Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுற்றித் திரியும் வாலிபமே ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2011 | , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

வாலிபமென்பது வயதை முன்னால் வைத்து வழக்காடும் சொல் மட்டுமல்ல ! உங்களின் உள்ளங்களையும் உடல் ஆரோக்கியத்தியத்தையும் மையப்படுத்தி சுழலும் ஒரு சூறாவளி, அது அடிக்கும் திசை எதுவென்று தெரிந்து கொள்ள முடியாத கண நேரத்தில் எல்லாமே முடிந்துவிடும் அங்கே தடம் புரண்டால்.

நம்மில் பெரும்பாலோர் பொருள் ஈட்டுவதற்காக பெரும்பாலும் அயல் நாடுகளுக்கோ அல்லது அயலூர்களுக்கோ சென்று சில வருடங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து விடுமுறை கிடைக்கும் காலங்கள் ஊருக்கு திரும்பி வருகிறோம். அதற்கான உன்னத நோக்கம் தாய், தந்தை, மனைவி, மக்கள், மற்றும் குடும்பத்தார்களையெல்லாம் கண்டு அவர்களோடு உண்டு பாசமிகு நேசங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் இன்னும் அல்லாஹ் அனுமதித்த செயல்களில் ஈடுபடவுமே. இச்சூநிலையில் நம்மில் பலபேர். தாயகம் வந்தவுடன் நண்பர்களோடு விதவிதமாக சமைத்து உண்டு ஜாலியாக சுற்றவேண்டும். என்ற நோக்கில்தான் தாயகம் வருவதை வாயால் சொல்லாமல் செயலால் நிரூபித்து காட்டுகிறார்கள்.

விடுமுறையில் வந்திருக்கக்கூடிய அந்த நாட்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்! மனைவி, மக்களோடா? நண்பர்களோடா? நண்பர்களோடு என்றுதான் சொல்லவேண்டும். வீண் பேச்சுக்களிலும், அடுத்தவர்களை பற்றி பேசுவதில் அலாதியான தனி இன்பம் கொண்டவர்களாகவும். பேச்சுலர் உல்லாசப் பயணம் பயணித்து வருவதையும் காணுகிறோம்.

இந்த ஆக்கத்தை படிக்கக்கூடியவர்களே! இவைகள் பொறாமையினால் எழுதப்பட்டவை என்று எண்ணிவிட வேண்டாம். சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் என் கருத்துக்களை எழுதுகிறேன் என்பதை தயைகூர்ந்து நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

பொன்னான நேரத்தையும் திரும்பி வராத வயதையும் சேர்த்து. அதிக நேரத்தை நண்பர்களோடு கழித்திடும் அன்பர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் : "மனிதர்களே! நாம் உங்களை வீணுக்காகவும்  விளையாட்டுக்காகவும் படைக்க வில்லை. மாறாக நீங்கள் என்னை வணங்க வேண்டும். என்பதற்காகவேயன்றி வேறில்லை."

நம் வணக்கத்திற்கு வைத்திருக்கின்ற அளவு கோல், தொழுகையில் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கட்டியதிலிருந்து சலாம் கொடுக்கும் வரைதான் என தவறான கண்ணோட்டத்தில் தொழுது முடித்தவுடன். அவசர அவசரமாக எதையோ சாதிப்பது போல் எழுந்து ஓடுகிறோம். எதற்காக? நண்பர்களோடு ஊராரைப் பற்றி கதைத்து கரைத்து விட்டு வந்ததை மீண்டும் மீட்டெடுப் பதற்காக.

நாம் வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொன்னால். மேடு பள்ளம் வளைவுகளை பார்த்து அதற்கு ஏற்றாற்போல்.வாகனத்தை ஓட்டிச் சென்றால்தான் சரியான இலக்கை அடைய முடிகிறது.

மாறாக வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொல்லி மேடு பள்ளங்களை பார்க்காமல் நண்பர்களோடு ஜாலியாக கூத்தும் கும்மாளமும் அடித்து வாகனத்தை ஓட்டினோம் என்று சொன்னால் பெரும் விபத்திற்குள்ளாகி சின்னா பின்னமாகி விடுவோம்.

அது போலதான் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதற்கு நம்மை அல்லாஹ் நல்ல வழிகாட்டியாக ஆக்கி இருக்கின்றான். அதை சரியான முறையில் பயனுல்ல வகையில் இயக்கவில்லை என்றால் பெரும் விபத்துக்குள்ளான நரக படுகுழியில் விழுந்து நாசமாகி விடுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.

இன்று பிள்ளைகள் மீதுள்ள. அளவுக்கு அதிகமான பாசத்தின் காரணமாக.காசு பணத்தையும் கொடுத்தும் அவர்கள் எதை வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறார்களோ அதை வாங்கி கொடுத்துவிட்டு அழகுபார்ப்பதோடு. பிறகு அழுதும் புலம்புகிறார்கள். 

ஆம்! குறிப்பிட்ட வயதை வந்து அடைந்த மகன் கியர் டூவீலர் வாகனம். வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறான் என்றவுடன் அவர்களின் மீதுள்ள பாசம் மேலோங்க மனமில்லாமல் வாகனத்தை வாங்கி கொடுக்கிறார்கள் பரிதாபத்திற்குரிய அந்த பெற்றோர்கள்.

அவர்களோ குறிப்பிட்ட நேரங்களில் சக நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஆகாயத்தில் கழுகு இரைக்காக வட்டம் அடிப்பது போல் முக்கியவீதிகளை  வாகனத்தில் வட்டமிட்டு காதல் வெறி கொண்டு கன்னி பெண்களை குறி வைத்து குடும்ப பெயர்களை கேட்டு நாலு பேர் சிரிக்கும் அளவுக்கு வித்தைகள் காண்பிக்கிறார்கள் விளங்காத வாலிபர்கள் . 

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும். எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் . உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது,கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். 

நம் வாழ்க்கை ஒரு நீர் குமிழி போன்றது. அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எந்த நேரத்தில் உடையுமென்று தெரியாதது போலவே. நாம் உலக ஆசையில் மிதந்து கொண்டிருக்கும் போதே நம்மை விட்டு உயிர் பட்டென்று பிடுங்கப்படும்.

ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தின் பாதையில் நம் குடும்பங்களோடு சேர்த்து. சீரான வாழ்க்கையெனும் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்தருள்வானாக. ஆமீன் ... !   

- லெ.மு.செ.அபூபக்கர்

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

LMS(அ): மற்றுமொரு பஞ்ச் அதுவும் இஞ்ச் இஞ்ச் ஆக நகர்த்தி !

வாலிபம் வாசலில் நின்றால்
வயோதிகம் நிலைப்படியில் நிற்கிறது !

அதிரை என்.ஷஃபாத் said...

'வெகேஷன்' நாட்களின் ஒவ்வொரு மணித்துளியையும் திட்டமிட்டு செலவிட வேண்டும் என்பதையும், வீணான பேச்சுக்களிலும், பயனற்ற செயல்களிலும் காலம் கழிவதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதையும் LMS அவர்களின் இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது.

இருப்பினும், இந்த தலைப்பில் இன்னும் நிறைய எழுதி, பகுதி பகுதியாக வெளியிட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கி இருக்கலாம் என்பது என் கருத்து.
உதா.
முதல் பகுதியில், வெகேஷன் செல்லும் எண்ணம் முதலில் மனதில் பட்டதும் ஏற்படும் மகிழ்வும், கனவுகளும்.

இரண்டாம் பகுதியில், பயணத்திற்காக தயாராதல், போராட்டங்கள், பயண ஏற்பாடுகள், யார் யாருக்கு என்ன பொருள் வாங்குவது என்பதில் ஏற்படும் குழப்பம், 'பெட்டி கட்டுதல்(பெட்டி கட்டும் நேர்த்தி)' :)

மூன்றாம் பகுதியில், பயண அனுபவங்கள், பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள், பயணத்தின் பொழுது உள்ளோடும் கனவு/நினைவு அலைகள்
நான்காம் பகுதியில், வந்து இறங்கி வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள்.கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்

பிந்தைய பகுதிகளில் 'வெகேஷன் காலம்- அதை செலவிடும் முறைகள்- உபயோகமாக செலவழிக்க வழிகள்-தவிர்க்க வேண்டிய செயல்கள்' பின், பயண நாள் நெருங்குதல், பயணம்.

'வெகேஷன்' - இது கடல் போன்றதொரு தலைப்பு. :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//'வெகேஷன்' - இது கடல் போன்றதொரு தலைப்பு. :)//

அதனைக் கூட நீங்களே எழுதலாமே... எட்டுபக்க கட்டுரையை எட்டு வரிகள் கவிதையாகவும் ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுற்றித் திரியும் வாலிபமே. (சகிப்புத்தன்மை அற்றதால் இன்றைய தேர்தலுக்கும் பொருந்தும்.) சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வு.

ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தின் பாதையில் நம் குடும்பங்களோடு சீரான வாழ்க்கையெனும் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்தருள்வானாக. ஆமீன் ... !

அதையே வேண்டியவனாக.

அபு ஆதில் said...

சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட கருத்து.

[[நம் வாழ்க்கை ஒரு நீர் குமிழி போன்றது. அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எந்த நேரத்தில் உடையுமென்று தெரியாதது போலவே. நாம் உலக ஆசையில் மிதந்து கொண்டிருக்கும் போதே நம்மை விட்டு உயிர் பட்டென்று பிடுங்கப்படும்]].
இதை உணர்ந்து கொண்டாலே போதும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

// அபு இபுராஹிம் எழுதியது.
அதனைக் கூட நீங்களே எழுதலாமே... எட்டுபக்க கட்டுரையை எட்டு வரிகள் கவிதையாகவும் ! :)//

நல்ல ஒரு பணிவான கேள்வி.கட்டுரையை தொடராக எழுதும் போது அதை படிக்கக் கூடியவர்கள் சடைவு அடைவதை நாம் பார்க்கின்றோம்.கேள்வி படுகின்றோம். எனவே அன்பு தம்பி ஷாஃபாத்திடமிருந்து நல்ல ஒரு ஆக்கத்தை எதிர் பார்க்கின்றோம் .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு