Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிஜமா நிஜாம்? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2011 | , , ,

தரை மிரண்டு போகும் படி
கரை புரண்டு ஓடும் நதி
நுரை ஒழுகச் சப்புக் கொட்டி
இரை விழுங்கும் நாக்கை நீட்டி

குதி என்று சொன்னதா சதி
மதி மயக்கிக் கொன்றதா விதி
பதி யின்றி வாடுதே சகி
கொதி கொண்ட தீயென கதி

இருபது மணி நேரம்
இழுத்து வைத்து வதைத்த நதி
பயிற்றுக்குப் பாயும் வழி
உடல் துப்பிச் சென்றதைய்யா

காத்திருக்கும் மனைவியின் கணவன்
பார்த்திருக்கும் பெற்றவளின் பிள்ளை
சீராட்டிய அக்காள்களின் தம்பி
துணைக்கென்ற அண்ணனுக்குத் தம்பி
உனைவளர்த்த உம்மம்மாவுக்குப் பேரன்
உணவூட்டிய மாமனுக்கு மருமகன்

உறவு முறையெல்லாம்
நதி அழித்துப் போனதைய்யா
உன்பெயர் திருத்தி மையத்து ஆனதைய்யா

ஆற்றுக்கு நீர் வராது போனால்
ஊற்றிருக்கு உயிர் கொடுக்க
பற்றுண்டா பாசமுண்டா
ஈரமிருக்கும் நதிக்கு இரக்கமுண்டா

கல்யாண ஒடை அடித்துச் செல்லவா
கல்யாண ஆடை உனக்கு அணிவித்தேன்

பாலகன் கூட பாய்ந்து குளிக்கும்
பாலக்கண் உன்னை ஓய்த்த தென்ன

கழட்டி வைத்த கோட்டும் ஷூட்டும்
காய்ந்து போன மாலையும் செண்டும்
கண்டு கண்டு மருகுதைய்யா
கண்டு உயிர் உருகுதைய்யா

வயிற்றுக்குள் உயிர் விதைத்து
ஆற்றுக்கு உனைக் கொடுத்தாய்
ஊற்றுக் கண் ஆனதைய்யா உன் சகிக்கு
நீரற்றுப் போனதைய்யா அழுதழுது

இங்கினி நீ எங்களோடு
இல்லாமல் போனது
நிஜமா நிஜாம்?

அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்
மீளு மந்த நாள் வரை
நீளு மைய்யா உன் நினைவு!

- 'சபீர்' சாச்சா



12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆற்றின் நீர் வரவழைத்தது - கண்ணீர் !
ஆற்றோடு ஆறாத துயர் உருக்கியெடுக்கிறது !

உறவின் இழப்பு உருக்கம் கூட்டிடும் வரிகளால் மனம் இருக்கம் கொண்டு கவலை கொள்கிறது !

//அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்
மீளு மந்த நாள் வரை//

ஆம் ! அப்படியே !

Yasir said...

மூச்சு முட்டுது காக்கா...கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு துவா செய்தவனாக...யா அல்லாஹ் இக்குடும்பத்தவற்க்கு இப்பேரிழப்பை பொறுக்கும் மனதை தருவானக ஆமீன்

அதிரை என்.ஷஃபாத் said...

கலங்கின கண்கள்,
உதறிடும் கைகள்,
உறுகிற்று உள்ளம்,
உயிர்பறித்தே வெள்ளம்.

ஆற்ற ஒண்ணா துயர்
ஆற்றின் வழி வந்தது
சீற்றம் கொண்ட நீரிலே
சகோதரன் உயிர் சென்றது..

இழப்பை ஈடு கட்டுதல்
இயலும் செயலும் அல்லவே,
நிலைத்த துயர் எத்துணை!!
இயல வில்லை சொல்லவே.

பிரிவில் வாடும் உறவுகட்கும்
நினைவில் வாடும் நண்பர்கட்கும்
இறைவா உந்தன் கருணையை
நிறைவாய் நீயும் நல்குவாய் !!

பொறுமை செய்யும் பக்குவம்
கொடுத் தருள்வாய் நாயனே..-நண்பரின்
மறுமை வாழ்வும் சிறந்திட
மனது வை நாயனே !!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

ஓடும் ஆற்றின் வேகத்தை ஓடிப்பிடித்து புகைப்படம் எடுத்தேன் அன்று அப்போது தெரியாது இப்படியெல்லாம் ஒரு நிகழ்வு நடந்திடும் இங்கு என்று... நான் எடுக்கும்போது நினைக்காத ஒன்று எடுத்த பின் நடந்த நிகழ்வை ஞாபகப்படுத்த பயண்பட்டிருக்கிறாது... பரிதவிக்குது மனசு

Sஹமீது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

தங்களின் உண்மை உணர்வு ஒவ்வொரு வரிகளில் காணமுடிகிறது காக்கா.

தங்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொறுக்கும் மனதிடத்தை தந்தருள அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இவரை இழந்து வாடும் சொந்தங்களுக்கும், தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். இவருடையா ஆகிரத்து வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கிவைப்பானாக ஆமீன். குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொருமையையும், அமைதியையும் அளிப்பானாக ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்ணீர்த்துளிகள் கணினியால் வரிப்படுத்தியதில் அன்னாரின் மகத்துவம் உணரமுடிகிறது.
அன்னாருக்காக பிராத்திப்போம்.
உங்களுக்கும் உங்களைச்சார்ந்தோருக்கும் பொறுத்தாளும் மனவலிமையை நாயன் தந்தருள்வானாக ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

உண்மையில் கண்ணீர் முட்டியது .துணையிழந்து தவிக்கும் சகோதரிக்கு எல்லாம் வல்ல இறைவன் மன தயிரியத்தை கொடுத்து அருள் புரிவானாகவும் .. ஆமின்

--
Abdul Rahman
Harmys

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,
தங்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொறுக்கும் மனதிடத்தை தந்தருள அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரன் நிஜாமின் மரணத்தை கேள்விப்பட்டதும் அதிரிச்சியுட்டேன்.(இன்னா லில்லாஹி வா இன்னா இலஹி ராஜிஊன்.) அல்லாஹ்
அல்லாஹ் அந்த சகோதரின் குடும்பத்தார்களுக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக.

அந்த சகோதரின் உயிர் பிரிந்த அதே ஆற்றில்.அது போன்ற விபத்திலிருந்து.அல்லாஹ்வின் உதவியால் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.

தண்ணீர் பாய்ந்து ஓடும் பள்ளத்திற்கு அருகாமையில் படிக்கட்டு இருப்பதால் அதில் இறங்கி நீச்சல் அடிக்கும் போது என்னை அறியாமையிலே இழுத்துச் சென்றது.ஒன்றும் அறியாத நான் அல்லாஹ்வின் உதவியால் விழும்பில் உள்ள தூணை சற்றென்று பிடித்தேன்.

இந்த துயரமான செய்தியை நினைத்தாலே மனசெல்லாம் பதறுகிறது.

சகோதரர்களே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் யா அல்லாஹ் கொடுரமான மரணத்தை விட்டும் எங்களை காப்பாற்று.என்று மறவாமால் துஆ கேட்டுக் கொள்ளுங்கள்.இது நபி(ஸல்) அவர்களின் வழியாகும்.

அப்துல்மாலிக் said...

மரண செய்தி அறிந்து ஆழ்ந்த துயரத்தில்
கூட இருந்தவங்களும், பிறந்தவங்களும், சொந்த பந்தமும் படும் வேதனை கண்முன்னே..

அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்

தாங்கள் குடும்பத்துக்கு இந்த சோகத்திலிருந்து மீளும் சக்தியை தருவானாகவும்

யா அல்லாஹ் இது மாதிரி கொடுரத்திலிருந்து எம்மக்களை காப்பாற்றுவாயாக ஆமீன்..

aa said...

EXCELLENT! கண்களில் நீரை வரவழைத்த கவிதை. அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக. அன்னாருக்கு ரஹ்மத் செய்வானாக. அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு