Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்கள் நல்லவர்களா? - கெட்டவர்களா ? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 02, 2013 | , , , , , ,

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாக கருதப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது இதை அமீரகத்தில் கட்டாயமகாவே ஆக்கியிருக்கிறார்கள்.

அமீரகத்தில் பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளைத் தங்களால் இயன்ற அளவு அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இதில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அதன் பயன்பாடுகளில் மாற்றங்கள் இருக்கின்றன. மருத்துவமணைகளில் சலுகைகள், இன்னும் பிற வசதிகள் ஆகியவற்றிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன.

இது ஒருபக்கம் இருந்தாலும், சாதாரன மிகக் குறைந்த மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை ! ஒருதடவை மருத்துவமணைக்குச் சென்று விட்டால் ஊரில் சாமியாரிடம் மாட்டிய பக்தை கதைதான் இங்கேயும் தொடரும் மருத்துமணை விசிட்டுகள்.

இந்த மருத்துவக் காப்பீட்டு அட்டையினால் பயன் என்ன என்று கேட்பவர்களை விட பயனடைந்த தொழிலாளிகளும் நிறைய உண்டு. ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் பலவகையான திட்டங்களுடனும் சலுகைகளுடனும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளித்து வருகின்றது. 

இங்கு குறைந்த பட்சமாக எவ்வகை சிகிச்சைகள் மருத்துவக் காப்பீட்டினால் வழங்க வேண்டும் என்று அரசும் வரையறை செய்தும் அறிவித்து இருக்கிறது. காப்பீட்டு அட்டையை கையில் கொடுத்து விட்டதால் சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைப் பற்றி கவலை கொள்வதும் இல்லை, அதோடு சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அட்டைகளின் தரம் பிரித்து ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட "cap" அதிகபட்ச அனுமதி என்று தொகையை நிர்ணயமும் செய்துவிடுவதால் அதற்குமேல் அந்த தொழிலாளிகளால் மருத்துவ உதவிகள் பெற இயலாது. வேலை செய்யும் நிறுவனமும் இலகுவாக கையை விரித்து விடும் காப்பீடு இல்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தொழிலாளர்களின் தேவைகளும் சில இடங்களில் மறுக்கப்படுகிறது.

2013ம் வருடக் கடைசியை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏராளமான மருத்துவ காப்பீட்டுக்கென நிறுவனங்கள் படையெடுப்பர். ஏற்கனவே மருத்துவ காப்பீடுகள் எடுத்து இருக்கும் நிறுவனங்களை வெளியில் செல்ல விடாமல் தன்னகத்தே வைத்திருக்க போட்டியும் அதற்கான ஆயத்தங்களும் தொடரும்.

சமீபத்திய நடப்புகளிலிருந்து...

2013-2014ம் வருடத்திற்கான புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டுக்கான தொகையில் 150% விகிதம் அதிகமாக இருந்தது காரணம் நடப்பு வருடத்தில் அதிகமாக மருத்துவக் காப்பீட்டு வசதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக இருந்தது அவர்கள் சுட்டிய தொகை, பிரிமியம் மொத்த தொகையில் 5 மடங்குக்கு மேல் பயன்படுத்தப்படிருப்பதாக அவர்கள் மொத்தமாக கணக்கு கொண்டு வந்தார்கள்.

சரி, ஒவ்வொரு பயனாளிகளின் பட்டியலைக் கொடு என்றால் அது ரகசியம் தர இயலாது என்று அடம்பிடித்தார்கள், அப்படியென்றால் புதுப்பிக்க மாட்டோம் வேறு காப்பீட்டு நிறுவனத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றதும், இறங்கி வந்து மிக மிக ரகசியம் என்று சொல்லி 570 பக்கங்கள் அடங்கிய ஸ்டேட்மென்டை கொடுத்தனர்.

திர்ஹம் பத்தாயிரத்திற்கு மேல் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் என்று தேடியதில் 13 நபர்களே, அதில் ஒருவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் 24ம் தேதி மருத்துமவமனையில் இறப்பெய்து விட்டார்.

அந்த பதிமூன்றில் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுக்கான அதிகபட்சத் தொகையை எட்டாதவர்கள் 7 நபர்கள் மீதமிருந்த 6 நபர்களில் அதாவது அனுமதிக்கப்பட்ட காப்பீட்டின் அதிகபட்சத் தொகையை எட்டியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்தியவர்களின் லிஸ்டை கையில் வைத்துக் கொண்டு ஒப்பீடு செய்யும்போது மேலும் அதிர்ச்சிகள்.

மருத்துவமனையில் வழங்கிய ஃபைனல் பில் அதில் மொத்த தொகை, பின்னர் கழிவு (discount) கடைசியில் நிகர தொகை (net amount payable) என்று கொடுத்த பில்லும், காப்பீட்டு நிறுவனம் சமர்பித்த ஸ்டேட்மென்ட்டில் (பட்டியல்) குறிப்பிட்டிருக்கும் தொகைக்கும் வித்தியாசம் இருந்தது.

மருத்துவமனையின் மொத்த தொகை (gross amount) காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகையாக அந்த மொத்த தொகையை (gross amount) கணக்கில் கொண்டு வந்திருக்கிறது இது ஒரு பில்லின் நிலை என்றால் இனி மற்றவைகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை !

ஏன் இப்படி என்று கேட்டால், அதற்குத்தான் சொன்னோம் இது ரகசியமாக இருக்கனும்னு சொல்கிறார்கள் !

ஒரே ஒரு பில்லில் மட்டும் 35% க்கு மேல் வித்தியாசம் என்றால் மற்றதை யூகித்துக் கொள்ள வேண்டியதுதான் !?

இப்போ சொல்லுங்க இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா ?

மருத்துவமனைகளையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி !!!

அபூஇப்ராஹீம்

11 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

தெரியலையேப்பா......

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuIbrahim,

Thanks for sharing information about medical insurance in UAE.

My ultimate answer to your question.

Where there is imbalance and unfair in the sight of God Almighty
there will be imbalance and instability in the lives (soul,mind and body of individual or organization) and vise versa.

May God Almighty save us from all evils and diseases.


Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

எங்கே போனாலும் பிராடும் பித்தலாடமுமாத்தான் இருக்கு

sabeer.abushahruk said...

நல்லவிங்கதான்...ஆனா கெட்டவிங்க.

Unknown said...

மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிடும் கயவாளித்தனம் நிறைந்ததாகத்தான்
இந்த இன்சூரன்ஸ் ஏஜண்டுகள் செயல்படுகின்றன.

ஒரு மனிதனின் உயிரோடும் ( அவன் பணக்காரனோ அல்லது ஏழையோ உயிர் ஒன்றுதான் ) அவன் ஏழ்மையோடும் விளையாடும் இவர்களை பார்த்து " இவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்ற கேள்விக்கே இடமில்லை.
இவர்கள் இரண்டாவது வகையே.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

கடந்த 27ஆம்தேதி என் இன்னோவா 2012 (அ.இ.அ.தி.மு.க வில சேர்ந்ததற்காக அம்மா தந்ததல்ல.) சென்னையிலிருந்து திரும்பி வரும்போது இரண்டாவது ட்டோல் கேட் அருகில் விபத்துக்குள்ளாகி (யாருக்கும் காயமில்லை) ச்சாஸிஸ் பெண்ட்டாகும் அளவுக்கு டேமேஜ் ஆயிடிச்சி.

"ட்டோட்டல் லாஸ் செய்து எனக்கு சேர வேண்டியதைத்தா நான் வேற கார் வாங்கணும் இல்லேன்னா அம்மா வைய்யும்" என்று ரொம்ம்ம்ப நல்லவனாயிருந்த இன்சூரன்ஸ் காரனைக் கேட்டால்.... காணாமல் போனாத்தான் ட்டோட்டல் லாஸ் பண்ணுவாய்ங்களாம்.

கார் களவு போவது கேள்விப்பட்டிருக்கேன். காணாக்குவது எப்படியென்று யாராவது சொல்லுங்களேன்.

ஒரு க்லைம்னு வர்ர வரை எல்லா இன்சூரன்ஸ்காரைய்ங்களும் ரொம்ப நல்லவைங்கதானப்பு.

க்லைம் பண்ணிட்டோம்... நெம்ப நெம்ப கெட்டவய்ங்க சாமீய்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//கடந்த 27ஆம்தேதி என் இன்னோவா 2012 (அ.இ.அ.தி.மு.க வில சேர்ந்ததற்காக அம்மா தந்ததல்ல.) சென்னையிலிருந்து திரும்பி வரும்போது இரண்டாவது ட்டோல் கேட் அருகில் விபத்துக்குள்ளாகி (யாருக்கும் காயமில்லை) ச்சாஸிஸ் பெண்ட்டாகும் அளவுக்கு டேமேஜ் ஆயிடிச்சி.//



இப்படி பப்ளிக்லே ச்சாஸ் பெண்ட்டுன்னு போட்டா காரை விற்பது கஷ்டமா போயிரும் இது மாதிரி விசயத்தை கமுக்கமா வச்சிகிடனும்!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த பதிவில் கருத்தாடலில் 'பங்கெடுத்த' அனைவருக்கும் நன்றிகள் !

காப்பீட்டில் 'பங்கு'-எடுத்த மருத்துவமனைகள் அடித்த கொள்ளையில் ஸ்டார் ஹோட்டலுக்கு நிகரான கட்டிடங்களாக கட்டி அதன் வளர்ச்சியை கண்டு வருவது உண்மையே !

இரண்டு மாதத்திற்கு முன்னர் ஃபேக்டரி பணியில் இருந்த ஒருவர் எழுந்திருக்கும்போது தலையில் கூர்மையான மரக்கட்டை தலையில் குத்தி குறுதி தாறுமாறாக ஓடியது, ஆம்புலன்ஸ் வந்து முதலுதவி செய்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து சென்று அங்கே விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். (அரசு மருத்துவமணைக்கு சீரியஸான கேஸாக இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்வார்கள்).

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு சென்ற நான் அவசரத்தில் மருத்துவச் செலவுக்கு திர்ஹம் எடுத்துக் கொண்டு போகவில்லை (கிரடிட் கார்டு யூஸ் பன்றதை சுத்தமாக விட்டாச்சு : நன்றி அலாவுதீன் காக்கா).

ஆம்புலன்ஸில் கொண்டு சென்றதால் உடனடியாக பேஷன்டை ஏற்றுக் கொண்டார்கள் காரணம் அவர்களால் அதனை ஏற்க மறுக்க கூடாது. ஆம்புலன்ஸ் சென்றதும் கம்பெனியிலிருந்து யார் வந்திருக்கிறார்கள் என்று கேட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டச் சொன்னார்கள் அவர்கள் சொன்னதில் பாதிதான் என்னிடம் இருந்தது அதனை மட்டுமே செலுத்துகிறேன் மீதியை 15 நிமிடத்தில் செலுத்துகிறேன் என்றதை அவர்கள் ஏற்கவில்லை !

முழுவதும் கட்டினால்தான் அட்மிட் செய்வோம் என்று அடம்பிடித்தார்கள் ! வேறு வழி !? சரண்டர்...

சொல்லனும்னு தோனுச்சு அதான் சொல்லிட்டேன்...

Ebrahim Ansari said...

இந்தப் பாழாப் போன்வங்கள் கூட எனது அனுபவங்கள் ஏழு வால்யூம்கள் எழுதலாம். இப்போது எனது அதிருப்தியை மட்டும் பதிவு செய்கிறேன். விலாவாரியாக கேஸ் பை கேஸ் பின்னர் ஒரு தருணத்தில் இன்ஷா அல்லாஹ்.

அப்துல்மாலிக் said...

வேறு அதிகபட்ச தகுதிகளோடு வரும் எல்லா இன்சூரென்ஸ் கம்பெனிகளையும் பின்னுக்கு தள்ளி அவுட் பேஷண்ட் 20% கட்டாயம் கட்டனும் என்று இருக்கும் அந்த ஒரே காப்பீட்டு கம்பெனியையே தலையில் தூக்கிவைத்துக்கொண்டிருக்க காரணம் இதை கம்பெனிக்காக சிபாரிசு/செயல்படுத்தும் நபரை கவனிப்பதால். இந்த கவனிப்பு எப்படி நடக்குது, அவன் சொந்த செலவுலேர்ந்தா இல்லை இதுமாதிரி ஏடாகூடா பில் அமவுண்ட்டால்தானே..

இது மாதிரி எத்தனை கம்பெனிக்கு அவன் சர்வீஸ் செய்யவேண்டிருக்கு...

இந்த நாட்டுலேயுமா இப்படினு கேப்பாங்க... நம்ம நாட்டுக்காரந்தானே இங்கேயும் எல்லா செயல்பாடுகள்ளேயும் இருக்கான்...

ZAKIR HUSSAIN said...

Insurance companies policies are "contracts". It is based on " Law of Contract". and insurance companies are governed by Central Bank's order in the situated country. If any breach of contract you can always refer / complain to the central bank.

When you write the complaints always cc to consumer ministry / body and Finance Ministry. The you see how the insurance company responds. Before that try to settle it within the CEO of the company.


இன்சூரன்ஸ் கம்பெனிகளும் வியாபார நிறுவனம்தான். அவர்கள் சோசியல் வொர்க் செய்தால் 2 வருடம் கூட தாக்கு பிடிக்காது.

பிரச்சினைகளை அகற்றவே பாலிசிகள் உதவும்.

இன்சூரன்ஸ் கம்பெனி கஸ்டமரை ஒரு விதவையின் காதலனைப்போல் கவனிக்க முடியாது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு