Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 8 15

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2013 | , ,

D.H.Lawrence: டி.ஹெச்.லாரன்ஸ் இங்லாந்தில் நோட்டிங் ஹாம் ஷயர் என்ற ஊருக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமத்தில் 1885-ஆம் ஆண்டு பிறந்தார். ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட பெயர்களில் இவர் பெயரும்அடங்கும்.

ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பத்தில் பிறந்தவர். வறுமைதான் பாட்டன் பூட்டான் தேடிவச்ச பரம்பரைச் சொத்து. பள்ளி ஆசிரியை பணி செய்த அவருடைய தயார், குடும்பத்தை பீடித்த வறுமைப் பிசாசை விரட்ட அல்லும் பகலும் அயராது உழைத்தார். லாரன்சின் தாய் தந்தையரின் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாய் மறைந்தது. கையில் காசு இல்லாதவன் வீட்டில் சுற்றமும் நட்பும் சூழவருமோ? குடும்பத்தில் சண்டையும் வம்பும் புகுந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. வறுமைபுகுந்த இடத்தில் இவையெல்லாம்ஒன்று கூடி மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றும்.

தாய்-தந்தையரின் சண்டை சச்சரவுகளை கருத்தூன்றி கவனித்த  லாரன்சின் இளமனதில் சோகம் பசுமரத்து ஆணிபோல் ஆழாமாக பதிந்தது. அதன் தாக்கம் பிற்காலத்தில் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக மாற்றியது. 

Sons and Lovers என்ற ஒரு நாவல் எழுதினார். இந்த  நாவலின் பின்புலமே அவர் தாய்-தந்தையர்களின் தாம்பத்திய உறவின் பிரதிபலிப்பே. இது அவர் 1913-ஆண்டு எழுதிய முதல் நாவல்.

அடுத்து  1920-இல் The Rainbow என்ற நாவல். 

ஆண்-பெண் பாலுறவு விஷயங்களை Women in Love என்ற நாவலில் வெளிப்படையாகவே எழுதினார். அதை அடுத்து Aarons Road, Kangaroo, The Plumed Serpent, நாவல்களையும் எழுதி எழுத்துலகில் பெயர் பதித்தார்.

1928-ம் ஆண்டில் அவர் ஒரு கதை எழுதினார். அதை வெளியிட முயற்சி தொடங்கும் போதே ஆரம்பித்தது தலைவலி. ஆரம்பத்திலேயே தலைவலி தந்த புத்தகம் எந்த புத்தகம்? அது தான் "லேடி சாட்டர்லியின் காதலன்". Lady Chatterley’s lover. கதையின் கையெழுத்து பிரதியை தன் உதவியாளரிடம் டைப் செய்யகொடுத்தார்.

டைப் செய்வதை பாதியில் நிறுத்திவிட்டு “இது ரெம்ப ஆபாசம். நான் இதை டைப் செய்ய மாட்டேன்னு” என்று  உதவியாளர் திருப்பி கொடுத்து விட்டாளாம்.

எப்படியோ சமாளித்து பல அச்சு கூடங்களில் முட்டி மோதிய பின் ஒரு பதிப்பகம் மட்டும் அதை வெளிட முன் வந்தது. முதலில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளி வந்தது. அவை எல்லாம் சீக்கிரமே விற்று முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளியானது. 

ஆசிரியரின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக அச்சிட்டு வெளியாகும் புத்தகங்கள் [pirate] மார்க்கெட்டில் பெருக்கெடுத்து ஓடியதுடன் கதை விவகாரம் [பாலுறவு] வெளியில் கசிந்து போலீசின் எலி காதுகளுக்கு எட்டியது. கடை கடையாக புகுந்து ஒரு புத்தகக் கடை கூட பாக்கி விடாமல் "சாட்டர்லீயின் காதலனை" போலீஸ் வேட்டையாடியது. லாரன்சு மனம் ஒடிந்து போனார். pirate கொள்ளையர்கள் ஒருபுறம், போலீஸ் அட்டகாசம் மறுபுறம். ‘உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளதிற்கு இருபக்கம் இடி’ என்பதுபோல லாரென்ஸு இருபுறமும் மாறி மாறி அடி வாங்கினார். இதை ஒரு ஏழை எழுத்தாளனால் தாங்க முடியுமா?

இதற்கிடையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றோடு ஒன்று ‘’மோதிக்” கொண்டன [ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன’ என்ற இந்த வரி ’ஜஸ்ட் உங்கள் வாசிப்புக்காக சும்மா போட்டது தானே தவிர நீங்கள் ஒன்றும் நம்நாட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற ‘குழாயடி’ சண்டை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்].

கடைசியாக 1958-ம்-ஆண்டு பிரிட்டிஷ் அரசு lady Chatterley’s lover-ருக்கு விதித்த தடையே நீக்கியது, அதோடு மட்டுமல்ல, அது பெற்ற தண்டனைக்கு ‘கழுவாய்’ யாக  இலக்கிய அந்தஸ்தையும் கொடுத்தது. பாவம் இந்த நல்ல செய்தியை கேட்டு மகிழ அதை எழுதிய லாரென்சுதான் இல்லையே!. ஏவனோ ஒருவன் நெத்தி வியர்வை நிலத்தில் சிந்தி இரவும் பகலும் பாடுபட்டு உழைத்து உருவாக்குகிறான். வேறு எவனோ ஒருவன் உண்டுகளிக்கிறான். இதுகாலம் போடும் ‘ராங்கால்’ [wrongcall] இதை மாற்ற எவன் வருவான்?

ladyChatterley”s Lover தடை மேலை நாடுகளில் அகற்றப்பட்டாலும் கீழை நாடுகள் பலவற்றில் இன்னும் தடை நீக்கப்பட வில்லை. 

Lady Chatterley’s Lover தமிழ்நாட்டு திராவிட கட்சிகளின் அரசியலிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. 1961 ஆண்டில் வேலூரில் நடந்த தி.மு.க பொதுக் குழுகூட்டத்தில் E.V.K.சம்பத் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்த போது ராசா-பாச நிகழ்வுகள் நடந்தேறியது. சம்பத் கொண்டு மாற்றங்களில் ஒன்று தி.மு.க. தலைவர்கள் மேடைகளில் ஆபாச வார்த்தைகளை பேசக்கூடாது என்பதும் ஒன்று. இதை ஏற்று கொள்வது போல் ஏற்றுக் கொண்ட அண்ணா சிலநாட்கள் கழித்து மாயவரம் பொது கூட்டதில் Lady Chatterle’s Lover கதையை விவரித்து பேசினார். இதனால் சம்பத் தி.மு.க.வை விட்டு விலக இதுவும் ஒரு காரணமானது.

Sir.Arthur Conan Doyle எழுதிய கதைகளில் வரும் துப்பறியும் சிங்கம் ‘ஷெர்லோக் ஹோல்ம்ஸ்’க்கு ஐரோப்பா, அமெரிக்கா முழுதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஷெர்லோக் ஹோல்ம்ஸ் வில்லனுடன் சண்டைசெய்த போது ஆற்றில் விழுந்து இறந்து விடுவதாக 1893ல் கோனாண்டோயல் ஒரு கதைஎழுதினார். அந்த கதையோடு புகழ்பெற்ற ஹோல்ம்ஸு கதாபாத்திரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி போட்டதோடு துப்பறியும் கதை எழுதுவதையும் நிறுத்திவிட்டார். தங்கள் "இதய தெய்வம்" துப்பறியும் சிங்கம் ‘ஹோல்ம்ஸ்’ கதைகள் ‘இந்தா‘ வரும்’ அந்தா வரும்’ என்று ஐந்து ஆண்டுகள் காத்திருந்து எதிர்பார்த்த ரசிக பக்தர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. காத்திருந்த ரசிகர்கள் பொறுமையிழந்து கொதித்துப் போனார்கள். "பொறுத்தது போதும் தோழா! பொங்கி எழு" என்று போர் முரசு கொட்டி முழக்கமிட்டு போராட்டத்தில் குதித்தார்கள். மறியல் செய்தார்கள்! பத்திரிகைகளில் அறிக்கை விட்டார்கள். ஒன்றும் ஒப்பேறவில்லை. இவர்களின் போராட்டம் போர்முரசு ஒன்றும் எழுத்தாளர் கேநோண்டோயில் காதில் ஏறவில்லை. காவிரியில் தண்ணீர் விடக்கோரி தமிழ்நாட்டில் கூட இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை.

கடைசியாக எழுத்தாளர் ஆர்தர் கோனண்டோயல் வீட்டுமுன் மறியல் செய்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். ‘ஹோல்ம்சை’ மீண்டும் உயிருடன்” கொண்டு வரவேண்டும். துப்பறியும் கதை எழுத வேண்டும்’’ என்று ஆர்தர் கோனண்டோய்ல் இடம்’ கருணை மனு’’ சமர்பித்தார்கள். ’இது என்னடா பெரிய பேஜ்ஜாரா போச்சுன்னு’ புலம்பியபடியே ஆர்தர் கொனண்டோயல் மனுவை வாங்கி ஆர்பாட்டகாரர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்., ஆர்பாட்டகாரர்களும் ‘கொனோண்டோயல் வாழ்க! ஆர்தர் கொனண்டோயல் வாழ்க!! எழுத்துலகச் சிற்பி வாழ்க’ என்ற கோஷத்துடன்  அமைதியாக களைந்து போனார்கள். இந்த அமளி துமளி எல்லாமே தன் இமேஜை வளர்த்து கொள்ள கேநோண்டோயலே முன்கூட்டியே போட்ட திட்டம் என்று நினைக்காதீர்கள். அந்த அரசியல் தந்திரம்யெல்லாம் அங்கே கிடையாது. வேறே எங்கேன்டு கேக்குரியாள? உ...ஸ்....ஸ்....ஸ் ரகசியம்.

ஆர்தர்கோனண்டோயல் “வெள்ளை”க் காரர் அல்லவா! கொடுத்த வாக்கு மாறாமல் செத்துப்போன ஹோல்ம்சை எமனிடம் மன்றாடிக் கேட்டு வாங்கி மீண்டும் கதாநாயகனாக போட்டு துப்பறியும் கதைகள் எழுதினார். இதுவே நம்ம  நாட்டு எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருந்தா கொடுத்த வாக்கை காப்பாத்துவானுங்களா?" ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொன்னதோடு சரி. சொன்னதையல்லாம் காத்துலே உட்டுட்டு அவங்க ஜோலியே பார்த்துகினு போயே போயீடு வானுங்க. இனிமே அவங்க மூஞ்சியெ அடுத்த எலக்சன் டயத்துலேதான் பாக்க முடியும், ஆனா வெள்ளக்காரன் வெள்ளக்கரந்தான் சொன்னத செய்வானுங்க செய்வதை சொல்வானுங்க. அதனாலேதான் அவன் நாடு முன்னுக்கு வந்துச்சு. இல்லேன்னா நம்ம மாதிரி குந்திகின்னு ஈக்க வேண்டியதுதான்
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

15 Responses So Far:

M.B.A.அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும் காகா தங்களின் நினைவாற்றலை கண்டு வியந்தவனாகவே இங்கே கருத்தை பதிவிடுகிறேன் அப்பப்பா எத்தனை புத்தஹன்கள் என்னென்ன விளக்கங்கள் நீங்கள் ஒரு என்சைக்ளோபிடியா .. .. அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம் ...தொடரட்டும் தங்கள் எழுத்து பனி இன்னும்ம் நிறைய புத்தகங்கள் பிறக்கட்டும் எங்கள் செவிக்கு உணவாக தேன் மதுர தங்களின் புத்தகங்களின் விளக்கங்கள் வந்து பாயட்டும் புத்தகங்களை பற்றி சொல்கையில் அந்த புத்தகங்களின் அட்டை படங்களும் பிரசுரித்து d .h லாரன்சின் லேடி சார்ட்டலீஸ் லவர் ..& சண் அண்ட் லவர் புத்தகங்களின் அட்டைப்படங்கள் மிக அருமை ........ காக்க நல்ல வேலை தீ பொறி ஆறுமுகம் , வெற்றிகொண்டான் போன்ற திமுக பேச்சாளர்களின் நரகல் நடை பேச்சை கேட்க சம்பத் உயிரோடவே இல்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கணினியில் அகர முதல எழுத்தெல்லாம் ! ஆங்கிலமே என்றிருந்த காலம் மலையேறி நீண்ட நாட்களாகிவிட்டாலும் !

ஆங்கில புத்தங்களின் இலக்கில்லா பயணம் வாசிக்க வாசிக்க, ஞாயிற்றுக் கிழமை [மட்டும்] திறந்திருக்கும் நூலகத்தில் தனிமையில் தன்னந்தனியாக வாசிக்கும் உணர்வு !

ஆங்கிலத்தில் : thank you ! :)

Yasir said...

மாஷா அல்லாஹ் தொடர் மெருகெறிக்கொண்டே வருகின்றது..ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருப்பது அதிகம் அருமை ..வாழ்த்துக்களும் துவாக்களும்

//மாயமாய் மறைந்தது. கையில் காசு இல்லாதவன் வீட்டில் சுற்றமும் நட்பும் சூழவருமோ? குடும்பத்தில் சண்டையும் வம்பும் புகுந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. வறுமைபுகுந்த இடத்தில் இவையெல்லாம்ஒன்று கூடி மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றும்.// ரசித்த வரிகள்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Mohammed Farook,

Thanks for sharing your experience on novels and related stories.

To be frank, I never had read English novels, but I remember now, I started reading Tamil novel "Ponniyin Selvan" in my college days. My father advised not to spend time on reading novels. So, I stopped reading "Ponniyin Selvan".

According to scholars that reading novels increase language fluency. But I am afraid of wasting of time on them. Instead I found other ways to increase my English language fluency.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும், காக்கா.

தங்களிடம் நினைவாற்றலும் இருப்பதைப் போன்றே, தாங்கள் வாசித்த நூல்களும் இன்று வரை இருக்கின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன, இந்தக் கட்டுரையும் அதனுள் இணைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களின் மேலட்டைகளின் படங்களும். மாஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இரண்டே இரண்டு ஆங்கிலப்புத்தகங்களுக்கு இரண்டாயிரம் பின்னணி தகவல்களைத் தருகிறீர்கள்.

அத்துடன் அரசியல் கோமாளிகளை வேறு நக்கலடிக்கத் தவறுவதில்லை.

புத்தகங்களைப்பற்றிய குறிப்புகளும் எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகமும் தனித்துவமாக ஒலிக்கிறது.

வெற்றிகரமாகத் தொடர...

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இங்லீஸ் புள்ளெ மாதிரி வண்ணமான வெள்ளைத்தகவல்கள்!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

ZAKIR HUSSAIN said...

புத்தகங்களுக்கு ஒரு ரெபரன்ஸ் ஆக நீங்கள் இருப்பது கண்டு சந்தோசம். உங்களுக்கு நடந்த இத்தனை "இடிபாடு"களுக்கிடையேயும் இவ்வளவையும் படிக்க எப்படி நேரம் இருந்தது.

ZAEISA said...

ஞாயிற்றுக் கிழமை லைப்ரரி ஊரெங்கும் விடுமுறையாகும்.ஆனால் அ.நி.ல் ஒரு லைப்ரரி.அதுவும் அறிய நூலகம் ஃபாரூக் காக்காவுக்கு நல வாழ்த்துக்கள்.............

Ebrahim Ansari said...

//உங்களுக்கு நடந்த இத்தனை "இடிபாடு"களுக்கிடையேயும் இவ்வளவையும் படிக்க எப்படி நேரம் இருந்தது.//

இடிபாடுகளை மறக்கத்தான் படிபாடுகள்.

Ebrahim Ansari said...

//உங்களுக்கு நடந்த இத்தனை "இடிபாடு"களுக்கிடையேயும் இவ்வளவையும் படிக்க எப்படி நேரம் இருந்தது.//

இடிபாடுகளை மறக்கத்தான் படிபாடுகள்.

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்

//இவ்வளவு இடிபாடுக்கிடையில்// அன்பு மருமகன் ஜாஹிக்கு!

அந்த இடிபாடுகளை எல்லாம் இடித்து தரைமட்ட மாக்கிய பின்
அந்த படிவிட்டு கீழ் இறங்கி சொந்தப் படி தொட்டு மேல் ஏறி நடந்தபின் வந்த பொழுதையெல்லாம் வகையாக 'கை' பிடித்தேன். மேலும் அதற்கு முன்னும் பினாங்கில் ஈப்போ, தைப்பிங், அலோர் ஸ்டார் ஆகிய ஊர்களில் புத்தகக் கடையில் பணியாற்றிய வடுக்களே இன்றைய எழுத்துப் பயிருக்கு வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சியது. என் புத்தககடை வாழ்வுக்கு visa எடுத்து கொடுத்தது யார் தெரியுமா? உன் பெரிய வாப்பாவும் என் சின்ன மாமா மர்ஹும் அப்துல் சமது அவர்களின் ஆருயூர் தோழருமான மர்ஹும் முஹம்மது மொஹிதீன் மாமா அவர்களே!

உன் பெரிய வாப்பா மர்ஹும் ஜைனுல்லாபுதீன் மாமாஅவர்கள்
ஈப்போ Detention Camp பில் நடத்திய கடையில் ஒரு மாதத்துக்கு மேல் எந்த குறையும் இல்லாமல் தங்க வைத்து மளிகைக் கடைகளில் வேலை இருந்தும் ''அதெல்லாம் வேண்டாம்! உனக்கு நல்ல கடை கிடைக்கும் வரை இங்கேயே இரு என்று சொல்லி கடைசியில் Perak Book Store என்ற கடையில் சேர்த்து விட்டார்கள். எனக்கு எழுத்து அறிவித்த ஆசான் முஹமது மொஹிதீன் மாமா அவர்களே! !

நன்றி மறப்பது நன்று அன்று! அதை நினைப்பதே நன்று! அன்றிலிருந்து தொடங்கிய இன்று வரை From Cradle to Grave.!..... //இவ்வளவு இடிபாடுக்கிடையில்//அன்புமருமகன்ஜாஹிக்கு!
அந்தஇடிபாடுகளைஎல்லாம் இடித்து தரைமட்டமாக்கிய பின்
அந்த படிவிட்டுகீழ்இறங்கி சொந்தப்படிதொட்டுமேல் ஏறி நடந்தபின்
வந்தபொழுதை யெல்லாம் வகையாக' கை'பிடித்தேன்.மேலும்அதற்க்கு
முன்னும் பினாங்கில் ஈப்போ,தைப்பிங்,அலோர்ஸ்டார்ஆகியஊர்களில்
புத்தககடையில் பணியாற்றியவடுக்களேஇன்றைய எழுத்துப்பயிருக்கு
வாய்க்கால்வெட்டிநீர்பாய்ச்சியது.என்புத்தககடைவாழ்வுக்குvisaஎடுத்து
கொடுத்ததுயார்தெரியுமா?உன் பெரியவாப்பாவும் என் சின்ன மாமா
மர்ஹும்அப்துல்சமதுஅவரகளின்ஆருயூர்தோழருமான
மர்ஹும்முஹம்மதுமொஹிதீன்மாமாஅவர்களே!
உன் பெரிய வாப்பாமர்ஹும் ஜைனுல்லாபுதீன் மாமாஅவர்கள்
ஈப்போDetentionCamp பில் நடத்தியகடையில்ஒருமாதத்துக்கு
மேல்எந்தகுறையும்இல்லாமல்தங்வைத்துமளிகைகடைகளில்வேலைஇருந்தும்
''அதெல்லாம்வேண்டாம்!உனக்குநல்லகடைகிடைக்கும்வரை
இங்கேயேஇருஎன்றுசொல்லிகடைசியில்PerakBook Storeஎன்றகடையில்
சேர்த்துவிட்டார்கள்.எனக்குஎழுத்துஅறிவித்தஆசான்முஹமதுமொஹிதீன்மாமாஅவர்களே!
!நன்றிமறப்பதுநன்றுஅன்று!அதைநினைப்பதேநன்று!

அன்றிலிருந்து தொடங்கிய இன்று வரை From Cradle to Grave.!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Mohammed Farook,

My father Mr. Bahurudeen (Passed away in the year 2010, Beach street, Family Name Copaalam veedu) too had worked in book stores in olden days(Penang, Ipoh, Alorstar, KL - Annalakshmi Emporium, Hanifa Textles etc.,).

I remember that he was having posing to photoes(reddish or greenish) in front of book stores. I think he is similar age to you. I guess you know him well. Could you please recollect your memories about him?

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.
ameenspirit@gmail.com

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். புத்தகத்தின் வரலாறை வாழும் வரலாற்(றல்)று புத்தகம் சொல்கிறது!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்! ஒரு புத்தகம் பிறக்கிறது தொடர் 8 க்கு பாராட்டுகள் தெரிவித்த அ.நி. அன்பு நெஞ்சங்கள் அனைத்திற்கும் என் உளமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு