Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம் - FACEBOOK 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 20, 2012 | , ,


எச்சரிக்கை !

வழமையான வலைமேய்ச்சலில் நல்லதையே தேடும் நன்னோக்கில் கிடைத்த அதிர்ச்சி தகவல்தான் இது. ஒவ்வொருவரும் அவசியம் இதன் விபரீத வீரியம் அறிந்து விழித்துக் கொள்ள வேண்டும். வேலி போட்டிருக்கிறோம் வேட்டியை இறுக்கி கட்டியிருக்கிறோம் என்று தூங்கிவிடாதீர்கள் ! அவைகள் என்றும் அறுபடலாம் அவிழ்க்கப்படலாம்.

இது ஒரு வியாதியாகி பின்னர் முற்றிக் கொண்டு மனநல மருத்துவர்களுக்கு கப்பம் கட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்க வழி வகைகளை செய்யாதீர்கள்...

சகோதர, சகோதரிகளே... உங்களிடம் உருக்கமாக வேண்டிக் கொள்கிறோம், பாதுகாப்புடன் இருங்கள் வீட்டிற்குள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களுக்குள் அனுமதியின்று நுழையும் இவ்வகை ஊடகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவ்வகையான வியாதியைப் பரப்பும் அனைத்து ஊடகங்களிலிருந்தும் பிள்ளைகளை விலக்கி வையுங்கள் நீங்களும் அதனை விட்டும் விலகிவிடுங்கள் அதற்கு முன்னோடியாக இருந்திடுங்கள் Please !

ஃபேஸ்புக், டிவிட்டரில் மூழ்கிக் கிடப்பது சரியா ?

''கல்லூரி மாணவியான என் மகளின் படிப்பில் சமீபகாலமாக தடுமாற்றம் தென்படுகிறது. படிப்பு, நண்பர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சமூக வலைதளங்களே (ஃபேஸ்புக், டிவிட்டர்) கதி என கிடக்கிறாள்.  அவளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?'' என்று தவிப்போடு கேட்டிருக்கும் விழுப்புரம் வாசகிக்காக கவுன்சலிங் டிப்ஸ் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.ராஜாராம்.

"திண்ணைப் பேச்சு, பேனா நட்பு வட்டம் போன்றவற்றின் லேட்டஸ்ட் வடிவம்தான், சமூக வலைதளங்கள். இளைஞர்கள் அவற்றைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், பொழுதுபோக்க மட்டுமல்ல... வர்த்தகம், படிப்பு, ஆலோசனை, மனப்பகிர்வு என பல விஷயங்களிலும் இந்த வலைதளங்கள் பெரும் உதவி செய்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அளவிலான அறிகுறிகள், உங்கள் மகள் இந்த சமூக வலைதள பயன்பாட்டில் கிட்டத்தட்ட அடிமையாக இருப்பதையே காட்டுகிறது.

தற்போது மனநல மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் இளைய வயதினர் பலரையும் பார்க்கும்போது, 'இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம்' (Internet Addiction Syndrome) என்று புதிதாக பெயர் சூட்டுமளவுக்கு, மனநலம் சார்ந்த புதிய பிரச்னை உருவாகியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலில், உங்கள் மகளை கவனிக்கும் முன், அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலையை சற்று அலசுங்கள். குடும்பத்தில் எல்லோரும் அவருடன் சரியாகப் பழகுகிறீர்களா, அவர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கிறீர்களா, அவரோடு குவாலிட்டியான நேரம் செலவிடுகிறீர்களா... என்பதை ஆராய்ந்து பாருங்கள். நடைமுறை உலகம் புறக்கணிக்கும் போதுதான் இளைஞர்கள் வேறு போக்கிடம் தேடுவார்கள். அது உறவினர்களாகவோ, கல்லூரி நட்பு வட்டமாகவோ இருக்கும்போது பெரிய பிரச்னையைத் தந்துவிடாது. அப்படியே பிரச்னை எழுந்தாலும், எப்படியும் உங்கள் கவனத்துக்கு எட்டிவிடும்.

ஆனால், சமூக வலைதளங்களில் ஊர் கடந்து, கடல் கடந்து முகமறியா நபர்களிடம், அவர்களின் சுயரூபம் தெரியாது நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என அலைபாயும்போது... நிறைய நிழல் நடவடிக்கைகளில் சிக்க வாய்ப்பாகிவிடும். அதிலும் போதிய முதிர்ச்சி இல்லாவிட்டால் சுலபத்தில் பல தீய சக்திகளுக்கு இவர்கள் இரையாவார்கள்.

பொதுவாக, தனிமையில் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, அதேபோன்ற இன்னொரு நபரிடம் சாட்டிங் செய்பவர்கள், தங்கள் அந்தரங்கத்தின் புனிதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லைமீற அதிகம் வாய்ப்பிருக்கிறது. முகம் தெரியாத நபரை எளிதில் நம்பிவிடுவது, வார்த்தை ஜாலத்தில் விசாரிப்பவர்களிடம் எல்லாம் தன் புலம்பலைக் கொட்டுவது, தன்னை பலரும் கவனிக்கிறார்கள், அவர்களின் கவனிப்பும் ஆறுதலும் தொடர வேண்டும்... இப்படி பல உள் உந்துதல்களோடு மேலும் மேலும் அவர்கள் இந்த சமூக தளங்களில் கட்டுண்டு போகிறார்கள்.

ஃபேஸ்புக்கை தனது பிரசாரத்துக்கான உத்தியாகப் பயன்படுத்தி அமெரிக்க அதிபராக உயர்ந்த பராக் ஒபாமாவே, ஒரு பொறுப்பான தந்தையாக தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு, இப்போதைக்கு ஃபேஸ்புக் தேவையில்லை என்று தடை செய்து, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். தனது தேசத்து பெற்றோர்களுக்கும் இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். வளர்ந்த நாடுகளிலேயே இப்படி உஷாராகும்போது, நாம் இன்னும் உஷாராகவே இருக்க வேண்டும்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தினமும் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் செலவிடுவது ஓ.கே... அதைத் தாண்டி பின்னிரவு வரை பொழுதுபோக்குவது, குடும்ப உறவு, நண்பர்களைத் தவிர்ப்பது போன்றவை கவலைக்குரியவை.

உங்கள் மகளுடன் சகஜமாகப் பேசி அவரது சமூக வலைதளப் பயன்பாடு, நண்பர்கள் விவரங்களை உண்மையான ஆர்வத்தோடு அறிந்து கொள்ளுங்கள். அந்தரங்க தகவல்கள், புகைப்படங்களைப் பதிவேற்றுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்துங்கள். அவரது சமூகப் பழக்கத்தில் நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். குறையான விஷயங்களைக் காயப்படுத்தாது மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அவர் அக்கவுன்ட் வைத்திருக்கும் சமூக வலைதளத்திலேயே உங்களுக்கும் ஒரு அக்கவுன்ட் துவங்கி, உங்கள் மகளின் சமூக நண்பர்களில் ஒருவராகுங்கள். இது உங்கள் மகளின் இணைய செயல்பாட்டை சுத்திகரிக்கவும், கண்காணிக்கவும் உதவும். பல்வேறு வகையிலும் அவரின் தனிமைச் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து பிஸியாக வைத்திருக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகள் எல்லாம் சரிவராவிட்டால், விரைவாக மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் தருவதே நல்லது. மாறாக, அவரது இணைய பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினால், மன அழுத்தம் அதிகமாகி வேறு பாதையில் பிரச்னை வெடிக்கக்கூடும்!''

நன்றி : அவள்விகடன்

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னடத்தை தொடரும்...

- அதிரைநிருபர் குழு

13 Responses So Far:

Shameed said...

சரியான எச்சரிக்கை

sabeer.abushahruk said...

பொருப்புணர்ச்சியை வெளிக்காட்டும் பதிவு. விழிப்புணர்வை வழியுறுத்தும் இடுகை. பகிர்வுக்கு நன்றி.

Meerashah Rafia said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் ஆய்வறிக்கை-

Digital Media Visualizer ஆகிய எனக்கு தற்போதைய முக்கிய பணி FACEBOOK Business Page Maintenance.
Client-CENTREPOINT
இதற்கான சவூதி அரேபியாவின் Facebook Fan Pageஐ (www.facebook.com/centrepointksa)தினமும் post,status message, photos,seperate +ve/-ve comments,answer customer queries, weekly analytics report போன்றவற்றை செய்வது என் பல வேலைகளில் இது ஒரு வேலை. (இதுல அரபிளைலாம் எழுதி தலை சுத்த வைப்பாங்க..அருமை மச்சான் Google Translate வச்சி நான் சமாளிக்கிறேன். மாஃபி முஷ்கிலா)

அந்த நிறுவனத்தில் வாராந்திர அறிக்கையை இதோ உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றேன், ஏன் சமர்பிக்கிரேன்னு அப்பாலிக்கா சொல்றேன்பா ..

Period: 05th Jan,2012-11th Jan,2012
Weekly Fans -2616
Friends of Fans -921,454
Total No. of fans joined within 2 weeks -4893


Fans by Country
4,457 Saudi Arabia
71 Egypt
60 Pakistan
47 United States of America
43 Philippines
28 Sudan
22 India
21 Jordan
16 Lebanon
13 UK
Less than 10 Iraq, Oman, Sri Lanka, Algeria, Syria, Tunisia, Yemen, Canada, Indonesia, Ireland, UAE, Bangladesh, Switzerland

MALE - 2.7% FEMALE - 96%

AGE SEGREGATE :
Age 13-17 / Female : .61% Male : .31%
Age 18-24 / Female : 43% Male : .90%
Age 25-34 / Female : 40% Male : .01%
Age 45-54 / Female : 2.10% Male : 0.00%
Age 55+ / Female : 1.10% Male : 0.00%

Total Percentage - Female : 96% Male : 2.7% (இந்த சொச்ச 2.7%ஆம்புளைங்க டிரைவரா இருப்பாங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு)

இதுல 10 Post, 912 மக்கள் கலந்துகிட்டாங்க 213 likes, 44 comments, 13 share.
Top comment : 'we shopped a lot, it was great..and we will visit you again this weekend..thank you' (உங்களை மாதிரி ஆட்களைத்தான் தேடிகிட்டிருக்காங்க. எத்தன ஆயிரம் ரியால் கொண்டு வரபோறீங்க?)

Participated Fans:
Content Viewers vs number of times in this week
1 time - 61,338
2 times - 40,256
3 times - 25,718
4 times - 22,968
5 times - 18,045
6-10 times - 77,210
10-20 times - 1,02,537
20+ times - 1,45,585
PERCENTAGE-Female 97% Male 3.2%

இதெல்லாம் நான் அந்த நிறுவனத்திற்கு சமர்பித்தது.. அவர்களிடம் சொல்லாத சில விசயங்களையும், நான் புரிந்துகொண்ட சில விசயங்களையும் உங்களுடன் நான் இங்கு பகிர்கின்றேன்..

1)Facebook அனைத்து வகை நிறுவனங்களுக்கும் ஒரு மிகப்பெரிய விளம்பர சாதனமாகிவிட்டது
2)நிறுவனங்களை பொறுத்தவரை இது ஒருவகை குறைந்த செலவில் ஓர் நடமாடும் call centre
3)centrepoint என்பது Citymax,Shoemart,Lifestyle,Home centre,Babyshop போன்ற மேலும் பல நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஓர் மிகப்பெரிய நிறுவனம்.. மொத்தத்தில் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்குமிடம். ஆனால் facebook ல் 96% மேல் தொடர்பில் இருப்பவர்கள் பெண்கள். (அடி ஆத்தி!!)
4)தினமும் காலை Inspiration Message வெளியிடுவது என் வழக்கம். இதை ஸுபுஹ் தொழுதபின் அனுப்பினால் அன்று உதாரணத்திற்கு 25 Likes/comment வருமென்றால் அதற்கு பதில் இரவு 12 மணிக்கோ , 2 மணிக்கோ வெளியிட்டால் 50 likes/comments வரும்.. அதாவது 50% மேல் அலைப்பேசி/மடிக்கணினிகளைக்கொண்டு இரவு உரையாடலில் அதிகம் ஈடுபடுகிறார்கள் நம் இளசுகள்
5)எந்த ஒரு பதிவை எத்தனை மணிக்கு வெளியிட்டாலும் அதிகபட்சம் ஐந்து நொடியில் 2 likes வந்துவிடுகின்றது.. இதை வைத்து நாம் புரியலாம் மக்கள் 24/7 இணையத்தில் இதயத்தை வைத்துள்ளார்கள் என்று
5)பெண்களை பொறுத்தவரையில் இது மிக சுதந்திரமான ஊடகம் (சவூதி அரேபியா போன்ற இசுலாமிய சட்டம் உள்ள நாடுகளுக்கு இது அதிகம் பொருந்தும்). ஆதலால் அவர்களில் பங்கு இங்கு கபீர்(பெரியது)..

நாட்டாமையின் தீர்ப்பு:
நேரத்தை கணக்கில்லாமல் செலவிட மக்கள் முன்வந்துவிட்டார்கள்.
அவர்கள் மனம் மாறும் வரை, இந்த மாயையை ஒழிக்கமுடியாது என்பதே துரதிஷ்டமான உண்மை


குறிப்பு :
centrepoint மேல்தட்டு பெண்களை கவரக்கூடியது அதனால்தான் என் அறிக்கை இப்படி இருக்கின்றது என்றால், Raymond KSA facebookம்(91% male )எங்களிடம்தான் உள்ளது.centrepoint ற்கு செய்த அத்தனை விளம்பரமும் நாங்கள் அங்கும் செய்தோம்.ஆனால் அங்கு 3 மாதத்தில் 156 fans,centrepoint 3 வாரத்தில் 6398 fans. மொத்தத்தில் 13-34 வயதுக்குள் இருக்கும் இளசும், இளைய பெருசுகளும்தான் இந்த facebookல் லூட்டி அடிக்கிறார்கள், THE COMPLETE MAN தேவைகளுக்கு மட்டும் உபயோகிப்பார்கலோ!
ஹ்ம்ம்..உலகம் எங்கயோ போகுது,நம் மக்களை அல்லாஹ்தான் காப்பாத்தி ஆகணும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அறிவுறுத்தல் பகிர்வு!

மீராசாவின் ஆய்வு வியக்கத்தக்கவை.
.ட்டிகளின் லூட்டி அதிர்ச்சியூட்டக்கூடியவை.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. மீராஷா, கணினி துறையில் நம்ம நண்பர் “யாசிர்” ரைப் போல வல்லுனர் என்று நமது சகோதரர்கள் சொல்லக்கேட்டுள்ளேன். இன்டர்நெட்டின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல பதிவுகளை பதியலாமே !

பயனுள்ள பதிவு ( அ.நி ) ! பயனுள்ள கருத்து ( மீராஷா ) !!

ZAKIR HUSSAIN said...

To Bro Meerasha...

//நேரத்தை கணக்கில்லாமல் செலவிட மக்கள் முன்வந்துவிட்டார்கள்.
அவர்கள் மனம் மாறும் வரை, இந்த மாயையை ஒழிக்கமுடியாது என்பதே துரதிஷ்டமான உண்மை//


மவுத்தா போனா FaceBook மூலமாக அடக்கம் பன்ன முடியுமானு பாப்பாய்ங்க போல தெரியுது!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நாட்டாமையின் தீர்ப்பு:
நேரத்தை கணக்கில்லாமல் செலவிட மக்கள் முன்வந்துவிட்டார்கள்.
அவர்கள் மனம் மாறும் வரை, இந்த மாயையை ஒழிக்கமுடியாது என்பதே துரதிஷ்டமான உண்மை//

நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சத்தம் போட முடியல சிருசு !

சரியாத்தான் சொல்லிட்டியல...

இது இருக்கிறவய்ங்க மனசு எங்ககிட்டே இல்லே அத ஃபேஸ்புக்குல நிறைய கூறு போட்டு கொடுத்தாச்சுன்னு சொல்லிட்டா என்ன பன்றதாம் !?

பட்டும் திருந்தனும் திருந்தியே ஆகனும்...

இழப்பு இன்றைக்கு நமக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாளை நம் சமுதாயம் இழந்து இருப்பதை பார்க்க முடியாமல் கூட போகலாம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மவுத்தா போனா Face-Book மூலமாக அடக்கம் பன்ன முடியுமானு பாப்பாய்ங்க போல தெரியுது!!//

ஆமா காக்கா: "find my graveyard" தேடி வச்சிருப்பாய்ங்க !

என்னா fiber optical cable போற இடம இருந்தா அங்கேயும் face bookல் இருக்கலாமேன்னு தேடுவாய்ங்க...

வயர்லெஸ் கனெக்டிவிட்டி very poor காக்கா அங்கே..... அதனையும் செக் செய்யனும்னா MSM(n) சொல்ற மாதிரி மவுத்தாப் போன experience உள்ள டெக்னிஸியனைத்தான் தேடனும்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பெற்றோர்களுக்கு நல்ல பாடமும் பிள்ளைகளுக்கு சரியான எச்சரிக்கையும்.

அதிகமான பெற்றோர்கள் பிள்ளைகளிடம் face கொடுத்து பேசுவதில்லையே எப்படி face book பற்றி விசாரிப்பார்கள் ?

அப்துல்மாலிக் said...

என்னா மாதிரியான அட்வைஸ் பண்ணாலும் அதை பற்றி அனுபவித்தால் மட்டுமே அறிவுக்கு எட்டும்...

Anonymous said...

2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook)தளத்தை உருவாக்கித் தந்தார்!அப்போ இவர் செய்தது நன்மைகருதிதான் செய்தாரா?இல்லெ அதை பயன்படுத்துவோர் தவரான வழியில் பயன்படுத்துகிறர்களா?

Meerashah Rafia said...

சேக்கனா M. நிஜாம் சொன்னது…
// இன்டர்நெட்டின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல பதிவுகளை பதியலாமே !//

நிஜாம் காக்கா, இதை ஆறாய்ந்து எழுத பலநாளாக யோசித்துக்கொண்டே இருக்கிரேன தவிர எழுதியபாடில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்..

1) இணையம் கடல் போல் ஆகிவிட்டதால் ஒரே தலைப்பின்கீழ் எழுதமுடிவதில்லை.. ஒவ்வொரு தளத்தை பற்றியும் ஒரு பெரிய்ய கட்டுரையே எழுதலாம். இங்கு நான் பதிந்த பின்னூட்டமும் அப்படி எழுத நினைத்த சுருக்கமான ஒன்றுதான்..

2)தீய வழிகளை விட்டு பாதுகாக்கும் வழிமுறைகளும் ஏராளம் இருக்கின்றது.. அதை பொதுவில் வெளியிட்டால் நம் இளசுகள் அதையும் உடைக்க முயல்வார்கள். ஆதலால் அதை எழுதமுடிவதில்லை. அத்தோடு அந்த நல்ல வழிமுறைகளை சில பெரியவர்களும் தவறான அணுகுமுறையில் கையாண்டுவிடுவார்களோ என்ற அச்சமும் கூட. இது போன்றவை group mailகளில்/tele conferenceல் கலதாலோசிப்பதே சிறந்தது..


இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலம் இடியாப்ப பின்னலாகிய இணையத்தை பற்றி எழுத முயற்சிக்கிறேன்..

Yasir said...

நல்ல ஒரு எச்சரிக்கை பதிவு...இந்த முகநூலில் முகவரியை கண்டுபிடித்தவர்களும் உண்டு, முகவரியை இழந்து,மானத்தை இழந்து,வாழ்க்கையை தொலைத்தவர்களும் உண்டு....அடிமையாகுதல் என்பது தவிர்க்கபட வேண்டும்...அதன் அவசியத்தை குழந்தைகளுக்கு நாம் சிறிய வயதிலயே ஊட்டவேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு