Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேரூராட்சித் தலைவர் - முற்போக்கு கூட்டணி திடீர் அறிவிப்பு ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2011 | , ,

அன்பார்ந்த அதிரை வாசகப் பெருமக்களே ஸாரி ஸாரி... வாக்காளப் பெருமக்களே !

நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தங்களை அவசர கோலத்திலும் அவதியுடனும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால் விடும் விதமாக முதல் முறையாக நமது வயிற்றுப்போக்குக் கூட்டணி... மீண்டும் ஸாரி... முற்போக்கு கூட்டணி இந்த அதிரைப்பட்டினத்து தேர்தலை மட்டும் சந்திக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் (பீதியுடன் ?) தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரூராட்சியின் வரலாறு தெரியுமா ? சரித்திரம் தெரியுமா? பாரம்பரியம் தெரியுமா? ஹிஸ்டரி தெரியுமா? (எல்லாம் ஒன்னுதானோ – அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்கோ) அது கூட தெரிந்தவர்களும் / தெரியாதவர்கள்தான் இன்று வேட்பாளர்களாக களம் இறங்கியிருப்பதாக தகவல்கள் ஊர் உலகம் முழுவதும் பரவி வந்தாலும், அவர்களுக்கும் சேர்த்தே சுருக்கமாக மக்கள் மன்றத்தின் முன்னால் அதனைப்பற்றி சொல்லி வைக்கிறோம். பேரூராட்சியின் வரலாறு தவிர, பூகோலம், விஞ்ஞானம், கணிதம், வணிகம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது (இடைப்பட்டதில்தானே நாம் என்றைக்குமே இருப்போம்) என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து நிறுத்து நிலையமே இல்லாமல் இருப்பது, குப்பைகளை அள்ளாமல் சேமிப்பது, கொசுக்களைக் கொஞ்சுவது போன்றவை பேரூராட்சி ஆவதற்கான அடிப்படை தகுதிகளாகும்.

தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்கள் பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

இதோடு ஒன்னாங்க்கிலாஸ் முடிஞ்சுது. இனி இரண்டாங்க்கிலாஸ் பாடம்.

இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சியின் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிரைப்பட்டினத்து மக்களின் மனம் வென்ற பேரூராட்சித் தலைவராக ஊரிலுள்ள அனைத்து மக்களின் ஏகோபித்த வேண்டுகோலுக்கினங்க என்னை முற்போக்கு கூட்டணியின் சார்பாக நிறுத்தியிருக்கின்றனர்... !

முதலில் மு.போ.கூ.வின் தேர்தல் நிலைபாடும் அதன் பெரும் மதிப்பிற்குரிய தேர்தல் சின்னங்களும் - ஒரு சிறு அறிமுகம் !

எங்கள் கூட்டனியின் சின்னங்களான காது, மூக்கு, தொண்டை வார்டுகளின் சூழல் அறிந்து அந்த வார்டுகளின் பெரும்பான்மை மக்களைக் கருத்தில் கொண்டு அந்தந்த சின்னங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காது சின்னம் : கேட்பார் பிள்ளைகளாகவும், எங்கே எதுவும் நடக்காதா ! என்று ஏங்கியவர்களாக காது கொடுத்து கேட்பதே வழமையாக இருப்பவர்களின் வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மூக்கு : துர்நாற்றம், குப்பைகள், ஓடாத வாய்க்கால், தேங்கி நிற்கும் சாக்கடை, தெருவோர கழிப்பிடம் நிறைந்த வார்டிற்கு மூக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொண்டை : அடுத்தவர் பிரச்சினையை அலசியெடுக்கும், கழுத்தை நெரிக்கும் அளவுக்கு அவதூறுகள் கிளப்பும், த்ரோட் இன்ஃபெக்ஷன் அதிகமா உள்ளவர்கள் வசிக்கும் வார்டுகளுக்கு தொண்டை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சரி,  இங்கே மு.போ.கூட்டணியால் முடிந்த மற்றும் செய்ய இருக்கும் தொண்டுகளை பட்டியலிடுகிறேன் இது உங்களின் நலன் கருதியல்ல என்னுடைய நலனைக் கருதி மட்டுமே !

முற்போக்கு கூட்டணியின் அதிரை பேரூராட்சி மன்றத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிடும் மண்ணின் மைந்தன், மரத்தின் கொலுந்தன், மேகத்தின் தமையன், கடலின் காதலன், உங்கள் வீட்டு பிள்ளை, நல்லவன், வல்லவன் (என்று நீங்களே சொல்லித்தான் எனக்கே தெரிந்தது) அப்படிப்பட்ட என்னை உங்களின் பொன்னான வாக்குகளை குப்பைகளைக் கொட்டுவதுபோல் கொட்டாமல், வேறு எங்கும் சிதறாமல் ஒருங்கே அளித்து இந்த பெருமை வாய்ந்த அதிரைப்பட்டினத்து தேர்வு நிலை பேரூராட்சிக்கு தேர்ந்தெடுக்குமாறு கட்டளையிடுகிறேன்.... ஸாரிங்க கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னடா இவனும் கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான் என்று மூக்கிலா விரலை வைக்கிறீர்கள்.... அட! இதுக்கெல்லாம் காதைப் பொத்தினா எப்படி ? ஆஹா சொல்லவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தொண்டைப் பிடிக்குதோ !? பார்த்தியலா... உங்களோடு ஒட்டி உறவாடும் சின்னங்களை உங்கள் முன்னால் நிறுத்தி ஓட்டுக் கேட்டு வருகிறேன். ஆகவே சிந்திக்க வேண்டாம், மண்டையைப் பிச்சுக்கிட்டு அலைய வேண்டாம் கண்ணைப் பொத்திக் கொண்டு காதிலோ, மூக்கிலோ, கழுத்திலோ ஓட்டை(??) போட்டுடுங்கள் !!

நாங்கள் வெற்றி பெற்றால் இந்த அதிரைப்பட்டினத்தை எழில்மிகு இ என் டி (ENT) நகரமாக மாற்றுவேன், காது மூக்கு தொண்டைகளுக்கு கட்டவுட் வைத்து மாநகர கம்பீரத்தை கொண்டும் மாற்றுவதற்கு இரவெல்லாம் பாடுபடுவேன், பகலில் பேரூராட்சி மன்றத்திலேயே நல்ல வசதியுடன் கூடிய படுக்கைகள் இருப்பதால் அங்கே உறங்கி விடுவேன். அதற்காக மன்றத்தையே என் வீடாக கைப்பற்றிவிட்டேன் ஆக்கிரமித்து விட்டேன் என்று "கண்" கட்சிக்கரர்களோ "கம்புக்கட்டுக்" கட்சிக்காரரோ அவதூறு கிழப்பினால் அவர்கள் மூக்கை அறுப்பேன். 

அது மட்டுமல்ல இன்னும் இந்த அதிரைப்பட்டினம் பேரூராட்சி தேர்வு நிலையிலேயே இருக்கிறது இதனை நன்றாக தேற்றி படிக்க வைத்து, நல்ல ஆசிரியர்களை நியமித்து ட்ட்யூஷனெல்லாம் வைத்து தேர்ச்சி பெற்ற பேரூராட்சியாக மாற்றிக் காட்டுவேன்.

பாதாளாச் சாக்கடை வசதிகளை இதுவரை செய்து கொடுக்காத ஆட்சியளர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதமாக பாதாளத்திலேயே மூக்குப்பிடிக்கா(த) போராட்டம் நடத்தி ஆங்காங்கே ஆழ்குழாய் பள்ளங்கள் தோண்டி அங்கே சாக்கடைகளை தேங்கிட தேசப்பணி யாற்றுவேன். குப்பைகளை கேட்பாரற்ற இடத்தில் போடும் பழக்கத்தை மாற்றி பக்கத்து வீட்டுச் காம்பவுண்டு சுவர் தாண்டி போட ஓவ்வொரு வீட்டுச் சுவருக்கு அருகில் ஏறு படி அமைத்துக் கொடுப்பேன் இதனால் உங்கள் வீட்டுக் குப்பை உங்களை விட்டுச் சொன்றுவிடும் ! ??

மின்சாரக் கம்பிகள் எல்லாமே மிகவும் பழமையானதாகவும் எந்நேரத்திலும் அறுந்து விழும் சூழல் இருப்பதாலும், கேட்பாரற்று இருக்கும் துருப்பிடித்த மின்கம்பங்களால் என்னருமை அதிரைப்பட்டினத்து மக்களுக்கு ஆபத்துகள் நிறைந்திருப்பதால் அவைகள் அனைத்தையும் அகற்றி (பழய கேபிள் என்ன விலை போகுதுன்னு விசாரிக்கனும்) டெண்டர் முலம் விற்று பேருராட்சிக்கு வருமானத்தைப் பெருக்கிடுவேன். அது மட்டுமல்லாது தெருவுக்கு தெரு புதிய கம்பங்கள் நிறுவி அங்கே இன்றைய விஞ்ஞான உலகில் மிகவும் பாதுகாப்பான சிமினி விளக்குகளை நிறுவிட ஆவண செய்வேன். அதற்கான ஆயத்தமாக ஜப்பான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி (என்னுடைய) வங்கிக் கணக்கெல்லாம் கொடுத்து என் டெடிகேஷனை நிரூபிப்பேன்.

ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கொசுக்களுக்கு என அதிரைப்பட்டினத்தில் ஒருவாரியம் அமைத்து அவைகளின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கப்படும். அதிரைப்பட்டினத்தில் மிகப் பெரிய கொசுப் பண்ணை அமைத்து சுற்று வட்டார மக்களுக்கு சேவைகள் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.  தேவைப்பட்டால் பெருத்தக் கொசுக்களுக்கு முகம் பார்த்து பேர் வைத்து புல்காங்கிதம் அடைய ஏற்பாடு செய்வேன்.

நிறைவாக ஐந்தாண்டுக்கான பதவிக் காலம் சுமூகமாக முடியும் தருவாயில், ஒரு வயாதான அண்ணா(ரை)வை படுக்கையிலிருந்து அலக்கா தூக்கி எடுத்து வந்து பேரூராட்சி மன்றத்தின் முகவாயிலில் ஒரு சகல வசதியுடன் கூடிய முகாம் அமைத்துக் கொடுத்து. எனது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் செய்வேன்... அண்ணாருக்காக உலகத் தொலைக்காட்சிகள் அனைத்தையும் அதிரைக்கு வரவழைத்து நேரலைக்கான ஏற்பாட்டையும் செய்திடுவேன் என்பதை நன்கரை ஆண்டுகளுக்கு முன்னரே வாக்குறுதி அளிக்கிறேன்.

இந்த உண்ணாவிரத அற்பப் போருக்கு சகலவிதமான ஆயுதங்களையும் ஸாரி ஆயத்தங்கள் (குளிர்பாணங்கள், பழங்கள், நொருக்குத் தீண்பண்டங்கள், ஊக்க மருந்து ஊசிகள் ) கிடைக்க ஆவண செய்வேன். அந்த உண்ணாவிரத போரில் கலந்து கொள்ளும் அனைத்து தியாகிகளுக்கும் காலி மணைகள் வாங்கி பதுக்கியிருப்பவர்களிடமிருந்து பிடுங்கி எடுத்து வந்து அதனை இலவச வீட்டு மணைப்பட்டாவாக மாற்றிக் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் !

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூ யப்பா... மூச்சு வாங்குதே !

சோடா எங்கே !???

எல்லாத்தையும் விட முக்கியமாக ஒரு சல்லிக்காசு யாருக்கும் கொடுக்காமலும் வாங்காமலும் இந்த தேர்தலில் நிற்க இந்த முற்போக்கு கூட்டணி எனக்கு கட்டளையிட்டுள்ளது (அ(ட)ப்பாவிகளா…). ஆதலால் இன்று எனது கையிருப்பில் ஏதுமில்லை, ஸ்விஸ் வங்கியை ஏதோ புகைப்படத்தில்தான் பார்த்திருக்கேன் (நம்புங்க !). ஐந்தாண்டு ஆட்சிக் காலத்திலோ அல்லது பதவிக்காலம் முடிந்தவுடனோ பின்னர் என்னிடம் சொத்துக்களோ வங்கியிருப்போ அதிகமிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று கட்சி மேலிடத்திடம் எழுதிக் கொடுத்து உறுதியளித்து இருக்கிறேன். அதற்காகவே எந்த இரகசியத்தையும் வெளியில் சொல்லாமல் முற்போக்கு கூட்டணியின் நலன் கருதி காதைப் பொத்திக் கொண்டு, மூச்சு விடாமல், தொண்டைக்குள்ளே விழுங்கி வைத்துக் கொள்வேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் மு.போ.கூ. தேர்தல் அறிக்கையை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறோம் ! இப்படியாக ஏராளமான திட்டங்களோடு உங்களின் முன்னால் வந்து வாக்கு சேகரிக்க வர இருக்கிறேன். 

முற்போக்கு கூட்டணியின் தாரக மந்திரம் "அச்சமில்லை அச்சமில்லை ஆதலால் எங்கள் வங்கிக் கணக்கில் மக்களுக்கு மிச்சமில்லை மிச்சமில்லை."

இப்படியெல்லாம் எழுத மெய்யாலுமே நான் நினைக்கவே இல்லைங்க, இன்றைய காலகட்டங்களில் அதிரைப்பட்டினத்தில் நடக்கும் காட்சிகளை கண்முன்னால் நிறுத்திடும் நிகழ்வுகளை கண்டதும் கேட்டதன் பின்னர்தான் இப்படியொரு கற்பனை கரைபுரண்டோடுதுங்கோ !

நிறைவுக் குறிப்பு : ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது (மெய்யாலுமே படிச்சிருக்கேங்க) அன்றைய தமிழ் ஆசிரியர் தாமஸ் ஐயா அவர்களின் வகுப்பில் ஒரு கட்டுரைப் போட்டி வைத்தார்கள் அதில் "நான் முதலமைச்சாரானால்" என்ற தலைப்பில் எழுதச் சொன்னார்கள் அங்கே நானும் எழுதினேன் கிடைத்தது மூன்றாவது பரிசு.

அவரிடம் கேட்டேன் என்ன குறை எனக்கு மூன்றாவது பரிசு என்று? அதற்கு அவர் சொன்னது "நீ நல்லாத்தான் எழுதியிருந்தாய் நலத்திடங்களை சொல்வதற்கு பதிலாக நல்லத்திட்டங்களை சொல்லியிருந்தாய்" இது நம்ம தலைவர் (அப்போ மு.க.) அறிக்கை விடுவதுபோல் இருந்தது என்றார் !

நான் என்ன செய்ய !? கேட்டதும் அவரிடம், படித்ததும் அவரிடம், வாசித்ததும் அவர் எழுதியதை !

இப்படிக்கு
முற்போக்கு கூட்டணி

இந்தக் க(ற்)ருவுக்கு(ப்)பனை(யமாக) : அபுஇபுறாஹிம்.

21 Responses So Far:

sabeer.abushahruk said...

ஓஹ், அபு இபுறாகீம்,

இவ்வளவு வழியிருக்கா சம்பாதிக்க, ஐ மீன், சேவை செய்ய.
உங்கள் கூட்டணியில் சேர விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? எனக்கும் சேவை செய்தே தீறனும் என்று ஆசை ஆசையாய் இருக்கு. (நிற்க: என் பேங்க் அக்கவுன்ட் நம்பரை தனி மெயிலில் அனுப்பிட்டேன். வேறு என்னென்ன தகுதி என்று சொல்லவும்)

sabeer.abushahruk said...

பஞ்சாயத்து போர்டிலேயே படுத்துறங்கிக் கையகப்படுத்தும், அதாவது சேவை செய்யும் திட்ட வரைவு ரொம்ப கவர்ச்சிகரமா இருக்கே, அங்கே நாங்களும் தங்கி சேவை செய்ய வழிவகை உண்டா இல்லே தன்னந்தனியா லவட்டும் ஐ மீன் சேவை செய்யும் திட்டமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

ரொம்ப சிம்பிள், விருப்ப மணுக்களுடன் ஒன்றிலிருந்து 9க்குள் இருக்கும் நம்பரை முதலில் போட்டுக் கொண்டு குறைந்தது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரே வரிசையில் எவ்வளவுக்கு அதிகமாக பூஜ்ஜியங்கள் / சைபர் போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் !

வயது வரம்பு இல்லை

உங்களுக்கு பின்னாடி ஒரு கூட்டம் இருக்கான்னு உறுதியாக தெரியாதவரை உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..

இன்னும் நிறைய இருக்கு...

ஒன்னு ஒன்னா சொல்றேன் அப்புறமா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பஞ்சாயத்து போர்டிலேயே படுத்துறங்கிக் கையகப்படுத்தும், அதாவது சேவை செய்யும் திட்ட வரைவு ரொம்ப கவர்ச்சிகரமா இருக்கே, அங்கே நாங்களும் தங்கி சேவை செய்ய வழிவகை உண்டா இல்லே தன்னந்தனியா லவட்டும் ஐ மீன் சேவை செய்யும் திட்டமா?//

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எதனையும் என்னால் இப்போது சொல்ல முடியாது !

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.. உறுப்பினர்களின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு உங்களுக்கான தனியிட வசதி பற்றி பொதுக்குழுவில் பேசி முடிவு செய்கிறோம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கலக்கும் வாக்குறுதிகள்.
உரைக்கட்டும் வாக்குறுதிகள்
வங்கி கணக்கு நாங்களும் தந்தால் பலன் பகிர்வு உண்டா?
ரமலான் வரை உண்ணாவிரதம் வராமல் தலைமை தாக்கு பிடிக்கட்டும்.
****************************************************

இன்றைய சொந்தங்களாகிய நாளைய சேர்மன்களாகிய அஸ்லம் காக்கா, அஜீஸ் காக்கா,முனாப் காக்கா,
மூவரும் இணைந்து கட்சியை மறந்து முற்போக்காய் கூடி இன்றே ஊரின்நலனை நாடி ஊரைக்கூட்டாமலேயே நீங்கள் மூவரும் ஒரு ஒருமித்த நல்ல முடிவெடுத்தால் ஊரே உங்களை போற்றுமே!
ஒத்த ஒரு வயதுடைய மூவர் என்பதால்,
சொந்தங்கள் என்ற முறையில் சிறியவன் இந்த தளம் மூலம் சொல்கிறேன்.
தவறென்றால் சாரி நாளைய சேர்மன்களே!

Yasir said...

வித்தியாசமான கூட்டணி அலசல்

Yasir said...

கப்பலுக்கு போன மச்சான்...நிறைய நாள் கூகுள் தேடலுக்கு பிறகு கிடைத்தது

http://www.youtube.com/watch?v=k0CDWHlyBIM&feature=player_embedded

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உரைக்கட்டும் வாக்குறுதிகள்
வங்கி கணக்கு நாங்களும் தந்தால் பலன் பகிர்வு உண்டா?//

அதிரைக்கு என்று 5G அலைக்கற்றை வியாபாரம் கடல் வழியாக செய்ய கையெழுத்திடும்போது லண்டனில் இருக்கும் தொழில் அதிபர் வரிசையில் உங்களின் பெயர் வரும்படி பார்த்துக் கொள்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கப்பலுக்கு போன மச்சான்...நிறைய நாள் கூகுள் தேடலுக்கு பிறகு கிடைத்தது//

ரொம்பவே கஷ்டப்பட்டு தேடினமாதிரி தெரியுது ?

sabeer.abushahruk said...

கப்பலுக்குப் போன மச்சானை இவர் எதுக்குத் தேடனுமாம்? (எல்லாம் அல்ஹம்துலில்லானு கைவசம் இருக்கும்போது)

Yasir said...

//கப்பலுக்குப் போன மச்சானை இவர் எதுக்குத் தேடனுமாம்// இல்லை காக்கா...நாங்கள் கருத்து தெரிந்த வயதில் கேட்ட பாடல்...கடந்த காலங்களை அசைபோட தேடினேன் வேற எந்த இண்டர்னல் அஜெண்டாவும் இல்லை

ZAKIR HUSSAIN said...

To Bro Abu Ibrahim,

பஞ்சாயத்து போர்டு இதுபோல் ஒரு 'தலை" யை இது வரை சந்தித்து இருக்காது. சும்மா சொல்லப்டாது...ஒரு பக்கத்தில் இத்தனை வாக்குறுதியா?....குடுகுடுப்பை & கம்பெனி லிமிட்டட் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் ஜக்கம்மாவுக்கு கூட பொருக்காது ..இப்படியெல்லாம் வாக்கு தந்தால்.

To Bro Yasir,

செல் போன் இல்லாத காலத்துப்பாடலை கண்டு பிடித்து தந்திருக்கிறீர்கள்...எனக்கு என்னவோ National Panasonic 5410 டேப்ரிக்கார்டர் தான் கண்ணுக்கு தெரிகிறது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூ யப்பா... மூச்சு வாங்குதே !
சோடா எங்கே !??? //

இந்தாங்க தலைவரே கொஞ்சம் கூலா சுடுதண்ணி குடிங்க

ரொம்ப நல்ல பே(ஞ்)சிட்டிய தலைவரே! இந்த பஞ்(சாய)ஜத்து போர்டுக்கு நீங்கத்தான் தகுதியா ஆடு (சாரி) ஆளு.

அன்பான வாக்காள பெரு மக்களே !எங்கள் தானே தலைவர்.உங்களுக்குமுன் நல்ல ஒரு வலுவிழந்த தேர்தல் வாக்குறுதிகளை தந்திருக்கிறார்.கருப்பனைக்கு எட்டாத செய்திகளை இவ்வளவு தைரியமாக.சொல்லி இருக்கிறார் என்றால்.நாம் ரொம்ப கூர் மையாக(சிந்திக்க) கேட்க வேண்டிய விசயம்.எனவே உங்களிடம் பரிதாப்பத்தோடு கேட்டுக் கொள்வது என்னவென்றல்.உங்கள் பொன்னான வே(ஓ)ட்டுகளை சிந்தாமல் சிதறாமல் சிரிச்சிக்கிட்டே போய்டுங்கள்.

Shameed said...

வார்த்தைகளா? அல்லது வெட்டருவாள? சரிபோடு போட்டுள்ளீர்களே!

sabeer.abushahruk said...

கட்சித் தலைமை கவனத்திற்கு:

செயல் திட்டங்கள் குறித்து மேற்கொண்டு விவரங்கள் தராத வகையில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை சாத்திய? எனவே, உடனே ஆவன செய்யவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: முற்போக்கு கூட்டணியின் இரகசியங்களை பாதுகாக்கனும்னு கையெழுது வேற வாங்கிட்டய்ங்களே... கொஞ்சம் வெயிட் பன்னுவோமே... அறிவித்திருக்கும் மற்ற வேட்பாளர்களின் அறிவிப்வு வரும்வரை காத்திருக்கிறோம் உண்ணிப்பாக அவதானித்து மற்ற செயல் திட்டங்களை அறிவிக்க !

மனசுல உள்ளதைச் சொல்லிடுறேனே!

மந்தி ஸ்பெஷல் சமையல் காரர்கள், கலரி ஸ்பெஷல் சமையல் காரர்கள், மச்சான் ஸ்பெஷல் சமையல் காரர்கள், வெற்றி விழா ஸ்பெஷல் சமையல் காரர்கள் இவர்கள் அனைவருக்கும் தனித் தனி வாரியம் அமைத்து... அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கிட யோசித்து கொண்டும் இருக்கிறோம்.

U.ABOOBACKER (MK) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சேர்மன் பதவிக்கு போட்டியிடும் நம் சகோதரர்கள் ஈகோவைவிட்டு சமுதாய ஒற்றுமை கருதி பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து போட்டியிலிருந்து விலகினால் அல்லாஹ்விடம் மிகப்பெரும் நிரந்தர பதவி கிடைக்கும். செய்வார்களா..!

அன்புடன்
முகி அபுபக்கர்

அப்துல்மாலிக் said...

வரலாற்றில் முதன்முறையாக எந்தக்கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டிப்போடும்போது உங்க முற்போக்கு கூட்டணிக்கு நிச்சயம் ஹிதாயத்து உண்டு :)

அப்துல்மாலிக் said...

//U.ABOOBACKER சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

சேர்மன் பதவிக்கு போட்டியிடும் நம் சகோதரர்கள் ஈகோவைவிட்டு சமுதாய ஒற்றுமை கருதி பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து போட்டியிலிருந்து விலகினால் அல்லாஹ்விடம் மிகப்பெரும் நிரந்தர பதவி கிடைக்கும். செய்வார்களா..!

அன்புடன்
முகி அபுபக்கர் /

இந்த வேண்டுகோள் நிறைவேற்றபடுமா, நல்லது நடக்கும்... இன்ஷா அல்லாஹ்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//U.ABOOBACKER சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

சேர்மன் பதவிக்கு போட்டியிடும் நம் சகோதரர்கள் ஈகோவைவிட்டு சமுதாய ஒற்றுமை கருதி பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து போட்டியிலிருந்து விலகினால் அல்லாஹ்விடம் மிகப்பெரும் நிரந்தர பதவி கிடைக்கும். செய்வார்களா..!

அன்புடன்
முகி அபுபக்கர் /

இந்த வேண்டுகோள் நிறைவேற்றபடுமா, நல்லது நடக்கும்... இன்ஷா அல்லாஹ்..

ஊர் நலன் கருதி ஒன்றுபட்டு எல்லோரும் செயல்பட துஆ செய்வோமாக..

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாரும் நலமா? முதலில் என்னை மன்னிக்கனும் தாமதமான வருகைக்கும் கருத்திற்கும்.ஒபாமாவின் அடுத்த தேர்வுக்காக ஓட்டு சேகரிக்கவும்(அவர் இனி வெற்றி பெருவது ???)சென்ற(கணவில்) காரணத்தால் இந்த தாமதம் மேலும் இங்கும் முற்போக்கு கூட்டணியின் பிற்போக்கு தனம் . காதுவில் தொடங்கி மூக்கும், தொண்டையும் ஸ்ட்ரைக் செய்ய என்ன சொல்வது? ஆனாலும் சங்கத்தில் அனுமதி பெற்ற கூட்டணிக்கே என் ஓட்டு.வாழ்க முற்போக்கு கூட்டணி வெல்ல உடல் நலம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு