Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும் - அஸ்லம் பாஷா MLA 7

அதிரைநிருபர் | September 07, 2011 | ,

2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது:

தகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியில் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்படுகின்றது. பதிப்பு மற்றும் அச்சுப் பணிக்கும் அது தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

இந்தக் கவலைகளைப் போக்குவதற்கு 'யுனிக்கோட்' தமிழ் பிறந்துள்ளது.

வருங்காலத்தில் 'யுனிக்கோட்' தமிழே நிலைக்கும் 'யுனிக்கோட்' தமிழின் அருமை அறிந்தும் இவற்றைச் சீர்படுத்த சென்ற திமுக அரசு தவறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையும் தமிழ்வளர்ச்சித் துறையும் கூட்டாக யுனிகோட் தமிழுக்கு முயற்சி எடுக்காதாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்சினைகளைச் சந்தித்தால் சென்ற திமுக ஆட்சி உடனடியாகப் பணிக் குழுவைப் உருவாக்கிப் பிரச்சிணைகளைச் சமாளிக்க முயன்றார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் செம்மொழி மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்த அந்த ஆட்சிக்கு இருக்கவில்லை தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான் தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிகளை செய்வதாக கூறுகின்றார்கள், அந்நிறுவனத்தின் தமிழ் கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப் பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ் கணினிப் பணிக்காக தகவல் தொழில்நுட்ப துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து தனிவாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்கவேண்டும்.


யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம்மொழி சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

தமிழக அரச 9.75 இலட்சம் லேப்டாப்பளை தேர்தல் அறிக்கையின் படி அளிக்கவுள்ளது மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்க இந்த அரசு முன்வரவேண்டும் லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள் லேப்டாப்பை டெண்டர் அடிப்படையி;ல விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களை தயாரிக்க உத்தரவிடவேண்டும்.

ஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களும் தமிழ் விசைளோடுதான் விற்கவேண்டும் என அரசு உத்தரவிடவேண்டும்.

தமிழ் கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்வேண்டும் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு தமிழ் கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம்.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ் கணினி அரசாணையை தான் தத்தமது நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப் பற்றுடன் கணினித் தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும், தமிழ் மொழி எழுத்துக்கள் ஆகியவற்றை கணினி பயன்பாட்டுக்கு ஒருங்குறி அட்டவணையில் அதாவது யுனிக்கோட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் தமிழ் கணினிப்பணி உலகத் தமிழ் மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல பயனுள்ள உரையை நிகழ்த்தியிருக்கிரார்கள் !

இத்தருணத்தில் த.மு.மு.க.தலைமையும் ம.ம.க.வும் மிக முக்கியமாக கணினித் தமிழின் தந்தை தமிழ் ஒருங்குறிக்கு ஒப்பற்ற சேவை செய்து துவக்கப் புள்ளி வைத்து தொடர்ந்து வெற்றி கண்ட மர்ஹூம் தேனீ உமர்தம்பி அவர்களை கவுரப் படுத்த அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் அதற்கான முயற்சியையும் அவசியம் எடுக்க வேண்டும்.

பெரும்பாலான தமிழ் எழுத்துருக்களிலேயே தமிழ் ஒருங்குறியை நிலைத்திருக்க பாடுபட்டவர்கள் அனனவரையும் கவுரப்படுத்த வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல கோரிக்கை,
நீங்கள் கூட்டாண்மையினர்,தோழமையினர்,உறவினர்,

//தமிழில் அளிக்க இந்த அரசு முன்வரவேண்டும்//
இந்த அரசல்ல நம் அரசு என்று பேச உங்களுக்கு முழுத்தகுதியுண்டு.

இனியும் மாணவன் டீச்சரிடம் தயக்கத்துடன் கேட்கும் நிலையில் ஐந்தாண்டுகள் ஓடி விடாமல்,அம்மாவிடம் மகன் உரிமையோடு கட்டாயப்படுத்தி கேட்டு பெறுவது போல நியாமான தேவைகளை சொன்ன வாக்குகளை கொஞ்சமும் குறைவில்லாமல் பெறவேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் அஸ்லாம் பாஷா MLA அவர்களின் கோரிக்கை முக்கியமான அவசியமான பயனுள்ளவைத்தான் இதை மத்திய மாநில அரசு கவனத்தில் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் கணினி அறிவு திறனை வளர்ப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் எல்லாருடைய பாக்கெட்டில் பேனா இருந்தது.என்று செல் போன்,கணினி போன்ற சாதனங்கள்,அசுர வளர்ச்சி பெற்றதோ அன்றே.பேப்பரில் எழுதக் கூடிய பழக்கம் அதிகமானவர்களிடமிருந்து.மறைந்து விட்டன.

மொழி வெறி பிடித்த ஜப்பான் நாட்டவர்கள் என்னதான் இங்கிலிஷ் படித்தாலும் எழுதினாலும் தன் தாய் மொழியான (நிகோங்கோ) என்ற எழுத்துதான்.கணினி கீ போர்டில் இருக்கும்.எதை கிளிக் செய்தாலும் அவர்களின் எழுத்துதான் கண் முன் வரும் . அதுவே அந்த நாடு வளருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

அது போல் தமிழ் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல மாண்பு மிகு முதலமைச்சர் .உறுதி கொள்வதோடு . பெரும்பாலான தமிழ் எழுத்துருக்களிலேயே தமிழ் ஒருங்குறியை நிலைத்திருக்க பாடுபட்டவர்கள் அனனவரையும் கவுரப்படுத்த வேண்டும்.

இறைவனின் உதவியால் தமிழனின் தன் மானத்தை தலை காக்க தவழாமல் தாவ வேண்டுமாய் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த‌ காலத்தில் நம் மாணவர்கள்/வாலிபர்கள் வாழ்வில் முன்னேற ஏதேதோ கோர்ஸ் (பாடம்) படிக்கிறோம் என்று சொல்லி தாய் மொழியை சரிவர எழுத, படிக்க தெரிந்து கொள்வதில் ஏற்பட்ட ஆர்வக்குறைவால் மற்றும் முயற்சியின்மையால் அவர்களால் பிழையின்றி தமிழில் படிக்கவோ அல்லது எழுதவோ இயலவில்லை. சரி ஆங்கிலத்திலாவது புலமைபெற்று இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. ஒரு சாதாரன மனு (அப்ளிக்கேஷன்) ஆங்கிலத்தில் எழுதுவதற்கு கூட பிறரின் உதவியை நாடுகிறார்கள் முதுகலைப்பட்டப்படிப்பு முடித்த பின்பும். இந்த சூழ்நிலை தொடருமானால் பிறகு எவ்வாறு எதிர்கால வாழ்வில் ஜொலிக்க இயலும்?

சீரான பார்வைக்கு எப்படி இரண்டு கண்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் தாய்மொழி மற்றும் பிறமொழி இரண்டிற்கும் பாகுபாடின்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

பள்ளிப்படிப்பில் படிக்கும் இலக்கணம் ஏதோ பரிச்சைக்கு மட்டும் என்று எண்ணி விடாம‌ல் வாழ்நாள் முழுவ‌தும் அதுதான் இல‌க்க‌ண‌ம் என்று மனதில் உறுதி கொண்டு ப‌டித்தால் வாழ்க்கை சிற‌க்க‌ வ‌ழிவ‌குக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல தொலைநோக்கு பார்வையில் வைக்கப்பட்டுள்ள கேரிக்கை.

தமிழ் தாத்தாவால் செய்யாமுடியாததை ஜெயலலிதா அம்மையார் செய்வார்கள் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை.

இன்னும் கணினி தமிழுக்காக பாடுபட்டவர்கள் பற்றி பேசியிருக்கலாம்.

அஸ்லம் பாஷா அவர்கள் யுனிக்கோட் தொடர்ப்பாக பேசிய நல்ல விசயங்கள் மற்ற சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு புரிந்துஇருக்குமா?

Muhammadh said...

மாஷா அல்லாஹ், அருமையான முறையில் எடுத்து வைக்கப்பட்ட கருத்து . தற்பொழுதைய காலங்களில் என்னை போன்ற மாணவர்கள் அனைவரும் ஆங்கிலம் ஆங்கிலம் என்று செல்கிறார்கள் . அவரகளிடம் சென்று தமிழில் எதாவது ஒரு 5 வரி எழுதி கொடுங்கள் என்றால் நிறைய மாணவர்கள்: சாரி டா மச்சான் எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம்டா என்று கூறி விடுகிறார்கள் . காரணம் என்ன வென்றால் அவர்கள் அதிகம் பயன்படுதுவதேல்லாம் கம்பியூட்டர்களும் இண்டர்நெட்டும் தான் . அதில் அதிகமாக ஆங்கிலமே இருப்பதால் அவர்கள் அதையே கூறுகிறாகள். அதே கம்ப்யூட்டர்கள் தமிழில் வந்தால் தமிழக மாணவர்கள் தமிழ் படிப்பைப் பற்றி விளங்கி கொள்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..
இந்த கோரிக்கையை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பானாக.. ஆமீன்!!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு