சொர்கத்துவாசி தான் மரணிக்கு வரை தன்னோடு இருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நிச்சயம் நபி(ஸல்) அவர்களுக்கு இருந்திருக்கவே, பிலால்(ரலி) அவர்களை தன்னைவிட்டு இறுதிவரை பிரியவிடவில்லை.

ஒரு முறை ஃபஜர் தொழுகைக்கு நபி(ஸல்) அவர்கள் மதினா பள்ளிக்கு நேரத்தோடு வந்தார்கள், பாங்கு சொல்லி விட்டு முதலில் அங்கிருந்தவர் பிலால்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்கள் தன்னருகில் அழைத்தார்கள். பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களை நோக்கி “எனக்கு முன்பாக நீங்கள் எப்படி சொர்கத்துக்கு போனீர்கள்?” என்று கேட்டு விட்டு “எனக்கு எப்போது சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டால் அப்போதெல்லாம் உங்கள் காலடி ஓசை எனக்கு கேட்கும்” என்று சொன்னார்கள். 

இவ்வுலகில் எந்த ஒரு சஹாபியை பார்த்து சொல்லாத ஒரு வார்த்தையை நம்முடைய தலைவர் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களை பார்த்துக் சொன்னார்கள். இந்த வார்த்தைகளிலேயே ஒரு காலத்தில் சமூகத்தின் அடிமைத்தனத்தில் இருந்த பிலால்(ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்று நல்லமல்கள் செய்த காரணத்திற்காக எவ்வளவு பெரிய அந்தஸ்த்தை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கொடுத்துள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!. இந்த பாக்கியம், இந்த அந்தஸ்து வேறு யாருக்கும் நபி(ஸல்) கொடுக்கவில்லை. உங்களில் மிக கண்ணியமானவர்கள் அல்லாஹ்வின் மீது தக்வா உள்ளவர்கள் தான் என்ற குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப பிலால்(ரலி) அவர்கள் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததினால்தான் அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மூலம் கண்ணியப்படுத்தினான்.

இறுதியாக, மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் தன் தலையைக் குனிந்தவர்களாக மக்காவுக்குள் ஒரு லட்சம் சஹாபாக்களுடன் நுழைகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள், “யாரெல்லாம் தங்கள் வீடுகளில் உள்ளார்களோ, கஃபாவில் உள்ளார்களோ, அபுசுஃப்யான்(ரலி) அவர்கள் வீட்டில் உள்ளார்களோ அவர்களுக்கு பாதுகாப்பு, மற்ற வெளியில் உள்ள யாருக்கும் பாதுகப்பு இல்லை.” இதனை கேட்ட மக்கா காஃபிர்கள் அச்சத்தில் பீதியடைந்தார்கள். அங்கு நபி(ஸல்) அவர்களோடு இருந்த அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), மன்னர்கள், செல்வந்தர்கள், போர் படைத்தளபதிகள், ஜனாதிபதிகள், தூதுவர்கள் என்று இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு வலுசேர்க்க மிகத் தகுதியானவர்கள் எல்லாம் இருந்தார்கள்.

கஃபாவுடைய சாவியை அதன் பொறுப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நபி(ஸல்) மேல் சொன்ன யாரையும் அழைக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அடிமையாக இருந்த பிலால்(ரலி) அவர்களையும் ஓர் அடிமையின் மகனான உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்து கஃபாவின் உள்ளே நுழைந்து கதவை மூடிவிடுகிறார்கள். அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), பெரும் செல்வந்தர்கள், போர் படைத்தளபதிகள், தூதுவர்கள் இவர்கள் யாரையும் நபி(ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. சுப்ஹானல்லாஹ்..! இதுபோன்ற கண்ணியம் வேறு எந்த சஹாபிகளுக்கும் கிடைக்கவில்லை. அடிமைகளாக இருந்து விடுபட்ட பிலால்(ரலி) உஸாமா(ரலி) ஆகிய இருவரையும் நபி(ஸல்) அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள். 

மக்கா வெற்றியை அவர்கள் இருவரையும் கண்ணியப்படுத்தி கவுரவப்படுத்தி அதில் சந்தோசம் கண்டார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைத்து சஹாபாக்களையும் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். அவர்கள் யாரும் அதிருப்தி அடையவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இங்கு தான் ஒரு மிகப்பெரிய படிப்பினையை நம் சமுதாயத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். 

இஸ்லாத்திற்காக அடிபட்டு கஷ்டப்பட்டு, பெருமை கொள்ளாமல், வீண் விவாதம் செய்யாமல், இஸ்லாத்தில் இருக்கும் சகோதரனை தூற்றாமல், வீண் தம்பட்டம் அடிக்காமல், பசி பட்டினியோடும், நபி(ஸல்) அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்ததோடு அல்லாமல், அல்லாஹ்வுக்காக தன் உயிரையும் இழக்க துணிந்து, பொறுமையோடும், தொழுகையோடும் வாழும் ஒரு சராசரி மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் கண்ணியப்படுத்துவான், மறுமையிலும் கண்ணியப்படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்கள் விசயத்தில் நடந்து கொண்டதின் மூலம் நாம் உணரலாம்.

தன்னோடு வாழ்ந்த ஒரே ஒரு உத்தமர், தன்னை எல்லோரும் ஒதுக்கியபோது அரவணைத்த காருண்யம் நிறைந்தவர், பசியோடு இருக்கும் போது ஒன்றாக இருந்த மாமனிதர், தாயும் தந்தையும் சொந்தங்களும் இல்லாத போது தன்னை பொறுப் பேற்ற மனித நேயத்தின் சிகரம் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரிய பிலால்(ரலி) அவர்களுக்கு மனமே இல்லை. நபி(ஸல்) அவர்களோடு அதிகம் கஷ்டத்தில் பங்கெடுத்த ஒரே தோழர் பிலால்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு முஹம்மதுர்- ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லும் மனதிடத்தை இழந்த நிலைக்கு ஆளானார்கள் என்றால். உத்தம நபியின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நழிவுற்ற, அடிமையாக இருந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதினால் அல்லாஹ்வுடைய தூதர் எவ்வளவு மிகப்பெரிய கண்ணியத்தை கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் பார்த்தோம். நம்முடைய வாழ்வுக்கு முன்னோடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களை பின் பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் எப்படி நம்முடைய சக முஸ்லீம் சகோதர சகோதரிகளை நடத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வினால், அறிவாற்றலால், குலப்பெருமையால், கோத்திர பெருமையால், கருப்பு வெள்ளை என்ற நிறத்தால், தெருப் பெருமையால், முஹல்லா பெருமையால், இயக்க மயக்கத்தால் இன்று பல கூறுகளாக இவ்வுலக இச்சைகளுக்காக பிரிந்தும், பிறரையும் பிரித்தாளுகிறோமே. இது தான் நாம் நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்ற படிப்பினையா?

மேல் சொன்ன சம்பவங்களின் மூலம் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிலால்(ரலி) அவர்கள் மேல் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் நட்பு வைத்திருந்தார்களோ, அது போல் நாம் ஒவ்வொருவரும் குலம், கோத்திரம், ஊர், தெரு, முஹல்லா என்று பாராமல் நட்புடன் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறும் நன்மக்களாக வாழ வேண்டும். அதற்கு நம் எல்லோக்கும் வல்லவன் ரஹ்மான் அருள் புரிவானாக.
தொடரும்...
M தாஜுதீன்

34 Responses So Far:

Aboobakkar, Can. said...

நிச்சயமாக அமைப்புகளையும் ஜமாஅத்களையும் பிரித்தவர்கள் அது போதாது என்று தனக்கென்று ஒரு மார்க்க வழிபாட்டையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் விளக்கம் கேட்டால் முன்னோர்களின் வழி தவறு என்று சொல்கின்றனர் .வரதட்சணை ஒழிப்பிலும் மாற்று மத நல்லினக்கத்திலும் இஸ்லாத்திற்கு மாறான தர்காக்கள் மற்றும் கப்ரு வணக்க ஒழிப்பிலும் தற்காலத்தில் வெற்றி கண்ட இவர்கள் தங்களின் வழிபாட்டு இறை இல்லங்களை தனித்தனியே அமைத்துக்கொள்வதன் நோக்கம் என்ன? இது நமக்குள்ளே ஏற்படுத்தப்படும் பிரிவினை அல்லவா ?

Unknown said...

பிலால் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு நெருக்கமாக வாழ் நாளைக்கழித்த கருப்பு வைரம். எந்த நிலையிலும் ஈமானை இழக்காத ஒரு இரும்பு நெஞ்சம்..

ஒரு முறை காபிர்களின் இன்னல்கள் தாங்கமுடியாமல் சஹாபாக்கள் எல்லாம்
துன்பத்தின் உச்சத்திற்கே சென்றபொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம், நீங்கள் எல்லாம் உள்ளத்தில் ஈம்மனை மறைத்து வைத்துக்கொண்டு உதட்டளவில் அவர்கள் சொல்வது போல் சொல்லி தப்பித்துக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தார்கள்.

இதனைக்கேட்ட நம் அருமை பிலால் (ரலி) ஈமானின் உறுதி மிக்க வார்த்தையாக காபிர்கள் முன்னேயே சொன்னார்கள் : என் உள்ளம் எப்படி பொய் சொல்லாதோ அதே போல் என் உதடுகளும் பொய் சொல்லாது என்று கூறிவிட்டு " அஹதுன்" "அஹதுன்" என்று முழங்கி , சொர்க்கத்தின் வாரிசு என்று இவ்வுலகிலேயே பிரகடன படுத்தப்பட்டு , இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள் என்று நாம் அவர்கள் வரலாறுகளை படிக்கும்பொழுது உண்மையிலேயே நம் உள்ளும் கொஞ்சம் ஈமான் கூடிக்கொண்டு போகவேணும்.

அல்லாஹ் அந்த பிலால் அவர்களின் ஈமானை நமக்கும் தந்தருள்வானாக !

ஆமீன்

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

கண்மணி நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் அவர்களின் சஹாபாக்களோடு சஹாபாவாக வாழக்கிடைத்திடாதது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம் என்பதை ஒவ்வொரு அத்தியாயமும் உணர வைக்கிறது.

போகட்டும். தற்போது நமக்குக்கிடைத்திருக்கும் சஹாக்களோடாவது உண்மையான் அன்போடும் ஈமானோடும் வாழ முயற்சி செய்வோம்.

தொடருங்கள் தாஜுதீன் தங்களின் அச்சமூட்டி எச்சரிக்கும் இப்பணியை.

வாழ்த்துகளும் துஆவும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேல் எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நட்பு வைத்திருந்தார்களோ, அது போல் நாம் ஒவ்வொருவரும் குலம், கோத்திரம், ஊர், தெரு, முஹல்லா, இயக்கம் என்று பாராமல் நட்புடன் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறும் நன்மக்களாக வாழ்வோமாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புள்ள அபூபக்ர் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//இறை இல்லங்களை தனித்தனியே அமைத்துக்கொள்வதன் நோக்கம்//


சில விசயங்களை கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரித்துக் கொண்டு
"இங்கே இவர்களுக்கு அனுமதியில்லை"
"இவர்களுக்கு மட்டுமே அனுமதி"
என அல்லாஹ்வின் இல்லத்தில் எழுதி வைத்ததின் விளைவால் ஏற்பட்ட பிரிவினையே!

அவர்கள் பெற்ற ஞானத்தில் செய்கிறார்கள், அவர்களுக்கு கூலி வழங்குவது அல்லாஹ் மட்டுமே என அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி அவரவர் அறிந்ததை அல்லாஹுவுக்கு பயந்து செய்து கொண்டிருந்தால் இந்த பிரிவினை வந்தே இருக்காது.

Unknown said...

தம்பி தாஜுதீன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக்கொண்டிருக்கின்றார்.

ஒன்று இத்தகைய வரலாறுகளை அடுத்தவர்களுக்கு புரிய வைப்பதின் மூலம்
நன்மையை பெற்றுக்கொள்கின்றார்.

மற்றொன்று தன்னுடைய இஸ்லாமிய அறிவையும் இதன் மூலம் வளர்த்து தனக்கும் நன்மையை தேடிக்கொள்கின்றார்.

இருவேறுபட்ட வாழ்க்கை தொடர் தொடரட்டும்.

அபு ஆசிப்.

Unknown said...

//இவர்கள் தங்களின் வழிபாட்டு இறை இல்லங்களை தனித்தனியே அமைத்துக்கொள்வதன் நோக்கம் என்ன? இது நமக்குள்ளே ஏற்படுத்தப்படும் பிரிவினை அல்லவா ?//

வழி பாட்டு தளங்களை ( பள்ளிவாயில்களை) தனித்தனியாக அமைத்து வழிபடும் அளவுக்கு சூழ்நிலைகளை முதலில் ஏற்ப்படுத்தியது யார் என்று அறிந்து அதன் பிறகு தம்பி அபூபக்கர் பின்னூட்டமிடுங்கள்.

கடந்தகால நம் ஊர் நிகழ்வுகளை கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓடவிட்டு, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பிறகு தனித்தனி பள்ளிவாயில்கள் ஏற்படக் காரணம் யார் என்று கருத்திடவும்.

நீங்கள குறிப்பிட்ட இந்த வரதட்சணை , மற்றும் தர்கா வழிபாடு போன்ற மார்க்கத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டிய நஞ்சுகளை ஒழிக்கப் புரப்பட்டதன் விளைவுதான் இந்த பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்ற கோஷம் , மற்றும் பகிஷ்கரிப்பு போன்ற படலங்கள் சமுதாயத்தில் வளர ஆரம்பித்தது. அதன் பிறகுதான் வேறு வழியின்றி தனிப்பள்ளிவாயில்கள் தோன்ற ஆரம்பித்தன.

பிரிவினைக்கு முழுமுதற்காரணம், பள்ளிவாசலுக்கு தொழ வரக்கூடாது என்று சொன்னவர்களே ஒழிய, மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கப்புறப்பட்டவர்களல்ல.

அபு ஆசிப்.m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணியம் காப்பது எவ்வாறு என்று கண்மணி நபியவர்களின் சொல், செயல், வழிகாட்டல் தெளிவாக மானுட உலகிற்கு அளித்திருக்கிறது !


மேலும்.....

Ebrahim Ansari said...

ஒருபுறம் வரலாறுகள். அதுவும் அசோகர் மரம் நட்டார் - அரிச்சந்திரன் மனைவி பிள்ளைகளைப் பிரிந்தான்- தேசிங்கு ராஜா குதிரையை அடக்கினான் என்பது போல் இல்லாமல் இதயத்தின் நாடி நரம்புகளைத் தட்டி விடும் வரலாற்றுக் குறிப்புகள். படிப்பினையும் பாடமும் தரும் வரலாறுகள்.

மறுபுறமோ சமுதாயத்தைக் கெடுப்பாரை நோக்கி இறங்கும் இடிகள்.

அருமை! தெளிவு! அற்புதம் தம்பி தாஜுதீன். அல்லாஹ் ஆத்திக் ஆபியா.

Aboobakkar, Can. said...

சகோதரர்களுக்கு ..........அவர்கள் ஒதுக்கியதால் நாங்கள் ஒதுங்கினோம் என்ற வாதம் சரியே அப்படிஎன்றால் உங்களுடைய வழிமுறைகளை மற்றவர்கள் ஏற்க வில்லை அதனால் தான் நீங்கள் உங்கவர்களோடு ஒதுங்கி விட்டதாக தானே பொருள் .அப்படி ஒதுங்கி இருந்தால் உங்கவர்களின் அமைப்பு பற்றிய சிந்தனை களோடு நீங்கள் அனைவரும் இருந்து விடுவீர்கள் மொத்த சமூகத்தில் கூட இருந்தால் மட்டுமே உங்கவர்களின் விவாதம் மற்றவர்களுக்கும் புரியும் .ஜும்மா பயன் கேட்க அந்தப்பள்ளியில் உங்கவர்கள் மட்டுமே அங்கு இருக்கும் வாய்ப்புகளும் உள்ளனவே????????

sabeer.abushahruk said...

ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

ஆதாரம்: நண்பன் காதர் மற்றும் சகோ.அபுபக்கர் கேன் ஆகியோரின் உரையாடல்

sabeer.abushahruk said...

இந்த

அவர்கள்
இவர்கள்
உவர்கள் யாவரும்
எவர்கள்?


Unknown said...

// அப்படிஎன்றால் உங்களுடைய வழிமுறைகளை//

இது யாருடைய வழிமுறையுமல்ல. அல்லாஹ்வுடைய தூதருடைய எந்த கலப்படமுமில்லாத வழிமுறை.

பின்பற்ற விருப்பமுள்ளவர்கள் பின்பற்றிக்கொள்ளலாம்.

sabeer.abushahruk said...

காதரு,

யுவர் ஆனர் சொல்லாமல் ஆரம்பிச்சதும்; தட்ஸ் ஆல் யுவர் ஆனர் சொல்லாமல் முடித்ததும் கண்டிக்கத்தக்கது.

மார்க்க விஷயங்களை ஆதாரம் சுட்டாமல் "வுட்டு அடிக்கிற" கருத்துகள் நகைப்புரியன.


அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க.

Aboobakkar, Can. said...

தவ்ஹீத் ஜமாஅத் என்றால் நாளைய வரலாற்றில் இந்தியாவில் தவ்ஹீதை ஏற்று கொண்ட முஸ்லிம்களும் உங்கவர்களின் அமைப்பில் இல்லாதோர் அதை ஏற்று கொள்ளாத தவ்ஹீது அல்லாத முஸ்லிம்களும் இந்தியாவில் வாழ்ந்தார்கள் என்று மாற்றார்களால் நாளைய வரலாறுகள் மாற வழிவைகை ஏற்படுத்தி விடுமே தவ்ஹீத் என்ற பெயரை மாற்ற முற்படலாமே ????????

Unknown said...

//உங்கவர்களின் அமைப்பில்//

அதென்ன உங்கவர்கள்
அப்படி தமிழில் ஒரு வார்த்தையே இல்லையே . அது கிடக்கட்டும்

" உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டு செல்கின்றேன் . அவற்றை கடை பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வுடைய வேதாகிய குரான். மற்றொன்று என்னுடைய சொல், செயல், அங்கீகாரங்கள் " - நபி ஸல். - இதுதான் தௌஹீத்.

இதற்க்கு அப்பாற்பட்ட அனைத்தும் குப்பையே. அது எவ்வளவு காலமாக சமுதாயத்தில் நம் வாப்பாட வாப்பாட வாப்பா பின்பற்றி காலம் காலமாக வந்தாலும் சரியே.

Unknown said...

//மார்க்க விஷயங்களை ஆதாரம் சுட்டாமல் "வுட்டு அடிக்கிற" கருத்துகள் நகைப்புரியன.//

சபீர்
உனக்கு சொல்லிக்கொள்கின்றேன். மார்க்க விஷயங்களில் உட்டு அடிக்கின்ற வேலையை நான் என்றைக்குமே செய்ய மாட்டேன். ஏனனில் . " என்னைப்பற்றி எவனொருவன் வேண்டுமென்றே ஒரு பொய்யை சொல்கின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகமாக இருக்கட்டும்." - நபி ஸல்.
என்ற நபி மொழி எச்சரிக்கையை அறிந்தவன் தான்.

மற்ற உலக விஷயங்களைப்போல விட்டு அடிக்கக்கூடியதல்ல அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ் என்பது. ஹதீஸ் கிரந்தங்களின் பெயர் , மற்றும் வரிசை என் தெரியாமல் இருக்கலாமே ஒழிய, சொல்லப்படுகின்ற விஷயம் , எதிர் வரிசையில் நின்றும் விமர்சிப்பவர்களும் இது ஹதீஸில் இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஆதாரபூர்வமாக , குரான் ஹதீஸ்ஆராய்ச்சிகளையே தன் வாழ்நாள் வழக்கமாக உள்ளவர்களின் சொற்ப்பொழிவு மற்றும் கேள்வி ஞானம், மற்றும் நேரிடையாக கேட்டது.
என்றுதான் எப்பொழுதும் என்னுடைய பதிவும், பின்னூட்டமும் இருக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா...

இன்ஷா தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் இபுறாஹீம் அன்சாரி காக்கா, சபீர் காக்கா,அப்துல் காதர் காக்கா, ஜஃபர் சாதிக் மச்சான் இன்னும் பிற சகோதரர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஜஸக்கல்லாஹ் ஹைரா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அபூபக்கர் காக்கா,

உங்களின் ஆதங்கம் நியாயமானதே, அது போல் அப்துல்காதர் காக்கா சொல்லும் காரணமும் அதே அளவு நியாயமானதே... இரு தரப்பிலும் தவறு உள்ளதை ஒத்துக்கொண்டாக வேண்டும்... உங்களுக்கு தெரியுமா, இருதரப்பிலும் நடுநிலையோடு பிரச்சினைகளை விரும்பாதவர்களே அதிகம், இதை யாரும் மறுக்க முடியாது.

தொப்பி போடாதவன் தொழுக்கூடாது என்ற பத்வாவினால் தொழ வராதவர்களும் உண்டு. கூட்டு து ஆ கூடாது என்பதற்காக தொழுதவுடன் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த திக்ரு செய்யாமல், சுன்னத்து தொழாமல் உடனே பள்ளியை விட்டு வெளியேரும் பலர் இன்றும் உண்டு.

ஷிர்க் பித் அத்துக்களுக்கு எதிராக குரல் கொடுத்து, சத்தியத்தை பகிரங்கமாக எடுத்துச்சொல்ல பயந்த நம் மார்க்க அறிஞர்களிடம் உள்ள பலவீணத்தால், ஒரு சில சகோதரர்கள் மூன்று பயான் cdக்களில் உள்ள பயான்களை கேட்டு, மதீனா யுனிவர்சிட்டியில் 5 வருடம் படித்தவர் போல் நினைத்து மார்க்கம் பேசுவதை கேட்கும் காலத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் நீயா? நானா? என்பதை முன்னிலைப்படுத்தி, அல்லாஹ்வின் கட்டளையை காட்டிலும் சைத்தானின் சூழ்ச்சியால் தனிமனிதர்களின் ஈகோவுக்கே முக்கியத்துவத்தை நம் சகோதரர்கள் கொடுக்குகிறார்கள் என்பதற்கு நம் எல்லோருடைய மன்சாட்சியே சாட்சி.

என்னுடைய நிலைபாட்டை இங்கு பதிவு செய்கிறேன். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் பிரிந்துச் சென்று நன்மையை ஏவுவதை காட்டிலும், அதே இடத்தில் இருந்து நன்மையை நளினமான முறையில் அன்போடும், பண்போடும் ஏவி, வெறும் பேச்சோடு அல்லாமல், அடிப்பட்டாலும் மிதிபட்டாலும் நடைமுறையிலும் நாமும் நபி வழியில் வாழ்ந்து காட்டி, அறிவுப்பூர்வமாக மக்களின் மனதில் தூய இஸ்லாத்தினை எத்திவைக்க வேண்டும். இதனால் சமூகத்தில் நமக்கு ஏற்படும் இழப்பையும் தாங்கிக்கொள்ளும் மனநிலைக்கு வர வேண்டும். அதற்காக இருக்கும் இடத்தில் உள்ள தவறுகள் அனைத்தை ஒத்துக்கொண்டுபோவது என்பதாக அர்த்தமல்ல.. சுட்ட வேண்டியதை காரணம் காரியங்களுடன் சுட்டிக்காட்டவும் வேண்டும்.

தன் குறையை நிவர்த்தி செய்வதை காட்டிலும், தவறை சுட்டிக்காடுகிறோம் என்ற பெயரில் பிறரின் தனிப்பட்ட குறைகளை பற்றி தனிமனித தாக்குதலோடு பேசுவதில் என்றைக்கு தவ்ஹீத் இயக்கங்கள் கவனம் செலுத்தியதோ அன்றிலிருந்து தவ்ஹீத் இயக்கங்களின் மேல் மட்டுமே மக்களுக்கு வெறுப்பு வந்ததே தவிர தவ்ஹீதில் அல்ல.. பிறர் குறைகளை அலசு பேசி இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளார்களாக என்று தேடிப்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


இஸ்லாமிய சமுதாயம் நடுநிலையான சமுதாயம் என்பதை மறந்துவிட்டோம் அல்லது மறக்கடிப்பட்டுள்ளோம்.

இது போன்ற பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் நபி(ஸல்) அவர்கள், ஸஹாப்பாக்கள், இமாம்கள், போன்ற நல்லவர்களின் வரலாற்று சம்பவங்கள் நம் அனைவரின் உணர்ச்சிகளை கொஞ்சம் தட்டி எழுப்பும் என்ற ஒரு பெரிய ஆசையால் என்னால் முடிந்ததை சிறிதாக தொகுத்துத் தருகிறேன். தயவு செய்து இந்த பதிவை வாசிக்கும் நாம் படிப்பினை பெற முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்..

அபூபக்கர் காக்கா, பல சிரமத்துக்கு மத்தியில் இது போன்ற பதிவை தொகுத்தளிக்கிறேன். இந்த தொடர் பதிவு பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவில்லையே காக்கா?..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Abdul Khadir Khadir சொன்னது…
தம்பி தாஜுதீன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக்கொண்டிருக்கின்றார்.

ஒன்று இத்தகைய வரலாறுகளை அடுத்தவர்களுக்கு புரிய வைப்பதின் மூலம்
நன்மையை பெற்றுக்கொள்கின்றார்.

மற்றொன்று தன்னுடைய இஸ்லாமிய அறிவையும் இதன் மூலம் வளர்த்து தனக்கும் நன்மையை தேடிக்கொள்கின்றார்.

இருவேறுபட்ட வாழ்க்கை தொடர் தொடரட்டும்.

அபு ஆசிப்.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

அப்துல் காதர் காக்கா,

உண்மை தான், மார்க்க பற்றிய தேடல் நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே செல்கிறது. ஒரு வார பதிவுக்கு என்ன எழுதலாம் என்ற சிந்தனை ஒரு வாரத்திற்கு மனதில் ஓடுகிறது. காரணம் மார்க்க தொடர்பானைவகளே, ஏதோ நம் இஷ்டத்துக்கு சொல்லும் விசயமல்ல என்ற கவலையும் ஏற்படுகிறது.

து ஆ செய்யுங்கள் காக்கா..

அதிரைக்கு மார்க்கத்தை எடுத்துச்சொல்லும் பல ஆண் பெண் தாயிக்கள் அவசரமாக தேவை என்ற கவலை பலரிடம் உள்ளது போல் என்னிடம் உள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது…
ஒருபுறம் வரலாறுகள். அதுவும் அசோகர் மரம் நட்டார் - அரிச்சந்திரன் மனைவி பிள்ளைகளைப் பிரிந்தான்- தேசிங்கு ராஜா குதிரையை அடக்கினான் என்பது போல் இல்லாமல் இதயத்தின் நாடி நரம்புகளைத் தட்டி விடும் வரலாற்றுக் குறிப்புகள். படிப்பினையும் பாடமும் தரும் வரலாறுகள்.

மறுபுறமோ சமுதாயத்தைக் கெடுப்பாரை நோக்கி இறங்கும் இடிகள்.

அருமை! தெளிவு! அற்புதம் தம்பி தாஜுதீன். அல்லாஹ் ஆத்திக் ஆபியா. ///

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

இந்த பதிவின் மூலம் பலர் பயனடைந்தால் இதில் வரும் நன்மையில் உங்களுக்கும் பங்குண்டு, காரணம் இந்த தலைப்பை வைத்து தொடர்ந்து என்னை இது போன்ற வரலாற்று ஒப்பீடு சம்பவங்களை தொகுத்து எழுத தூண்டியதே நீங்கள் தானே காக்கா..

என்னுடைய து ஆ விலும் உங்களை சேர்த்துக்கொள்வேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
கண்மணி நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் அவர்களின் சஹாபாக்களோடு சஹாபாவாக வாழக்கிடைத்திடாதது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம் என்பதை ஒவ்வொரு அத்தியாயமும் உணர வைக்கிறது.

போகட்டும். தற்போது நமக்குக்கிடைத்திருக்கும் சஹாக்களோடாவது உண்மையான் அன்போடும் ஈமானோடும் வாழ முயற்சி செய்வோம்.

தொடருங்கள் தாஜுதீன் தங்களின் அச்சமூட்டி எச்சரிக்கும் இப்பணியை.

வாழ்த்துகளும் துஆவும்
-------------------------------

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...


தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

அபூபக்கர் காக்கா,

உங்களின் ஆதங்கம் நியாயமானதே, அது போல் அப்துல்காதர் காக்கா சொல்லும் காரணமும் அதே அளவு நியாயமானதே... இரு தரப்பிலும் தவறு உள்ளதை ஒத்துக்கொண்டாக வேண்டும்... உங்களுக்கு தெரியுமா, இருதரப்பிலும் நடுநிலையோடு பிரச்சினைகளை விரும்பாதவர்களே அதிகம், இதை யாரும் மறுக்க முடியாது.....


என்று தொடரும் கருத்தோடு... அப்படியே ஒத்துப் போகிறோம் ! என்னைப் போன்ற ஏராளமானவர்களின் உணர்வும் இதுவே ! - ஜஸாக்கலலஹ் ஹைர் தம்பி...

இதனை பொதுவில் சொல்லவும் அதன்படி நடக்கவும் திடம் வேண்டும் அல்லாஹ்வின் உதவியால் அது நம்மிடம் நிரம்பவே இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !

Yasir said...

மாஷா அல்லாஹ் தாஜுதீன் தன்னிரகற்ற நம் ஒரே தலைவர் எப்படி இந்த சமுதாயம்/ குல/பிறப்பு/இன வேறுபாடுன்றி வாழ வேண்டும் என்பதற்க்கு பிலால்(ரலி) அவர்களை அவர்கள் நடத்திய விதமே சான்று....இந்த சான்றுகள் நமக்கு சாட்டையடிபோல ....அல்லாஹ் உங்களுக்கு பரக்கத செய்வானாக ஆமீன்

//நாம் ஒவ்வொருவரும் குலம், கோத்திரம், ஊர், தெரு, முஹல்லா என்று பாராமல் நட்புடன் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறும் நன்மக்களாக வாழ வேண்டும். அதற்கு நம் எல்லோக்கும் வல்லவன் ரஹ்மான் அருள் புரிவானாக./// ஆமீன் ஆமீன் ஆமீன்

sabeer.abushahruk said...

காதரு…ச்செல்லம்ல… கொந்தளிக்காம நாஞ்சொல்றதக் கொஞ்சம் கேளேன்.

என் கண்மணிநபி (ஸல்) அலைஹிவஸல்லம் எனக்காக விட்டுச்சென்ற மார்க்கம் இஸ்லாம். எனவே, நான் முஸ்லிம் என்றோ மூமீன் என்றோ அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். இதென்ன…புதிதாகத் தன்னைத்தானே ‘தவ்ஹீது’ என்று அடையாளப்படுத்திக்கொள்வது? “என்னைப் பின்பற்றுவோரைத் தவ்ஹீதுவாதிகள் என்று அழையுங்கள்” என்று எங்காவது நம் நபி (ஸல்) சொல்லியிருந்தால் அந்த ஹதீசை இங்கு பதி.

சகோ அபுபக்கர் கேன் இப்படியொரு கேள்வியை வைத்துக்கொண்டுதான் எங்களைப் போல தவிக்கிறார். ஆனால், கோவத்திலே இருக்காக அதான் வார்த்தை கொளருது. நான் இப்ப அவர் கேட்ட அதே கேள்வியைத் தெளிவாகக் கேட்டாச்சு, பதில் சொல்லு.


//உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டு செல்கின்றேன் . அவற்றை கடை பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வுடைய வேதாகிய குரான். மற்றொன்று என்னுடைய சொல், செயல், அங்கீகாரங்கள் " - நபி ஸல். - இதுதான் தௌஹீத்//

சரிதாண்டா. ரெண்டு (அல்லது மூனு? நாலு?) இயக்கங்களும் இதையேத்தானே சொல்லுது.

அவற்றைப் புரிந்துகொள்வதில்தானே கருத்து வேறுபாடே துவங்குகிறது. குருடன் யானையைப் புரிந்தவாறல்லவா ஆளாளுக்கு விளக்கம் தர்ராய்ங்க!

Unknown said...

//சரிதாண்டா. ரெண்டு (அல்லது மூனு? நாலு?) இயக்கங்களும் இதையேத்தானே சொல்லுது.//

சபீர்

சொல்லுகின்றார்கள் ஆனால் அவர்களை அறியாமலேயே சொல்லுக்கு முரண்படுகின்றார்கள். அதை நியாயப்படுத்த அல்லாஹ்வுடைய தூதரை முன் நிறுத்தாமல் நம் முன்னோர்களை முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.

இங்கேதான் அவர்கள் வேருபடுகின்றார்கள்.

Aboobakkar, Can. said...

சகோ .அப்துல் காதரு அவர்களுக்கு ........நீ என்ற ஒருமை அதை மரியாதை நிமிர்த்தம் நீங்கள் என்கிறோம் அதே போல்தான் உன் ,உங்களுடைய பன்மையில் உங்கவர்கள் என்று பெறப்படுகிறது ........அது சரி அமல்களில் சிறந்தது தொழுகை அதை ஏன் குறைத்து தொழ வேண்டும் என்று வலியுறித்துகிறீர்கள்.நீங்கள்(உங்கள் அமைப்பு ) சொன்னது எல்லாம் பலிக்குது .......நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம் என்ற நியாமும் சரியே புதிதாக கட்டிய பள்ளிகளில் நின்று கொண்டு 1 க்கு போக கழிப்பிடமும் கட்டியாச்சு.

ZAKIR HUSSAIN said...

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம் என்று எந்த ஆட்கள் சொல்கிறார்களோ தெரியாது , அது பின்னாளில் பரோஸ்டேட் சதைகள் வலுவிழந்து கண்ட்ரோல் மெக்கானிசத்தில் பிரச்சினை கொடுக்கும். யூரின் பி.ஹெச் வேல்யூ அதிகம் இருப்பவர்களுக்கு இது இன்னும் பிரச்சினை தரலாம். அபாய கட்டம் இல்லாத பி.ஹெச் 5லிருந்து 6 வரை [ ஏதோ எமகண்டம் ராவுகாலம் டி.வியிலெ சொல்ரமாதிரி இல்லே]

ZAKIR HUSSAIN said...

காலை மடக்கி உட்கார முடியாதவர்கள் எப்படி சிறு நீர் கழிக்க முடியும் என்று கேட்களாம்....தொடர்ந்து அப்படி இருந்தால் யூரிக் ஆசிட் டெஸ்ட் எடுத்து அபாய கட்டத்தை தாண்டி / காலையில் கை விரல்கள் மடக்க சிரமம் இருந்தால் எலனாப்ரில் மாத்திரை எடுக்க கடவது....அதை விட்டு நின்று கொண்டே ஒன்னுக்கு போனால் காலை மடக்க முடியாததுடன் யூராலஜி பிரச்சினையும் சேர்ந்து கொள்ளும்.மேற்சொன்ன மருத்துவம் ஆர்த்ரைட்டிசுக்கு பொருந்தாது. அதற்கு ஸ்போர்ட்ஸ் இஞ்சூரி, ஆர்தொபெடிக் மருத்துவர்களை அனுகுவது நல்லது. இன்வேசிவ் சர்ஜரியை ரெக்கமன்ட் செய்து டாக்டர் உடனே கல்லா கட்ட நினைத்தால் செகென்ட் ஒப்பினியன் வாஜிப்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

எந்தெந்த ஊர்ல என்னென்ன நேரத்ல பார்க்கிறே என்கிற வெவரம் போடலயே?

நீ இப்டி ச்சேனல் டாக்டர் மாதிரி பேசுறது மிஸஸ் ஜாயிருக்குத் தெரியுமா?

ZAKIR HUSSAIN said...

பாஸ்..நான் லாட்ஜிலெ தங்கி ரொம்ப நாளாச்சு பாஸ்.

Anonymous said...

//அன்றைக்கு மேல்மட்ட அந்தஸ்தில் இருந்தவர்கள் இஸ்லாத்தை தழுவ தயங்கினார்கள்!. காரணம் ஒடுக்கப்பட்டவர்களும் அடிமைகளும் அங்கே இருந்தார்கள்// இப்படிப்பட்ட சூழலில் அல்லாஹ்வின் தூதர் ஒரு மாபெரும் மார்க்கத்தை நிறுவப்போகும் மாமனிதர் ஒரு அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற சஹாபியைப் பார்த்து ''எனக்கு எப்போது சொர்க்கம் எடுத்து காட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் காலடி ஓசை அங்கே எனக்கு கேட்கும்'' என்று சொன்னார்கள்.

இது ஆண்டான் - அடிமை. ஏழை - பணக்காரன். வலுத்தவன் - இளைத்தவன்.
அந்த முஹலாக்காரன் - இந்த முஹலாக்காரன் 'கருத்தவன் = வெளுத்தவன் என்ற பாகுபாடற்ற ஒரு சமதர்ம சமுகத்தை உருவாக்கப் போகும் ஒரு மாநபியின் கவிநயமும் உண்மையும் ஒன்றோடு ஒன்று கைபிடித்து வந்த இதய ஓசை!

இந்த அரிய கருவுகருவூலங்களை மிகுந்த சிரமத்துக்கிடையே நமக்கு இருந்த இடத்திற்கே கொண்டு வந்து தரும் தம்பி தாஜுதீன் அவர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் அனைத்து செல்வமும் அருள எல்லாம் வல்ல அல்லாவை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் ஃபாரூக் காக்கா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஜஸக்கல்லாஹ் ஹைரா...

து ஆ செய்தமைக்கு மிக்க நன்றி காக்கா..

Shameed said...

நின்று கொண்டு ஒன்னுக்கு அடிச்சால் காலில் எல்லாம் தெறிக்கும் என்பது ஒன்னாம் கிளாஸ் புள்ளைக்கு கூட தெரியும்

இது சம்பந்தமாக நின்று கொண்டு யூரின் போக கக்கூஸ் கட்டியவர்களின் பிளாக் கில் போய் கேட்டால் (அங்கு கேட்பதுதானே சரி ) விளக்கம் சொல்வார்களே

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு