Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு 5

அதிரைநிருபர் | September 25, 2011 | , , ,

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.

01வது வார்டு. சுரைக்கா கொல்லை, சகோதரர் ஷேக் அஷ்ரப் அவர்கள்

12வது வார்டு புதுத்தெரு, சகோதரர்  ஹனீபா அவர்கள்


13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம், சகோதரர் சம்சுதீன் அவர்கள்


14வது வார்டு நடுதெரு மேல்புறம்,சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்


19வது வார்டு புதுமனைத் தெரு, சகோதரி செளதா அவர்கள்


21வது வார்டு C M P லேன், சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

நன்றி: அதிரை பிபிசி


மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தை  தொடர்ந்து ஒற்றுமையை வழியுறுத்தி ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனனவருக்கும் வாழ்த்துக்கள். ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த முயற்சியை நாம் எல்லோரும் நிச்சயம் பாராட்ட வேண்டும். இது போன்று மற்ற சங்கங்களும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் போரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வேட்பாளாரை நிறுத்தி நம் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அதிரைவாசிகள் அநேகரின் ஆவல். அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோம்.

-- அதிரைநிருபர் குழு

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நன் முயற்சி... ஒன்று கூடுவோம் நன்றே வாழ்வோம் !

வாழ்த்துக்கள் அனைவருக்கும் !

அப்போ மு.போ.கூ.(வேட்பாளர்) என்னையை யாரும் கண்டுக்கலையா ? பரவாயில்லை ஊர் ஒற்றுமையை நலன் கருதி நானும் வாபஸ் வாங்கிக்க யோசிக்கிறேன்.... (எதை என்பது சஸ்பென்ஸ்)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ். நல்லதொரு செய்தி நம் சமுதாயத்துக்குள் நாம் இன்சா அல்லாஹ் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற அல்லாஹ் அருள் புரியட்டும். மெல்லியதொரு நறுமணத்துடன் கூடிய மெல்காற்று என்மேல் வீசுவதாக உணர்கிறேன். பல நாள் கணவு இன்று நிசமாகிவிட்டது. இன்னும் பல கணவுகள் கைவசப்படவேண்டும் இன்சா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சங்கத்தின் மூலம் முறையாக அறிவித்து அதன்படி விருப்பதாரர்கள் விண்ணப்பித்து முறைப்படி தேர்ந்தெடுத்தமை அல்ஹம்துலில்லாஹ்.
இதுவே ஒற்றுமையின் முதற்படி.கட்சிகளை விட்டு இந்த தேர்தலில் தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளுங்கள்.கட்சி M.P. & M.L.A. தேர்தலுக்கு இருக்கட்டும்.இனியும் அந்த வார்டுக்கு உட்பட்ட(ஒற்றுமையை விரும்பும்) எந்த இறைநேசர்களும் களத்தில் இறங்கிவிடாதீர்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா அதவுடுங்க வேற செய்தி பேசலாம்.என்ன புரியலையா?

அதாங்க (ச.இ) சங்கத்திலே கவுன்சிலர் தேர்ந்து எடுத்தாங்களே!

அவங்களே எதிர்த்து தேர்தலிலே போட்டி போடுவோம்டு கட்சி ரீதியா கச்சளே கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

ஒற்றுமையை பற்றி பேசுனாலே ஒற்றுமைக்கு பிடிக்காது போலும் .

அது நாளே வேற்றுமையை மட்டும் பேசி பார்ப்போம்.ஒற்றுமைக்கு பிடிக்கிதான்டு.

இப்ப புரிதாங்க உங்களுக்கு.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------------

லெ.மு.செ.முஹம்மது அபூபக்கர் சொன்னது போல் ஊரு ஒற்றுமையாகாது.நாம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் ஒற்றுமை என்று மற்றவர்கள் ஒற்றுமை பற்றி நினைப்பதில்லை.

இப்பொழுது ஒருசிலபேர் அப்துல் லதிப் ஆலிம் சொன்னது பிரகாரம் பெரும்தன்மையாக விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். எனக்கு இந்த பதவியே வேண்டாம் என்று. அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள் மற்ற யாரும் இவ்வளவு சீக்கிரமாக பதவி ஆசையே விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

நேற்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் வார்டு வேட்பாளர்களை தேர்ந்து எடுத்ததிற்கு பிறகு ஒரு சில பேர் 13 - வது வார்டுக்கு போட்டியாகவும், 14 - வது வார்டுக்கு போட்டியாகவும் அடுத்து 12 - வது வார்டுக்கு போட்டியாகவும் இப்பொழுது நிலவிக்கொண்டு இருக்கிறது.

அப்போ சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும்,ஆலிமுக்கும் மரியாதை இல்லை. இந்த சின்ன விசயத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.இந்த அற்ப துணியாவிற்காக ஆசைபடுகிறார்கள். மறுமைக்கு யாரும் பயப்புடுர மாதிரி தெரியவில்லை.

இறைவனிடம் மறுமையில் பதில் சொல்லனுமே என்ற பயம் இல்லை. தலைவர் பதவிக்கும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்று. அதில் விட்டுக்கொடுப்பதில்லை.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டு போகுவதில்லை கெட்டு போவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. என்ற பழமொழி போல் இப்பொழுது நடந்துக்கொடியிருக்கிறது.

தலைவர் பதவிக்கு நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஒரு சிலர் விட்டுக்கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வுக்காக அவர்களுடைய பதவி ஆசையை விட்டுவிட்டார்கள். நாம் அனைவேரும் அதிரை மக்களுக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.

- மு.செ.மு.முஹம்மது அபுபக்கர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு