தேனே உன் பலன் !

தேனின் பலன்

** உடல்நலம் சிறக்க தேன் **
** உளநலம் சிறக்க தீன் **

பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:- 

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும். 

** கட்டி உடைய தேனைப்பூசு **
** வட்டி அழிய தீனைப்பேசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம். 

** காயங்கள் ஆற தேனைத்தடவு **
** மாயங்கள் தீர தீனைத்தழுவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். 

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **
** தீனைப் படித்தால் இஃக்லாஸ் பலப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து. 

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **
** நல்ல தீர்வுக்கு தீனே மருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும். 

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **
** தீன் ஒளி பட்டால் தழைக்கும் வாழ்க்கை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது , 

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன்: 16: 68,69)

இதை நமதூர் மக்கள் நலன் கருதி எழுதி உள்ளேன் . ஏனென்றால் நமதூரில் அதிகமான விருந்துகள் நடைபெறுகிறது. உணவு அதிகரிப்பதால் உடல் நலம் குறையும். இருந்தாலும் நான் எழுதியிருக்கும் இந்த தகவல் நமதூர் மக்களில் சிலருக்கு உதவலாம். . .

** தேனைப் பருகு **
** தீனில் உருகு! **

- M.Y. முஹம்மத்

சகோதரர் M.Y.முஹம்மத் அவர்கள் எழுதிய இவ்வாக்கத்துடன் நட்சத்திர குறியீடுட்ட இரண்டு அடுக்கு வரிகளில் தேனோடு தீனையும் வைத்தால் இனிக்கும்தானே அதனைத்தான் செய்திருக்கிறோம் !

- அதிரைநிருபர் குழு

15 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

தேனை ரசித் தேன்
தீனை நேசித் தேன்

முதல் ஆக்கமே இனிக்கிறது, இனிமேல் கலைகட்டும் ! புது வரவு M.Y.முஹம்மத் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !

sabeer.abushahruk சொன்னது…

இனிப்பைப் பகிர்ந்து எங்களுடன் கலக்கும் சகோ. முஹம்மது, இன்னும் நிறைய எழுதி கலக்குங்கள்.

வாழ்த்தும் வரவேற்பும்.

அ.நி.: தேன் இனிக்குது; தீன் ஜெயிக்குது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல் வரவாகுக!
தீனோடு இணைந்த தேனின் நற்குணம் அருமை!

>பல்வலிக்கு:கிராம்பை பொடிசெய்து தேனில் கலந்து பேஸ்ட்டாக்கி வலி உள்ள இடத்தில் வைத்தால் நிவாரணம் கிடைக்குமாம்.

**பல் வலிக்கு கிராம்புடன் தேனை தடவு**
**குல வலிக்கு குடும்பத்துடன் தீனை தழுவு**

sabeer.abushahruk சொன்னது…

எம் ஹெச் ஜே:

பல் வலிக்குத் தேன்
நல் வழிக்குத் தீன்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//sabeer.abushahruk சொன்னது…
எம் ஹெச் ஜே:

பல் வலிக்குத் தேன்
நல் வழிக்குத் தீன்?//
சூப்பர்.
அப்ப இது எப்படி.
**பல் வலிக்கு தேன்
சொல் பழிக்கு தீன்**

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆக்கம் பார்த்தேன் , படித்தேன், கருத்திட்டவர்களின் கருத்தை ரசித்தேன்.எப்படிஎல்லாம் எழுதுறாங்கன்னு என்னி வியந்தேன். என்னை மறந்தேன், இவங்க மாதிரி நம்மால் எழுதமுடியுமான்னு தவித்தேன்.கற்று கொள்ள நிறைய இருக்கு என்பதை உணர்ந்தேன், கற்க ஆவல் கொண்டேன், கற்றுதாருங்கள் சான்றோர்களே!(அதிரை நிருபரில் கருத்து எழுதுவதற்கே ஒரு திறமை வேண்டும் என உணர்ந்தேன்) (எங்கே மர்ம யோகி?)

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு வரிகளில் என்னமா பின்னுகிறார்கள்!!! சுவையாகவும் எழுதி நட்சத்திர எழுத்தாளர்களாக மின்னுகிறார்கள். இங்கே சொல்லித்தர நிறைய ஆசான் இருப்பது,அறிவில் ஒருசான் அளவே வளர்ந்த என்னை போன்ற மாணவனுக்கு அதிர்ஸ்டம்.

ZAKIR HUSSAIN சொன்னது…

இந்த ஆக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விசயங்களும் அருமை. தேனின் மருத்துவ குணம் [ பொதுவாக காயங்களுக்கு அது நிவாரனி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை ]

இருப்பினும் கண்ணில் நேரடியாக தேனை விடுவது மிகப்பெரிய ரிஸ்க். உங்கள் கோர்னியா ஏற்கனவே இன்ஃபெக்சன் ஆகியிருந்தால் தேனை விட்டவுடன் பார்வை பறிபோக வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற விசயங்களில் டாக்டரிடம் காண்பித்த பிறகு அவர் தரும் மருந்தை உபயோகித்தாலே போதும்.


சகோதரர் தீன் அவர்கள் தேன்மழை பொழிந்ததை தொடர வேண்டும். கருத்துக்களுடன் கவிதை தமிழைப்போல் அழகு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

சகோ. முஹம்மத் அவர்களின் ஆக்கம் தித்திக்கிறது.

தேனுக்கு இன்னொரு தன்மை உண்டு "தேன் எவ்வளவு நாட்களாகினும் தானும் கெடாது; தன்னுள் விழுந்த பொருளையும் கெட விடாது". என்பார்கள்.

எல்லாம் சுத்தமான தேனுக்கு மட்டும் தான். சர்க்கரை பாவில் செய்த தேனுக்கல்ல.

தேன் நினைத்தேன் இனித்தது‍
நினைவுகள் உன்னை நினைக்காமலேயே இனித்தது.

சும்மா லைட்டா......


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

எல்லோரும் தமிழ் தேனை ரசிக்கிறாங்க !

தேன் சொட்டியது - இனித்தது
தேனீ கொட்டியது - வலித்தது !

தேன் சொட்ட பலன் சொன்ன இந்த ஆக்கத்தினை அனுப்பிய முஹம்மதிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ் !

அப்துல்மாலிக் சொன்னது…

//தேனுக்கு இன்னொரு தன்மை உண்டு "தேன் எவ்வளவு நாட்களாகினும் தானும் கெடாது; தன்னுள் விழுந்த பொருளையும் கெட விடாது". என்பார்கள்.//

அப்போ தேன் நிலவு என்று சொல்றாங்களே நிலவு தேனுக்குள்ளே விழுந்து தம் ஆயுள் முடியும் வரை கெடாமல் நம் நினைவுகளில் இருப்பதுக்குதான் இந்த சொல் வந்ததோ #டவுட்டு#

முடியிலே பட்டால் வெள்ளையா போகும்னு சொல்லுவாங்களே மெய்யாலுமா #டவுட்டு#

அப்துல்மாலிக் சொன்னது…

உடல் பருமன் குண்டாகனுமா: பாலில் தேனை கலந்து குடி

உடல் எடை குறையனுமா: வெதுவெதுப்பான தண்ணீர்லில் தேனை கலந்து குடி

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
மருமகன் M.Y.முஹம்மத் பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஆய்விலிருந்து தேனை தேடி எடுத்து அதை (அ.நி )யில் சொட்டவிட்டு.(அ.நி.)நிர்வாகிகள் அதற்க்கு இன்னும் இனிப்பு கலந்து தீனோருக்கு தீனை தீனியாக தந்திருப்பதை நினைத்தால் மனசெல்லாம் இனிக்கிறது.வாழ்த்துக்கள்.

அதிரை நிருபரில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மாணவனை போல் இன்னும் பல மாணவர்கள் வருகை தந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த தளம் மாபெரும் பல்கலைக் கழகமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

Shameed சொன்னது…

படித் "தேன்" ரசித் "தேன்" சிந்தித் "தேன்" தீன் தந்த தேன் தேனாய் தித்தித்தது

Muhammadh சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் . நான் எழுதிய இந்த தேனின் பலன்களை பற்றி உங்களுடைய தேனான கருத்துக்களை இனிப்பாக வழங்கியமைக்கு நன்றி...!!!