Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிளாக் ஹோல் !? 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2013 | , , ,

அதிரைநிருபர் தனது இணையப் பயணம் துவங்கிய நாள் தொட்டு தோளோடு தோளாக, உறவோடு உறவாக, உணர்வுகளோடு உண்மையாக எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பக்கபலமாக இருந்த எங்கள் அன்பிற்குரிய நண்பர், சகோதரர், எந்த அடைமொழியிட்டாலும் அனைத்திற்கும் பொருத்தமானவர், அதிரைநிருபரில் புகைப் படங்களைப் பேச வைத்தவர், இச் என்றாலும் நச் என்றாலும் சுருக்கமான கருத்துக்குச் சொந்தக்காரர் Sஹமீது என்ற எங்கள் எம்.எஃப்.சாஹுல் ஹமீது அவர்கள் [அதிரைநிருபரின் மூத்த பதிவர்களில் மரியதைக்குரிய மூத்த காக்கா S.முஹம்மது ஃபாருக் அவர்களின் மகனார்] இதுவரை அதிரைநிருபரில் எழுதிய, பேசிய பதிவுகளில் இந்தப் பதிவு 100 வது பதிவாகப் பதிக்கப்படுவதில் மகிழ்கிறோம்.

  அதிரைநிருபர் பதிப்பகம்  

உலகம் உருவானது எப்படி என்ற கட்டுரையில் பிளாக் ஹோல் (black hole) பற்றி நேரம் கிடைக்கும் போது  பார்ப்போம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது இப்போது அந்த பிளாக் ஹோல்  பற்றி இந்த பதிவில் விவரமாகப் பார்ப்போம் 

பிளாக் ஹோல்  என்றால் என்ன  ?

பிளாக் ஹோல் என்றதும் அது ஏதோ ஒரு இருட்டு ஓட்டை என்று நினைத்து விட வேண்டாம் அது ஓட்டையோ  அல்லது   வெற்றிடமோ அல்ல அது  ஒரு முன்னாள்  நட்சத்திரம்  பிளாக் ஹோல் என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் கூட்டு தொகுப்பாகும். மிகக் குறைந்த இடத்தில் நிறைய பொருட்களை அதிகமான அழுத்தத்தில் அமுக்கி அமுக்கி வைக்கும்போது  அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். ஆகவே  பிளாக் ஹோல் என்பது  தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிக விசையுடன் இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்  பிளாக் ஹோல்கள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளியிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒரு துளையைப் போன்று கருதுவதாலும் இதற்கு (கிடா வெட்டி)  பிளாக் ஹோல்கள் என பெயர் வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.


பிளாக் ஹோல் விண்வெளியில் உள்ள  ஆற்றலும்    அதிக ஈர்ப்பு விசையும்  கொண்டதுமான ஒரு பொருளாகும். நமக்கு தெரிந்த வரை மிக வேகமாக பயணிக்க கூடியது ஒளியாகும் அதன் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கி.மீ. இந்த ஒளியானது கூட இந்த பிளாக் ஹோலில் இருந்து தப்ப முடியாது  ஒரு நொடிக்கு 300,000 கி.மீ வேகத்தில்  பயணிக்க கூடிய ஒளிக்கே இந்த கதி என்றால் நாம் நம்ம  நிரந்தர பானையைத் தூக்கிக் கொண்டு என்ன வேகத்தில் தான்  ஓட முடியும்  இந்த பிளாக் ஹோலின் முன்னாள்.

ஒரு பெரிய நட்சத்திரத்தின்  எரிபொருள் முடிந்து விட்டால் (அங்கேயும் எரிபொருள் இருக்கு) அந்த நட்சத்திரம் அதன் எடையைத் தாங்க  முடியாது . நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன்  அடுக்குகள் அந்த நட்சத்திரம் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தினால்  நட்சத்திரம் சுருங்கி அளவில் சிறியதாகும். கடைசியில்  நட்சத்திரம் அணுவைவிட மிகச் சிறியதாக  உருமாறிவிடும் எப்புடி இருந்த நான்  இப்படி ஆயிட்டேன் என்பது  போல ஒரு பெரிய நட்சத்திரம் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும் போது அதன் அடர்த்தியும் அதன்  ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகி  பிளாக்ஹோல் உருவாகின்றது. இந்த மிக பெரும்  ஈர்ப்பு விசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனக்குள் இழுத்துக் கொள்ளும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ஆனால் இந்த நட்சத்திரம் சிறுத்தும் அதன் காரம் கூடுதலாகிவிடும் நட்சத்திரம் சுருங்கி  பிளாக் ஹோலானால் அதன் எடை கொஞ்சம் கூட குறையாது என்பதுதான் இங்கே மிக பெரிய ஆச்சர்யம் 

பிளாக் ஹோல்களின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப் பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய நட்சத்திரங்கள்  அழிந்து அவற்றின் எச்சங்கள்  பிளாக் ஹோல்களாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய  பிளாக் ஹோல்கள் உள்ளன. இவை மற்ற  பிளாக் ஹோல்களோடு ஒப்பிடும்போது அளவில் மிகச் சிறியதாகும். சில நட்சத்திர மண்டலங்களின் மையத்தில் ஒரு  சில பிளாக் ஹோல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனில் உள்ள பொருட்களைக் காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் அதிகமான  பொருட்களையே கொண்டிருக்கும்.

பிளாக் ஹோல்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் விண்வெளியாளர்கள்  பிளாக் ஹோல்கள் உள்ள இடத்தினைக் இலகுவாக கண்டறிய முடியும். பிளாக் ஹோல்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிக வெப்பமடைந்து X கதிர்களை வெளியிடும்.  இந்த X கதிர்களைப் புவியிலிருந்து மிக சுலபமாக  கண்டறியலாம். எப்படி என்றால் இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலை நோக்கிகள் மூலம் உணர முடியும்.  X கதிர்கள் அதிகம் காணப்படும் இடங்களில் இந்த பிளாக் ஹோல்கள் இருப்பதாக  விஞ்ஞானிகள் கணித்து விடுகின்றார்கள் 

நமது பால் வீதியின் மையத்தில் மிகப்பெரிய  பிளாக் ஹோல் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருக்கின்றது  அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடை கொண்டது. புவியிலிருந்து 24,000 ஒளிஆண்டுகள் (Light Years) தொலைவில் உள்ளது. இந்த  பிளாக்ஹோல் பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளதால்  இந்த பிளாக் ஹோலால்  தற்போதைக்கு  நமக்கு (பூமிக்கு) பாதிப்பும்  கிடையாது.

மற்றொமொரு பதிவில் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ் !

Sஹமீது

22 Responses So Far:

M.B.A.அஹமது said...

தங்களின் வெள்ளி விழா 100 வது பதிவில் பிளாக் ஹோல் என்று தலைப்பிட்டு அதற்கு கிடா வெட்டி பெயர் வைத்திருப்பார்களோ என்று அதிரையின் நக்கலுடன் அறிவியல் பதிவை கண்டு அசந்துவிட்டேன் தங்களின் 100 பதிவிற்கு கிடா வெட்டி விருந்து வைத்துவிடுவோம் மென் மேலும் தங்கள் எழுத்து பனி தொடரவும் புகை பட பனி தொடரவும் அறிவியல் தொடர் தொடரவும் என் அன்பான உள்ளங்கனிந்த வாழ்த்தை இந்த சில்வர் ஜூப்ளி பதிவிற்கு எங்கள் சாகுல் காக்கவிற்கு தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

sabeer.abushahruk said...

ப்ளாக் ஹோலில் ஏகப்பட்ட வெளிச்சம் பாய்ச்சி எங்களுக்கு விளக்கிய ஹமீதுக்கு ஒரு "ஓ"

100 பதிவுகளா!!! ஆச்சர்யப்படுமளவிற்கு ஒன்றுமில்லை.

காரணம் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிகளையோ நகைச்சுசைத் துணுக்குகளையோ வேட்டை அனுபவங்களையோ நவீன விவசாய யுக்திகளையோ வணிக லாவகங்களையோ புகைப்படக்கலை நுணுக்கங்களையோ சமையல் குறிப்புகளையோ தொகுத்தால் ஒவ்வொரு துறையிலும் ஒருநூறு பதிவுகளுக்குமேல் எழுதும் திறமை ஒளிந்திருப்பதை கண்டிருக்கிறேன்.

இருப்பினும் 100 என்பது ஒரு சாதனையின் மைல்கல்தான் என்பதில் உடன்படுவதால் வாழ்த்துகளுடனும் துஆவுடனும் அதற்காக ஒரு 'ஓ'

sabeer.abushahruk said...

//நாம் நம்ம நிரந்தர பானையைத் தூக்கிக் கொண்டு என்ன வேகத்தில் தான் ஓட முடியும் //

அதிரை நிருபரில் தனி மனித தாக்குதல் இல்லை என்று கேள்விப்பட்டேனே?

-இப்படிக்கு 40 இன்ச்

sabeer.abushahruk said...

//நாம் நம்ம நிரந்தர பானையைத் தூக்கிக் கொண்டு என்ன வேகத்தில் தான் ஓட முடியும் //

இதில் 'நிரந்தர' என்கிற வார்த்தை பிரயோகத்தை வன்மையாகவும் தொன்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்.

வாக்கிங் ஜாக்கிங் ஸ்கிப்பிங் சிட்-அப்ஸ் டயட்டிங் போன்ற சில்லறை வேலபாடுகளாலேயே கறைக்கக்கூடிய பானையை...(வெயிட் எ மினிட்... இந்த வார்த்தையையும் வ.தொ.மெ.வாகக் கண்டிக்கிறேன்) எப்படி நிரந்தரம் என்று சொல்லலாம்?

பதிவர் விவாதிக்கத் தயாரா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தனி மனித தாக்குதல் இல்லை என்று கேள்விப்பட்டேனே?//

தனக்குத் தானே... தாக்கிக் கொண்டால்... தலையிடாது !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தப் பதிவின் முன்னுரையே சொல்கிறது என் கருத்தும் அதுவே !

வாழ்த்துகிறோம்...!

இன்னும் வரவேற்கிறோம்...!

மற்றொரு புதுமையோடு !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//வாக்கிங் ஜாக்கிங் ஸ்கிப்பிங் சிட்-அப்ஸ் டயட்டிங்//

//பதிவர் விவாதிக்கத் தயாரா?//


வாக்கிங் ஜாக்கிங் ஸ்கிப்பிங் சிட்-அப்ஸ் டயட்டிங்ன்னு என்னதான் போனாலும் அது என்ன வெட்டிக்குளமா வத்தி போறதுக்கு நிரந்தரம் நிரந்தரம்தான் அதில் மாற்று கருத்து கிடையாது

Shameed said...

(முதல் படம்) அந்த ரெண்டு ஹோல் உள்ளே போய் யாருப்பா அதிரை நிருபர் லோகோ வை ஒட்டிவிட்டது

sabeer.abushahruk said...

நல்ல விவாத மூட்ல இருக்கும் என்னை காய்கறி வாங்குவதற்காக வெளியே தள்ளிக்கொண்டு போகும் தாய்குலத்தையும் கண்டிக்கிறேன்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//நல்ல விவாத மூட்ல இருக்கும் என்னை காய்கறி வாங்குவதற்காக வெளியே தள்ளிக்கொண்டு போகும் தாய்குலத்தையும் கண்டிக்கிறேன்.//

நிரந்தர பானைக்கு காய் கறி வாங்கத்தானே தங்கை குளம் உங்களை தள்ளிக்கொண்டு போகுது இதில் என்ன கண்டிப்பு வேண்டி இருக்கு

இன்றைய விவாதத்திற்கு வேண்டியோ நாங்கள் நேற்றே காய்கறி வாங்கி கொடுத்தாச்சு

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்......S ஹமீது அவர்களின் 100 வது பதிவு பார்த்து மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் இன்னும் வரணும்.

நெறியாளருக்கு,...முதலில் ஒரு பதிவிலும் ஒரு பாலத்தின் அடியிலும் தெரிந்தது,இப்பதிவிலும் அ.நி.லோகோவை பார்க்கும்போதும் சிமெண்ட் கம்பெனி விளம்பரமென்று நினைத்து விட்டேன்.சரி சரி சகோ ஜாகிரின் பதிவு பார்த்து நாளாச்சே........

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் சுட்டும் விழிச்சுடர் எஸ்.ஹமீத், அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்:

1) முன்னாள் குடியரசுத்தலைவர் அவர்களை அணுகியிருக்கலாம்.
2) நாசா வுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்து, அவர்களிடம் இணைந்துப் பணியாற்றலாம்
3) என் முகநூல் நண்பரும்- என் கவிதைகளின் இரசிகருமான “சந்திராயன்” விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் தொடர்பிலிருந்திருந்தால் உங்களையும் அவருடைய ஆய்வுக்குழுவில் சேர்த்திருப்பார். (இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால், அவருடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்யவா?)

அதிரையின் புகழ் “வானளாவிய” அளவுக்கு விண்ணை எட்டும் என்று நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஒரு விஞ்ஞானிகளின் குழூவில் இடம்பெற்றால், பொறாமைக்காரர்களின் கண்ணைக் கட்டும்!

இத்தனை ஆய்வும் செய்வதற்கு அடிப்படையாக நமதூர்ப் பள்ளியில் பயின்ற “பௌதிகம்” தான் கரணீயம் என்று நினைத்தாலே, அந்தக் காதிர் முஹைதீன் மேனிலைப் பள்ளியைப் பற்றி என்றேன்றும் மேன்மையுடன் நன்றி கூறுவோமாக!

நூறாவது பதிவை எட்டிய உங்களின் எழுத்தாற்றலை, அறிவாற்றலை , காமிராக் கவிதைக் கலையை எண்ணி வியந்து- அவ்வாற்றலை உங்கட்குப் பேறாக வழங்கிய பெரியோன் அல்லாஹ்வைப் புகழ்கிறேன்;அல்ஹம்துலில்லாஹ்; மாஷா அல்லாஹ்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

100 தந்த நீங்க
100 ஆண்டு வாழ்க
இன்னும் நிறைய தருக
இத்தள மேன்மை பெருக!

ZAKIR HUSSAIN said...

//சரி சரி சகோ ஜாகிரின் பதிவு பார்த்து நாளாச்சே........ //

On the way.

ZAKIR HUSSAIN said...

Black Hole....ஏதோ சயின்ஸ் ஃபிக்ஸன் படம் பார்த்த உணர்வு.

adiraimansoor said...

அதிரை நிருபரையே அலங்கரிக்கும் விதமாக பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்கள் அதிரை நிருபரில் வளம் வருவதை ஹமீது அண்ணனின் நூராவது பதிப்பான இந்த ப்ளாக் ஹோல் பதிவு நிரூபித்துள்ளது பதிவாளரான ஹமீது அண்ணன் அவர்களுக்கும் அதினிருபர் இனையதள நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்

கருப்பு ஹோல் பற்றி நிறைய படித்திருக்கின்றேன்

கருப்பு பள்ளங்கள்' சூரிய மண்டலத்திற்கு அப்பால் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறது. இதன் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் அதை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இந்த ஈர்ப்பில் இருந்து சூரியன், பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவும் தப்ப முடியாது. இதை கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானியான டாக்டர் எஸ்.சந்திரசேகரன்.

மிகச்சமீப காலத்தில்தான் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக புவிஈர்ப்பு எதிர்விசை இருப்பதையும் கண்டறிந்து இருக்கின்றனர்.

அது பிரபஞ்சம் முழுவதும் உள்ள பொருட்கள் எல்லாம் பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கோ ஒரு இடத்தை நோக்கி, வினாடிக்கு 700 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஏதோ ஒரு பொருளை நோக்கி ஓடி கொண்டிருப்பதையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
இது எப்படி? எதனால்? என்பது புதிராக உள்ளது. இந்த ஐந்தாவது சக்தி பிரபஞ்சத்தையே அழித்து விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

Ebrahim Ansari said...

முதலாவதாக நூறு பதிவுகளைப் பதிவு செய்ததற்கு அன்பான பாராட்டுக்கள்.

அடுத்து அந்த நிரந்தர என்கிற வார்த்தையைப் பிரயோகிக்கும் முன்பு என்னை தனிப்பட அல்ல.... மாமா என்ற முறையில் கொஞ்சம் யோசித்து இருக்கலாம். பரவாயில்லை. மறப்போம் மன்னிப்போம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிலரை இவர் ஒரு M B B S என்று சிலரை நக்கல் அடிப்போம். அது என்ன M B B S? யோசித்தால் சொல்லிவிடலாம்.
இருந்தாலும் முதலில் உள்ள M க்கு க்ளூ MEMBER .

கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் போதும் விபரம் எழுத வேண்டாம்.

adiraimansoor said...

நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது.


இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய குர் ஆனில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா? எத்தனை விஷயங்கள் இன்று நிரூபனமாகி வருவதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்

adiraimansoor said...

எனக்கு வேளை பலுவின் காரணமாக இதற்கு முந்தைய பதிவான

கலாமின்
“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம் ! என்ற பதிவும்

பி.பகுருதீன் அவர்களும் இபுராஹீம் அன்சாரி காக்கா அவகளும் இனைந்து உருவாக்கும்

நேற்று ! இன்று ! நாளை ! - தொடரும்

படிக்கவோ கமாண்டு அடிக்கவோ நேரமில்லாமல் இரவு பகலாக வேலை
இன்ஷா அல்லாஹ் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களையும் பாரூக் காக்கா அவர்களையும் விரைவில் நேரடியாக சந்திப்பேன்.

Unknown said...

Member of Big Belly Society

Yasir said...

காக்கா..உங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..உங்கள் கடின உழைப்பின் மூலம் அறிவியல் அறிவு எங்களுக்கு எளிமையாக புரிய வைக்கபடுகின்றது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு