Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 09 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2012 | ,

(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்:

(1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது.

(1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர, ழகர, வரிசைகளில் எந்த எழுத்தும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வாரா.

(1):6:3 யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):6:4 வகர வரிசையில் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):7 சொல்லுக்குள் இடையில் வராத எழுத்துகள்:

(1):7:1 ஒரு சொல்லின் இடையில் அ, , , , , , , , , ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):7:2 ட், ற் என்னும் இரு எழுத்துகளை அடுத்து எந்த மெய்யும் இடம் பெறாது.
காட்ச்சி, மாட்ச்சி, அதற்க்கு, இதற்க்கு என எழுதுவது பிழையாகும்.

(1):8 சொல்லுக்குள் மெய் இரட்டித்து வராத எழுத்துகள்:

பாடம் (1):2:2இல் கூறப்பட்டிருக்கும் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு ஆகியன ஒரு சொல்லின் இறுதியில் அமையாமல், இடையில் அமைந்திருந்தால் அவற்றை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

காட்டுகள்:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

இவ்வாறு மெய் இரட்டித்து வருதல், உடனிலை மெய் மயக்கம் ஆகும்.

ர், ழ் ஆகிய இரு எழுத்துகள் உரைநடையில் மெய் இரட்டித்து வாரா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு). "மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் ..." - நன்னூல் 110.

(1):9 சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்:

(1):9:1 , ஈ போன்ற ஓரெழுத்து ஒரு மொழியானது, ஒரு கடைசிச் சொல்லாக (கன்றுக்குப் பால் தரும் [பசு]; பறந்து போனது ) அன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லின் இறுதியில் அ, , , , , , , , , ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):9:2 க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

கால்+சிலம்பு என்பதை காற் சிலம்பு என்று பிரித்து எழுதாமல்காற்சிலம்பு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1):9:3 ங், ஞ், ந் ஆகிய மூன்று மெல்லின எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரா (பண்டைய இலக்கியத்தில் அரிதாக இடம் பெற்ற ஞ், ந் ஆகிய இரு எழுத்துகளும் இப்போது வழக்கொழிந்து விட்டன).

மூன்று+நூறு என்பதை முந் நூறு என்று பிரித்து எழுதாமல் முந்நூறுஎனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1)9:4 இடையினத்தில் வ் மட்டும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.



அந்த+வாசல் என்பதை அவ் வாசல் என்று பிரித்து எழுதாமல்அவ்வாசல் எனச் சேர்த்து எழுத வேண்டும்.

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

7 Responses So Far:

Anonymous said...

தமிழே பிழை இல்லாமல் அதிரை நிருபர் இணைய தளத்திலையை கற்றுக்கொள்ளலாம். எதாவது தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

காக்கா,
அப்டீன்னா இம்மாங்காலமா லட்சம், லட்சியம், லாபம் என்று எழுதியவற்றை இகரம் சேர்த்து இலட்சியம், இலாபம் என்றுதான் எழுத வேண்டுமோ?

இப்படி எல்லாத்துக்கும் இகரம் சேர்ப்பது சடப்படமா வருதே?

அல்லது இது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிழையா?

(எதிர் கேள்வி கேட்டுவிடாதீர்கள். எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்.)

சேக்கனா M. நிஜாம் said...

“பழகு மொழி”த் தொடரை அடக்கமாக படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்........தொடருங்கள் !

அதிரை சித்திக் said...

இத்தொடருக்கு பழகு ..மொழி என்றிருப்பதை விட

அப்படியே மாற்றி மொழி ..பழகு ..என்றிருப்பது

சால சிறந்தது ...தமிழ் மொழியின் இலக்கணம்

அற்புதமாய் கற்று தரும் ஆசானுக்கு நன்றிகள் பல

அள்ளி (சொல்லி)கொடுக்க கொடுக்க அழியா செல்வம் கல்வி

அதனை அள்ளித்தரும் சகோ ஸாலிஹ் அவர்களின்

அறிவு.., பட்டை தீட்டப்பட்டு கூர்மையாக அமையும் என்பது திண்மை ..,

அதிரை சித்திக் said...

அறிவு கூர்மையாவது திண்ணம் ...என

எழுதுவதற்கு பதிலாக திண்மை என எழுதி விட்டேன்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி சபீர்,

லஷம், லஷ்யம், போன்ற வட சொற்களை நமது மொழி மரபுக்காக லட்சம், லட்சியம் என்று மாற்றி எழுதுவதில் பெருந் தவறு ஏதுமில்லை. அவற்றுடன் இகரம் சேர்த்து எழுதுவது சிறப்பு, That's all.

ஆனால்,

டக்குவண்டி, டச்சுக்காரர், ரப்பர் போன்ற திசைச் சொற்களுக்கு இகரம் சேர்த்தால் இடக்கு மடக்காகிவிடும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.