Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2011 | , ,

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம்
தினந்தினம் செய்யும் திக்ரே குணம்
சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம்
காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம்

பளிச்பளிச்சென்று மின்னினாலும்
மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம்
என்றென்றும் சிரித்த முகத்திற்கு
பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும்

சிறுசிறு சேமிப்புகள்
பெருகப்பெருக பெருமதிப்பு
குளிரகுளிர நேசிக்கும் உறவுக்கு
காலங்காலமாய் நன்மதிப்புண்டு

வருகவருக என அழைக்கும் பாங்கொலி
நெருங்க நெருங்க தழைக்கும் நன்மை
வாவா என் அழைக்கும் மண்ணறை
போபோ எனத் தள்ளும் இளமை

யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே
திடீர்திடீர் என்ற வளர்ச்சி
செல்லச்செல்ல சில வீழ்ச்சி

அடிக்கடி செய்யும் திக்ர்
தினந்தினம் கேட்கும் பாங்கொலி
 வாராவாரம் வரும் குத்பா
வருடாவருடம் ரமலான் நம் வழக்கங்கள்

நான் நான் என்ற ஆசை ஒழித்து
காலங்காலமாய் சொல்லபட்ட ஒற்றுமையை
அலைஅலையாய் ஒன்றாய் சங்கமத்தில்
வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?

- M.H.ஜஹபர் சாதிக்

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாவா என் அழைக்கும் மண்ணறை
போபோ எனத் தள்ளும் இளமை//

துள்ளும் இளமை
தள்ளும் முதுமை
தத்தளிக்கும் தனிமை

இத்தனை மையோடு உண்"மை"யும் ஒட்டியிருந்தால் நிளைத்திடும் அங்கே ஆண்மை !

Yasir said...

நல்ல சிந்தனைகள்.....வாழ்த்துக்கள் நண்பரே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தலைமைக் கவிகாக்காவின் சதி இது.
தனக்கொரு போட்டியாளர் இருந்தால் மென்மேலும் கவித்துவம் படைக்கலாம் என்ற பேரெண்ணத்தில் என்னையும் வா- வாயென்றழைத்ததால் அவசரமாக அத்தருணத்தில் வரையப்பட்டவை.
தவறுகளுக்கு பொறுத்தருளவும்.
மேலும் சுட்டிக்காட்டி தாய்மொழியை வளர்த்திடுவோம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ரெட்டைக்கிளவிக்கு துணையாக ரெட்டைக்கிளவன் சூப்பர்மா.

// எம்.ஹெச்.ஜகாபர் சாதிக் எழுதியது.

பளிச்பளிச்சென்று மின்னினாலும்
மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம்
என்றென்றும் சிரித்த முகத்திற்கு

பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும் //


ஏழை,பணக்காரன் கண்களில் தங்கம் மின்னும்போது.மதிப்பில் குறையாதென்பது உண்மை.

ஏழைகள் சிரிப்புகள் தவிர்ப்பு.பணக்காரன் சிரிப்புகள் தானே மதிப்பு
இன்று.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

படிக்க,படிக்க இனிக்கிறதே உன் கவிக்கோர்வை....அருமை ஜஹபர்...

ஒரு சிறு ஹைக்கூ

ஒற்றுமை
எட்டும் தூரத்தில் இருந்தாலும் அது ஒரு
எட்டாக்கனியாகவே எல்லோராலும் கருதப்படும்.

மரணம்
வரும் வரை அதன் வேதனை தெரிவதில்லை
வந்த பின் அதை சொல்ல நாதி இல்லை

ஊர்
எங்கு சென்றாலும் அதன் நினைவுகள்
ஊர்ந்து கொண்டே இருக்கும்

இயற்கை
இறைவன் உண்டாகியதெல்லாம் இயற்கை
மனிதன் உண்டாக்கியதெல்லாம் செயற்கை

இறைவ‌ன்
இயற்கை இறைவனாக முடியாது
இறைவன் இறைவனாகவே இருக்கிறான்

பழைய நினைவுகள்
வரும் காலத்தில் அறுவடை செய்ய‌
இன்றே விதையின்றி விதைக்கப்படும் பயிர்

திரும‌ண‌ம்
விரும்பி ஏற்றுக்கொண்டால் வ‌ச‌ந்த‌கால‌ம்
விருப்ப‌மில்லாம‌ல் போனால் க‌ச‌ந்த‌கால‌ம்

ப‌ள்ளிப்ப‌ருவ‌ம்
கையில் இருக்கும் வ‌ரை ம‌கிமை தெரியாது
கைவிட்டு போன‌தும் கைசேத‌ப்ப‌ட‌ வைத்திடும்

பிள்ளைக‌ள்
ம‌ன‌வேத‌னைக‌ள் நீங்க‌ ந‌ம் வீட்டிலேயே
இறைவ‌ன் உருவாக்கிய‌ ம‌ருத்துவ‌ம‌னை

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

அப்துல்மாலிக் said...

குறிப்பா சொல்லவந்த விசயம் நன்று

வாழ்த்துக்கள் சகோதரரே

அப்துல்மாலிக் said...

நெய்னா வழக்கம்போல நல்லா ஈக்கிது..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாலிக்கு, கண்டதையெல்லாம் நல்லா ஈக்கிது, நல்லா ஈக்கிதுண்டு சொல்லி வாயைப்பிளக்காதே. நன்கு படித்து தவறிருந்தால் அதை தன் பின்னூட்டம் மூலம் நம்ம கிரவ்ன் போல் பிரித்து மேய கற்றுக்கொள்.

என்னா சூச்சியம்???


மு.செ.மு. நெய்னா முஹம்மது

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// நெய்னா எழுதியது:

பிள்ளைக‌ள்
ம‌ன‌வேத‌னைக‌ள் நீங்க‌ ந‌ம் வீட்டிலேயே
இறைவ‌ன் உருவாக்கிய‌ ம‌ருத்துவ‌ம‌னை //


ஆம் கிராமங்களில் மருத்துவமனைகள் இல்லாமல் அவதி படுவது போல்.குழந்தை இல்லாத அத்தனை தம்பதியர்களும் மனம் புழுங்கி வெளியே தெரியா நோய்களை போல் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்னா அபுஇபுறாஹீம் காக்கா,

சத்தமே இல்லெ....கோவமா?????

மு.செ.மு. நெய்னா முஹம்மது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சத்தமே இல்லெ....கோவமா????? //

அட ! என்ன MSM(n): இப்புடி கேட்டுபுட்டிய !

காது மூக்கு தொண்டை ஒரு கூட்டணிக்காக பாடு பட்டேனா ? ஒரே உட்கட்சிப் பூசல் ஆளாகுக்கு ஒரு கொடச்சல் கொடுத்து... என்னுடைய வலைகுடா சர்வீஸ்லேயே இன்றைக்குத்தான் மெடிக்கல் லீவுன்னு ஒன்னு இருக்கு அத எப்படியெல்லாம் பயண்படுத்தலாம்னு சொல்லாமல் புரிய வச்சுட்டாங்க !

இருந்தாலும் அந்த உட்கட்சிப் பூசலில் இருக்கும் இடறுகளை சரிசெய்திட்டு வருகிறேன்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): இன்று முழுவதும் ஓய்விலிருந்தேன்...

ஜுரம்னா...

உடல் சிலிர்க்குமா ?
தொண்டை வறண்டிடுமா ?
தூக்கமும் தூரச் சென்றிடுமா ?

அப்போ...

ஜலதோஷம்னா ?
மூக்குடைந்து ஓடுமா ?
தொண்டையும் தூர் வாறுமா ?

இதுக்கெல்லாம் ஆண்டி பயாடிக்ன்னு ஒன்னு கொடுத்தாங்க அந்த ஆண்டி-பயாடிக் அதென்னடான்னா... தூங்கவே விடலையே..

சரி இதெல்லாம் கூட்டணிக்குள் யாரோ விளையாடுறாங்கன்னு மீண்டும் மருத்தவரை (மரம் வெட்டியை அல்ல) சந்திக்கச் சென்றேன் அவரும் சொன்னார் இது "வளர்த்த கடா மார்பில்" பாய ஆரம்பிடுச்சு அதனால "இந்தக்க் காய்ச்சல் நெஞ்சில் இறங்கும் முன்னர் ஒரு உள்குத்தல் ஊசி போட்டுங்கன்னு" இடுப்புக்கு கீழே செவிலியிடம் சொல்லி கிள்ளி விடச் சொன்னார்

அவங்களும் கிள்ளி விட்டுட்டு சரி சரி இது பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை வீட்டுல போய் ஒரு தூக்கம் போட்டுங்கன்னு சொல்லிட்டாங்க..

நாளை வரை பொருந்திருந்து பார்ப்போமே....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அபுஇப்ராஹிம் காக்கா சமூகத்திற்கு,
ஜேஜே(நெடில்) என்ற ஒன்றிய சமுதாயத்தையுடைய அதிரையைத்தான் நாடினேன்.உங்க வார்த்தைப்படி மெய்யாலுமே என்னில் இருப்பது ஒரு ஜெ.தான்.2 குறிலை உடைய எழுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.(என்னமோ வாழ்க! வாழ்க அதிரையர்களின் ஒற்றுமை)

//நாளை வரை பொருந்திருந்து பார்ப்போமே....//
கனவில் ஒற்றுமையின் நற்செய்தியும் விடியலில் கூட்டணியின் ஆரோக்கியமும் நிச்சயம் தெரியும்.

Shameed said...

//வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?//

ஊர் ஒன்று படவேண்டும் என்று எல்லோருடைய மனதிலும் உள்ளது அதை இதுவரை நாம் வெளிக்கொண்டுவர வழி தெரியாமல் இருக்கின்றோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஜேஜே(நெடில்) என்ற ஒன்றிய சமுதாயத்தையுடைய அதிரையைத்தான் நாடினேன்.உங்க வார்த்தைப்படி மெய்யாலுமே என்னில் இருப்பது ஒரு ஜெ.தான்.2 குறிலை உடைய எழுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.(என்னமோ வாழ்க! வாழ்க அதிரையர்களின் ஒற்றுமை)//

தம்பி MHJ : இந்தத் தருணத்தில் நாம் அந்த அர்த்தம் எடுத்துக் கொள்ளாவிடினும்... பொருத்தம் கருதியும் யாரும் வருத்தம் கொண்டிராமலும் வரிகளில் வாழ்க வாழ்க போட்டுபார்த்தோம் அதுவும் டைமிங் டச் இருந்ததலால் அப்படியே விட்டும் வைத்தோம் !

என்னமோ வாழ்க ! வாழ்க ! என்பதற்கு பதிலாக எண்ணம்போல் வாழ்க ! எங்களின் எண்ணம் போல் ஒற்றுமையாக வாழ்கன்னு சொல்லிடுவோமா !?

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//இதுக்கெல்லாம் ஆண்டி பயாடிக்ன்னு ஒன்னு கொடுத்தாங்க அந்த ஆண்டி-பயாடிக் அதென்னடான்னா... தூங்கவே விடலையே..//



ஆண்டி பயாடிக்ன்னு ஒன்னு கொடுத்தது தப்பு அதை ஆண்டி ஆண்டின்னு ரெட்டை கிளவி போல் இரண்டு இரண்டாக போட்டிருந்தால்(பிரிக்காமல் ) நலம் பயத்திருக்கும் இதுவரை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆண்டி பயாடிக்ன்னு ஒன்னு கொடுத்தது தப்பு அதை ஆண்டி ஆண்டின்னு ரெட்டை கிளவி போல் இரண்டு இரண்டாக போட்டிருந்தால்(பிரிக்காமல் ) நலம் பயத்திருக்கும் இதுவரைஆண்டி பயாடிக்ன்னு ஒன்னு கொடுத்தது தப்பு அதை ஆண்டி ஆண்டின்னு ரெட்டை கிளவி போல் இரண்டு இரண்டாக போட்டிருந்தால்(பிரிக்காமல் ) நலம் பயத்திருக்கும் இதுவரை//

அதுதான் நடந்தது ஆண்டி பயாடிக் வேலை செய்யாததால் ஆண்டிக்கு ஆண்டி ஒன்னு கொடுந்தாங்க இன்று சென்றதும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒற்றுமை
எட்டும் தூரத்தில் இருந்தாலும் அது ஒரு
எட்டாக்கனியாகவே எல்லோராலும் கருதப்படும்.//

MSM(n) : எட்டாக்கனியா என்று ஏங்காமல் சுட்டும் விரல்களுக்கு ஒட்டும் மை இட்டிடும் வரை மூச்சைப் பிடிக்கத்தான் இன்றைய ஊர்கூடி நலன் நாடி இருக்கிறது myNATIVE !

Shameed said...

நோயாளியை பார்த்து டாக்டர் சொன்னாராம் ட்ரின்க் ப்ளைண்டிஆப் வாட்டர் என்று ,
நோயாளி வெளியோ வந்து சொன்னாராம் ஏன் இந்த டாக்டர் ப்ளைன் டி குடிக்கசொல்கிறார் என்று

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// எங்களின் எண்ணம் போல் ஒற்றுமையாக வாழ்கன்னு சொல்லிடுவோம்//

அவ்வண்ணமே கோரும்

அபூபக்கர்-அமேஜான் said...

அடுக்கடுக்காய் நல்ல தகவல்களை சொல்லி ஒற்றுமையே அதிரையின் இன்றைய அவசியம் என முடித்தபடி ஒற்றுமை ஓங்கட்டும்,பகைமை மறையட்டும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உள்ளத்தை அள்ளித்தந்த அத்தனை நல்லுள்ளத்துக்கும் உளமாற நன்றிகள்.

இதன் மூலகர்த்தாவின் குடும்பத்திற்கு நடந்துவிட்ட பேரிழப்பை தாங்கிக்கொள்ளும் உளப்பக்குவத்தை நாயன் கொடுத்தருள்வானாக ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு