அல்லாஹ்வின் திருப் பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மனிதர்களே! ஓர் ஆன்மாவிலிருந்து உங்களை படைத்து, அவர் மூலம் அவரது ஜோடியையும் படைத்து, அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பெருகச் செய்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 4:1).
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண்,பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)
வயதுக்கு வந்த ஒவ்வொரு ஆண், பெண், மீதும் திருமணம் செய்து கொள்வது (நபிவழி) சுன்னத்தாக உள்ளது. யார் என் வழியைப் பின்பற்ற வில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதிஸின் கருத்து).
வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்வதை இந்த உம்மத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எப்படிக் கற்றுத் தந்தார்கள் என்பதை நாம் அதிகமாக சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நபிவழி திருமண வாழ்த்து:-
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக...
(என்பது நபிவழி துஆ) அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
திருமண ஒப்பந்தத்தில் புதிதாக இணைய இருக்கும் அதிரை ரஃபியா என்று அழைக்கப்படும் ரஃபீ அஹமது அவர்களின் மூத்த மகனார் மீராஷாஹ் அவர்களின் திருமண அழைப்பினை எமது அதிரைநிருபர் குழுவுக்கும் அதன் பங்களிப்பாளர்களுக்கும் அனுப்பித் தந்தார்கள் - ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
தொழில் நுட்ப வளர்ச்சியில் வியக்கும் விதத்தில் முன்னேறியிருக்கும் நம் சமுதாய இளைஞர்களின் ஆர்வமும் அவர்களின் கலைத் திறனும், என்றுமே வித்தியாசத்தை விரும்பும் போக்கும் பாராட்டப்பட வேண்டியதே ! அதிலும் குறிப்பாக தன்னுடைய திருமண வாழ்வு எப்படி இருக்க வேண்டும் அதன் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படியெல்லாம் அமைந்திட வேண்டும் என்று திட்டமிடுவதில் இன்றைய இளைஞர்கள் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றமே கண்டிருக்கின்றனர்.
அவ்வகையில் எங்களது கவனத்தில்பட்டது, சகோதரர் மீராஷாஹ் அவர்களின் திருமண அழைப்பிதழும் அதனை இணைய வழி தொடர்புடன் ஒருங்கிணைத்து அழைப்பிதழை ஏற்றுக் கொள்ளவும், அல்லது கலந்து கொள்ள இயலாவிடின் நண்பர்களின், உறவினர்களின் வாழ்த்துக்களை எவ்வகையிலாவது பெற்றிடுவது என்பதில் புது முயற்சியிடன் செய்திருக்கிறார்.
வரைகலையிலும், ஊடகத் துறையிலும் பட்டய பட்டம் பெற்றவர் தான் கற்ற கல்வியின் நலனைக் கொண்டு, வரைமுறைக்குட்பட்டு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். திருமண அழைப்பிதழ்ற்கு என்று இலட்சினை (LOGO)வையும் பதிந்திருக்கிறார்.
இதில் புதுமை என்னயிருக்கு என்ற கேள்விகள் எழுந்திருந்தாலும் தவறில்லை, ஆனால் தான் சார்ந்திருக்கும் துறையோடு அழைப்பிதழை மெருகேற்றி அங்கே தனக்கு அமையவிருக்கும் துணைக்கும் சேர்த்து துஆச் செய்ய வேண்டி அவர் வைத்திருக்கும் முயற்சியும், திருமணம் நடந்திடும் மணமகன் இல்லம் சென்றடைய வழிகாட்டியும் வைத்திருக்கிறார் கூகில் வரைபட உதவியுடன் ஒரு தூக்கல் தான் !
அதிரைநிருபர் குழுவும் அதன் பங்களிப்பாளர்களும் புதிதாக இணைய இருக்கும் மணமக்களை வாழ்த்துவதிலும் அவர்களுக்காக துஆச் செய்வதிலும் என்றும் முன்னிருக்கும் இன்ஷா அல்லாஹ்...
உங்களின் பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் இதோ !
உங்கள் வாழ்த்துக்களை வலைதளத்திலும் பதியலாம்.
- அதிரைநிருபர் குழு
17 Responses So Far:
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக..
To Brother Meerasha & Sister Aysha
May Almighty Allah bless both of you every happiness in your new life together.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி M.S.M மீராஷாவின் வாழ்க்கை ஒப்பந்தம் நபி(ஸல்)அவர்கள் காட்டி தந்த முறைப்படி சீரும் சிறப்புமாக நடைப்பெற வல்லோன் இறைவனிடம் இரு கரம் ஏந்தியவனாக .
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
(அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக..)
சூப்பரான பத்திரிகையில் சிறப்பான நிக்காஹ் நடைபெறும் இடம் இல்லையே! பள்ளியிலா & இல்லத்திலா ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
-------------
அன்பை அறிவை அளவின்றி அளித்து
ஆள்பவன் அல்லாஹ் அருளை பெற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்த
உறுதி பூண்டு
ஈகை குணம் கொண்டு வாழ
உண்மையும், வன்மையாய் உணர்த்தி
ஊர் உலகம் மெச்ச வாழ
என்றும் எதிலும் சிறப்பாய் விளங்கி
ஏற்றம் எதிலும் கான
ஐயமெனும் சந்தேக நோய் வராமல் காத்து அனுசரித்து
ஒற்றுமை கயிற்றை இருவரும் பற்றி
ஓய்விலா உழைப்பை என்றும் வழங்கி தேய்விலா இன்பம் கான
ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் அமைய
இஸ்லாம் வழியில் என்றும் இணையாய்,துணையாய்
அஃதே அமைந்திட எல்லாம்
வல்ல அல்லாஹ்வை வேன்டி நீவீர்
சீரும் சிறப்புமாய் வாழ வாழ்துகிறேன்.
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக..
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
‘‘ பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் ’’
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
ஆஹா இது புதுசு மகனே! அல்ஹம்துலில்லாஹ்
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்ல காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக...
“Have a wonderful, blissful conjugal & prosperous married life.
Be prepared to tackle that marriage means compromises & adjustments”
Best Wishes by Malick-Dubai
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக..
'அதிரை நிரூபரில் ஒரு பேச்சுலர்' என்ற பட்டம் என்னிடமிருந்து பரிபோகின்றதே என்ற வருத்தம் லைட்ட்ட்டட்ட்டா இருந்தாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு எங்களது (கபுள்ஸ்) இம்மை மற்றும் மறுமை வாழ்கை சிறக்க வாழ்த்தியமைக்கு நன்றிகள்..
உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்போடு அழைக்கின்றேன்..
நாள் : ௦4-10 -2011
நேரம்:10 மணி
நிக்காஹ் : செக்கடி பள்ளி
வலிமா : மதியம் 1 மணியளவில்
அஸ்ஸலாமு அலைக்கும், (மரு)மகனே தயங்காதே பேச்சுலரை எண்ணி பெருமிதம்கொள் ஷரீ அத்தின் அடிப்படையில் முழுமனிதன் ஆகிறேன் என்று.
meerashah சொன்னது…
//பேச்சுலர் என்ற பட்டம் என்னிடமிருந்து பரிபோகின்றதே என்ற வருத்தம் லைட்ட்ட்டட்ட்டா//
அது பரிபோனால் தான் மாஸ்டர், மாப்ளே,மகவு எல்லாமே கிடைக்கும்
ஸ்ட்ராங்ங்ங்ஙகா.
சங்கையான மணநாளில் சங்கமிக்கும் இரு மனமே!!!
பாலர் பள்ளி முதல் கல்லூரி பட்டம் வரை
இதுவரை வாழ்க்கை என்னும் வட்டத்தில்
தனியாய் ஓடித்திரிந்து எட்டு போட்டாய்!
திருமணம் எனும் வாழ்வு உரிமம் பெற
வாழ்வில் சூறாவளி பல வந்து போனாலும்
தட்டிக்கொடுத்து தொட்டிலிட துணைவியுண்டு
உம் வாழ்க்கைப்பயணம் காற்றில் அசைந்தாடும்
பாய்மரக்கப்பலாய் மார்க்கம் போற்றி சிறக்கட்டும்
இனிமையான பயணத்தில் குறிக்கிட்ட தாமரையால்
நொடிப்பொழுது பிரிவைக்கூட நொந்து கொள்ளும்
அன்னப்பறவையின் ஆசை ஜோடிகள் போல் உம்
இல்லறம் தொடங்கட்டும் இனிமையாய் இறுதிவரை
உலகை எட்டிபார்க்க காரணமான நம் பெற்றோர்கள்
நொடிப்பொழுதும் கண்கலங்கி நின்றிடல் வேண்டாம்
குடும்பத்தின் கட்டமைப்பை ஒரு தராசு போல் செதுக்கி
நடுநிலை முள்போல் தினம்தினம் இருந்திடல் வேண்டும்
இரு மனம் சங்கமிக்கும் சமுத்திரத்தில் ஆசையாய்
நீங்களிருவரும் அன்பென்னும் ஓடத்தில் ஏறியமர்ந்து
நல்ல பண்பெனும் துடுப்பெடுத்து நேசக்கரம் கொண்டு
சன்மார்க்க நட்சத்திர ஒளி கொண்டு சீராக தொடரட்டும்
கலங்கரை விளக்காய் இருந்து எம் சமூகத்திற்கு
ஒளிதரும் விளக்காய் நீர் மிளிர்ந்திடல் வேண்டும்
சின்னசின்ன பிரச்சினைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும்
சிறுகடுகாய் எண்ணி சிரிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.
குழந்தைச்செல்வங்கள் பல ஈன்று குதூகலமாய் உம்
இல்வாழ்க்கை நினைக்க நினைக்க இனிக்க வேண்டும்
மார்க்கம் போற்றும் தூண்களாய் குடும்பத்தின் தேன்களாய்
அன்பால் அனைவரும் உம்மை மொய்த்தெடுக்க வேண்டும்.
மிடுக்கான மீராஷாவும் அவனுக்கு ஆருயிர் தோழியாய்
அன்பில் தஞ்சம் தந்து அடைக்கலம் தரும் ஆயிஷாவும்
எம்பெருமானாரின் வாழ்க்கையே தனக்கு வழிகாட்டியாய்
இருவரும் விருப்பமானவராய் என்றும் இருந்திடல் வேண்டும்.
வற்றாத அன்பு உம் வாழ்நாளில் ஒரு ஜீவ நதியாய்
தடையின்றி தொடர்ந்து ஓடட்டும் வாழ்வு செழிக்கட்டும்
வாழ்க்கைச்சக்கர சுழலில் இடையே வரும் கஷ்டங்களை
இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டவராய் நீர் இருத்தல் வேண்டும்.
வெறும் பிரச்சினைகளுக்கு கூட பிரிந்து போகும் இல்லறம் இன்று
உம் சீரான தொடர் ஓட்டத்தில் நல்லதோர் பாடம் படிக்கட்டும்
இறைவனின் வல்லமை என்றும் நினைவில் நிற்கட்டும்
எல்லாம் எம்பெருமானார் நபி வழியாகவே இருக்கட்டும்
மணமக்களை வாழ்த்தி து'ஆச்செய்து உள்ளம் குளிரும்
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் நைனாவின் வாழ்த்துப்பா அருமை. மன்னிக்கவும் சிறுதிருத்தம்.
தன் இனையை பிரியாத பறவை அண்ணமல்ல அது மகன்றில் பறவை.
ஓருயிர்ப்புள்ளின் இருதலை (கலித்தொகை: 89: 4
புது மண தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்
//நாள் : 4-10 -2011
நேரம்:10 மணி
நிக்காஹ் : செக்கடி பள்ளி
வலிமா : மதியம் 1 மணியளவில்//
ஜிதாவிலேயே தம்பி மீராஷா கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தார், "அதெல்லாம் இல்லை நான் ரொம்ப தெளிவா இருக்கேன்" என சொன்னீர்கள். பார்த்தியளா, நானெல்லாம் உங்க தப்பை கண்டு பிடித்து சொல்ல வேண்டியிருக்கு...!
நாள் 04-09-2011
//தன் இனையை பிரியாத பறவை அண்ணமல்ல அது மகன்றில் பறவை.
ஓருயிர்ப்புள்ளின் இருதலை (கலித்தொகை: 89: 4//
கிரவன்(னு) : இந்தப் புத்தகத்தையெல்லாம் புரட்ட நேரமிருக்கும் நான் ஒன்னும் கேட்டதும் நேரமில்லையா ? 25வது மணிக்கு அப்புறம் நான் கேட்டதை செய்ய வேண்டியதுதானே !
அன்னமல்ல அது அன்றில் பறவை என்று அன்று படித்ததை மனதில் கொண்டு இன்று ஞாபகப்படுத்திய சகோ. தஸ்தகீருக்கு தூதனுப்ப தற்சமயம் என்னிடம் எதுவும் கைவசம் இல்லை. எனவே ஒரு நேரத்தில் நீயும், நானும் இப்பூலோகத்தில் எங்கிருந்தாலும் பார்க்க இயலும் அந்த நிலாவையே தூதாக என் சலாத்துடன் அனுப்பி வைக்கிறேன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Post a Comment