அஸ்ஸலாமு அலைக்கும்..
இதற்கு முன்னர் சிறிய கட்டுரையாக என்னுடைய முதல் பதிப்பை பளிச்சிட வைத்து அதற்கு அருமையான கவி வரிகளால் அலகங்கரித்தது அதிரைநிருபர். அதுவே, தேனாக உங்களின் மனதில் இனித்தது தீனோடு. இந்த முறை என்னுடைய அடுத்த முயற்சியாக பதியும் பதிப்பில் ஏழு வகையான சத்துணவுகளை பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.
முதலாவதாக விட்டமின் C :
இந்த வகையான விட்டமின்கள் தோல் , எலும்பு , நரம்பு , எலும்பு பிடிப்புள்ள தசை ஆகியவைகளை வளர்க்கும். வலுவாக்கும். இந்த சத்து தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, மிளகு, இலை வகையில் உள்ள தாவர வகைகளில் அதிகமாக உள்ளது.
இரண்டாவதாக விட்டமின் B 12:
உடல் உறுதிக்கு தேவையான ஜீவ அணுக்கள் (செல்ஸ்) வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும். இந்த சத்து எல்லா வகையான இறைச்சிகளிலும் உண்டு. குறிப்பாக ஈரலில் அதிகம் உள்ளது.
மூன்றாவதாக பயோட்டின் :
இந்த சத்து உழைப்பில் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவுகின்ற புரதச் சத்து. இறைச்சி, காய்கறி, வேர்க்கடலை, பால், வாழைப்பழம், திராட்சை ஆகியவற்றில் நிறைய உள்ளது.
நான்காவதாக விட்டமின் D :
இது எலும்புகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த சத்து மீன் கொழுப்பிலும், பால், முட்டை ஆகியவைகளில் இருக்கிறது..
ஐந்தாவதாக போலோசின்
இது இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளை சீர் செய்து, உடம்பைச் செம்மைப்படுத்தும். இந்த சத்து ஈரல், இலைவகை தாவர உணவு, பொதுவாக காய்கறிகள், முட்டை, வாழைப்பழம், ஆரஞ்சு ஆகியவைகளில் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இது மாதிரியான உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வது சிறந்தது .
ஆறாவதாக விட்டமின் K :
இது இரத்த ஓட்டத்தை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறது (Blood Stabilizer) இந்த சத்து கீரைகள், பழங்கள், முட்டை, சோளம், கம்பு, கேப்பை, காலிபிளவர் ஆகியவைகளில் உண்டு.
நிறைவாக நியாஸின்
இது உண்ணும் உணவை சக்தியாக மாற்றும். இது ஈரல், இறைச்சியில் மிருதுவான பகுதிகள், மீன், மற்றும் சிறு தானியங்களில் உள்ளது..
- M.Y. முஹம்மத்
11 Responses So Far:
நல்ல பயனுள்ள நினைவூட்டல் பதிவு !
அளவான சாப்பாடு !
அதன் பயன் அறிந்து சாப்பிடவும், ஆரோக்கியம் வேண்டி ஆட்டோவிலே, அலல்து அடுத்தடுத்த ஊர்களுக்கு ஓடாவேண்டியதில்லை...
எல்லாமே கைக்கெட்டும் தூரத்திலிருக்கும்போது, எங்கிருந்துதான் நோய்கள் அதன் சேய்களை பெற்றெடுக்கிறதோ !?
அஸ்ஸலாமு அலைக்கும்.
m.y. முஹம்மதின் நல்ல அளவான சத்தான உணவுட்டல் வாழ்த்துக்கள் .
//உடல் உறுதிக்கு தேவையான ஜீவ அணுக்கள் (செல்ஸ்) வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும். இந்த சத்து எல்லா வகையான இறைச்சிகளிலும் உண்டு. குறிப்பாக ஈரலில் அதிகம் உள்ளது.//
அதா கலரி காரவுட்டுலே சட்டிலே ஈரல் வரவே மாட்டேன்குதா இப்ப புரியுது மருமொவனே.
உபயோகமுள்ள வைட்டமின் உணவுகள்.
வாழ்த்துக்கள் இளம் மருத்துவருக்கு.
நல்ல சத்தான ஆக்கம் ....m.y. முஹம்மத் விடம் இருந்து.....
உபயோகமுள்ள வைட்டமின் உணவுகள்.
வாழ்த்துக்கள் இளம் மருத்துவருக்கு.
தம்பி முஹம்மதின் ஆக்கம் சத்தான ஊட்டம்....
"கொலஸ்ட்ரால்/தைராய்ட் பிரச்சினைகளுக்காக ஒரு பக்கம் கறி மற்றும் ஆட்டின் ஸ்பேர்பார்ட்ஸ் பக்கம் தலவச்சி கூட படுக்காதீங்கண்டு சொல்றாஹ. அதிரை நிருபர் பக்கம் நல்லா ஈரலையும், கிட்னியையும் வெட்டுங்கண்டு சொல்றாங்ஹ ஒரே கன்ஃப்யூஷனா இருக்குதே?"
சாப்ட்லாமா? வேணாமாண்டு சட்டுண்டு சொல்லுங்க அடுப்புளெ செவரொட்டி வேவுது.......
ஆட்டின் ஈரல் வகையறாக்களில் மிகுந்த கொலஸ்ட்ரால் அடங்கி இருப்பதாக (தர்ஹாவல்ல) படித்திருக்கிறேன். நல்லா சாப்ட்டுபுட்டு ஒவ்வொரு நாளும் அஞ்சு கிலோ மீட்டர் தூரம் வேக்க,வேக்க ஓடுணியன்டா சரி.....அது தானே ப்ரச்சினை என்று சொன்னியண்டாக்கா இதை திண்பது அதை விட ப்ரச்சினை தெரியுமுள்ளெ............
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
குறிப்பாக பிள்ளைகள் எதுவும் சாப்பிடமாட்டார்கள், ஆட்டின் ஈரலை சுட்டு அ வறுத்து குழந்தைகளுக்கு அதிகம் கொடுங்க என்று குழந்தைகள் மருத்துவர் சொல்கிறார், அதில் சாதம், சாமார், உணவைவிட அதிக விட்டமின் இருக்காம்
நல்ல ஆக்கம் சகோ முகம்மது
உடல்நலக்குறைவால் டானிக், மாத்திரை சாப்பிடும்போது மறக்காமல் விட்டமின் B 12 உள்ள மாத்திரையும் டாக்டர் எழுதிதருவார்
ஆக மொத்தம் நான்வெஜ் சாப்பிடும் ஆட்கள்தான் எல்லா விட்டமினும் ஒரு சேர கிடைத்த பலமிக்கவர்னு சொல்றீங்க..
வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
மூட்டு வலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை போக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அந்த மாத்திரைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் இங்யங் ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களில் வலி நிவாரணத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களில் 51 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
நன்றி : மாலைமலர்
//நல்ல சத்தான ஆக்கம்//
ஆமோதிக்கிறேன்.
நல்ல சுவையான பின்னூட்டம்.
ஆயினும், குறிப்பிட்ட சத்துக்காக ஈரல் போன்ற உணவை எடுத்துக்கொண்டால் சைட் எஃபெக்ட் ஏதும் தாக்காதா என்றும் விளக்கி விடுங்களேன்.
Post a Comment