நோன்புக்கு பிறகு சிலருக்கு செறிமானக்கோளாறுகள் தலைதூக்கக் கூடும்.இப்படி செறிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏற்கனவே [நோன்பு இல்லாமலே] செறிமானக் கோளாறு இருந்திருக்கக் கூடும். நோன்பு முழுக்க ஹதீஸ், இபாதத் என இருந்து விட்டு நபி ரசூல் [ஸல்] சொன்ன ஒரு சின்ன விசயத்தை கவனம் செலுத்தாமல் அதை தூக்கி பரன் மீது போட்டு விட்டு 30 நாளும் விட்டுப்போன சாப்பாட்டை எல்லாம் கிரடி கார்டு கம்பெனி மாதிரி கடைசி பைசா வரை வசூலிப்பது மாதிரி சாப்பாட்டை எல்லாவற்றையும் ஒரெ நாளில் அல்லது 2, 3 நாளில் சாப்பிட நினைக்கும் "ஜின்" தனம் தான் இதற்கெல்லாம் காரணம் சரி நபி [ஸல்] என்ன சொன்னார்கள் [உணவு விசயத்தில்] என்பது தெரியும் stomach பகுதியில் 1 பகுதி உணவு, 1 பகுதி தண்ணீர், 1 பகுதி காலியாக இருக்க வேண்டும் [மொத்தமெ 3 பிரிவுதான்] காரணம் உணவு உள்ளே போனவுடன் இயற்கையாக அமிலம் [HCL/ Muriatic acid] உணவுடன் கலக்க ஆரம்பித்துவிடும். இந்த நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் வரக்காரணம் இந்த படத்தை பார்த்தால் தெரியும் sphincter பகுதி இயற்கையாக மூட விடாமல் நாம் செய்யும் தவறுதான்.
நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஆட்டிறைச்சித் துண்டை உள்ளே அனுப்பிவிட்டால் அதை தள்ளுவதற்கு உங்கள் குடல் சிரமப்படலாம், உடனே அது வாயுவை அனுப்பி உணவை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டு செல்லும். அதற்கு குடலில் வெற்றிடம் தேவை. சமயத்தில் ஆட்டிறைச்சிதானே என்று நீங்கள் சாப்பிட்டு விட்டாலும் அந்த ஆட்டின் லைஃப் ஸ்டைல் உங்களுக்கு தெரியாது. அது ஏற்கனவெ “Gym” க்கு போய் ”மிஸ்டர் ஆடு 2011” என பட்டம் வாங்கியிருந்து அதன் இறைச்சி பூப்போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு பெயர் தான் 'அறியாமை' சரி இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் 200 வருசம் வாழ முடியுமா? என 'க்ரோர்பதி' கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம். பதில், ”முடியாது”தான் இருந்தாலும் வாழும் காலங்களில் நிம்மதியாக வாழ இவை உதவும்.
சிலர் வாழும் நாடுகளுக்கு தகுந்த மாதிரி தனது உணவு பழக்கத்தை வைத்துக்கொள்வதில்லை. Carbohydrate அதிகம் சாப்பிட்டாலும் அது செரிப்பதற்கு பிரச்சினை இல்லாத ஊர்கள் சவூதி, துபாய் போன்ற வெயில் கடுமையான ஊர்கள். அந்த ஊர்களில் வெழுத்துகட்டும் பிரியாணியை குளிர் அதிகம் உள்ள நாடுகளிலும் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னமாதிரி சாப்பிட்டால் see in hospital very soon. அதற்காக சவுதி, துபாய் போன்ற வெயில் நாடுகளுக்கு இப்படி வெளுத்துக்கட்ட N.O.C கிடைத்து விட்டது என நினைத்து விட வேண்டாம்.
சில சமயங்களில் நான் ஊர் போயிருக்கும் போது சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். இது வரை யாரும் ஒரு nutritionistஐ பார்த்ததாக இதுவரை என்னிடம் யாரும் சொன்னதில்லை. இதற்க்கு முன் ஒருமுறை சாப்பிடும் பழக்கங்கள் விசயமாக ஒருமுறை எழுதியிருக்கிறேன். http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_17.html [பசிக்காக சாப்பாடு]
ஜென் & தடுமல் [ ZEN & COLD ]
ஒரு ஜென் ஞாநி இடம் படித்த ஒரு மாணவன் இரவு நேரத்தில் அவருக்கு தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து நடு இரவில் ஊர் சுற்றப் போய்விட்டான்,
சுவரின் பக்கத்தில் ஒரு சின்ன கல் இருந்தது [அவன் சுவர் ஏற உதவிய கல்], இதைப்பார்த்த ஜென் ஞாநி அந்த கல்லை அகற்றி விட்டு அங்கேயே சுவற்றுக்கு கீழே உட்கார்ந்து இருந்தார், இரவில் ஊர் சுற்றி வந்த மாணவன் கல் என நினைத்து ஞாநியின் தலையில் காலை வைத்து இறங்கியவுடன் அவனுக்கு பயம், ஞானி தண்டித்து விடுவாரோ என “ ஏன் இரவில் ஊர் சுற்றுகிறாய் ? தடுமல் பிடித்துக்கொள்ளும்” – என்றார் அந்த ஞாநி, ஞாநி காத்திருந்ததின் purpose அதுதான், பெரும்பாலும் வாழ்க்கையின் purpose யிலிருந்து நாம் வேறுபட்டு செயலாற்றுகிறோம்.
- ZAKIR HUSSAIN
33 Responses So Far:
பெருநாள் சாப்பாட்டினை செரிக்க வைக்கும் மற்றொமொரு நகை(களுடன்)சுவை(யான) அசத்தல் !
//அது ஏற்கனவெ “Gym” க்கு போய் ”மிஸ்டர் ஆடு 2011” என பட்டம் வாங்கியிருந்து அதன் இறைச்சி பூப்போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு பெயர் தான் 'அறியாமை' சரி இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் 200 வருசம் வாழ முடியுமா? என 'க்ரோர்பதி' கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம்.//
ஆமாம் காக்கா, அதயேன் கேக்கிறீய "நாங்களும் தான் மிஸ்டர் ஆடு 2011" மாதிரி இருக்கேன்னு பாராட்டிகிட்டே ஒரு பெறட்டு பெறட்டியாச்சு ககக்கா ! அதென்னடான்னா "அறியாமை"ன்னு சொல்லிட்ட்டியலே !
//சில சமயங்களில் நான் ஊர் போயிருக்கும் போது சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். //
ஒன்னுமில்லாத விசயத்திற்குதானே டாக்டரிடம் செல்லும் வழக்கமிருக்கிறது தேவைக்கு, அவசியமான மாருத்துவ சோதனைக்கு செல்வதனால் "பயமுறுத்தில உடுவானுவோ"ன்னு அச்சம் வேறு இருப்பதும் அறியாமையே !
நல்லாச் சொன்னே. ஆனா, ஒரு கட்டு கட்டி முடிச்சப்பிறகு சொல்றிய இது என்ன நியாயம்?
முதல்லேயே சொன்னாலாவாது ட்ரைப் பண்ணியிருப்போம். அதிருக்கட்டும், "ஏன் சரியா சாப்பிடமாட்டேங்கிறிய. நல்லா சமைக்கலயானு கேப்பாங்களே நீதான் சொன்னேன்னு" பத்தவைக்கவா?
இந்த ஞானி மேட்டர்ல எனக்கு ஒரு டவுட். அதை, அதாவது அவர் சொல்ல நினைச்சத காலைலா சொன்னா என்னனு கேட்டா சண்டைக்கு வருவியலோ.
அவர் சொன்னா ஞாநி, நாம சொன்னா பேமானி. ஹ்ம்ம்ம்ம்...
சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை
ஒரு பங்கு பெட்ரோலுடன் மூன்று பங்கு காற்றை கலந்துதான் இரும்பால் ஆன கார் எஞ்சினுக்குள் அனுப்புகின்றார்கள் ,சதைபிண்டத்தால் ஆன நம்குடளுக்குள் கண்டம் கண்டமாய் கரியையும் கோழியையும் நிலக்கரி எஞ்சினுக்குள் நிலக்கரி அல்லி போடுவதுபோல் போட்டால் குடல் என்ன ஜிப் ஃபோல்டரா சுருக்கி வைத்துகொள்ள!
//இந்த ஞானி மேட்டர்ல எனக்கு ஒரு டவுட். அதை, அதாவது அவர் சொல்ல நினைச்சத காலைலா சொன்னா என்னனு கேட்டா சண்டைக்கு வருவியலோ.//
காலம் கடந்து சொல்லும் அறிவுரையும் ஜஸ்ட் "செய்தி'யாகிவிடும் என அந்த ஞானி நினைத்து இருக்களாம்.
/;/முதல்லேயே சொன்னாலாவாது ட்ரைப் பண்ணியிருப்போம். அதிருக்கட்டும், "ஏன் சரியா சாப்பிடமாட்டேங்கிறிய. நல்லா சமைக்கலயானு கேப்பாங்களே நீதான் சொன்னேன்னு" பத்தவைக்கவா?//
நிறைய சாப்பிடுபவர்கள் , "பழக்கப்பட்டுவிட்டது" என சொன்னால் என்ன செய்வது....என்னைப்பொருத்த வரை தவறில்லை...கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு பல முறை சாப்பிடலாம். ஒரே சமயத்தில் "இன்னும் சிறிது நேரத்தில் உலகம் அழிந்து விடும்..அதற்க்குள் சாப்பிட்டுவிடுகிறேன்' ற மாதிரி சாப்பிடுவதுதான் தப்பு.
எதுவும் தேவைக்கு அதிகமானால் fat ஆக உருவெடுத்து வயிற்றை பெரிதாக்கி விடும். this is the first symptom of your system is not co-operating to convert your food intake in to energy.
வயிற்றை பெரிதாக்கி
/அதிரை நிருபரில் தனி நபர் தாக்குதல் கிடையாது" னு நினைச்சேன் :)
//வயிற்றை பெரிதாக்கி //
//தனி நபர் தாக்குதல் கிடையாது" னு நினைச்சேன் :) //
இந்த லிஸ்டில் எல்லோரும்ல அடங்கியிருக்கோம், அப்போ எப்படி தனி நபர் தாக்குதல் என்றாகும் ! :)
ஒருவேளை மாடிபடி ஏற மாய்ச்சல்பட்டு, சடப்புடமா வந்து, தெஹரடியோட இருப்பவங்கன்னு சொன்னா த.ந.தாக்குதல்னு சொல்லலாம்....
அது சரி, எங்கே DREAM GIRL = DRUM GIRL ஆனதெல்லாம் வரும்னு பார்த்தா வயித்துல குடைச்சல் கொடுக்கிற விஷயமாவுல வந்திருக்கு !?
நல்ல அவசியமுள்ள மருத்துவப் பதிவு டாக்டரே!
டாக்டர் இல்லெ என்கிறீர்கள் ஆனால் நீங்கள் சொன்னது தான் இது.// சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். இது வரை யாரும் ஒரு நியூட்ரனிஸ்ட்டை பார்த்ததாக இதுவரை என்னிடம் யாரும் சொன்னதில்லை.
சபீர் காக்கா சொன்னதில்...
//நல்லாச் சொன்னியொ. ஆனா, ஒரு கட்டு கட்டி முடிச்சப்பிறகு இது என்ன நியாயம். முதல்லேயே சொன்னாலாவாது ட்ரைப் பண்ணியிருப்போம். //
ஆனால் உங்களின் இப்பதிவுக்கு பின் தான் எங்களுக்கு பெருநாள்.(ஊரைப்போல)அதனால் உங்களால் (அறிவுறுத்தலின் படி) சரியாக சாப்பிடலை.
அந்த ட்ரீம் கேர்ள் ட்ரம் கேர்ள் மேட்டரை ஒரு இடைவேளைக்குப் பிறகு ஒரு பிட்டாகவாவது சேர்த்துவிட்டிருக்கலாம்.
அந்த ஞானி மேட்டர்ல இன்னொரு டவுட்டு... வேணாம் நான் கேட்கல... கேட்டா அதுக்கும் இவன் ஏதாவது சீரியஸா பதில் சொல்லப்போறான்.
வயிற்றை பெரிதாக்கி
/அதிரை நிருபரில் தனி நபர் தாக்குதல் கிடையாது" னு நினைச்சேன் :)
தனி நபர் தாக்குதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயிறு பெரிதாவது 'கர்ம வினை"
REFERENCE: உலகம் உருண்டை என கண்டுபித்த கலிலியோ ரோமானிய கிருஸ்தவர்களால் துன்புறுத்தப்பட்டார், உலகம் உருண்டை இல்லை என்று சொல் என்று கொடுமைப்படுத்தப்பட்டபோது கலிலியோ சொன்னது " உங்கள் துன்புறுத்தலால் நான் அப்படி சொல்கிறேன்..இருந்தாலும் உருண்டையாக உள்ள உலகம் தட்டையாகாது'
//அந்த ஞானி மேட்டர்ல இன்னொரு டவுட்டு//
அவரும் "கதவைத்திற காற்றுவரட்டும்"னு ங்ற மாதிரி ஏதாவது எழுதியிருக்காரானா?
//உலகம் உருண்டை என கண்டுபித்த கலிலியோ ரோமானிய கிருஸ்தவர்களால் துன்புறுத்தப்பட்டார்,//
அப்படின்னா ? எல்லா வயிரும் "உருண்டைதான் ஆனால் தட்டையாகத் தென்படும் வயிராக இல்லாத வரை"
எல்லா விஞ்"ஞானி"களும் இப்படி இன்னல் களுக்கு ஆளானதுபோல் சொல்கிறார்களே... ஒருவேலை நாமெல்லாம் அதை தோண்டியெடுத்து மெய்யா / பொய்யா ன்னு பார்க்க மாட்டோம்னு தைரியமா ?
ரியலி ரசித்தேன் தன்னன "ஞானி"யாக உருவகப் படுத்தி "நாங்க எழுதுற (கவிக் காக்காவீன் டவுட்டையும் சேர்த்துதான்) கருத்துக்களால் துன்புற்றாலும் சொல்ல வந்ததை சொல்லிகிட்டே இருப்பதே அசத்தல் தான் காக்கா ~!?
//இருந்தாலும் உருண்டையாக உள்ள உலகம் தட்டையாகாது'//
இதுக்குமேலயும் ஒரு மனுஷனோட மனச துன்புறுத்தினே பெரும்பாவம் :(
இல்ல, ஜல்ப்பு பிடிக்காத மூக்கு உலகத்தில எங்கேங்கானும் இருக்கு? இதச் சொல்ல ஞானமெதுக்கு?
விதிமுறை மீறியது முதல் பிழை, சுவரேறிக் குதித்தது இரண்டாம்பிழை, தவ்று என்று தெரிந்தே இரவில் ஊர்சுற்றியது மூன்றாவது தப்பு.
பிழை என்று தெரிந்தே செய்தத்தால் இவற்றை தண்டிக்காமல் ஜலதோஷம் பிடிக்கும் என்றால்...
தாமதமாக சொல்லப்படும் ... ஐ மீன் சொல்லப்படும் அரிவுறையே செய்தியாகும்போது சொல்லவே படாத அரிவுறையை என்ன சொல்வது?
"பசியை உணர பட்டினி போதும்
ருசியை சுவைக்கச் சட்டினி சேறும்" என்று நானும்தான் போட்டுத்தாகுவேன், என் சிஷ்யனாய் வந்துடுவியா? (காலமுக்கி, விரல் சொடக்கெடுத்து, கமண்டலத்தோடு பக்கத்தில நிப்பியா?)
இன்னொரு தத்துவம் கேளு:
கடிக்கும்வரை எதுவும் சொறி நாயல்ல; பிடிக்கும்வரை யாரும் போலிச்சாமியல்ல
//கடிக்கும்வரை எதுவும் சொறி நாயல்ல; பிடிக்கும்வரை யாரும் போலிச்சாமியல்ல //
அண்ணா..பன்ச் டயலாக் சூப்பர்ணா...
ரெக்கார்ட் டான்ஸ் பாக்கிறாய்ங்களே அவிங்க, பார்த்து கைதட்டி பிஹிலடிச்சி, உதார் காட்டி கலாய்க்கிறாங்களே அதோடு பினிஷ். வூட்டுக்கு இட்டாந்து போயி குடும்பம் நடத்தி குஜாலாறாங்களா இன்னா?
இவிங்க தத்துவங்களும் அப்படித்தான். பட்ச்சமா புக்க மூட்னமா அத்தோடு வுட்டமானு போய்க்கினேகோனும். அல்லாங்காட்டி மெய்யாலுமே தலைக்கு பிராந்து புட்க்கிம் வாத்யாரே.
ஜாயிரு,
என்னாச்சு எனக்கு?
//ஒரு பங்கு பெட்ரோலுடன் மூன்று பங்கு காற்றை கலந்துதான் இரும்பால் ஆன கார் எஞ்சினுக்குள் அனுப்புகின்றார்கள் ,சதைபிண்டத்தால் ஆன நம்குடளுக்குள் கண்டம் கண்டமாய் கரியையும் கோழியையும் நிலக்கரி எஞ்சினுக்குள் நிலக்கரி அல்லி போடுவதுபோல் போட்டால் குடல் என்ன ஜிப் ஃபோல்டரா சுருக்கி வைத்துகொள்ள!//
i like this comment.
பரிசாக அறந்தாங்கியிலிருந்து அரைக்கிலோ காகாக்கறி அனுப்பிடுங்கப்பா.
கடிக்கும்வரை எதுவும் சொறி நாயல்ல;(படம்) பிடிக்கும்வரை யாரும் போலிச்சாமியல்ல.
-----------------------------------------
ஜாயிரு / அபு இபுறாகீம்/ கிரவுன்,
இந்த வாரத் திண்ணையில் இது:
http://puthu.thinnai.com/?p=3697
sabeer.abushahruk சொன்னது…
இல்ல, ஜல்ப்பு பிடிக்காத மூக்கு உலகத்தில எங்கேங்கானும் இருக்கு? இதச் சொல்ல ஞானமெதுக்கு?
விதிமுறை மீறியது முதல் பிழை, சுவரேறிக் குதித்தது இரண்டாம்பிழை, தவ்று என்று தெரிந்தே இரவில் ஊர்சுற்றியது மூன்றாவது தப்பு.
பிழை என்று தெரிந்தே செய்தத்தால் இவற்றை தண்டிக்காமல் ஜலதோஷம் பிடிக்கும் என்றால்...
தாமதமாக சொல்லப்படும் ... ஐ மீன் சொல்லப்படும் அரிவுறையே செய்தியாகும்போது சொல்லவே படாத அரிவுறையை என்ன சொல்வது?
"பசியை உணர பட்டினி போதும்
ருசியை சுவைக்கச் சட்டினி சேறும்" என்று நானும்தான் போட்டுத்தாகுவேன், என் சிஷ்யனாய் வந்துடுவியா? (காலமுக்கி, விரல் சொடக்கெடுத்து, கமண்டலத்தோடு பக்கத்தில நிப்பியா?)
இன்னொரு தத்துவம் கேளு:
கடிக்கும்வரை எதுவும் சொறி நாயல்ல; பிடிக்கும்வரை யாரும் போலிச்சாமியல்ல
----------------------------------------------------------
அஸ்ஸலாமுன் அலைக்கும்.
தவறை தவறாமல் செய்தது மாபெரும்தவரு. இதில் அந்த தவறை கண்டுக்காத ஞானி???? பெரும்தவரு செய்தவராகிறார். மேலும் என்ன தோசமோ? தலைதோசம் பிடிக்கும் என்று அக்கறை காட்டுவது கரிசனம் ஆனால் சிஸ்யனை கழுச்சடை ஆக்கும் அதீத செல்லம். மொத்தத்தில் ஞானியே தலைமேல் ஏறி போகும் ஏணியா இருந்திருக்கார் ஆனால் சிஸ்யனை பார்த்து ஏன்டா நீயா இப்படி என்று கண்டிக்காதது ஞானிக்குத்தான் இன்னொரு குருத்தேவையென்பது விளங்குகிறது.
(மேலே தவறு என்பதையே தவறா எழுதி இருந்து கண்டு கொள்ளாதவன் அப்ப நான் ஞானியா?)
//கடிக்கும்வரை எதுவும் சொறி நாயல்ல;(படம்) பிடிக்கும்வரை யாரும் போலிச்சாமியல்ல.//
---------------------------------------
"படம்" பிடிக்கும் வரை யாரும் பாடம் படிப்பதுமில்லை.
(கிரவுனு, முழிச்சிக்கிட்டா இருக்கிய? இங்கு எல்லோரும் தூங்குறாங்க. நான் மட்டும் முழிச்சிக்கிட்டு சும்மா எவ்வளவு நேரம்தான் இருப்பேன். அதான் ஜென்னப்போட்டு தாளிச்சிக்கிட்டு இருக்கேன்
மேலேப் பார்த்தபோது
நிலா
உதிர்ந்துகொண்டிருக்கும்
பெள்ர்னமி!
கீழே பார்த்தபோது
நிலா
அதிர்ந்துகொண்டிருக்கும்
ஊருணி!
உற்று நோக்கினால் மட்டுமே
மேகத்தை நிலைநிறுத்தி
நிலா
நகர்ந்துகொண்டிருக்கும்…
தோற்ற மயக்கம்!
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த தோற்ற மயக்கம் செயம் (ஜயம்) தரும் மயக்கம் ,பயம் நீக்கும் மயக்கம். மொத்தில் தோற்றமயக்கம் எல்லாருக்கும் அக்காலத்தில் இருக்கும். இன்றும் அது தலைதூக்கி பார்க்கும் . வெற்றி நமதே! தோற்றபிழையல்ல! சரியான கிறக்கம் இந்த மயக்கம்
//மேலே தவறு என்பதையே தவறா எழுதி இருந்து கண்டு கொள்ளாதவன் அப்ப நான் ஞானியா//
ஆமா. கிரவுஞானி(ஏதோ பஞ்சாபி ஸ்வீட் பேரு மாதிரில இருக்கு)
இவன எங்கே காணோம்? சுவரேறிக்குதிச்சிட்டானா? ஒரு கை (அபு இபு) வேற குறையுது
ஆமா. கிரவுஞானி(ஏதோ பஞ்சாபி ஸ்வீட் பேரு மாதிரில இருக்கு)
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஸ்குரூ ஆனீ எனபது போலவும் உள்ள
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாகிர் காக்கா அவர்களின் நல்ல ஒரு மருத்துவ ஆலோசனை என்னை போன்ற இது மாதிரியான பிரச்சினை உள்ளவர்களுக்கு.இந்த ஆலோசனைபெருநாள்அன்பளிப்பாக.இருக்குமென்று நினைக்கிறேன் .ஜஜாகல்லாஹ் ஹைரா.
<<<<<<<<< salamat hari raya >>>>>>> நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் .<<<<<<<
(கிரவுனு, முழிச்சிக்கிட்டா இருக்கிய? இங்கு எல்லோரும் தூங்குறாங்க. நான் மட்டும் முழிச்சிக்கிட்டு சும்மா எவ்வளவு நேரம்தான் இருப்பேன். அதான் ஜென்னப்போட்டு தாளிச்சிக்கிட்டு இருக்கேன்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜின்னாட்டம் முழிச்சிக்கிட்டு ஜென்ன போட்டு இப்படி தாக்குனா இனி இந்த ஜென்மத்தில்(சாமத்தில்) யாரும் ஜென் கதை சொல்லமாட்டாங்க, நிஜெமா தான் சொல்கிறேன்.
இவன எங்கே காணோம்? சுவரேறிக்குதிச்சிட்டானா? ஒரு கை (அபு இபு) வேற குறையுது.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சபீர் காக்கா ஜாஹிர்காக்காவின் சின்னமாவுக்கு சுகமில்லையாம் . அதான் வரல .இப்பத்தான் பேசினேன்.
//சின்னமாவுக்கு சுகமில்லையாம்//
அவன் எங்கும்மாவையும் சின்னம்மான்னுதான் கூப்பிடுவான். ஐ வில் கால் ஹிம் நவ், தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபோ.
//ஒரு கை (அபு இபு) வேற குறையுது.//
கவிக் காக்கா: இன்னைக்கு முதலாளிகூட கோதவில் குதிக்க கிளம்பிட்டேன் ! அவர் அடிக்கிற பல்டிகெல்லாம் எக்ஸ்ப்லெனேஷன் கொடுத்துட்டு வர கொஞ்சம் நேரம்(தான்) ஆகும் !
ஜாஹிர் காக்கா,
சரியான நேரத்தில் எழுதட்ட பதிவு,
Thanks
Post a Comment