Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 8 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2010 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தியாகத் திருநாளை கொண்டாடி விட்டு வந்திருக்கும் நம் அனைவருக்கும் குர்ஆனையும், இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையையும் பின்பற்றி நடக்கவும், மார்க்கத்திற்கு முரணான அனைத்து வழிமுறைகளையும் விட்டு, ஹலால், ஹராமை பேணி மறுமை வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இம்மையில் வாழ்வதற்கு வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்த(துஆச் செய்த)வனாக என்னுடைய கட்டுரையை தொடங்குகிறேன்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் :2:208)

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன் : 2:201)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

இந்த தொடரிலும் சகோதரிகளைப்பற்றியே தொடர்ந்து வருவதால் சகோதரிகள் கவனமாக படியுங்கள். சில சகோதரிகள் கடன் எனும் கடலில் தனது கணவனை தள்ளி விட்டு கவலைப்படாமல் இருந்த நிகழ்ச்சிகளையும், அடுத்து கடன் எனும் கடலில் கணவனை விழாமல் காத்துக்கொண்ட பெண்மனியைப்பற்றியும் பார்ப்போம்.

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள்!

கணவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தாலோ தன்னிடம் உள்ள நகைகளை (அசையாத சொத்துக்கள் நிலங்களாக இருக்கும், இன்று அதிகமாக அசையும் சொத்துக்களாக இருப்பது தங்க நகைகள்தான்) கணவனின் கஷ்டத்திற்கு கொடுத்து உதவாமல் கணவன் வெளியில் உறவினர்களிடம் கடன்கள் வாங்கினாலும் பார்த்துக்கொண்டு கடன் உள்ளதே என்ற பொய் கவலையுடன் தன்னிடம் உள்ள நகைகளை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நடமாடும் சகோதரிகளைப் பற்றி என்ன சொல்வது? (கணவன் வாங்கி கொடுத்த நகைகளையும், சொத்துக்களையும் கொடுத்து உதவி செய்யவே மறுக்கிறார்கள்).

இப்படி நடந்து கொள்ளும் சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். கணவனுக்கு அதிக பொருளாதாரம் கிடைத்தால் யாருக்கு தரப்போகிறார்? கணவன் கடனோடு நடமாடுவதை பார்த்துக்கொண்டு இருப்பது நிம்மதியா? அல்லது போலி கௌரவத்திற்காக கணவனுக்கு உதவாமல் நகைகளோடு தாங்கள் நடமாடுவது நிம்மதியா? எது நல்லது?

ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள்!

கணவன் நல்லவனா? கெட்டவனா? என்பது மனைவிக்கு தெரியும். தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்கும் கணவனுக்கு உதவி செய்து சொத்துக்களை இழக்கலாமா? என்று சில சகோதரிகளின் கேள்வியாக இருக்கிறது. ஒரு தடவை உதவி செய்து பயனற்ற வழியில் செலவு செய்கிறார், மீண்டும் உதவி செய்கிறார். இப்படியே எல்லாவற்றையும் இழந்த சகோதரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களின் விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து, இருக்கும் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதில் கவனம் எடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஏமாறுவது புத்திசாலித்தனம் இல்லை.

பாலைவனத்தில் பிடித்து தள்ளிவிடும் சகோதரிகள்!

கணவன் வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருந்து பிறகு சில காலம் கழித்து உள்நாட்டில் தொழில் வைத்து தங்கி விடலாம் என்று யோசனை செய்து ஊரில் தங்கினாலும் அல்லது முடிவெடுத்தாலும் உடனடியாக எதிர்ப்பு மனைவியிடம் இருந்து வருவதை காண முடிகிறது. உடனே கணவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். என்ன காரணம் மாதா மாதம் பணம் வந்து கொண்டு இருந்தது. வித விதமான சேலைகள் வாங்கி, புதிய புதிய நகைகள் செய்து, தினமும் தொலைக்காட்சியில் வரும் சமையலை செய்து பார்த்துக்கொண்டும், மற்ற ஆடம்பர செலவுகளும் செய்து வந்த நிலை இனி பறி போய் விடுமே, என்ற மிகப்பெரிய மனக்கவலைதான் காரணமாக இருக்கிறது.

கணவன் ஊரோடு வந்து தங்கி விட்டால் முதலில் அடிபட்டு போவது இவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான். மிகச் சிக்கனமாக வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற பலவிதமான கவலை இவர்களை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. இவர்களின் நினைப்பு என்ன ஒரு வருடம், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கணவன் பெட்டி நிறைய துணிமனிகளும், நகைகளும் கொண்டு வர வேண்டும். இதைப்பார்த்து மனமகிழ்ச்சி அடைய வேண்டும். இதை தவிர வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை சகோதரிகளிடம் காண முடிகிறது. அதே நேரத்தில் கணவன் கடனாளியாக வருகிறானே என்ற அக்கரையெல்லாம் இவர்களிடம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று சொல்லி விடலாம். வருடா வருடம் வரும்பொழுது பெட்டியுடன் கடனும் சேர்ந்து வருகிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள். சகோதரிகளே! சிந்தித்து தெளிவுபெற்று கணவனுக்கு உறுதுணையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

காலமெல்லாம் கணவனை கடனோடு,
பாலவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள்!


ஒரு சகோதரருக்கு இருப்பதற்கு வீடு இருக்கிறது. ஆனால் ஓட்டு வீடாக இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டியே ஆக வேண்டும் என்ற தீராத லட்சியம் கணவரை தொந்தரவு செய்கிறார். இவரின் வருமானத்தில் உடனடியாக வீடு கட்ட முடியாது. மனைவியிடம் சில காலம் ஆகும் என்கிறார். ஆனால் கணவனின் பேச்சை மீறி கூட்டுறவு வங்கியில் வீட்டுக்கடன், கணவனையும் அவருடைய NRE கணக்கு உள்ள வங்கியில் கடன் வாங்கி மாடி வீட்டை கட்டி முடித்து விட்டார். சரி வீடு கட்டியாகி விட்டது. வீட்டில் நிம்மதியாக இருந்து கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணம் வந்ததா? அதுதான் இல்லை. அடுத்த முறையீடு ஆரம்பமாகிறது...

என்ன அது, விரைவில் நகைகள் சேர்க்க வேண்டுமாம். கணவனின் பதில்... வீடு கட்டிய கடன்கள் அடைந்த பிறகு நகைகள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் அந்த சகோதரி சொல்வதை பாருங்கள். கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் அதற்காக நகைகள் வாங்காமல் இருக்க முடியுமா? என்ற அழகான பதிலை தருகிறார். கணவனோ என் வாழ்நாளில் இந்த கடன்கள் அடைந்து விடுமா? என்ற சந்தேகத்தில் புலம்பிக் கொண்டு நிம்மதியற்று தவிக்கிறார் வளைகுடாவில்.

சகோதரிகளே! கடன் வாங்கித்தான் வீட்டை கட்ட வேண்டும், நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபடுங்கள். தங்களின் நிர்பந்தத்திற்காக கடன் வாங்கிய தங்கள் கணவர்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியற்று வாழ்வார். இது நியாயமா?

இன்னொரு சகோதரியைப்பற்றி பார்ப்போம் இவருக்கு எவ்வளவு பணம் அனுப்பினாலும் பண பற்றாக்குறை. அடுத்த மாதம் பணம் கூட வேண்டும் என்கிறார். பண பற்றாக்குறைக்கு வித விதமாக உணவு செய்து சாப்பிடுவது காரணம் இல்லை. இவருக்கு ஒரு மன வியாதி என்ன தெரியுமா? ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். உள்ளுர் டாக்டரிடம் காண்பித்தால் சின்ன சின்ன நோய்கள் குணமாகாது. அடுத்த ஊரில் உள்ள பீஸ் அதிகமாக வாங்கும் டாக்டரிடம் (கைராசி டாக்டர்) காண்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண தலைவலி, வயிற்றுவலி குணமடையும். இவருக்கு வந்தது உண்மையில் நோயா? இல்லை மன நோய்.

சாதாரண தலைவலியைக்கூட பெரிதாக போட்டு குழப்பி கொள்வதால் கண்ட பலன் : இவருக்கு டாக்டர் தரும் மருந்தால் பக்க விளைவு நோய் லாபம், டாக்டருக்கோ ஏதாவது ஒன்றில் குணமாகட்டும் என்ற மருந்து பட்டியலால் (மளிகை கடை பட்டியல் போல்) லாபம், கணவருக்கோ கடனாளி என்ற பெயர் லாபம்.

கணவர் தனக்கு உடம்புக்கு முடியாமல் போனாலும் உடனே டாக்டரிடம் போகாமல் மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, பக்குவமாக இருந்து செலவு அதிகமாகி விடுமே என்று முடிந்தவரை டாக்டரிடம் காண்பிப்பதை தவிர்த்துக்கொள்கிறார். கஷ்டப்படும் கணவரே சிக்கனமாக இருந்து தவிர்த்துக் கொள்ளும்பொழுது நிழலில் இருக்கும் மனைவி எப்படி இருக்க வேண்டும். (அதற்காக டாக்டரிடம் காட்டாமல் இருந்து விடாதீர்கள்).

இந்த நேரத்தில் நம் ஊர் வாடகை வாகன ஓட்டி சொன்னதை நினைவு கூர்கிறேன்: நம் ஊரைச்சேர்ந்த சகோதரிகள் திருச்சிக்கு சென்று துணிமனிகள் எடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் தொந்தரவு தரும் பல்லை எடுப்பதற்கு தஞ்சை தனியார் பல் மருத்துவ மனைக்கு சென்று இருக்கிறார்கள். (முன்கூட்டியே தொலைபேசி மூலம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்). மருத்துவரின் பீஸ் எவ்வளவு தெரியுமா? 3ஆயிரமாம், மேலும் அங்குள்ள நர்ஸ்க்கு 200ரூபாய் கொடுத்தார்களாம். வாகன ஓட்டி அவர்களிடம் கேட்டது ஏன் பட்டுக்கோட்டையில் மருத்துவர் இல்லையா? என்றதற்கு அங்கெல்லாம் சரியான முறையில் எடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்களாம். அவர் சொன்னது: காக்கா பட்டுக்கோட்டையில் 300ரூபாய்க்குள் இந்த பல்லை எடுத்து விடலாம். முள்ளங்கி பெற்றது போல் பணத்தை எண்ணி கொடுக்கும்பொழுது எனக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது என்றார். இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் அந்த வாகன ஓட்டி காலையில் திருச்சிக்கு புறப்பட்டு அங்கு மதியம் வரை அவர்கள் வாங்கிய பொருட்களை வேலைக்காரனை போல் சுமந்து கொண்டு வந்து சேர்த்து பின் தஞ்சாவூர் வந்து பல் மருத்துவம் செய்து விட்டு பிறகு இரவு திரும்பி ஊர் வந்து வீட்டுக்கு விடும்பொழுது எனக்கு 10ரூபாய் கொடுத்தார்கள் காக்கா நான் ஏன் இதை கொடுக்கிறீர்கள் இதையும் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னார். டாக்டருக்கு கொடுக்க மனம் வருகிறது, அங்குள்ள நர்ஸ்க்கும் கொடுக்க மனம் வருகிறது. காலையிலிருந்து கஷ்டப்பட்ட வாகன ஓட்டிக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை. (அவரின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்). (இந்த பணத்தை சம்பாரிக்க இவர்கள் வீட்டு ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்).

வீண் விரயத்தை விரும்பக்கூடிய சகோதரிகளே! எந்தக் காரியத்திலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். டாக்டர் தொழில் என்பது புனிதம் என்று கூறிய காலம் போய் விட்டது. லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து படித்து விட்டு வந்து போட்ட பணத்தை எடுக்க வேண்டும் (விதி விலக்காக நல்ல டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) என்ற வியாபார நோக்கில் சேவை மனப்பான்மை அடிபட்டு பணம் ஒன்றே குறிக்கோளாகி விட்ட உலகத்தில் இருக்கிறோம் என்பதையும், தங்கள் கணவர் படும் கஷ்டங்களையும் மனதில் நினைத்து கைமருந்து சாப்பிட்டால் குணமாகும் என்ற நோய்களுக்கெல்லாம் மருத்துவரிடம் காண்பித்து வீண் விரயம் செய்யாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு சிக்கனமாக இருந்து கணவனை கடன் என்னும் கடலில் மூழ்க விடாமல் பார்த்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

கடன் எனும் நிழல் கூட தன் மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி!

கணவர் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை வீண் விரயம் செய்யாமல் எப்படியெல்லாம் சிக்கனமாக செலவு செய்ய முடியுமோ அவ்வாறெல்லாம் சிக்கனமாக இருந்து கணவர் ஊர் செல்லும்பொழுதெல்லாம், கடன் வாங்க விடாமல் தாம் சேமித்து வைத்த பணத்தை கையில் கொண்டு வந்து கொடுத்து உங்கள் பணம் செலவழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தானும் கடன் வாங்காமல், கணவனையும் கடன் வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்து வாழும் மனைவி. இவரைப்போல் சில பேர் இருக்கலாம். (எனக்குத் தெரிந்து இப்படி கடனே இல்லாமல், கணவரையும் கடன் வாங்க விடாமல் வாழ்பவர் என்னுடைய மனைவிதான் அல்ஹம்துலில்லாஹ்!).

சகோதரிகளே! தாங்களும் இப்படி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிக்கனத்தை கடைபிடித்து தாங்களும் கடன் வாங்காமல் தங்கள் கணவரையும் கடனுக்குள் விழுவதை தடுத்து வாழ ஆரம்பித்தால் தங்களுக்கும் - கணவருக்கும் மன நிம்மதி அளிக்கும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- S. அலாவுதீன்

கடன் வாங்கலாம் வாங்க 7                                          கடன் வாங்கலாம் வாங்க 9

15 Responses So Far:

Yasir said...

அனைத்து வகையான மனைவிமார்களை பற்றி ரொம்ப ப்ராக்டிக்கலாக - நடந்து கொண்டிருப்பதை எழுதி இருக்கிறீர்கள்..சகோதரிகள் படித்து புரிந்து கொண்டு நடப்பது அவர்களது கடமை....இபோழுது இளம் தலைமுறை துணைவிமார்கள் (குறிப்பாக ஒரளவு படித்த பெண்கள் ) கணவனின் நிலமையை புரிந்து கொண்டு நடக்கிறார்கள் அந்த அளவிற்க்கு தொல்லையில்லை..பெண் குழந்தைகள் பிறந்தால் மட்டுமே அடிக்கடி அதன் எதிர்கால தேவைகளை காரணங்களுடன் ஞாபகப்படுத்தி சேமிப்பை வலியிறுத்துகிறார்கள்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அலாவுதீன் : அல்லாஹ்வின் உதவியால் வழக்கமாக வியாழன் இடம் பெறும் உங்களின் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுக்குள் வந்தோடில்லாமல் கடனோடு ஒட்டிய செலவீணங்களை அதன் தேவைக்கு நாம் வைக்கும் காரணங்களை பட்டியலிட்டிருக்கிறீர்கள், நிம்மதியான உறக்கம் தொலைத்த எத்தனையோ பேர்களின் புலம்பலும் அதுவே !

தொடருங்கள் அருமையான இப்பணியை இன்ஷா அல்லாஹ்...

ZAKIR HUSSAIN said...

ஏன் நம் ஊரில் விவாகரத்து இப்படி அதிகமாகியிருக்கிறது என்பதற்கான விளக்கம் மாதிரி இருக்கிறது அலாவுதீன் எழுதிய கட்டுரை.தொடர்ந்து 'நொய்யம்" பாடும் பெண்கள் விவாகரத்துக்கு காரணமாகிறார்கள்.

தேவைப்பட்டதை வாங்குவதற்கும், ஆசைப்பட்டதை வாங்குவதற்க்கும் இருக்கும் வித்யாசத்தை தெரியும் அறிவு இருந்தாலே போதும். பல பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இது 'வெட்டி பந்தா" ஆண்களுக்கும் பொருந்தும்.

sabeer.abushahruk said...

அலாவுதீன்,அருமையாக விளக்கியிருக்கிறாய். ஹயாத்தைப் போட்டுவைத்து இந்த தொடரை நல்லவிதமாக முடித்துத்தா! எல்லாம் சரி. ஆனால், மருத்துவ செலவுகள் குறித்து சொல்கையில் வெளியூர் வேண்டாம் என்பதுபோல் ஒரு பாவனை தெரிவதால் என் அனுபவத்தை ஆதாரமாக்கி, தொடர்பான கருத்தை பதிந்துவிடுகிறேன். கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன். கண்டநேர காட்பரீஸும், எப்பப்பார்த்தாலும் எக்லேர்ஸும், வேண்டி விரும்பி கேன்டியும் என நான் என் சொந்த பற்களுக்கு செய்த இனிப்பான சித்ரவதைக்கெல்லாம் பலி வாங்கும் விதமாக ஒரு இரவு 12 மணிக்கு மேல் வாய்க்குள்ளே ட்ரில்லிங்க் மெஷினை 3000 ரொட்டேஷன் பெர் மினிட்ல சுத்துற மாதிரி என் பல்லே எனக்கு வலித்தது. பல்வலி என்பது யாதெனில், அது ஒரு பக்கா வலி; எத்தனை இருக்க்க்கிப்பிடித்தாலும் சற்றேனும் இறங்கா வலி; உடனே நிருத்தாவிடில் உலகயே வெருக்க வைக்கும் வலி. எனவே, அந்நேரம் திறந்திருந்த மருந்தகத்தை அனுகியபோது அவன், "வலி இருந்தால் பல் மருத்துவமனையில் எந்த அங்கிள்ட போனாலும் ஆன்ட்டி பையாடிக்தான் தருவான். அதனால நான் தரும் ஆன்ட்டி பையாட்டிக்கும் வலி நிவாரணியும் 5 நாட்கள் சாப்பிட்டுட்டுப் போனால் உடனே வலிக்கிற பல்லைப் பிடிங்கிடலாம்" என்றான். ஆள் பார்க்க வறுமை காரணமாக பி டி எஸ் பாதில விட்டமாதிரி தெரிந்ததாலும், வேறு பி ஸி டி என்று எந்த ஆப்ஷனும் தராததாலும் என் கடைவாப்பல் அவசர அவசரமாக "ஏ" "சரி" என்ற பொத்தானையே அழுத்தியது. அடுத்த 10 நிமிடத்தில் தூங்கிப்போனேன். தொடர் எழுத உனக்கு மட்டும்தான் அனுமதி ஆகையால் ஒரே மூச்சில் சொல்லிவிடுகிறேன். 5 நாட்களில் 3 snikkers, ரெண்டு kitkat தவிர வேறு சாக்லேட்டா...மூச்.

sabeer.abushahruk said...

6வது நாள் பல் மருத்துவமனையில்,"அவன் கொடுத்த ஆன்டி பையாடிக்கெல்லாம் செல்லாது. நாங்க கொடுத்தாதான் நாங்க புடுங்குவோம் (ஹிந்தில இவ்வளவு கலீஜா ஒலிக்காது)அப்டினு சொல்லி, ஃபார்மஸி காரன் சொன்னதையே காப்பி பேஸ்ட் செய்தான். மேற்கொண்டு 5 நாட்களும் குறைந்த ஸுகர் கன்ஸம்ஷனில் கழிய ப்ராஜெக்ட்டின் (பல்லு புடுங்கிறதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட்டாய்யா) 11வது நாள்: பாதிக்கப்பட்ட பல்லின் இப்புறமும் அப்புறமுமான முரசினுள்ளே ஆஆஆசி...ஸாரி ஊசி குத்தி (வலில உளறிட்டேன்) கொஞ்ச நேரம் குந்த வச்சாங்க. பிறகு என்னை அழைத்து ஆயுதங்களோடு கொஞ்சங்கூட அன்பில்லாமல் முதலில் பிக்பாக்கெட்காரன் பர்ஸை உருவுகிறமாதிரி இதமா முயன்றான். வரல. வராததற்குக் காரணம் அந்தப்பல்லுக்கும் எனக்குமான பால்ய காலந்தொட்ட ஸ்நேகமானு எனக்குத் தெரியாது. அடுத்து, கயிறு இழுக்கும் போட்டியில் ஜெயிக்க முயன்றான், ம்ஹூம். பனங்கெழங்கு பிடிங்கினான், குடக்கல்லாய் ஆட்டி அசைத்தான், கொத்துத்தலைமுடியாய் இழுத்தான், பட்டம் விடும் நூலென வெட்டி வெட்டி இழுத்தான், கடைசி முயற்ச்சியாய் சங்கிலியால் கட்டி 50 டன் க்ரேன் கொண்டு இழுத்தான், ம்ஹூம் பல் வரவே இல்லை. மேலே ஒவ்வொரு கமாவுக்கும் இடையில் "ஆ, ம்மா, அல்லா, வலி உயிர் போகுதே" நு சேர்த்து வாசி. பிறகு, கையில் ஒரு டெஸ்ட் இஞ்ஜெக்க்ஷன் போட்டு மீண்டும் டி வி முன்னால் உட்கார வச்சாங்க. டெஸ்ட்ல 10 நிமிஷத்தில பாஸாயிட்டேன் (ஹய்யா). பாஸானதும் இப்ப ஹெவி டோஸ் வலி நிவாரணி கொடுத்து கோட்டை கிழட்டி வச்சிட்டு சட்டையின் கைய்யை மடிசு விட்டுட்டு பயமுருத்தறமாதிரி மீண்டும் புடுங்க முயன்றான். அந்தப்பல்லுக்கு உள்ளங்கால்வரை வளர்ச்சியோ என்னவொ, அசைந்து கொடுத்ததே தவிர வராம டாக்டருக்கு பெப்பே காட்டியது. இப்ப டாக்டர் என்னை ஒரு ஜந்துவைப்போல பார்த்துவிட்டு, "புடுங்கும் முயற்சியில் முரசு புண்ணாகிவிட்டது. இன்னொரு கோர்ஸ் அம்மக்ஸிலின் எடுத்துட்டு 5 நாள் கழிச்சி வா" வென ஹிந்தினான். "நாலைன்னிக்கு ஊருக்கு போறேனே"ன்னு நானும் ஹிந்தினேன். அப்ப ஊர்லேயே புடுங்கிக்கோன்ட்டான்.

sabeer.abushahruk said...

ஊர்:(இப்பதான் உன் தொடரைத் தொடுகிறேன) மிக பரிச்சயமான பல் டாக்டர், என் நண்பரும்கூட, அவரிடம் மொத்த கதையும் சொல்லி முடிக்க அவரும் sharjah வசனங்களை வழிமொழிந்துவிட்டு, மீண்டும் ஆன்டி (anti)பயாட்டிக் கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு எக்ஸ்ரேயும் எடுத்து பார்ட்துவிட்டு "பல் நல்லாருக்கு...(கவனி...எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) எடுக்க வெணாம். மருந்து சாப்பிட்டா போதும்" என்றார். சாப்பிட்டும் வலி போகல. இப்ப நீ கண்டிக்கும் ஊர்ல உள்ள எம் டி எஸ்ஸிடம் காட்ட நண்பர் சொன்னதால்... தஞ்சவூர்: கதையெல்லாம் கேட்டுட்டு எற்கனவே எடுத்த (கவனி... அதே எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) அதே எக்ஸ்ரேவை பார்த்துட்டு என்னிடமும் காட்டி பல் உடைந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு பேச்சு பேச்சாகவே இருக்கும்போதே பூ கொய்வதுபோல பல்லை கொய்து கையில் தந்துவிட்டார். எனவே, நான் கற்ற நீதி: வியாதிக்கு ஏற்ற சரியான மருத்துவரை தேடிப் போவது சரியே. ஆதாரம்: என் கையில் போட்ட டெஸ்ட் ஊசி வெடிவிட்ட இடம்போல இப்பவும் தழும்பா இருப்பதை அடுத்த விடுமுறை நாளில் நீ நண்பர்களோடு வந்து கண்டு களிக்கலாம். நன்றி: இன்னிக்கு ஆஃபீஸ் வராத MD / GM மற்றும் my iphone. -sabeer

ZAKIR HUSSAIN said...

சபீர்...நீ பல் புடுங்கிய / புடுங்கப்பட்ட விசயத்தை 100 மசாலா கேசட் மாதிரி வெளியிடலாம்...மலேசியா வெளியீட்டு உரிமை மட்டும் எனக்கு தந்துவிடு...

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

சபீர்...நீ பல் புடுங்கிய / புடுங்கப்பட்ட விசயத்தை 100 மசாலா கேசட் மாதிரி வெளியிடலாம்...மலேசியா வெளியீட்டு உரிமை மட்டும் எனக்கு தந்துவிட
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அப்படியென்றால் உங்கள் புகழ் "பல்"கி பெருகிவிடும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

உங்கள் தொடர் பின்னுட்டக் காவியத்தில் கண்ட கவி வரிகள் இதோ :-

டாக்டர் அங்கிளிடம் சென்றால்
மருந்து ஆண்டி பாயாடிக்தான்

பல் பிடுங்கியெடுத்ததால்
பல் புடுங்கி எடுத்தவிதம்

பல் புடுங்கியெடு
தவருக்கு தெரியாதே !
----------

ஜாஹிர் காக்கா : 100 மஸாலா கேஸட்டு உரிமைக்கு, கடன் வாங்காமல் துபாய் வெளியீட்டு உரிமை நான் கேட்டுவேன்... அதுக்கு இங்கே போட்டி அதிகமா இருக்குமே

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் தொடருக்கு விடுமுறையாகி விட்டது. அ.நிருபரில் வெளியிட்ட ஆக்கங்களை சரியாக படிக்க முடியவில்லை, படித்தாலும்... பின்னூட்டம் போட முடியாமல் போய்விட்டது. வருந்துகிறேன்.
=====================================================================

சகோ. யாசிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///அனைத்து வகையான மனைவிமார்களை பற்றி ரொம்ப ப்ராக்டிக்கலாக - நடந்து கொண்டிருப்பதை எழுதி இருக்கிறீர்கள்..சகோதரிகள் படித்து புரிந்து கொண்டு நடப்பது அவர்களது கடமை....///

தங்களின் கருத்திற்கு நன்றி!

/// இப்போழுது இளம் தலைமுறை துணைவிமார்கள் (குறிப்பாக ஒரளவு படித்த பெண்கள் ) கணவனின் நிலமையை புரிந்து கொண்டு நடக்கிறார்கள் அந்த அளவிற்க்கு தொல்லையில்லை..///

கணவனுக்கு உறுதுணையாய் இருப்பதில் படித்த பெண்களின் நிலை என்ன என்பதை இன்ஷாஅல்லாஹ் வரும் தொடர்களில் பார்ப்போம்.
*************************************************************************************


சகோ. அபுஇபுறாஹிம் : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

/// கடனோடு ஒட்டிய செலவீணங்களை அதன் தேவைக்கு நாம் வைக்கும் காரணங்களை பட்டியலிட்டிருக்கிறீர்கள்இ நிம்மதியான உறக்கம் தொலைத்த எத்தனையோ பேர்களின் புலம்பலும் அதுவே !////

தங்களின் கருத்திற்கு நன்றி! வரும் தொடர்களில் தீர்வுகளில் எப்படி எல்லாம் சிக்கனமாக இருந்து சேமிக்கலாம். கடன் வாங்கலாம் கொடுக்கலாம் என்பதை சகோதரர்களுக்கு என்னால் முடிந்தளவு விளக்கத்தை தருகிறேன். இன்ஷாஅல்லாஹ்.
**************************************************************************************


சகோ. ஜாகிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////ஏன் நம் ஊரில் விவாகரத்து இப்படி அதிகமாகியிருக்கிறது என்பதற்கான விளக்கம் மாதிரி இருக்கிறது அலாவுதீன் எழுதிய கட்டுரை.தொடர்ந்து 'நொய்யம்' பாடும் பெண்கள் விவாகரத்துக்கு காரணமாகிறார்கள்.////

தங்களின் கருத்திற்கு நன்றி! விவாகரத்திற்கு பொருளாதாரமும் மிக முக்கிய காரணியாக இருப்பது உண்மைதான். பெண்களின் வீணான பேராசையும் காரணமாக இருக்கிறது.

அலாவுதீன்.S. said...

சபீர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)உன்னுடைய பின்னூட்டமே ஒரு ஆக்கம் போல் வந்து விட்டது. 100மஸாலா போல் ஒரு கேசட் போட்டு மலேசிய உரிமையை சகோ. ஜாகிருக்கும், துபாய் உரிமையை சகோ. அபுஇபுறாஹிமுக்கும் கொடுத்து விடலாம்.

///// எல்லாம் சரி. ஆனால், மருத்துவ செலவுகள் குறித்து சொல்கையில் வெளியூர் வேண்டாம் என்பதுபோல் ஒரு பாவனை தெரிவதால் என் அனுபவத்தை ஆதாரமாக்கி, தொடர்பான கருத்தை பதிந்துவிடுகிறேன்.////

வெளியூர் டாக்டரிடம் காண்பிக்க வேண்டாம் என்ற கருத்தில் எழுதவில்லை. அனுபவம் உள்ள எம் டி எஸ்ஸிடம் காண்பித்தால் சிரமம் இருக்காது. பட்டுக்கோட்டையில் காண்பித்தால் குணமாகும் என்று தெரியும் நோய்களுக்கு தேவையில்லாமல் வீண் விரயமாக செலவு செய்கிறார்கள் பணத்தைப்பற்றி கவலைப்படாமல். மேலும் சில வகை மருத்துவத்திற்கு தஞ்சாவூரில் அதிகமாக பணம் அபகரிக்கப்படுகிறது நம் மக்களிடம்.

இதைப்பற்றி விபரமாக கூற வேண்டியுள்ளது. மருத்துவம் என்ற தலைப்பில் நேரம் கிடைக்கும்பொழுது என்னுடைய அனுபவங்கள் மற்ற விபரங்களை தெரியப்படுத்தாலும் என்று யோசனை உன்னுடைய பின்னூட்டத்தை படித்ததால் வந்திருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் எழுத முயற்சிக்கிறேன்.


/// இன்னிக்கு ஆஃபீஸ் வராத MD / GM மற்றும் my iphone../// இவர்கள் லீவு போட்டதால் உனக்கு நீண்ட பின்னூட்டம் போட நேரம் கிடைத்திருக்கிறது. உன்னுடைய கருத்திற்கு நன்றி!.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் கட்டுரை இன்றைய காலகட்ட நடப்புக்களை அப்படியோ பிரதிபலிக்கின்றது
தொடரட்டும் உங்களின் எழுத்து பணி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அலாவுதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலை பளு காரணமாக உடன் கருத்திட முடியவில்லை. அல்ஹம்துலில்லாஹ் அருமையான ஆக்கம்.

ஊதாரித்தனம், வீண்விரையம், அடுத்தவரைப் பார்த்து வாழும் வாழ்கை, போலி பந்தா வாழ்க்கை, சக்திக்கு மீறிய செலவு, சக்திக்கு மீறிய பொருளாதார எதிர்ப்பார்ப்பு என்ற சிந்தனையுள்ள பெண் மக்களுக்கு மத்தியில், நீங்கள் இறுதி பத்தியில் குறிப்பிட்டது போல் 'கடன் எனும் நிழல் கூட தன் மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனிகள்' நம்மூரில் இருக்கிறார்கள் என்பதை இங்கு ஞாபகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி.

இவர்களைப் போல் மற்றவர்களும் கடனை ஊக்கப்படுத்தாதவர்களாக ( ஆண் மகனுக்கு எந்த வழியிலும் வரதட்சனை, சீர் சீராட்டு, பெண்ணுக்கு வீடு வாங்காத) நம் பெண்களை மாற்ற ஒவ்வொருவரும் தம் குடும்பங்களில் நம்மால் முடிந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பெண்டிர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ...பெண்களில் இத்தனை வகை கேள்விபட்டிருக்க அத்தனை வகைப்பேன்டீர்,கடன் வாங்களும்,கடமை ஆற்றவும் கூடியவர்கள் என்பதை இவ்வளவு நுனுக்கமாக ஆராய்ந்த விதம் அருமை.தொடரட்டும் இந்த எச்சரிக்கையும்,தகவல்களும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு