விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படக் கூடிய மிகவும் முக்கியமான கருவி இந்த டெலஸ்கோப். பூமியில் இருந்து இந்த டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்ச்சத்திரங்களை ஆராய்ச்சி செய்கின்றனர். தற்போது ஒருபடி மேலே போய் இந்த டெலஸ்கோப்பை பூமிக்கு மேலே 600 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை சுற்றி வலம் வரும் படி செய்து பல கிரகங்களையும் படம் எடுத்து அனுப்பும்படி செய்து அதனை பூமியில் இருந்து கொண்டே ஆராய்ச்சி செய்கின்றனர். அது சரி இந்த டெலஸ்கோப்பை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா ? அட ! இதென்ன கேள்வி என்றுதானே கேட்கிறீர்கள், அவர்தான் கலிலியோ இருப்பினும் மேலும் விபரங்களை நம்ம விக்கி அங்கிளிடமே கேட்போமே.
"தொலைநோக்கி தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாக பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை விபரிக்கும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது விபரங்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.
கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.
தொடக்ககாலத் தொலை நோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது."
ஒரே பொருளை பல தினுசுகளில் வேலை வாங்குவதில் அவர்கள் (மேலை நாட்டினர்) பலே கில்லாடிகள் என்பது உண்மை. நாமும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இங்கு நாம் நிரூபித்து ஆகவேண்டும் உதாரணமாக இட்லிமா நாம் இட்லி மட்டும் அவிப்பதில்லை அதை தோசையாகவும் சுடுகின்றோம் ரோஸ்டாகவும் சுடுகின்றோம் அதே ரோஸ்ட்டுக்குள் பூரிக்கு வைக்கும் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து மசால் தோசையாகவும் செய்கின்றோம் அவர்கள் விஞ்ஞானத்தில் வித்தியாசம் செய்கின்றார்கள், நாம் உணவில் வித்தியாசம் செய்கின்றோம். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
விசயத்திற்கு வருவோம், பூமிக்கு மேலே சுற்றி வரும் இந்த டெலஸ் கோப் எவ்வளவு தூரத்தில் உள்ள கோள்களை மற்றும் நட்சத்திரங்களைப் படம் எடுக்கும் என்று பார்ப்போம். இவை 14 பில்லியன் ஒளி ஆண்டு தூரம் வரை உள்ள கோள்களை மிக தெளிவாகப் படம் எடுக்கும்.
அது என்ன ஒளி ஆண்டு? நமக்கு தெரிந்தது எல்லாம் கால் ஆண்டு, அரையாண்டு, முழுஆண்டு, அதையும் தாண்டி கிமு, கிபி, மற்றும் ஹிஜ்ரி.
இப்போது ஒளி ஆண்டு பற்றி பார்ப்போம்.
ஓர் ஒளி ஆண்டு தூரம் என்றால் ஒளியானது ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதைத்தான் ஓர் ஒளி ஆண்டு என்று சொல்கின்றோம் ,ஒளி ஒரு வினாடியில் 1,86,000 மைல் (கிலோ மீட்டர் அல்ல) தூரம் பயணம் செய்யும். அப்படி என்றால் ஒரு நாளில் ஒளி எவ்வளவு தூரம் பயணம்செய்யும் என்று கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே (365 நாட்களில்) ஒரு வருடத்திற்கு பெருக்கிகொண்டால் அதுவே ஓர் ஒளி ஆண்டாகும்,
நம்மை நாம் மாற்றிக்கொள்வோமா!
பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதை எல்லாம் நாம் அறிவியல் முன்னேற்றத்தால் மிக சாதுர்யமாக பார்த்துவிடுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விசயங்களை கோட்டை விட்டுவிடுகின்றோம்.
சமீபத்தில் நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்க நேர்ந்தது சலாம் சொல்லி பேச தொடங்கியபோது அந்த நண்பருக்கு சொந்தக்காரர் ஒருவர் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் ஹான்ட் பிரேக் போடாத கார் நகர்வதுபோல் என்னை விட்டு நகர்ந்து அவரிடம் (என்னை தனியே விட்டுவிட்டு )போய் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பருக்கு வேண்டிய இன்னொருவர் வந்துவிட்டார் அப்போது ஃபஸ்ட் கியர் போட்ட காரைப்போல் பேசிக்கொண்டு இருந்த இரண்டாவது ஆளையும் விட்டுவிட்டு நகர்ந்து மூன்றாவது ஆள் கூட போயே போய்விட்டார் !
சமீபத்தில் நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்க நேர்ந்தது சலாம் சொல்லி பேச தொடங்கியபோது அந்த நண்பருக்கு சொந்தக்காரர் ஒருவர் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் ஹான்ட் பிரேக் போடாத கார் நகர்வதுபோல் என்னை விட்டு நகர்ந்து அவரிடம் (என்னை தனியே விட்டுவிட்டு )போய் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பருக்கு வேண்டிய இன்னொருவர் வந்துவிட்டார் அப்போது ஃபஸ்ட் கியர் போட்ட காரைப்போல் பேசிக்கொண்டு இருந்த இரண்டாவது ஆளையும் விட்டுவிட்டு நகர்ந்து மூன்றாவது ஆள் கூட போயே போய்விட்டார் !
இதை படிக்கும் சகோதரர்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பேசிக்கொண்டு இருப்பவரிடம் அனுமதியை நளினமாக சொல்லிவிட்டு நகர்ந்தால் கொஞ்சமாவது நம்மீது ஒரு மறியாதை எழும் அப்படியில்லை என்றால் நம்மீது அவருக்கு அநியாத்துக்கு கோபம்தான் வரும்.
- Sஹமீத்
வெட்டியது (cut) : விக்கிபீடியா அங்கிளிடம்
ஒட்டியது (paste) : 2,3 மற்றும் 4வது பத்திகளில்
வெட்டியது (cut) : விக்கிபீடியா அங்கிளிடம்
ஒட்டியது (paste) : 2,3 மற்றும் 4வது பத்திகளில்
27 Responses So Far:
மிகச் சரியான தொலை நோக்கு பார்வை !
சரி, நான் எங்கேயிருக்கேன் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் !??
கலிலியோவை ஹெல்புக்கு கூப்பிடக் கூடாது !
நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னால் போதும் நாங்க டெலிச்கோப்பை வச்சு பார்த்து சொல்றோம்.. ஏன்னா எங்களுக்கு வழி தெரிஞ்சால்தான் பார்க்க முடியும். .
முஹம்மத்: நானிருக்குமிடம் சொல்லவா ?
அபுமுஹம்மத் இருக்குமிடத்திலிருந்து வடக்காலே 6 கி.மீ தொலைவிலும் கிழக்கே அரபிக் கடலும்... விமான நிலையத்திலிருந்து 4 கி.மீ.தொலைவிலும்...
அபு முஹம்மத் இருக்குமிடம் செல்ல நடந்து சென்றால் 35 நிமிடங்களும், காரில் சென்றால் 2 மணிநேரமும் 45 நிமிடமும் (பார்க்கிங்க் கிடைக்காமல் சுற்றும் நேரங்களை கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொண்டேன்), பேருந்தில் சென்றால் 40 நிமிடத்திற்கு மேலும்...
இதுபோதுமா இன்னும் தூரமா சொல்லனுமா ? :)
ரொம்ப தூரம் போயிட்டீங்க.. உங்கள் உதவியால் உலகில் கால் பகுதியை சுற்றிவிட்டேன்(படித்துக்கொண்டே) நீங்கள் துபையில் இருப்பதாக எங்கள் டெலிச்கோப் கண்டுபிடித்து விட்டது....
//ரொம்ப தூரம் போயிட்டீங்க.. உங்கள் உதவியால் உலகில் கால் பகுதியை சுற்றிவிட்டேன்(படித்துக்கொண்டே) நீங்கள் துபையில் இருப்பதாக எங்கள் டெலிச்கோப் கண்டுபிடித்து விட்டது....///
இதுக்குத்தான் முஹம்மத், ரொம்ப ஊரைச் சுற்றக் கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க !? (சும்மா சொன்னேன்)... !
துபாய் என்று தெரிந்தாகிவிட்டது இன்னும் துல்லியமாக கண்டறியத்தான் கூகிலானந்தா ஆசிரமத்தில் மிகப் பெரிய தொலைநோக்கி வைத்திருப்பாய்ங்களே அங்கே பார்த்தாலே தெரியுமே ! :)
இப்போ வூட்டுல என்னா மீன் (வாங்கி) தேய்க்கிறாங்கன்னு கொல்லை வரைக்கும் தெரியுதாமே அதுலே ! :)
அது என்னவோ கூகிலானந்தா ஆசிரமம் என்று கூறுகிறீர்கள். என்னால் அந்த ஆசிரமத்துக்கெல்லாம் செல்ல முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.. இன்னும் கூறப்போனால் நமதூரில் உள்ள பள்ளிவாசல்கள் கூட தெரியாது என்பதை கூறுகிறேன்.,.
எங்கள் காக்காவின் மகனே (முஹம்மத்): அதொன்றுமில்லை கூகில் எர்த்தைத்தான் சொன்னேன், நமதூர் பள்ளிகள் தெரிகிறதே... ! செக்கடிப்பள்ளி, புதிதாக கட்டியிருக்கும் கடற்கரைத் தெருப் பள்ளி, ஏன் பழைய கதவு எண் 94B வீடு இருந்த இடம் கூட தெரிகிறது ஆனால் அப்ப இருந்த வீடுதான் தெரியவில்லை (இடிச்சுட்டாங்களாமே) :)!
அஸ்ஸாமு அலைக்கும் காக்கா....நல்ல தகவல் களஞ்சியம்...ஆனால் எந்த டெலஸ்கோப்பையும் வைத்து தேடியும் உங்களை ஊரில் அதிக அளவில் காண முடியவில்லை...பார்த்தவரை திருப்தி சந்தோசம் காக்கா....தொடருங்கள் நக்கலுடன் கூடிய உங்கள் அறிவியல் ஆக்கங்களை
என்னை மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கே அழைத்துச் செல்வது ஏனோ ஹமீது? வெரி இன்ஃபார்மேட்டிவ்
பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் வரை உள்ள கோள்களை காண உதவும் உபகரணங்களை கண்டுபிடிக்க இயன்ற மனிதன் தன்னுள் ஒளிந்திருக்கும் சைத்தானின் வடிவம் காண இயலாமல் போனான்.
இதன் மூலம் கோள்கள் நம் கண்களுக்கு தெரிகிறதோ இல்லையோ? பிறை பார்ப்பதில் வரும் குழப்பத்தில் கொண்டாடப்படும் பல பெருநாட்களை தவிர்க்கலாம் அல்லவா? எதிர்பாராவிதமாக ஸ்டே ஆர்டர் வாங்காமல் வந்து குறுக்கிடும் மேகம் தாண்டி தெரியும் டெலஸ்கோப்பை யாராவது கண்டுபிடித்தால் நல்லது.
விஞ்ஞானியாக்காவின் (சாகுல் காக்கா) இன்னொரு மைல் கல் தான் இந்த ஆக்கம்.
இந்த ஆக்கம் படித்ததும் சிறு பிள்ளையாக இருந்த சமயம் கடையில் (கந்தூரி கடை என்று இங்கு எழுதி விட்டால் பிறகு கிரவ்ன் வந்து அதை பிரித்து மேய்ந்து விடுவார் என்பதால் வெறும் கடை என்று குறிப்பிட்டுள்ளேன்) வாங்கி வந்த பூதக்கண்ணாடி மூலம் கடும் உச்சி வெயில் நேரத்தில் (அதான் உச்சிஉரும நேரம்) சூரியனின் ஒளியை ஒரு புள்ளி போல் பூதக்காண்ணாடி மூலம் தேய்ங்காய் நார் (அதான் தேங்காச்சம்பு), பேப்பர் இவற்றின் மேல் செலுத்தி முதலில் புகையும், பிறகு நெருப்பும் வர வைத்து மிகுந்த ஆச்சரியம் அடைவோமே? அந்த சிறு வயது ஜாலங்கள் இப்பொழுது ஞாபகத்துக்கு வருது.
என்னாதான் இன்னும் ஞாபகத்துக்கு வரவில்லை இவனுக்கு? என்று யாரோ முணுமுணுப்பது போல் உணர்கிறேன். போதுமென்றெண்ணி முற்று புள்ளி வைக்கிறேன். (முடியலெ.......................)
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
//என்னாதான் இன்னும் ஞாபகத்துக்கு வரவில்லை //
இதென்னெ MSM(n) புதுக் கேள்வி, எங்களுக்குதான் தெரியுமே MSM(n)=அதிரை(விக்கி)பீடியா(ன்னு) !
அதிரையின் கூகில் நீங்கள் !
Yasir சொன்னது…
//அஸ்ஸாமு அலைக்கும் காக்கா....நல்ல தகவல் களஞ்சியம்...ஆனால் எந்த டெலஸ்கோப்பையும் வைத்து தேடியும் உங்களை ஊரில் அதிக அளவில் காண முடியவில்லை...பார்த்தவரை திருப்தி சந்தோசம் காக்கா....தொடருங்கள் நக்கலுடன் கூடிய உங்கள் அறிவியல் ஆக்கங்களை//
வலைக்கும் முஸ்ஸலாம்
கிட்ட உள்ள ஆள்களை டெலஸ்கோப் வைத்துப்பார்த்தால் அவுட்ஆப்போகஸ் தான் ஆகும் ஆளை பார்க்கமுடியாது
sabeer.abushahruk சொன்னது…
//என்னை மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கே அழைத்துச் செல்வது ஏனோ ஹமீது? வெரி இன்ஃபார்மேட்டிவ்ar//
அது எப்படி பல்கலை கழகத்தை பள்ளிக்கூடம் அழைத்து செல்லமுடியும் !
Naina Mohamed சொன்னது…
//இந்த ஆக்கம் படித்ததும் சிறு பிள்ளையாக இருந்த சமயம் கடையில் (கந்தூரி கடை என்று இங்கு எழுதி விட்டால் பிறகு கிரவ்ன் வந்து அதை பிரித்து மேய்ந்து விடுவார் என்பதால் வெறும் கடை என்று குறிப்பிட்டுள்ளேன்) வாங்கி வந்த பூதக்கண்ணாடி மூலம் கடும் உச்சி வெயில் நேரத்தில் (அதான் உச்சிஉரும நேரம்) சூரியனின் ஒளியை ஒரு புள்ளி போல் பூதக்காண்ணாடி மூலம் தேய்ங்காய் நார் (அதான் தேங்காச்சம்பு), பேப்பர் இவற்றின் மேல் செலுத்தி முதலில் புகையும், பிறகு நெருப்பும் வர வைத்து மிகுந்த ஆச்சரியம் அடைவோமே? அந்த சிறு வயது ஜாலங்கள் இப்பொழுது ஞாபகத்துக்கு வருது.//
ஊர் நடப்புக்களும் ஊர் நினைவுகளும் உங்கள் உள்மனதுக்குள் டிஜி டலாக பதிவாகி உள்ளது என்பதனை காட்டுகின்றன
To Tuan Haji Shahul,
டெலஸ்கோப்பை சமையல் அயிட்டங்களுடன் [ இட்லி , தோசை ] ஒப்பிடுவதைப்பார்த்தால் கண்டு பிடித்த கலிலியோவே ஆச்சர்யப்பட்டு அசந்து விடுவான்.
//சமீபத்தில் நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்க நேர்ந்தது............//
இப்படி எனக்கும் நடந்தது...
இங்கு வந்து நிஜாமிடம் கேட்டேன்...அவன் சொன்ன பதில் '''உன்னை விட 2 வது ஆளின் பேங் பேலன்ஸ் அதிகமாக இருந்திருக்கும்....'
அபுஇபுறாஹீம் சொன்னது…
//மிகச் சரியான தொலை நோக்கு பார்வை !
சரி, நான் எங்கேயிருக்கேன் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் !??
கலிலியோவை ஹெல்புக்கு கூப்பிடக் கூடாது !//
உங்களை கண்டு பிடித்துவிட முடிகின்றது தம்பி தாஜுதீனை எங்கு தேடியும் கண்டு பிடிக்கமுடியவில்லையோ !
ZAKIR HUSSAIN சொன்னது…
//இப்படி எனக்கும் நடந்தது...
இங்கு வந்து நிஜாமிடம் கேட்டேன்...அவன் சொன்ன பதில் '''உன்னை விட 2 வது ஆளின் பேங் பேலன்ஸ் அதிகமாக இருந்திருக்கும்....//
பேங்க் பேலன்ஸ்சை எந்த டெலஸ்கோப் வைத்து கண்டு பிடிப்பாங்களோ தெரியலே !
கலிலியோவின் கண்ட தொலைநோக்கி நம்மவர்களின் தொலைநோக்குப்பார்வை கண்டவரையும் மிஞ்சும் எனலாம்.அவரின் படைப்பு அற்புதம்.நம்மவர்களின் படைப்பு அசத்தல்.
ஒரே பொருளை பல தினுசுகளில் வேலை வாங்குவதில் அவர்கள் (மேலை நாட்டினர்) பலே கில்லாடிகள் என்பது உண்மை. நாமும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இங்கு நாம் நிரூபித்து ஆகவேண்டும் உதாரணமாக இட்லிமா நாம் இட்லி மட்டும் அவிப்பதில்லை அதை தோசையாகவும் சுடுகின்றோம் ரோஸ்டாகவும் சுடுகின்றோம் அதே ரோஸ்ட்டுக்குள் பூரிக்கு வைக்கும் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து மசால் தோசையாகவும் செய்கின்றோம் அவர்கள் விஞ்ஞானத்தில் வித்தியாசம் செய்கின்றார்கள், நாம் உணவில் வித்தியாசம் செய்கின்றோம். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
------------------------------------------------------------------------அஸ்ஸலாமுஅலைகும். வழக்கம் போல் நக்கல் தூக்கல்.கலக்கல் ஆக்கம். விஞ்ஞானத்தில் தன்னுடைய ஞாலத்தை காலத்தில் பதிந்துள்ளார். மேலும் மேலை நாட்டினர் கணவு காண்பதில் பசிகொண்டார். நம்மவர்கள் பசியிலும் ருசிகண்டார்.இப்படி எல்லாம் சொன்ன விஞ்ஞானி ஏனோ மெஞ்ஞானம் சொல்ல மறந்துவிட்டார்(வழக்கமாய் ஹலைட்டா சொல்வாரே).ரசுலுல்லாஹ்(ஸல்)மேலுலக பயணம் மேற்கொண்ட காரண ஆதரங்களே ஓளியின் வேகம் அளக்க உதவியது.வழக்கம்போல் சிந்தைனையை தூண்டும் ஆக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான ஹமீத் காக்கா,
நலமாக இருக்கிறீர்களா?
முழுமையாக படித்துவிட்டு கருத்திடலாம் என்றிருந்தேன்.
அறிவியல் அதிகம் படிக்காத என்னைப்போன்றவர்களுக்கு நீங்கள் பகிர்ந்துள்ள தகவல் புதியது.
ஒலியாண்டு விளக்கம் very new.
விஞ்ஞானி காக்கா தங்களின் அடுத்த பதிவு என்ன?
தாஜுதீன் சொன்னது…
//விஞ்ஞானி காக்கா தங்களின் அடுத்த பதிவு என்ன?//
"விஞ்ஞானியாக்காவும்(சாஹூலாக்கா), இணையதள தம்பியும் (தாஜுத்தீன்)" என்ற தலைப்பில் ஒரு உரையாடல் எழுதிட வேண்டியது தான்.....(ஆஹா....வந்துட்டான்யா....வந்துட்......)
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இணையதளபதி-தாஜுத்தீன் -- எங்க எல்லாரையும் இணையத்தால் இணைத்த தளபதி
ஆஹா...! MSM(n): அங்கே ஒட்டு(ம்)மை இருக்கும்தானே இளையோடும் உரையாடலில் !?
வாங்க தம்பி யாசிர்: தேடிகிட்டுல இருக்கோம் உங்களை ! டெலஸ்கோப்பு வந்துல மாட்டினீங்க !
அஸ்ஸலாமு அலைக்கும் .
ஹமீது காக்கா உங்களுடைய டெலஸ்கோப்பை கொண்டு அதிரைப்பட்டினத்தில் நெட் ஒர்க்கில் எங்குனே ஓட்டை இருக்கிறதென்று கண்டு பிடித்து சொல்லுங்க .
காரணம் உங்களுடைய இந்த தொலை நோக்கு பார்வைக்கு.நான் கருத்து தகவல் பரிமாற்றி கொள்ளலாம் என்று மூன்று நாள் போராட்டத்திற்க்கு பிறகு ௦௦௦.-100 மைல் கிலோமீட்டர் தூர வேகத்தில் தான் அதிரை நிருபரை சென்று அடைந்திருக்கிறது.
அஸ்ஸலாமு அழைக்கும் ,
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி,
நேற்று இரவு அனைவரும் நல்லபடி தம்மாம் வந்து சேர்ந்தோம்
//நேற்று இரவு அனைவரும் நல்லபடி தம்மாம் வந்து சேர்ந்தோம்//
அல்ஹம்துலில்லாஹ் !
// Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் ,
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி,
நேற்று இரவு அனைவரும் நல்லபடி தம்மாம் வந்து சேர்ந்தோம் //
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
Post a Comment