Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு வேலை கொடு ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2011 | , ,


சமுதாயமே !

அவன்
ஒரு
குடும்பத்தின் நம்பிக்கை !

அவன்
உயரமோ குள்ளமோ
அவனது
தாய் தந்தைக்கு மைந்தன் !

அவன்
ஏழையோ பணக்காரனோ
அவனது
உடன்பிறப்புக்கு தமையன் !

அவன்
கருப்போ சிவப்போ
அவனது
இல்லாளுக்கும் பிள்ளைகளுக்கும் தலைவன்

ஆதலால் !
சமுதாயமே நீயே கொடு
அவனுக்கு
ஒருவேலை கொடு !

அவனுக்குப் பின்னால்
ஒரு
குடும்பம் இருக்கிறது
அங்கே
பொறுப்புகள் இருக்கிறது !

- H. சாதிக் பாட்ஷா



ஹைக்கூ...

முயற்சி

இன்னும் நட !
நீ
தொட வேண்டிய இலக்கு
தூரம் மில்லை !

***

உறக்கம்

விழிகள் மூடி
இதயம் திறக்கிறது !

***

மரணம்

இதயம் மூடி
விழிகள் திறக்கிறது !

- H. சாதிக் பாட்ஷா

அன்பிற்கினிய (கவித்துவ) வாசக நேசங்களே ! 

இது ஓரு கன்னி முயற்சி(தாங்க)... 

உங்களுக்குள் சிக்கித் தவிக்கும், சொல்ல மறுக்கும், சிலிர்ப்பூட்டும், உணர்வுகள் சொட்டும் அல்லது உறுத்தல்கள் குட்டும் இப்படியாக உள்ளத்திலிருக்கும் ஹைக்கூ(வை) கவிதையாக சட்டென்று தட்டிவிடுங்கள் அதுவும் உங்களின் GOOGLE-TALK தூதுவானில் comments@adirainirubar.in என்ற (முழு)முகவரியையும் இணைத்துக் கொண்டு அல்லது editor@adirainirubar.in முகவரிக்கு மின்னஞ்சல் வழியாக (ஹைக்கூ என்று குறிப்பிட மறக்காதீர்கள்) அனுப்பி தந்தால் விரைவில் அவைகளனைத்தையும் பதிவுக்குள் பளிச்சிட வைக்கலாம்.. !

- அதிரைநிருபர் குழு

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை(யின்) மற்றுமொரு கவி(ஞர்) ! எல்லாமே அளந்து அளந்து வைத்திருக்கும் வரிகள் !

ஒரே ஒரு டவுட்டு ! அவன் என்ன படித்திருக்கிறான் ! (பழக்க தோஷமுங்கோ)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புடன் வரவேற்கிறேன்.(றோம்)
ஆமாம்.உலக நியதியும்,உண்மையும்.
எடுத்து சொன்ன விதம் அருமை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாருங்கள் சாதிக் காக்கா,

உண்மையை சொல்லியுள்ள பொருப்பான கவி வரிகள்.

தொடர்ந்து எழுதுங்கள்...

நிச்சயம் வெளிநாடுகளில் வேலை தேடி வருபவர்களை சொந்தங்களை கண்டுக்கொள்ளாதவர்களை சிந்திக்க தூண்டும் முதல் கவிதை.

வாழ்த்துக்கள்...

Yasir said...

கன்னி முயற்ச்சியானாலும் “பின்னி” எடுத்து இருக்கீங்க சகோ.H.சாதிக் பாட்ஷா....வளருட்டும் உங்கள் கவிவளம்......தளைக்கட்டும் இத்தளம்..திளைக்கட்டும் அ.நி வாசகர் வட்டம்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நானும் சில ஹைக்கூ முயன்று பார்த்தேன். நல்லா இருக்கானு நீங்கள் தான் சொல்லனும்(சகித்துகொள்ளவும்).
1. நரகத்தின் வாசலை
திறக்காத "சாவி" தொழுகை.
2.பருவத்தில்
பயிர் செய்யாமலே வளர்வது
மீசை,தாடி.
3.கோபத்தில் பிறந்த
அமைதி குழந்தை அதிரை நிருபர்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கன்னி முயற்சியானாலும் கடின முயற்சி. இன்னும் எழுதனும் . வாழ்துக்கள்.
ஒரு ஹைக்கூ.
முரன்பாடு
-----------
நல்ல கவிதைக்கு
கவிதைதெரியாத நான் எழுதும்
கருத்து.
-------------------

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு):

உனக்காச் சொல்லனும் ஹைக்கூ(வாலுக்கு)! அனுப்பிவை comments@adirainirubar.in இல் இணைந்துகொள் தொடர்பிலேயே தட்டிக் கொண்டிரு ஹைக்கூ(வை) !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வரவேற்கிறோம்.வாழ்த்துகிறோம்.ஹெச்.சாதிக் பாட்சா உங்களுடைய ஹைக்கூ செவிடர்களுக்கு நல்ல volume.

//ஆதலால் !
சமுதாயமே நீயே கொடு
அவனுக்கு
ஒருவேலை கொடு !//

சன்டாளர்கள் வேலை கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை .இருக்கிற வேலையை கெடுக்காமல் இருந்தாலே போதும்.நான் ஜப்பானில் பட்ட அனுபவம் .

அப்துல்மாலிக் said...

ஹைக்கூக்கள் உண்மய சொல்லுது, வருக கவி தருக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹைக் கூன்னா !? ரொம்ப கஷ்டமாமே !?

அப்படின்னா !?

உறங்கச் சென்றேன்
உலுப்பி எடுக்கிறாய்
கனவுக்குள் வந்து !!

Yasir said...

அவள் பிடிவாதக்காரி
என்பது சரிதான்
இறங்கமறுக்கிறாளே
என் இதயத்தை விட்டு

கவிக்காக்கா..கரெக்டா

Shameed said...

ஸ்டார்டிங்கே ரொம்ப நல்ல இருக்கு

Shameed said...

Yasir சொன்னது…

//அவள் பிடிவாதக்காரி
என்பது சரிதான்
இறங்கமறுக்கிறாளே
என் இதயத்தை விட்டு

கவிக்காக்கா..கரெக்டா//


இளகிய மனம் முடையவள்


அதனால் தான்


உடனே மனதை விட்டு


இறங்கி விடுகின்றாள்

கவிக்காக்கா..இது சரியா?

Yasir said...

காக்கா ...போட்டியா ??

இளகிய மனமுடையவள்
அதான் என் இதயத்தில்
இனிப்பாகவே இருக்கின்றாள்

கவிக்காக்கா..தீர்ப்பை இப்பவே சொல்லுங்க

Shameed said...

தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவா இல்லை ஆனால் நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும்

crown said...

Yasir சொன்னது…

அவள் பிடிவாதக்காரி
என்பது சரிதான்
இறங்கமறுக்கிறாளே
என் இதயத்தை விட்டு
----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
அவளை
இறங்கும்"படி" சொன்னாலும் இறங்க மாட்டாள்
அவள் நம்(ன்)மை ஏற்றும் "படி" அதனால்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அன்புடன் வரவேற்கிறேன்(றோம்).

வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம் - யாசிர்:

/அவள் பிடிவாதக்காரி
என்பது சரிதான்
இறங்கமறுக்கிறாளே
என் இதயத்தை விட்டு//

//உறங்கச் சென்றேன்
உலுப்பி எடுக்கிறாய்
கனவுக்குள் வந்து //

நீங்கள் இருவருமே மிக முக்கியமான விஷயமாகிய "மனைவி" என்றோ "வல்லரசு" என்றோ தலைப்பிடாததாலும், தீர்ப்பு சொல்றதர்க்கான சொம்பை ஜாகிர் லவட்டிக்கிட்டுப் போய்ட்டதாலும் எஸ்கேப்.

Shameed said...

தீர்ப்பு இந்திய கோர்ட்டை போல் தாமதமாகி கொண்டே போகின்றது!

Shameed said...

நிதிபதிடமே லவட்டலா!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இளகிய மனமுடன்
இறுகிய நெருக்கம்
நட்புக்குள்ளே !

ஸ்ஸ்ஸ் அப்பாடா நான் தப்பிச்சேன் !

Yasir said...

கவிக்காக்கா...”வல்லரசுவும் “ அ.நி படிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்....ஒரு டொமஸ்டிக் கலவரம் வரும் சுழ்நிலை உங்கள் தீர்ப்பை படித்த பிறகு இருந்தது..”அவள்” என்பது உன்னை நினைத்து எழுதப்பட்டதுதான் என்று வீட்டு வாசலிலயே நீண்ட விளக்கம் கொடுத்த பிறகுதான்..கதவு திறக்கப்பட்டது..தீர்ப்பை ஒரு 12 மணிக்கு பிறகு சொல்லியிருந்தால்....படிக்க சான்ஸ் கிடைத்திருக்காது..செம்பை கடத்துனவங்க...நீதிபதியையும் கடத்தி இருக்கலாம் என்று மனசு மனசார விரும்பியது

sabeer.abushahruk said...

யாசிர்,
நியாயப்படி அச்சச்சோன்னும் உங்க மேலே பரிதாபம் வருவதற்கு பதிலா பயங்கரமான சிரிப்புத்தான் வந்துச்சு உங்கள் எழுத்து நடை.

//செம்பை கடத்துனவங்க...நீதிபதியையும் கடத்தி இருக்கலாம் என்று மனசு மனசார விரும்பியது // ஹாஹாஹாஹா :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///கவிக்காக்கா...”வல்லரசுவும் “ அ.நி படிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்...///

தம்பி யாசிர்: கவலையே வேண்டாம் ! செம்பை கனாக்கிவி ரொம்ப நாளாயிடுச்சு !

உங்க கருத்தைப் படிச்சுட்டு தனியா சிரிச்சுகிட்டு இருக்கும்போது கவிக் காக்கா ஃபோன் போட்டு சிரிச்சது இன்னும் காதுக்குள்ளேயே கேட்குது !? இதுலே ஏதோ உள்குத்து இருக்குமோ... காது கொடையுறமாதிரி இருக்கு... :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு