Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆட்டு மூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும் ! 34

ZAKIR HUSSAIN | September 23, 2011 | ,



சமீபத்தில் ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறை பற்றி கொஞ்சம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்... விலாவாரி என்றால் "கிட்னி வறுவல்" சார்ந்தது].

இதற்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லா இருந்துச்சி" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத் தெரியவில்லை. எனக்கு உள்ளுர பயம் தான். நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!' என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினேன் இப்படி:

இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்] 'ஹிந்து'வாக இருந்தால் "சங்கு" நிச்சயம். 'முஸ்லீமாக' இருந்தால் "தலைமாட்டில் ஊதுபத்தி" நிச்சயம்.

ஆனால் என் நண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த மின்னஞ்சல் இப்படி இருந்தது;

"ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?"


"ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டங்களின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . மூளை ஃப்ரை (fry) , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் பீஃப் (beef) கொத்து, மட்டன் கொத்து, சிக்கன் கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தருவான்.) ஆட்டுக்கால் பாயா, ஈரல் ஃப்ரை (fry), இப்படி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ங்க (கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்கிற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா).


"தலைமாட்டில் ஊதுபத்தி' நிச்சயம் பயம் காட்றியப்பா."

சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' இறைச்சி தாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.
எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr. Bala Subramaniam. Cardiologist osler diagnostic center  Chennai] "பொதுவா மட்டன் சாப்பிடலாம்சாப்பிடும்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.


" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?"

"ஆர்கன்... கிட்னி / ஈரல்...."

"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?"

"உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'

இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது. பொதுவாக சுவரொட்டி, ஈரல் இவைகளுக்கு என்ன விதமான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும் முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது. மற்றும் அன்றைக்கு [Physiology] "உடல் உறுப்புகள் பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் கூடாது.
எனக்கு தெரிந்து ஆட்டு மூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்... கொலஸ்ட்ராலை தவிர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும். பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க 3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ] சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம்.

தொடர்ந்து வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய்யில் செய்த உணவுகள் செறிக்க சில மணி நேரம் ஆகலாம். அதுதான் சமயத்தில் ‘உர்” சத்தம் வயிற்றிலிருந்து வரக்காரணம். இதைத்தான் தமிழ் சினிமாவில் “ எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டே’னு கண்ணு சிவக்க பேசராய்ங்களா??..

நாம் தினமும் 3 வேலை சாப்பிடுகிறோம். ஆனால் இது வரை எத்தனை முறை ஒரு டயட்டிசியனை பார்த்து பேசியிருப்போம்.?

பொதுவாக இதுபோல் ஈரல் சாப்பிட்டால் நம் ஈரலுக்கு நல்லது கிட்னி சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது என நம்பிக்கை உண்டு, இதுவரை நம் ஊர் ஆட்கள் சாப்பிட்ட ஆட்டு முளைக்கு இதுவரை குறைந்த பட்சம் பத்து ஐன்ஸ்ட்டீன் , எட்டு ராமானுஜம், ஆறு தாமஸ் ஆல்வா எடிசன் இது வரை நம் ஊரில் இருக்க வேண்டும், எங்கே போனாணுங்க??

“அதெல்லாமா கதைக்கு ஆவப்போவுது... முன்னேயெல்லாம் இதல்லாம் பார்த்தா சாப்டாங்க?” என சொல்லும் ஊர் பெரிசுங்களை தாராளமாக 3 மண்டலத்துக்கு "அன்னம் தண்ணி யாரும் தரப்டாது" என சொல்லி ஊரை விட்டு தள்ளி வைக்கலாம் [யாரோ சொம்பை லவட்டிடானுங்க.. அவனுக்கு என்ன தீர்ப்பு??]

"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேனே  எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்க  வேண்டிவரும். கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.
உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி  இரவு சாப்பாட்டுக்கு
ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு "நீங்களே சாப்பிட்டுருங்க.. நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு.. அதை சாப்பிடுகிறேன்" என்று சொல்கிறார்களா.. உங்கள் கல்யாணப் பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி / திருநிறைச் செல்வி" என்று இருக்கும் அதை  'தீத்துக்கட்டும் செல்வி" என்று திருத்தி வாசிக்கவும்.
- ZAKIR HUSSAIN

இந்த ஆர்டிக்கில் நான் போன வருடம் எழுதியது, This is just for your reading pleasure.

34 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்படி பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் இல்லாமல் வண்டி ஒடாதே காக்கா !

சீஸனுக்கு சீசன் இந்த பார்ட்ஸ்ஸை ஆங்காங்கே பொறுத்தினால்தானே... மருமவோங்கிற கவ்ரவம் நிலைக்குமாமே !?

ஏங் காக்கா... அப்படின்னா மறந்திடனுமா ? அப்போ யாரும் கேட்டா மூளை இல்லன்னு சொல்லிடலாமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///பொதுவாக இதுபோல் ஈரல் சாப்பிட்டால் நம் ஈரலுக்கு நல்லது கிட்னி சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது என நம்பிக்கை உண்டு, இதுவரை நம் ஊர் ஆட்கள் சாப்பிட்ட ஆட்டு முளைக்கு இதுவரை குறைந்த பட்சம் பத்து ஐன்ஸ்ட்டீன், எட்டு ராமானுஜம், ஆறு தாமஸ் ஆல்வா எடிசன் இது வரை நம் ஊரில் இருக்க வேண்டும், எங்கே போனாணுங்க??///

தேடனும் காக்கா ! :))

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்லாக்கமும் நடுவில் கொஞ்ச நக்கலும் அருமை அறிவுரை.

உங்க மேட்டரைப்பார்த்தால் ஸ்பேர்பார்ட்ஸ் விலைகளை குறைக்க எடுத்த சதியாக படுகிறது.

//ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு "நீங்களே சாப்பிட்டுருங்க.. நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு.. அதை சாப்பிடுகிறேன்" என்று சொல்கிறார்களா.. உங்கள் கல்யாணப் பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி / திருநிறைச் செல்வி" என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி" என்று திருத்தி வாசிக்கவும்.//

சூப்பர் வார்த்தைகளும் வாய்த்தவளின் சதித்திட்டமும் அம்பலம்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

//உங்க மேட்டரைப்பார்த்தால் ஸ்பேர்பார்ட்ஸ் விலைகளை குறைக்க எடுத்த சதியாக படுகிறது.// இந்தக் கோணம் வித்தியாசமா இருக்கே.

கலரியில் உருளைக்கிழங்கு மல்லாவில் ஈரல் காணாமல் போவதற்கும் கலரி பறத்தும் சிறுசுகளின் சைசுக்கும் ஏதும் தொடர்புண்டா?

sabeer.abushahruk said...

ஜாகிர்,

தலைப்பிலிருந்து தீர்த்துக் கட்டுவது வரை துள்ளிச் செல்லும் உன் கட்டுரை விலாவாரியா விளக்கி விலாவில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது.

கெளரவ வேடத்தில் என்னைவேற நடிக்க வைத்திருக்கிறாய்.

தீப்பெட்டி அளவு சொல்றிய இப்பவெல்லாம் பெரிய சைஸ் தீப்பெட்டி வருவதால் மக்கள் அந்த அளவை எடுத்துக்கொள்ளாமல் இருக்க என் துஆ.

ஒரு பழக்க தோஷத்துக்காக வாரம் ஒரு முறையாவது லிவர் சாப்பிட்டாலும் டோக்கன் வரிசைதானா என்று பேத்தாலஜி சொல்லவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கலரியில் உருளைக்கிழங்கு மல்லாவில் ஈரல் காணாமல் போவதற்கும் கலரி பறத்தும் சிறுசுகளின் சைசுக்கும் ஏதும் தொடர்புண்டா?//
நிச்சயம் அதிக தொடர்பு உண்டே! அதான் இன்றைய சிறுசுகள் பிஞ்சுலேயே தேறிவிடுவது. சிறுசுகள் அரைகுறையாக உள்ளே தள்ளி விடலாம்.பெரிசுகள் மென்று உள்ளே தள்ளுவதுக்குள் முழிபிதுங்கி மேஸ்திரி கண்ணுக்கு பட அப்பறம் கலரி குளறுபடிதான்.
அதிக தொடர்பு LMS அபூபக்கருக்கு உண்டு.காரசாரமான பதிலை அதிகாலையில் எதிர்ப்பார்க்கலாம்.

sabeer.abushahruk said...

சாப்பிடும் பார்ட்ஸ் சம்மந்தப்பட்ட பார்ட்ஸுக்கு நல்லது என்று வியாக்யானம் செய்பவர்களிடம், "அப்ப, சைவம் சாப்பிடுபவர்கள் பார்ட்ஸெல்லாம் நாசமாப் போயிடுமா?" என்று கேட்கனும்.

ஆயினும் நண்பா, சூப்பு கடையில் நாக்கு பீஸ் சாப்பிட்டுப் பழகிய நாக்கைத் திருத்த ஏதாவது ஃபிசியோதெரபி மாதிரி ட்ரீட்மென்ட் உண்டா என்று கேட்டுச் சொல்லேன்.

ஏன்னா, சூப்புக் கடையிலயும் வெறும் சூப்பு கேட்டால் க்ளாஸ் கழுவுற பையனிடம் தரச் சொல்வதும், பார்ட்ஸ் கேட்டா (அபு இபுறாகீமின் ஈ என் ட்டீ யின் முற்போக்குக் கூட்டணி அங்கத்தினரானை) கேட்டா சூப் கடை ஓனரே சர்வ் பண்ணுவதும் போன்ற கவுரவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்றும் சொல்லு சாரே.

sabeer.abushahruk said...

//ஏங் காக்கா... அப்படின்னா மறந்திடனுமா ? அப்போ யாரும் கேட்டா மூளை இல்லன்னு சொல்லிடலாமா ?//

"இருக்கு...ஆனா இல்லே"னு சொல்லிடுங்க.

கஸ்டமர்,நக்கலா, "மூளை இருக்கா?"

ஹோட்டல்காரர், டபுள் நக்கலா, " உங்களுக்கு முன்னால வந்தவருக்கு இருந்திச்சிங்க. உங்களுக்கு இல்லீங்க"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//"அப்ப, சைவம் சாப்பிடுபவர்கள் பார்ட்ஸெல்லாம் நாசமாப் போயிடுமா?" என்று கேட்கனும்.//

அதென்னா காக்கா சைவத்தில் பார்ட்ஸ்,
ஒரு வேளை தோல்,கொட்டை,அடி,நுனி,பிஞ்சு,கட்டை என்று வகைப்படுத்துவீரோ!

JAFAR said...

நல்ல தகவல். மற்ற parts தன்மைபற்றியும் கூருங்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாங்களும் கார், பங்களா, யாரும் வச்சி இருக்காத அளவுக்கு தென்னத்தொப்பு வாங்கி கோடிஸ் வரனாக ஆவதற்கு குறிப்பாக எங்கள் நலனுக்காக அதிரை மக்களிடம் இது போன்ற ஸ்பேர் பார்ட்ஸ்களை அநியாமாக விலைக்கு வித்து.பணத்தை பதுக்குவதை. பொருக்க முடியாத ஜாஹிர் காக்கா போர் கொடி பிடித்திருப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று நான் சொல்ல வில்லை .இப்படி ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரி நல சங்கம். சொல்லுவதாக காதில் விழுந்த செய்தி.

அப்பா இனிமேல் விலை குறைந்திடும் அதிகமா இது போல் பார்ட்ஸ்களை வாங்கி வெளுத்துக் கட்டலாம்.

காக்கா கொடி பிடிக்கும் கூட்டத்தில் என்னையும் தவறாம சேர்த்துக் கொள்ளுங்கள்.

காக்கா ஒரு டவுட்டு :பணத்தை கொட்டி படிக்கிற மருத்துவரும்.இலவசமா படிக்கிற மருத்துவரும்.வெவ்வேறு விதமா படித்துவிட்டு வராங்களோ ?

// எம்.ஹெச் சொன்னது.

/கலரியில் உருளைக்கிழங்கு மல்லாவில் ஈரல் காணாமல் போவதற்கும் கலரி பறத்தும் சிறுசுகளின் சைசுக்கும் ஏதும் தொடர்புண்டா?//
நிச்சயம் அதிக தொடர்பு உண்டே! அதான் இன்றைய சிறுசுகள் பிஞ்சுலேயே தேறிவிடுவது. சிறுசுகள் அரைகுறையாக உள்ளே தள்ளி விடலாம்.பெரிசுகள் மென்று உள்ளே தள்ளுவதுக்குள் முழிபிதுங்கி மேஸ்திரி கண்ணுக்கு பட அப்பறம் கலரி குளறுபடிதான்.
அதிக தொடர்பு LMS அபூபக்கருக்கு உண்டு.காரசாரமான பதிலை அதிகாலையில் எதிர்ப்பார்க்கலாம். //

இங்கிலீஸ் ஈரலை பார்த்ததும் தமிழ் ஈரல் தொடர்பு இல்லாமல் போயிடிச்சா?

அதிகமா தொடர்பு வச்சிக்கோ இல்லாட்டி பிறகு ரொம்ப கஸ்டம்.

(ஈ)ரலை (உ)ண்பதற்கு சிறுசுகள் பாவம் அவசர அவசரமாக அரைகுறையாக உள்ளே தள்ளினாலும் .சட்டி பக்கத்தில் நிற்கும் பெரிசுகள்.ஈவு இறக்கம் இன்றி குறை இல்லாமல் முழுசாக உள்ளே தள்ளுவதினால்தான்.துணை இல்லாமல் உருளைக் கிழங்கு மட்டும் .
தனியாக நாலு பேருக்கு முன் வருகிறது .

ZAKIR HUSSAIN said...

//வாரம் ஒரு முறையாவது லிவர் சாப்பிட்டாலும் டோக்கன் வரிசைதானா//

//அதிகமா இது போல் பார்ட்ஸ்களை வாங்கி வெளுத்துக் கட்டலாம்.//


To Brothers Abu bakar, Jafar , Jagubar sadik, Abu Ibrahim, & Sabeer,


Why these kind of parts where no harm those days..WE ARE YOUNG ONCE!!... why old cars are often sent to workshop??


சில விசயங்களுக்கு தெளிவு படுத்து முன். சில உண்மைகளை தெரிந்து கொள்வது நல்லது.

மைக்ரோ லேப் இல்லாத காலத்தில் ரத்தம் குடிப்பது, அல்லது உறைந்த ரத்தத்தை பொரித்து சாப்பிடுவது போன்ற செயல்கள் இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு ரத்தத்தில் பாக்டீரியாவின் குடியிருப்பு அதிக காலங்கள் [ அந்த ரத்தத்துக்குறிய உடல் மரணம் அடைந்தாலும் ] இப்போதுள்ள இருதய மருத்துவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடும்போது "பார்ட்ஸ்" தவிர்கவும் என சொல்வதற்க்கு அதில் கொழுப்பு அதிகம் என்பதும் அந்த பகுதியில் ரத்தம் வடியாமல் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால் [ ஈரல் மற்றும் இன்னபிற]

மிச்சப்பட்ட ரத்தத்தில் உள்ள பாக்டீரியாவால் நல்ல மனிதனும் நோயாளி ஆகலாம் என்பதால் தான் ரத்தம் தடை செய்யப்பட்டது. Blood is a favourite medium for bacteria to grow.

இதை சொன்னது 1400-1500 வருடத்துக்கு முன் [படிக்காத] நபி
முஹம்மத் [ஸல் ] அவர்கள் , எப்படி அதை அவர்களால் அதைமுன்பே சொல்ல முடிந்தது , அதனால் தான் நாம் அவர்களை தீர்க்கதரிசி [Prophet] என்கிறோம். His prophecy is beyond comprehension.

இஸ்லாத்தில் அவசரப்பட்டு யாரையும் தலைவராக்கி பிறகு பிறகு மாற்றிக்கொள்ளும் பிசினசே கிடையாது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்காவின் கட்டுரை எப்பொழுதுமே நக்கலுடன் கூடிய எச்சரிக்கை தான் ந‌ம் ம‌க்க‌ளுக்கு.

அது சரி, கட்டுரையின் தலைப்பில் ஆட்டின் தலையை தெளிவில்லாமல் 3டி யாக காண்பித்துள்ளார்களே, இதற்கு ஏதேனும் பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்தால் ஆட்டின் உதிரிபாகங்கள் (ஈரல், கிட்னி, மாங்கா, செவரொட்டி, கொடலு, நுரையீரல், நெஞ்ஞெலும்பு, தொடக்கறி, முன்னஞ்சப்பை, பின்னஞ்சப்பை....) எல்லாம் தெளிவாக தெரியுமோ???

அடுத்தக்கட்டுரை "அதிரைப்பட்டின சாப்பாடும், ஆஸ்பத்திரிகளில் கொண்டாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நீங்களோ அல்லது நானோ(நானோ காரல்ல) எழுதலாமா???

ந‌ல்ல‌ ச‌த்தான‌ சாப்பாடும் சாப்பிடுங்க‌ள்; அத‌ற்கு ச‌ரிச‌ம‌மான‌ உட‌ற்ப‌யிற்சியும் செய்யுங்க‌ள். பிற‌கென்ன‌ இறைவ‌ன் நாட்ட‌த்தில் இறுதி மூச்சுவ‌ரை எந்நாளும் பொன்நாளாக‌த்தான் இருக்கும் இன்ஷா அல்லாஹ்........

அண்மைக்கால‌ங்க‌ளில் தொலைகாட்சி விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் ஈமு கோழி வ‌ள‌ர்ப்பு ப‌ற்றியும் அத‌ன் தோல், க‌றி, முட்டை ம‌ற்றும் அத‌ன் குஞ்சுக‌ள் கூட சந்தையில் ந‌ல்ல‌ விலை போவ‌தாக‌ அடிக்க‌டி விள‌ம்ப‌ர‌ம் பார்க்க‌ முடிகிற‌து. இது ப‌ற்றி யாருக்கேனும் மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரியுமா? இந்த ஈமு கோழியின் பிறப்பிடம் எது? எல்லா இடங்களிலும் இதை வளர்க்க முடியுமா? இந்த‌ ஈமு கோழி க‌றியால் உட‌லுக்கு ஏதேனும் ப‌லன்/நலன் உண்டா? கொஞ்ச‌ம் யாராவ‌து விலாவாரியா (நெஞ்செலும்பு அல்ல‌) சொல்லுங்க‌ளேன்? (இந்த‌ ஈமு கோழிக‌ள் ஜோடி ஏதோ 500 அல்ல‌து 600 ரூபாய் என்று நினைத்து விடாதீர்க‌ள். ஜோடி சுமார் 30 அல்ல‌து 35,000 ரூபாய் வ‌ரை விற்க‌ப்ப‌டுகிற‌து)

ஜாஹிர் காக்கா, இந்த‌ ஈமு கோழி க‌றிக்கும் ஆஸ்ப‌த்திரிக்கும் ஏதேனும் (கள்ளத்)தொட‌ர்பு உண்டா? என்ப‌தையும் ஆராய்ந்து இங்கு விள‌க்கி விடுங்க‌ள். நாமும் ப‌டித்து விட்டு போவோம்.......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Yasir said...

அப்ப...ஸ்பேர் பார்ட்ஸ் நம்மை ஸ்பீடா கொண்டு போயிரும்....நல்ல விழிப்புணர்வு ஆக்கம் காக்கா..இதுவரை நாம் காலம்காலமாக நம்பிவந்த பிதற்றல்களை பிய்த்து எடுத்து இருக்கிறீர்கள்..சபீர் காக்கா..சொல்வதுபோல்...”நாக்கு” சாப்பிடுவதற்க்கு மட்டும் ஏதாவது விதி விலக்கு உண்டா ??

அப்துல்மாலிக் said...

நம்மூர் ஆளுங்களுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அப்போமட்டும் காது கேட்காது, இதெல்லாம் கேள்விப்பட்டு அடுத்தநாள் கலரிசாப்பாட்டுக்கு போய் தாளிச்சாவுலே ஈரல் எங்கேனுதான் தேடுவோம்

தவிர்க்க முடியாது இருந்தாலும் குறைக்க முயற்சி செய்வோம்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அடுத்தக்கட்டுரை "அதிரைப்பட்டின சாப்பாடும், ஆஸ்பத்திரிகளில் கொண்டாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நீங்களோ அல்லது நானோ(நானோ காரல்ல) எழுதலாமா???//

MSM(n) : ரூட் கிளியர் !... காத்திருக்கோம் !

//அது சரி, கட்டுரையின் தலைப்பில் ஆட்டின் தலையை தெளிவில்லாமல் 3டி யாக காண்பித்துள்ளார்களே,//

அப்படி தெளிவாகக் காட்டியிருந்தால் அத கொஞ்சம் வக்கி கொடுங்க ஹாக்கான்னுல கேட்டுப்புடுவிய !!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அடுத்தக்கட்டுரை "அதிரைப்பட்டின சாப்பாடும், ஆஸ்பத்திரிகளில் கொண்டாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நீங்களோ அல்லது நானோ(நானோ காரல்ல) எழுதலாமா???
MSM(n) : ரூட் கிளியர் !... காத்திருக்கோம் !//

மிகச்சரியான ஆளைச்சுட்டி இருக்கிரீர்கள்.

அவ்வண்ணமே கோரும்.

ZAKIR HUSSAIN said...

To Bro மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து,

என்னைப் பொருத்தவரை நீங்கள்தான் சரியான ஆள் "அதிரைப்பட்டின சாப்பாடும், ஆஸ்பத்திரிகளில் கொண்டாட்டமும்" என்ற கட்டுரை எழுதுவதற்கு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,நக்கலுடன் கூடிய புத்திமதி அருமை காக்கா.


//ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு "நீங்களே சாப்பிட்டுருங்க.. நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு.. அதை சாப்பிடுகிறேன்" என்று சொல்கிறார்களா.. உங்கள் கல்யாணப் பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி / திருநிறைச் செல்வி" என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி" என்று திருத்தி வாசிக்கவும்.//

மேலே சொல்லப்பட்டது வூட்டுக்காரியின் சதித்திட்டமில்லை.(சகோதரர் ஜாஃபர் சாதிக் உங்கவூட்டுக்காரவோ அநி படிச்சாலும் படிப்பாங்க.. கொஞ்சம் ஜாக்கிரதை..)

ஆட்டுக்கால் பாயாவை வைச்சுக்கிட்டு காலை இட்லியை மாப்புள்ளைக்கு கொடுத்தால் கவுரவ குறைச்சலாம். அந்த கவுரவம் என்னத்த குறைக்கப்போவுதுண்டு தெரியலை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாஜுதீன் சொன்னதில்...
// வூட்டுக்காரியின் சதித்திட்டமில்லை. உங்கவூட்டுக்காரவோ அநி படிச்சாலும் படிப்பாங்க..//

படிச்சாலும் படிப்பாங்க அல்ல. படிக்கனும் என்றும் எழுதினேன்.
***************************************************
// காலை இட்லியை மாப்புள்ளைக்கு கொடுத்தால் கவுரவம் என்னத்த குறைக்கப்போவுதுண்டு தெரியலை//

இதை உங்கூட்டுக்காரவோ படித்திடப்போராகோ பாத்துக்கிடுங்கள். அப்பரம் இனி இரவில் பகலை சோறும் காலை இட்லியும் தானாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது… இதை உங்கூட்டுக்காரவோ படித்திடப்போராகோ பாத்துக்கிடுங்கள். அப்பரம் இனி இரவில் பகலை சோறும் காலை இட்லியும் தானாம். //

அப்புடி படிச்சாவது இரவில் சோறும், காலையில இட்லி கிடைக்கட்டும் என்ற ஏக்கம் தான்.

உணவு வகைகளில் இங்கேயும் MSM ஸ்ஸ்ஸ்பேஸல் தான் போங்க...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// இங்கேயும் MSM ஸ்ஸ்ஸ்பேஸல் தான்//

'சாரி 'அதெ மறந்துட்டேனே!
மாமிச குறைப்பு என்றால் M.S.M.க்கே பவர்(அர்த்தம்) இல்லை.
வாழ்க எங்க பாரம்பரியத்துடன்!

Shameed said...

சீரியசான விசயத்தையும் ஜாலியாக சொல்லவதில் உங்களுக்கு நிகர் நீங்களே,

எனக்கு ஒரு சந்தேகம் டாக்டருக்கு படிப்பது நீங்களா உங்கள் மகனா அல்லது இருவருமா ?

Shameed said...

ஏன்பா ஆட்டு தலையை பார்த்தாலுமா கொலஸ்ட்ரால் இப்படி அவுட் ஆப் ஃபோகஸில் ஆட்டுத்தலையை போட்டு வத்தேரிச்சலை உண்டு பன்னுறியோ!!!

ZAKIR HUSSAIN said...

//ஏன்பா ஆட்டு தலையை பார்த்தாலுமா கொலஸ்ட்ரால் இப்படி அவுட் ஆப் ஃபோகஸில் ஆட்டுத்தலையை போட்டு வத்தேரிச்சலை உண்டு பன்னுறியோ!!! //

To Tuan Haji Shahul,

சத்தியமாச்சொல்ரேன்...படிச்ச உடனே சிரிச்ச கமென்ட் இது...இது மாதிரி கமென்ட் எழுத [ ஜோக் அடிக்க ] உங்களுக்குத்தான் முடியும். இதைத்தான் நான் , சபீர் , ரியாஸ் , ஹாஜா எல்லோரும் உங்களிடம் ரசிப்பது.

ZAKIR HUSSAIN said...

அதிரை நிருபர் சமூகத்துக்கு...


இனிமேல் என் அர்டிக்கிள் படிப்பவர்கள் என்னை திட்டி எழுதினாலும் , " யோவ் என்னையா வெளக்கெண்ணய் மாதிரி எழுதியிருக்கீர் " என கேட்டு எழுதியிருந்தாலும், _____________ போட்டு எழுதியிருந்தாலும் மட்டுறுத்தாமல் அப்படியே வெளியிடவும்...

நானும் திருந்தனும்ல !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏன்பா ஆட்டு தலையை பார்த்தாலுமா கொலஸ்ட்ரால் இப்படி அவுட் ஆப் ஃபோகஸில் ஆட்டுத்தலையை போட்டு வத்தேரிச்சலை உண்டு பன்னுறியோ!!! //

மெய்யாலுமே பளிச்சென்று அந்தப்படத்தைப் போட்டிருந்தால்... அதனை வதக்கி அலல்து வக்கி கொடுத்த என்னான்னு வேறு கேட்பதோடில்லாமல் சீக்கிரமா பேக் பன்னுங்கன்னு சொல்லிடுவாங்களே நம்மூர் காரங்க அதான் அப்படி !!

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
அதிரை நிருபர் சமூகத்துக்கு...


இனிமேல் என் அர்டிக்கிள் படிப்பவர்கள் என்னை திட்டி எழுதினாலும் , " யோவ் என்னையா வெளக்கெண்ணய் மாதிரி எழுதியிருக்கீர் " என கேட்டு எழுதியிருந்தாலும், _____________ போட்டு எழுதியிருந்தாலும் மட்டுறுத்தாமல் அப்படியே வெளியிடவும்...

நானும் திருந்தனும்ல !!!


ஒருவர் தனக்கு வேண்டியவர் தப்பு செய்திருந்தாலும் அதை பூசி மொழுவி தப்பில்லை என்று சால்சாப்பு சொல்லும் இந்த காலத்தில் நான் எழுதியது தப்பு என்று சொன்னாலும் மட்டுறுத்தல் செய்ய வேண்டாம் என்று சொல்லும் நவீன நல்ல மனிதர்களில் நீங்களும் ஒருவர்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அதிரை நிருபர் சமூகத்துக்கு...

இனிமேல் என் அர்டிக்கிள் படிப்பவர்கள் என்னை திட்டி எழுதினாலும் , " யோவ் என்னையா வெளக்கெண்ணய் மாதிரி எழுதியிருக்கீர் " என கேட்டு எழுதியிருந்தாலும், _____________ போட்டு எழுதியிருந்தாலும் மட்டுறுத்தாமல் அப்படியே வெளியிடவும்...

நானும் திருந்தனும்ல !!!///

அப்படியே ஆகட்டும் ! மன்னா !

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//மெய்யாலுமே பளிச்சென்று அந்தப்படத்தைப் போட்டிருந்தால்... அதனை வதக்கி அலல்து வக்கி கொடுத்த என்னான்னு வேறு கேட்பதோடில்லாமல் சீக்கிரமா பேக் பன்னுங்கன்னு சொல்லிடுவாங்களே நம்மூர் காரங்க அதான் அப்படி !! //


என்னதான் வதக்கி கேட்டாலும் நீங்கள் சொதப்பி விடமாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மட்டுறுத்தல் செய்ய வேண்டாம் என்று சொல்லும் நவீன நல்ல மனிதர்களில் நீங்களும் ஒருவர்//

முன்னால் முதல்வர் மு.க. அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று சொன்னாராம் அப்படிச் சொன்ன தலைவரை பாராட்ட ஒரு விழா எடுத்தாங்களாம் காக்கா !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அபு இபுறாஹிம் சொன்னது.

முன்னால் முதல்வர் மு.க. அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று சொன்னாராம் அப்படிச் சொன்ன தலைவரை பாராட்ட ஒரு விழா எடுத்தாங்களாம் காக்கா ! //

அப்போ ஜாகிர் காக்காவுக்கு (அதிரை வெள்ளி நிலா) என்று ஒரு விழாவை எடுத்திட வேண்டியதுதான்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என்ன ஜஹீர் காக்கா இப்படி ஒரு வெட்டு வெட்டக்கூடிய சமாச்சாரத்தை ஒரே வெட்டால் துண்டாக்கி ஆசையில் மண்ணை அள்ளி போட்டிடிய.ஆடாத ஆட்டம்மெல்லாம் போட்ட சுவை அரசர்கள் ஆடிபோய் இருக்காங்க.இனி நீங்க மருத்துவம் எழுதுனா மருந்து மட்டும் எழுதுங்க பத்தியமோ, இன்னது சாப்பிடக்கூடாதுன்னோ சொன்னா இனி உங்க கட்டுரையை நான் படிக்க மாட்டேன்னு என் நண்பர் சொல்ல சொன்னார். நானும் தலையை ஆட்டி வைத்தேன்.

Unknown said...

அனைவருக்கும் சலாம் ,
ஜாகிர் காக்கா உங்க கட்டுரையை நம்மூரில் உள்ள
பெண்கள் அனைவரும் படித்தால் ............
தஞ்சை hospital எல்லாம் வெறிச்சோடி கிடக்கும் .
அருமையான கட்டுரை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு