பெண்கள், ஆண்களின் அடிமைகளா ?
அந்தப் பதினாறு வயதுப் பெண்ணுக்கு அப்படியென்ன அவசரத் தேவை ஏற்பட்டது, மத ஆராய்ச்சி செய்வதற்கு? அவளது நாடான ஹாலந்தில் பெரும்பான்மையோர் பின்பற்றி வாழும் கிறிஸ்தவ மதத்தில் இப்பெண்ணும் பதிந்து வாழ்ந்திருக்கலாமே? அதுதான் அல்லாஹ்வின் அருட்கொடை.. ! சுயசிந்தனையால், அறிவார்ந்த முடிவுகளால் ஆறுதல் அடைய விழைந்தாள் அப்பெண்!
கிறிஸ்தவ மதப் பிரிவு ஒன்றில் பிறந்து வளர்ந்த அவ்விளம்பெண், அதன் ஏற்றுக் கொள்ள முடியாத இறைக்கொள்கையால், அதிலிருந்து வெளியேறத் துடித்தாள்! அதன் விளைவு?
புத்த மதம், ஹிந்து மதம், சீக்கிய மதம், என்று பல மதங்களைப் பற்றிப் படித்து, அவற்றுள், ஒன்றும் அவளது அறிவுக்கு விருந்தளிக்கவில்லை! அப்போது 'இஸ்லாம்' என்ற வாழ்க்கை நெறி ஒன்று உண்டு என்பதே, அப்பெண்ணுக்குத் தெரியாது!
மதங்களைப் பற்றிப் படித்து வந்தபோது, முஸ்லிம்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிலர் இருப்பதாகவும், அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்று பெயர் சூட்டப்பட்டு, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் 'அடிமை'களாக ஆணாதிக்கக் கருவிகளாக அடங்கியொடுங்கி வாழ்வதாகவும் படித்தறிந்தாள். அப்பெண்ணுக்குக் கிடைத்த இஸ்லாம் பற்றிய மேலை நாட்டு அறிமுகம் அவ்வளவுதான்!
'இவையெல்லாம் உண்மையாயிருக்குமா?' என்று சிந்திக்கத் தொடங்கிய இளம்பெண் கொரீனுக்கு (பழைய பெயர்), உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அந்நேரத்தில்தான் கொரீன் அமெரிக்காவுக்குப் பயணமானாள். அங்குச் சென்றவுடன் ஒரு மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினாள் கொரீன். சில நாட்களிலேயே அதே மருத்துவமனையில் பணிபுரிந்த பாகிஸ்தானி வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவரோ அழகிய தோற்றமுடைய, அடக்கமான, மெதுவாகப் பேசும் நளினத் தன்மை உடையவராயிருந்தார். அதனால் அவரை அனைவரும் நேசித்தனர். கொரீனுடைய உள்ளத்திலும் அவர் இடம் பிடித்ததில் வியப்பில்லை.
ஒருநாள் அவர் முஸ்லிம்களின் தொழுகை விரிப்பான 'முசல்லா ஒன்றைக் கொரீனுக்கு அன்பளித்தார். அழகாயிருந்த அதனைத் தன் அறைச்சுவரை அலங்கரிப்பதற்காகத் தொங்க விட்டாள்.
'நமக்கு ஏன் இந்தப் பொருள் அன்பளிப்பாகக் கிடைக்க வேண்டும் ? அந்த ஆளுக்கு வேறு பொருள் கிடைக்கவில்லையா?' பொறி தட்டியது போன்ற ஒரு சிந்தனை! அன்றைய நிகழ்வு இதயத்திலிருந்து அகலாத நிலையில், கொரீன் தன்னைச் சுற்றி நோட்டமிட்டாள்.
பாகிஸ்தானியரான இந்த குல்ஃபமைப் போன்று இன்னும் சிலரும் இருந்தனர். 'இவர்களெல்லாம் முஸ்லிம்களா?' கொரினால் ஜீரணிக்க முடியவில்லை. 'அப்படியானால், நான் முஸ்லிம்களைப் பற்றிப் படித்ததெல்லாம் காழ்ப்பு உணர்வோடு எழுதப்பட்டவையா ?
இவ்வாறான சிந்தனையில் இருந்தபோது, விடுப்பில் சொந்த நாட்டுக்கு (ஹாலந்து) வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஊருக்கு வந்து சேர்ந்த மறுநிமிடம் முதல், இஸ்லாத்தைப் பற்றி - அதன் வேத நூலான குர்ஆன் முதற் கொண்டுள்ள நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள்.
ஒரு மாதத்தில் விடுப்பும் முடிந்துவிட்டது. அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த கொரீனுக்கு வேலை மாற்றம் காத்திருந்தது. மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையில் பணி. அந்த நேரத்தில் முஸ்லிம்களின் புனித ரமளான் மாதம் தொடங்கியிருந்தது. விடுப்பில் செல்வற்கு முன் தான் சந்தித்துப் பழக்கப்டுத்தியிருந்த முஸ்லிம்களுள் ஒருவர் கூடக் 'கேண்டீனில்' வந்து பகலில் சிற்றுண்டி சாப்பிடாதது கொரீனுக்கு வியப்பை அளித்தது.
சிறு குழுவினரான இந்த முஸ்லிம்கள் நாள் முழுவதும் - அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை - உணவும் குடிப்பதும் இன்றி எப்படிப் பட்டினியாக இருக்க முடிகின்றது!? இவர்களின் இந்தப் பொறுமையான நடைமுறை என்னை வியக்க வைத்தது!" என்று பிற்றை நாட்களில் நினைவு கூர்கின்றார் "ஷாஹீன்" என்ற கொரீன்.
இஸ்லாம் என்றால் என்ன என்று ஆராயத் தொடங்கிய காலத்தில்தான் இவரின் அமெரிக்கப் பயணம் நிகழ்ந்தது என்று முன்பு படித்தோம். அங்குள்ள மருத்துவமனையில் பணி செய்யத் தொடங்கியதும் நாமறிந்ததே. அதே காலகட்டத்தில் தான், தனது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர் கல்வியைத் தொடர்ந்தார் கொரீன். தன் தகுதியை உயர்த்துவதற்காகப் படித்த பாடங்களுக்கிடையில், அரபி மொழியையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் சிறப்புப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்று வந்தார்.
அந்த நாட்களில்தான் 'குல்ஃபம்' என்ற பாகிஸ்தானியின் தொடர்பு கொரினுக்கு கிடைத்தது. முதல் சந்திப்பின்போது "உன் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் கேட்டார் குல்ஃபம். அதற்கு தன் பெயர் "கொரீன்" என்று அரபியில் எழுதித் காட்டினாரம் இப்பெண்!
"அன்று முதல் அவர் என் பக்கமும், நான் அவர் பக்கமும் ஆனோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றார் கொரீன். இஸ்லாத்தின் ஆணிவேரான 'தவ்ஹீத்' எனும் ஓரிறைக் கொள்கையைப் பற்றியும், அதன் பின்னர் தூய்மை, தொழுகை போன்ற கடமைகளைப் பற்றியும் அவர் மூலமே கற்றுக் கொண்டதாகப் பெருமையுடன் கூறுகின்றார் கொரீன்.
1976 ஆம் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவி, தனக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைத்தவரையே தன் கணவராகத் தேர்வு செய்து மகிழ்ந்தார். அன்று முதல் கொரீன் என்ற பெயர் 'ஷாஹீன்' என்று மாறிற்று.
தனக்கு மூன்று குழந்தைகள் பிறந்த பின்பு, தான் ஒரு தாய், குடும்பத் தலைவி என்ற பொறுப்புகள் வந்த பின்னர், இஸ்லாமியப் பற்றும் அதனைப் பரப்ப வேண்டும், என்ற ஆர்வமும் கிளர்ந்து எழுந்தன என்கிறார் ஷாஹீன் குல்ஃபம்.
தான் இஸ்லாத்தை தழுவியதையும், முஸ்ச்லிம் ஒருவரை மணம் புரிந்ததையும் தன் பெற்றோர் விரும்பவில்லை என்று குறிப்பிடும் ஷாஹீன், தனது இஸ்லாமிய ஒழுக்கத்தையும், கணவருடனும் குழந்தைகளுடனும் பற்றோடும் பாசத்தோடும் நடந்து கொள்வதையும் கவனித்து, தன் பெற்றோர் சில நாட்களுக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்று பெருமையாகக் குறிப்பிடுகின்றார் ஷாஹீன்.
தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பெருமையோடும் நன்றிப் பெருக்கோடும் நினைவு கூர்கின்றார் ஷாஹீன்.
"நான் இஸ்லாத்தைத் தழுவிய முதல் நாளன்று எனது அலுவலகத்துக்குச் சென்றேன். என்னுடைய Boss எனது இஸ்லாமிய தோற்றத்தைக் கண்டு, காரணம் கேட்டார். நானும் நிகழ்ந்ததை விவரித்தேன். எனது முன்னேற்பாடுகள் பற்றி அவர் அறிந்திருந்தார் போலும். தன்னிடம் வைத்திருந்த பார்சல் ஒன்றை எடுத்து, வாழ்த்துக் கூறி என்னிடம் தந்தார். அதனைப் பிரித்துப் பார்த்தேன் "முஸல்லா!" எனது நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை! அது மட்டுமா? அருகிலிருந்த சிறிய அறையை எனது தொழுமிடமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அனுமதியளித்தார்! அல்ஹம்துலில்லாஹ்!" சகோதரி ஷாஹீனின் கைகள் நன்றிப் பெருக்கால் வானை நோக்கி உயர்கின்றன.
சென்ற பதினைந்தாண்டுகளுக்கு மேல் விமானக் கம்பெனியில் அதன் மேலாளருக்கு P.A.வாகப் பணியாற்றி வருகின்றார் ஷாஹீன் குல்ஃபம். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகத் தம்பட்டமடிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் ஷாஹீன், அங்கு இஸ்லாத்திற்கு எதிராக கிளப்பி விடப்படும் ஏவுகணைகளை எதிர்த்துத் தாக்கும் இஸ்லாமிய போர்க்கருவியாகத் திகழ்கின்றார்.
ஆண்களும் பெண்களும் சமம் என்று உரிமைக் குரல் எழுப்பும் பெண்ணியவாதிகளுக்கு இவர் கூறும் இனிய மறுமொழி இதுதான்: "அண்பர்களே! ஆண்களும் பெண்களும் சமம்தான். எனினும், தன்மைகளும் அமைப்பும் வேறு வேறு என்பதனையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாம் பெண்களைப் பெண்ணாக மதிக்கிறது. ஆண்களைக் காப்பியடிப்பவர்களாகப் பெண்கள் இருக்கக் கூடாது என்பதே இஸ்லாம் கூறும் இனிய செய்தி. கணவனுக்கு மனைவியாகவும், பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருக்க வேண்டிய தகுதியை முழுமையாகப் பெண்ணுக்கு வழங்குகின்றது இஸ்லாம். இந்த உயர்ந்த தகுதிக்காக நாம் வெட்கப்பட வேண்டும்?"
மேலை நாடுகளில் முழுவதுமாக உடலை மறைத்து ஹிஜாபுடன் வெளியில் செல்லும்போது, 'ஏன் இப்படி?' என்ற வேள்விக் கணை தொடுக்கப்படுகின்றது. அதற்கு ஷாஹீன் தொடுக்கும் எதிர்கணை இதுதான் : "தேவாலய அருட்சகோதரிகள் உடலை முழுவதுமாக மறைத்து வெளியில் நடமாடும்போது, பொதுமக்களுக்குப் பணியாற்றும் மதபோதகர்களாக அவர்களை ஏற்றுக் கொள்ளும் மேலை நாடுகள் 'ஹிஜாப்' அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'அடிமைகள்' என்று ஏன் ஆர்பரிக்கின்றன?"
இன்னொரு பக்கத்தில், நம் முஸ்லிம் பெண்களின் கல்விப் பின்னடைவைக் கண்டு கவலை கொள்கிறார் ஷாஹீன். "பெண் ஒருத்திக்குக் கல்வி புகட்டுவது, ஒரு முழுச் சமுதாயத்துக்கே கல்வி புகட்டுவதற்குச் சமமாகும். பெருமானார்(ஸல்) அவர்களின் தூய மனைவிமார்களின் முன்னுதாரணம் நமக்குப் போதாதா?" என்று கேட்கிறார் இந்தப் பேறு பெற்ற பெண்மணி.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
-அதிரை அஹ்மது
குறிப்பு : சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சியில் IFT நிறுவனம் வெளியிட்ட இந்த புத்தகங்கள் பாகம் ஒன்று மற்றும் இரண்டு IFT நிறுவனத்தால் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டால்களில் கிடைக்கும்.
7 Responses So Far:
கடந்த டிசம்பர் மாத நடுவிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை பெண்டெடுத்த வேலைப்பளுவின் காரணமாக இந்த அற்புதமான தொடரினை மூன்று வாரங்களாக பதிவுக்குள் கொண்டு வர இயலவில்லை - இனி வரும் நாட்களில் தொடர்ந்து பதிவுக்குள் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்...
- www.adirainirubar.in
// புனித ரமளான் மாதம் முஸ்லிம்களுள் ஒருவர் கூடக் 'கேண்டீனில்' வந்து பகலில் சிற்றுண்டி சாப்பிடாதது கொரீனுக்கு வியப்பை அளித்தது.//
// இஸ்லாமிய ஒழுக்கத்தையும், கணவருடனும் குழந்தைகளுடனும் பற்றோடும் பாசத்தோடும் நடந்து கொள்வதையும் கவனித்து, தன் பெற்றோர் சில நாட்களுக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள்//
முஸ்லிமாகிய நாம் அனைத்திலும் முழு முஸ்லிமாக வாழ்வதே மாற்றாருக்கு நல்ல படிப்பினையை தரும் என்பதை கட்டுரை தெளிவு படுத்துகிறது.
நற்றொடர்.
இஸ்லாத்தில் முழுமையை பின் பற்றி வெற்றி பெறுவோம்!
//மேலை நாடுகளில் முழுவதுமாக உடலை மறைத்து ஹிஜாபுடன் வெளியில் செல்லும்போது, 'ஏன் இப்படி?' என்ற வேள்விக் கணை தொடுக்கப்படுகின்றது. அதற்கு ஷாஹீன் தொடுக்கும் எதிர்கணை இதுதான் : "தேவாலய அருட்சகோதரிகள் உடலை முழுவதுமாக மறைத்து வெளியில் நடமாடும்போது, பொதுமக்களுக்குப் பணியாற்றும் மதபோதகர்களாக அவர்களை ஏற்றுக் கொள்ளும் மேலை நாடுகள் 'ஹிஜாப்' அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'அடிமைகள்' என்று ஏன் ஆர்பரிக்கின்றன?"//
அஸ்ஸாலாமு அலைக்கும்,
சரியான கேள்வி.
முஸ்லீம்கள் எது செய்தாலும் அதில் குரோதம் கற்பிப்பதில் கைதேர்ந்தவர்கள் மேற்கத்தியர்.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் படிப்பினை தரும் தொடர்.
இது போன்று அன்றாடம் அதிரை நிருபரில் வெளியாகும் நல்ல பல கட்டுரைகளும், விழிப்புணர்வு செய்திகளும், ஊக்கமளிக்கும் பல தகவல்களும் காசின்றி கணினி மூலம் குறிப்பாக நம் ஊரில் கணினி இணைய தள இணைப்பை பெற்றுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அங்குள்ள ஆண்கள், பெண்கள் தவறாது படித்திடும் படி தேவையான எல்லா முயற்சிகளையும் முடுக்கி விடும்படி அதிரை நிருபர் நிர்வாக குழுவை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதிரை நிருபரில் ஒரு நாள் முகப்புப்பகுதியில் பார்வைக்கு இருந்து அதை பத்து பேரு படித்து கருத்துக்கள் எழுதி அடுத்த நாள் காணாமல் போய் விடாமல் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு கருத்துக்கள் அதிகம் வருகின்றனவோ இல்லையோ? அதை அதிகமான நபர்கள் படிக்கச்செய்ய வைக்க வேண்டும் என்பதே என் கருத்து.
அதுவே கட்டுரையாளருக்கும், அதை முறையே வெளிட்டு வரும் அதிரை நிருபருக்கும் கிடைக்கும் வெற்றியாகும்.
அதுக்கு எதாச்சும் யோசிச்சி செய்ங்க......
MSM(n): கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...
உங்களின் உள்ளத்தில் உதித்ததைப் போன்றே எங்களுக்கும் அதே எண்ணமுண்டு விரைவில் இந்த தொடரின் தொகுப்பாக முகப்பில் சுட்டியை தட்டி வேண்டிய பகுதிக்குள் செல்லும் வசதியினை ஏற்படுத்த இருக்கிறோம் !
வழமைபோல் இணைந்திருங்களேன்... ! :)
அன்புடன்
நெறியாளர்
அஸ்ஸலாமு அலைக்கும்.
// "தேவாலய அருட்சகோதரிகள் உடலை முழுவதுமாக மறைத்து வெளியில் நடமாடும்போது, பொதுமக்களுக்குப் பணியாற்றும் மதபோதகர்களாக அவர்களை ஏற்றுக் கொள்ளும் மேலை நாடுகள் 'ஹிஜாப்' அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'அடிமைகள்' என்று ஏன் ஆர்பரிக்கின்றன?" //
ஏவுகணையை செவ்லில் விட்டது போல்.பேர் பெற்ற பெண்மணியின் கேள்வி .
Post a Comment