Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 11 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2012 | , ,

பாட்டி-பேரன் உறவு...

கனிந்த அன்பு - பாட்டி தாத்தாவிடம் கிடக்கும் அன்புதான். அவர்களின் அதட்டல்கூட பேரன் பேத்திகளுக்கு நகைச்சுவையாய் தெரியும் புதுமை. தாத்தாவின் அன்றாட வருடல் காலத்தால் அழியாத அன்பின் வெளிப்பாடு. வெளியில் காணும் போது எனது பேரன் என்று பெருமையாக கூறி கொள்ளும் தாத்தா சிகரத்தை தொட்ட பெருமை தாத்தாவின் குரலில் தெரியும். 

பாட்டியின் அன்பு என்றுமே ஒரே பார்வை ஐந்து வயது பேரனும் இருபது வயது பேரனும் ஒன்றாகவே தெரிவர். இரண்டு பேருக்கும் அதே அன்புதான் முந்தானையில் முடிந்து வைத்த ருபாயை அன்பாக கொடுக்கும் பாட்டி. கனிந்த அன்பு கிடைக்க பெற்றவர்கள் உண்மையிலேயே பேறு பெற்றவர்கள்தான்.

நெருடலான நிகழ்வுகள் – தாயை இழந்த பிள்ளைகளின் சூழல்.

தாயில்லா பிள்ளைகளை வளர்க்கும் பாட்டிகளின் அன்பு அந்த பிள்ளைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்.

*சிறு பிள்ளைகளுக்கு  வயதானவர்களை பற்றிய அபிப்பிராயம் என்னவென்றால் தாம் செய்யும் செயல்கள் ஒன்றும் அவர்களுக்கு தெரியாது. தாயின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகள் செல்லமாக பாட்டியை ஏமாற்றும் செயல் சுவாரஸ்யமானது. அனால், சில வீடுகளில் பாட்டி கண்காணிப்பில் வளரும் பிள்ளைகள் சிறு விசயங்களில் ஏமாற்றும் பிள்ளைகள் பிறகு பெரிய தவறுகளை செய்ய துவங்கும். தாயில்லா பிள்ளை என்ற ஒரே கரிசனம் பிள்ளை என்ன செய்தாலும் சரி என்ற நிலை பாட்டினை கொண்டிரும் பாட்டியின்  வளர்ப்பு முறை பிள்ளைக்கு பாதகமான சூழலாக அமைவது தான் பரிதாபம்.

* தாயில்லா பிள்ளைகள் பிறரால் பாதிக்க படும்போது பாட்டி படும் துயரம் அதன் வெளிப்பாடு மிக பரிதாபமானது. தனக்கு கிடைக்கும் அபரிவிதமான உணவு வகைகளை பேரனுக்கு கொடுக்கும் பாட்டியின்   பாசம் கவர தக்க ஒன்று.

* டாக்டர் பேரனுக்கு பாட்டி கொடுக்கும் வைத்தியம் சில சமயம் ஒவ்வாமை கொண்டதாக இருக்கும் ..சிரித்துக் கொண்டே அப்படியா என கேட்க்கும் பேரன்.

* I P S   படித்த பேரனை அலட்டும் தாத்தா, பொய்யாய் பயப்படும் பேரன் போன்ற நிகழ்வுகள் ரசிக்க தக்கவை பேரன் கொடுக்கும் பணம் மற்ற வாரிசுக்கு கொடுத்து மகிழும் பாட்டி தாத்தா உறவு கனியை போன்ற இனிமையான உறவுதான். 

பிள்ளைகள் உறங்க தொட்டில் பருவம் முடிந்து தரையில் படுத்து உறங்கும் பருவம் வரும்போது பிள்ளைகளின் கவனம் பாட்டியின் பக்கமே திரும்பும். விளையாட்டு பருவம் என்பதால் ஓரிடத்தில் இருக்காத பிள்ளைகளை சுண்டி இழுக்கும் தன்மை பாட்டியின் கதைகளுக்கு உண்டு. நல்ல அறிவுள்ள கதைகள் சொல்லி வளர்க்கும் பாட்டி அறிவுள்ள பேரனை வளர்கிறாள். சில பாட்டிகள் மூட நம்பிக்கையை பிள்ளைகளுக்கு ஊட்டும் கதை கூறி மனதை பாழடிப்பதும் உண்டு. சில பாட்டிகள் குல பெருமை கூறி பெருமையளனாகவும் சில பாட்டி குடும்ப பகமை கூறி பிள்ளைகளை கோப காரர் களாகவும் ஆக்குவது உண்டு. நிலா கதை, நரிக்கதை வருங்கால பாட்டிகள் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக் குறியே!.

தொட்டிலில் உறங்க மறுக்கும் மழலைகளுக்கு தாலாட்டு பாட்டி வசமே இருப்பு இருக்கும்.

மீண்டும் நான்  வலியுறுத்த விரும்புவது பிள்ளைகள் வளர்ப்பில் தாய்க்கே அதிக பங்களிப்பு இருக்க வேண்டும். சிலர்  பல அலுவல் காரணமாக பாட்டிகளிடம் பிள்ளைகளை முழுமையாக வளர்க்கும் பொறுப்பை கொடுத்தால் பிள்ளைகள் பிடிவாதம் பிடித்த பிள்ளையாகவும் கோபம் அதிகம் உள்ள பிள்ளையாகவும் வளரும். செல்வ செழிப்புள்ள பாட்டிகளிடம் வளரும் பிள்ளைகள் ஊதாரியாக இருக்கும். பணம் கொடுக்க மறுக்கும் போது அடாவடியாக கேட்கத் துனியும் பேரன்களையும் காண முடிகிறது.

வயதான பாட்டிக்கு ஒன்றும் தெரியாது என்ற உணர்வுள்ள பிள்ளைகள் பொய் சொல்லுதல் சிறு களவு போன்ற செயலில் கூட ஈடுபடும் .தயவு செய்து பிள்ளைகளை பெற்ற தாய் மார்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்கும் பொறுப்பை தாயே ஏற்க வேண்டும். தாயில்லா பிள்ளைகளை பாட்டி மட்டுமல்லாது பெரிய / சிறிய  தாய் போன்ற உறவுகளும் ஏற்க வேண்டும்.

பாட்டி தாத்த நல்ல கனி போன்ற இனிமையான உறவுதான் சில சமயங்களை கசப்பான மருந்தும் கொடுப்பது அவசியமல்லவா. எனவே பாட்டிக்கு ஒய்வு. தாய்க்கே பிள்ளை வளர்க்கும் பொறுப்பு. என்பதை அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன்.
உறவுகள் தொடரும்
அதிரை சித்தீக்

17 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உறவுகளின் வரிசையில் பேரன் பெரியம்மா உறவினை அனுபவப்பூர்வமாக சொல்லி உள்ளீர்கள்.
பிள்ளையின் பிரதம கண்காணிப்பு தாயாகவே இருக்க வேண்டும் என்பது மிகச் சரியே!

// நிலா கதை, நரிக்கதை வருங்கால பாட்டிகள் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக் குறியே!//

நண்பரின் நரிக்கதைக்கு பின் ஏன் இப்படி முற்றுப் புள்ளி வச்சிட்டியோ, நரியானது திராட்சை உட்பட சில பழங்களையும் உண்ணுமாம். நிலாக் கதையிலும் நிறைய உண்மைகளும் இருக்காம்.

Abdul Razik said...

Lot of fiction information got from grandma and grandpa. It was unforgettable moments. They were stopped kid‘s weeps and made them cheerfulness. Grandma and grandpa relationship have given nice moments for some lucky kids. Thanks to Siddheek Kaka to continuing this article.

Abdul Razik
Dubai

Yasir said...

ஆணித்தரமான வார்த்தைகள், சித்திக் காக்கா-இக்கருத்தில் நான் உங்களுடன் ஒன்று படுகின்றேன்

//பாட்டிக்கு ஒய்வு. தாய்க்கே பிள்ளை வளர்க்கும் பொறுப்பு//

இது தவறினால் 95% பிள்ளைகள் தொல்லைகளாகவே வளர்வதை நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்

Yasir said...

பாட்டியின் அன்பு அளவில்லாதது. என் உறவினருக்கு நடந்த சம்பவத்தை இங்கு சொல்கின்றேன்..அவர் துபாய்யில் ஓட்டுனர் உரிமம் பெற்றவுடன் மகிழ்ச்சியாக ஊருக்கு போனில் அழைத்து தன் பாட்டியிடம் “ பாட்டி நான் லைசென்ஸ் பெற்றுவிட்டேன் என்று கூற” பாசத்தின் உச்சத்தில் இருந்த பாட்டி ”வாப்பா எடுத்தது சந்தோஷம் ஆனா வண்டிய ரோட்ல மட்டும் ஓட்டிறாதீய,காரு,பஸ் நிறைய வரும்” என்று கூற...பேரனும் ஒகே என்று சிரித்துகொண்டே சொல்லிவிட்டார் அப்ப எதுக்கு லைசென்ஸ் வாங்கினாராம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தாத்தா(அப்பா)வின் வளர்ப்பில் வளர்ந்தவன் நான் மிகவும் கன்டிப்பு சித்தீக் சொல்வதுபோல் எமாற்றமுடியாத தாத்தா தெருவே பயப்படும் கன்டிப்பான தாத்தா என்னுடைய ஒழுக்கத்திற்க்கு அவர்களே முற்றிலும் காரனம் அவர்களுடைய ஆகிரம் வெற்றிபெர எனது துஆக்களை உரித்தாக்குகிரேன்

KALAM SHAICK ABDUL KADER said...

தாத்தாவாகிவிட்ட எனக்கு அனுபவப் பூர்வமாக என் பெயரனின் பேரன்பை நுகர்கின்றேன்; மாஷா அல்லாஹ்! என் வாப்பா வழிப் பாட்டி, தாத்தாவைக் காணக் கிடைக்கவில்லைல் ஆனால், உம்மா வழிப் பாட்டியைச் சிறு குழந்தைப் பருவத்தில் பார்த்ததாக நினைவு. உம்மா வழித் தாத்தா தான் எனக்குச் சிறுவனாய் இருந்தது முதல் பள்ளி மாணவனாய் வளர்ந்தது வரை எனக்கு வழிகாட்டியாக அமைந்தவர்கள். இன்று அடியேன் கணக்கராகப் பணியாற்றுவதும் அவர்களிடம் கற்றுக் கொண்ட அடிப்படைப் பாடங்கள் தான் காரணம் என்பதை இவ்வாக்கம் படிக்கும் பொழுது என் நினைவு நாடாக்கள் சுழன்றன. உண்மையில் எதிலும் கண்டிப்பாக இருந்த நம் முன்னோர்களின் வளர்ப்பினால் தான் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்; நம் ஏற்றத்தின் ஏணிப்படிகள் அவர்கள் என்பதை என்றும் மறக்க மாட்டோம்; நினைவுகளை உண்டாக்கிய உங்கள் ஆக்கத்திற்கு நன்றி, தமிழூற்று அதிரை சித்திக் அவர்களே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'பாட்டி-ன்னா' வாப்பிச்சாவையும் குறிக்கும் தானே !?

என் சின்ன வயசில் கண்ட மின்னும் நட்சத்திரம் அவங்க !

நானும் சொல்ல ஆரம்பிச்சா ஒரு அத்தியாயம் எழுதனுமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Yasir சொன்னது…
.....ஆனா வண்டிய ரோட்ல மட்டும் ஓட்டிறாதீய,காரு,பஸ் நிறைய வரும்” என்று கூற...//

அதுதான் பாட்டியின் பாசம் :)

மூன்றாம் கண்ணுகாரர் 'பஞ்ச்'ன்னு யாசிரோ பஞ்சு (பொசு பொசுன்னு இருக்கு)

sabeer.abushahruk said...

சகோ. அதிரை சித்திக்,

தங்களின் கட்டுரையில் பல உறவுகளைப் பற்றிச் சொல்லும்போது அந்த உறவுகள் தஙகளுக்கு வாய்த்ததைப் போலச் சொல்லி வருவது தங்களைச் சிறந்த எழுத்தாளராகக் காட்டுகிறது.

பாட்டி உறவு பேரனைப் பாதிக்கும் என்பது உண்மைதான் எனினும் பாட்டி வாய்க்கப்பெறாத பேரப்பிள்ளைகள் உண்மையிலேயே அபாக்கியமானவர்கள்தான்.

ஏனெனில்,

அம்மா
உணவை வைத்துக்
காத்திருக்கும்,
பாட்டியோ
காத்திருக்கும் பொறுமையின்றி
சாப்பாட்டுத் தட்டோடு
பேரனைத்
தேடி
தெருவுக்கே வரும்.

sabeer.abushahruk said...

பதிவுக்குத் தொடர்புடையது என்பதால்...

வாப்புச்சா!

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!

வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!

வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்

வாப்பா மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்

சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து
எனக்கு மட்டும் கொட்டும்

முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்

புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்

சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத்
தேடிவரும் வாப்புச்சா

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!

- சபீர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாப்புச்சா!

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!//


ஆரம்ப முதல்

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!


நிறைவு வரை

ஆம் ! உண்மை !

இப்னு அப்துல் ரஜாக் said...

உறவுகளின் வரிசையில் பேரன் பெரியம்மா உறவினை அனுபவப்பூர்வமாக சொல்லி உள்ளீர்கள்.
பிள்ளையின் பிரதம கண்காணிப்பு தாயாகவே இருக்க வேண்டும் என்பது மிகச் சரியே!

// நிலா கதை, நரிக்கதை வருங்கால பாட்டிகள் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக் குறியே!//

நண்பரின் நரிக்கதைக்கு பின் ஏன் இப்படி முற்றுப் புள்ளி வச்சிட்டியோ, நரியானது திராட்சை உட்பட சில பழங்களையும் உண்ணுமாம். நிலாக் கதையிலும் நிறைய உண்மைகளும் இருக்காம்.

அதிரை சித்திக் said...

தம்பி ஜாபர் ..
சகோ ராஜிக்
அன்பு தம்பி யாசிர் ..
அபூ இப்ராஹீம்
சகோ கவி சபீர் காக்க
சகோ கவியன்பன் கலாம் காக்கா
அன்பு நண்பன் சபீர்
தம்பி அர அல ..
வளை தள சொந்தகளின்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அதிரை சித்திக் said...

முதியோர் இல்லா வீடு
கனியில்லா மரம் போல
வளம் பெற்ற குடும்பம்
பாட்டி தாத்தா உள்ள குடும்பம்பம் தான்
பாட்டி தாத்தா அன்பு கிடைக்க
குழந்தைகள் கொடுத்து வைக்க வேண்டும்

Ebrahim Ansari said...

அன்புள்ள அதிரை சித்தீக் அவர்களுக்கு,

உண்மையை ஒப்புக்கொள்ளப் போனால் நீங்கள் இதுவரை எழுதிய உறவுகளிலேயே எனக்குப் பிடித்த உறவு உம்மம்மா உறவே.

காரணம் நினைவு தெரிந்த நாள் முதலாய் எனக்குத் தாயாக வளர்த்தவர் உம்மம்மா. தன் வாயில் உள்ளதைக் கூட கக்கித் தருவார் என்று அன்புக்கு எடுத்துக் காட்டாக சொல்லப்படுவதுண்டு. அது எனக்கு நடந்து இருக்கிறது. தம்பி சபீர் அவர்களைப் போல் எனக்குக் கவிதை எழுத வராது. வந்தால் என் உம்மம்மாவைப் பற்றி ஒரு காவியம் நான் பாடிவிடுவேன். பல பேரன்மார்களுக்கும் இந்த உணர்வு இருக்கும்.

மழை நேரங்களில் சுடச்சுட சோளம் வறுத்து மடியில் தருவார்.
மரவள்ளிக் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள் போட்டுத் தாளித்து நன்கு வெந்த மாக்கிழங்கை எனக்கு மறைத்து வைத்துத் தருவார். பல பொடி வாங்கி மீன் ஆணம் காய்ச்சினால் நகரை மீன் எனக்குப் பிடிக்குமென்று எடுத்துவைத்துத் தருவார். பப்பாளிப் பழத்தை தோல் சீவி சுவைக்கத்தருவார்.
வெட்டிக்குளம் கூட்டிச் சென்று குளிக்க வைத்து வெயில் படாமல் துப்பட்டி போட்டு மூடி கரையிலே உட்காரவைப்பார். கால்மணி நேரம் பள்ளிக்கூடத்தில் இருந்து வர கால தாமதமானாலும் பாதையைப் பார்த்து பள்ளி நோக்கி தேடிக் கொண்டே நடந்து வருவார். சாயுபு மரைக்கார் கடை கடலை முட்டாயியில் ஈ மொய்க்கும் அதனால் நூர் கடையில் போய் வாங்கிவரச்சொல்லி வைத்துத் தருவார். பட்டினியாய் படுத்துவிட்டால் பாலும் சோறும் போட்டுப் பிசைந்து தூங்கும் எங்களை உட்காரவைத்து ஊட்டி விடுவார். பம்பாய் மிட்டாய்காரனிடம் கடிகாரம் கட்டச்சொல்லி அழகு பார்ப்பார். காலத்துக்கும் கஷ்டத்தை அனுபவித்தவர் நாங்கள் கால ஊன்றி நடக்க்த்தொடங்கும்போது காண முடியாமல் மறைந்துவிட்டார்.

அவர் நினைவாகவே முத்துப் பேட்டையில் நான் கட்டிய குடி இருப்புகளுக்கு அஹமது நாச்சியார் குடியிருப்புகள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இருக்கிறோம். அங்கேயே குடியேறி இருப்பதனால் உம்மம்மாவின் மடியிலேயே தூங்கும் மன நிம்மதி தெரிகிறது. அந்த வியர்வை மணம் விடியும்வரை இன்னும் உணர்கிறேன்.

அதிரை சித்திக் said...

அன்சாரி காக்கா ...
தங்களின் உம்மம்மா ..
தங்களை பாசமிகு பேரனாய்
கண் இமையில் வைத்து பாதுகாத்த
விதம் படிக்கவே சந்தோசமாக
இருந்தது ..தங்களின் பாட்டி அவர்களுக்கு
அல்லாஹ் நற்பதவியை கொடுப்பானாக
அற்புதமான மலரும் நினைவுகள் ..

KALAM SHAICK ABDUL KADER said...

\\முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்\\

வாப்புச்சாவும், உம்மம்மாவும் ஆகிய இருவரின் பாசமழையில் நனையாமல் ஏங்கும் என் உள்ளத்தில், கவிவேந்தர் சபீர் அவர்கள் கவிதைமழை பெய்து என் கணகளின் வழியாக அம்மழை நீராய்ப் பெருக்க எடுக்க வைத்த உருக்கம். சபீர் அவர்கட்கு மட்டும் “உருக்கம்” எப்படிச் சாத்தியமாகின்றது என்பதே என் ஆராய்ச்சி! அவர்களின் உள்ளம் முழுவதும் உணர்வுகளில் அதிகமாக உருக்கம் தான் உருக்கி வைக்கப்பட்டிருப்பதால், உருக்கத்தை மிகத் துள்ளியமாகவும், உள்ளத்தில் ஆழமாகப் பதியும் படியும் கவிதைகளில் வடிக்கின்றார். இக்கவிதையை எந்தத் தளத்தில் இட்டாலும் உடனே ஏற்றுப் பதிவர்; காரணம், உருக்கம் என்பது உணர்வுகளில் மிகவும் நெருக்கம்;கவிதைக் கருக்களில் மிகச் சுருக்கம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு