Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நட்புக்குத் தோழர்கள் பரிசு ! 218

அதிரைநிருபர் | November 22, 2011 | , , , , ,


>>>> பின்னூட்டங்கள் 200யும் தாண்டிச் சென்று கொண்டிருப்பதனால் பின்னூட்டங்களின் நிறைவில் வலப்பக்கம் இருக்கும் சிறிய சுட்டியை தட்டினால் 201க்கு பிறகு பதியப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து வாசிக்கலாம்... :) <<<<

சகோதரத்துவத்தின் நிழலாம் தோழமைப் பற்றி நாம் சரியாக புரிந்திருக்கிறோமா என்ற ஐயம் எனக்குண்டு. இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு, அமெரிக்க வாழ் தோழர் நூருத்தீன் அவர்கள் எழுதி, சத்தியமார்க்கம்.com தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" நூல் முதலாம் பாகம் பரிசளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!. ஆன் யுவர் மார்க்...செட்... கோ!
நட்பு!
நல்லதோர் 
மனிதம் செய்ய...
அது
நலம் பெற...
நண்பனின் கைகளில் 
கொடுத்துவிடு!

நட்பு...
சொந்தங்களை வென்ற
சுகமான சந்தம்,
பந்தங்களுக்குள் கட்டுறாத
பாந்தமானதொரு பழக்கம்!

நட்பு...
எதையும் எதிர்பார்க்காத
இதயம் கொண்டது,
விற்க வாங்க முடியாத
விலை மதிப்பற்றது!

வள்ளுவரே...
உடுக்கை இழக்கும்வரை
உதவப் பொறுப்பதில்லை...
இடுப்பில் இருக்கும்போதே
இழக்காமல் 
இருக்கிப் பிடித்து 
இடுக்கண் களையும்
எம் நட்பு!

இனி,

என் முதன்மை நண்பனுக்கு ஒரு வெள்ளை அறிக்கை. மற்ற நண்பர்கள் குறித்துப் பின்னூட்டுவேன்.

என் ஜாகிருக்கு...

இடுக்கண் களையவும்
இருப்பதைப் பகிரவும்
இதயத்துள் நுழைந்தவன் - நீ!

இளமை சிறக்கவும்
இனிதாய்த் திகழவும்
இன்முகம் கொண்டவுன் -நீ!

வணிகம் கற்கச் சென்று
மனிதம் கற்பித்தவன்,
மனிதர்கள் மத்தியில் 
புனிதம் போதிப்பவன்!

அந்த ஒரு நாள்
விடிந்திரா விடில்
அறிமுகம் என நீ
வந்திரா விடில்...

கால்பந்து திடலும்
கணினி மொழி வகுப்பும்
புதுக் கல்லூரி விடுதியும்
புல் விரித்தத் திடலும்

தற்கால நினைப்பில்
கண்றாவியாய்த் தோன்றும்
கடைக்கண் பார்வைகளும்
காதலிகள் கிறக்கமும்

உப்பளக் காற்றும்
உமுரிச்செடி பிரித்த
ஒற்றையடிப் பாதையும்

இரவின் துவக்கத்தில்
கிளம்பும் ரயில்
அதிகாலை அதிரையை 
அடையும் அழகும்

ஒற்றையாய் எனக்கு 
வாய்த்திருக்காது நண்பா!

எத்தனையோ எண்ணங்கள்
எழுதி முடித்தபோதும்
உனக்கென துவங்கியதை
முடிக்க மனமில்லை!

வயிற்றுக்குப் பசித்தால்
வாய்தானே உண்ணும்?
உடலை நகர்த்த
கால்தானே நடக்கும்?

என்னை உயர்த்தவல்லோ
உன்னில் நினைத்தாய்
உன்றன் துஆவில்நான்
உலகை ஜெயித்தேன்!

நட்பின் வலிமையை
நாலுபேருக்குச் சொல்ல
நானோ நீயோ
உன்னையோ என்னையோ
ஈன்றெடுக்க வேண்டும்...
நட்பும் தாய்மையும்
ஒத்த உணர்வுகள் என
நின்றுரைக்க வேண்டும்!

......உன் சபீர்!

218 Responses So Far:

«Oldest   ‹Older   201 – 218 of 218   Newer›   Newest»
crown said...

ஏதோசதி நான் இரட்டை செஞ்சுரி எடுக்க விடாமல்....

Kuthub bin Jaleel said...

//குறுந்தாடி வருடி
குட்டைப்போட்டுடைத்து
குசும்பெழுத்தரைச் சற்றே
குசலம் விசாரிக்க!//

கவிஞரே, கூடெடுத்த ஞாபகம் வருது. மற்றவை நினைத்தால் மண்டை காயுது. ("நான் அவனில்லை" என்றால் ஸேமம்.)

அய்யா, அருதப்பழசு. யாரைய்யா நீர்?

அருதப்பழசு said...

/"நட்புக்குத் தோழர்கள் பரிசு" தலைப்பிட்ட காரணம் சொல்லி பரிசு ஒன்று என் நட்புகளில் ஒருவர் வெளிக்காடிக் கொள்ளாமலே பரிசளித்திருக்கிறது... அந்த நட்புக்குரியவருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்/

/ஆரா இருக்கும்.....?/

இதப்பார்ரா!
ஆருன்னு முன்னவர் கேட்டத வழிமொழிந்துட்டு
ஆருன்னு சொல்லாம இவுகளா "பரிசு"ன்னு முடிவு சொல்றத!
இது நாயமாங்க?

இந்த மூணாவது 'அருதப்பழசு' தான் கடைசி ச்சான்ஸ்.

வருவோம்ல, நாலாவதா!
கொடுக்கவோ; வாங்கவோ.
பரிசைத்தான்
அடியல்ல ;)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதப்பார்ரா!
ஆருன்னு முன்னவர் கேட்டத வழிமொழிந்துட்டு
ஆருன்னு சொல்லாம இவுகளா "பரிசு"ன்னு முடிவு சொல்றத!
இது நாயமாங்க?//

ஏனுங்க ! அதுரப்பழசு ஹாக்கா, ஏதோ சொல்றீங்க பட்டும் படாமலும் குட்டும் குட்டாமலும் புரியுறமாதிரி இருந்துட்டு புரிய மாட்டேங்குது !

மேத்ஸ் கிளாளிஸ்ல உட்கார்ந்து இருக்கிற மாதிரி இருக்கு... ரொம்ப தூரத்துல இருந்து வகுப்பை கவனிக்கிற ஃபீலிங்கு வேற...

ரொம்பதான் சொக்க வைக்கிறீங்களே !

'அதுரபழசு'க்கும் மவுசு கூட்டுறீங்களே ! சீக்கிரம் வாங்க ஹாக்க இன்னைக்கு லீவுதான் ரூம்போட்டு யோசிக்க வச்சுடாதீக !

KALAM SHAICK ABDUL KADER said...

அமெரிக்காவில் வாழும்
“தோழர்கள்” நூலாசிரியரின்
“தோழர்கள்” நூலால்
அதிரை நிருபர் வலைபின்னி- வீசி
அமெரிக்காவில் வாழும்
தோழன் தமீ(ன்)ம் பெற்றேன்
அமெரிக்காவில் வாழ்ந்திருந்த
அடியேனும் அபுதபியில்
அமர்ந்து கொண்டே...
தூண்டில் போட்ட என் உணர்வு
தூண்டுகின்றது இப்பொழுது
மீண்டும் அமெரிக்கா போ “கலாம்” என்றே
வேண்டும் காரணங்கள்:
ஊதியம் உயர்வாய்க் கிட்டும்;
உயிரின் நெருக்கமும் கிட்டும்

அப்துல்மாலிக் said...

வாழ்க்கையின்
பல்வேறு கட்டதின்
சுனாமி வேகத்தில்
நண்பர்கள்
நாம்
எங்கெங்கோ
சிதறி போனோம்...!

எப்போழுதாவது
நாம் அனைவரும்
ஒன்றாய்
எடுத்து கொண்ட
புகைப்படத்தை
பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய்
கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

ஹமீத் காக்கா,

//நீங்கள் காலோஜ்ல உங்கள் நட்புகளுடன் பேட்மிட்டன் விளையாடுவீர்களா?//

ஆமாம் விளையாடினோம் எங்கள் கால் அடி தடம் பதியாத இடம் கிடையாது நாம காலோஜ்ல

கஃபூர் யார் என்று விளங்கவில்லையோ கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

///கஃபூர் யார் என்று விளங்கவில்லையோ கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன் ///

ஹமீத் காக்கா,

கஃபூர் M.B. மாமா மற்றும் M.B. அதிரை அஹ்மது மாமா அவர்களின் மருமகன். என் சிறுவயது நண்பன், ஒருசில கல்லூரி பேராசிரியர்களுடன் உள்ளூர் வாசிகளும் காலேஜில் பேட்மிட்டன் விளையாடுவார்கள்(வீர்கள்), எங்களும் சான்ஸ் கிடைத்தால் சேர்ந்து விளையாடுவோம், இல்லாவிட்டால் பந்து பொறுக்கி போடுவோம். :)

உங்கள் profile புகைப்படத்தை பார்த்து நண்பன் கஃபூர் ஞாபகம் வைத்திருக்கிறார். எனக்கு ஞபகமில்லை.

Shafi MI said...

பொறி வச்சது கவியண்னே
குறி வச்சது (நெய்னா)த் தம்பியண்னே
உசுப்பேத்தியது அந்தத் தலத்தனயண்னே

சிக்குனது நானு!
வட ஆருக்கு?

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்: அடையாளங்கள் சொல்வதைப்பார்த்தால் ஷாஃபி மாதிரிதான் தெரியுது
சபீர்: எனக்கும்கூட எழுத்து நடை அப்படித்தான் தோணுது. ஆனாலும்...
என்னைக் காக்கா என்றுதான் கூப்பிடுவார். அண்ணே என்றல்ல.
கள்ளப்பெயர் அவருக்குப் பிடிக்காது. அதான் அவரில்லை என்கிறேன்.
அபு இபுறாகீம்: ஆனா, குதுப்தீன் ஹாக்கா, கூடு எடச்சிமார்க் இதெல்லாம்...ஷஃபிதான்.

சபீர்: லெட்ஸ் வெய்ட் அன்ட் சீ.

ஷாஃபி, அங்கே ஆளக்காணோமேனு தேடிக்கிட்டு இருக்கோம். நீங்க இங்கே ஒளிப்பாங்கொளி வெளாட்றியலா. ஆனா என்ன முயன்றாலும் தயாரிப்பாளர்களுக்கு புக்கு கிடையாது...பெப்பேதான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிக்குனது நானு!
வட ஆருக்கு? //

நெனச்சேன் !

இதுக்காவது இரண்டாம் பாகம் எனக்கு கிடைக்கும் தானே !

வடயை சுட்டாச்சே !

அப்துல் கபூர் said...

//தாஜுதீன் சொன்னது…ஹமீத் காக்கா,
கஃபூர் M.B. மாமா மற்றும் M.B. அதிரை அஹ்மது மாமா அவர்களின் மருமகன். என் சிறுவயது நண்பன்.//

சிறு வயதில் மட்டும் தானா? இப்போ இல்லையா?

ஹமீத் காக்காவுடன் ஓரிருமுறை கா.மு கல்லூரி மைதானத்தில் பாட்மிண்டன் விளையாடியதாக ஞாபகம், அப்போ நான் சிறு பிள்ளை 15-16 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல் கபூர் சொன்னது… சிறு வயதில் மட்டும் தானா? இப்போ இல்லையா?//

கஃபூர்... "சிறு வயது முதல்" என்று எழுத தவறிவிட்டேனப்பா.. :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

/அஇ:இரண்டாம் பாகம் எனக்கு கிடைக்கும் தானே !/
முஇ: இன்ஷாஅல்லாஹ்

/புக்கு கிடையாது.../
"தோழர்கள்" ஆக்கிய தோழர்ட்டயே வாங்கிட்டம்ல!
எனக்கொன்னு போக மீதி நீங்க பரிசறிவித்த தலத்தனயனுக்கும் ஷஃபாத்துக்கும் உங்க பரிசு அவங்களுக்கு கெடக்குமுன்னு மொதல்லயே கொடுத்தாச்சு அவங்கல்லாம் இங்க ஹஜ்ஜுப் பெருநாளைக்கு வந்தபோது!

/சபீர்: என்னைக் காக்கா என்றுதான் கூப்பிடுவார். அண்ணே என்றல்ல.
கள்ளப்பெயர் அவருக்குப் பிடிக்காது. அதான் அவரில்லை என்கிறேன்/
கவிக்கா!
(கோ)ன்னு கூட சொல்லலாந்தான்...
அத வெண்தாடிக்காராவொளுக்கு சூட்டிவிட்டதால்
கண்ணாடிக்காவொளுக்கு இது!

/அண்ணாச்சிக்கு இதல்லாம் ஞாபகம் வரட்டுமேன்னுதான் ச்சும்மா...இப்புடி! மத்தபடி பூனைப் பேரெல்லாம் நமக்கு ஒத்துவராது/ என போனஸா கொடுத்த இந்த இரைய வச்சே சுலபமா சிக்க வச்சிருக்கலாம். ஏனோ செய்யல! இப்ப அந்தப் பேரக் கேட்டா அண்ணாச்சிக்கு சிர்ரிப்பூதான் வருமென நா எதிர்பார்த்தது பொய்த்துப் போச்சோ! இன்னும் கோபம் கொறயலையோ ?!

பேரொற்றுமய வச்சு
குறுந்தாடி அது இதுன்னு
கவியண்னே
இழுத்து விட்டதுல
பீட்டு எகிறி
நெசமான குருந்தாடிக்காரண்னே
பாக்குவெட்டில சிக்குன பாக்கு போல
பதறியடித்து
"நான் அவனில்லை" என...
அலற
எனக்குச் சங்கடமாப் போச்சு !

குருந்தாடிக்கார குதுபண்னே
நா சின்னவயசுல கண்ட
என் அனஸ் காக்கா (அவங்க தாய்மாமா)
போல இருந்ததுல
காலஎந்திர உதவில்லாம
என் சின்னவயசுல இருந்த எங்க
ஜாவியா ரோடு
மரவாடிக்கே சென்று வந்தேன்!

பின்னே,
ண்னே
விளிப்புக்கான காரணம்...
இங்க நாங்கல்லாம் ஒண்ணா இருந்தப்ப
உங்க நண்பே ஒருத்தர (நூ)
எங்கண்னே ஒருத்தர் (ஃபஜால்)
'ண்னா'ன்னு கூப்புடதுல
எனக்கும் அந்தத் தொனி
தொத்திக்கிடுச்சு!

ரொம்ப நாளாக் கேக்கணுமுன்னு நெனச்சேன்
அதென்ன ஒங்களுக்கும் ஒங்க மலேய நண்பருக்கும்
ஒரே 'ஜோ' விளிப்பு?
பத்ஹுத்தீன் அடிக்கடிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எங்க காலம் போல ஒங்க காலத்திலயும்
ஒரு 'ஜோ' மேனியா இருந்துச்சா?
அல்லது இங்க உள்ளவய்ங்க
"yo yo"ன்னு சொல்றாப்ல
எல்லாத்துக்கும் "jo" எஃபெக்ட்டா?

இந்த (வலை)ப்பூக்கு
நா வச்சிருக்க
செல்லப்பேர்
"பாசப்பூ"

ரொம்பத்தான் பொழியுராய்ங்க
பாசத்த!
ஏற்கனவே கடுங்குளிர் இங்கே
இதுல இவய்ங்க வேற
ஒரே 'ஜல்ப்பு'த்தான் போங்க!

நம்மூரு வலைங்கர்களைப் பொறுத்தவரை
ஒன்றை எளிதாச் சொல்லிடலாம்.
"குரூப்பிஸம்"
இன்னாரா? இவ்வோ அங்கன மட்டுந்தானே
எழுதுவாஹ; கருத்திடுவாஹ

அப்படியில்லாம
அப்பப்போ
இவய்ங்க அங்கயும்
அவய்ங்க இங்கயும்
போய், வந்து
பொய்யில்லாம, மெய்யாக்
கலக்குனா
நம்ம எல்லோருக்கும்
கொண்டாட்டந்தானே.

அந்த வகயில முன்னாடி
ஒரு 'அருதக்கார'த்தம்பி
ஒங்க குரூப்புல சேரணுமுன்னா
என்னா, ஏதுன்னு இங்கன கேட்டுச்சு
அதுக்கு 'இப்பிடித்தான்'ன்னு சொல்லி,
இங்கிட்டும் வந்து கிறுக்கலாமுன்னு
இங்கன பதிலு சொன்னதா எனக்கு நினைவில்லே!

அன்பா அந்த 'அருதக்கார'த் தம்பியக்கூட
இங்கன வந்து கிறுக்கப்பான்னு சொன்னா
முடியாதுன்னா சொல்லப்போவுது?
இப்படிதான நமக்குள்ள ஒத்துமைய கோக்கணும்?

எனக்கெல்லாம் வலைக்காரவொளப் போல
கருத்தா எழுத வராது
கொற மட்டுந்தே சொல்வேன்
ஒரே வளவளன்னு...
நா என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்?

நம்மூரு அம்பது (வலை) ப்பூக்காரவொளும்
ஒரே நர்சரி தொடங்காட்டியும்
இப்படியாவது
(வலை) ப்பூக்கோக்கலாமே!
என்ன நாந்சொல்றது?

- தொடரும் 1 of 2

------------
அன்புடன்,
ஷாஃபி மு.இ.
+1 56 2 56 7 56 53
------------

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

- தொடர்கிறது 2 of 2

அல்லாஹ் குர்ஆன்ல "ஹப்லுல்லாஹ்"'ன்னு (குர்ஆன்3:103) சொன்னத
அது அல்லாஹ்வின் வேதமான "குர்ஆனை" குறிப்பது
என விளங்காம பெரியாளுங்க மொதக்கொண்டு எல்லோரும்
"ஒத்துமக்கயிறு"ன்னு
சொல்லிச் சொல்லியே
எல்லா மனதிலையும்
தப்பாப் பதிய வச்சிட்டாஹ!

நாம எல்லாரும் அந்த மெய்யான "ஹப்லுல்லாஹ்'வான
குர்ஆனயும்
ரஸூலுல்லாஹ்ட சொல்,செயல்&அங்கீகாரமான
'ஹதீஃத்'தயும்
பற்றிப் பிடித்துக் கொண்டால்
நமக்கெல்லாம் ஒரே வழிதானே
அப்போ நாமல்லாம் ஒண்ணுதானேன்னு
நெனப்பு வந்து
ஒத்துமயா யிடமாட்டமா என்ன?

கடசியா ஒன்னு:
இதப்போலத்
"தோழர்கள்" கொண்டாட்டம்
அநேக அதிர (வலைப்)பூக்களிலும்
வந்து அதிர வேண்டாமா?
வந்தா எவ்ளோ நல்லாருக்கும்!

புனிதச் சரித்திரத்தை படிப்பவர்க்கு
அலுப்பேற்படாமல் வரைந்த
நம்ம தோழர் நூருத்தீனின்
அந்த அற்புத எழுத்தைப் படித்துப் பயன்பெறவும்
எல்லோருக்கும் அந்தப் புனிதர்களின்
வாழ்வைப் பின்பற்றவும்
கொஞ்சமாவது வாய்ப்புக் கிட்டுமல்லவா?

இரண்டாமாட்டத்திலிருந்து
கவிக்கா அதைச் செய்யமாட்டாரா என்ன!
இன்ஷா அல்லாஹ்.

(A.N. Please arrange comments as descending order to enable read latest comment easier, merci.)

------------
அன்புடன்,
ஷாஃபி மு.இ.
+1 56 2 56 7 56 53
------------

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//(A.N. Please arrange comments as descending order to enable read latest comment easier, merci.)//

Dear Bro: M.I.S.:

Jazakallah hair for suggestion.

YES ! good suggestion, we will try to make it shortly Insha Allah.

AN-Team

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அஇ:இரண்டாம் பாகம் எனக்கு கிடைக்கும் தானே !/
முஇ: இன்ஷாஅல்லாஹ்//

அஇ : ஜஸாக்கல்லாஹ் !
+-+-+-+-+-+-+-+

///அண்ணாச்சிக்கு இதல்லாம் ஞாபகம் வரட்டுமேன்னுதான் ச்சும்மா...இப்புடி! /// இப்ப அந்தப் பேரக் கேட்டா அண்ணாச்சிக்கு சிர்ரிப்பூதான் வருமென நா எதிர்பார்த்தது பொய்த்துப் போச்சோ! இன்னும் கோபம் கொறயலையோ ?!///

மெய்யாலுமே ஒரைக்கல மண்டையில... பின்னால் ஊட்டியதை வைத்து ஆஃப் த ஸ்கீன் டாக் டையலாகில் யூகித்திருந்தாலும், காக்கா பூனைப்பெயருக்கா பதில் என்று ஒதுங்கிடத் தோன்றியதும் மெய்யே... :)

சிரிக்கத்தான் செய்தோம் அதுவும் ஆஃப் த ஸ்கீரீன்தான், அதெப்படி கோபம்வரும்!?

//அன்பா அந்த 'அருதக்கார'த் தம்பியக்கூட
இங்கன வந்து கிறுக்கப்பான்னு சொன்னா
முடியாதுன்னா சொல்லப்போவுது?
இப்படிதான நமக்குள்ள ஒத்துமைய கோக்கணும்?//

அதானே ! தொறந்துதானே இருக்கு (அதிரை)மனக் கதவு !

அதெல்லாம் இருக்கட்டும் புடிச்ச முயலுக்கு கால் - 3 அலல்து 4 ?

sabeer.abushahruk said...

ஷாஃபி,

ஹிட்ச்காக் படம் பார்த்த மாதிரில்ல ஆயிப்போச்சு! நாலைந்து நாட்களாக வாசித்த நாவல் மாதிரி...எப்ப வர்ரீக எப்படி வர்ரீகன்னு தெரியமாட்டேங்குது, ஆனா, வாரவேண்டிய...ஐ மீன்...வர வேண்டிய நேரத்துல நச்சுன்னு வந்து கெலிச்சுப்போட்றியலே!

"ஒத்துமக்கயிறு":

நான் ச்சின்னப்புள்ளயா இருக்கப்ப, "சிராத்தல் முஸ்தகீம் பாலத்த" கடக்கிறத பத்தி சொல்லுவாக, அதுமாதிரிதான் இதுவும். என்ன ஒன்னுன்னா, ஆளாலுக்கு ஒத்துமக் கயித்த வச்சிக்கிட்டு வந்து புடிங்கன்னா என்னதான் பண்ணுவான் ஏழ முஸ்லீம்?

//ஒரு 'ஜோ' மேனியா இருந்துச்சா?//
ஆமாமா, அது ஒரு புதுக்கல்லூரியிலிருந்து தொத்தும் வியாதி. அரியர் இல்லாம பாஸான எங்களப்போன்ற அப்பிராணிகள் தங்களத்தாங்களே அதி மேதாவின்னு நெனச்சு "ஜோ" ன்னு கூப்பிட்டுக்குவோம். அக்காலத்திலே அப்படி ஒரு பாத்திரப்படைப்பு ஆ.வி.யிலே வெளியாகி பிரபலமான சமயம்.

வகுப்பெடுக்கற அளவுக்கு விவரம் போதாதாலதான் இங்கே டெஸ்ட் எழுதி ரிஸ்ல்ட் பார்த்துக்கிட்டு இருக்கேன். நெறய இடங்கள்ள எழுதறதில்லயே தவிர, ஒத்துமக்கயிறு மேட்டர்லாம் ஒன்னுமில்ல.

வஸ்ஸலாம்.

«Oldest ‹Older   201 – 218 of 218   Newer› Newest»

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு