அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன் !
இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். இந்த ஒற்றுமையை ஜீரனிக்க முடியாத சில ஜீவராசிகள் முஸ்லிம்களாகிய நம்மை பார்த்து அந்நியர்கள் என்று அறை கூவல் விடும் காவி கறை படிந்த அவர்களின் கூவலுக்கு. சாவு மணி அடிக்கும் விதமாக. 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா !?
- லெ.மு.செ.அபுபக்கர்
6 Responses So Far:
நல்ல பதிவு. பையனின் பாவமும் ராகமும் நல்லாருக்கு.
சூப்பர் முனவ்வர்,நாளை இம்மாநிலத்தின் முதல்வராகவும்,தேசத்தின் முதல்குடிமகனாக வரவும் அதன் மூலம் தேசப்பற்றை இனிய குரலில் சொன்னதை செயலில் காட்டவும் வாழ்த்துக்கள்!
மாஷா அல்லாஹ் !
இனிய குரல், கம்பீரமான வரிகள் !
இன்னும் இருக்கும் சாதிக்க, வாழ்த்துக்கள் முனவ்வர் !
LMS(அ) : நல்ல முயற்சி !
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரன் முனவ்வர் தான் ஓதக் கூடி மதரசாவில் ஆண்டு விழா தினத்தில் இந்த பாடலை படித்த போதுதான் எனக்குள் ஒரு தாக்கம் ஏற்ப்பட்டது.இவனுடைய திறமை நாளு சுவற்றுக்கு உள்ளேயே மூடி மறைந்து விடக்க கூடாது.உலகமெல்லாம் சென்றடைய வேண்டும்.என்று சிறு முயற்சி செய்து அதிரை நிருபருக்கு அனுப்பி தந்தேன்.
இந்த கானோளியை பார்த்து .கேட்டு விட்டு , கருத்திட்ட ,கருத்திடக் கூடிய ,கருத்திடாமல் பார்க்க கூடிய .அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இளம் முனவ்வரின் அழுத்தமான வரிகளை நம் உள்ளத்தை உருக வைக்கிறது.
"மாவீரன் திப்பு சுல்தான் போன்றவர்களின் வரலாறுகளை மறுக்க முடியாது மறைக்க முடியாது"
இந்த இளம் திறமைசாலியை ஊக்கப்படுத்திய LMS(A)வுக்கு மிக்க நன்றி.
இது போன்று இளம் திறமைசாலிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள் Munawar (மருமகனே..)
wish you all the best Munawar...your patriotism is something special to viewers.
Post a Comment