Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... - ஏற்றம் - 4 22

ZAKIR HUSSAIN | January 30, 2012 | , , ,


போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;

அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு  Sorry சொல்லிவிடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.

ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். வருதப்படுவான்பா என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டிவரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?

ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS   “OK”  என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.

The Mask

முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.

அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.


ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?அது அவனுடைய  personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.

செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.

உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.

ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal  can be closed much easily.

Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல.  Sometime third party referral helps customer to make decision. 


The Empty Glass; [OR The Empty Bowl] 

இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்னஅறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.

தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.

Law Of Attraction & Law of  Vibration

உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”.  ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது  என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.

தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”

நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்


என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??

தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்கமுடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய்கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும் ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.


இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…

- ZAKIR HUSSAIN

22 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

போதிய வசதி, வாய்ப்புகள் இறைவன் தந்திருந்தும் தன்னால் இயன்ற வியாபாரம் ஏதேனும் இதுவரை வாழ்வில் செய்ததில்லை. ஆனால் செய்யாத வியாபாரத்தில் வந்தாலும் வரலாம் என‌ சொல்லப்படும் நஷ்டத்திற்கு பயந்தே நிறைய பேர் வெறுமனே வாழ்வை கழித்து அதை முடித்துக்கொண்டுவிட்டனர்.

எதிலும் இறைப்பிரார்த்தனையும், விடாமுயற்சியும் சரிசமமாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும். உதாரணத்திற்கு இதுவரை பாஸ்போர்ட்டே எடுக்கவில்லை. ஆனால் உள்ளத்தில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற அதீத ஆசைகளை மட்டும் வளர்த்து வைத்துக்கொண்டு இறைவனிடம் அழுது புலம்பினால் இதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமா? அல்லது காரியம் தான் கை கூடுமா?

வண்டி நிறைய உடல் ஆரோக்கியத்தை வேண்டுபவர்கள் கண்டதையும் உண்டு வாழ்வதில் கட்டுப்பாட்டை காட்டுவதில்லை. அரோக்கியத்திற்காக குறைந்தது தினமும் அரை மணி நேரமாவது நடக்க வேண்டுமல்லவா?

ஜாஹிர் காக்கா, உங்க அளவுக்கு என்னால் எழுத முடியாவிட்டாலும் உள்ளக்கிடங்கில் உதித்ததை மேலே எழுதி விட்டேன்.

The words narrated through above article by Bro. Zakhir Hussain are extracted from his wonderful experiences. It is nice to read and refresh our mind to wake up from the laziness and unnecessary thinkings. I appreciate it and willing to continue it.

Thanks a lot.

MSM Naina Mohamed.

Yasir said...

படிக்கட்டுகள்- நம் மனதையும்,எண்ணங்களையும்,செயல்களையும்,நடத்தைகளையும்,மேம்படுத்தி வலு சேர்க்கின்றன....சிக்கலான விசயங்களை இப்படி அநாசியமாக எப்படித்தான் உங்களால் அள்ளித்தர முடிகிறதோ...தொடரட்டும் காத்திருப்போம்...படித்து அதனை வாழ்வின் அனைத்தருணங்களிலும் நடைமுறைபடுத்துவோம்

சேக்கனா M. நிஜாம் said...

விறு விறு தொடர்..........................

பயணத்தின் இறுதியில் இப் “படிக்கட்டுகளை” ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிட முயற்சி செய்யவும்.

மீண்டும் வாழ்த்துக்கள் ! சகோ. ஜாஹிர் அவர்களுக்கு,

அப்துல்மாலிக் said...

//உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.//

கட்டாயமான உண்மை, சிக்கலான விசயத்தையும் தெளிவாக கையாண்டு எங்களுக்கு எடுத்த்டுரைத்த விதம் பாராட்டுக்குரியது.,

இந்த படிக்கட்டுகள் அனைத்தும் முன்னேரத்துடிப்பவனுக்கு முதல் படி...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், இது தெளிவாக எடுத்துச்சொல்வதற்கு..

Anonymous said...

ஜாகிர் காக்கா அவர்களுடைய படிக்கட்டுகள் ஏற்றம் மிக சிறப்பாகவே உள்ளது. அதைப்போல் மனிதனுடைய வாழ்க்கையும் ஏற்றமாகட்டும் படிக்கட்டுகள் ஏற்றம் பெறுவது போல் நம் வாழ்க்கையிளும் ஏற்றம் பெறுவது அவசியமானது உங்கள் படிக்கட்டுகள் தொடரட்டும். நம் வாழ்க்கையில் ஏற்றம் பெற்றுயிருக்கிறமா இல்லையா? என்று கொஞ்சம் மனைதை தொட்டு பார்க்க வேண்டும் அப்படி பார்க்கும் போது தெரிந்து போய் விடும்.

Yasir said...

இவ்வாக்கதிற்க்கான அதிரை நிருபரின் படத்தேர்வு லவ்லி......அதிரை நிருபர் எடிட்டராக்காவுக்கு வாழ்த்துக்கள்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......//

ஜாஹிர் காக்கா நான்காவது படி கொஞ்சம் உயரமா இருக்கிறது என்று நினைக்கிறேன்.இழுத்து விட முடியாத அளவுக்கு மூச்சு வாங்குது.

// நம் ஆட்களின் வெட்டித்ததுவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்…//

சிந்திக்க வேண்டிய வரிகள்.

Shameed said...

சிந்தனையை தூண்டி சீராக மூச்சு விட வழி வகுக்கின்றது இந்த படிக்கட்டுகள்

Shameed said...

படிக்கட்டுகளில் ஏறினாள் மூச்சு முட்டும் ஆனால் இந்த படிக்கட்டு மூச்சை சீரக்குகின்றது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மனதை தொட்டு பார்ப்பதெல்லாம் அந்தகாலம். கம்ப்யூட்டரின் மவுசை பிடித்து அதன் கீழ் பகுதியை இருதயத்தின் மேல் பகுதியில் வைத்து பார்த்தால் உள்ளத்தில் உள்ளது கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் தெரிந்தாலும் தெரியும் காலமிது.

ஒரு காலத்தில் பொறியை வைத்து எலியை பிடித்தார்கள். ஆனால் இன்று எலி தான் (கணிப்)பொறியை இயக்கிக்கொண்டிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

வெற்றிக்கான அத்தனை வழிகளிலும் படிக்கட்டுகள் அமைத்துதரும் பாங்கு வியக்க வைக்கிறது. இத்தனை காலம் எனக்கு மட்டும் நண்பனாய் வைத்து உன்னை வேஸ்ட் செய்துவிட்டோனோ என்று தோன்றுகிறது.

போனது போகட்டும். இதோ கைகள் விரித்துவிட்டேன். உள்ளங்கையிலிருந்து வெளியேறு.

இந்த வேகம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஓய்வின்றி எழுதி இலக்கை எட்டிவிடு.

முடிந்தவரை நாங்களும் பின் தொடர்கிறோம்.

sabeer.abushahruk said...

குறிப்பாக, இந்தப் படிக்கட்டின் கருவில் எனக்கும் உடன்பாடுண்டு. புத்தரின் 'ஆசையே அழிவுக்குக் காரணம்' எனும் கோட்பாட்டிற்கு நான் எதிரி. பேராசையைச் சொல்லவில்லை.

ஆசையே உயர்வுக்குக்கு காரணம் என்பது என் அனுபவம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு, அந்த ஆசையையே உருப்போட்டு அதை நோக்கி உழைத்து உயர்ந்தவனால்தான் குறைந்தபட்சம் ஒரு லட்சாதிபதியாகவேனும் ஆக இயலும்.

"வாயிக்கும் வயிற்றிற்கும் சோறு கிடைச்சாப் போதும்" எனும் பார்ட்டிகளைக்கண்டால் எனக்கு ஏலியன்ஸ் மாதிரித் தோணும்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.

பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.

எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
திண்ணம் உளவியல் சொல்.

Unknown said...

ஜாஹிர் காக்காவின் எழுத்துக்களில் எதார்த்தங்களும் உண்மைகளும் நிறைந்த மற்றுமொரு ஆக்கம்.

நான் சொல்ல நினைத்ததையெல்லாம் மற்ற 'சகோ'க்கள் சொல்லிவிட்டதால் எனக்கு தட்டச்சு வேலை மிச்சமாகிவிட்டது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாசிக்கும் வழக்கம் சிறுவயதிலிருந்து இருந்தாலும் பத்திக்கு பத்தி தாவிப் படிக்கும் புத்தியிருந்த என்னை ஜாஹிர் காக்காவின் ஆக்கங்கள் தாவிப் படிப்பதை விடுத்து தடவிப் படிக்க வைத்தது ஒவ்வொரு வரியையும் !

நான் தான் சொன்னேன்லே அப்போவே... "உசுப்பிவுடுதுன்னு" படிக்கட்டு நுனுக்கமான கலையுடனும் சுவையுடனும் ஏற்றம் பெறுகிறது...

//Yasir சொன்னது…
இவ்வாக்கதிற்க்கான அதிரை நிருபரின் படத்தேர்வு லவ்லி......அதிரை நிருபர் எடிட்டராக்காவுக்கு வாழ்த்துக்கள்//

சின்ன திருத்தம் இதனை எழுதிய அசத்தல் காக்காவே அதனையும் தேர்ந்தெடுத்து அசத்திட்டாங்க... :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்வில் வசந்தம் பெற அருமையான வாழ்வியல் தத்துவங்கள்.!

//கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.//

படிப்பினை தரும் பொன்மொழி.

KALAM SHAICK ABDUL KADER said...

வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!


எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்

உந்து சக்தி நிரம்பியுள்ள
உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
நொடியில் பாயும் வறுமைதான்!!!!!

ஒவ்வொரு நொடியும் உன்றன்
உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
அளவற்ற செல்வத்தின் பரப்பு

காலம் வருமென்று வீணாகக்
காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
நாளும் உழைத்தே வென்றனரே


சோம்பலெனும்
சாம்பலை விலக்கினால்
நெருப்பாய் தகித்து
இருப்பாய்

Anonymous said...

அன்பு இளவல் ஜாகீர்!

மாஷா அல்லாஹ் மிகச்சிறப்பாக மெருகு கூடிக்கொண்டே வருகிறது.

ஜனாப். ஜெமீல் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் ஏற்கனவே இப்படிப்பட்ட நிர்வாக, மனிதவள, திட்ட, ஊதிய, விற்பனை, கணக்கியல்
ஆகிய துறைகளில் பணியாற்றி வருவோர்க்கு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பயிற்சி பட்டறைகளுக்கு அனுப்பும்போது

நீங்கள் குறிப்பிடும் தலைப்புகளில் பயிற்சிகள் தரப்படுவது உண்டு.

இது பற்றி எனது அர்ப்பணிப்பும் அங்கீகாரமும் என்ற பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஆனாலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

நீங்கள் எழுதுவது அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காதோர்களை பதப்படுத்தும்.

ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தோர்களையும் மேலும் புடம் போடும் .

பாராட்டுக்கள்.

இபுராகிம் அன்சாரி

ZAKIR HUSSAIN said...

To Bro MSM Naina Mohamed
// ஜாஹிர் காக்கா, உங்க அளவுக்கு என்னால் எழுத முடியாவிட்டாலும் //

இதைத்தான் அவை அடக்கம் என்பதா?

To Bro Yasir,

//சிக்கலான விசயங்களை இப்படி அநாசியமாக எப்படித்தான் உங்களால் அள்ளித்தர முடிகிறதோ...//
"சிக்கல்' என்று எதையும் நினைக்காததால்.

To bro Abdul Malik,
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், இது தெளிவாக எடுத்துச்சொல்வதற்கு..

To sabeer
//ஓய்வின்றி எழுதி இலக்கை எட்டிவிடு//

உண்மையை சொன்னால் நீங்கள் எல்லோரும் தரும் உற்சாகம், பல வருடங்களில் படித்த விசயங்களை சொல்லவும் , புரிய வைக்கவும், சிம்பிளாக எழுதவும் மிகவும் உதவியாக இருக்கிறது.


To Bro Abu Bakar

//நம் வாழ்க்கையில் ஏற்றம் பெற்றுயிருக்கிறமா இல்லையா? என்று கொஞ்சம் மனைதை தொட்டு பார்க்க வேண்டும் //

இறைவன் உதவியால் ஏற்றம் அடைவீர்கள்

To Bro லெ.மு.செ.அபுபக்கர்
//ஜாஹிர் காக்கா நான்காவது படி கொஞ்சம் உயரமா இருக்கிறது என்று நினைக்கிறேன்.இழுத்து விட முடியாத அளவுக்கு மூச்சு வாங்குது.//


உண்மையாக கூட இருக்களாம். இந்த வாரம் கொஞ்சம் கடுமையான சப்ஜெக்ட் தான் Flow வில் எழுதமுடியாது. இன்னும் சொல்லப்போனால் நான் எழுதியது Tip Of an Iceberg.

Law Of Attraction மட்டும் ஒரு எபிசோட் எழுதலாம். I have so much matters to share.

To Bro சேக்கனா M. நிஜாம்

//ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிட முயற்சி செய்யவும்.//

Insha Allah.

To Bro Jameel நானா அவர்களுக்கு

//படிக்கட்டுகளைப் படித்துவருகிறேன்//
உங்களின் அன்புகலந்த வார்த்தைகள் இன்னும் உருப்படியாக எழுத வேண்டும் என நினைக்க வைக்கிறது.
To Bro JAFAR
//நான் சொல்ல நினைத்ததையெல்லாம் மற்ற 'சகோ'க்கள் சொல்லிவிட்டதால் எனக்கு தட்டச்சு வேலை மிச்சமாகிவிட்டது. //

Good way of "delegating"???

To Bro Naina Thamby
//ஜாஹிர் காக்காவின் ஆக்கங்கள் தாவிப் படிப்பதை விடுத்து தடவிப் படிக்க வைத்தது ஒவ்வொரு வரியையும் //

எழுதுவது பயன்பட்டால் எல்லோருக்கும் நல்லது


To Bro M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)..

//படிப்பினை தரும் பொன்மொழி.//
" தெரிந்தது , தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்தும் அறிவோம் அது பற்றி உமது அறிவுரை தேவை இல்லை" என்று பல பேர் அலையிராப்லெ. காலம் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் இருக்கும்போது பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது கொஞ்சம் அமைதியாயிடுவாங்க. அப்போதுதான் ' அட இவ்வளவு நாள் நம்ம விட்ட சவடாலே நமக்கு எதிரியா இருக்கேனு தோனும்.

To Brother Ebrahim Ansari....Thanx for your email and encouragement.

To bro Abulkalam உங்கள் கவிதையின் தரம் ஒரு மாநாட்டில் படிக்க கூடிய தரம் வாய்ந்தது. அப்படி இங்கு [ மலேசியாவில் ] வாசிக்க நேர்ந்தால் உங்களின் அனுமதி பெற்று நானே வாசிப்பேன்

ஜாகிர் ஹீசைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
Bro.ZAKIR HUSSAIN அழகான முறையில் படிக்கட்டுகளில் ஏற அமைத்துத்தரும் பாங்கு வியக்க வைக்கிறது.
//நம் ஆட்களின் வெட்டித்ததுவங்கள்// வெட்டித்தத்துவங்கள் எது சரி?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

தன்னமிக்கையூட்டும் பதிவுகளை தொடர்ந்து எழுதி எங்கள் அனைவரையும் பயனடைய செய்தமைக்கு மிக்க நன்றி.

//நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும், ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.//

உண்மை காக்கா..

எல்லோருக்கும் இருக்கும் இந்த அனுபவம் பல சந்தர்பங்களில்.

KALAM SHAICK ABDUL KADER said...

//உங்கள் கவிதையின் தரம் ஒரு மாநாட்டில் படிக்க கூடிய தரம் வாய்ந்தது. அப்படி இங்கு [ மலேசியாவில் ] வாசிக்க நேர்ந்தால் உங்களின் அனுமதி பெற்று நானே வாசிப்பேன்//

அன்புடன் அனுமதி வழங்கிவிட்டேன்

என் எண்ணத்திரையில் உள்ளவைகள்
சின்னத்திரையில் விண் உலா வருகின்றன

மலேசியா மாநாட்டில் உலா வரட்டுமே

கீழேயுள்ள என் "விடா முயற்சி" கவிதையும் சேர்த்துப் படிக்கலாம்
என்று அனுமதிக்கும் அன்புச் சகோதரன் அபுல்கலாம்



விடா முயற்சி; விடைபெறும் அயற்சி


இன்னுங் கொஞ்ச மிறங்கிப் பார்ப்பது
தன்னுள் மிஞ்சும் தன்னம் பிக்கை



அடைந்ததே போதுமென் றடங்கிப் போனால்
அடையும் ஆசை யடங்கிப் போகும்



மேலே தொடர்வது என்பது சூட்சமம்
மேலே எழுந்திட வைத்திடும் சூத்திரம்



படிபடி படிக்கப் பழகும் நாக்கு!
அடிஅடி வெடிக்கும் சோம்பல் போக்கு



கவிதை எழுதிக் கலக்கும் பொழுது
புவியில் உழுத புலமை வழுத்தும்



அடாத பிழைகளால் அடுத்தே தோற்கின்
விடாத முயற்சியால் விளையும் வெற்றி



தேனைச் சேகரிக் கத்தான் தேனீ
ஊனைச் சேர்க்கும் ஓட்டம் பார்நீ



வாசல் தேடி வருவது வாய்ப்பு
பேச வேண்டி புறப்படல் பொறுப்பு



செவிகளை இலைகளாய் விரித்து வைத்தால்
செவிக்குண வுகளாய் செரிக்க வைக்கும்



முழுமதி வந்தது முதலாம் பிறைவழி
முழுவதும் வெல்வது முயற்சித் தரும்வழி




இன்னுங் கொஞ்சம் இன்னுங் கொஞ்சம்
என்னும் நெஞ்சின் எண்ணம் விஞ்சும்;



எடையும் கூடினால் தாழும் தராசு
தடையும் தாண்டினால் வீழும் மாசு





இன்னுங் கொஞசம் எட்டி அடிவை!
மண்ணில் எல்லாம் உன்றன் மடிமேல்


சாம்பல் கிளறினால் தகிக்கும் நெருப்பாய்
சோம்ப லுதறினா லுழைப்பி லிருப்பாய்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு