Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழகத்தில் விரைவில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவ கல்லூரி! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


சமீபத்தில் ஆஸ்திரேலியா வருகை தந்த கவிகோ அப்துல் ரஹ்மான் அவர்களை எங்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் ஒரு வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி தந்தான். 

இங்கு சிட்னி, மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசிய அவர்கள், தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக அவர்கள் வக்ப் வாரிய தலைவராக இருந்தபோது எடுத்த முயற்சிகளைப் பற்றியும், அது பல்வேறு காரணங்களினால் இயலாமல் போனதைப் பற்றியும், அந்த முயற்சியை மறுபடியும் துவங்கி இருப்பதை எடுத்துக் கூறினார்கள்.

இந்த மருத்துவ கல்லூரி, சமுதாய சிந்தனையில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் தொடங்கப்பட இருக்கிறது. இதை துவங்க அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக  அளிக்க திருநெல்வேலியை சார்ந்த ஒரு சகோதரர் முன் வந்துள்ளார். இதைப்பற்றிய கவிக்கோவின் காணொளியை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.


மருத்துவக் கல்லூரி பற்றிய மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட என்னுடைய தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோதொடர்பு கொள்ளலாம் : email: msahib@gmail.com   Phone: +61 433 077 660.

நாமும் பங்கெடுத்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ், நமதூருக்கு உள்ள டாக்டர்கள் பற்றாக்குறை நமது வம்சங்களுக்கு நீங்கும்.  

இன்ஷா அல்லாஹ், கவிக்கோ அவர்களை நமதூருக்கு வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களது முயற்சி கை கூடியதும் தெரியப்படுத்துகிறோம்.

தகவல் : மீரான் சாஹிப் - ஆஸ்திரேலியா

8 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ். அபுதபிக்கு இரண்டாண்டுகட்கு முன்னர் வருகை புரிந்து “கல்வி மற்றும் பொருளாதார விழிப்புணர்வு” பற்றிய உரை நிகழ்த்தினார்கள்; அன்று முதல் கவிக்கோ அவர்கள் நம் சமுதாய இளைஞர்களின் கல்வி மீதான ஆர்வம் பற்றி அறிந்து கொண்டேன்; இப்பொழுது ஆஸ்திரேலியாவிலும் அந்த விழிப்புணர்வுடன் உரையாற்றியும் நாமெல்லாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி அமைவது பற்றியும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்; கவிக்கோ அவர்களின் முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்கித் தருவானாக(ஆமீன்)

Unknown said...

Assalamu Alaikkum

Great intentions and excellent efforts for making first muslim medical campus in Tamil Nadu. May Allah shower his blessings and help make the intention a reality. InshaAllah.

Labbaikkudi kadu Jamaath's contribution is setting an example to other communities and Jamaaths in Tamil Nadu.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிக்கோ அவர்களின் முயற்சியை வெற்றியாக்கி மருத்துவ துறையிலும் நம் சமுதாயம் தனித்துவம் பெற அல்லாஹ் நாடிடுவானாக ஆமீன்.

Ebrahim Ansari said...

கவிக்கோவின் மாணவன் என்கிற முறையில்
சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருந்தாலே சமுதாய முன்னேற்றம் பற்றி அதிகம் கவலைப்படுவார். நமக்காக மருத்துவக்கல்லூரி இல்லை முதலிய கவலைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இருந்தது.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஜனாப்.கவிக்"கோ"(ரிக்கை)வின் முயற்சிக்கு அந்த ரஹ்மானின் அருள்கிடைக்கட்டும் ஆமின்.

crown said...

இதுபோல் புவிக்கோர் சமூக எண்ணம் தூண்டும் பல கவிக்கோ வேண்டும்.இப்படி இருந்தால்தான் காவிக்கூட்டத்திற்கு எதிராய் போர்வாளாய் இருந்திட முடியும்.

Unknown said...

நம் சமுதாயத்தின் மேல் உள்ளன்புடன் எழுந்த அக்கறை.
ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சியும் தூய எண்ணமும் விரைவில் நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்.

அபு ஆசிப்.

AMEEN said...

நம் சமுதாயத்தின் மேல் உள்ளன்புடன் எழுந்த அக்கறை.
ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சியும் தூய எண்ணமும் விரைவில் நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு