நம்மில் பல பேர் சேல்ஸ் லைனில் இருப்பதால் சில Dress Code விசயங்கள் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
வெள்ளை முழுக்கை சட்டையும், டார்க் நிற பேன்ட்டும், சிகப்பு.. அல்லது சிகப்பு நிறம் நிறைந்த கலரில் டை... இப்படி உடை உடுத்துபவர்கள், தான் இருக்கும் இடத்துக்கு கவனத்தை திருப்பும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தலைவர்கள் இதுபோல் ஒரு கார்ப்பரேட் லுக் இல் உடை அணிய இது காரணம்.
டை தேர்ந்தடுப்பதில் சில விசயம் இருக்கிறது. மிக்கி மவுஸ், மர்லின் மன்ரோ படம் போட்ட டை எல்லாம் போட்டுக்கொண்டு டீலிங் பேசினால் '“காந்தி.. பூந்தி ஆவது உறுதி'. டாய்ஸ் கடைக்கும், பப் வியாபாரத்துக்கு உள்ள விசயங்களை உபயோகப்படுத்தி அதற்கு சம்பந்தமில்லாத பிசினசுடன் மல்லுக்கு நிற்பவர்களை இங்கு நான் பார்த்திருக்கிறேன்.
டையில் குழப்பமான டிசைன் இருப்பதை தவிர்க்கவும் [மார்டன் அர்ட் எல்லாம் மியூசியத்தோடு விட்டு விடுங்கள்], குழப்பமான டிசைனில் சட்டை, டை உங்கள் கஸ்டமரின் கவனம் அதில்தான் இருக்கும். நீங்கள் பேசுவதில் அவ்வளவாக கவனம் இருக்காது. சரி எனக்கு அப்படித்தான் போட பிடிக்கும் என்றால்.. அது casual wear என்ற அடிப்படை விதியாவது தெரிந்திருக்க வேண்டும். கார்ப்பரேட் உலகில் சம்பந்தமில்லாமல் டிரஸ் செய்பவர்களைப் பார்க்கும்போது டிசம்பர் மழையில் ஷூ போட்டு வந்து நம் ஊர்சேற்றில் நடப்பவர்கள்தான் கண்ணுக்கு தெரிவர்.
இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி மனிதனுக்கு எது தெரியுமா? தன்னை தானே வெல்வது. நம் மிகப்பெரிய எதிரி பல சமயங்களில் நாம் தான். உங்களின் ஒவ்வொரு தோல்வியிலும் உங்கள் எனர்ஜி உங்களை நோக்கி திரும்பாமல் இருக்கும்போது நாம் மற்றவர்களிடம் குறைகான ஆரம்பிக்கிறோம்.. பிறகு அவனை திருத்த நினைக்கிறோம்... தாமதமானால் திட்டுகிறோம்... மனதளவில் புழுங்கி போகிறோம்.
எப்போதும் பயந்த சுபாவத்துடனும், எதிர்கால பணச் சுமைகளையும் நினைத்து இப்போதைய சூழ்நிலையயை சூன்யமாக்கிக் கொண்டிருக்கிறீர்களா?..
கொஞ்சம் உங்கள் ஜனன நிமிடத்துக்கு திரும்பிப் போவோம்... நீங்கள் ஆணா / பெண்ணா என்று தெரியாத அந்த நிமிடத்திலும் உங்கள் தாய் எத்தனை கனவுகளை உங்களுக்காக சுமந்திருப்பார்கள். நீங்கள் இந்த உலகில் பிறந்தவுடன் என்ன நினைத்திருப்பார்கள்... நிச்சயம் நீங்கள் எல்லாவற்றிலும் ஜெயிக்க போவதை நிச்சயம் கற்பனையில் பார்த்திருப்பார்கள். நீங்கள் கருவறையில் இருக்கும் நிமிடங்களின் கஷ்டத்தை எப்படி உங்கள் தாய் அனுபவித்து இருப்பார்கள் என்று தெரிய வேண்டுமா?... 2 செங்கற்களை எடுத்துக்கொண்டு ஒரு கயிற்றில் கட்டி உங்கள் கழுத்தில் தொங்கப்போட்டு ஒரு 24 மணி நேரம் மட்டும் வழக்கம்போல் உங்கள் வேலையயை பார்த்துப்பாருங்கள்....ஒரு தாயின் கஷ்டத்தை ஒரு நாள் தாங்க முடியாத நாம் எப்படி அவர்களின் அப்பழுக்கற்ற கனவை மட்டும் நம் எதிர்மறை சிந்தனை கொண்டு சிதைக்க கற்றுக்கொண்டோம்.... வெற்றியாளனாக பிறந்து குப்பைகளை மனதுக்குள் சேகரிக்க எப்படி முடிந்தது.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் தாயின் Blessing எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
இன்றிலிருந்து உங்கள் மைனஸ் பாயின்ட்டில் கவனம் செலுத்துவதை விட்டு ப்ளஸ் பாயின்ட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். யாருக்கு இந்த உலகில் கஷ்டமில்லை... யார் முழுக்க முழுக்க, நிரந்தர ஆரோக்கியத்தில் இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா கஷ்டமும் இருக்கிறது.
உலகம் போற்றப்படும் ஒவ்வொரு விசயத்திலும் பல விதமான சவால்கள் இருக்கத்தான் செய்கிறது.இன்று நாம் எல்லோரும் பயன்படுத்தும் Canon Printers தயாரிக்கும் முதலாளிக்கு ஒரு அச்சரம் ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர் காலூன்றியது ஆங்கிலம் மட்டும் பேசும் அமெரிக்காவில். இன்றைக்கு Canon Inc. ஒரு leading firm.
இன்று பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹோன்டா காரின் கார்பொரேட்டரை வடிவமைத்த அதன் முதலாளி முதன் முதலில் டோயோட்டா தொழிற்சாலையில் வேலை கேட்டு போகும்போது விரட்டியடிக்கப்பட்டவர். விரட்டியடிக்கப்பட்டதின் விளைவு ஹோண்டா என்ற கார் உருவானது.
நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா ஒரு சமூக சேவகியென்று தெரிந்தும் ஒருவன் அவர் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறான்.
அத்தனை சாதனைகளும் அவமானங்களையும், எதிர்பார்ப்புகளையும் படிக்கடுகளாக வைத்து நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஆண் வாழ்க்கையில் முன்னேர பெண்களின் பங்கும் முக்கியம். ஒரு மனிதன் கல்யாணத்துக்கு பிறகு அதிகம் முன்னேர முதல் காரணம், காதல், அன்பு, பாசம் இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை எப்போது நொண்டியடிக்க ஆரம்பிகிறது என்றால் மற்ற ஆண்களின் முன்னேற்றத்துடன் தன் கணவனின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு கணவனை ஒரு திறமை இல்லாதவன் எனும் தோரணையில் பேச ஆரம்பிக்கும்போது. பிறகு பிள்ளைகளும் சம்பாதிக்கும் தகப்பனை மதிக்காது. இதில் பதிலுக்கு பதிலாக கணவன் எப்போது மனைவியை மற்றொரு பெண்ணுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறானோ அன்றைக்கே நரகத்தின் ப்ரீவியூ தெரிய ஆரம்பித்துவிடும்.
முன்னேறுபவனுக்கு வாய்ப்புகள் எப்படியாவது வரும், வாய்ப்புகளை தவற விடுபவர்களுக்கு காரணங்கள் மட்டும் எப்படியாவது வரும்.
Successful people always do the work, which failures don’t want to do
எப்போதும் இந்த உலகம் உங்களுக்கான வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தரும் என எதிர்பார்ப்பது முடியாத விசயம். வாழ்க்கையில் நமக்கு சாதகமாக மட்டும் விசயங்கள் நடக்கும் என இறைவன் நம்மை கியாரண்டி கார்டு / மேன்வல் புத்தகத்துடன் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கவில்லை. சந்தோசமும், கஷ்டமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனும் எதற்கும் "அசையாத ஒரு நிலை' யை அடைவது மனித வாழ்க்கையின் முன்னேற்ற பயிற்சிகள். அவை இஸ்லாத்தின் கடமைகளில் மிக கொட்டிக் கிடக்கிறது என்பது என் அசைக்கமுடியாத எண்ணம்.
We will see about Time Management, and Time related plan for your future in next episode.
தொடரும் ...
- ZAKIR HUSSAIN
26 Responses So Far:
//முன்னேறுபவனுக்கு வாய்ப்புகள் எப்படியாவது வரும், வாய்ப்புகளை தவற விடுபவர்களுக்கு காரணங்கள் மட்டும் எப்படியாவது வரும்.//
100% அனுபவங்கள் காட்டிக் கொடுக்கிறது ! சரியே - ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் !
உறுதியான படிகள் - மேல்
உந்தும் படிகள்
ஊக்கத்தின் நாடிகள் !
அசத்தல் காக்கா... ஏற்றம் தொடரட்டும்... இன்ஷா அல்லாஹ்
எங்களையும் மிளிர வைக்கட்டும் !
வாழ்த்துக்கள் சகோ. ஜாகிர்
படிக்கட்டுகள் நல்ல ஏற்றமாக உள்ளது..........இன்னும் ஏற வேண்டும்
ஏற்றம் பெற
ஏற்ற வரிகள்
இன்ஷா அல்லாஹ்
வெல்டன் ஜாகிர் காக்கா
உயர்வுக்கு உளவியல் ரீதியான உயர்ந்த உத்திகள்.
வளரட்டும் வாழ்க்கைபடிகள் வானோக்கி!
//முன்னேறுபவனுக்கு வாய்ப்புகள் எப்படியாவது வரும், வாய்ப்புகளை தவற விடுபவர்களுக்கு காரணங்கள் மட்டும் எப்படியாவது வரும்.// சரியாக சொல்லி இருக்கிறீர்கள் காக்கா...அருமையான ஆக்கம்...நான் அப்படி செய்திருந்தால் அம்பானியிருப்பேன்...இப்படி செய்து இருந்தால் மாகாதீர் ஆகி இருப்பேன் என்று வயதான காலத்தில் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து புலம்பிய கூட்டங்களை நான் கண்டிருக்கின்றேன்......ஆனால் நான் எதையும் உருப்படியா செய்யல அதான் இங்கு வந்து உட்கார்ந்து இருக்கின்றேன் என்று தைரியமாக சொல்பவர்கள் குறைவு
அன்பு தம்பி ஜாகீர்,
இந்த அண்ணனின் நல் வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த படியையும் எதிர்பார்த்து அதிரைநிருபரின் வாசற்படியில் காத்துகிருக்கிறோம்.
வஸ்ஸலாம்.
இபுராகிம் அன்சாரி.
அஸ்ஸ்லாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
ஊக்கமூட்டும் வார்த்தைகள்...
//.....குடும்ப வாழ்க்கை எப்போது நொண்டியடிக்க ஆரம்பிகிறது என்றால் மற்ற ஆண்களின் முன்னேற்றத்துடன் தன் கணவனின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு கணவனை ஒரு திறமை இல்லாதவன் எனும் தோரணையில் பேச ஆரம்பிக்கும்போது. பிறகு பிள்ளைகளும் சம்பாதிக்கும் தகப்பனை மதிக்காது. இதில் பதிலுக்கு பதிலாக கணவன் எப்போது மனைவியை மற்றொரு பெண்ணுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறானோ அன்றைக்கே நரகத்தின் ப்ரீவியூ தெரிய ஆரம்பித்துவிடும். //
இந்த வாசகத்தை ஒவ்வொரு வீட்டின் காலண்டரின் அட்டை பகுதியில் பதியவேண்டும்.
மார்க்க அளவுகோளை ஓரம் கட்டி, அளவுக்கு அதிகமாக, தகுதி தராதரமில்லாமல் ஒப்பீடு செய்யும்போது தான் எழுகிறது வீண் வம்புகள் ஒவ்வொரு வீட்டிலும்..
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாகிர் காக்கா போட்ட அஸ்திவாரம் தரமானதாக இருக்க படிக்கட்டுகள் உர்தியாக இல்லாமல் போய் விடுமா ?
// இன்று பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹோன்டா காரின் கார்பொரேட்டரை வடிவமைத்த அதன் முதலாளி முதன் முதலில் டோயோட்டா தொழிற்சாலையில் வேலை கேட்டு போகும்போது விரட்டியடிக்கப்பட்டவர். விரட்டியடிக்கப்பட்டதின் விளைவு ஹோண்டா என்ற கார் உருவானது.//
நான் ஜப்பான் செல்லும் போது உறவினரிடம் என் சார்பாக பணம் கடனாக கேட்டார்கள்.தர மனமில்லாத அவர் இவன் போய் ஜப்பானில் சம்பாதிப்பான என்று கேட்டு இருக்கிறார் காரணம் அந்த நாட்டில் பிடித்து அனுப்பிவிடுவார்கள்.என்கிற பயம்.நல்ல உள்ளங்களின் கடன் உதவியால் ஜப்பான் நாட்டுக்கு சென்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும்.அல்லாஹ் நாடிய நாட்டப்படி படி சம்பாதித்து வந்து .ஊரில் உள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோருக்கு பங்கு தாரராக இருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாஹிராக்கா,
வாழ்க்கை நல்ல பாடம் படிக்கட்டும் உங்கள் படிக்கட்டுகள் மூலம்.
"சாவப்போறவங்க தானே?" என்று வயோதிகத்தால் தன் மேனி சுருங்கி இன்றோ, நாளையோ வரக்கூடிய மரணத்தை எதிர்பார்த்த வண்ணம் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கும் வீட்டின் வயோதிகர்களுக்கு உரிய மருத்துவம் செய்யவும், (அவர்கள் மீது முதலீடு செய்யவிரும்புவதில்லை. காரணம் இங்கு முதலீடு செய்தால் அது திரும்பி வராதல்லவா?) அதாவது அவர்களுக்கு தேவையானவற்றில் அவர்கள் ஈன்றெடுத்த பிள்ளைகளே போதிய பணங்காசுகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் செலவு செய்ய தயங்கி வருவது நம் ஊரில் நாளுக்கு நாள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அதிகரித்துவருவது வேதனையளிக்கிறது.
அவர்கள் பெற்ற பிள்ளைகள் குடும்பத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அரபுநாடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் சந்தோசத்துடன் குதூகலமாக இருந்து விட்டு போகட்டும். தடையேதும் இல்லை. பெற்ற தாய்,தந்தையரை அருகில் இருந்து கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. அவர்களுக்கு மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்வதற்கு அவர்களை வைத்து பராமரிப்பவர்களுக்கு கேட்காமல் கொடுக்க வேண்டுமல்லவா?
பெற்றவர்களுக்கு பிள்ளைகளே வேதனை செய்தாலும், துன்புறுத்தினாலும் உனக்கு ஏதேனும் துன்பம் வரும் பொழுது முதலில் வடிவது அவர்கள் கண்ணீராகத்தான் இருக்கும் உன் கண்ணீருக்கு முன்.
பெத்த வாப்பா, உம்மாவுக்கு பயன்படாத பணங்காசு பு......க்கா?
மன்னிக்கவும் தலையங்கத்துக்கு சம்மந்தமே இல்லாத விடயத்தை பற்றி இங்கு பின்னூட்டம் இட்டிருந்தாலும் ஜாஹிர்காக்கா இது பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை எழுதினால் நல்லது.
அவர்களை அருகில் வைத்து பார்ப்பது சிரமமாக இருப்பதால் பணங்காசு செலவு செய்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்க துணியும் மனம் செலவு செய்து அவர்களுக்கு முறையான வைத்தியம் செய்ய துணிவதில்லை ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// எப்போதும் இந்த உலகம் உங்களுக்கான வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தரும் என எதிர்பார்ப்பது முடியாத விசயம். வாழ்க்கையில் நமக்கு சாதகமாக மட்டும் விசயங்கள் நடக்கும் என இறைவன் நம்மை கியாரண்டி கார்டு / மேன்வல் புத்தகத்துடன் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கவில்லை. சந்தோசமும், கஷ்டமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனும் எதற்கும் "அசையாத ஒரு நிலை' யை அடைவது மனித வாழ்க்கையின் முன்னேற்ற பயிற்சிகள். அவை இஸ்லாத்தின் கடமைகளில் மிக கொட்டிக் கிடக்கிறது என்பது என் அசைக்கமுடியாத எண்ணம். ////
மாஷா அல்லாஹ்! 100 சதவீதம் உண்மை! படிக்கட்டுகள் மனதிற்கு ஊக்கம்!
ஜாகிர் காக்கா அவர்கள் படிக்கட்டுகளுக்கு ஸ்டாரங்கா அஸ்திவாரம் போட்டுயிருக்கிரார்கள். இந்த உலகத்தில் யாரும் சொகுசாக இருப்பதில்லை எல்லோருக்கும் கஷ்ட்டம் தான் இருக்கிறது. ஆனால் அதை யாரும் விளங்குவதில்லை கஷ்ட்டத்தை மட்டும் தான் சொல்லிக்கொண்டு இருப்பார்களை தவிர சந்தோசத்தை சொல்லமாட்டார்கள் இது தான் மனிதனுடைய இயல்பு. ஜாகிர் காக்காவுடைய படிக்கட்டுகள் இன்னும் தொடரட்டும்.
"சாவப்போறவங்க தானே?"
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாஹிராக்கா,
வாழ்க்கை நல்ல பாடம் படிக்கட்டும் உங்கள் படிக்கட்டுகள் மூலம்.
"சாவப்போறவங்க தானே?" என்று வயோதிகத்தால் தன் மேனி சுருங்கி இன்றோ, நாளையோ வரக்கூடிய மரணத்தை எதிர்பார்த்த வண்ணம் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கும் வீட்டின் வயோதிகர்களுக்கு உரிய மருத்துவம் செய்யவும், (அவர்கள் மீது முதலீடு செய்யவிரும்புவதில்லை. காரணம் இங்கு முதலீடு செய்தால் அது திரும்பி வராதல்லவா?) அதாவது அவர்களுக்கு தேவையானவற்றில் அவர்கள் ஈன்றெடுத்த பிள்ளைகளே போதிய பணங்காசுகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் செலவு செய்ய தயங்கி வருவது நம் ஊரில் நாளுக்கு நாள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அதிகரித்துவருவது வேதனையளிக்கிறது.
அவர்கள் பெற்ற பிள்ளைகள் குடும்பத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அரபுநாடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் சந்தோசத்துடன் குதூகலமாக இருந்து விட்டு போகட்டும். தடையேதும் இல்லை. பெற்ற தாய்,தந்தையரை அருகில் இருந்து கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. அவர்களுக்கு மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்வதற்கு அவர்களை வைத்து பராமரிப்பவர்களுக்கு கேட்காமல் கொடுக்க வேண்டுமல்லவா?
பெற்றவர்களுக்கு பிள்ளைகளே வேதனை செய்தாலும், துன்புறுத்தினாலும் உனக்கு ஏதேனும் துன்பம் வரும் பொழுது முதலில் வடிவது அவர்கள் கண்ணீராகத்தான் இருக்கும் உன் கண்ணீருக்கு முன்.
பெத்த வாப்பா, உம்மாவுக்கு பயன்படாத பணங்காசு பு......க்கா?
மன்னிக்கவும் தலையங்கத்துக்கு சம்மந்தமே இல்லாத விடயத்தை பற்றி இங்கு பின்னூட்டம் இட்டிருந்தாலும் ஜாஹிர்காக்கா இது பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை எழுதினால் நல்லது.
மு.செ.மு.நெய்னா முஹம்மது
இந்தப் படிக்கட்டைச் சட்டென்று ஏறிக்கடக்க இயலவில்லை. சற்று அமர்ந்து கிரகித்துக் கொண்டிருக்கிறேன்.
கடுப்பூசியென வலித்தாலும் மனிதத்தை மாசுபடுத்த விடாத தடுப்பூசி.
ஆக்கத்திற்கு ஊக்கமூட்டுகின்ற பின்னூட்டங்களும் இந்தத் தொடரை மெறுகூட்டுகின்றன. ஒரு புத்தகம் உருவாகிறதோ என எண்ணத்தோன்றுகிறது செறிவான எழுத்து.
ஆமெனில், 50வது படிக்கட்டில் மொட்டை மாடியில் உனக்காகக் காத்திருப்பவர்களில் நானே முதல்வன்.
மீண்டும் மீண்டும் படித்து பயன் பெற வேண்டிய தொடர் .
பல பேர் படிக்கும் படி செய்ய நம்மூரின் அணைத்து வலைதளங்களிலும்
இந்த தொடரை பதிந்தால் நல்லது .
நம் பாடங்களில் பர்சனல் கேரக்டர் பற்றி அலச space ரொம்ப குறைவு .
நம்மை நாமே தெரிந்துகொள்ளுவது வெற்றியின் முதல் படி .
personality development டை வெறும் கல்லூரியில் படிக்கும் மானவனுக்குமட்டுமின்றி
மேல் வகுப்பு தொடங்கும்போதே அதன் மீது ஆர்வம் ஏற்பட வைத்தால் மிகவும்
பலனுள்ளதாக அமையும் ...
கல்வியாளர்கள் இந்த பொது forum -இல் அலசி ஆராயிந்தால் நல்ல பலன்களை தரும்
என நான் நம்புகிறேன்
எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும்
.. ***** எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்!
தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்
***** தோற்றாலும் வென்றாலும் பொறுமை காட்டு
அளவான நம்பிக்கை உனக்குள் வேண்டும்
***** அதற்குள்ளாய் வாழ்க்கையை அமைக்க வேண்டும்
வளமான வொழுக்கத்தைப் பேண வேண்டும்
***** வரம்புக்கு ளடங்கித்தான் வாழ வேண்டும்
புரிகின்ற மொழியாலே நீயும் சொல்லு
***** பிறர்நாடும் அமைதிப்புன் னகையால் வெல்லு
விரிகின்ற நட்பென்னும் வளையம் காக்கும்
***** விரைவாக வுன்பாதை வெற்றி நோக்கும்
--
தொலைநோக்குப் பார்வை கொள்க
***** தொடராய் முன்னே செல்க
பலபட்ட தாக வேலைப்
***** பழுவினைசச் சமமாய்க் கொள்க
அலைபோலக் குழப்பம் வந்தால்
***** அலசியே யாய்ந்து கொள்க
வலைபோலப் பின்னும் பேச்சால்
***** வம்புகள் வளர வேண்டா
அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்
நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்
நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்
நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்
ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை
எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்
நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகமே இன்பம் ஒழித்திடும்
நட்பின் வளையம் நமக்கு வரம்தரும்
தப்பு வராமல் தடுக்கும் அரண்பெறும்
உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே
உதவியைக் கேட்டால் “ஆமாம்”
தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்
தகுதிகள் நிரம்ப உண்டு
விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே
விரைவிலே நட்பு கொள்வர்
நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்
நம்பிடும் பண்பு வேண்டும்
இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து
விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
துவக்கிடுப் புள்ளியும் முன்னால்
நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்
நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்
ஊசலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து
தாங்கிடும் நண்பரும் வேண்டும்
திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை
வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால்
நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
படைத்தவ னருளவும் வேண்டும்
தோல்வி கண்டு துவளுகின்ற
தோழா நீயும் மிரளுவதேன்
ஆல்போ லுள்ளத் துணிவுடனே
ஆழ மெண்ணம் பதிந்திடுவோம்
வேல்போல் கூர்மை அறிவுடனே
வேகம் காட்டி முயலுவதும்
நூற்கள் யாவும் பயிலுவதும்
நுட்பக் கல்வித் தெளிவதுமே
வேலை இல்லை; திகைத்தலின்றி
வேலை ஒன்றைத் துவங்கிடுவோம்
காலை மாலை உழைத்திடுவோம்
காலம் தன்னை மதித்திடுவோம்
*பாலை நீராய்க்* கருத்திலிடு
பாழாக் காத பயிற்சியெடு
சோலை யாகச் செழித்திடுமே
சோம்பல் போர்வை ஒழித்திடவே
உன்னிடம் நல்லவை வந்திடும் பொழுதினில்
உளமுடன் பிறர்க்கு நாடு
தன்னிடம் வென்றிடும் திறன்களு முண்டெனத்
தகுதியை நம்பி ஓடு
பின்னிட வைத்திடும் சறுக்கலின் காரணம்
பின்னரே விளங்கும்; யோசி
உன்னிட முள்ளவர் சோர்ந்திடா வண்ணமே
உளமகிழ் உண்மை பேசு
I will write the reply to everybody in the evening..today lot of appointments waiting in a Que for me
எனக்கும் எழுத ஊக்கம் தரும் சகோதரர்கள் அபு இப்ராஹிம், அர அல [ பெயர் புதுமையாக இருக்கிறது] நிஜாம் யாவருக்கும் நன்றி.
யாசிர்...நம் ஆள்கள் எப்படி புலம்பினார்கள் என்று என் முதல் ஆக்கத்திலேயே எழுதியிருந்தேன் [ பினாங்கு- நமது வேர்கள் ]
To brother இபுராகிம் அன்சாரி...
நீங்கள் இப்படி இனையத்தில் சந்தித்தது கண்டு மிக்க சந்தோசம். உங்கள் எழுத்தைப்பார்த்தவுடன் உங்கள் வாப்பாவும், என் பெரிய வாப்பாவும் வாழ்ந்த அந்த நட்பை நினைத்து சந்தோசப்பட்டேன்.
To Bro Thajudeen,
//மார்க்க அளவுகோளை ஓரம் கட்டி, அளவுக்கு அதிகமாக, தகுதி தராதரமில்லாமல் ஒப்பீடு செய்யும்போது தான் எழுகிறது வீண் வம்புகள் ஒவ்வொரு வீட்டிலும்.. //
இது எல்லாத்தெருவிலும் உள்ள நோய்...சமயங்களில் திருடர்களுடன் நல்லவர்க்ளை ஒப்பிடுவதும் நடக்கும். [ அவன் எப்படி திறமையா கெட்டி சமத்தா இருக்கான்...நீ ஏன் இப்படி மந்திரிச்சி விட்ட மாதிரி திரியரே??]
அலாவுதீன்...சின்ன வயதில் பட்ட கஷ்டம் உன்னை மிகவும் பக்குவப்படுத்தியிருக்கிரது, கல்லூரிக்குபோய் படிக்காவிட்டாலும் யாருக்கும் உன் அறிவின் விசாலம் சலைத்தது அல்ல. ALLAH IS ALWAYS GREAT.
சபீர்....50 எபிசோட் எல்லாம் டூ மச் டா...முடிந்த அளவு எழுதுகிறேன். எனக்கு கிடைத்த Exposure in Life & Business நம் ஊர் மக்களுக்கு பயனாக இருக்கும் என்று ஒரு நாள் Flash அடித்தது..உடன் எழுதியதுதான் இவைகள்
தமீம் எப்படி இருக்கே...மலேசியாவில் வேலை பார்த்த அனுபவம் உன் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க பயன்பட்டிருக்கும்.
To Bro Harmy.Abd Rahman,
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் என்னைப்போல் நிறைய படிப்பவர் போல தோணுகிரது. சமயத்தில் நீங்கள் சொன்ன விசயங்களை மனதில் கொன்டு எழுதுவதுதான். பார்ப்போம்..சில விசயங்களை சொன்னால் படிக்க அழகாக இருக்கும் ப்ராக்டிக்களில் வெற்றி அடைவதுதான் முக்கியம்.
To Bro Abulkalam
//நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்//
நாங்கள் ஒரு பாராகிராஃபில் எழுதுவதை இரண்டு வரியில் எழுதிவிடுகிறீர்கள்.
To Brother MSM Naina,
நீங்கள் சொன்ன விசயங்களை முன்பு சில பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். கொஞ்சம் ஆக எழுதுவோமே..
அருமையான உந்துதல் தொடர்
//உங்களின் ஒவ்வொரு தோல்வியிலும் உங்கள் எனர்ஜி உங்களை நோக்கி திரும்பாமல் இருக்கும்போது நாம் மற்றவர்களிடம் குறைகான ஆரம்பிக்கிறோம்..//
முற்றிலும் உண்மையே
To Brother MSM Naina,
நீங்கள் சொன்ன விசயங்களை முன்பு சில பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். கொஞ்சம் Versatile ஆக எழுதுவோமே..
To Brother Abdul Malik....Long time no see!!1
//To Brother Abdul Malik....Long time no see!!1//
கொஞ்சம் ரெஸ்ட், அப்படியே ராஜாமடம் பாலத்தின்மேலே உக்காந்து ஒரு ஆழ்ந்த ரெஸ்ட் இன்னும் ஒரிரு வருடங்கள் தாக்குப்பிடிக்கும்னு நினைக்கிறேன்
கடைசி பத்தியே மிக போதுமானது, சிறந்த ஊக்கங்கள், இன்ஷா அல்லாஹ் இதை நல்லபடியாக உணர்ந்து செயல்பாட்டில் காட்டுவோம் ...
படிக்கட்டுகளின் முன்னேற்றம் படிப்படியாக முன்னேரிகொண்டுள்ளது அதில் நான் ரசித்தவைகளில் சில
//மிக்கி மவுஸ், மர்லின் மன்ரோ படம் போட்ட டை எல்லாம் போட்டுக்கொண்டு டீலிங் பேசினால் '“காந்தி.. பூந்தி ஆவது உறுதி//
//இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி மனிதனுக்கு எது தெரியுமா? தன்னை தானே வெல்வது//
//டிசம்பர் மழையில் ஷூ போட்டு வந்து நம் ஊர்சேற்றில் நடப்பவர்கள்தான் கண்ணுக்கு தெரிவர்.//
//நொண்டியடிக்க ஆரம்பிகிறது //
//அன்றைக்கே நரகத்தின் ப்ரீவியூ தெரிய ஆரம்பித்துவிடும்//
//இன்றிலிருந்து உங்கள் மைனஸ் பாயின்ட்டில் கவனம் செலுத்துவதை விட்டு ப்ளஸ் பாயின்ட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்//
இன்னும் பல சொல்லல்லாம் இப்படியோ சொன்னால் முலு கட்டுரையும் பின்னுட்டமகிவிடும்
ஜாகிர் காக்க சொன்னது.
//தமீம் எப்படி இருக்கே...மலேசியாவில் வேலை பார்த்த அனுபவம் உன் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க பயன்பட்டிருக்கும்//
நன்றாக இருகிறேன் காகா நீங்கள் எப்படி இருகிறீர்கள். தற்போது ஒரு நிறுவனத்தில் உற்பத்தி பிரிவில் Production Controller பனிபுரிந்து கொண்டு இருகிறேன்.உங்களுடைய கட்டுரை என்போல் முன்னேறும் நோக்கத்துடன் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஒரு வேண்டுகோள் இரு தினத்திற்கு முன் உங்கள் கட்டுரைக்கு நான் கொடுத்த comment அதிரை நிர்பர்களால் நீக்க பட்டு இருக்கிறது. இது குறித்து அதிரை நிருபர் குழு எனக்கு விளக்கம் அளிக்கும்மாறு கேட்டுகொள்கிறேன்.நான் கொடுத்த comment ஜாகிர் காகவும் அதிரை நிர்பர்களும் அறிவார்கள் என்று நினைகிறேன். மேலும் எனது கருத்துக்கள் உங்கள் கட்டுரையை சார்ந்தாகவே இருந்தது.
" சொர்கத்தின் திறவுகோல் தாயின் காலடியில் இருக்கிறது" " அந்த புனிதமான ( தாய்) க்கு சேவை செய்து சொர்கத்தை அடையுங்கள்"
நான் சம்பாதிக்கும் பணத்தில் எனது பெற்றோர்கள் பயனடைவதை கண்டு நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன்.
எனது comment கல் தொடரும்........
இப்படிக்கு
தமீம் அன்சாரி முகமது பாரூக்.
//நாங்கள் ஒரு பாராகிராஃபில் எழுதுவதை இரண்டு வரியில் எழுதிவிடுகிறீர்கள்.//
இதைத் தான் மொழியின் மற்றொரு வடிவமான “கவிதை” என்றுச் சொல்லப்படும். இப்பின்னூட்டத்தில் நான் பதிந்துள்ளக் கவிதைகள் யாவும் ஒரேடியாக மூழ்கி இன்று எழுதிப் பதியப்பட்டவைகள் அல்ல; எனது வலைப்பூத் தோட்டத்தில் பூக்க வைத்திருந்த “பல்வேறு” தலைப்புகளிலானக் கவிதைப் பூக்கள்(ஒவ்வொருப் பாடலும் திடீரெனச் சிந்தை “காமிரா”வில் “ஃப்ளாஷ்” ஆனவைகள்) இங்கு உங்களின் கட்டுரைக் கூறும் கருத்துகட்கு ஒத்துப்போகின்றன என்றுச் சொல்லிட மீள்பதிவாகத் “தொகுத்து”ப் பதிவு செய்தேன். கீழ்க்கண்ட தலைப்புகளில் என் வலைப்பூவில் காணலாம்:
1) வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடி நாட்டு
2) எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
3) சோம்பலை விலக்கு; வெற்றியே உன் இலக்கு
4) எல்லாரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன்
5) தோல்வியைத் தோல்வி அடையச் செய்வோம்
ஆகியத் தலைப்புகளில் சொல்லியுள்ளேன்.
உங்களின் கட்டுரைகள்; எங்களின் கவிதைகள் ஆக்கமும் ஒன்றே- நோக்கமும் ஒன்றே. வடிவங்கள் வேறானாலும் விளவுகள் ஒன்றே
மொழிகள் வேறு வேறு; உணர்ச்சிகள் ஒன்று என்பது போல், ஒரே மொழியின் வடிவங்கள் வேறு வேறு (கட்டுரை, பேச்சு, கவிதை) ; உணர்வுகளும் விளைவுகளும் ஒன்றே என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள்;நன்று- ஜஸாக்கல்லாஹ் கைரன்.
“படிப்பாளிதான் படைப்பாளியாக முடியும்” என்பதற்கும் நீங்களே சாலச் சிறந்த சான்று.
Post a Comment