Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 அன்று ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2011 | , , ,

"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்தான் கூறுகின்றது.  எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.


இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது.  ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது.  எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது.  அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம.ம.க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J.  ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

- அதிரை அஹ்மது

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

த.மு.மு.காவின் மருத்துவ அவரசவூர்தி மற்ற ஊர்களின் அதன் சேவையை நிருபித்து இருக்கிறது...

அதிரையில் துவங்க இருக்கும் இந்த மகத்தான சேவை மக்கள் மனம் வென்ற நற்பயனளிக்கு சேவையாக அமைய வாழ்த்துவதோடு துஆச் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

பேதமின்றி போதிப்போம் நம் மனித நேயத்தை ! அதுவே உறுதியிலும் மென்மையுடையோர் என்று பறை சாற்றட்டும் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நல்லிணக்க விழா சிறக்கட்டும்.
த.மு.மு.க.வின் மனித நேயம் மதங்களை வென்று மகத்தான சேவை புரிந்து இஸ்லாம் ஒரு தனிப்பட்டவர்களின் மதமல்ல, இது உயரிய மார்க்கம் என அனைவரும் உணரும்விதமாய் அமைய வாழ்த்துக்கள்.

Shameed said...

அதிரைக்கு அவசியமான ஒரு அர்ப்பணிப்பு இந்த ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு யாரை தொடர்பு கொள்வது எந்த நம்பரில் தொடர்பு கொள்வது என்பதை தெரிவித்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்

அப்துல்மாலிக் said...

நமதூருக்கு மிக மிக அவசியமான தேவையறிந்து செயல்வடிவம் பெறும் இவ்விழா சிறக்க வாழ்த்துக்கள், மேலும் தீயணைப்பு வாகனமும் தேவையான ஒன்று

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மக்களின் துயரங்களை போக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு த.மு.மு.க ( first aid ) மருத்தவ உதவியோடு அவசரவூதியை நம் சகோதரர்கள் மிகுந்த உழைப்பிற்கு மத்தியில் அதிரையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடத்த இருக்கிறார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.இதற்க்கு யாரெல்லாம் பாடு பட்டார்களோ அவர்களுக்கு ஒரு துளி கூட தற்பெருமை வந்துவிடாமல் அல்லாஹ் அவர்களை காப்பானாக.அல்லாஹ்வுக்காக செய்த நல் காரியத்தை அவன் பொருந்தி கொள்வானாக.ஆமீன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------


சமூகத்தின் முக்கிய அங்கங்களாக உள்ள மற்ற அரசியல் கட்சிகளிலிருந்தும் ஒருவரின் பெயரை அழைப்பிதழில் போட்டிருந்தால், சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் என்ற தலைப்பை நியாயப்படுத்த முடியும்.

-வாவன்னா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அர்பனிப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போதே தனது சேவையை சலனமில்லாமல் சாந்தமாக தனது சேவையை தொடங்கியது நெகிழ்வே !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாதி,மதம் வேறுபாடில்லாமல் சமய நல்லிணக்கத்தோடு அனைவரும் பயன் படுத்தும் விதத்தில் இணையத்தில் தமிழை வார்த்து தந்த இணையத்தள அறிஞர்.காலம் சென்ற அதிரை ஹாஜி உ(த்த)மர் தம்பி அவர்களின்.சாதனைகளை பற்றி.
த.மு.மு.க நடத்திய சமய நல்லிணக்கம்.ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழாவில் யாரும் சொல்லிக்காட்டாமல் பத்தாவது நபர்களோடு பதினோராவது நபராக வெறும் நினைவு பரிசோடு நிறுத்தி கொண்டதுதான் வேதனைக்குரியது .

தான் பிறந்த மண்ணிலேயே இந்த இருட்டடிப்பு என்றால் பிற மண்ணை என்னவென்று சொல்லுவது.?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு