Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்க டீச்சர் / எங்க சார் ! - ஆசிரியர் தினம் பகிர்வு களம் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2011 | , ,


எங்க டீச்சர்..! / எங்க சார்.. ! இந்தத் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்குப் பிடித்த டீச்சர் / சார் சட்டென நினைவுக்கு வருகிறார் அல்லவா?

அந்த டீச்சரை / சாரை ஏன் பிடிக்கும்?
அவர் உங்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

ஒவ்வொரு டீச்சரும் / சாரும் உங்கள் டீச்சரிடமிருந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

இப்படி, உங்களால் மறக்கமுடியாத ஆசிரியர்கள் குறித்த நினைவுகளை இங்கே பகிரலாம் வாருங்கள்.

'ஆசிரியர் தினம்' அன்று மட்டும் தான் ஆசிரியரை நினைக்கிறோமா என்ன..? ஆசிரியரை நன்றியோடு நினைக்கும் எல்லா நாட்களுமே ஆசிரியர் தினம் தானே..!

- அதிரைநிருபர் குழு

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனம் வென்ற ஆசிரியர்கள் நிறைய...

வாய்க்கால் தெரு பள்ளிக் கூடத்தில் மறக்க முடியாத டீச்சர் "கண்ணாடி டீச்சரை"

உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளியில், (மர்ஹூம்) தாஜுதீன் சாரை என்னால் மறக்க முடியாது, நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்கு நல்ல ஆசானாகவும் சறுக்குமிடத்தில் Gripஐ தரவும் உதவியவர்கள்.

அடுத்து சீரினிவாசன் சார், அஹ்மது தம்பி சார், வடிவழகி டீச்சர், தாமஸ் சார்... இப்படி நீளுகிறது !

பள்ளிப் படிப்பு முடிவில் ஃபேர்வெல் பார்ட்டியில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும்போது படிகளில் ஏறும்போது தடுக்கி விழுந்தேன் அப்போது நாடிமுத்து சார் சொன்னது "படி படின்னு சொன்னோமே கேட்டியா?" ன்னு அவரையும் எப்படி மறக்க முடியும் !

இன்னு இருக்கு நிறைய !

என் உளமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பிடித்தவர்களில் சுருக்கமாக,
ஆரம்பக்கல்வியில் துளசி டீச்சர்,
மேல்நிலைக்கல்வியில் ஹாஜி முஹம்மது சார்,
கல்லூரிக்கல்வியில் ஹசன் சார்.

Anonymous said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போதும் வீடு திரும்பும்போது எங்களோடு ஒன்றாகவே வரும் மேகலா டீச்சர், வடிவழகி டீச்சர் இவர்களை மறக்க முடியாது எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்களோடு நண்பர்களைப் போல் பகிர்ந்து கொள்வோம்.

SKMH சார், சீரினிவசன் சார், இரமதாஸ் சார் இவர்களோடு மற்ற ஆசிரியர்களும் எங்கள் மனதில் நிறைந்திருப்பவர்களே !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அது எப்படி மறக்க முடியும்,சார்&டீச்சர்மார்களை, ஹாஜி முஹம்மத் சாரிடம் அடி வாங்கியதை.அலியார் சாரிடம் தலையில் குட்டு வாங்கியதை.நூர்ஜஹான் டீச்சரின் கீச் கீச் குரல்.
ரோசம்மா டீச்சரிடம் டீயுசன் படித்ததை.விளையாட்டுகளில் ஆருவமூட்டிய தாஜுதீன் சாரை.இன்னும் எவ்வளோவோ இருக்கின்றன.அனைத்து வாத்தியார்மார்களுக்கு வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

யாரை விட்டு யாரை சொல்லுவது, என்னை 1ம் வகுப்பிலேர்ந்து செதுக்கி நல்லது/கெட்டது சொல்லிக்கொடுத்து, உலகம் என்ன என்பதை தெளிவாக்கி அறிவுப்பசிக்கு உணவூட்டிய அனைத்து ஆசிரியை/யர் களை இங்கே இன்று நினைவுகூறுகிறேன், அனைவருக்கு உள்ளார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கிறேன், அதற்கான நினைவுக்களத்தை ஏற்படுத்திய இந்த அ.நி வுக்கும் நன்றிகள் பல...

இன்று எத்தனையோ நம் ஆசான்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்கள் அவர்கள் அனைவரின் மறுமைக்காக பிரார்த்திப்போம்...

ZAKIR HUSSAIN said...

ஒவ்வொருவரும் கமண்ட்ஸ் பகுதியில் எழுதுவதை விட ஒரு சின்ன ஆர்டிக்கில் எழுதும் அளவு ஆசிரியர்களைப்பற்றி நினைவுகள் இருக்கிறது.

அதிரை நிருபர் வாசகர்கள் எழுதும் இந்த நினைவுகளை ஒரு தனிப்பதிவாக வெளியிடலாம்.

இதை எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் படித்த கணவான்களே முடிவு செய்வது நன்று.

என்னைப்போன்றவர்களிடம் கேட்டால் "இ-மெயிலுக்கு எவ்வளவு ஸ்டாம்ப் ஒட்டனும்"னு கேட்களாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்னைப்போன்றவர்களிடம் கேட்டால் "இ-மெயிலுக்கு எவ்வளவு ஸ்டாம்ப் ஒட்டனும்"னு கேட்களாம்.//

ரசித்தேன் !

காக்கா, அது அப்போ கையேடு பத்திரிக்கை நடத்தும்போது 15 பைசா அதே தான் காக்கா இப்போவும்.... ஸ்டாம்பு ஒட்டாம அனுப்பினா ஊரில உள்ள குப்பையெல்லாம் அள்ளிகிட்டு திரும்பி வந்திடும் இப்போ உள்ள ஈமெயிலுங்க !

யோசனையை அனைவருக்கும் (நல்ல)வாசனையாக்கனும் ! முயற்சிப்போமே !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து...
---------------------------------------------

I love my teachers all in Imam Shafi (Rah) Mat. School.

"Happy Teachers' Day"

- UmmHisham

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்று கொடிநாள்!

ஆசிரியரிடம் மாணவ-மாணவியர் காசு கொடுத்துவிட்டு மேஜையில் உள்ள தேசியக் கொடிகளுள் ஒன்றை எடுத்துக் கொள்ளவேண்டும்.
அறிவியல் (அந்தக் காலத்துல அதுக்கு விஞ்ஞானம் னு சொல்லுவோம்) தேர்வு நடந்து முடிந்திருந்தது.

ப்ரேமா ட்டீச்சரிடம் காசைக் கொடுத்துவிட்டு, மேஜையிலுள்ள கொடியை எடுக்கப் போனேன். ட்டீச்சர், "எடுக்காதே!" என்று அதட்டிவிட்டு, ஒரு கொடியை அவர் எடுத்து, எனது சட்டையில் ப்பின் போட்டுவிட்டு, "நீ விஞ்ஞானத்துல ஃபர்ஸ்டுடா!" என்றார்.

தாங்கமுடியாத பெருமையாயிருந்தது!

ஆசிரியைகளுள் எனக்கு விருப்பமானவர் எங்கள் சாவித்திரி ட்டீச்சர்தாம். நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தபோது அவருக்குத் திருமணமானது.

வளர்ந்து பெரியவனாகி எனக்குக் கல்யாணமான பிறகும் அவரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.

'கட்டோடு குழலாட ஆட' என்ற திரைப்பாடல் மெட்டில் 'வானோடு நிலவாட ஆட ...' என்று ஒரு கவிதை எழுதிக் கொடுத்துப் பாடச்சொன்ன ஷரீஃப் சாரையும் அந்நிகழ்வையும் நினைவிருக்கிறது.

சாக்ரட்டீஸ், குமண வள்ளல் ஆகிய நாடகங்களை இயக்கி, எங்களை நடிக்க வைத்த 'மதி' எனும் (முத்தம்மாள் தெரு) ம.தியாகராசன் சாரும் என் மரியாதைக்குரியவர்தாம்.

என் வகுப்புத் தோழன் குணசேகரனின் தந்தையும் எங்கள் தலைமையாசிரியருமான ராமச்சந்திரன் சாரிடம் எல்லாருக்கும் பயம் உண்டு. அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பில் வந்து நின்று கொண்டு ஆங்கிலத்தில் பேசுவார்.

எல்லாரையும்விட ஆசிரியர்களுள் எனக்கு (ஹிட்லர் மீசை) டேவிட் சாரைத்தான் அதிகம் பிடிக்கும். பாடம் நடத்தும் பாங்கும் ஐயங்களைத் தெளிவு படுத்தும் விதமும் அவரிடமிருந்த சிறப்பம்சங்கள்.

இப்போது நமதூரில் ஆசிரியப் பணியிலுள்ள நசீரும் மேகலாவும் என் வகுப்புத் தோழனும் தோழியுமாவர்.

N.A.Shahul Hameed said...

Assalaamu Alaikkum Brothers!
When we think about our teachers, all the time our golden memories spin around our primary education and those teachers who molded us and cultivated us. Probably they are our source of inspiration and role models. In this respect I have to remember my teacher G.Vethapalagan, who was the Headmaster of our High School.
He was a very strict in implementing discipline among the students as well as amongst the teachers. He instilled punctuality and obedience with us.
I was very naughty at home but dedicated in my studies at school. I was brought up by my mother and I saw my father rarely in my boyhood as he used to visit India once in five years or a decade. My mother was very strict and she never hesitated to beat me when I do wrong.
One day when my mom could not control me, she went to our head master's home and complained about me. She returned home and told me, "You go to school and get punished by your Head Master". I was really scared and felt nervous to go to school. It was an afternoon. I was really trembling and worried that the HM may punish me in front of my classmates.
When the bell went on, I felt like passing urine. Hahahahahah. The class started, I was looking for the peon to come and to take me to the HM room. The time passed by but I was not at all called. I developed a little bit of confidence and I was able to listen to the class of my other teacher.
The school was over, nothing had happened. Finally I went back home smiling. My mom was eagerly awaiting for my arrival that I would be punished by my teacher. I went smiling into the home. My mother was shocked to see that I was not worried about her complaint.
Finally she scolded my head master and scolded me too.
Our Head Master never revealed this issue for a long time.
Finally when we were about to leave the school he recollected the issue and said that my mom came to his home and complained about me. Instead my head master advised my mom to treat her grown up son with dignity and do not resort to beating.
I remember he used to correct my English answer paper first and keep it as a reference model for valuing the other students answer papers.
It is he who laid the basis for my (so called) good English and I too followed his footsteps in implementing discipline amongst my students when I became a lecturer. I used to insist my students to cuff the neck button, attend the class on time. I remember my students whenever they enter into my room their hand will go to set right their shirt button. It was my slogan "You are too early for the next hour" if a student turns up the class after I entered into the class.
On this occasion I thankfully remember my school teachers and my college professors (especially my teacher Prof.R.Renganathan and Prof.M.Y.A.Razack).
May Allah bless them all and the cordial relationship between the teacher and taught continue for ever.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

 
துவக்கப்பள்ளி என்றால் ரெண்டாம் நம்பர் ஸ்கூலின் ராமமூர்த்தி சாரை மறக்க முடியாது. ஏன்?
 
அப்பவெல்லாம் அணில், அம்புலிமாமா, கோகுலம், முயல் ஆகிய பத்திரிகைகளைத் தவிர எனக்கு மிகவும் பிடித்தது முத்து காமிக்ஸில் வரும் இரும்புக்கை மாயாவி, டேவிட் லாரன்ஸ், ஜானி நீரோ போன்றவர்களை வாசிப்பதுதான்.  மிட்டய் சாப்பிடத்தரும் ஐந்து பைசாக்களைச் சேர்த்து வைத்து 95 காசுகள் சேரவும் அம்மாத காமிக்ஸ் வெளியாகவும் சரியாயிருக்கும்.
 
அப்படி வாங்கிய “பாம்புத் தீவு” எனும் மாயாவியின் கதை ஒன்றை காலையில் ஸ்கூல் போகும்போதே வாங்கிவிட்டதால் பொறுமை யின்றி ராமமூர்த்தி சாரின் வகுப்பிலேயே ஒளிச்சிப் படிக்க ஆரம்பிக்க, சார் பார்த்துட்டார்.
 
“உன்னை நல்ல பையன் என்று நினைச்சேனே. பாடத்தை கவனிக்காமல் கதை புத்தகம் வாசிக்கிறாயா” என்று, அத்தனை நாட்களும் எனக்கு ஹீரோவாக இருந்த வாத்தியார் பட்டென வில்லனாகி, பாம்புத்தீவை பிடிங்கி, சிகரெட் லைட்டரால் கொளுத்தி வெளியே எறிஞ்சார். எனக்கும் அடி. நான் வலிக்காகவல்ல, மாயாவிக்காக அழுதேன்.  திடீரென , “போய் எடுத்துக்கோன்னார்”. எடுத்து கீழ்முனையிலிருந்து கால்வாசி தீயில் எரிந்த புத்தகத்தை
எடுத்து ஒரு நினைவாக பல வருடங்கள் வைத்திருந்தேன்.
 
(இப்பவும் காமிக்ஸ் வாசிக்கும் குழந்தை மனசு மாறல என்பது வேறு விஷயம்)
 
உயர்நிலைப் பள்ளி என்றால் காதிர் முஹைதீன் பள்ளியும் எனதறுமை ரங்கராஜன் சார், நாடிமுத்து சார் (“வாயிப்பிடி” என்பார் வந்தால், “உன்னை வாயைத்தானே பிடிக்கச் சொன்னேன் ஏன் வந்தாய் என்பார்” கலகல டைப், 

ஷன்முகம் சாரும் ராமதாஸ் சாரும் (எனக்கு மொழி செழிக்கக் காரணமானோர்), 

லியாக்கத்தலி சார் (எனக்கு அறிவியலில் ஆர்வம் வர காரணமே இவர்தான். கண்டிப்பான ஆனால் அன்பானவர். பாடம் நடத்துபவர்களுக்கிடையில் இவர் பாடத்தைப் புகட்டுபவர்), 

தாஜுதீன் சார் (சாராய் அல்லாமல் ஸ்கூலுக்காக டென்னிக்காய்ட் (ரிங் பால்) விளையாட ஆலத்தம்பாடி போனபோது இவரிடம் அன்பான மனிதரைக் கண்டதை மறக்கவியலாதது), 

அலியார் சார் (கண்டிப்பும் கனிவும் ஒருங்கே பெற்றவர்) 

போன்றோரை விட எனக்கு எப்பொழுதும் பிடித்த சார்…ஹாஜாமீ சார்தான்.
 
ஹாஜாமீ சார் தொடர்பான நினைவுகளை நிறைய ஜாகிரின் பேட்டி பதிவில் சொல்லிவிட்டதால்… சுறுக்கமாக, எல்லா சாரையும் விட எனக்குப் பிடித்த சூப்பர் ஸ்டார்.. ஐ மீன் சூப்பர் சார் ஹாஜாமீ சார்தான்.
 
(நாகரத்தினம் சாரையும் “சுர்ரென்று” வலிக்கும் அவர் கிள்ளலையும் அவர் கிள்ளும் இடத்தையும் யாருக்காகவாவது நினைவிருக்கா?
 
கல்லூரியெனில் புதுக்கல்லூரியின் செல்லப்பா சாரை மறக்கவியலாது. வேறு வேறு சுவாரஸ்யங்களில் கல்லூரிப் பருவம் கழிந்ததால் வாத்தியார்களுடனான நெருக்கம் குறைந்துபோனது என்றுதான் சொல்லவேண்டும்.
 
ஜமீல் காக்கா,
 'கட்டோடு குழலாட' மெட்டோடு கருப்பு வெள்ளை காலத்திற்கு அழைத்துச் சென்ற தங்களின் பின்னூட்டம் “ச்சோ ச்ச்வீட்”. (அப்டீன்னா உங்கது “ஈஸ்ட்மென் கலர் காலமா”ன்னு குசும்பா என்னைக் கேட்க ஒரு க்ரூப்பே இங்கே இருக்கு)
 
அ.நி.: நல்ல தூண்டல். (தூண்டில்?)

ZAKIR HUSSAIN said...

அண்ணன் N.A.S ம், ஜமீல் நானாவும் “பிறகு எழுதலாம்’ என்றிருந்த என் சோம்பேறித்தனத்தை அவர்களது எழுத்தால் போக்கிவிட்டனர்.
ஆசிரியர்களைப்பற்றி எழுத எவ்வளவோ விஷயம் இருக்கிறது.
1ம் நம்பர் போலீஸ் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் டிக்டேசனில் மானாவாரியாக தப்பு செய்து அடிவாங்கிய அனுபவம் . இப்போது பார்க்க வாய்ப்பு இருந்தாலும் அந்த டீச்சரை பார்த்தால் “லைட்டா’ பயம் இருக்கும்.பயத்தில் டீச்சர் பெயர் மறந்து விட்டது.
நடிகர் முத்துராமனை நினைவு படுத்திய பன்னீர் சார், உயரமான அந்த ஹெட் மிஸ், சதாசிவம் சார், நான் ஆங்கிலத்தில் முதல் மானவனாக மார்க் எடுத்ததற்கு ‘ நேரு மாமணி’ என்ற கவிதை[ஆக்கம்; கவிஞர் மு.தாஹா] புத்தகத்தை எனக்கு பரிசாக தந்த அப்துல் சமது சார். எனக்கு ட்யூசனில் கண்டிப்பான சரீப் சார்.
ஹைஸ்கூலில் வடிவழகி டீச்சர், நூர்ஜஹான் டீச்சர், ‘கணக்கெடு’ என்று தினம் ஒரு குண்டை தூக்கி போடும்போதே ஒருவிதமாய் குச்சியை வைத்து மேசையில் ம்யூசிக் வாசிக்கும் நாடிமுத்து சார், ஒரு நேவி ஆபிசர் மாதிரி நேர்த்தியாக உடை அணியும் ரங்கராஜ் சார், அதிகம் அலட்டிப்பெசாத அருணாச்சலம் சார் [நெசவு] , தமிழை தேனாக தந்த ராமதாஸ் சார் , மற்றும் சண்முகம் சார், எம் ஜி ஆரை நிதம் விமர்சிக்கும் தாமஸ் சார், எனக்கு விளையாட்டில் ஆர்வமுட்டிய தாஜுதீன் சார், மீசையை எப்போதும் முறுக்கிகொண்டே இருக்கும் ஜார்ஜ் சார், எங்களோடு ட்ராக்கில் ஓடி ப்ராக்டீஸ் தரும் பாரி சார் , எனக்கு பெரிய உதவியாக இருந்து இன்றும் அன்புடன் அழைக்கும் ஹாஜாமுஹைதின் சார், சில காலமே எங்களுக்கு படித்து கொடுத்தாலும் மனதில் இன்றும் அன்பு குறையாத வாவன்னா சார், கண்டிப்போடு பேசினாலும் மாணவர்களுக்கு போதிப்பதில் தனித்திறமை வாய்ந்த அலியார் சார், இன்றைக்கும் நண்பனாக பழகும் சீனிவாசன் சார், பிரான்சிஸ் சார், [ஆங்கிலத்தை அழகாக போதிப்பவர்] , பொருளாதார சப்ஜெக்ட்டில் தனி ஆர்வம வர வைத்த அப்துல் காதிர் சார். எதையும் நிதானித்து பேசும் தர்மலிங்கம் சார்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சில ஆசிரியர்களுடன் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை தனியாக எழுதலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! இப்படி இளம் மாணவர்களின் நினைவலைகள் நிழலாடுவதை நினைக்கும்போது... back2School என்று கூவனும்போல தோனுதே !

அதி அழகு காக்காவின் நினைவலைகள் புதுத் தெம்பே ! ஒருவகையில் ஆரம்ப பள்ளி வாத்தியாருங்க ஞானக் கண்ணால் சொன்னது போலவே இன்றை மூத்தவ(இளைஞ)ர்களின் ஆளுமை பளிச்சிடுகிறது !

ஆமாம் காக்கா நாகரத்தினம் சாரை எப்படி காக்கா மறக்கிறது காலெல்லாம் வலிக்குது...

அது சரி அசத்தல் காக்கா எப்படி எல்லா ஆசிரியர்களின் பெயர்களை அப்படியே மனப்பாடம் செய்து வச்சுருக்கீங்க... அசந்துட்டேன் மெய்யாலுமே...

கிளறிவிட ஏதோ தட்டிய பொறியில் சிக்கியதூ பெரிய பெரிய மீன்கள் !

:)

அதிரை என்.ஷஃபாத் said...

ஏக இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பொறியியல் படிப்பிற்கு செல்ல முடியாமலும், பொறியிலல்லாத என்ன படிப்பு படிக்கலாம் என்னும் வகை தெரியாமலும் தவித்த என்னை, நமதூர் காதிர் மொகைதீன் கல்லூரியிலேயே இளங்கலை கணிதம் படிக்கும் படி வழிகாட்டியும், என்னுடைய படிப்பைப் பற்றி என்னிடமும் என் ஆசிரியர்களிடம் விசாரித்து உரிய நேரத்தில் உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கி எனக்கு உந்து சக்தியாக இருந்த/இருக்கும் என் அன்பிற்குரிய பேராசிரியர் அல்ஹாஜ் M.A அப்துல் காதர் சார் M.A. M.phil CJMC அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மேலும், இளங்கலை கணிதம் முடிவடையும் தருணத்தில் எனக்கும் இருந்த மூன்று எதிர்காலத் திட்டங்களையும் (1. இத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடு சென்று விடுவது 2. அல்லது படிப்பதானால் முதுகலைத் தமிழ் படிக்க வேண்டும் 3. அல்லது எந்தக் கல்லூரியில் முதுகலைக் கணிணியறிவியல் குறைந்த செலவில் படிக்க முடியுமோ அங்கு படிப்பது) வேண்டாம் என சொல்லி தடுத்து, 'வேறு எங்கோ சென்று படிப்பதை விட, அண்ணா பல்கலைக் கழகத்தில் சென்று படி' என்று வழி அமைத்துக் கொடுத்து, கல்லூரி விடுமுறை நாட்களிலும் கூட எனக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி கொடுத்து என்னைத் தயார் படுத்திய என் அன்பு மிகு பேராசிரியர் திரு வீர பாண்டியன் சார் Msc. B.Ed., அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கிக்கொள்கின்றேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். யாரைபற்றி சொல்ல ? யாரைவிட? ஆசிரியர்கள்,ஆசிரியைகள் எல்லாம் நமக்கு ஏணிதான்.குறிப்பிட்டு சொல்ல கூடிய நிலையில் இல்லை என்னுடைய பழக்கம் அவர்களின் மத்தியில் ஏறக்குறைய எல்லாரின் செல்ல மாணவன் அதுவும் அன்பு நிறைந்த ஆசிரிய,ஆசிரியர்கள் தாம் அவர்கள் என்றும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

நான் படித்த ஆசிரியர்களில், பிடித்த ஆசிரியராகப் பளிச்சென்று நினைவுக்கு வருபவர் திரு ரெங்கராஜன் அவர்கள்! நான் மாணவனாக இருக்கும்போது மட்டுமல்ல, ஆசிரியராகப் பணியாற்றும்போதும் அவர்கள், எனக்கு ஆசிரியர்! ஆங்கிலம், புவியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் ஐயங்கள் ஏற்பட்டால் ஐயாவைத்தான் அணுகுவேன்!

உமர்தம்பிக்குப் பள்ளியைப் பொருத்தவரை, அறிவியல் விதையை அவர் அறிவில் விதைத்தவர் திரு ரெங்கராஜன்! அவர்தம் சேவை உமரை கோவை வரை கொண்டு சென்றது! அவர் எந்தப் பாடத்திற்கு வந்தாலும் அதைத்தான் தனக்குப் பிடித்த பாடம் என்று மாணவர் சொல்வர்! அந்த அளவுக்கு பாடத்தைப் பாடம் செய்து புகட்டுவார்.

நான் அறிந்த ஆசிரியர்களில், இவர்தான் முதல் ரேங்க்ராஜன்!

-வாவன்னா

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// வாவன்னா சார் சொன்னது
நான் அறிந்த ஆசிரியர்களில், இவர்தான் முதல் ரேங்க்ராஜன்!

இதை சிறந்த கருத்தாக தேர்ந்தெடுத்து வாவன்னா சாருக்கு முதல் ரேங் போடுமாறு அதிரை நிருபரை கேட்டுக் கொள்கிறேன் .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் போது மதிப்பிற்குறிய ஜைபுனிச்சா மேடம் அவர்களும், இன்றும் இப்பள்ளில் பணியாற்றிவரும் மதிப்பிற்குறிய எங்கள் ஆசான் அஃப்தா பேகம் மேடம் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.

மாணவ பருவத்தில் Decipline என்னவென்பதை உணரவைத்தவர்கள், அன்று மாணவ பருவத்தில் எடுக்கப்பட்ட Decipline உறுதி இன்றுவரை என் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிகிறது.

இது போன்ற நல்ல ஆசான்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

சொந்தங்களே ஆசிரியர்களாக பணியாற்றிய குடும்பத்தில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு எந்நாளும் ஆசிரியர் தினமே..

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

ஆசிரியரை, ஏணி என்றும் தோணி என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஏணி இறக்கி விடுவதற்கும், தோணி திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் பயன்படுகின்றன! எந்த ஆசிரியரும் மேல்படிப்புப் படித்துவிட்ட தன் மாணவரை மீண்டும் ஒன்றாம் வகுப்பில் கொண்டுவந்து விட்டு விடுவதில்லை!

-வாவன்னா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எந்த ஆசிரியரும் மேல்படிப்புப் படித்துவிட்ட தன் மாணவரை மீண்டும் ஒன்றாம் வகுப்பில் கொண்டுவந்து விட்டு விடுவதில்லை! //

ஒருவேளை ஆசிரியர் பணிக்கு அந்த மாணவரை சேர்த்து விட்டால் ! இது சாத்தியமாகுமோ ! :)

ZAKIR HUSSAIN said...

//ஆசிரியரை, ஏணி என்றும் தோணி என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது!//

அதுபோல் மாணவர்களையும் 'இந்தியாவின் முதுகெலும்பு, நெஞ்செலும்பு என்று ஏதோ சூப் கடை ஸ்பெசல் அயிட்டம் மாதிரி அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

--- Former Spinal முன்னால் முதுகெலும்பு

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் sabeer.abushahruk சொன்னது…
----------------------------------------------------------------

/ஆசிரியரை, ஏணி என்றும் தோணி என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது //

அப்படீன்னா...

கேணி என்றும் கோணி என்றும் சொல்லலாமா?

கேந்தக் கேந்த அறிவுநீர் சுரப்பதாலும்

அறியாமை அழுக்கை மூட்டை கட்டுவதாலும்!

//எந்த ஆசிரியரும் மேல்படிப்புப் படித்துவிட்ட தன் மாணவரை மீண்டும் ஒன்றாம் வகுப்பில் கொண்டுவந்து விட்டு விடுவதில்லை! //

இப்படில்லாம் பள்ளுப்படித்தால் என்ன சொல்வது?!

Unknown said...

நம்மை உய்ரத்திற்க்கு ஏற்றிவிட்டு கீழிரிந்து ரசிக்கும் அணைத்து ஆசிரியரிகளுமே மரியாதைக்குறியவர்கள்.

தமிழ் வழி கல்வி பயின்ற, ஆங்கில அறிவுக்கு ஏங்கிய என்னைப் போன்ற சிலருக்கு புரிகிற்தோ இல்லையோ தினமும் ஆங்கில தின பத்திரிகை படி ஓரளவுக்கு ஆங்கில அறிவு கிடைத்துவிடும் என் அறிவுருத்திய ஃப்ரான்ஸிஸ் சார் மற்ற ஆசிரியர்களிடமிருந்து தனித்து காணப்பட்டார்,
அது ஓரளவுக்கு உதவியது என்பதும் உண்மை.

என்ன ஜஹபர் சாதிக், நினைவுக்கு வருகிறதா..?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

JAFAR J.C.H சொன்னது…
//நம்மை உய்ரத்திற்க்கு ஏற்றிவிட்டு கீழிரிந்து ரசிக்கும் அணைத்து ஆசிரியரிகளுமே மரியாதைக்குறியவர்கள்.
தமிழ் வழி கல்வி பயின்ற, ஆங்கில அறிவுக்கு ஏங்கிய என்னைப் போன்ற சிலருக்கு புரிகிற்தோ இல்லையோ தினமும் ஆங்கில தின பத்திரிகை படி ஓரளவுக்கு ஆங்கில அறிவு கிடைத்துவிடும் என் அறிவுருத்திய ஃப்ரான்ஸிஸ் சார் மற்ற ஆசிரியர்களிடமிருந்து தனித்து காணப்பட்டார்,
அது ஓரளவுக்கு உதவியது என்பதும் உண்மை.

என்ன ஜஹபர் சாதிக், நினைவுக்கு வருகிறதா..?//

ஆமாம் ஜபருல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நலமே, தாம் நலமே இருக்க நாடுகிறேன்.
அதெப்படி என் ஞாபகம் திடீரென்று வந்தது.
இப்ப என்ன ஏக்கம்.ஆங்கிலமா,அரபியா,ஹிந்தியா இல்லெ இப்ப எல்லாம் அத்துப்படியா?

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//சபீர் காக்கா சொன்னது
கேணி என்றும் கோணி என்றும் சொல்லலாமா?

கேந்தக் கேந்த அறிவுநீர் சுரப்பதாலும்

அறியாமை அழுக்கை மூட்டை கட்டுவதாலும்!

காக்கா உங்களுடைய கருத்துக்கு குரிக்கிடுவதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.எத்தனையோ கேணிகளில் நீர்கள் வற்றிபோய் வி(டும்)ட்டன. கோணியில் அறியாமை அழுக்கை மட்டும் அல்ல நல்ல பொருள்களையும் மூட்டை கட்டிவிடலாம் ?

ஆசிரியர்களை அ (முத) றிவு சுரப்பி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

அப்துல்மாலிக் said...

Face Book ல் நான் எழுதியது....

தலை குனிந்து
நட்ட மரங்கள்
இன்று
தலைநிமிர்ந்து நிற்கிறது
மீண்டும் மீண்டும்
தலை குனிகிறது
புதிய விதைகளை தூவி
தலை நிமிர வைக்க...!

- என் மேலான ஆசான்களுக்கு ”ஆசிரியர் தின” வாழ்த்துக்கள், தாங்கள் சேவைகளின் மேலான நோக்கம் வெற்றிப்பெற என் வாழ்த்துக்களும், வேண்டுதலும்.....................

Unknown said...

வ அலைக்கு முஸ்ஸலாம் M.H. ஜஹபர் சாதிக்,

//அதெப்படி என் ஞாபகம் திடீரென்று வந்தது//

உன் ஞாபாகம் மட்டுமல்ல நம்முடன் பயின்ற எல்லோருடைய ஞாபகமும் என் மனதில் உள்ளதப்பா, ஆனால் எல்லோருடைய பின்னூட்டங்களையும் மறைமுகமாக ரசித்துக்கொண்டிருப்பவன் நான் அவர்களில் நீயும் ஒருவன், சகோதர வலைதளத்தின் பங்களிபாலன் என்பதாலும் வேலை பளு காரணமாகவும் அதிகம் பின்னூட்டங்களில் நான் தலை காட்டுவதில்லை. இன்ஷா அல்லாஹ் இனி தொடர்பை தொடர்வோம்.

//இப்ப என்ன ஏக்கம்.ஆங்கிலமா,அரபியா,ஹிந்தியா இல்லெ இப்ப எல்லாம் அத்துப்படியா?//


ஏக்கம் இல்லாத மனிதனா...? மேற்கூறப்பட்ட மொழிகளில் ஹிந்தி தவிர மற்ற மொழிகள், மலையாளம் உட்பட அத்துப்படி என்று சொல்ல முடியாது ஆனால் தத்துப்படி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.