ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - அமீரக கிளை நிர்வாகிகள் தேர்வு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

புகழுக்குரியோன் அல்லாஹ்வின் பேரருளால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் இணைவதற்காக ஷம்சுல் இஸ்லாம் முஹல்லாவின் அமீரக உறுப்பினர்களால் ஷம்சுல் இஸ்லாம் அமீரக கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு 22-09-2011 வியாழன் இரவு 9:30 மாணியளவில் துபை தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடத்தப்பட்டது, அல்ஹதுலில்லாஹ்.

அமீரகத்தில் வாழும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவிற்கு உட்பட்டவர்களுக்கு பொது அறிவிப்புச் செய்து கூட்டப்பட்ட கூட்டத்தில் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி இனிதே நடந்தேறியது.

இடையில் தேநீர் விருந்துடன், அத்துனை பேர்களிடமும் ஆலோசனைகள், கருத்துரைகள் கேட்கப்பட்டன. ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியும், இன்னும் செய்யப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் திரண்டிருந்தவர்களில்  சிலரின் கருத்துரைகள் பெறப்பட்டன. அவற்றிற்கு உடனுக்குடன் ஜனாப் S.ஜமீல் காக்கா (அஜ்மான்) அவர்களால் மறுமொழியும் தரப்பட்டது.

கால அவகாசம் கருதி அனைவரின் கருத்துகளும் கேட்க இயலாமற் போனதால் அடுத்த நிகழ்வாக அனைவரின் விருப்ப அடிப்படையில் நிர்வாகக் குழுவினரைத் தெரிவு செய்வதற்கான வேண்டல்/விருப்பம் விடப்பட்டது. அனைவரும் ஒருமித்து நிர்வாகக் குழுவை அமைப்பாளார்கள் தெரிவு செய்வதையே அமைக்கலாம் என்று உற்தி செய்தவண்ணம், கீழ்கண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
சகோ.ஜமாலுதீன் (மேலத் தெரு) அவர்கள் நன்றியுரை நவின்று கஃப்பாரா துஆ ஓதினார்கள். இத்துடன் நிகழ்ச்சி இறையருளால் இனிதே நிறைவேறியது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வரும் 30-09-2011 அன்று துபை அல்கிஸசில் (AL-GHUSAIS) நடைபெரும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதற் பொழ்துக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவண்
நிர்வாகிகள்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை)

6 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

முதலில் வாழ்த்துவோம் !

புத்தம் புது அமீரக கிளை ஷம்சுல் இஸ்லாம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !

md abubacker L.M.S சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் .

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - அமீரக கிளை நிர்வாகிகள் தேர்வு.வரவேற்க தக்க ஓன்று .அதிலும் குறிப்பாக. சமுதாயத்தின் வருங்கால தூன்களாகிய இளைஞர்களை.தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி.அந்த சகோதரர்கள்.வெளியிலிருந்து வந்து விழக்கூடிய சொல் அடிகளை பொற்ட்படுத்தாமல்.மன உறுதியோடு அல்லாஹ்வுக்காக தங்களின் அறப்பணிகளை செம்மையாக செய்திட இறைவனிடம் துஆ செய்தவனாக .

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ்! அல்லாஹ் இந்த ஒற்றுமையை நிலைப்படுத்தி வைப்பானாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நிர்வாகிகள் சங்கத்தை சிறப்படையச் செய்ய வாழ்த்துக்கள்.இனி மேலும் புத்துயிர் பெறுமென நம்பலாம்.ஒற்றுமை ஓங்கட்டும்.

அப்துல்மாலிக் சொன்னது…

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்..

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இளம் தலைமுறைகளை முன்னிறுத்தி நிர்வாகிகள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த முயற்சியில் ஈடுப்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் பாராட்டுக்கள். அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.