கிரவ்னின் கவிதைகள்

தாய்மடி… தங்கமடி!

அம்மா !
என் தாயே!
ஏன் தாயே
எந்த தயை
இல்லாமல் இருந்தாயே!
இப்படி
நோயில் விழுந்தாயே!

உன்
வயிற்றில்
பிறந்தவனல்ல நான் !
ஆயினும்
அவ்வப்போது என்னையும்
ஊட்டி வளர்த்திருக்கிறாய்.
நான் அனாதை என்பதை
மாற்றி வைத்திருக்கிறாய்.

உன்னை நினைத்து
நான் அழவதா?
இறக்கம்
கொண்டு மெளனமாவதா?

இத்தனைக் காலம்
நீ கடந்து வந்ததை
நினைத்துப் பார்க்கிறேன்
இமை இரண்டையும்
நனைத்துப் பார்க்கிறேன்.

நீ
பிறந்த இடம்
வறுமையின் துயர்
வந்த இடமல்ல
மாட மாளிகையும் அல்ல!
அல்லாடும் அன்றாடங்
காட்சியுமல்ல!

நடுத்தர ஆசிரியருக்கு
பிறந்த மகவு நீ!
ஆசிரியனுக்கு பிறந்தாலும்
படிப்பில் பிடிப்பில்லாமல் போனதனால்
பாட்டி அரவனைத்தும்
கல்வியை புறக்கனித்தாய்!

வாலிபப் பருவத்தில்
ஒரு பருந்திடம் உனை ஒப்படைத்தாய்
பருந்து அன்றாடம்
அருந்தும் மதுவுக்கும்
சேர்த்து நீ உழைதாய்!

காலச் சூழ்நிலையில்
மூன்று
முத்தான பிள்ளைகள்
பெற்றெடுத்தாய்.

காலன்
உன் கணவனான
அந்த கயவனை
அள்ளிச் சென்றதும்,
முத்துக்களை வளர்க்கவே
நீ மூச்சு முட்டிப் போனாய்

உன் பனியிடத்தில்
அனாதையாய்
கிடந்த என்னையும்
எடுத்து வளர்த்தாய்.

இன்றோ
நீ நோயில்
ஆஸ்பத்திரியில் படுத்த போது
வீடே பட்டினி!சொல்லால் அடித்தச் செல்லமே... !

மகளே!
என்னுயிரின் பிரதியே!
உன் தாயின் வயிற்றில்
பத்து மாதம் இருந்தாய்!

நானோ
பதினெட்டு வருடமாய்
உன்னை இதயத்திலும்
என் உயிரிலும் சுமக்கிறேன்

என்னுயிரைக் தந்து
உனை வளர்க்கிறேன் - ஆனால்
நீ சொல்கிறாய் உனக்கு உயிரென
அவனைக் காட்டி!

போகட்டும்!
உன் விருப்பம்
என ஒத்துக் கொண்டாலும்
அவன் இல்லையே அம்மா!
நல் குணத்தினனாய்!

நீ
கேட்ட பொம்மைகள் வாங்கித்தந்தேன்.
நீ
கேட்ட ஆடைகள் வாங்கித் தந்தேன்.
நீ
கேட்ட எல்லாமும் உனக்குத் தந்தேன்.
என்
பிரியத்தையும் உனக்குத் தந்தேன்
நீ கேட்காத சுதந்திரமும் உனக்குத் தந்தேன்

நீ இன்று கேட்பதுவோ
உனக்கு என்றும்
நான் தந்த
ஏதும் தராத காதலை!

அது பொய் காதல்!
மனப்புணர்ச்சி அல்ல
இனக்கவர்ச்சி!
என
புரிந்து கொள்ளாத - உன்
பிடிவாதம்...
பித்துப் பிடித்தவன் போல்
நான் செத்துச் செத்துப்
பிழைக்கிறேன்.

நீ
சிறுவயதில்
உணர்வற்று சடமாய்,
முக்கால் பினமாய் இருந்த போது
உனக்கு தாயாய், தந்தையாய்
என் உயிர் மேல் வைத்து
காத்து,
பின்
நீ நல்குணம் ஆகும் வரை
நான் நடைப்பினமாய்
வாழ்ந்து வந்தேன்.

குடம் குடமாய்
என் கண்ணீர் வடிகிறதே!
உதிரம் கொதிக்கிறதே!
இதயம் விட்டு ,விட்டு வெடிக்கிறதே!
இவையாவும்
உனக்கு
காதல் மயக்கத்தால்
புரியாமல் போனது
என் வாழ்வின் சாபமா?

என்னை ஜடமாக்கியது
இன்று நீ சொன்ன சொல்
“நான் உணர்வற்ற ஜடமல்ல!”
தீர்ப்பைத் திருத்து !?

நான் போகிறேன் மண்ணே!
என்னை விட்டு என்றும் அகலாத
உன்னை விட்டு!

நான் பிறந்து
பாதம் பதிந்த மண்ணே!
என்னைச் சுமந்த
அன்னையையும் சுமந்த அன்னையே!

உன்னை விட்டுப்
போகிறேன்.
உன் நினைவுகளை விட்டல்ல
என் பந்தங்களை விட்டு!
மண்ணின் மைந்தர்களை விட்டு

நாகரிகம் வளர்ந்த
இந்த காலத்தில்
ஏன் இம்மண்ணில்
அநாகரீக சமூகம் பிரசவித்தாய்?

பெண்பிள்ளை பிறந்தால்
கள்ளிப்பாலூற்றி கொல்லும்
உள்ளம் ஏன்தான்
உன் மைந்தருக்கு
மட்டும் வந்ததோ?

பெண்ணை மணம் முடிக்க
வரதட்சனை எனும் நோய்
சக மனிதனுக்குள் வந்ததெப்படி?
ஊட்ட சத்து இல்லாத
ஊட்டமா உன் மார்பின் பால்?

அடுத்தவன் கால் வாரி
கெடுத்தவன் தான்
இந்த மண்ணில் அதிகம்.

ஊர் என்றால்
ஒத்து வாழ் என்பது
தீமையையும் சகித்து வாழ்வதா?
நன்மை தீமை பிரித்து
பகுத்து வாழ்வதா?

கீழ் குணம் கொண்டு
வாழாமல் இருப்பதே,
மேல் என்ணம்
கொண்டவர்களின் கொள்கை

அவர்களைச் சுமந்த என் மண்னே
அதில்தானே என்னையும் சுமந்தாய்

நியாயம் கேட்ட என்னை
உன்னைவிட்டுத்
தள்ளி வைப்பதாய்
ஊர் பெரியவர்கள்
என அழைத்துகொள்ளும்
மமதை கூட்டம்
சொல்லி வைத்ததும்
கொள்ளி வைத்ததாய்
நான் உணர்ந்தேன்

துணிந்தேன்,
மண்ணா?
நேர்மையா?
வாய்மையா?

என்றாவது என் ஊரும்
வருந்தி திருந்தும் என்ற
நம்பிக்கையோடு
முடிவு செய்தேன்...
ஊரையே நான்
ஒதுக்கி வைப்பதென்று!

- CROWN

31 கருத்துகள்

Yasir சொன்னது…

வாவ்...பல்மொழி வித்தகரிடம் இருந்து திகட்டாத பலகவிதைகள்...என்ன மொழிப்புலமை.....ரசித்து ருசித்து படித்த இன்னும் பல முறை படிக்க தூண்டுகின்ற கவிதைகள்....கிரவுன் என்றாலே கலக்கல்தான்....”சொல்லால் அடித்த செல்லமே “ நெஞ்சை வருடியது....

Yasir சொன்னது…

”நான் அங்கு நலமா ? நீ இங்கு நலமே “ என்று காதல்சாரமாக விசாரிக்க கத்து கொடுத்த கவி அல்லவா கிரவுன்...திறமைகள் பொதிந்த அதிரையின் சொத்து இந்த கீரிடம்....வாழ்த்துக்கள்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கிரவ்னு(னு):

உன்னிடம்
ஹைக்கூ நிறைய
high coolஆக
எதிர்பார்த்தேன் !

ஆனால்!
இங்கே
ஹைக் கூவலாக நிறைய !

//அம்மா !
என் தாயே!
ஏன் தாயே
எந்த தயை//

துணைக் கால் செய்யும் மாற்றத்தை கண்டாயா ?!

ZAKIR HUSSAIN சொன்னது…

Dear Crown,

கவிதையின் வரிகளூடே நீங்கள் நீண்ட நெடுந்தூரம் தமிழின் கைபிடித்து நடந்து வந்த நெருக்கம் தெரிகிறது.

உண்மையான உங்கள் டைப்பிங் இல் அடிக்கடி தமிழ்த்தாயிடம் தகராறு செய்த காட்சியும் தெரிகிறது. [ சபீரும் அபுஇப்ராஹிமும் தமிழ் ஸ்பெல்லிங் திருத்தாவிட்டால் கொஞ்சம் கஷ்டந்தேன்...]

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாய் பாசத்தை தட்டிச் சென்ற கிரவ்வுனுக்கு தங்க கிரீடம் போடுங்க அம்மா தாயே!

சூப்பர்மா வாழ்த்துக்கள்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்சி. சகோ ஜஹிர் அனுப்பிய தலைப்புகளை பார்ததும். உடனே எழுத தொடங்கியது. மேலும் அன்று ஞாயிறு விடாமல் வாடிக்கையாளர்களுடன் வர்தகம் புரிந்து கொண்டு இடையில் என் அண்ணனிடம் சில நிமிட வர்தக பேச்சு, இல்லாளிடமிருந்து 3 முத்தான அழைப்பு தொலைபேசியில், இடையில் என் ஊழிய பெண்ணிடம் சில முறையிடல். லுஹர் தொழுதை, பகல் உணவு எல்லாம் எழுதியப்பின் உடனே அனுப்பியதும் தான் எழுத்தில் பிழை பார்த்து அதையும் சரிசெய்ய காலம் இல்லை என்பதால் ஜஹீர் காக்காவிடம் சொல்லி வைத்தேன். அதுதான் சில இடங்களில் என் என்பதற்கு இன் என்று வந்திருக்கும். பிழைகள் மனிக்கவும் .

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்சி. சகோ ஜஹிர் அனுப்பிய தலைப்புகளை பார்ததும். உடனே எழுத தொடங்கியது. மேலும் அன்று ஞாயிறு விடாமல் வாடிக்கையாளர்களுடன் வர்தகம் புரிந்து கொண்டு இடையில் என் அண்ணனிடம் சில நிமிட வர்தக பேச்சு, இல்லாளிடமிருந்து 3 முத்தான அழைப்பு தொலைபேசியில், இடையில் என் ஊழிய பெண்ணிடம் சில முறையிடல். லுஹர் தொழுதை, பகல் உணவு எல்லாம் எழுதியப்பின் உடனே அனுப்பியதும் தான் எழுத்தில் பிழை பார்த்து அதையும் சரிசெய்ய காலம் இல்லை என்பதால் ஜஹீர் காக்காவிடம் சொல்லி வைத்தேன். அதுதான் சில இடங்களில் என் என்பதற்கு இன் என்று வந்திருக்கும். பிழைகள் மனிக்கவும் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்சி. சகோ ஜஹிர் அனுப்பிய தலைப்புகளை பார்ததும். உடனே எழுத தொடங்கியது. மேலும் அன்று ஞாயிறு விடாமல் வாடிக்கையாளர்களுடன் வர்தகம் புரிந்து கொண்டு இடையில் என் அண்ணனிடம் சில நிமிட வர்தக பேச்சு, இல்லாளிடமிருந்து 3 முத்தான அழைப்பு தொலைபேசியில், இடையில் என் ஊழிய பெண்ணிடம் சில முறையிடல். லுஹர் தொழுதை, பகல் உணவு எல்லாம் எழுதியப்பின் உடனே அனுப்பியதும் தான் எழுத்தில் பிழை பார்த்து அதையும் சரிசெய்ய காலம் இல்லை என்பதால் ஜஹீர் காக்காவிடம் சொல்லி வைத்தேன். அதுதான் சில இடங்களில் என் என்பதற்கு இன் என்று வந்திருக்கும். பிழைகள் மனிக்கவும் .///

இது எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் நகல்தானே :) ஏண்(டா)ப்பா மன்னிப்பு ? !! தமிழ் அங்கே அருவியாக வருவதை... வடிகால் அமைத்து, ஒடும் ஒட்டத்தை சீர்படுத்தி சேர்க்க வேண்டியதுதானே நேசிப்பவனின் பங்கு ! ஆதால் மன்னிப்புக்(கேட்க) இடமில்லை !

அட நீ வேற(டா)ப்பா !

மோடியே செய்ததை மூடிவிட்டு முக மூடிபோட்டுக் கொண்டு தேசியம் பேச வெட்கங்கெட்ட ஒரு பெயர்தாங்கி முஸ்லிம் குல்லா கொடுக்கச் சென்றாராம் மத நல்லினக்கத்தை வலியுறுத்தி அதுவும் அந்த முகமூடி போட்ட பேடி வாங்க மறுத்தாராம் அதற்கு இந்த பெ.த.மு. இஸ்லாமுக்குத்தான் அவமானம் என்று பேட்டியும் கொடுத்தானாம் அவனல்லவா மன்னிப்பு கேட்கனும் !

Ahamed irshad சொன்னது…

சூப்ப‌ர் காக்கா..அருமையான‌ வ‌ரிக‌ள்..

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் கிரவுன்,

தாய் பாசத்தை வரிவரியாக கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள்.

//நீ
பிறந்த இடம்
வறுமையின் துயர்
வந்த இடமல்ல
மாட மாளிகையும் அல்ல!
அல்லாடும் அன்றாடங்
காட்சியுமல்ல!//

அது ஒரு காலம், இது போன்ற கஷ்டங்களை பார்த்து அனுபவித்த ஒவ்வொருவரின் நினைவிலிருந்து மாறாது

Shameed சொன்னது…

அதிரை நிருபரா ?
கவிதை நிருபரா?
கவிதை அறியாத
நான் அதிரை
நிருபரால் கவி
பாடிடிவோனே
என எனக்கே
பயம் வந்து
விட்டது

கவி விதையை
காற்றில் தூவியது யார்
காற்றில் தூவிய
கவி விதைக்கு
நீர் பாய்ச்சியது யார்
அனைவரையும்
கவிஞராக்கும்
ஆழமான சிந்தனையை
விதைத்தது யார் யார்

Shameed சொன்னது…

இந்த கிரௌன் பாய்க்கு வார்த்தைகள் எங்கிருந்து கிடைகின்றது
இவர் ஸ்கூல் படிக்கும் போது சேர்த்து எழுதுக பிரித்து எழுதுக என்பதில் வாத்தியாருக்கே பாடம் நடத்தி இருப்பாரோ !

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//கவி விதையை
காற்றில் தூவியது யார்
காற்றில் தூவிய
கவி விதைக்கு
நீர் பாய்ச்சியது யார்
அனைவரையும்
கவிஞராக்கும்
ஆழமான சிந்தனையை
விதைத்தது யார் யார்///

விதை கொடுத்து விட்டது அசத்தல் காக்கா ! அவர்கள் கிரவ்னோடு உரையாடும்போது மின்னாடல் வழக்கில் வழிமொழிந்த நான்கு சூழ்நிலையை கருவாக வைத்து இது உங்கள் சாய்ஸ்ன்னு சொல்லிட்டாங்களா....

கிரவ்ன்(னு) சும்மா(வா) இருந்திடுவார் ! வாரு வாரு என்று வாரிவிட்டார் வரிகளால் !

எல்லாமே உறங்க எத்தனிக்கும் நேரத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரைக்குள் எழுதியதாக தகவல் !

இதுக்கெல்லாம் கிரவ்ன் ரூம் போட்டு யோசிக்கவேயில்லை போலும் ! நிரம்பி வழியும் அணையில் ஒரு ஓட்டையிட்டால் எப்படி பீரிட்டு பாயும் அப்படித்தான் கிரவ்னின் கவிதை வரிகள்...

ஆக ! விதை எப்படி கவிதை யானதுன்னு தெரிந்திருக்கனுமே !

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தாய்மடி... தங்கமடி!

சொல்லால் அடித்தச் செல்லமே... !

தீர்ப்பைத் திருத்து !?


அன்புச் சகோதரர். தஸ்தகீர் : மூன்றுமே அழகிய சிந்தனை கவிதைகள்! வாழ்த்துக்கள்!
******************************************************************************************

அதிரை நிருபருக்கு கோரிக்கை::: ஆக்கங்களில் பிழைகள் வந்தால் கருத்துக்களும் மாற வாய்ப்பு இருப்பதால் வரும் காலங்களில் வருகின்ற ஆக்கங்களை பிழை திருத்த தனிக்கை குழுவுக்கு அனுப்பினால் நல்லது என்று நினைக்கிறேன்.

அவசரம் என்ற எண்ணுடைய ஆக்கத்தை மீண்டும் ஒருமுறை படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

மழை
வறட்சி கண்ட பூமிக்காக‌
கண் கலங்கும் வானம்

மேகம்
வான் வெளி திருவிழாவில்
காசின்றி விற்க‌ப்ப‌டும் ப‌ஞ்சுமிட்டாய்

மின்னல்
இய‌ற்கை கேம‌ராவின் மிக‌ப்பெரிய‌ ஃப்ளாஷ்

இடி
உல‌குக்கு க‌ம்பின்றி கொட்ட‌ப்ப‌டும் முரசு

சாரல்
உலக உருண்டைக்கு சலூன் செல்லாமல் அடிக்கப்படும் ஸ்ப்ரே


சும்மா லைட்டா நெய்னாவின் ஹைக்கூ...

கிர‌வுனின் ஹைக்கூ எம்மை ஹைஸ்கூலுக்கே அழைத்து செல்லும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

//ஜாகிர் காக்கா சொன்னது

உண்மையான உங்கள் டைப்பிங் இல் அடிக்கடி தமிழ்த்தாயிடம் தகராறு செய்த காட்சியும் தெரிகிறது. [ சபீரும் அபுஇப்ராஹிமும் தமிழ் ஸ்பெல்லிங் திருத்தாவிட்டால் கொஞ்சம் கஷ்டந்தேன்...] //

தமிழ் நாட்டில் இருந்து டைப் பன்னக் கூடிய நமக்கே தமிழில் தகராறு.இங்கிலீஸ் நாட்டிலிருந்து டைப் பன்னக் கூடிய கிரவ்வுன்க்கு சரியான வாறாகத்தான் இருந்திருக்கும்.

ZAKIR HUSSAIN சொன்னது…

To லெ.மு.செ.அபுபக்கர்

//தமிழ் நாட்டில் இருந்து டைப் பன்னக் கூடிய நமக்கே தமிழில் தகராறு.இங்கிலீஸ் நாட்டிலிருந்து டைப் பன்னக் கூடிய கிரவ்வுன்க்கு சரியான வாறாகத்தான் இருந்திருக்கும். //

இது எப்ப !!!...எப்பவ்லேர்ந்து!!! ஏன்!!

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பனுக்கு நலமா? பக்கர் , டக்கரா எழுதுற நானுல்லாம் உன்முன் பெக்கர் என்று டி.ராஜானேந்தர் மாதிரி மக்கரா எழுத விரும்பல. முடிந்த அளவில் நல்ல தமிழ் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.ஆனால் இந்த கவிதைகளுடன் நான்கு தலைப்பு நான்கு கவிதைகள் ஒன்று இந்த தளத்தில் வெளிட முடியாத சூழல் அந்த நெருப்பு கணத்தில் பொருப்புடன் தான் எல்லா கவிதையும் புனைந்தேன். ஆனாலும் எம் என்பதற்கு இம் என்றவார்த்தை மட்டுமே மாற்றி எழுதிவிட்டேன். பின் அதை சகோதரர். ஜாஹிர் அவர்களிடம் படித்து காண்பித்து அந்த வரிகளின் பிழைகளை மட்டும் மாற்றசொன்னேன். எழுத்தில் ஒரு பிழை வந்தாலும் வார்தையின் அர்த்தம் தப்பர்தமாகிவிடலாம் என்பதாலேயே இவ்வளவு சிரத்தை. இதை நல்லவிதமாக நிவர்த்தி செய்ய அபுஇபுறாகிம் காக்கா,சகோ. கவிஞர் சபீர் ,ஆயியோர் இருக்கும் தெரியம் கூட, ஆக்கம் எழுதிய பின் உடனே அனுப்பி தருவதற்கு காரணம் . சகோ.ஜாஹிர் சொல்லி உள்ளதை மறுபடியும் படித்தால் தெரியும் இம் என்ற வார்தைதான் இம்சைமையாக முடிந்தது.எல்லா வார்த்தைகளும் அல்ல.இது என் நிலைவிளக்கம்.

sabeer.abushahruk சொன்னது…

கிரவுன்,
உங்கள் கவிதையைத் தொடுவதற்குமுன் கீழ்கண்ட வரிகள் பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தன என்று சொல்லிக்கொள்கிறேன்.

//காற்றில் தூவிய
கவி விதைக்கு
நீர் பாய்ச்சியது யார்
அனைவரையும்
கவிஞராக்கும்
ஆழமான சிந்தனையை
விதைத்தது யார் யார் //


//கவிதையின் வரிகளூடே நீங்கள் நீண்ட நெடுந்தூரம் தமிழின் கைபிடித்து நடந்து வந்த நெருக்கம் தெரிகிறது//


//மழை
வறட்சி கண்ட பூமிக்காக‌
கண் கலங்கும் வானம்

மேகம்
வான் வெளி திருவிழாவில்
காசின்றி விற்க‌ப்ப‌டும் ப‌ஞ்சுமிட்டாய்
//

கலக்குறீங்கப்பா!!!

sabeer.abushahruk சொன்னது…

இனி,
எனதருமை கிரவுனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீங்க யாருன்னோ எப்படி இருப்பீங்கன்னோ எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மொழி மிகப் பரிச்சயமாகிப் போனது. தொடர்ந்து உங்களையும் தெரிந்துகொண்டேன். எங்கே இருந்தார்யா இந்தாள் இத்தனை நாள் என்று ஏங்க வைத்துவிட்டது உங்கள் நட்பு. இந்த உணர்வு என்னோடு ஜாகிர் ஹமீது மற்றும் யாசிருக்கும்கூட உண்டு.

நான் ஜாகிரிடம் கேட்டேன், "ஏன்டா ஜாகிர் கிரவுன் விருட்சத்தை உலுப்பி விட்டாய். இவ்வளவு கொட்டிக்கிடக்கிறதே" என்று.

எழுதியதல்ல பெரிய விஷயம் கிரவுன், எண்ணியதே மிகப் பெரிய விஷயம்.

sabeer.abushahruk சொன்னது…

//பருந்து அன்றாடம்
அருந்தும் மதுவுக்கும்
சேர்த்து நீ உழைதாய்!//

இருந்தும் ஏன்தான் அவள் அவனுக்கு
விருந்தும் என்றானாளோ பேதை?

உங்கள் கவிதைகளின் நாயகிகளுக்கு நல்லாத்தான் ஆறுதலா எழுதுறீங்க.

sabeer.abushahruk சொன்னது…

குடம் குடமாய்
என் கண்ணீர் வடிகிறதே!
உதிரம் கொதிக்கிறதே!
இதயம் விட்டு ,விட்டு வெடிக்கிறதே!
இவையாவும்
உனக்கு
காதல் மயக்கத்தால்
புரியாமல் போனது
என் வாழ்வின் சாபமா?

உணர்ச்சிகரமான ஆதங்கம். அருமையான மொழியாக்கம். உணர்வுகளை எல்லோராலும் இவ்வளவு தெள்ளத் தெளிவாக சொல்ல முடிந்தால் all is well.

சூப்பர்ப் கிரவுன்.

sabeer.abushahruk சொன்னது…

//ஊர் என்றால்
ஒத்து வாழ் என்பது
தீமையையும் சகித்து வாழ்வதா?
நன்மை தீமை பிரித்து
பகுத்து வாழ்வதா//

சாட்டையடி கிரவுன். தொடர்ந்து சுழற்றுங்கள். ஊர் திருந்துகிறதோ இல்லையோ தங்கிலீஷ் திருந்தி தமிழாகும். அதை உங்கள் எழுத்தும் எண்ணமும் சாத்தியமாக்கும்.

வாழ்துதுகள்.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
//ஜாஹிர் காக்கா சொன்னது
இது எப்ப !!!...எப்பவ்லேர்ந்து!!! ஏன்!! //

20/09/2011 ல் இருந்து .எம் என்பதற்கு பதிலாக இம் என்ற வார்த்தைகளினால்..

sabeer.abushahruk சொன்னது…

//அதிரை நிருபருக்கு கோரிக்கை::: ஆக்கங்களில் பிழைகள் வந்தால் கருத்துக்களும் மாற வாய்ப்பு இருப்பதால் வரும் காலங்களில் வருகின்ற ஆக்கங்களை பிழை திருத்த தனிக்கை குழுவுக்கு அனுப்பினால் நல்லது என்று நினைக்கிறேன்.//

நானும் வழிமொழிகிறேன். :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

// நானும் வழிமொழிகிறேன். :) ///

நானும் அப்படியே வரவே()ற்கிறேன் !

கவிக் காக்கா அடிக்கடி என்னிடம் சொல்வது தூர(ல்)பார்வை என்றில்லாமல் தொ(ல்)லை நோக்குப்பார்வை தான் முக்கியம்னு !

அதேமாதிரி அடிக்கடி (துணைக்)காலை மடக்குங்கன்னு சொல்லுவாங்க ! ஏன்னா அ(வை)டிகடி அதிமாக அழுத்திடுவதாலே ஸாரி காலை நீட்டிடுவதாலே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//என்னுயிரைக் தந்து
உனை வளர்க்கிறேன் - ஆனால்
நீ சொல்கிறாய் உனக்கு உயிரென
அவனைக் காட்டி!//

ஆமாம் அது தான் வயது செய்யும் வார்த்தை ஜாலங்கள். கைப்பிடிப்பவனை கைக்குள் போட வசியப்படுத்தும் வசனம். வாப்பாவின் பொறுப்பு முடிந்துவிட்டது.இனி வாய்த்தவனாகிய நீதான் உயிரென்று சொல்லி பொறுப்பாளராக்குகிறாளோ!

அத்தனையும் அருமை. அதிலும்
அர்த்தங்கள் ஆயிரம் இதில்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்
பிழை(களை)பற்றி பேசும் நேரத்தில் எனக்கு தோன்றிய திடீர் மின்னல்.
ஹைக்கூ
---------------------
வரதட்சனையும்,அதைவாங்கும்
மாப்பிள்ளையும் இந்த சமூகத்தின்
மாபிழை! (மகாபிழை=மாப்பிள்ளை)

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

வானவில்
வானப்பலகையில் வண்ணம் தீட்டி
வரைந்து பழகும் இயற்கை

அருவி
உலகம் சீராக இயங்க‌
ஊற்றப்படும் எரிபொருள்

காடுகள்
மழையின் சம்மந்தி
இயற்கையின் போர்வை
வனவிலங்குகளின் விளையாட்டரங்கம்

மலைகள்
உலகக்காகிதம் காற்றில் பறந்துவிடாமல்
இறைவன் வைத்த‌ பேப்பர் வெயிட்

ஏரிகள்
உலகத்தாய் தலை சீவி
எடுக்கும் வாங்கு

பூக்கள்
வான் நட்சத்திரங்கள் சேர்ந்து
உல‌கில் போட்ட‌ எக்ஸ்பிஷ‌ன்

ந‌ம்ம‌ ஊர்
எங்கு சென்றாலும் ஏங்க‌ வைக்கும்
உல‌க‌ம் சுற்றினாலும் க‌டிவாள‌த்தை
த‌ன் க‌ட்டுப்பாட்டில் வைக்கும்

க‌டைத்தெரு
ந‌ல்ல‌ மீன்க‌ளுட‌ன் வீண்பேச்சுக்க‌ளும் கிடைக்கும்

நல்ல ந‌ண்ப‌ன்
எங்கோ வாங்கிய‌ அடிக்கு
இங்கே ம‌ருந்து கிடைக்கும்

ராஜாம‌ட‌ பால‌ம்
உள்ளூர்வாசிக‌ளின் சாய்ங்கால‌ சுவிட்ஸ‌ர்லாந்து

ந‌ம்மூர் க‌ட‌ல்
ஆர‌வார‌மில்லா அலை இருக்கும்
அல‌யாத்திக்காடே அத‌ற்கு துணை நிற்கும்

ஜாவியா
வ‌ருட‌த்தில் நாற்ப‌து நாள் மட்டும்
ஊரார் வ‌ந்து போகும் (இறை)இல்ல‌ம்

ஊர் விளையாட்டுத்திட‌ல்
உல‌க‌ உருண்டையில் விளையாட‌
ந‌ட‌த்த‌ப்ப‌டும் துவ‌க்க‌ ப‌யிற்சி ப‌ள்ளி

பாஸ்ப்போர்ட்
சில‌ருக்கு ஆன‌ந்த‌த்தையும்
சில‌ருக்கு அல‌ர்ஜியையும் த‌ரும்
வாயில்லா சிறு புத்த‌க‌ம்

உம்மா
குறைவின்றி அன்பு சுர‌க்கும் ஒரு அமுத‌சுர‌பி

வாப்பா
பிள்ளைக‌ள் கேட்ட‌தை வாங்கி த‌ந்து
உள்ள‌க்கோட்டையில் சிம்மாச‌ன‌மிடும்


ஏதோ ந‌ம்மானாலெ முடிஞ்ச‌து..........வ‌ர‌ட்டுங்க‌ளா?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

வ அலைக்க முஸ்ஸலாம் .

யாரு தஸ்தகீரா இப்பவாவது கேட்டியே! அல்ஹம்துலில்லாஹ்.நான் நல்லா ஈக்கிறேன்.நண்பா நீ எப்படி ஈக்கிறாய் .சரி அப்புறம்

// பக்கர் , டக்கரா எழுதுற நானுல்லாம் உன்முன் பெக்கர் என்று டி.ராஜானேந்தர் மாதிரி மக்கரா எழுத விரும்பல. முடிந்த அளவில் நல்ல தமிழ் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.//

ஏன் தங்கிலீஸ் நோட்டிலேருந்து இப்படி தப்பு தப்பா எழுதுறாய் .

தமிழை தலைகீழாக போட்டு தாவக்கூடிய நீ நல்ல தமிழ் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.என்று சொன்னால்

தமிழ் வெள்ளத்தி கறை ஏற முடியாமல் தப்படிக்க கூடிய நாங்கள் இங்கிலீசில் புரட்ச்சிதான் பன்னனும் போலும் .

அப்துல்மாலிக் சொன்னது…

ஒன்னு ஒன்னா ரிலீஸ் செஞ்சிருக்கலாம், அனைத்தையும் படிக்க ரூம் போட்டு உக்காரனுமா இருக்கு, நல்ல வரிகள் க்ரவுன், வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த காவியம் படைக்க