Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவதூறு! 15

அதிரைநிருபர் | September 18, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

திண்ணைப் பேச்சாளர்களின்
புலம்பல்கள்!
உனக்கு தெரியுமா?
சோற்றுக்கு வழி இல்லாமல்
அலைந்தானே இன்று
அவனுக்கு வீடு என்ன?
கார் என்ன?

அவன் மனைவியை பார்த்தியா?
கருகமணிக்கு வழி இல்லாமல்
இருந்தாளே அவள்தான்!
அவள் மணிக்கட்டு முதல்
முழங்கை வரை தங்கம்
தங்கமா? தங்க வளையல்
கழுத்து முழுதும் மாலைகள்
ஹூம்.... நானும்தான் இருக்கேன்
கையில் கழுத்தில் எதுவும் இல்லாமல்!

தெரியுமா? சேதி
அந்த வீட்டில் ஒரே சண்டையாம்
சண்டைக்கு என்ன காரணமாம்
அதை ஏன் கேட்கிறே
அது பெரிய கதை
நானே சுவற்றில் காதை
வைத்து கேட்டேன்!

அவன் அவளை பார்த்தானாம்
இவள் அவனை பார்த்தாளாம்!
நானும் கேள்விப்பட்டேன்!
இப்ப அவனோடு
அவள் ஓடி விட்டாளாமே!

என்ன கொடுமை!
இப்படி அவதூறு பேசும்
திண்ணை கூட்டங்களிடம்
ஒரு மூட்டை அரிசியை கொடுத்து
மூட்டையில் எத்தனை அரிசி
உள்ளது என்று எண்ணி சொல்லுங்கள்
என்ற வேலையை கொடுக்கலாம்!

சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு
அவதூறை பரப்பிக் கொண்டு
இருப்பவர்கள்
குர்ஆனிலும் , நபிமொழியிலும்
உள்ள எச்சரிக்கையை
மனதில் வைக்கட்டும்!

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை என்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 24: 23)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)' என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(ஸஹீஹுல் புகாரி: 2766
 
 
'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' ' என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'  (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

-- அலாவுதீன்


15 Responses So Far:

sabeer.abushahruk said...

சொல்லு, சொல்லிக்கொண்டே இரு, மேலும் மேலும் சொல்லு.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பர்.
சொல்லச் சொல்லத்தான் நம் மக்களுக்கு விளங்கி திருந்துவர்.

நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவதூறு !
அதிலிருந்து தூர இரு !

அவதூறு !
ஆண்மைக்கு இழுக்கு !

அவதூறு !
இல்லறத்தை இடிக்கும் !

அவதூறு !
ஈனமான செயலாகும்

அவதூறு !
உறவை உதறிடும்

அவதூறு !
ஊரையே பிளக்கும்

என்ன பன்றது பழக்க தோஷம் (அங்கே போட்ட (க)விதை)... மின்னஞ்சல் வழியே பேசிக்கிட்டு இருக்கும்போது அப்படியே இங்கே வந்தேனா...

அப்பா தப்பிச்சேன் அவதூரிலிருந்து !

அன்பின் அலாவுதீன் காக்கா, நீங்கள் தருணம் அறிந்து எடுக்கும் சாட்டை... சாடியவர்களை சிந்திக்க வைக்கும் !

தொடர்ந்திடுங்கள்... இன்ஷா அல்லாஹ் !

Shameed said...

கவிதை எங்கோ கேட்டதுபோல் இருந்தது பிறகு புரிந்தது பல "புறமும்" காதில் வந்து விழுந்தவை என்று

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அவதூறு !
ஊரையே பிளக்கும்//

அவனவன் அணுவை பிளந்து ஆக்கப்பணி செய்யும் போது நம்ம ஆளுக மட்டும் ஊரை பிளந்து கூத்து பணி செய்றாங்க

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சில பொறம் போக்கு செய்யும் சேட்டை,
அது புறம் பேசுதல்.
சில அக அழுக்கு மனிதன் செய்தும் துர்செயல் அவதூறு!
அவன் தூறும் அந்த அசுத்த குப்பை
சமுதாயத்தை கெடுக்கும் கேடு!
இது வீடேங்கும் பரவி வீதியெங்கும் உலவி,
நாடெங்கும் தொற்றும் வியாதி.
அவதூறை களையாத உள்ளம்
என்றும் பள்ளம் நிறைந்த சாக்கடை!
அவன் போகும் இடம் சாக்காடுக்குப்பின் நரகம்
என்னும் நிரந்தர தண்டனை களம்.
அவதூற தூரம் வைத்திடுவோம்
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மை நாமே காத்திடுவோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவதூறு-அன்றாடம் ஊறிப்போனது,அவசியம் தூற்றப்படவேண்டியது.
புறம்-அது எப்புரமும் அறவே வேண்டாம்.
நல்லாக்கம்- இதுபோல் அப்பப்ப வேண்டும்
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அன்பின் அலாவுதீன் காக்கா நல்லா சேதி சொன்னிங்க

என்ன கொடுமை!
இப்படி அவதூறு பேசும்
திண்ணை கூட்டங்களிடம்
ஒரு மூட்டை அரிசியை கொடுத்து
மூட்டையில் எத்தனை அரிசி
உள்ளது என்று எண்ணி சொல்லுங்கள்
என்ற வேலையை கொடுக்கலாம்! //

அவதூரிலே நரகத்தின் தூறை வாரும் கூட்டாம் திண்ணை கூட்டங்கள்.அவர்களிடம் போய் அரிசி மூட்டை கொடுத்து
என்ன சொன்னால்.அரிசி இருக்கிற அளவுக்கு அவதூறு,புறம்,பொய்,தகாத வார்த்தைகளை பேசி தீர்த்துவிடுவார்கள்.ஏன் அந்த பாவம் உங்களுக்கு.

திண்ணை தோழர்களாகிய சத்திய சஹாபாக்களை களங்கப் படுத்தும் விதமாக.நாங்களும் திண்ணை தோழர்கலென்று
பெருமையாக சொல்லிக் கொண்டு அலைகிறது.சில திருந்தாத கூவங்கள்.


நாம் உண்மையான.( அ.நி ) தோழர்களாக இருப்போம்.

Yasir said...

அவதூறு ஒரு தூர எறி(ரி)யப்படவேண்டிய அவச்செயல்... ஊரில் அவலைபோட்டு மெட்டுகொண்டு இருப்பதுபோல் அவதூறுகளை பேசி கொண்டு இருப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள்...அவர்களுக்கெல்லாம் இடி முழக்கமென எச்சரிக்கை கொடுத்து இருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள் காக்கா

Ahamed irshad said...

க‌ண்டிப்பா தூக்கி எறிய‌ப்ப‌ட‌த்தான் வேண்டும்..

அதிரை என்.ஷஃபாத் said...

அவதூறு,புறம்- இவற்றை விட்டு அல்லாஹ் நம் நாவுகளையும் காதுகளையும் பாதுகாப்பானாக, ஆமீன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் : சபீர், அபுஇபுறாஹீம், S ஹமீது, தஸ்தகீர்,M.H. ஜஹபர் சாதிக், லெ.மு.செ.அபுபக்கர்,
யாசிர், அஹமது இர்ஷாத்,அதிரை என்.ஷஃபாத் - - அனைவருக்கும் நன்றி!

அலாவுதீன்.S. said...

அவதூறு !
அதிலிருந்து தூர இரு !

அவதூறு !
ஆண்மைக்கு இழுக்கு !

அவதூறு !
இல்லறத்தை இடிக்கும் !

அவதூறு !
ஈனமான செயலாகும்

அவதூறு !
உறவை உதறிடும்

அவதூறு !
ஊரையே பிளக்கும்
***************************************

(அங்கே போட்ட (க)விதை) - அன்புச்சகோதரர் அபுஇபுறாஹீம் இந்த (க)விதை)யும் நன்றாக உள்ளது.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் தஸ்தகீர்: வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

/// சில பொறம் போக்கு செய்யும் சேட்டை,
அவன் போகும் இடம் சாக்காடுக்குப்பின் நரகம்
என்னும் நிரந்தர தண்டனை களம்.
அவதூற தூரம் வைத்திடுவோம்
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மை நாமே காத்திடுவோம்.///

தாங்கள் அவதூறுக்கு கொடுத்த பொருள் விளக்கமும் நன்றாக உள்ளது.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் லெ.மு.செ.அபுபக்கர் : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

/// அவதூரிலே நரகத்தின் தூறை வாரும் கூட்டாம் திண்ணை கூட்டங்கள்.அவர்களிடம் போய் அரிசி மூட்டை கொடுத்து
என்ன சொன்னால்.அரிசி இருக்கிற அளவுக்கு அவதூறு,புறம்,பொய்,தகாத வார்த்தைகளை பேசி தீர்த்துவிடுவார்கள்.ஏன் அந்த பாவம் உங்களுக்கு.///

வேலை கவனத்தில் எண்ணிக்கை விடக்கூடாது என்று பேசுவது குறையும் என்று நினைத்தேன்.

//// நாம் உண்மையான.( அ.நி ) தோழர்களாக இருப்போம். ///

இன்ஷாஅல்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அலாவுதீன் காக்கா,

அவதூறு கூடாது என்பதை குர்ஆன் ஹதீஸுடன் தொளிவாக ஞாபப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

அவதூறு என்று தெரியாமாலே நிறைய பேர் பெருமைக்காக அடுத்தவரை புரம் பற்றி பேசிப்பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றனும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு