மனிதவளம். அதனை அடையாளம் கண்டிடவும் அதனைக் கொண்டு வாழ்வாதாரத்தை முன்னேற்ற எவ்வாறு நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் அழகுற இரண்டு பதிவுகள் முன்னர் இங்கே பதியப்பட்டு (அர்ப்பணிப்பும் - அங்கீகாரமும்! அனுபவம் பேசுகிறது...., மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் !) அனைவரும் அதன் தாக்கத்தை உணர்ந்தோம்.
கல்லூரிக் காலங்களில் அதிகாலையிலேயே எழுந்து சுப்ஹு தொழுகைக்குப் பின்னர் கல்லூரிக்குச் செல்வது போன்றே முறையாக உடையணிந்து கொண்டு, ஒரு நண்பர் தினமும் வெளியில் செல்வார். அதன் பின்னர் எல்லோரும் கல்லூரிக்குச் செல்லும் நேரத்திற்கு மீண்டும் விடுதிக்குத் திரும்பி வருவார் அவசரஅவசரமாகச் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கும் செல்வார். இது தொடர்ந்து கொண்டிருந்தது (நாங்கள் நினைத்திருந்தது டியூசனுக்கு செல்கிறார் என்று) திடீரென்று அதிகாலை செல்லும் வழக்கம் நேரம் தாழ்த்தி காலை ஏழு மணிக்கு மேல் என்று தொடர்ந்தது.
அவர் அப்படிச் செல்லும் போது ஒவ்வொரு முறையும் என்னையும் அழைப்பார் “நீயும் வா வந்து சேர்ந்திடு. பின்னால் நமக்கு அது உதவும்” என்று அன்றைய நாட்களில் ஒரு பயம் இருந்தது ஆங்கிலத்தில் பேசு"வதைக்" காரணம் கண்டே செல்ல மறுத்தேன் ஆனால் அவர் விடுவதாக இல்லை, ஒரு வழியாக எனக்காகவே அவரும் Spoken English பேசிப் பழக ஆங்கிலம் கற்றுக் கொள்ள அப்போது பிரபலமாக இருந்த சஃபாரி என்ற பயிற்சி நிலையத்திலும் சேர்ந்தோம். அதன் பின்னர் நாங்கள் ஒன்றாக செல்வோம் அங்கு காலை 07:30லிருந்து 08:30வரை நான் சீக்கிரம் திரும்பி விடுவேன் விடுதிக்கு அவர் அடுத்த 45 நிமிடங்களை அங்கேயே அடுத்த வகுப்பிற்கு செல்வார் அதுதான் சுருக்கெழுத்து பயிற்சி அதில் எனக்கு நாட்டமில்லாததால் நான் இணையவில்லை ஆனால் அவர் விடுதி அறையில் அவர் பயிற்சிக்காக எழுதிப் பழகும்போது கேட்டு கேட்டு நானும் முயற்சித்தேன் (முறையாக வகுப்பிற்கு செல்லாததினால் இழுபறியாகத்தான் இருந்தது சுய பயிற்சி). அவரோடு சரி இதிருக்கட்டும் இப்போதைக்கு.
சென்னையில் இருந்த நாட்கள் தவிர்த்து, வளைகுடா மண்ணில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் அடுத்த நாளிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்த அனுபவமும் இங்கே வாழ்வாதாரத் தேவைகளைத் தேட வந்திருந்த மூத்தோர்களின் அனுபவங்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு அறிவுரையாக எத்தி வைக்கப்பட்டு சிந்திக்க வைத்த நிகழ்வுகள் ஏராளம் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே....
முதல் நாள் வேலைக்குச் சென்றதும் அன்று மாலை முதலாளியைச் சந்திக்க செல்ல வேண்டும் என்று சொன்னதும் உதறல், என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற பதற்றம் அதோடு ஒரு குருட்டு தைரியம் மனதில் இருந்தாலும் செயலில் ம்ம்ம்ம்ஹும்ம்ம். அப்பாடா சந்தித்தேன் முதலாளியை, அவரும் குசலம் விசாரித்து விட்டு கேட்டார் என்ன என்ன தெரியும் என்று, தெரிந்ததைச் சொன்னேன். வெளியில் வந்ததும்... எனது கல்லூரிக் காலங்களில் அதிகாலை எழுப்பி அழைத்துச் சென்ற நண்பனை நினைத்தேன் மனதில் நன்றியை அல்லாஹ்வுக்கு உரித்தாக்கியவனாக.
கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் கம்பெனி முதலாளியை சந்திக்கும் வாய்ப்பு அப்போது அவர் கேட்டார் என்னிடம் “சுருக்கெழுத்து தெரியுமா?” என்று. மண்டையில் நங்கென்று அடித்த மாதிரியாக இருந்தது அடி பலம்தான் அப்படியே தலை சுற்றி கண் இருட்டியது, தெரியாது என்று சொல்வதற்கு மாற்றாக தெரியும் என்றும் சொல்லிவிட்டேன் அதன் பின்னர் அவரின் காரியதரிசி (செக்ரட்டரி) விடுமுறையில் செல்கிறார் அவரின் பணியினை அவர் திரும்பி வரும்வரை நீதான் தொடரவேண்டும் என்றார் தூக்கிப் போட்டது எனக்கு எப்படி சமாளிப்பது என்று. அடுத்து விடுமுறையில் செல்ல இருப்பவரும் என்னை அழைத்து அவரின் பணிகளை விளக்கினார் எனபதை விட விளித்தார் என்றே சொல்ல வேண்டும் எமக்கு (அதிகம்) ஆங்கிலம் தெரியாது என்ற மெதப்பிலேயே அவரின் (பெரியாறு) அணை உடைப்பு மொழியிலேயே பரஞ்சார்... அட ! சீனத்து வித்தையைச் சொல்வதுபோல் பிரம்மை உண்டாக்கினார் (அவர் இருக்கும்போது பரபரப்பாக இருப்பார் “பிஸி பிஸி” என்று. நான் அதற்குத்தான் பயந்தேன் இவ்வளவு பிஸியான வேலையை நாம எப்படி செய்வது என்றும்
அவர் நாட்டுக்கு(ம்) போயி(ட்டார்), அவரின் வேலையை அடுத்த நாளிலிருந்து நான் தொடர்ந்தேன். முதல் நாள் சிரமம் அப்படியாக தெரியவில்லை அடுத்து வந்த நாட்களும் அப்படித் தெரியவில்லை... அதிகமாக கோப்புகளில் ஆவணப்படுத்துவதும் மற்றும் வழமையான பணிகளூடே தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளித்தி கேட்பவர்களின் இலக்கத்திற்கு மாற்றிவிடுவதும்தான். (இங்கே அவரின் செயல்களின் ஒன்று நினைவுக்கு வருகிறது எங்கள் நிறுவனத்தில் பெயரில் 98 சதவிகித எழுத்துக்களை விழுங்கி விட்டு 2 சதவிகித எழுத்தில் எழும் உச்சரிப்பைதான் தொலைபேசியை எடுத்ததும் சொல்வார்) நாம் முழுமையாக அதனைச் செய்ததும் அதற்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களில் வேலையே இல்லாத உணர்வு காரணம் காலை நேரங்களில் முதலாளி அலுவலகத்தில் இருக்க மாட்டார் அவர் தொழிற்சாலைக்கு சென்று விடுவார் மாலையில்தான் வருவார் அந்த நேரத்தில் அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று மணிநேரம்தான் பெரிதாக வேலையிருப்பதுபோல் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அனைத்து கடித தொடர்புகள் அனைத்தையும் முதலாளியே செய்திடுவார் அவர் தருவதை ஃபேக்ஸ் அனுப்புவதினை மட்டுமே செய்து வந்தேன். அப்போதுதான் புரிந்தது எவ்வளவு அலம்பல் அணையுடைப்பு பார்ட்டி செய்தது என்று.
அதன் பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து தொழிற்சாலைக்கு மாற்றம் அங்கே அல்லாஹ்வின் உதவியால் முதலாளியின் நம்பிகையை வலுவாக்கிக் கொண்டே சிறுகச் சிறுக வேலையில் அதனைத் தொடர்ந்து பொறுப்புகளில் முன்னேற்றம். அதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது வசமாக சிக்கியது அதனை தக்க நேரத்தில் அப்படியே பயண்படுத்திக் கொள்ளும் சக்தியையும் தூண்டுதலையும் அல்லாஹ் என்னைச் சுற்றியிருந்தவர்கள் வாயிலாக அளித்தான் அல்ஹம்துலில்லாஹ்...
நிற்க...
அடுத்து இபுறாஹிம் அன்சாரி காக்கா மற்றும் மு.செ.மு. நெய்னா முஹம்மது இருவரும் எடுத்து வைத்த உழைப்பினால் உயர்ந்தவர்களின் உதாரணங்களை அனுபவத்தில் கண்டதைச் சொல்லாமல் விட்டால் எப்படிங்க !
ஆட்டோகேட் (Autocad) என்ற மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்காகவே ஏதாவது ஒரு வேலைய எடுத்துக் கொண்டு என்னிடம் நெருக்கமாக இருந்த நம்மவர் ஒருவர் கொஞ்ச நாட்கள் கழித்து வீட்டில் புதிதாக கணினி வைத்திருக்கேன் ஆட்டோகேட் நிறுவி வேண்டும் என்றார் நானும் என்னிடம் இருந்ததை கொடுத்தேன் அப்புறம் வீட்டில் இருந்து கொண்டே இணைய வசதியை அவர் தங்கியிருந்த இடத்தில் பகிர்வாக வாங்கி அதன் வாயிலாகவும் முயற்சித்தார். கம்பெணியை விட்டு வெளியேறினார் தனியாக கன்ஸ்டரக்ஸன் என்று ஆரம்பித்தார் வேறு ஒருவருடன் சேர்ந்து இன்று அவருக்கு ஒரு கார் அவரது மனைவிக்கு ஒரு கார் தனி வில்லா சகல வசதியுடன் 45 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கார்.
தரையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவர் அவருடைய தினசரி உற்பத்தியை அறிக்கையாக எழுதித் தரும்போது அவரின் கையெழுத்து வாசிக்க இலகுவாக தனித்தனியாக இருந்ததால் அவரையே டைம் கீப்பருக்கான வேலையினை செய்ய அழைத்தேன், அவree உற்பத்திக்கான வேலையாட்களின் நேரத்தையும் பொருள்கள் அடிப்படியில் நேரங்களை எழுதித் தரும் வேலையை செய்தார் அது கணக்கருக்கு வரும் அவர் அசல் மற்றும் விலை நிர்ணய வேலையை செய்வார் இதனை அவதானித்து வந்த அவர் எப்படி அவைகள் நிகழ்கிறது என்று தொடர்ந்து கண்கானித்து வந்தார். கணக்கரும் வேலை விட்டு சென்றது அந்த வேலைக்கு உடனடியாக ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது அந்த இடைப்பட்ட காலத்தில் நான் செய்தேன் அந்த வேலையை அப்போதுதான் டைம் கீப்பிங்க் செய்து வந்தவரின் திறன் எனக்கு புலப்பட்டது அவரிடமும் கொடுத்துப்பார்த்தேன். நன்றாகவே செய்தார் அப்புறமென்ன உறபத்த்தியின் நிகழ்வுகளை என்ன தேவை என்றாலும் அவரிடம்தான் என்ற நிலை உருவானது அவர் இல்லை என்றால் சிரமமே என்ற சூழல் வரும் அளவுக்கு ஆளுமையை பலப்படுத்திக் கொண்டார். அவருக்கும் அபுதாபியில் மிகப் பெரிய செய்தித்தாள் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவுக்கு வாய்ப்பு கிளம்பிவிட்டார் இன்று சகல வசதியுடன் இருக்கிறார் நன்றியுடன் எம்மை நினைவு கூர்ந்தவராக.
ஸ்டோர்கீப்பர் என்றுதான் வந்தார் எப்படித்தான் அவருக்கு மனசாட்சி ஒத்துழைத்ததோ தெரியவில்லை, அதற்கான தகுதியை அவரிடம் என்னால் காண முடியவில்லை அவரிடம் ஓட்டுநர் உரிம்ம் இருந்தால் அவரை ஓட்டுநராக பணி செய்ய வைத்தேன். மண்வாசனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் மொழியாடல் இருக்கும் அதுதான் அவருக்கு பலமே. வெளியில் சுந்தந்திரமாக (வேலையாகத்தான்) ஓட்டுநராக சென்று வருவார் அதிகமதிகம். சிப்பிங் கிளியரன்ஸ், கஸ்டம்ஸ் என்றுதான் வெளியில் செல்வார். ஒன்Rarai வருடம் கழித்து திடீரென்று என்னிடம் வந்தவர் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னார் நானும் ஏன் இந்த முடிவு என்றேன். செல்லுமிட்த்தில் ஒரு சிப்பிங்க் கம்பெணியில் வேலை கிடைத்து விட்ட்து சம்பளம் அதிகம் என்றார். சரி நல்லாயிருக்கட்டும் என்று அனுப்பியும் வைத்தோம் ஐந்து வருடங்கள் கழித்து என்னிடமே வந்தா வாடகைக்கு டிரெய்லர் விடுகிறேன் உங்கள் தேவைகளுக்கு என்னிடம் அனுகவும் என்று அசந்துட்டேன். அவரின் அசுர வேக முன்னேற்றத்தை அவரின் வருமான்ங்களின் பின்ன்னி எனக்குத் தெரியவில்லை ஆனால் அவரின் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் அசரவைத்த்து.
உதாரணங்கள் காட்டிட இன்னும் இருக்கே என்ன செய்யலாம்… ?
அதெல்லாம் விடுங்க இவ்ளோ சொல்றியே செய்தியே நீ மட்டும் என்ன ஒரே கம்பெணியில இருக்கியேன்னு கேட்கத்தூண்டுதுதானே உங்களுக்கு ? ஏணி எப்படிங்க நகரும் அதில் ஏறியவர்கள் ஏற்றி விடப்பட்டவர்களும் தானே மேலே செல்வாங்க… ஏணியை அப்படியே யாராவது நகர்த்த்தானே முடியும் தானாக நகராதே !! (சால்ஜாப்புதானே காட்டுறேன் J)
- அபுஇபுறாஹிம்
9 Responses So Far:
எப்போது என்னை ஏற்றுவீர்கள்.காத்துக்கொண்டு இருகிறேன்?
இன்னும் நம் சமுதாயத்தை ஏணியாக இருந்து ஏற்றிவிட வாழ்த்துக்கள்
படிக்குபோதே ஊக்கமாக இருக்கு காக்கா.மாஷா அல்லாஹ்
படிப்பினை பக்குவமாய் பகிர்ந்தது நல்லாருக்கு.
இது போன்ற நல்ல கட்டுரைகள் ஆர்வமுடன் படிப்போருக்கு ஊக்கமாகவும், ஆர்வமில்லாதோருக்கு தூக்கமாகவும் இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கீழ்க்கண்ட ஹதீஸின்படி தங்களுக்கும் - தங்களை போன்று உதவும் மனப்பான்மை உள்ளவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.
''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)
ஏணியாக ஏற்றிவிட்டதெல்லாம் சரிதான். அதற்கான நன்மைகளை அல்லாஹ் உமக்குத் தருவான்.
ம்...அப்புறம்...தாங்களும் இன்னும் இன்னும் மேலேவர வாழ்த்துகள்
கருத்திட்டோர் அனைவருக்கும் உடைப்பெடுக்காத அணைகட்டி வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக நன்றிகள் பல !
அடுத்து வரும் MSM(n) பதிவுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.
ஒரே கேள்வி ! பின்னுட்டங்கள் பின்னால் தொடர்ந்தால்தான் பதிவுக்கு வெற்றியா ?
//ஒரே கேள்வி ! பின்னுட்டங்கள் பின்னால் தொடர்ந்தால்தான் பதிவுக்கு வெற்றியா //
நிச்சயமாக இல்லை.
நல்ல விஷயங்களைச் சொன்னால் எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொண்டுதான் இருப்பர். எதிர்வாதம் செய்ய தேவையில்லாத பதிவுகள் எவ்வளவோ உள்ளன.
எனினும், பின்னூட்டம் எழுத தூண்டுவதும் ஒரு சாதுர்யம்தான். ஆனால் அது ஒருவரின் எல்லாப் பதிவுகளுக்கும் வாய்த்து விடுவதும் இல்லை.
Post a Comment