இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் இன்று நடந்த விளையாட்டு தின நிகழ்வில் மாணவர்களின் சாகச நிகழ்சிகளும் அதனைத் தொடர்ந்து இளம் மாணவர்களின் ஓட்டப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது - அல்ஹம்துலில்லாஹ் !
பள்ளியின் மேலாளர் S.K.M.ஹாஜா முகைதீன் Msc., B.T. (முன்னாள் தலைமை ஆசிரியர் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி-ஆண்கள்) வென்புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்கள்.
கண்கொட்டாமல் பார்க்க வைத்த பள்ளி வளாகத்தில் இளம் மாணவச் செல்வங்கள் நிறைந்து இருக்கும் பூங்காவில் நுழைந்த உணர்வு, மாணவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் வண்ணக் கலவை.
இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி இளம் மாணவ வீரர்களின் சாகச விளையாட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது...
பிஞ்சு பாதங்களின் ஓட்ட வேகம் கூட்டி உள்ளங்களில் குதுகலத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது...
மலர்களும் ஒடுமா ? ஆம் இங்கே சின்னஞ் சிறு பூந்தளிர்கள் வண்ணத்து பூச்சியின் எல்லைக் கோட்டை நோக்கி ஓடும் அழகோ நம்மை அசத்துகிறது.
ஓட்டப் போட்டிகள் மட்டுமல்ல நடைபோட்டிகளும், சிலிர்க்க வைக்கும் சாகச போட்டிகளிலும் மாணவர்கள் கலந்து கொண்டு கலக்கினர் !
பார்வையாளர்களாக இருந்தவர்களை பரவசத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தி அவர்களின் மனம் வென்றவர்களுக்கு, பரிசளித்து வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டாமா ?
ஆம் !
இதோ சின்னஞ்சிறு மொட்டுகளின் கரங்களில் தவழும் பரிசுக் கோப்பைகள்.
விளையாட்டுப் போட்டிகளிலும் சாகச நிகழ்வுகளிலும் சாதனை படைத்த மாணாவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்படுகிறது.
விளையாட்டு விழா என்றாலே மனதுக்கும், உடல் வலிமைக்கும் சவாலாக இருக்கும் அப்படியான தருணத்தில் மாணவர்களின் குதூகலம் அவர்களின் பள்ளிக்கூட வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்தான் என்பதில் ஐயமில்லை !
பங்கெடுத்த மாணவமணிகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், இன்னும் அதிக அளவில் பங்கெடுத்து பயிலும் பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.
படங்கள் : அபுஇஸ்மாயில்
-அதிரைநிருபர் குழு
16 Responses So Far:
இந்த வாரம் பள்ளி கூட வாரம் என்று அறிவிக்கவும்
கலக்கலான கலர்புல் போட்டோக்கள் யாருப்பா அது போட்டோ எடுத்தது என்று கேட்கவைக்கும் அளவுக்கு போட்டோ அனைத்தும் அருமை
மூளை இவ்வண்ணப்படங்களை கண்டு ஆனந்தமடைகிறது
ஆனந்தத்துடன் கூடிய ஆரவாரம் கொள்கிறது ஆனால்
மனமோ இன்னும் இவ்விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி மாணவர்களுக்கு இதிலுள்ள ஈடுபாட்டை அதிகப்படுத்த சொல்கிறது.
இந்த வாரத்தை பள்ளிக்கூட வாரமாக அறிவித்துவிட்டால்
மாணவச்செல்வங்கள் ஒரு வார விடுமுறையை அல்லவா கேட்கும்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான புகைப்பட தொகுப்பு, வாழ்த்துக்கள் அனைவருக்கும்
இமாம் ஷாஃபி பள்ளியின் பழைய மாணவனாக இருந்தாலும் இன்றும் அப்பள்ளில் படித்துக்கொண்டிருப்பது உள்ளது இந்த அழகான புகைப்படங்களை பார்க்கும் போது.
விளையாட்டுக்களில் வெற்றியடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இது போல் இப்பள்ளி மாணவர்கள் படிப்பிலும் சிறப்பாக வெற்றியை நிலைநிறுத்த வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
புகைப்படங்களை பகிர்ந்தளித்த சகோ. அபூஇஸ்மாயில் அவர்களுக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ்.
இமாம் ஷாஃபி பள்ளியின் இறுதி வருடத்தில் slow cycling போட்டியில் முதல் இடம் பிடித்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
நண்பன் கஃபூர் long jumpபில் முதல் இடம், நண்பன் ஃபைஜல் இரண்டாமிடம் பிடித்தது ஞாபகத்தில் உள்ளது. எவ்வளவு மீட்டர் என்ற விபரம் ஞாபகமில்லை.
இன்று சாதரணமாக தெரிந்தாலும் அன்று பள்ளியில் படிக்கும் போது பெரிய Achievementடாகவே தெரிந்தது.
This is excellent , I could not see my family kid’s talent when I was in Adirai. Now found it. I really thanks to adirai nirubar for issuing this kind of sweet events and news. Also I congrats our kids to participate on sports eagerly.
பிஞ்சுகளின் வண்ணம் போல எண்ணமும் அழகு பெறட்டும்.
நன்றி! புன்னகைக்கும் புகைப்படங்களுக்கு.
இந்த புதிய தலைமுறையில், இப்பள்ளிக்கு நான் ஒரு பழைய மாணவன்.. படங்கள் ஒருவகை குதூகலங்கை அள்ளிக்கொடுத்தது..
அறிவியல் கண்காட்சியில் எங்கள் மகன் செய்த கப்பலுக்கு பரிசு தவறியதால் கலங்கியிருந்த எங்களுக்கு மகள் அஸீலா காக்காவுக்கும் சேர்த்து இரண்டு முதல் பரிசுகளைப் பெற்றுத் தந்தாள். மாஷா அல்லாஹ். அத்தனை புகைப்படங்களும் அருமை. மகள் அஸீலாவைத் தாங்கியுள்ள (படம் 19 & 20) அருமையோ அருமை. புகைப்படங்களுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.
படம் # 4 & 5 ல் சாகச விளையாட்டில் மூன்றாம் அடுக்கில் பச்சை வண்ணச் சட்டை/வெள்ளைக் காற்சட்டையில் இருப்பவன் என் அன்பு மகன் தாரிக் அஹமத் (+1 படிக்கின்றான்). மேலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தய்த்தில் வென்று கோப்பை பெற்றுள்ளான்.
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//படம் # 4 & 5 ல் சாகச விளையாட்டில் மூன்றாம் அடுக்கில் பச்சை வண்ணச் சட்டை/வெள்ளைக் காற்சட்டையில் இருப்பவன் என் அன்பு மகன் தாரிக் அஹமத்//
பால் வடியும் முகமா உள்ளதே மன்னிக்கவும் கவிதை வடியும் முகமா உள்ளதே
வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துக்கள் !!!
ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியினுடைய படங்கள் மிஸ்ஸிங்???!!!
//கவிதை வடியும் முகமா உள்ளதே //மாஷா அல்லாஹ்
கவிதையின் குழந்தை
மீசை வளரும்
ஆசை குழந்தை கவிதை
Post a Comment