Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!!! 7

அதிரைநிருபர் | September 24, 2011 | , ,

ADIRAIMANAM

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!
இந்த வாழ்க்கை நிரந்தரமா?
பணம், புகழ் நிரந்தரமா?
அதிகாரம், ஆணவம் நிரந்தரமா?
வாலிபம் நிரந்தரமா?
எதுவுமே நிரந்தரம் இல்லை
சிந்திக்க மறந்து விட்டோம்!

மண் என்றால் பிறந்த ஊரைப்பற்றி
பெருமையாக நினைக்கிறோம்!
மனிதன் பெருமைப்பட்டுக்கொள்ள
இந்த உலகில் நிரந்தர சொந்தம்
என்று எதுவும் கிடையாது!
வல்ல அல்லாஹ்வின் பூமியில்
அவன் நமக்கு வழங்கிய
அறிவு, ஆற்றல், பொருள் என்று
அத்தனை வசதிகளுடன் வாழ்ந்து
கொண்டு என்னால் வந்தது
என்று பெருமை பட ஒன்றுமே இல்லை!

மனிதர்களின் மனங்கள் மாறவில்லை!
ஊர் பெருமை! தெரு பெருமை!
குலப்பெருமை! பணப்பெருமை!
என்ற மறுமைக்கு
உதவாத சிந்தனைகள்
மனதை விட்டு அகன்றால்
மனிதன் மாறிவிட்டான்
மனிதனாக என்று மகிழ்வடையலாம்!

அறிவால் பெருமை இல்லை!
ஆற்றலால் பெருமை இல்லை!
இன்பத்தால் பெருமை இல்லை!
ஈகையால் பெருமை இல்லை!
உறவால் பெருமை இல்லை!
ஊரால் பெருமை இல்லை!
என்னால் என்ற பெருமை இல்லை!
ஏணியாக உயர்ந்துவிட்டேன் என்ற பெருமை இல்லை!
ஐங்காலம் தொழுதேன் என்ற பெருமை இல்லை!
ஒற்றுமை என்ற பெருமை இல்லை!
ஓடுவதாலும் பெருமை இல்லை!

ஒரே அல்லாஹ் என்று பெருமைபடலாம்!
அல்லாஹ் நம்மை இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ள வைத்ததற்கு பெருமைபடலாம்!
இவ்வுலகில் எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத
உத்தமர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை
நாம் தலைவராக பெற்றதற்கு பெருமைபடலாம்!
குர்ஆனை! வல்ல அல்லாஹ் நமக்கு
வழங்கியதற்கும் பெருமைபடலாம்!
இதைதவிர மனிதர்களுக்கு பெருமைபட
இவ்வுலகில் ஒன்றும் இல்லை!

நாம் இம்மண்ணில்தான் பிறந்தோம்!
இம்மண்ணில்தான் மறையப்போகிறோம்!
வாழ்க்கை நிரந்தரம் இல்லை!
மரணம் ஒருநாள் வரும்!
பல பட்டங்கள் பெற்று அழகிய
பெயருடன் நடமாடிய
நம் பெயரும் அப்பொழுது மாறும்!
மையத் (பிணத்)தை எடுத்தாச்சா?

நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில்
மனிதா! நீ! விருந்தினரைப்போல்
இருந்துக்கொள்  என்று சொல்லி இருக்க!
மனிதர்களோ மரணம் தழுவாமல்
வாழ்வோம் என்ற (அவ) நம்பிக்கையில்
ஆடம்பரங்கள், தலைக்கணங்களுக்கு
சொந்தக்காரர்களாக மாறி விட்டதால்தான்
அவலங்களும் அதிகமாகிவிட்டது!

நாம் அனைவரும் வல்ல அல்லாஹ்வின்
அடிமைகள் என்பதை மனதில் வைத்து
இம்மைக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லை!
மறுமைக்கு சொந்தக்காரர்கள் ஆவதற்கு
குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் காட்டித்தந்த
தூய்மையான மார்க்கத்தை
தெளிவாக விளங்கி பின்பற்றி
சொர்க்கம் செல்லக்கூடிய மக்களாக
வாழ நாம் முயற்சிப்போம்! இன்ஷாஅல்லாஹ்!

(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. (அல்குர்ஆன் : 96: 1-7)
-- அலாவுதீன்


7 Responses So Far:

sabeer.abushahruk said...

//நம் பெயரும் அப்பொழுது மாறும்!
மையத் (பிணத்)தை எடுத்தாச்சா//

பயம் காட்டுறியப்பா, இருந்தாலும் அந்த பெயர் வருமுன் நீ சொல்லியிருப்பவற்றை மனத்தில் கொண்டால், அமல்களை திருத்திக்கொண்டால் மட்டுமே...

மைத்து
கனக்காது
கபுர்
நெருக்காது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பணம், புகழ் நிரந்தரமா?
அதிகாரம், ஆணவம் நிரந்தரமா?
எதுவுமே நிரந்தரம் இல்லை
சிந்திக்க மறந்து விட்டோம்!//
இன்றைய சீசனுக்கு ஏற்ற ஆக்கம் அருமை.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. மண்ணின் மகிமையை மேலும் காட்ட இந்த தேர்தலில் கட்சியை விட்டு விலகி உங்களில் ஒருமித்த ஒருவர் களம் காணுங்கள். ஊரே அதை ஆமோதியுங்கள். பணச்சீரழிவு பகைமை ஏற்படப்போவதை உடனே தடுத்திட சிந்திப்பீர்!
போட்டியிட்டு வென்றாலும் ஒருசேர்மன் தான்
போட்டியின்றி மனம் ஒன்றினாலும் ஒரு சேர்மன் தான்.
நன்மையை நாடி நல்லதை சிந்திப்பீர் சகோதரர்களே!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அலாவுதீன் காக்கா வாழ்த்துக்கள் .

// மண் என்றால் பிறந்த ஊரைப்பற்றி
பெருமையாக நினைக்கிறோம்! //

சிறிய மக்கா என்ற ஊர் என்று நினைத்து பெருமையாக நினைக்கிறோம்.
ஆலிம்கள் நிறைந்த ஊர் என்று நினைத்து பெருமையாக நினைக்கின்றோம்.
மற்ற ஊர்களுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் பரவா இல்லை என்று பெருமையாக நினைக்கின்றோம்.
இது போன்று பல விசயங்களை சொல்லி பெருமையாக நினைத்தவை எது நிரந்தரம்.

மனிதா! நீ உன் உடலோடு ஒட்டி உடுத்தக் கூடிய ஆடையை கூட ஒரு நாளில் வலு கட்டாயமாக உன்னிடமிருந்து.அகற்றி உன்னை வழி அனுப்பி வைக்கப்படும்.

மனிதா! அல்லாஹ் உன்னைப் பார்த்து பெருமை படும் விதமாக நடந்துக்கொள்.
ஐவேலை அல்லாஹ்வுக்காக தொழுவதை நினைத்து பெருமை பட்டுக்கொள்.
சக மனிதரோடு ஒற்றுமையாக வாழ்ந்தால் இம்மையிலும்.மறுமையும் வெற்றி உண்டு என்பதை நினைத்து பெருமை பட்டுக்கொள்.
புறம்,கோல்,பொய் அவதூறு,ஃபசாது போன்ற ஈன செயல்களிலிருந்து.விலகி அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதை நினைத்து பெருமைப் பட்டுக்கொள்.
இருட்டு அறையில் உன்னை கொண்டு போய் போடுவற்க்குள் நீ நல்ல அமல்கள் அதிகமாக செய்திருந்தால் உனக்கு துணைக்காக உனக்கு முன்பாகவே காத்திருக்குமே அதை நினைத்து பெருமைப் பட்டுக்கொள்.

நாம் இந்த மண்ணுக்காக இல்லை நாளை மறுமைக்காக பிறந்தோம் என்பதை நற்ச்செயல்களின் மூலம் பெருமைப் பட்டுக்கொள்ளுங்கள்.

எந்த மண்ணை பெருமையாக நினைக்கிறோமோ அந்த மண்ணுத்தான் நம்மை இரையாக உட்க்கொள்ள காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.

சந்தேகமே இல்லை நாம் இந்த மண்ணில் தன் பிறந்தோம் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மனிதர்களின் மனங்கள் மாறவில்லை!
ஊர் பெருமை! தெரு பெருமை!
குலப்பெருமை! பணப்பெருமை!
என்ற மறுமைக்கு
உதவாத சிந்தனைகள்
மனதை விட்டு அகன்றால்
மனிதன் மாறிவிட்டான்
மனிதனாக என்று மகிழ்வடையலாம்!//

அனைத்தும் மெய்யே !

Yasir said...

//இம்மைக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லை!
மறுமைக்கு சொந்தக்காரர்கள்// இதை நினைத்து வாழ்க்கையை அமைத்து கொண்டால் ஏது சண்டை சச்சரவு......

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பினிய அலாவுதீன் காக்கா,

முதலில் இந்த நல்ல சிந்தனை பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.

எதுஎதுக்கெள்ளாம் பெருமையில்லை என்பதை சொல்லிவிட்டு

//ஒரே அல்லாஹ் என்று பெருமைபடலாம்!
அல்லாஹ் நம்மை இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ள வைத்தற்கு பெருமைபடலாம்!
இவ்வுலகில் எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத
உத்தமர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை
நாம் தலைவராக பெற்றதற்கு பெருமைபடலாம்!
குர்ஆனை! வல்ல அல்லாஹ் நமக்கு
வழங்கியதற்கும் பெருமைபடலாம்!
இதைதவிர மனிதர்களுக்கு பெருமைபட
இவ்வுலகில் ஒன்றும் இல்லை!//

என்று எல்லோருடைய மனதில் பதியும்படி சொன்னவிதம் அருமை காக்கா.

இது போன்று நற்சிந்தனை பதிவுகளை அடிக்கடி எங்களுக்கு அறியத்தாருங்கள் காக்கா..

Yasir said...

அறிமுகமில்லாத ஒரு சகோதரின் வலைப்பூவில் படித்தது

http://seyedibrahim.wordpress.com/2011/02/09/wedding_videos/

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு