Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 05 5

அதிரைநிருபர் | April 08, 2012 | , , ,

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)

கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லினஉயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒருசொல்லின் ஈற்றாய் (கடைசி எழுத்தாக) அமைந்து, அச்சொல்,கீழ்க்காணும் ஆறு வகைச் சொற்களுள் ஒன்றாக இருப்பின் அதுகுற்றியல் உகரம் எனப்படும்.ஒரு சொல்லின் இறுதியில் உள்ளஉகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகள் சிலவேளைஅதன் இயல்புத் தன்மையான ஒரு மாத்திரை அளவிலிருந்துகுன்றி, அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். அதையேகுற்றியல் உகரம் என்பர்.

குற்றியல் உகரத்தின் எழுத்துகள் 6: கு,சு,டு,து,பு,று (உகரவல்லின உயிர் மெய்க் குறில்கள்) குற்றியல் உகர வகைகள் 6.

(1):2:1 நெடில் தொடர்க் குற்றியல் உகரம்:

இஃது இரண்டெழுத்துகளை மட்டும் கொண்டது. முதல்எழுத்து நெடிலாகவும் இரண்டாவதான இறுதி எழுத்துஉகர வல்லின உயிர் மெய்க் குறில்களுள் ஒன்றாகவும்அமையும்.

காட்டுகள் : வாகு, காசு, மாடு, யாது, கோபு, ஆறு

(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:

வன்தொடர்க் குற்றியல் உகரம் இரண்டுக்கு மேற்பட்டஎழுத்துகளைக் கொண்டிருக்கும். சொல்லின் ஈற்றில்(இறுதியில்) இடம் பெறும் உகர வல்லின உயிர் மெய்க்குறில் (கு,சு,டு,து,பு,று) எழுத்துக்கு இடப்புறம்அமைந்த (ஈற்றயல்) எழுத்து, ஈற்றெழுத்தின் மெய்(புள்ளி/ஒற்று) எழுத்தாக அமைந்திருக்கும்.

காட்டுகள் : சுக்கு, அச்சு, கட்டு, பத்து, காப்பு,மாற்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு, (த்+த்+உ=)த்து, (ப்+ப்+உ=)ப்பு, (ற்+ற்+உ=)ற்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால்அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, வன்தொடர்க்குற்றியல் உகரம் என்று எளிதாக இனங் கண்டு கொள்லலாம்.

(1):2:3 மென்தொடர்க் குற்றியல் உகரம்:

மென்தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்டஎழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் மெல்லினமெய்யெழுத்தைப் பெற்றிருப்பதால் மென்தொடர்க்குற்றியல் உகரம் என்றானது.

காட்டுகள் : நுங்கு, கழஞ்சு, நண்டு, சிந்து,கொம்பு, கன்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் ங்கு, ஞ்சு, ண்டு, ந்து,ம்பு, ன்று முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால்அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, மென்தொடர்க்குற்றியல் உகரம் என்று இனங் கண்டு கொள்க.

(1):2:4 இடைத் தொடர்க் குற்றியல் உகரம்:

இடைத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்குமேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில்இடையின மெய்யெழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : பெய்து, சார்பு, சால்பு, போழ்து

(1):2:5 ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்:

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்குமேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில்ஆய்த எழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : எகு, கசு, அது

குற்றியல் உகரப் பாடத்தில் இதுவரை நாம் பயின்றவை:

முதலாவதாக, ஓர் உயிர்மெய் நெடில் எழுத்தையும் ஓர்உயிர்மெய் வல்லின உகரக் குறில் எழுத்தையும் கொண்ட நெடில்தொடர்க் குற்றியல் உகரம்.

அடுத்த மூன்று பாடங்களில் (இறுதி எழுத்துக்கு இடப்புறம்அமைந்திருக்கும்) ஈற்றயலில் ஒற்று(புள்ளி எழுத்து) உடன்அமைந்த வன்/மென்/இடைத் தொடர்க் குற்றியல் உகரங்கள்.

ஐந்தாவதாக ஆய்த எழுத்தை ஈற்றயலாகக் கொண்ட ஆய்தத்தொடர்க் குற்றியல் உகரம்.

ஆறாவதாக நாம் பயில இருப்பது உயிர்த் தொடர்க் குற்றியல்உகரமாகும்.

(1):2:6 உயிர்(மெய்)த் தொடர்க் குற்றியல் உகரம்:

இந்தக் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்டஎழுத்துகளைக் கொண்டிருக்கும். இதன் ஈற்றயல்உயிர்மெய் எழுத்தாக இருந்த போதிலும் இஃது, உயிர்த்தொடர்க் குற்றியல் உகரம் என்றே வழங்கப் படுகிறது.

காட்டுகள் : விறகு, அரசு, கசடு, எனது, மரபு,வயிறு


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பொறுமையாக படிக்கும்போது நிறையவே புரிகிறது...

பரிட்சை வைத்தால் பிளாக் இல்லாமல் பாஸ் செய்யாலம்னு தெம்பு வந்திருக்கு...

சார் ஊருக்கு போயிருக்கான்னு சொல்லலை அங்கேயிருந்து கூட பரீட்சை வைப்பாங்களாம்...

//(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:// கேள்வி இந்த செமஸ்டரில் வருதாம் (கொஸ்டின் பேப்பர் அவுட்டு)...

புதுசுரபி said...

அருமையான முயற்சி,
தாய்மொழியின் அவசியத்தினை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும், தவறாமல் படித்திட வேண்டும்

சகோ. ஜமீல்.மு.சாலிஹ் அவர்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

Shameed said...

சார் ஊருக்கு போயிட்டாலும் லீடர் ரொம்ப கண்டிப்பா இருக்கார் ஒரு பிட் பேப்பரை கூட பரீட்சை ஹாலுக்குள் விடவில்லை!

sabeer.abushahruk said...

பழகு மொழி
பயிற்றுவிக்கும்
காக்காவின் பாணி
அழகு வழி!

Ameena A. said...

தரமான எழுத்தாளர்களும் தமிழ் ஆசிரியர்களும் ஒருங்கே கொண்டிருக்கும் தளம் இது - பாராட்டுக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு