Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் மரணம் 18

அதிரைநிருபர் | September 26, 2011 |

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!

அன்புச் சகோதரர்களே,

சற்று முன் வந்த செய்தி!

நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள் என்ற செய்தி, அன்னாரின் அன்பு மகனார் அஹ்மது ஆரிப் அவர்களிடமிருந்து கிடைத்தது!  மறைந்த மேதையவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை, ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வேதனையுடன்,

-- அதிரை அஹ்மது
---------------------------------------------------------------------


இஸ்லாமிய புலவரவர்!. இறைவனடி சேர்ந்திட்டார்!!.

அதிரையின் புலவரவர், அமைதியான புலவரவர்.
அதிரை மண்ணைத்தாண்டி அறிந்தவரவர்,
இன்று விண்ணைத்தாண்டி செல்கின்றார்.
நாவடக்கம் பேணியவரின், நல்லடக்கம்
இன்று சென்னையிலே நடந்திடுதே!.

தன் இஸ்லாமிய அடையாளத்தை,
தமிழ் புகழடைந்தும் சிறிதேனும் இழக்காதவர்.
தமிழ் இலக்கிய நடையதனை,
தூய இஸ்லாத்தோடு இணைத்தவரர்.


இலக்கியத்தில் செம்மல் அவர்,
புதுமை இலக்கணத்தில் கலக்கியவர்.
தலைக்கனம் இல்லா நல்லவரவர்.
கல்வியில் பல படிகளை கண்டவர்.


படி, படி என பலகனவுகளை கண்டவரவர்.
கல்வியில் ஒரு கோமான்,
சொல்லிலும் அதே சீமான்.
மணிமணியாய் இலக்கிய தமிழ் மொழிந்து,


தமிழ்மாமணி பட்டமதை தனதாக்கி கொண்டவரவர்.
இழந்தது தமிழ்பண்டிதர் ஆதலால், இனி
தஞ்சை தமிழ்பல்கலைக்கழகமே அழுதிடுமோ!.
தேய்பிறைபோல் இஸ்லாமிய தமிழ் புலவர்களை,


அவர்தம், தரமறியாமல் நம் இழக்கின்றோம்!.
அவர்களின் தொடர்பில்லாமல் நாம் இருக்கின்றோம்.
வளர்பிறைபோல் இளம் புதியவரை உருவாக்க,
அதிரை மண்ணிலதில், என்னத்தை நாம் செய்திட்டோம்?.

- அதிரை முஜீப்.



கடந்த ஜனவரி மாதத்தில் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் புலவர் பஷீர் ஹாஜியார் கலந்துக்கொண்டார்கள், அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!

எனக்கு சமீபத்தில் (கடந்த கல்வி மாநாட்டில்) அறிமுகமான மேதை அதிரை அறிஞர் புலவர் அல்ஹாஜ் அஹம்தி பஷீர் அவர்களின் இழப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது...

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக !

அன்னாரது பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!அன்னாரது பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!

அப்துல்மாலிக் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்,

அன்னாரின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை தருவானாகவும், அன்னாரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....

நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு உள்ளத்துயர் அடைந்தேன்.
அவர்களை நேரில் காண இயலாவிட்டாலும் எல்லோர் நெஞ்சில் நிறைந்தவர்களாக இருக்கக்கண்டேன். அல்லாஹ் அவர்களுக்கு ஆஹிரத்தில் நற்பதவியைத்தந்தருள்வானாக...ஆமீன்...அவர்கள் குடும்பத்தினர்களுக்கு அவர்கள் இறப்பால் பொறுமையை தந்தருள்வானாக...ஆமீன்..

ஒரு கேள்வி : இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ஹ்ஃபிர‌த்திற்காக‌ துஆச்செய்ய‌வும், பிரிவால் வாடும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ர்களுக்கு ஆறுதல் சொல்லி ம‌ற்றும் பொறுமையை கையாள‌ வேண்டிக்கொள்வதற்கும் அனுமதி இருப்பது போல் நம் ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல் அல்ல‌து அனுதாப‌ங்க‌ளை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள மாற்று மத சகோதரர்கள் போல் ந‌ம் மார்க்க‌த்தில் அனும‌தி உண்டா? விள‌க்க‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து பின்னூட்ட‌த்தில் விள‌க்குங்க‌ளேன்?

மு.செ.மு. நெய்னா முஹம்மது

Shameed said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாரை இறைவன் சொர்கத்தில் சேர்ப்பானாக.

அன்னாரின் மரண செய்தி கேட்டவுடன் அவர்களின் கணீர் குரல் நினைவுக்கு வருகின்றது

sabeer.abushahruk said...

//இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
எனக்கும் கடந்த கல்வி மாநாட்டில் அறிமுகமான மேதை அதிரை அறிஞர் புலவர் அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்களின் இழப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது...
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக !
அன்னாரது பேரிழப்பைத் தாங்கிடும் சக்தியை அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!

Yasir said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

shamsudeen said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்,

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாரை இறைவன் சொர்கத்தில் சேர்ப்பானாக.

அன்னாரின் மரண செய்தி கேட்டவுடன் அவர்களின் கணீர் குரலுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சே நினைவுக்கு வருகின்றது. அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை கேட்டு நாம் அதிரைக்காரர்கள் என்று பெறுமிதம்கொள்ளலாம்.

அன்னவர்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மனநிம்மதியை தந்தருள்வானாக.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

புலவர் பசீர், சீரானவர்;
யாரையும் சீறாதவர்!

தீயோரைச் சேராதவர்;
தீன் வழி சோராதவர்!

மரண முற்றுப் புள்ளியால்
கவியொன்று முடிந்தது!

அளவிலாப் பேரின்பம்
அல்லாஹ் அருள்வானாக!

-வாவன்னா

U.ABOOBACKER (MK) said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

//அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.//

நல்லடக்கம் சென்னை ஆழ்வார்திருநகரில் தானே..?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//சென்னை ஆழ்வார்திருநகரில் தானே..?//

ஆம் சென்னையில்தான் !

அலாவுதீன்.S. said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழோடு பேசிட தவம்
கிடக்கும் நம்மிடையே
மழலையர் பாட்டொன்று
பாடி மயக்கியவர்கள் !

முஜீப் அவர்கள் அவர்களின் வரிகள் சொல்லும் உண்மை

//படி, படி என பலகனவுகளை கண்டவரவர்.
கல்வியில் ஒரு கோமான்,
சொல்லிலும் அதே சீமான்.
மணிமணியாய் இலக்கிய தமிழ் மொழிந்து, //

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நமக்கு முன் அவர்கள் சென்று விட்டார்கள்.நிச்சயமாக அவர்களுக்கு பிறகு நாமும் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.

அல்லாஹ் அவர்களின் குற்றங் குறைகளை மன்னித்தருள் வானாக.

அபு ஆதில் said...

//இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.//

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

அன்பிற்குரிய அதிரை நிருபர் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்.
எமது தந்தையார் புலவர் அஹ்மது பஷீர் அவர்களது மறைவுக்கு நேரில் வந்தும், தொலைபேசியிலும், இணையம் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தும், இறுதி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டும், இறைவனிடம் துஆ செய்தும் எங்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக, எமது தந்தையார் அவர்களின் மறைவுச் செய்தியை இணைய தளத்தில் வெளியிட்டு சில மணித்துளிகளில் உலகெங்கும் அறியச் செய்த அதிரை அஹ்மது சாச்சா அவர்களுக்கும், அதிரைபிபிசி, இன்னும் அனைத்து அதிரை இணையதளங்களுக்கும், பிற இணையதளங்களுக்கும், மற்றும் நேரிலும், தொலைபேசியிலும் எல்லோருக்கும் தகவல் தெரிவித்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள், இன்னும் எல்லோருக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்று அனைவராலும் வாழ்த்தப் பெற்ற எமது தாய், தந்தையர்க்கு மக்களாக எங்களைப் பிறக்கச் செய்த மிக்க மேலானவனாகிய அல்லாஹு தஆலாவிற்கே அனைத்துப் புகழும் நன்றியும் உரித்தானதாகும்.

எமது தாய், தந்தையாரின் இறைப்பொருத்தத்திற்கும், மறுமை ஈடேற்றத்திற்கும், அவர்கள் விட்டுச் சென்ற கல்வி, மார்க்க, சமுதாயப் பணிகளைத் தொடர எங்களுக்கு உதவிபுரிய வல்ல இறைவனிடம் இறைஞ்சுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
உதவிபுரிபவர்களில் அல்லாஹ்வே மிக்க மேலானவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு