Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோக்கம் சிறந்தால் மார்க்கம் (வழி) பிறக்கும்..! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2011 | , ,

If there is will, there is a way !

நாம் யாவருக்கும் அல்லாஹ்வின் அருட்கொடையான உடலழகும் உண்டு அதனுள்ளே மனமும் உண்டு, மூளையும் உண்டு, இவைகளையும் மீறி அவைகளை உரிய முறையில் பயன்படுத்துவதை தவிர்த்து அதையும் இதையும் நினைத்து, அதன் அற்புதச் செயல்பாடுகளின் பலன்களை அடையாமல் கெடுத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் அதிகமதிகம். நமக்கு அந்தந்த தேவைகளுக்காக அவசியமான உறுப்புகளுடன் வல்ல நாயன் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டதோ அதனை அந்தந்த நன்நோக்கத்துடன் உபயோகித்தால் பலனும் பயனும் உண்டு.


பெரும்பாலோர் ‘மிகக் கடினமாக உழைக்கிறேன் பேர்வழி’ என்று உடல் ஆரோக்கியத்தையும், மனதையும் கெடுத்துக் கொண்டு அவர்களே அதனைத் திரும்பிப் பார்த்தார்களேயானால் சாதித்தது சல்லிக்காசு பொருமானமுள்ளதாக இருக்காது. வேறு சிலரோ, அவர்கள் கச்சிதமாக குறைவாகவும், நேர்த்தியாக திட்டமிட்டு உழைப்பார்கள் (Work Smarter than Hard). அதுதான் அவர்களுக்கும் வெற்றியைக் கொடுக்கிறது, தான் அடைய வேண்டிய இலக்கை எளிதாக நெருங்கி விடுவார்கள். அதற்காக படித்தவன் / படிக்காதவன் என்ற வேறுபாடுகள் வைத்து பிரித்தாளத் தேவையில்லை.

ஜாஹிர் காக்கா ஒரு பதிவில் இட்ட கருத்தில் அவர்களின் பாட்டி சொன்னதாக சொல்லியிருந்ததை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன் “நீ வேலை தேடுபவனாக இருப்பதை விட, 10 பேருக்கு வேலை கொடுப்பவனாக மாறு" இவ்வகையான நிலை சர்வ சாதரணமாக கிடைத்துவிடாது, சிறிய அதோடு உளப்பூர்வமான உழைப்பும் சரியான திட்டமிடுதலின் துணை கொண்டுதான் சாதிக்க முடியும்.

ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்வதைப்போல் - “If you fail to plan,you plan to fail “

அல்லாஹ் அளித்திருக்கும் அருட்கொடைகளில் ஒன்றான மூளையைச் சிலர் அதன் திறனை சரியாகப் பயன்படுத்தியதே கிடையாது. அதற்கு மாறாக உருளைக் கிழங்குகளை அவர்களின் தலையில் வைத்து இருந்தால் தயிர் சோற்றுக்குத் துணைக்கறியாக பொரிக்கவாவது பயன்பட்டிருக்கலாம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை தரணியில் நெல் விளைவிக்கும் விவசாயமே பரம்பரையாக செய்து வந்த ஒரு வயதான விவசாயிக்கு அவரின் ஒரே மகன் அவரோடு இணைந்து அவரது விவசாயத்திற்கு உதவி செய்து வந்தான். அப்பன் சொல்லை அதிகம் கேளாத அவன் ஊரில் அடிதடியிலும்,பல விரும்பத்தகாதச் செயல்களிலும் ஈடுபட்டு முடிவில் போலிசில் சிக்கி சிறைவாசமே சிம்மாசனமாக கிடைத்தது அவனுக்கு.


அந்த தள்ளாத வயதான காலத்தில் துணைக்கு என்று இருந்த ஒரே மகனும் இல்லாமல் நிலத்தை உழுது விவசாயம் பயிர்செய்ய முடியவில்லை அவரால், மனம் கேட்காமல் சிறையிலிருக்கும் தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்

“மகனே நீ மட்டும் இந்நேரம் என்னுடன் இருந்திருந்தால், நம்முடைய நிலத்தில் உழுது ஏகபோகமாக பயிர் செய்ய பெரிதும் உதவியிருப்பாய், ஆனால் சிறையிலிருக்கும் உன்னால் என்னதான் செய்யமுடியும்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

மகனும் தந்தைக்கு உடனே பதில் அனுப்பினான் “தந்தையே அந்த விளை நிலத்தை உழவுக்கு பயன்படுத்தாதீர்கள், அதில்தான் நான் கள்ளத்தனமாக வாங்கிய விரும்பத்தகாத பொருட்களும் மற்றும் ஆயுதங்களையும் புதைத்து வைத்து இருக்கின்றேன்" என்று.

கடிதம் கிடத்த மறுநாள் விடியற்காலையில் 10 புலன் விசாரனை அதிகாரிகளும் 30 போலீசாரும் அந்த முதியவரின் விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தோடு ஆஜராகி நிலத்தை கூறு போட்டு தோண்டினர் சல்லடையாக நிலத்தினை கிளறியெடுத்து புரட்டிப் போட்டனர் ,அவர்கள் தேடி வந்த ஆயுதங்களோ அல்லது விரும்பத்தகாத பொருட்களோ இல்லை அவர்களும் வந்த வழியே திரும்பியும் விட்டனர்.


அந்த வயதானவர் குழம்பியவராக, நடப்பது என்னவென்று தெரியாமல் மகனுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் ”இப்ப நான் என்ன செய்ய ?” என்று !

மீண்டும் மகன் பதில் அனுப்பினான் “புரட்டிப் போடப்பட்ட அந்த நிலத்தில் தண்ணி பாய்ச்சி நாற்று நடவுங்கள், ஒரு மகனாக சிறையிலிருந்து கொண்டு என்னால் செய்ய முடிந்த உதவி இதுதான் இப்போதைக்கு” என்றதும் அவருக்கு புரிந்தும் புரியாததுமாக தனது வேலையைத் துவங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமாவில் உள்ள மலைகளில் ஒருவித அசரீரிச் சத்தம் மாலை மற்றும் இரவு நேரங்களில் வருவதாகக் கூறி மக்கள் பயந்து அரசிடம் எடுத்துச் சொல்ல அரசும் பூகம்ப பயத்தில் மேலை நாடுகளில் இருந்து விஞ்ஞானிகளை (!!) இறக்குமதி (அமீரகத்தில் 99% இறக்குமதிதான்) செய்து, ஆராயச் சொன்னார்கள்.

புரியாத ஒலிச் சத்தம் வரும் தகவல் (செய்திச் சேனல்களில்) ஒலியின் வேகத்தைவிட அதிகமாக ஆங்காங்கே பரவ பலபகுதிகளிலிருந்தும் மக்கள் அச்சத்துடன் வரத்துவங்கி சுற்றுலாத் தளமாக அதனை பரபரப்பாக கண்டு வந்திட சென்று கொண்டிருக்க, அங்கே ஒரு 'சேட்டன்' மட்டும் அவருக்கே உரிய கைத்தொழிலான ஒரு மினி 'சாயாக் கடை' க்கு சாந்தமாக அடிக்கல் நாட்டினார், ஆஹா! அருமையாக சுறுசுறுப்பான வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். நிறைவில் அந்தப் பகுதியில் வெளியாகும் ஒலிச் சத்தம் ஒரு வித ஆந்தைகளின் அலறல்தான் என்று விஞ்ஞானிகள்(!!) உறுதி செய்ய, அரசும் அந்த விஞ்ஞானிகளுக்கு செலவழித்த பணத்திற்கு நிகராக, கல்லா கட்டிக்கொண்டு 'நம்ம சேட்டனும்' அவ்விடத்தை அதே சாந்தத்துடன் காலி செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் அகன்றார்.

நீதி: இம்மாதிரியான நிஜமான சம்பவங்களில் இருந்து என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால் “எங்கே இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்”

- முகமதுயாசிர்
- ,துபாய்

15 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//Work Smarter than Hard//

most of the people do not think in this line.

WHEN SOMEBODY EMPLOY YOU FOR 1000 Dirham / Ringgit / Rupees AND GET THINGS DONE, WHY DONT YOU EMPLOY YOURSELF AND EARN 10,000-00

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விரிவான விளக்கம். சகோ; யாசீர் அவர்கள் தந்திரத்தை கற்று தரும் ஆக்கத்தை எங்களுக்கு தாரகை வார்த்து தந்து மூளையை விரிவடைய செய்வது போல் இருந்தாலும்.கடைசியில் உள்ள சர்க்கள் படம் மூளையை சுருங்க செய்வது போல் இருக்கிறதே!.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை!
மூளை செய்த நல்ல வேலை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நோக்கமும் அதில் தீர்க்கமான நிலையும் அவசியம் என்பதை அளவோடும் அதற்கான காட்டோடும் சொல்லிய விதம் அருமை.

பிரெய்ன் ஈஸ் சீக்ரெட் ஆஃப் மை சக்ஸஸ் / ஃபெயிலியர் ! :)

அண்டில் யூஸ் ஃபார் " "

இது சரியாவருமா ?

ஒரே ஒரு டவுட்டு !

அது சரி மூளைச் சலவை மூளைச் சலவைன்னு சொல்றாங்களே அது எப்படிங்க ? வாஷிங் மெஷின்லையா போட்டு எடுப்பாங்க!?

Muhammad abubacker ( LMS ) said...

/ அது சரி மூளைச் சலவை மூளைச் சலவைன்னு சொல்றாங்களே அது எப்படிங்க ? வாஷிங் மெஷின்லையா போட்டு எடுப்பாங்க!? //

வாஷிங் மெஷின்லே போட்டாலும் சரி அல்லது அருணா சோப்பு போட்டு ஹார்ட் பிரசைக்கொண்டு தேய் தேஈண்டு தேய்த்தாலும்
சிலபேருக்கு மூளை சலவை பண்ணமுடியாது இறவனின் நாட்டத்தை தவிர.

sabeer.abushahruk said...

நல்ல உற்சாகமூட்டும் பதிவு. என்ன ஒன்னு, மூளையை யூஸ் பண்ண சொல்றதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. கஸ்டமப்பா.

யாசிர், இப்படி அடிக்கடி சொன்னாத்தான் யூஸ் பண்ணுவோமாக்கும்.

sabeer.abushahruk said...

ஊரில் மழை-2:

தொலைக்காட்சியில்

மழை கண்டு

அலைபேசியில் ஊரழைத்தால்

தொலைபேசியில்

சப்தமாய் மழை



சாளரம் வழியாக

சாரலாய் மழை

கூரையின் நுனியிலும்

குட்டிக்

குற்றாலமாய் மழை



கத்திக் கப்பல்களும்

காகிதக் கப்பல்களும்

கரை சேரவில்லையாம்

கனுக்கால் வரை மழை



மின்சாரம் வெட்டுப்பட

முட்டை விளக்கின்

மட்டுப்பட்ட வெளிச்சத்தில்

முகங்களில் மழை



இரவின் இருளில்

மழை பெய்வதில்லை

அதன்

பேச்சுச் சப்தம் மட்டுமே

கேட்டுக் கொண்டிருக்கும்



அடைமழை காலத்தில்

குடைமேல் மழை

தடைபட்ட தூரலில்

உடையெல்லாம் மழை



முகிழ் முயங்கி

மழை பொழிந்து

மண் ணடைந்து

மடை வழிந்து

கட லடைந்து

கலக்கும் வரையான நீரை

மழை என்றே

அழை

sabeer.abushahruk said...

ஸாரி, தேங்ஸ் டூ www.thinnai.com போட மறந்துட்டேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! கண்ட்ரோல் + சி யும் கண்ட்ரோல் + V

நீங்களே உங்களுக்கு டேங்க்ஸ் சொல்றீங்களே கவிக்காக்கா

(எப்புடி) என்னமா (N)மூளை வேலை செய்யுது ! நான் அப்போவே SSLC பாஸ்ஸாக்கும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அடைமழை காலத்தில்
குடைமேல் மழை
தடைபட்ட தூரலில்
உடையெல்லாம் மழை//

அதன் பின்னர் உம்மாவின் அழை(ப்பு) !
உள்ளே வாமா கண்ணான வாப்பா !

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல நிகழ்ச்சியை இந்தியாவில் இருக்கும் எங்களுக்காக ரிகார்ட் நிகழ்ச்சியாக நிருபரில் பதிந்தால் காலை நேரத்தில் பார்க்க வசதியாக இருக்கும்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

சகோதரர் அபுஇஸ்மாயில்...

தங்களின் வேண்டுகோளையும் வெகுவிரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

கருதிற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

Shameed said...

உடல் வேலை அதிகம் இருந்தாதால் மூளைக்கு வேலை வைத்த யாசிர் கட்டுரை படிக்க தாமதமாகி விட்டது

அப்துல்மாலிக் said...

சகோ. யாசிர், நிறையவே மூலையை கசக்கி யோசிக்க வைத்துட்டீங்க, இங்கே அடுத்தவன் முன்னேற்றத்துக்கக உழைத்ததில் நம் முன்னேற்றத்திற்க்காக உழைத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும், என்பதை சொன்னவிதம் அருமை... யோசிக்கனும், இனிமேல் வேலை தேடி என்னத்தை கிழிக்கப்போறோம் என்ற எண்ணம் மேலெலவேண்டும். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடுவான்...

Yasir said...

கருத்து குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தது....தாங்ஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு