Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விதை ! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2011 | , , ,

அறுவடைக்குத் தயாராகும் அன்பரே
விதைத்ததென்ன நீர்?
உண்பதற்கு உடன்படும் உலகத்தாரே
உருவாக்கியதென்ன நீர்?

விதைத்துத்தானே அறுக்கனும்
உழைத்துதானே உண்ணனும்

எதை விதைக்க எதை அறுக்க
சொல்லித்தருவ தென் கடன்
அள்ளிக்கொள்வ துன் கடமை

அறிவுக்குத்தானேப் பின்னடைவு
கல்வியை விதை
உறவில்தானே விரிசல்கள்
அன்பை விதை!

மழைக்குத் தானேப் பஞ்சம்
மரங்களை விதை
மனிதநேயம் தோற்கும்போது
இறக்கம் விதை!

உனக்கென யாரும் இல்லை யெனில்
உறவை விதை
உனக்கு நீயே தனிமைப்பட்டால்
நட்பை விதை!

பூமி நன்றாய் செழிக்க நீயும்
பூக்களை விதை
பெரியவர் சிறியவர் பாசம்பெருக- நல்
பாக்களை விதை!

காசுபணம் விளையாதப்பா
கடமையை விதை
காலநேரம் கடப்பதற்குள்
கற்றதை விதை!

வீடு வளர்க்க வேண்டுமெனில்
விருப்பம் விதை
கூடு கலைக்கும் குழப்பத்திற்கு
வெறுப்பே விதை

பெண்மைதானே பெற்றுத்தரும்
கண்ணியம் விதை
பிள்ளைதானே சுமக்கவேண்டும்
பொறுமையை விதை!

பள்ளி கல்லூரிப் பருவத்திலே
படிப்பை விதை
பள்ளி கொள்ளும் காலங்களில்
கனவுகள் விதை!

உழுது போட்டு நிலத்திலெல்லாம்
தானியம் விதை
உழன்றுபோன மனம் தெளிய
தீனினை விதை!

விருட்சம் பெருக வேண்டுமெனில்
விதைகளை விதை
சுபிட்சம் உனக்கு வேண்டுமெனில் - நல்
விதிகளை விதை!


- சபீர்
- Sabeer abuShahruk,

33 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: நீங்கள் விதைத்த (க)விதைகள் நிறைய !

கல்வி மாநாட்டுக்கு அற்புதமான எழுச்சிக்கு ஊக்கத்திற்கு கொடுத்த (க)விதை ஒரு மைல்கல் என்றால் இது உழைக்க அழைக்கும் ஆழமான அரிச்சுவடி !

எல்லா வரியுமே இங்கே (க)விதைகள் தான் !

உணர்வுகள் துளிர்ந்திட
ஊக்கம் துளிர்ந்திட

(க)விதைகள் ஏராளம் !

ஒவ்வொரு விதையின் அர்த்தம் உணர்ந்தவர்கள் வெற்றியாளர்களே !

ஜஸாக்கல்லாஹ் காக்கா !

crown said...

அறுவடைக்குத் தயாராகும் அன்பரே

விதைத்ததென்ன நீர்?
உண்பதற்கு உடன்படும் உலகத்தாரே
உருவாக்கியதென்ன நீர்?

விதைத்துத்தானே அறுக்கனும்
உழைத்துதானே உண்ணனும்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மற்றொரு நல்ல ஊக்கம் தந்த கவிஆக்கம். கவிஞரின் நோக்கம் உயர்ந்து நிற்கனும் நம் சமுதாயம்,உழைத்து முன்னேறனும் நம் வரும் சந்ததியும் என்னும் நல்ல எண்ணம் கவிதையாய் விதைக்கப்பட்டுள்ளது.
விதை இந்த இரு எழுத்தில் விரிச்சம் ,வளர்ச்சி, முன்னேற்றம் என்னும் பல சொல் அடங்கி இருக்கு.அதேபோல் தான் விதை விதை நெல் பல அரிசியாக மாறும் எல்லாம் உழைப்பினால் . ஒன்னும் செய்யாமல் வெறும் கையில் முழம் போட முடியாது. என்னத்தை கிள்ளி போட்டாய் முளையின் தலை தொட்டு பார்க்க? உழை உருப்படுவாய், வரும் சமுதாயம் உருப்படும் என்பதை அழுத்தமாய் சொல்லவந்த கவிதை.இந்த விதை.

crown said...

அறிவுக்குத்தானேப் பின்னடைவு
கல்வியை விதை
உறவில்தானே விரிசல்கள்
அன்பை விதை!

மழைக்குத் தானேப் பஞ்சம்
மரங்களை விதை
மனிதநேயம் தோற்கும்போது
இறக்கம் விதை!
----------------------------------------------------------
உடம்பில் இந்த விட்டமீன் குறைவு இதை சரிசெய்ய என்று இன்ன,இன்ன இழப்புக்கு இது சாப்பிடனும் என்று மருத்துவர் சொல்லும் போது அதை நேரம் தவறாமல் கடைபிடிக்கும் நாம். நம் அறிவில் விசாலம் இல்லை என்றால் அதை எப்படி வளர்பது என்பதை ஆராய்கிறோமா? உறவில் சண்டை நோய் வந்தால் அன்பை மருந்தாக்க நம்மாள் முடியவில்லை ஏன்??? மழை வேண்டும் ஆனால் அந்த மழைக்கு மூலக்காரனியான மரம் வேண்டாமா? இப்படி தேவையின் தேவை அறிந்து தீர்வு சொல்லாமல் ,பெறாமல் போனால் எல்ல நன்மையும் நாளடைவில் இறந்து போகும். அதற்குன்டான நிலம் தேடி தீர்வு எனும் விதை விதைத்து நன்மையான தானியம் பெறாமல் நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வது அறிவுடமையா?தகுமா? சிந்திப்போமாக.

crown said...

உனக்கென யாரும் இல்லை யெனில்
உறவை விதை
உனக்கு நீயே தனிமைப்பட்டால்
நட்பை விதை!
---------------------------------------------------------------
உறவோ, நட்போ பொதுவில் தேடிவராது, தேடிப்போய் உறவை ஏற்படுத்திகொள்ளனும். அங்கேதான் குடும்பம் என்னும் தோட்டம் வளரும். நட்பு மணக்கும் நந்தவனம் அந்தவனம் வேண்டுமென்றால் சீனேகம் விதை.பின் உன் வாழ்வில் வாசம் வீசும்.எல்லாவற்றுக்கும் ஒரு மூலம் உண்டு அதுதான் விதை,வினை செயலுக்கு வினை,விளைவு,பயிருக்கு விதை இரண்டும் வேறு வடிவிலான ஒரே பொருள்தான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

(க)விதைகள் பல ரகம் அதில் சாதனைதரும் வீரிய விதையுமுண்டு,சாவியான போலியுமுண்டு.நீங்கள் வினியோகிக்கும் (க)விதையோ பலதரப்பட்டவர்களுக்கு கொடுக்கும் ஊக்கச் 'சாவி'

கிரவ்ன் பாத்தி கட்டிக் கொண்டிருக்கையில்
'சாரி' காக்கா நானும் விதைக்கிறேன்.

அதிரையை அருமையாய் ஆள
அதிமுக்கியம் ஒற்றுமை என்ற வித்து
ஆளவேண்டியது யாரென்பதல்ல
ஆகவேண்டியதே நம் சொத்து!

நானா நீனா என்பதற்கல்ல
நாளைய வாக்கென்ற அரிய விதை
நாடியதை அடைந்திட ஒற்றுமையாகிய
நானல்ல நாம் என்ற நல்லெண்ணமே வீரிய விதை!

crown said...

காசுபணம் விளையாதப்பா
கடமையை விதை
காலநேரம் கடப்பதற்குள்
கற்றதை விதை!
-------------------------------------------------
பணம் மரத்திலேயாகாய்க்குது?அது வேண்டும் என்றால் அதனை அடையும் வழியில் நம் கடமையை செய்யனும்.அதுபோல் சும்மா சேத்து வைத்துகொண்ட கல்வியும் கற்று கொடுக்காமல் எந்த பயனமும் அற்றுபோகும். ஒரே இடத்தில் சாதாரன காகிதமாக இருந்தாலும், பணமாகவோ, பத்திரமாகவோ இருந்தாலும் சின்ன கரையான் அறித்து விடும் அதுபோல் கற்ற அறிவு கற்று கொடுக்காவிட்டால் காலக்கரையான் கரைத்துவிடும்.விதைப்பின் பயன் காய்,பின் கனியாகி நமக்கு உணவாவது போல் கல்வி கணிந்து பிறர் அறிவிற்கு உணவாகனும். அதுபோல் இல்லாவிட்டால் விதைக்கும் போதே அது வீரியம் மற்ற சொதையாக(சொத்தயாக )போய் விட்டால் எல்லாம் நலம்.இது சமுதாயத்துக்கும் பொருந்தும்.

crown said...

வீடு வளர்க்க வேண்டுமெனில்
விருப்பம் விதை.
பெண்மைதானே பெற்றுத்தரும்
கண்ணியம் விதை
பிள்ளைதானே சுமக்கவேண்டும்
பொறுமையை விதை!

பள்ளி கல்லூரிப் பருவத்திலே
படிப்பை விதை
பள்ளி கொள்ளும் காலங்களில்
கனவுகள் விதை!

உழுது போட்டு நிலத்திலெல்லாம்
தானியம் விதை
உழன்றுபோன மனம் தெளிய
தீனினை விதை!
---------------------------------------------------------
நெல்விதைத்தால் நெல் முளைக்கும் . சொல் விதைத்தால் சொல் முளைக்கும். மருத்துவர் பல் விதைத்தால் பல் நிலைக்கும், செய்யும் செயலே முடிவை சொல்லும், சில வெல்லும் செயல், சில கொல்லும் செயல். எல்லாம் விதை என்பதல்ல விதை, இதை விதை என்பதே அறிவின் விதை சொல்லும் பாடம்.அன்று கூடு கலைக்கும் குழப்பத்திற்கு
வெறுப்பே விதை என்பதுபோல் கேடு கெட்ட செயலில் விளையும் பயிரே பதர்ராகும் பின் விதைத்தவனுக்கே கேடாகும்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

விருட்சம் பெருக வேண்டுமெனில்
விதைகளை விதை
சுபிட்சம் உனக்கு வேண்டுமெனில் - நல்
விதிகளை விதை!
மோட்சம்(சுவர்கம்) வேண்டி நன்மை விதை, நரகம் தவிர்க்க தீமை துற! எதுவிதைப்பது என்பதை தீர்மானிப்பது விதி அல்ல உன் மதி, மதி சொல்லும் படி அது நல்லபடி விதை ,அறுவடை முப்போகாமட்டுமல்ல எப்போதும் உன் சந்ததிக்கும் வந்து சேரும்.அமீன். மீண்டும் நல்ல கவிதை சொன்ன கவிஞருக்கு வாழ்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விதைகளில் பலவிதம் அவற்றில் ஒரு விதம் சபீர் காக்கா பக்குவமாக விதைத்த (க) விதை செழிப்பாக வளர வாழ்த்துகிறோம்.

ZAKIR HUSSAIN said...

நொந்து போன இதயங்களில் நம்பிக்கை விதைத்திருக்கிறாய்..

[கிரவுனிடம் பேசிப்பேசி நானும் இப்படி எழுத ஆரம்பிச்சிட்டேன்]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விதை கண்டேன் - அங்கே
கவிதை பூண்டேன் !

விதை விதைத்தேன் - இங்கே
கவிதை புதைத்தேன் !

விதை(கள்) சேர்த்தேன் - அன்று
கவிதை(கள்) ஊன்றினேன் !

விதை(கள்) விருட்சமானது - இன்று
கவிதை(கள்) நிழலானது !

விக்கிய வனுக்கு - நீர் ஒரு
அருமருந்து !

இன்னலில் சிக்கியவனுக்கு
இவ் விதை நல்மருந்து !

திசை யற்று திக்காடியவனுக்கு
விசை கொடுப்பது இவ்விதை !

சோர்வை போர்வையாய்
கொண்டவனுக்கு - (இவ்)விதை
பார்வை தெளிவாக்கும்
உறவை ஒட்டவைக்கும்
உழப்பை எத்திவைக்கும்

புத்தி சொன்னாலும்
கத்தி(க்காட்டி) குத்தாது வெல்லும் !

மதி கொண்டு விதை
சதி கண்டு புதை !

இன்னும் எழுதலாம்...

கவிதைக்கு என்று ஒரு களம் அமைத்து அங்கே அதிரைக் கவிகளை அழைக்கவும் ஆசை !

இப்படி விதைக்கவும் எனக்கு ஆசை இங்கே !

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
ஒவ்வொரு முறையும் ஏற்புரையைச் சுருக்கமாக முடிக்கத்தோன்றும். ஆனால், பின்னூட்டங்களில் நம்மவர்களின் தமிழ் என்னை உசுப்பி விட்டுவிடுகின்றது. என் செய்ய யாம்?

இம்முறை நீங்களும் கலக்கிவிட்டீர்கள். ஜாகிரை கவனித்தீரா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா, ஸ்பீக்கர் ரெடி மைக் ரெடி.. (டெஸ்டிங்க் டெஸ்டிங்க் ஹலோ ஹலோ) எல்லாமே ரெடி... !

ஏற்புரை வித்தியாசமாகவெல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் நீங்க கேட்கப் போறதில்லை ஆகவே வித்தியாசமாக ஒரு படப்பாளி வீடு மரம் தரும் நிழலாக படர்ந்திருக்க வேண்டும் காக்கா !

ஆமா ! காக்கா, கவிதைன்னா இப்படியல்ல அப்படி விதைன்னு சொன்ன அசத்தல் காக்காவையும்ல விதை வதைச்சுடுச்சு ! சாரி உள்ளே புதைதிடுச்சு !

கிரன்னுடன் பேசியதால் அப்படியாமே ! அப்படின்னா !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வழக்கமா கவிதைக்கு மவுன(மாக) ரசிக மன்றத்தின் செயல்வீரர் அபூஆதில் காக்கா இன்னும் வரவில்லையே ! வரட்டுமேன்னு இன்னும் மவுனம் காக்கும் மனம் வென்றவர்களும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி MHJக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் கண்முன்னால் நிற்கிறது !

வரிகளால் பேருராட்சிக்கு வரி கட்டுகிறார் ! ஆதலால் நாம் சுட்டும் ஒற்றுமைக்கு தலை யொன்று காட்டுங்களேன் !

sabeer.abushahruk said...

விதை என்று மட்டும் சொன்னால் ஏதோ கதை விடுகிறான் என்று உதை விழலாம். எனவேதான், எதை விதைத்தால் எதைப் பெறலாம், எது விதையானால் எது விளையும் என்றும் அதை விளக்கிச்சொன்னேன்.

நீங்கள் இன்னும் மேலே போய், "விக்கியவன் - சிக்கியவன், பார்வை - சோர்வை,திசை - விசை" என்றெல்லாம் எதுகை மோனையோடு கலக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

அபு ஆதில் said...

உனக்கென யாரும் இல்லை யெனில்
உறவை விதை
உனக்கு நீயே தனிமைப்பட்டால்
நட்பை விதை!
-------------

காசுபணம் விளையாதப்பா
கடமையை விதை
காலநேரம் கடப்பதற்குள்
கற்றதை விதை!
-------------

விருட்சம் பெருக வேண்டுமெனில்
விதைகளை விதை
சுபிட்சம் உனக்கு வேண்டுமெனில் - நல்
விதிகளை விதை!

எதை விதைக்க எதை அறுக்க
சொல்லித்தருவ தென் கடன்
அள்ளிக்கொள்வ துன் கடமை

கவி காக்காவின் கவிதை
விதைகள் விருட்சமாக வேண்டும்.நம் சமுதாயம் உயர்ந்து நிற்க்க வேண்டும்.
(அபு இபுறாஹிம் மழை வரப்போகிறது என்று ஒரு முன்னறிவிப்பு செய்து இருக்கலாமே.)

sabeer.abushahruk said...

//நொந்து போன இதயங்களில் நம்பிக்கை விதைத்திருக்கிறாய்..

[கிரவுனிடம் பேசிப்பேசி நானும் இப்படி எழுத ஆரம்பிச்சிட்டேன்]//

கிரவுனின் தமிழ் தொடர்புகொள்பவர்களையும் தொத்தும் என்பது உண்மைதான். ஆயினும், தொத்து, வியாதியல்ல; சத்து!

நிஜமாவே நல்லாருக்கு உன் கமென்ட்.

sabeer.abushahruk said...

//உறவோ, நட்போ பொதுவில் தேடிவராது, தேடிப்போய் உறவை ஏற்படுத்திகொள்ளனும். அங்கேதான் குடும்பம் என்னும் தோட்டம் வளரும். நட்பு மணக்கும் நந்தவனம் அந்தவனம் வேண்டுமென்றால் சீனேகம் விதை.பின் உன் வாழ்வில் வாசம் வீசும்.எல்லாவற்றுக்கும் ஒரு மூலம் உண்டு அதுதான் விதை,வினை செயலுக்கு வினை,விளைவு,பயிருக்கு விதை இரண்டும் வேறு வடிவிலான ஒரே பொருள்தான்//

உளவியல் கருத்துகளை மிக அழகாகச் சொல்லி இந்த ஆக்கத்தை கவுரவப் படுத்திவிட்டீர்கள் கிரவுன். நன்றி. வாழ்த்துகள்.

//காலக்கரையான்// இந்த வார்த்தைப் பிரயோகம் என்னை மிகக் கவர்ந்தது.

sabeer.abushahruk said...

//அதிரையை அருமையாய் ஆள
அதிமுக்கியம் ஒற்றுமை என்ற வித்து//

எம் ஹெச் ஜே:
நல்ல வார்ப்பு.
இருக்கட்டும்.

இரண்டாவது வரியில் "அதிமுக்கிய"வில் அ...தி...மு...என்று துவங்குவதில் உள்குத்து எதுவும் இல்லையல்லவா இல்லே வேணும்னே அ.நிக்குத் தெரியாமல் கேன்வாஷிங்கா?

sabeer.abushahruk said...

எல் எம் எஸ் & அபு ஆதில்: வாழ்த்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைரா!

அ.நி.: அடுத்த நிகழ்ச்சி என்ன?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபுஆதில் காக்கா, கனவென்றே நினைத்து விட்டேன் ! சாப்பிட்டதும் உறங்கி எழுந்து பார்த்ததும், கிள்ளிப் பார்த்தேன் விதை(யுண்ட) கவிதை(யும்) உங்களிடமிருந்தும் சர்ப்ரைஸ் ! :)

கவிக் காக்கா, அதிரைக் கவிகளை வாருங்கள் கவிக் களம் ஒன்று விட்ட இடத்தில் தொடரலாம் என்று ஒரு கரு விதை என்னிடமும் உண்டும் அது உங்களிடம் பதப்படுத்தப் பட வேண்டும் நேரம் அமையும்போது பதிவுக்குள்ளும் இன்ஷா அல்லாஹ் !

ஒரே ஒரு ஆசை "அந்தக் கவிதை வெளிவர வேண்டும் அன்றும் எவ்வுலகிலும் மட்டையடி விளையாட்டோ (cricket) அல்லது கண்ணைக் கட்டும் சின்னைத்திரை சிறப்பு நிகழ்ச்சிகளோ இருக்கக் கூடாது" !

அலாவுதீன்.S. said...

சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அனைத்தும் அழகான விதைகள்!
********************************************************************************************
விதைத்ததென்ன நீர்?
உருவாக்கியதென்ன நீர்?
உழைத்துதானே உண்ணனும்
சொல்லித்தருவ தென் கடன்
அள்ளிக்கொள்வ துன் கடமை

கல்வியை விதை
அன்பை விதை!
மரங்களை விதை
இறக்கம் விதை!

உறவை விதை
நட்பை விதை!
பூக்களை விதை
நல்பாக்களை விதை!


கடமையை விதை
கற்றதை விதை!
விருப்பம் விதை
வெறுப்பே விதை




கண்ணியம் விதை
பொறுமையை விதை!
படிப்பை விதை
கனவுகள் விதை!

தானியம் விதை
தீனினை விதை!
விருட்சம் பெருக வேண்டுமெனில்
விதைகளை விதை
சுபிட்சம் உனக்கு வேண்டுமெனில் - நல்
விதிகளை விதை!
*****************************************************************************************

பொறுமையை விதைத்தால்தான்
மற்றதை விதைக்க முடியும்!
பொறுமையை விதைக்க
அவசர மனிதர்களுக்கு நேரம் இல்லையே!
நேரத்தை எப்படி விதைப்பது என்று கேட்பார்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவசர மனிதர்களுக்கு நேரம் இல்லையே!
நேரத்தை எப்படி விதைப்பது என்று கேட்பார்கள்! ///

அன்பன் அலாவுதீன் காக்கா:

நேரத்தை விதை ப்பதை கேட்பவர்களின் - பின்னர்
காலம் காட்டிடும் வதைகளை சந்திப்பார்கள் !

sabeer.abushahruk said...

pls visit:

http://www.satyamargam.com/1766

to view notes on "thozarkal" publishing function.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா :
அங்கே 'பரிண'மித்ததை கண்டேன் அங்கே !
இன்ங்கே அதன் தொகுப்பையும் பதிவோம் விரைவில் !

Yasir said...

ஒரு வலுவான விதை..வாழ்க்கைதத்துவம் என்ற தரு-வை தரும் விதை...அனுபவம் உள்ள விவசாயியால் இங்கு விதைக்க பட்டு இருக்கிறது...ரசித்து படித்த கவிதை காக்கா...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//உள்ளாட்சித் தேர்தல்தான் கண்முன்னால் நிற்கிறது !//
ஆமாம் காக்கா அதானே நாளைய அதிமுக்கிய நிகழ்வு அதிரைக்கும்!
வாய்ப்புகள் எங்குட்டாவது போய்விடாமல் வசப்படுத்தனுமல்லவா!

//அ...தி...மு...என்று துவங்குவதில் உள்குத்து எதுவும் இல்லையல்லவா இல்லே வேணும்னே அ.நிக்குத் தெரியாமல் கேன்வாஷிங்கா?//
அது எப்படி துவங்கினாலும் நேற்றுவரை (இன்று எப்படியோ) அது தானே தமிழக மக்களுக்கு அதிமுக்கியமாக தெரிந்திருக்கிறது.
கேன்வாஷிங்கல்ல அதிரையின் ஒற்றுமைக்கு மைன்dட் வாஷிங்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கதையின்றி கவி மூலம் வேண்டாதவைக்கு நல்ல உதை கொடுத்து வேண்டியவைக்கு விதை விதைத்து நல்லதோர் விருச்சிகம் காண விரும்பும் கவிக்காக்காவிற்கு ஒரு சல்யூட்....

முடியலெ....


மு.செ.மு. நெய்னா முஹம்மது

அப்துல்மாலிக் said...

//காசுபணம் விளையாதப்பா
கடமையை விதை
காலநேரம் கடப்பதற்குள்
கற்றதை விதை!//

Excellent Words Bro..

Shameed said...

விதைக்கு நீர் ஊற்ற உடனே வர முடியவில்லை இங்கு விட்ட (விதை)வேலை தொடர்ந்ததில் தாமதம் ஆகி விட்டது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா,

அனைத்து (க)விதை வரிகளும் அனைத்து வயதினக்கும் பொருந்தும்.

முதலில் தங்களின் கவிதையை படித்தாலும் இறுதியில் தான் கருத்திட முடிந்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு