Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 06 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 15, 2012 | ,

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை)

குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச் சார்ந்து திரியும் ஓசை என்பதாலும் தமிழில் யகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு என்பதாலும் அஃது அரிதாகிப் போனது.

கவிதை புனையும் கவிஞர்கள் ஓசையழகுக்காகக் குற்றியலிகரத்தைப் பயன் படுத்துவர். முன்மொழியின் இறுதி எழுத்து வல்லின உகரக் குறிலாக (கு, சு, டு, து, பு, று) அமைந்து வருமொழியானது 'ய'கரத்தில் தொடங்கும்போது முன்மொழியின் இறுதி எழுத்தான வல்லின உகரக் குறில், இகரமாகத் திரியும். அவ்வாறு திரியும்போது அதன் ஓசை குன்றி ஒலிக்கும். திரிந்தும் குன்றியும் ஒலிக்கும் இகரமே குற்றியலிகரமாகும்.


காட்டுகள் :
வீடு+யாது = வீடியாது;
காட்டு+யானை = காட்டியானை;
எழுத்து+யகரம் = எழுத்தியகரம்.

"குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்"

எனும் (மக்கட்பேறு-66) குறளில், "குழல் இனிது" எனும் உகர ஈற்றை, "குழல் இனிதி" என்று குற்றியல் இகரமாக மாற்றிது, வருமொழிச் சொல்லான "யாழினிது"வில் உள்ள 'யா' ஆகும்.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைக்கு நம்ம ஏரியாப் பக்கம் பழகு மொழி பாடம் வந்திருக்கே...

கவிக் காக்கா எங்கேயிருக்கிய ?

நல்ல அனுபவம் பழகு தமிழ் !

Yasir said...

அனுபவ அழகு ஆசானின் “ பழகு மொழி “ ....பள்ளியில் படித்தவற்றை மீண்டும் அசைப்போட வைத்து எங்களின் எழுத்து.பேச்சு நடை செம்மைப்பெற உதவுகிறது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு