பார்க்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவற்றை மீறி காணும் போது பெரும்பாலோரில் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற நிகவுழ்வுகளை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் அப்படிபட்ட சம்பவங்கள் சவூதியில் நடந்தால் தலை போய்விடும். உண்மையிலேயே பிடிபட்டால் தலை வெட்டுதான்.
மேலும், சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்பட்ட வீடியோக்கள் பார்ப்பது குற்றம். மற்ற நாடுகளிலும் குற்றமாக இருந்தாலும் சவூதியில் இதற்கு கடும் தண்டனை கொடுப்பார்கள். அப்படி தகாத வீடியோக்கள் பார்த்து யாரும் பிடிபட்டால் மயக்க மருந்துகள் ஒன்றும் கொடுக்கப்படாமல் (இங்குள்ள குற்றவியல் சட்டப்படி) அவர்களின் விரல் நகம் கழற்றப்பட்டது, அதே போன்று சவூதியில் பெண்களை உன்னிப்பாக (கூர்ந்து) பார்க்கக் கூடாது பார்த்து பிடிபட்டால் கசையடிகள் கொடுக்கப்பட்டது. 100 கசையடி 200 கசையடி இப்படியாக குற்றத்திற்கேற்ப கசையடிகள் மாறுபடும். 100 கசையடிகள் என்றால் தொடர்ந்து தரமாட்டார்கள்.
அப்படி தொடர்ந்து கசையடி கொடுக்கப்பட்டால் கசையடி வாங்கியவரின் மையத்தைத்தான் பார்க்க முடியும், ஆதலால் கசையடி வாரத்திற்கு 20 வீதம் தவணை முறையில் கொடுக்கப்படும். ஒவ்வொரு கசையடியும் உம்மாவிடம் குடித்த பால்யாவும் வெளியேறி விடும் என்று சொல்லப்படுகின்றது. இந்த தண்டனைகள் யாவும் ஒவ்வொரு ஜும்மா தொழுகைக்கு பின் ஜும்மா பள்ளியின் வளாகத்திலேயே கொடுக்கப்படும். இவைகள் யாவும் பார்வையைப் பாதுகாக்காததால் தானாக வாங்கிக் கொள்ளும் தண்டனைகள்.
பாதுக்க வேண்டிய பார்வையை பாதுகாக்கப்படாமல் விதிகள் மீறும்போது அரங்கேறும் நிகழ்வுகள். இப்பொழுது அந்த தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது எடுக்கப்பட்டு விட்டதா? தெரியவில்லை. மேற்சொன்ன காட்சிகள் 15 வருடங்களுக்கு முன்பு அடிக்கடி அரங்கேறும் என்பது பல வருடங்கள் சவூதியிலே வாழ்ந்தவர்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் சவூதியில் வாழ்ந்த சகோதரர்கள் அத்தனை பேரும் கண்ட அல்லது கேள்விபட்ட காட்சிகள் தான் அவைகள். இப்பொழுது அந்த தண்டனைகள் ஒருவேளை இருந்தாலும் அதிகமாக அவ்வாறு தண்டனைகள் வழங்கும் வழிமுறை காணப்படுவதில்லை.
இந்த உலகத்தில் நம்மை போன்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தண்டனைகள் இப்படி என்றால் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும் தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும். அல்லாஹ்தான் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து நம் அனைவரையும் ஈமானுள்ள மக்களாக மாற்றி நல்ல ஈனமானுடன் மரணிக்கச் செய்து அவனுடைய தண்டனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
பிறவியிலே கண் பார்வை இழந்தவர்கள், கண் பார்வை உடையவர்களை விட சொர்க்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய புறக்கண் இல்லாவிட்டலும் அகக்கண் திறந்து அதன் மூலமாக சிறப்பாக செயல் படுகின்றனர். பாவம் இழைக்க துணையாக இருப்பது புறக் கண்ணே. புறக் கண்கள் இல்லாவிட்டால் அந்த கண்களினால் பாவமிழைப்பது மிக மிக குறைவாகத்தான். இருக்கும் அல்லது இருக்காது. ஆனாலும் கண்கள் இரண்டும் இல்லாமல் சில பேரின் அற்புதமான நிகழ்வுகளும் உண்டு.
உதாரணத்திற்கு நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரியிலே லெக்சரராக ஒரு இஸ்லாமிய சகோதரர் பணியாற்றினார். இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று நினக்கின்றேன். பிரவியிலேயே பார்வை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. பார்வை இல்லாமல் அவரும் கல்வி கற்று, பார்வை உடையோருக்கு கற்றும் கொடுக்கின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சிந்திக்க கடைமை பட்டுள்ளோம்.
அதுவல்லாமல் சமீபத்தில் யு-டியூபில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது அதில் பிரவியிலேயே பார்வயைப் பெறாத சிறுவன் ஒருவன் அல்குர்ஆன் 30 ஜுஸையும் மனப்பாடம் செய்து பிறருக்கு எத்தி வைக்கும் எண்ணம் இருப்பதையும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது மனதை தொட்ட வீடியோவில் அதுவும் ஒன்று. அல்லாஹ் நாடினால் எல்லாமே சாத்தியமாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டே, இப்படி அகக்கண்ணை திறக்க வைத்து இறைவன் எத்தனை பெரிய வேலைகளை பார்வை இல்லாதவர்களிமே வாங்குகின்றான் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை மிக அன்புடன் அழைக்கும்போது கண்களின் முக்கியத்துவத்தை பிரதிபளிக்கும் விதமாக கண்ணா என்றும் கண்ணே என்றும் அழைப்பது உண்டு. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கும், ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் விருப்பமானவர்களை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்று அழைக்கின்றனர்.
இதன் முதல் பதிவின் பின்னூட்டத்தில் மு.செ.மு. நெய்னா முஹம்மது கூறியபடி பாசத்தின் வெளிப்பாடாய், அன்பின் உச்சமாய் நம் ஊர் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை "கண்ணான உம்மாவே" என்றும் ஆண் பிள்ளைகளை "கண்ணான வாப்பாவே" என்றும் அழைப்பார்கள். அப்படி கண்ணை போன்று நம்மை பாதுகாத்த அவர்களை, நாம் வளர்ந்ததும் அவர்கள் நமக்கு உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் பணத்தாலும் நமக்கு செய்த பெரும் தியாகத்தை எண்ணிப் பாராமல் அவர்களை கவனிப்பார் யாருமின்றி விட்டு விடுவது எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
இல்லையேல் பின்னால் தான் பெற்ற பிள்ளைகளால் இதேபோல் நிந்திக்கப்படுவாய் என்பதையாவது மனதில் வைத்து தாய் தந்தை செய்த தியாகத்திற்கு இல்லாவிட்டாலும் தனது சொந்த நலனுக்காவது தாய் தந்தையை நன்கு கவனிக்க தவறக்கூடாது. என்பது நியதி. இதை நன்கு ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு நாம் கண்களாக இருந்தோம். நம் தாய் தந்தையரை நமது இரு கண்கள் போன்று நன்கு கவனித்துக்கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த 5 வது தொடரில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற அதிகாலையில் கண் விழிப்போரை பற்றியும் பார்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர்
21 Responses So Far:
கண்கள் ஆழமாய்ப் பார்க்கின்றன, இனிய நண்பா!
// பெற்றோர்களுக்கு நாம் கண்களாக இருந்தோம். அவர்களை நமது இரு கண்கள் போன்று நன்கு கவனித்துக்கொள்வோம். //
கண் பாடத்தில் இது பொன் வரிகள்!
பார்வைதனைக் கட்டுப்படுத்த
பாவமது மட்டுப்படும்
உபயோகமானத் தொடர். கண்ணுக்கெட்டாத தூரம்வரைகூட தொடரட்டும் மன்சூரின் தேடல்.
வாழ்த்துகள்!
அஸ்ஸலாமு அலைக்கும். மச்சான்! பார்வையின் அ"வசியத்தை "கோர்வை"யாக சொல்லுவதுடன் தேவையானவற்றுக்கு போர்வை(மரப்பு) போடவேண்டும் என்னும் "தீர்வை" சொல்வது இத்தொடரின் சிறப்பு.
// சவூதியில் பெண்களை கூர்ந்து பார்க்ககூடாது//
கருப்பு கண்ணாடி போட்டு பாத்தாலுமாகசையடி? நான் பார்த்தது எப்புடி தெரியும்?
''அவளும் நோக்கினாள்;
அண்ணலும்நோக்கினான்!''
என்று சொன்னால்கூட விட மாட்டார்களா?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
ஒரு அருமையான தொடர் ஒரு அறிமுக எழுத்தாளரால் எழுதப் படுகிறது என்று எண்ணும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயம்த்தின் மெருகும் கூடிக் கொண்டே போகிறது. கூடவே அறிவியல் மற்றும் அரசியல் தகவல்கள்.
பாராட்டுகிறேன் தம்பி மன்சூர். இவ்வளவு நாள் எங்கே போய் இருந்தீர்கள்?
//''அவளும் நோக்கினாள்;
அண்ணலும்நோக்கினான்!''\\
அவளும் “நோக்கியா”
அவனும் “நோக்கியா”
என்று புதுக்கவிதையில் ஒரு கவிஞன் சொல்லி விட்டான்!
//அவளும் “நோக்கியா”
அவனும் “நோக்கியா”//
வேறொருவருடன் தொடர்பில்
இருவரும் இருக்கிறார்கள் !
இப்படிக்கு
நெட்வொர்க்
\\வேறொருவருடன் தொடர்பில்
இருவரும் இருக்கிறார்கள் !\\
"நீங்கள் தொடர்பு கொண்ட நபர் வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்” என்னும் இவ்வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நிரடலாகத்தான் படுகின்றது.
கண்ணும் கண்ணும் வச்ச மாதிரி கட்டுரை அம்சமா இருக்கு யாரு கண்ணும் பட்டுராம இருக்கு மொலவா சுத்தி போடுங்க
//கண்கள் ஆழமாய்ப் பார்க்கின்றன, இனிய நண்பா!//
சவூதியின் தண்டனைகளை நீயும் நானும் ஆழமாய் பார்த்ததைத்தானே இங்கு தந்திருக்கின்றேன் தமாம் அல்கோபாரை மறக்க முடியுமா
//கண் பாடத்தில் இது பொன் வரிகள்!//
நன்றி ஜாபர்!! இந்த பொன்வரிகள் சும்மா வாயல் மொழிந்துவிட்டு மட்டும் போகும் பொன்வரிகளல்ல ஒவ்வொருத்தரின் இதயத்தில் ஆழமாய் பதிக்க வேண்டியவை
//உபயோகமானத் தொடர். கண்ணுக்கெட்டாத தூரம்வரைகூட தொடரட்டும் மன்சூரின் தேடல்.//
ஜஸாக்கல்லாஹ் கைர் சபீர்
உன்னைப் போன்ற பெரிய கர்ப்பனை வளமிக்க எழுத்தாளர்களின் தூண்டுதலின் பேரில் இன்னும் இன்ஷா அல்லாஹ் கன்னுக்கெட்டாத தூரம் வரை பயணம் தொடரும்
//அஸ்ஸலாமு அலைக்கும். மச்சான்! பார்வையின் அ"வசியத்தை "கோர்வை"யாக சொல்லுவதுடன் தேவையானவற்றுக்கு போர்வை(மரப்பு) போடவேண்டும் என்னும் "தீர்வை" சொல்வது இத்தொடரின் சிறப்பு.//
நன்றி க்ரவுன் மச்சான்
பெண்கள் ஒரு வீராப்புடன் மாராப்பு போட தவறுவதால் நமக்கு தானாக வந்து சேறும் பாவங்கள் அதை கோர்வையின்றி சொல்லவில்லை என்றால்தேவையின்றி மாட்டிடுவார்கள் கண்களுக்கு மாராப்பு போடாதவர்கள்
//கருப்பு கண்ணாடி போட்டு பாத்தாலுமாகசையடி? நான் பார்த்தது எப்புடி தெரியும்?
''அவளும் நோக்கினாள்;
அண்ணலும்நோக்கினான்!''
என்று சொன்னால்கூட விட மாட்டார்களா? //
பாரூக் காக்கா
அவர்கள் நம் கண்களை பார்த்து பிடிப்பதில்லை நம் முகம் அடிக்கடி பெண்கள் பக்கம் திரும்பினாலே பக்கத்தில் நம்மை கவணிக்கும் அரபிகளே நமக்கு வில்லன்களாக மாறுவார்கள்
யாரும் கூலிங்க் கிளாஸ் போட்டெல்லாம் இங்கு ஏமாற்ற முடியாது
அவளும் நோக்கினால் ஆனால் அண்ணன் நோக்கினால் கசையடிதான் ஆனா
//ஒரு அருமையான தொடர் ஒரு அறிமுக எழுத்தாளரால் எழுதப் படுகிறது என்று எண்ணும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயம்த்தின் மெருகும் கூடிக் கொண்டே போகிறது. கூடவே அறிவியல் மற்றும் அரசியல் தகவல்கள்.
பாராட்டுகிறேன் தம்பி மன்சூர். இவ்வளவு நாள் எங்கே போய் இருந்தீர்கள்?//
ஜஸாக்கால்லாஹ காக்கா
நீங்கலெல்லாம் எங்களுக்கு பெரிய குரு
உங்கள் எழுத்தாற்றலில் ஈர்க்கப்பட்டவனே நான்.
உங்கள் வழியில் நான்
//
"நீங்கள் தொடர்பு கொண்ட நபர் வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்” என்னும் இவ்வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நிரடலாகத்தான் படுகின்றது.//
செம்மொழியில் இதெல்லாம் சகஜம்ப்பா
//கண்ணும் கண்ணும் வச்ச மாதிரி கட்டுரை அம்சமா இருக்கு//
மிக்க நன்றி மீண்டும் வருக
// யாரு கண்ணும் பட்டுராம இருக்கு மொலவா சுத்தி போடுங்க//
தவ்ஹீது வாதிகளின் அகராஅதியிலிருந்து நீக்க்ப்பட்ட வார்த்தைகள்
கண்ணைப்பற்றி இவ்வளவு விசயங்கள் உள்ளது...தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே
கண்ணைப்பற்றி இவ்வளவு விசயங்கள் உள்ளது...தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே
Post a Comment