Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாலியலுக்கு பலியாகாதே - 5 தொடர்கிறது.... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2013 | , ,

உறுதியோடு போராடுங்கள்...!

நாட்டில் பாலியல் வன்முறைக் கெதிராக எத்தனை வீரியமிக்க போராட்டங்களை கையிலெடுத்தாலும் அந்த போரட்டத்திற்கு மத்தியிலேயே பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளவதை யாராலும் தடுத்துவிட முடிவில்லை. காரணம் நாடக மேடைகளில் சுழற்றப் படுகிறது நீண்ட பெரிய வாள்களைப் போலவே போலியாக இருக்கின்ற நம் நாட்டின் சட்டங்கள். மேடையில் அந்த வாள் எவ்வளவு வேகமாகச் சுழற்றப்பட்டாலும் எதிராளியை எத்தனை முறை தாக்கினாலும் பார்க்கும் நமக்கு மட்டுமே தாக்கப்படுவதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் தாக்கப்படுவதில்லை என்ற நிலையில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அத்துனை இலகுவான காரியமில்லை.

மது மயக்கத்தில், காம வெறியில் வீதிகளில் திரியும் வெறி நாய்களுக்கு குழந்தைகள், சிறுமியர், பெண்கள், வயோதிகர்கள் என்ற வேற்றுமைகளும் புரிவதில்லை.

இன்னிலையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான சில வழிமுறைகளை இதற்கு முந்திய பதிவுகளில் பார்த்தோம். மேலும் அவ்வழிமுறைகளைப் பேணி என்னதான் தீய பார்வைகளிலிருந்தும் அதனால் ஏற்படுகிற பாலியல் தாக்குதல்களிலிருந்தும் நம்மை நாம் பெரும் பகுதி பாதுகாத்துக் கொன்டாலும், விஷமிகளால் வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிற பாலியல் வன்முறைகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில-தற்காப்பு நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

வீட்டிற்குள் புகுந்து அன்டை வீட்டினரால் ஒரு இளம் பெண் வன்புணரப்பட்ட செய்தியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தங்களுடைய வீடுகளில் இருந்தாலும் நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக் குறிதான் என்ற மோசமான முன்னுதாரனமாக இச்சம்பவம் இருப்பதோடு பெண்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையும் இதில் மறைந்திருக்கிறது.

பாலியல் வன்முறைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்கள் சிறிய கத்தியை தன்னுடன் வைத்திருப்பது சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் என்ற ஆலோசனை பலராலும் சொல்லப்படும் நிலையில் சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகையும் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அழுத்தமகச் சொன்னதாக செய்தியிலே பார்க்க முடிந்தது.

பெண்களுக்கு தற்காப்பு ஏற்பாடுகள் அவசியம். அதே சமயம் கத்தி போன்ற ஆயுதங்கள் அப்பெண்களுக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மேலும் கத்தி போன்ற ஆயுதங்களைக் கையாள்வதற்கு போதிய பயிற்சிகள் அவசியம். எனவே பெண்கள் ஆண்களின் பலகீனங்ளை அறிந்து கொன்டால் அதன் காரனமாக பாலியல் தொல்லைகள் ஏற்படும்போது இலகுவாக அவர்களைத் தாக்கி அந்தச் சூழலிருந்து இறவன் உதவியால் தங்களை பாதுகாத்து கொள்ள இயலும். மேலும் சில சமயோசித நடவடிக்கைகளும் சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும்.

பல சந்தர்ப்பங்களில் ஆண்களின் சூழ்சிகளில் தங்களையறியாது பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். சமீபத்திலே தன் மனிவியின் சகோதரியை வாகனத்தில் ஏற்றிச் சென்றவன் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதிக்குக் கொன் டுபோய் வன்புணர்ந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சற்று நிதானமக செயல்பட்டு அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற பாசாங்கு செய்து சூழ்நிலையை சாதகமாக சுட்டிக்காட்டி வேறொரு ஒரு சந்தர்ப்பம் உருவாகலாம் என்று என்று நம்பவைத்து அந்த சூழலிலிருந்து தப்பிக் கொண்டால் பின் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவைகள் கைகூடாமல் அந்த அயோக்கிய ஆண் பலப்பிரயோகம் செய்தால் அப்போது அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவிதமாக முடிந்த வரை கையில் சிக்கும் பொருட்களைக் கொண்டு தாக்கி தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சில நிமிடங்களைப் பயன்படுத்தி அச்சூழலிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட முயற்சிக்கனும்.

மேலும் ஆண்களின் இச்சையைத் தூண்டு பகுதிகளை தாக்கியும் தப்பித்துக் கொள்ளலாம். ஆண்களுக்கென்று பலகீனமான உறுப்புகள் என்று உடலில் உள்ளது. அதன் மேல் ஒரு சிறு அடிபட்டாலும் சில நிமிடங்கள் அவர்களை நிலை குலையச் செய்துவிடும்.

யாரும் பெண்களை நெருங்காமல் அவர்களை பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்திவிட முடியாது. அவ்வாறு அவர்கள் நெருங்கும்போது சரியான நேரத்தில் தாக்குதல் நடத்தி அப்போது கிடைக்கும் சில வினாடிகளைப் பயன்படுத்தி அதிலிருத்து தப்பிவிட்டால் கூட பிறகு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தங்களின் மானத்தையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள கொலை செய்தாலும் அது கொலையல்ல என்று சட்டம் சாதகமான நிலையில் இருக்கும் போது எதற்கும் அஞ்சாமல் போராடும் குணம் பெண்களுக்கு வேண்டும். ஒரு பெண்ணின் கற்பு சூரையாடப்படுகிறது என்றால் அது அவள் அறியாத நிலையில் நடந்திருக்க வேண்டும். மரணத்திற்கு அஞ்சாமல் பெண்கள் உயிருல்ல வரை, உணர்வுள்ள வரை தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போரட வேண்டும். அதற்காக கோழைத்தனமாக தங்களை தாங்களே மாய்துக் கொள்ளுதல் கூடாது. அக்கிரமக்காரர்களைக் கொன்றேனும் வெற்றி! இல்லையேல் போராடி வீர மரணம்!

இன்ஷா அல்லாஹ் தொடரும் 
அபு நூரா

11 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

இன்றைய நாளிதழ்ச் செய்தி:

மும்பையில் ஒரு மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணை “ஐசியு” அறையில் அப்பெண்ணை அரை மயக்க நிலைக்குள்ளாக்கி இரவு முழுவதும் வன்புணர்வு செய்துள்ளார். படிக்கப் படிக்க நெஞ்சு துடித்தது இந்த நிலைகெட்ட மிருகத்தை நினைத்து, நினைத்து!

Unknown said...

//மும்பையில் ஒரு மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணை “ஐசியு” அறையில் அப்பெண்ணை அரை மயக்க நிலைக்குள்ளாக்கி இரவு முழுவதும் வன்புணர்வு செய்துள்ளார். படிக்கப் படிக்க நெஞ்சு துடித்தது இந்த நிலைகெட்ட மிருகத்தை நினைத்து, நினைத்து!//

கொடு மரண தண்டனை . ஓராயிரம் சிகிச்சைக்கு வரும் பெண்களின் கற்பு பாதுகாக்கப்படும்.

இதைத்தானே 1400 வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அபுநூரா, இந்த தொடரின் நிறைவில் சொல்லியிருப்பது மிகச்சரி, இது அனைவருக்கும் பொருந்தும்....

KALAM SHAICK ABDUL KADER said...

\\கொடு மரண தண்டனை . ஓராயிரம் சிகிச்சைக்கு வரும் பெண்களின் கற்பு பாதுகாக்கப்படும்.

இதைத்தானே 1400 வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றோம்.\\

ஆயுட்தண்டனை மட்டும் தானாம்! அதையும் மீறி அக்காமக் கொடூரனின் வழக்குரைஞர் சொல்லும் விடயம் மகா விடம்: “ இப்பெண்ணின் உடலில் எங்கும் காயங்கள் இல்லை; மேலும், வன்புணர்வுக்கான சான்றுகளும் இல்லை(?!)’

இந்தக் கொடுமைகள் நிறைந்த இந்தியாவைக் காணத்தான், காந்தித் தாத்தாவும் மற்றத் தியாகத் தாத்தாக்களும் அல்லும் பகலும் அல்லலுற்றனரோ?

نتائج الاعداية بسوريا said...

/ஆயுட்தண்டனை மட்டும் தானாம்! அதையும் மீறி அக்காமக் கொடூரனின் வழக்குரைஞர் சொல்லும் விடயம் மகா விடம்: “ இப்பெண்ணின் உடலில் எங்கும் காயங்கள் இல்லை; மேலும், வன்புணர்வுக்கான சான்றுகளும் இல்லை(?!)’//

இவர்களுக்கு அறிவென்பதே கிடையாதா?. ஒரு டாக்டருக்கு தெரியாதா ? இப்பெண்ணுக்கு எதைக்கொடுத்தால் மயக்கம் வரும். அதன் பிறகு நாம் அனுபவிக்கலாம் என்று. வன்புணர்வு என்றால் தெளிவு நிலையில் புணர்வது மட்டும்தானா? அப்பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை மயக்க மடையச்செய்து புணர்வது வன்புனர்வல்லவா?

எதை நோக்கி இந்திய தண்டனைச்சட்டம் போய்க்கொண்டிருக்கின்றது ?
குற்றவாளிகளின் புகலிடமாக !
அவர்களுக்கு தைரியம் கொடுக்கும் ஒரு கருவியாக !
அவர்களை ஆதரிக்கும் ஒரு சாபக்கேடான சட்டமாக !

நிரூபிக்கப்பட்டால் கொடு அந்த டாக்டருக்கு மரண தண்டனை !
இனி வரும் டாக்டர் அனைவரும் பயப்படுவான் .

இல்லையெனில் இது தொடர்ந்து நடப்பதைத்தவிர வேறு வழி யாருக்கும் இல்லை.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

இலகுவான, சாத்தியப்படக்கூடிய தற்காப்பு மற்றும் தப்பிக்கும் யுக்திகள்.

வெல்கம் பேக்!

Unknown said...

அபுநூராவின் ஆக்கம் அவசியம் படித்து பின்பற்றி பயனுரவேண்டிய ஒன்று. மேலும் சில தற்காப்பு கலைகளையும் அறிய தருதல் அவசியம் என்பது என் கருத்து.

adiraimansoor said...

சமீபத்தில் ஒரு ஈமெயிலில் படித்தேன். குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்றால் என்ன என்பதை முதலில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படவேண்டும்
என்ற கருத்து வைக்கப்பட்டு இருந்தது உண்மையிலேயே குழந்தை பருவத்திலேயே குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமாக ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கும் விதமாகவும் அவர்களை எதிர்கொள்ளும் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொள்ளும்விதமான தற்காப்பு கலைகளை பள்ளிக்கூடங்களில் கண்டிப்பாக கற்பிக்கவேண்டும். அப்படி கற்பித்தால், ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பெரியவர்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளிலிருந்து இனி வளரும் குழந்தைகளை காப்பாற்றமுடியும்.
இந்தவாதம் சபைகளில் எடுத்துவைக்கப்படவேண்டும். இந்த பாலியல் தொந்தரவுகளினால் குழந்தை பருவத்திலேயே குழந்தைகளுக்கு பேட் டச்சை கொடுத்து அந்த குழந்தைகளையும் உசிப்பிவிட்டு ஒன்றுமறியாத அந்த குழந்தைகளும் பாலியலில் தன்னை அறியாமலேயே விழுந்துவிடுகின்றன.
பிறகு தானாக உந்தப்படுகின்றனர். இத்ற்கு கார்ணமே குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்பதை போதிக்காததே

crown said...அஸ்ஸலாமுஅலைக்கும். சமீபத்தில் ஒரு ஈமெயிலில் படித்தேன். குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்றால் என்ன என்பதை முதலில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படவேண்டும்
என்ற கருத்து வைக்கப்பட்டு இருந்தது உண்மையிலேயே குழந்தை பருவத்திலேயே குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமாக ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கும் விதமாகவும் அவர்களை எதிர்கொள்ளும் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொள்ளும்விதமான தற்காப்பு கலைகளை பள்ளிக்கூடங்களில் கண்டிப்பாக கற்பிக்கவேண்டும். அப்படி கற்பித்தால், ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பெரியவர்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளிலிருந்து இனி வளரும் குழந்தைகளை காப்பாற்றமுடியும்.
இந்தவாதம் சபைகளில் எடுத்துவைக்கப்படவேண்டும். இந்த பாலியல் தொந்தரவுகளினால் குழந்தை பருவத்திலேயே குழந்தைகளுக்கு பேட் டச்சை கொடுத்து அந்த குழந்தைகளையும் உசிப்பிவிட்டு ஒன்றுமறியாத அந்த குழந்தைகளும் பாலியலில் தன்னை அறியாமலேயே விழுந்துவிடுகின்றன.
பிறகு தானாக உந்தப்படுகின்றனர். இத்ற்கு கார்ணமே குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்பதை போதிக்காததே.
------------- நன்றி: மன்சூர் மச்சான்.

Unknown said...

பொதுவாக எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது யாராகினும் சற்று நிலை குலைந்து விடுவது இயற்கை. அது ஆணாகினும் சரியே.

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படும்போது அதிலிருந்து தப்பிக்க பெண்கள் ஆண்களோடு பலப்பிரயோகம் செய்து மீன்டு வருவது அத்தனை எளிதல்ல. காரனம் ஆண் பெண்ணை விடவும் இயற்கையிலேயே பலசாலியாக இருக்கின்றான். எனவே அவள் அச்சூழலில் இருந்து தப்ப பலப்பிரயோகம் செய்வதைவிட சம யோசித நடவடிக்கை மற்றும் பலகீனமான உறுப்புக்களின் மீதான தாக்குதல் கை கொடுக்கும்.

ஒருவன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் பாலகீன பாகங்கள் அனைவருக்கும் உண்டு. அது தொடர்பான தகவல்களை பென்கள் தெறிந்து வைத்திருந்தால் எச்சூழலிலும் இன் ஷா அல்லாஹ் தப்பிக்கொள்ளலாம்.

நகமும், பற்களும் பெண்களின் ஆயுதங்கள் என்று சொல்லப்படும். பலாத்காரம் செய்பவன் எதிர்தாக்குதல் மீது கவனமற்றவனாக இருப்பான். அன்னிலையில் அவனுடைய கண்களைத் தாக்கியும், வாய்க்கும் இடத்தை பலமாகக் கடித்தும் அதனால் அவன் சற்றே தடுமாறுகிற போது மீண்டும் அவனை பலமாகத் தாக்கியோ அல்லது அச்சூழலிலிருந்து தப்பி வேறு ஒரு பாதுகாப்பான சூழலுக்கோ வந்துவிட வேண்டும்.

அயோக்கியர்கள் விசத்தில் எந்த கருனையும் தேவையில்லை. எனவே எவ்வளவு கடுமையாகத் தாக்கினாலும், இரண்டு கண்களையும் குத்தி குருடாக்கினாலும், காது மூக்கு போன்றவற்றை தனியே கடித்துத் துப்பினாலும் சரியே.

பெண்கள் ஒன்றை நன்றாகத் தெறிந்து கொள்ளுங்கள் ஒரு பெண் நினைவோடு இருக்கும் வரை யாரும் அவளை கறபழித்து விட முடியாது அவள் இசையாமல். எனவே நம்மை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று உறுதியோடு போராடுங்கள். நீங்கள் கொடுக்கும் பாடம் ஏனைய அயோக்கியர்களின் அடிவயிற்றைக் கலக்க வேண்டும்.

Yasir said...

இஸ்லாமிய சட்டங்களை ஒரு சில மாதங்களுக்கு நடைமுறைபடுத்தி பார்த்தாலே மாற்றங்கள் தெரியவரும் ....செய்யுமா இந்த மனித விரோத அரசுகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு