அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்க தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சம்பவத்தைங்களைப் பார்த்தோம். அதுபோல் மற்றுமொரு ஓர் ஈமானியத் தாயின் உறுதியான உயிரோட்டமான ஈமானைப் பற்றிய ஒரு சில வரலாற்றுச் சம்பங்களைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நம்முடைய தலைச்சிறந்த மூதாதையர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் நம் அருமை நபி இபுறாஹீம்(அலை) அவர்கள். அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்களின் வயது முதிர்ந்த பருவத்தில் அந்த தம்பதியர் அவர்கள் இருவருக்கும் இஸ்மாயில்(அலை) என்னும் அழகிய குழந்தை பிறக்கிறது. (மேலும் பார்க்க அல்குர்ஆன் 14:39) தவமாய்த் தவமிருந்து கிடைத்த அந்த பொக்கிஷமாக நபி இஸ்மாயில்(அலை), இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் நம்முடைய ரஹ்மத்துலில் ஆலமீன் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள். நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் (மேலும் பார்க்க அல்குர்ஆன் 3:95)
நபி இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், பால்குடிப் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மக்காவின் மானுட புழக்கம் இல்லாத அந்த வெட்டவெளி பாலைவனத்தில் விட்டு விட்டுச் செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறன். நபி (இபுறாஹீம் அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக எவ்வித மறுதலிப்பின்றி அன்றைய மக்கா பிரதேசத்தை விட்டு செல்ல ஆரம்பத்து விடுகிறார்கள். அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களிடம் கேட்கிறார்கள் “பச்சை பயிர்கள் அற்ற இந்த வரண்ட பூமியில் என்னை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்” இபுறாஹீம் அலை) அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்னை ஹாஜரா (அலை) மீண்டும் “அல்லாஹ் கட்டளையிட்டானா?” என்றும் கேட்கிறார்கள், அதற்கு இபுறாஹீம் (அலை) அவர்கள் “ஆம் அல்லாஹ் தான் இப்படி விட்டு விட்டுப் போகச் சொன்னான்” என்று பதிலுரைத்தார்கள்.
உடனே அந்த ஈமானியத் தாயிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகள். “அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விடமாட்டான்” என்று தன்னுடைய ஈமானிய உறுதியை கியாம நாள் வரை மக்களும் சொல்லும் விதமாக அந்த தியாகப் பெண்மணி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள் சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வே அன்னை ஹாஜராவுக்கும், நபி இஸ்மாயீலுக்கும் (அலை) உணவளித்தான். ஸஃபா-மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையே அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடினார்கள், அல்லாஹ் ஜம்-ஜம் என்ற நீரூற்றை வரவைத்து, இவ்வுலக இறுதி நாள் வரை அன்னை ஹாஜராவின் ஈமானை ஞாபகப்படுத்தும் விதமாக செய்துள்ளான். (மேலும் பார்க்க புகாரி:3364 Volume :4 Book :60)
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அவர்களின் ஈமானிய உறுதியில் சிறிதளவேனும் நம்மிடம் ஈமானிய உறுதி அல்லாஹ் மேல் முழு நம்பிக்கையாக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை எத்திவைக்க இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு ஆண் வேறு ஊருக்கு செல்ல நினைத்தால், நம் தாய் தந்தையர்கள், மனைவிமார்களிடம் அன்னை ஹாஜரா ஈமானிய உறுதியுடன் சொன்னது போன்ற வார்த்தையை எதிர்ப்பார்க்க முடியுமா? நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளைப் போன்று நாம் செவியுற முடியுமா?
பொருளாதாரத்தில் இலட்சங்கள் செலவு செய்து கடமையான ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கு செல்கிறோம், அங்கே ஜம்-ஜம் நீரையும் பருகுகிறோம் அதனை ஊரில் இருக்கும் சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எடுத்து வருகிறோம், அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா அவர்கள் செய்த தியாகத்தை எண்ணி அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக என்றைக்காவது நாம் கண்ணீர் சிந்தியிருப்போமா? தன்னுடைய ஈமானின் உறுதியோடு தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தால் கண்டெடுத்த ஜம்-ஜம் தண்ணீரை ஒரு புனித நீராக மட்டுமே காண்கிறோமே, அதை அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தின் ஒரு அத்தாட்சியாக நாம் கண்டு அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் ஈமானிய உறுதியை நினைவு கூர்ந்து நம்முடைய ஈமானை வலுப்படுத்த முயற்சித்திருப்போமா?
ஈமானைச் சோதனை செய்து பார்க்க நம்முடைய சமுகத்தின் முன்னோடி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, தன்னுடைய மகனை அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்ற கட்டளை வருகிறது.
வயது முதிர்ந்த பருவத்தில் கிடைத்த பொக்கிஷம், நீண்ட காலம் தன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள். தன்னுடைய மகனை அறுத்து பலியிட தயாராகிறார்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.
நம்முடைய பிள்ளைகள் மார்க்கச் சூழல் கல்வியோடு உலக கல்வி படிக்க அரபு மதர்ஸாவோடு ஒன்றிணைந்த பள்ளிக் கூடத்திலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த தியாகத்தை செய்ய நாம் பல முறை யோசிக்கிறோம், மார்க்க கல்வியை கற்கப்போகும் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்கிற ஒருவித குழப்பத்தோடு தள்ளாடுகிறோம். ஆனால், யூத கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் திட்டமான இந்த அற்ப உலக கல்விக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி படிக்க வைக்க உடனே முடிவு செய்து தன் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பி அனுப்பி வைக்கிறோமே, மார்க்க கல்வியோடு உலக கல்வி பயிலப்போகும் நம் பிள்ளையின் எதிர்காலத்தை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் என்ற நம்பிக்கை ஏன் நம்மிடன் உறுதியாக வர மறுக்கிறது?
எத்தனை ஆடுகள், மாடுகள் உணவுக்காவும், உலுஹியாவுக்காகவும் அறுத்திருப்போம்? எத்தனை விதமான பொட்டலங்களாக அந்த கறியினை பங்கு வைத்திருப்போம்? அவன் இத்தனை ஆடு / மாடு அறுத்திருக்கிறான், நாம் அதைவிட இரண்டு கூடுதலாக அறுக்க வேண்டும், அவன் மாடு கொடுக்கிறான், நான் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களுக்காக போட்டி போடுகிறோமே, என்றைக்காவது அந்த தியாகங்கள் செய்த தாய் தந்தையரான இபுறாஹீம் (அலை) ஹாஜரா (அலை) அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் ஈமானிய உறுதியையும் அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஆடு / மாடு / ஒட்டகம் அறுத்து பங்கிட்டு வைத்திருக்கிறோமா? அதன் மூலம் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்போமா? பங்கு வைத்த கறியில் பற்றாக்குறை என்பதற்காக கடையில் கறி வாங்கி உலுஹிய்யா என்று அல்லாஹ்வை ஏமாற்றி மனிதர்களை திருப்திபடுத்தும் நிலையில் அல்லவா நம்முடைய ஈமான் பலவீனமாக உள்ளது என்பதை என்றைக்காவது சிந்தித்திருப்போமா?
அல்லாஹ்வின் கட்டளையை நம்பி ஈமானிய உறுதிமிக்க அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் போன்றவர்கள் வளர்ப்பில் தான் ஈமானில் உறுதிமிக்க பொறுமைசாலியான இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்தெடுக்க முடிந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கும் ஈமானில் உறுதிமிக்க தாய் தந்தையின் துஆ மற்றும் அவர்களின் வளர்ப்பால் வளர்ந்த பிள்ளைகள் பொறுமைசாலியாக இருந்து இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ்வின் உதவியால் வாழ முடியும், இதுவே நாம் இந்த அத்தியாயத்தில் பெறும் படிப்பினை.
தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் (அலை), அன்னை ஹாஜரா (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம். நம் சந்ததியரை ஈமானிய உறுதியுடன் இறுதிநாள் வரை நிலைத்திருக்க பக்குவப்படுத்துவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்
குறிப்பு : கட்டுரையில் மேலும் பார்க்க என்று அடைப்புக்குறிக்குள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் எண்கள் மட்டும் இடப்பட்டிருக்கும் நோக்கம் நீங்களும் தேடியெடுத்து அல்குர்ஆனையும் ஹதீஸ் களையும் புரட்டிப் பார்த்து அறிய வேண்டும் என்பதற்காகவே.
11 Responses So Far:
தொடர்களில் இத் தொகுப்பு அவர்களின் மிக உயர்ந்த தியாகத்தை எடுத்துரைக்கிறது.
நாமும் அவர்கள் வாழ்வை படிப்பினையாகப் பெற்று முழு ஈமானுடன் இறுதி வரை வாழ்வோமாக!
குறிப்பு பகுதி நல்ல தூண்டல்!
படிக்கப் படிக்க பண்படும் உள்ளம் ! தியாகத்தின் உச்சம் அதனை அல்லாஹ் அங்கீகரித்தான் !
படிப்பினைகள் தானே என்று புறந்தள்ளாமல், சொல்லப்பட்டிருக்கும் வரலாற்று உண்மைகளை மனதில் நிறுத்தி நமது ஈமானை சுயபரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வாசிக்கும்போது சிலிர்க்கும் உடலும் உள்ளமும், இவ்வாறன தியாங்களை அடிக்கடி நினைவு கூர்ந்தவர்களாகவும் அதற்கென நாம் இஸ்லாத்திற்காக எந்நிலையிலும் தயார்படுத்திக் கொண்டு இறைவனிடம் மட்டுமே கையேந்தக் கூடிவர்களாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானக !
கேள்விகள்! கேள்விகள்! செவிட்டில் அறைந்தாற்போல கேள்விகள்.
சுய பரிசோதனை செய்யத்தூண்டும் கேள்விகள்.
பலரிடம் இவற்றிற்கு விடை இல்லை. உணர்வு பூர்வமான ஆக்கம். உணமைகளின் வெளிப்பாடு.
அனைவரும் உணர்ந்து திருந்தவேண்டிய வரலாற்று செய்திகள்.
எம் தம்பி M. தாஜுதீன் என மார் தட்ட வைக்கும் ஆக்கம்.
அவர்கள் வாழ்க்கையைப் போன்றொதொரு திடமான ஈமானிய வாழ்க்கை நம்மால் வாழ முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையெனினும், அவர்கள் வாழ்விலிருந்து நமக்குப் படிப்பினை உள்ளது என்பதை அருமையாக எடுத்துச் சொல்லிவரும் தம்பி தாஜுதீனின் உழைப்பிற்கு அல்லாஹ் நற்கூலி தர வேண்டுமாய் இறைஞ்சுகிறேன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, தாஜுதீன்.
உண்மை தியாகத்தின் உயிரோட்டமுள்ள பதிவு.
அனைவரும் படித்துணர்ந்து ஒவ்வரு குர்பானியிலும் நினைவுகூர்ந்து
அந்த தியாகச்செம்மல்களின் தியாகத்தை நினைவு படுத்த வேண்டும்.
உண்மை தியாகத்தின் ஒப்பற்ற தொடர்.
ஜஜாக்கல்லாஹு ஹைர்.
அபு ஆசிப்.
//தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.//
A very strong fundamentals in Islamic history which reiterates to testify our Iman.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா.
இ அ காக்கா தங்களின் தனி மின்னஞ்சலில் இந்த பதிவு தொடர்பாக குறிப்பிட்ட கருத்து என்னையும் கண்கலங்க வைத்தது இந்த பதிவின் தாக்கம் அறிந்து.
சபீர் காக்கா தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் உதவியும் இந்த தொடருக்கு மேலும் வலுபெற செய்கிறது. ஜஸக்கல்லாஹ் ஹைரா..
நிறைய படிப்பினை பெற வேண்டிய பதிவு இது. ஈமானின் உறுதியை நாம் சுயபரிசோதனை அடிக்கடி செய்துக்கொள்ள தூண்டும் நிகழ்வுகள் எத்தனையோ கொட்டிக்கிடக்கின்றன. சகோ தாஜுதீனின் இந்த ஆய்வுகளின் தொகுப்பு இன்றைய வாழ்க்கையோடு சவால் விடுகிறது....
அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக. Thanks bro tajudeen May Allah reward you for this great efforts
//அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா. .தியாகத்தை//
தம்பி தாஜுதீன்! இன்றைய தருணத்தில் இது ஒரு சரியான கேள்வியே!
இப்பொழுதெல்லாம் பெரும்பாலோர்' ''ஹாஜி' அல்லது 'ஹாஜியார்' பட்டத்தை தன் பெயருக்கு முன்னோ அல்லது பின்னோ [.பெயரின் ஓசை நயத்துக்கு Rhythm தக்கவாறு] போட்டுக் கொள்ளவே' ஹஜ்' செய்கிறார்கள்' என்பதை உறுதிபடுத்துகிறது. நம் தமிழ் முஸ்லிம்களிடம் மட்டுமே இந்த பழக்கம் நிலவுகிறது போல் தெரிகிறது.
மலேசியா, இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தமிழ்நாட்டை விட அதிகமானோர் - அதுவும் ஒருவரே பல முறை 'ஹஜ்' செய்தும் கூட தன் பெயருடன்' ஹாஜி-'ஹாஜி'-ஹாஜி-'ஹாஜி'-'ஹாஜி'- என்றோ அல்லது' ஹாஜியார்'-ஹாஜியார்-'ஹாஜியார்-'ஹாஜியார்'-ஹாஜியார் 'என்றோ போட்டதில்லை. ஆனால் இதில் பாராட்ட வேண்டிய விஷயம் என்ன வென்றால் சட்டையில் தன் பெயருடன் 'ஹாஜியார் 'என்று tag மாட்டிக் கொள்ளவில்லை என்பதே!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
///அவன் மாடு கொடுக்கிறான்! நான் ஒட்டகம் கொடுப்பேன்!/ /
சபாஷ்! சரியான போட்டி! தம்பி தாஜுதீன் கொஞ்சம் விட்டுதான் பாருங்களேன்! என்னனென்ன நடக்கப் போகுதுண்டு வேடிக்கை பார்ப்போம்!
''நானென்ன உனக்கு இளைச்சவனா?'' நான் யானை கொடுப்பேன்!'' என்று ஒருத்தன் சவால் விட்டு முன்வருவான்.''நீயானை கொடுத்தால் நான் காண்டா மிருகம் கொடுப்பேன்!'' என்று இன்னொரு தன் கிளம்புவான்.
''அப்புடியா சங்கதி!? நான் முதலை கொடுப்பேன்டா'' என்று எங்கிருந்தோ ஒரு உறுமல் வரும். .'என்னங்கடா?! நான் வாயை பொத்திகிட்டு சும்மா இருக்கேன்னு நெனச்சுகிட்டு அவனவனுக்கு பேசிகிட்டே போரிய! நான் என்ன கொடுப்பேன் தெரியுமா?' ஸ்பையில் பெர்க்'[Spiel Bergகோடா] சூராசிக்பார்க்கை கொண்ணாந்து டைனசோர் கொடுப்பேண்டா! உங்களுக்கு' முடியுமாடா' என்பான். 'சூராசிக் பார்க்கு'ன்னா என்னாண்டு தெரியாமே எல்லாரும் முழிப்பான்.அப்புடியெல்லாம் போட்டி இருந்தாதான் நாமளுக்கும் ஆளுக்கு ஒரு துண்டு. கிடைக்கும் ரசிக்க ! :)
Sமுஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
Post a Comment