Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி - பேசும் படம் 43

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2012 | , , , ,


அதிரை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு என்று ஓர் கல்விக் கருவூலமாக 60 வருடங்களுக்கு முன்னர் அதிரையின் கல்வித் தந்தை மர்ஹூம் SMS அவர்களால் சமுதாய அக்கரையுடனும் எதிர்கால சந்ததியர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி இன்று காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியாக கம்பீரமாக தலை நிமிர்ந்து வைரவிழா தருணத்தில் நிற்கிறது.


அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள் என்று உருவாக்கிய இடம்.


அப்படியே நெஞ்சில் நிற்கும் வகுப்பறைகள் ! 1980களில் தலைமை ஆசிரியர் அலுவலகம், அறிவியல் பிரிவிற்கான சோதனைக்கூடம், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு அறைகள்...


மறக்கத்தான் முடியுமா ? இந்த வகுப்பறைகளை !?


பொலிவுடன் கானும் புதிய பள்ளிக் கட்டிடத்தின் நேர்த்தி மீண்டு அழைக்கிறது பள்ளிப் படிப்புக்கு வரச் சொல்லி !



மாநில அளவில் இதுநாள் வரை நடைபெற்ற ஓட்டப்போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளிக்கு பெருமையை தேடித்தந்த மாணவர்களின் பட்டியல்கள்.


அரசுப் பொதுத்தேர்வில் இப்பள்ளியின் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணவர்களின் பட்டியல்கள்.


மஸ்ஜித் - காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி :

ஆரம்பிக்கட்ட கால கட்டங்களில் ஓலைக் கூரையாக இருந்த அல்லாஹ்வின் பள்ளி இன்று அழகுற எழுந்து நிற்கும் இம்மஸ்ஜித்தில் மாணவர்களுக்கு தொழுகைகள் மற்றும் தீனியாத் வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு மைதானம்,  எண்ணற்ற அற்புதமான விளையாட்டு சாதனை வீரர்களை உருவாக்கிய இடம்


சத்துணவுக்கூடம்


கழிப்பறை


குடிநீர் தொட்டி


கிளறிவிட்ட நினைவுகளோடு - வாங்க பள்ளிக்கூடம் போகலாம் !
- அதிரைநிருபர் குழு
படங்கள் : சேக்கனா M. நிஜாம் மற்றும் அபூபக்கர் (அமேஜான்)

43 Responses So Far:

Yasir said...

மீண்டும் சிறுவனாக மாறி பள்ளி செல்லக்கூடாதா ? என்று ஏங்க வைக்கும் படங்கள்.....கடந்துவந்த பாதைகளை/நினைவுகளையும் அசைபோட வைத்த நிஜங்கள்...ரொம்ப நன்றி சகோ.நிஜாம்......பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்து இக்கரும்பலகையில் என் பெயரும் வந்தபோது கிடைத்த மகிழ்ச்சி இப்புகைபடங்களை கண்டதும் மீண்டும் ஏற்பட்டது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மதிப்பிற்குரிய ஹாஜா முஹைதீன் சார், ஹாஜி முஹம்மது சார், சீனிவாசன் சார், அலியார் சார், ராமதாஸ் சார், அஹமது தம்பி சார், ஃபிரான்ஸிஸ் சார், ரோசம்மா டீச்சர், மும்தாஜ் டீச்சர், மேகலா டீச்சர், நூர்ஜான் டீச்சர், ஜான் சார், தர்மலிங்கம் சார், சன்முகம் சார், லியாக்கத் அலி சார், ஜஹாங்கீர் சார், இரண்டு சேக்தாவுது சார்மார்கள், நாகரத்தினம் சார், அமீர் சுல்தான் (ஓவிய சார்), தாமஸ் சார், ரெங்கராஜன் சார், அன்பழகன் சார், குலாம் காதர் சார், உலகநாதன் சார், வடிவழகி டீச்சர், இஸ்லாமிய மாணவர்களுக்கான வகுப்பில் மார்க்க சம்மந்தமாக அழகுடன் ஆர்வமாய் விளக்கி நடத்தும் ஜமால் பாய், சர்குலர் கொண்டு வந்து அஞ்சு பிரியடு அறிவிப்பை அடிக்கடி தந்து மாணவர்களுக்கு மனதில் பால்வார்க்கும் நேனா பாய் பிறகு காதராக்கா என்று நெஞ்சம் கவர்ந்த நல்ல பல சார்கள், டீச்சர்மார்களிடம் பாடம் பயின்றதை எவரால் தான் மறக்க முடியும்?

அடிக்கடி சென்று வந்த‌ டேட்டு கடை, படிக்கச்சென்று வந்த ரயிலடி மற்றும் ரேவடி, திறந்தவெளி பல்கலைக்கழகமாய் அன்று விளங்கிய வெட்டிகுளம் மற்றும் அல்லோலப்படும் உள்ளத்திற்குள் பெரும் விருச்சமாய் நிழல் தந்து காட்சி தரும் அந்த புளியமரம், வழியில் உப்புக்காற்றில் ஆடிப்பெருமிதம் கொள்ளும் கருவேலமரங்கள், விளையாட்டுப்போட்டியில் கம்பீரமாய் ஒலிபெருக்கியில் 'மேன்மேலோருக்கான 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள்' என ஒலிக்கும் மேகலா டீச்சரின் குரல், குடியரசு தினம், சுதந்திர தினத்திற்கென‌‌ பிர‌த்யேக‌ சிர‌த்தை எடுத்து ஜான் சாரால் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌டும் கொடிக்க‌ம்ப‌ம், எதேனும் வ‌ர‌லாற்று பின்ன‌ணி கொண்ட‌ ப‌ட‌ங்க‌ளை காண‌ ப‌ள்ளி மூல‌ம் வ‌ரிசையில் ஜெக்க‌ரியா தியேட்ட‌ர் சென்று பார்த்து வந்தது, இதுவ‌ரை வேட்டி உடுத்திச்சென்று பிற‌கு புதிதாக‌ அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிச்சீருடையை 'பலூன் பேகி' ஸ்டைலில் தைக்க ஆர்வமுடன் ப‌ட்டுக்கோட்டை பிரபல ர‌ஹ்மான் டைல‌ரிட‌ம் சென்ற‌து இப்ப‌டி எண்ணில‌ட‌ங்கா ந‌ல்ல‌ ப‌ல‌ நினைவுக‌ள் உள்ள‌த்திற்குள் அட‌ங்க‌ மறுத்து அமைதியாய் ஆர்ப்ப‌ரித்துக்கொண்டிருக்கின்றன வருடங்கள் பல உருண்டோடினாலும் எதோ நேற்று ந‌ட‌ந்து முடிந்த‌வைக‌ள் போல்.

நம் பள்ளி ஆசிரியப்பெருமக்கள் படிபடி என்று படித்துபடித்து சொல்லி அன்று படிக்காமல் வந்து வாங்கிய அடிகள் இன்று பலருக்கு வாழ்கைப்படிகளாக மாறிப்போனது எனவோ உண்மை.

('என்னா அடிங்கிறியெ') வீட்டிலுள்ள தந்தை/பெரியவர்களை கூட்டி வரச்சொன்னால் ரோட்டில் நடமாடும் பெரியவர்களை கூட்டி வந்து அடி வாங்கியவர்களும் உண்டு.

மாஷா அல்லாஹ், நம் பள்ளியில் பயின்ற எத்தனையோ மாணவர்கள் இன்று மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வல்லரசு நாடுகளிலும் குடும்பத்துடன் குதூகலமாக சந்தோசத்துடன் அங்கு இருந்து வருவது நம் பள்ளிக்கு கிடைத்த பெருமை என்றால் அது மிகையில்லை.

என் ப‌ள்ளி அதில் ப‌யின்ற‌ எல்லோரையில் உல‌கின் நாலாப்புற‌மும் ந‌ல்ல‌ப‌டியாய் அனுப்பி வைத்து விட்டு அந்தக்கடல் உப்புக்காற்றை நேசித்து எங்கும் செல்லாமல் அது ம‌ட்டும் அங்கேயே த‌ங்கிவிட்ட‌து.

ப‌சுமையான‌ ப‌ழைய‌ நினைவுக‌ளுக்கு தீணி போட்டு அர‌பிக்க‌ட‌லின் ஒரு ஓர‌த்தில் அமைதியாய் அவைகளை அசைபோட‌ வைத்த‌ ச‌கோ. சேக்கான்னா நிஜாமுக்கும் ம‌ற்றும் ம‌ச்சான் அபுப‌க்க‌ருக்கும் என் இனிய‌ ச‌லாமும், வாழ்த்துக்க‌ளும்.

இறைவ‌னுக்கே எல்லாப்புக‌ழும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மீண்டும் படிக்க கூப்பிடும் படங்கள்.

நாளைய அகில உலக செய்தியாளர்களாகிய அமேஜான் அபூபக்கர் மற்றும் சேக்கனா நிஜாம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!

Yasir said...

ஹாஜா மைதீன் சார் அவர்களின் கணிதமும்
லியாக்த் அலி சார் அவர்களின் இயற்பியலும்
நாகராஜ் சார் அவர்களின் தாவரவியலும்
ஹாஜிமுகமது & பிரான்ஸிஸ் சாரின் ஆங்கிலமும்
மேகலா டீச்சரின் அறிவியலும்
மும்தாஜ் டீச்சர் & ராமதாஸ் சாரின் கொஞ்சு தமிழும்
மஹபூப் அலி சாரின் கெமிஸ்ரியும்
ஜான் சாரின் வரலாறும்
ஆஷா டீச்சரின் ஆல் ரவுண்ட சப்ஜெக்ட்டும்
ஒவிய சாரின் ஓவியமும்
சேக் தாவூது சாரின் மார்க்க மணம் கமழும் கணிதமும்
நூர்ஜஹான் டீச்சரின் பாடம் நடத்தும் முறையும்
குலாம் காதர் சார்,கமால் பாட்ஷா சார் இணைந்து மிரட்டிய பொழுதுகளும்
அடிக்கடி வராவிட்டாலும் அவ்வெப்பொழுது வந்த உலகநாதன் சாரும்
சில்கா ஏரியை இன்னுவரை மறக்கமால் செய்த அகமது தம்பி சாரும்
அதட்டியே அன்பை பொழிந்த அலியார் சாரும்
ரோசம்மா டீச்சரும்,ராமசந்திரன்,தாஜூதீன் சாரும்,நெசவு வேணுகோபால் சாரும்,ஆபீஸ் அசிஸ்டெண்ட அப்துல் காதரும்...மறக்க முடியுமா ....அந்த தருணங்களை அசைப்போட்டால் எல்லாவற்றையும் மறந்து ஏதோ வேறு உலகத்தில் பறப்பது போன்ற நினைவுகள் நம் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையை வெல்கிறது....

Yasir said...

இதனை தொகுத்து தந்த சகோ.நிஜாம் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் அபூபக்கருக்கு வாழ்த்துக்களும் துவாக்களும்

சேக்கனா M. நிஜாம் said...

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!

நான் கல்வி பயின்ற என் பள்ளியை பார்த்தவுடன் எனக்கு கல்வியை கற்றுத் தந்த என் ஆசான்கள் S.K.M ஹாஜா மொய்தீன் சார், பிரான்சிஸ் சார், அலியார் சார், ஹாஜி சார் , தாஜுதீன் (விளையாட்டு ) சார், மகபூப் அலி சார், தர்மலிங்கம் சார், அஹமத் தம்பி சார், தாமஸ் சார், ஜான் சார், குலாம் காதர் சார், கமால் பாட்சா சார், சேக்தாவுத் சார், ஹனிபா சார், சண்முகம் சார், ரங்க ராஜன் சார், உலக நாதன் சார், மேகாலா டீச்சர், வடிவழகி டீச்சர், ரோசம்மா டீச்சர் , நூர்ஜஹான் டீச்சர், மும்தாஜ் டீச்சர், ராமச்சந்திரன் (விளையாட்டு ) சார், பாட்டனி சார், நெசவு சார், அன்பழகன் சார் இவர்களின் ஞாபகமமே !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நிழல் தரும் மரங்களாய் நினைத்து பார்க்க புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிந்த சகோ.நிஜாம்.அபூபக்கர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

எல்லா சார்மார்களை பதிந்த எம்.எஸ்.எம் .நெய்னா உடற்பயிற்சி ஆசிரியர்கள்.இருவரையும் பதியவில்லையே ?

அப்துல்மாலிக் said...

பள்ளிக்கூடம் என்ற திரைப்படத்தை பார்க்கும்போது நம் கண்முன்னே வருவது இந்த பள்ளிதான், அதை மீண்டும் அழகான படங்களுடன் தொகுத்து தந்த ச்கோதரர்களுக்கு நன்றிகள்...

நெய்னாவின் இந்த வரிகள் நெகிழச்செய்ததன //என் ப‌ள்ளி அதில் ப‌யின்ற‌ எல்லோரையில் உல‌கின் நாலாப்புற‌மும் ந‌ல்ல‌ப‌டியாய் அனுப்பி வைத்து விட்டு அந்தக்கடல் உப்புக்காற்றை நேசித்து எங்கும் செல்லாமல் அது ம‌ட்டும் அங்கேயே த‌ங்கிவிட்ட‌து.//

ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் பயின்ற பள்ளிக்கும் ஏதாவது ஒரு காரணத்துக்காக சென்றுவருவது வழக்கம்.. வாழ்க்கையின் அடிமனதுவரை மறக்கமுடியா இடங்கள் இவை.......

ZAKIR HUSSAIN said...

இப்படி பட்ஜெட் ஏர்லைன் எல்லாம் நிரம்பி வழியும் நேரத்திலா ஊர் ஞாபகத்தையும் , பள்ளிக்கூட நினைவுகளையும் ஆரம்பித்து வைப்பது?.

அப்துல்மாலிக் said...

இந்த பள்ளியில் படித்த நம்மூர் மாணவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இல்லையே என்பதை நினைத்து வேதனைப்படுவதுண்டு (என்னையும் சேர்த்துதான்). பிறக்கும்போதே பாஸ்போர்ட்/வீட்டுமனை என்று முத்திரை குத்திவிடுவதுவும் முக்கிய காரணம்...

Anonymous said...

எல்லோருக்கும் ஞாபகம் வருவதற்காக தான் இந்த காதிர் மொஹிதீன் பள்ளியின் போட்டோவை போடப்பாட்டுள்ளது. யாரும் மறக்கக்கூடாது என்பதற்காக. நீங்கள் எல்லாம் பள்ளிக்கு வந்து படிப்பதாக இருந்தால் வருகின்ற மே மாதம் சேர்ந்துவிடுங்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எனதருமை மர்ஹூம் தாஜுத்தீன் சார், ராமச்சந்திரன் சார், நெசவு வேணுகோபால் சார், கமால்பாட்சா சார், பாட்டனி சார் இன்னும் நான் குறிப்பிட மறந்த நல்ல பல வாத்தியார்மார்களுக்காக மன்னிக்கவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்று பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பும் முன்னால் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு பின்னால் உட்கார வேண்டுமா? முன்னால் உட்கார முடியுமா? என்று விளக்கமாக சொன்னால் தேவலாம். (ஹாஜி முஹம்மது சார் வகுப்பு மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் தேவலாம் என்று யாரோ சொல்வது போல் தெரிகிறதே?)

மச்சான் அபுபக்கர் காதராக்காவிடம் கேட்டு சொல்லவும்.

அப்துல்மாலிக் said...

காதராக்காவும் வாலைண்டர் ரிடையர்ட் ஆகிட்டாராம், பெர்மெனெண்ட் பண்ணமாட்டேனு சொல்லிட்டாங்களாம், வருத்தம் தரும் விசயம்...

Yasir said...

//வந்து படிப்பதாக இருந்தால் வருகின்ற மே மாதம் சேர்ந்துவிடுங்கள்.//அப்ளிகேஷன் ஒன்னு வாங்கி வைய்ங்க

Yasir said...

தர்மலிங்கம் சார் வகுப்பை மறக்கவே முடியாது...அதுவும் பாலுட்டிகள் என்றால் என்ன என்ற அவரின் கேள்விக்கு என் நண்பன் எழுதிக்கொடுத்த பதில் இன்றும் சிரிப்பை வரவழைக்கும்
அதே போல் இதயத்தின் செயல்பாடுகளை விளக்கு என்ற வினாவிற்க்கு மற்றொரு நண்பன் எழுதிய பதிலை கிளாஸ் ரூமில் அனைவரின் முன்னரும் அவனயே படித்துக்காட்ட சொல்லி பாடாய்படுத்தி எங்கள் வயிறுகளையெல்லாம் புண்ணாக்கிய சம்பவம் இன்று நினைவில் உள்ளது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்று நினைத்தாலும் வெட்கப்பட வைக்கும் சீருடையின்றி கைலி கட்டி பள்ளிக்குச்சென்று வந்ததும், உப்புத்தரையால் வரும் கைகால் கசிவும், பள்ளியில் கவனமின்றி நிறுத்தியதால் சைக்கிள் டயரை பதம்பார்த்த‌ கருவேலமர முள்ளும் பின்னர் பரீதாவில் பஞ்சர் ஒட்ட கொடுத்ததும், வணிகவியல் படித்ததால் விலங்கியல் மாணவர்களின் பரிசோதனைக்கூடத்தில் உயிரற்று நிற்கும் மீன்கொத்தி, ஆந்தை, தவளை விலங்கினங்களை ஆர்வமுடன் சன்னலோரம் உற்றுப்பார்த்த நினைவுகளும், படித்துக்கொண்டிருக்கும் பொழுது நாய் கடித்து இறந்து போன சக மாணவன் முஹாஜிரின் அன்சாரி (கடல்கரைத்தெரு மையவாடி எதிர்புறம் உள்ள வீடு) நினைவுகளும், தேர்வுக்கு கண் விழித்து படிக்கிறார்களோ? இல்லையோ? கந்தூரி சந்தனக்கூட்டை கட்டாயம் விடியவிடிய விழித்திருந்து பார்த்து வருவர் என்றெண்ணி அடுத்த நாள் விடப்பட்ட பள்ளி விடுமுறையும் (தயவு செய்து சகோ. அர அல கொந்தளித்து விட வேண்டாம்), தேர்வு சமயம் இரவில் பள்ளிக்குச்சென்று நண்பர்களுடன் படிப்புடன் அரட்டை அடித்து வரும் வழியில் சைக்கிள் மணியை எல்லோரும் கோரசாக அடித்து வீடு வந்து சேர்ந்த நினைவுகளும், நண்பனுக்கு அடுத்த நாள் அதுவாக வந்த‌ காய்ச்சலுக்கு பள்ளியின் அருகே உள்ள மையத்தாங்கரையை குற்றம் சாட்டியதும் இன்னும் எண்ணற்ற நினைவுகள் உள்ளக்கிடங்கிலிருந்து அகல மறுக்கின்றன அமைதியாய் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு தடவை வகுப்பில் ஜான் சார் சொல்லியது, முதலாம் பானிபட் போர் யார், யாருக்கு இடையில் நடந்தது? என்ற கேள்விக்கு ஒரு மாணவன் எழுதி வைத்த பதில் "முதலாம் பானிபட் போர் ஜெமினி கணேசனுக்கும், சிவாஜி கணேசனுக்கும் நடந்தது" என்று.

மதிப்பிற்குரிய அலியார் சார் வகுப்பில் மாணவர்களின் கவனச்சிதைவை தடுக்க, பக்கத்தில் கொலையே விழுந்தாலும் திரும்பிப்பார்க்க கூடாது. என்று கண்டிப்புடன் சொல்வார்கள்.

ஜான் சார் இயற்றிய 'தங்க ராசு வைத்திருந்த கோழி முட்டையை' என்று தொடங்கும் பாடல் இன்றைய‌ 'Why this கொலவெறி?' பாடல்போல் அன்று பள்ளியில் எல்லோராலும் பேசப்பட்ட‌ பாடல்.

Yasir said...

//முஹாஜிரின் அன்சாரி// அவரின் அழகிய முகம் இன்று மனதில் உள்ளது...ஒரு நாள் நம் பள்ளியின் விளையாட்டு திடலில் தாஜுதீன் சார் எங்களுக்கு உடற்பயிற்ச்சி அளித்துகொண்டு இருக்கம்போது ...இவர் அந்த வழியாக போனார் அப்போது சார் அவரை விளித்து...என்னாடா உன்னை நாய் கடித்துவிட்டதாமே...எந்த நாய்டா என்று சிரியஸாக கேட்க....அது வெள்ளையில பூப்போட்ட நாய் சார் என்று விளையாட்டாக சிரித்து கொண்டு கூறினார் ....அதன் பிறகு சில நாட்களின் இறைவனடி சேர்ந்துவிட்டார்..அல்லாஹ் அவர் பிழைப்பொறுத்து சுவனம் சேர்ப்பானாக

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நாய் கடிபட்ட முஹாஜிரினும், நலம் விசாரித்த தாஜுத்தீன் சாரும் இன்று நம்முடன் இல்லை.

சென்று விட்டார்கள் நமக்கு முன்னே நாம் சேர வேண்டிய இடம்.

அல்லாஹ் காலம் சென்ற அந்த எல்லோரின் பாவங்களையும் மன்னித்து பொருந்திக்கொள்வானாக....ஆமீன்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// நாய் கடித்து இறந்து போன சக மாணவன் முஹாஜிரின் அன்சாரி (கடல்கரைத்தெரு மையவாடி எதிர்புறம் உள்ள வீடு) நினைவுகளும்,//

ஒன்பதாவது வகுப்பில் மாணவர்களுக்கு தலைவனாகவும் மெல்லிய குரலுடைய நண்பன் முஹாஜிரின் அன்சாரி அவனோடு அவன் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்த நினைவுகளை மறக்க முடியாது.அல்லாஹ் அவனுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்..

sabeer.abushahruk said...

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவ நினைவுகளைவிட இனிமையானவை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது சொந்த ஆல்பம் பார்த்த உணர்வு!

நன்றி!

Anonymous said...

// இன்று பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பும் முன்னால் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு பின்னால் உட்கார வேண்டுமா? முன்னால் உட்கார முடியுமா? //

இரண்டு இடத்திலும் உட்கார முடியாது நடுவில் தான் உட்கார முடியும். காதராக்காவிடம் கேட்டேன் அவர் சொன்னார் (ஹாஜி முஹம்மது சார் வகுப்பு மட்டும் இல்லாமல் இருக்காதாம்.அவர் பிரியட் கண்டிப்பாக இருக்குமாம் அவர் பிரியட் இல்லாவிட்டால் வகுப்பை நடக்காதாம்.

// அப்ளிகேஷன் ஒன்னு வாங்கி //

அப்ளிகேஷன் வாங்கி வைத்துவிட்டேன் ரோசம்மா டீச்சர் சொல்லுகிறார்கள் சீக்கிரமாக வந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்து விடுங்கள் என்று.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்து கோர்வைகளின் உணர்வுகளே பறைசாற்றுகிறது !

எங்கள் பள்ளியை இன்னும் என்றும் நேசிக்கிறோம் என்பதனை !

இரண்டு சாந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் நிறையபேரைத் தெரியும் என்று சொல்லி பெருமைப்படுகிறாயே ஏன் உன் பெயர் இடம் பெறவில்லைன்னு கேட்டாங்களே ஒரு கேள்வி !

என்னத்த சொல்றது நான் !?

நல்லாத்தானே படிச்சேன் ஆனா என்னைவிட வாத்தியாருங்க நல்லா படிச்சிருந்ததால என்னால அந்த அளவுக்கு மார்க் எடுக்க முடியலை...

இதனை நான் சொல்லவில்லைங்க !

MSM(n) எங்கிருந்தப்பா இவ்வ்வ்வ்வ்ளோ பெரிய லிஸ்ட்டு ! மாஷா அல்லாஹ் !

நினைவுக்குள் வர மல்லுக்கட்டிய ஆசிரியர்களையெல்லாம் இழுத்துக் கொண்டு வந்து இங்கே பாடம் நடத்திட்டீங்க !

தம்பி யாசிர்... இரண்டு முதல் இடம் எப்படி !? (முதல் இடம்னா ஒன்னுதானே !?)

அதேதான் தம்பி ஷபாத்துக்கும் கேட்கிறேன்...

படங்கள் பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

Shameed said...

படங்கள் அனைத்தும் உள் உணர்வுகளை தட்டி எழுப்பி பள்ளி கூடத்திற்கு அழைத்து சென்று விட்டது நல்லதொரு மலரும் நினைவு கட்டுரை

Unknown said...

நான் பயின்ற காலங்களில் இருந்த கட்டிடங்களெல்லாம் இடித்து கட்டப் பட்டிருக்க 10-ஆம் வகுப்பு பயின்ற கட்டிடம் மட்டும் நினைவு மன்டபம் போல் இன்றும் காட்ட்சியளிக்கிறது...

மறக்க முடியவில்லை....

Anonymous said...

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் நம் அதிரை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாக இருந்தும் அப்போது இங்கு உயர்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப் படவில்லை. அதனால் அருகிலுள்ள சிறிய கிராமம் இராஜாமடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நம் முன்னோர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 10 கி.மீ. பயணம் செய்து படித்து வந்தனர்.

அந்த கல்வித் தாகத்தை போக்க நாமெல்லாம் கல்வி பயிலவே நம் கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி SMS ஷேக் ஜலாலுதீன் அவர்கள், எம். கே. என். மதரசா அறக்கட்டளை ஆதரவில் 25/06/1949 இல் நாம் இப்போது காணும் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியை ஆரம்பித்தார்கள். இப்பள்ளியில் 1949 ல் VI Std ல் சேர்ந்தவர், 1955 ல் S S L C முடித்ததும், கல்லூரியில் சேர்ந்து படிக்க ஏதுவாக, 05/07/1955 அன்று காதிர் முகைதீன் கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது.

நாமெல்லாம் எளிய முறையில் கல்வி பயில நமக்கு உதவிய நம் கல்வித் தந்தை ஹாஜி S M S ஷேக் ஜலாலுதீன் அவர்களையும், எம்.கே.என். அறக்கட்டளை நிறுவனர்களாகிய, வள்ளல்கள் ஹாஜி எம்.கே.என். காதிர் முகைதீன் மரைக்காயர், எம்.கே.என். அஹ்மது தம்பி மரைக்காயர், எம்.கே.என். நெய்னா முஹம்மது லெப்பை மரைக்காயர், ஹாஜி எம்.கே.என். ஷேக் சலாத் லெப்பை மரைக்காயர் அவர்களையும் என்றென்றும் மறவாமல் எப்போதும் நம் துஆ வில் சேர்த்துக் கொள்வோமாக.

நூர் முஹம்மது
முன்னால் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி (1969 - 75)
காதிர் முகைதீன் கல்லூரி (1975 - 79)

Anonymous said...

காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் (1969 - 75) ல் நான் படித்த போது, என் நெஞ்சத்து நீங்காத நினைவுகள் பல உள. இருப்பினும் என் நெஞ்சம் நிறைந்த ஆசிரியப் பெருமக்கள் மூப்பு பணி பட்டியலை (List of Seniority) இங்கு தருகின்றேன்.

உயர்நிலை ஆசிரியர்கள்
V M அகமது இபுராஹீம், B.A., B.Ed அவர்கள் (தலைமை ஆசிரியர்)
N தர்மலிங்கம் B.Sc., B.Ed அவர்கள் (அறிவியல்)
M முஹம்மது அலியார் B.A., B.Ed அவர்கள் (வரலாறு)
S K M ஹாஜா முஹைதீன் B.Sc., B.T அவர்கள் (கணிதம்)
K உலகநாதன் B.Sc., B.T அவர்கள் (கணிதம்)
M லியாகத் அலி B.Sc., B.Ed அவர்கள் (அறிவியல்)
புலவர் தி. இராமதாசு அவர்கள் (தமிழ்)
புலவர் சி. சண்முகம் அவர்கள் (தமிழ்)
புலவர் இரா. தாமஸ் அவர்கள் (தமிழ்)
வா. அப்துல் காதர் B.A., B.Ed அவர்கள் (வரலாறு)
K லியாகத் அலி B.A., B.P.Ed அவர்கள் (உடற்கல்வி)

இடைநிலை ஆசிரியர்கள்
V நாகரெத்தினம் அவர்கள்
K நாடிமுத்து அவர்கள்
K ரெங்கராஜன் அவர்கள்
S P அருணாசலம் அவர்கள் (நெசவு)
M முஹம்மது ஹனிபா அவர்கள்
M A தாஜுதீன் அவர்கள் - PET
K ஷேக் தாவூத் அவர்கள்
நூர்ஜஹான் அவர்கள்
வடிவழகி அவர்கள்
காதர் சுல்தான் அவர்கள் (ஓவியம்)

1975 ல் நான் பள்ளியை விட்டு வெளியேறிய போதுள்ள ஆசியர்கள் பட்டியல்.

நூர் முஹம்மது
முன்னால் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி (1969 - 75)

ZAKIR HUSSAIN said...

To Brother Noor Mohamed & students of K.M.Hr.Sec.School,

நான் படிக்கும் போது எனக்கு கல்வியறிவு தந்த [ அதே லிஸ்ட்தான் ] ஆசிரியர்களின் பெயரை படித்ததுமே ரத்தம் இளமையாகி விட்டது மாதிரி ஒரு உணர்வு. நான் ஹையர் செக்கன்டரி முடித்தது 1981.

விளையாட்டுத்திடல் 4 முறை சேம்பியன்சிப் வாங்கித்தந்த இளமையின் நினைவுகளின் தடம்

ZAEISA said...

இப்பள்ளி முன்பு கீற்றுக்கொட்டகையாக இருந்தபோது என்படிப்பு இங்கு தொடங்கியது.என் வகுப்பு சகமாணவன் ஒருவன் வாரத்தில் எப்படியும் ஒருநாள் லீவு போட்டுவிடுவான்.அவன் வராதன்று நீரில் தாவரங்கள் சுவாசம்பற்றிபாடம்
நடந்தது.அடுத்தநாள் வந்த அவனிடம் நேற்று நடந்த பாடத்தின் செய்முறை பற்றி கேட்டதும் தினரியவனாக எழுந்துநிற்கும்போது பக்கத்தில் இருந்தநக்கல் பேர்வழி நான் நைசாக சொல்லுகிறேன் ,அப்படியே சொலஎன்று சொல்லிக்கொடுத்தான்.ஒரு ஜாடியைஎடுத்துகொன்டு...அவனும் ஒரு ஜாடியை எடுத்துக்கொன்ன்டு என்று ஆரம்பித்தான்.பின் இவன் நூறு எலுமிச்சைபழத்தைப்போட்டு என்றவுடன் அவனும் நூறு எலுமிச்சைப்பழம் என்றவுடன்,உங்கவாப்பா என்ன ஊருவா வியாபாரமான்னு கேட்டுவிட்டு ரெண்டு பேரையும் அலியார்சார் ஊறுகாய் போட்டதை மறக்க இயலாது.

அப்துல்மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
அப்துல்மாலிக் said...

நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்து இன்று இயற்கை எய்திய எத்தனையோ வாத்தியார்கள் நம்முடன் இல்லை, அனைவரின் ஆகிரத்துக்காகவும் துஆ செய்வோம்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

க.மு. பள்ளியில் பயிலா விட்டாலும், புகைப்படங்களையும் கருத்துக்களையும் பார்க்கும் போது நான் இந்த பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்க உணர்வு எழுகிறது.

தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் நமக்கு தெரிந்தவர்கள் இருக்கும் போது உண்மையில் சந்தோசம் அதிகமே..

புகைப்படங்களை பகிர்ந்தளித்த சகோதரர்கள் நிஜாம், அபூபக்கர் ஆகியோருக்கு மிக்க நன்றி.

ZAKIR HUSSAIN said...

//இவன் என்றென்றும் என் நெஞ்சில் இருப்பவன், எப்பவும் மைனர் மாதிரி உடை உடுத்திக்கொண்டு வருவான், அதனாலேயே அவன் எப்பவும் கிளாஸ் லீடராக வலம் வந்தான். ஒரு தடவை அவன் வீட்டுக்கு போனபிறகுதான் தெரிந்தது ஒரு வேளை சோற்றிற்கே திண்டாடும் குடும்பம் என்று. //

என் பிரியத்துக்குறிய தம்பி அப்துல் மாலிக்,

இறந்து போன மாணவனைப்பற்றி எனக்கு தெரியாது. அவரது குடும்ப சூழ்நிலையயை நீங்கள் எழுதியதுபோல் இல்லாமல் "ஒரு சுமாரான வசதி உள்ள' குடும்பம்' என எழுதியிருக்களாம். நீங்கள் வேண்டுமென்று இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் என தெரியும். இருந்தாலும் உங்கள் நிலையயை விளக்கிவிட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் படித்தால் மனம் நோகாமல் இருக்கும். இது நான் அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்களின் வயதைக்கடந்து வந்த உங்கள் அண்ணனாக எழுதுகிறேன்.

Anonymous said...

/ நாய் கடித்து இறந்து போன சக மாணவன் முஹாஜிரின் அன்சாரி (கடல்கரைத்தெரு மையவாடி எதிர்புறம் உள்ள வீடு) நினைவுகளும்,//

இவன் என்றென்றும் என் நெஞ்சில் இருப்பவன், எப்பவும் மைனர் மாதிரி உடை உடுத்திக்கொண்டு வருவான், அதனாலேயே அவன் எப்பவும் கிளாஸ் லீடராக வலம் வந்தான். ஒரு தடவை அவன் வீட்டுக்கு போனபிறகுதான் தெரிந்தது ஏழ்மையான குடும்பம் என்று. அவனின் இழப்பு அக்குடும்பத்துக்கு பேரிழப்புதான்.அல்லாஹ் அவனுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்..

சுட்டியமைக்கு - ஜாஹிர் காக்கா அவர்களுக்கு நன்றி !

-அப்துல் மாலிக்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் வாழ்நாட்களிலேயே வாழ்ந்து(அகால மரணத்தாலோ அல்லது நோய்நொடி, இயற்கை மரணத்தாலோ) மறைந்துபோன எத்தனையோ குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெருவாசிகள், ஊர்வாசிகள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என நமக்கு முன்னே உலகை விட்டு சென்றுவிட்ட அனைவர்களையும் நாம் மரணித்த பின் நாளை மறுமையில் எல்லோரையும் ஓரிடத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் இறைவனால் நமக்கு வழங்கப்படுமோ? இல்லையோ? தெரியவில்லை. அப்ப‌டி வ‌ழ‌ங்க‌ப்பட்டால் நெஞ்ச‌ம் நெகிழும் அந்த‌ ச‌ந்திப்பு எப்ப‌டி இருக்கும் என சாதாரன மனிதனாக க‌ற்ப‌னை கூட‌ செய்து பார்க்க‌ இய‌ல‌வில்லை.

கார‌ண‌ம் நான் பிற‌க்கும் முன்னே என‌க்கு ஒரு மூத்த‌ ச‌கோத‌ர‌னும், ச‌கோத‌ரியும் பிற‌ந்து இற‌ந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளை அங்கு காண‌ ஆசைப்ப‌டுகிறேன். அவ‌ர்க‌ளை எப்ப‌டி அடையாள‌ம் க‌ண்டு கொள்வேன் என‌ தெரிய‌வில்லை. எல்லாம் இறைவன் நாடினால் ம‌ட்டுமே சாத்திய‌ப்ப‌ட‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌ன‌.

உல‌க‌ வ‌றுமையும், நல்ல வ‌ச‌தி வாய்ப்பும் நிர‌ந்த‌ர‌மில்லை.

அப்துல்மாலிக் said...

மனிதனாக பிறந்தவன் தவறு செய்யாமல் இருப்பதில்லை, தவறை சுட்டியமைக்கு நன்றி ஜாகீர் காக்கா, அப்படி எழுதியதிற்காக வருத்தப்படுகிறேன். நாங்கள் இருவரும் 5 வருடம் ஒன்றாக படித்தோம், அடுத்தடுத்து ஒரே பெஞ்சில் உக்காந்திருப்போம், இன்றும் அவன் முகமும், உடை நடை பாவனைகளும் மனதைவிட்டு நீங்கா

ZAKIR HUSSAIN said...

To Brother Abdul Malik,

Thanx for your immediate attention on this.
நான் சுட்டியதற்காக நான் தவறு செய்யாதவன் என்றும் சொல்ல முடியாது.நானும் தவறுகள் செய்திருக்கிறேன். ஒருவருக்கு ஒருவர் இங்கு முன்னேர உதவி செய்துகொள்ளத்தான் வலைப்பூக்கள்.

mohamed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

என்னுடைய அறிவியல் ஆசிரியர் லியாகத் அலி சார் நகை சுவையாக பாடம் நடத்துவார் அப்படி ஒருநாள் நடத்தும் போது ஒரு ஆட்டுக்குட்டி கத்திகொண்டே இருந்தது அவருக்கு பாடம் நடத்த முடியவில்லை அந்த ஆட்டுக்குட்டியின் சத்தம் அவருக்கு கோபத்தை அதிகபடுத்தியது அவர் பொறுமை இழந்து போ போ உன் அம்மா யவனயாவது (ஆண் ஆட்டுக்குட்டியை) தேடி போயிருப்பா என்று நகைசுவையாக சொன்னது இன்றும் மனதில் நிக்கிறது

அதேபோல் எங்கள் தமிழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய தாமஸ் சார் அவர்கள் நீங்க எல்லாரும் செடியன் குலத்துக்கு குளிக்க போரீங்கண்டு நானும் செடியன் குலத்துக்கு போனேன் அங்கே போய் பாத்தா ஒருத்தன் மேல தீட்டுறான் பக்கத்துல ஒருத்தன் கீழ தீட்டுறான் என்று சொன்னது வகுப்பு அரை எப்படி இருந்துருக்கு நினைத்து பாருங்கள் இந்த சம்பவகளை இன்றும் மறக்க முடியவில்லை

ஜே. முஹம்மது புஹாரி தமாம் .

Anonymous said...

அன்பு நண்பர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

படங்களைப் பார்த்ததும் இதயத்திலும் கண்களிலும் ஒரு இனம் புரியாத கசிவு. பின்னூட்டங்களை படிக்கும்போது நமது பள்ளி மேல் நிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட பிறகு படித்தவர்கள்தான் எழுதி இருந்தீர்கள்.

நாங்கள் உயர்நிலைப்பள்ளியாக இருந்தபோது படித்தவர்கள். ஓரளவு கட்டிடங்கள் கட்டப்பட்டபோது படித்தவர்கள் அதிகமாக தற்போது இளைஞர்களாக இருந்து கருத்து இட்டு இருக்கீறீர்கள். நாங்கள் படித்தபோது அலுவலகமும் நூல் நிலையமும் இருந்த பகுதி தவிர அனைத்தும் தென்னம் கீற்று வேயப்பட்டவை. இயற்கை சூழலில் இதமான காற்றும் , இனிமையான ஆசிரியர் குழாமும் , அன்பு நிறை நண்பர் கூட்டமும் சூழ்ந்திருக்க படித்தோம்.

உங்கள் ஆசிரியர் பட்டியலில் ஹனீபா சார், ரெங்க ராஜன் சார், நாடிமுத்து சார், நாகரத்தினம் சார் . உலகநாதன் சார், வாவன்னா சார், ஹாஜா முகைதீன் சார், ராமதாஸ் சார் , தாமஸ் சார், தாஜுதீன் சார் , அகமது இபுராகிம் சார் ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்கள் மட்டுமே நாங்கள் எஸ் எஸ் எல் சி முடிக்கும் வரை அதாவது பதினொன்றாம் வகுப்பு வரை எங்களுடனும் அதன்பிறகு உங்களுடனும் தொடர்ந்து இருந்து இருககிறார்கள்.

இன்னும் எங்கள் காலத்தில் நாயுடு , பிச்சுமணி ஐயர், பிச்சை கணபதி, ராமச்சந்திரன் , அப்துல் கரீம், பசல் முகமது, ரெஜாக் சார், சிங்காரம் பிள்ளை, ஹபீப் முகமது, பீட்டர், கலியாண சுந்தரம், ஹாஜா ஷரீப், புவியரசு, காதர் இப்ராகிம் ஆகிய ஆசிரிய பெரும்தகைகளும் இருந்தார்கள். அலியார் சார் அவர்கள் நாங்கள் வெளியேறிய வருடத்தின் அடுத்த கல்வியாண்டில் பணிக்கு வந்தார்கள். நாங்கள் படிக்கும்போது முதலில் ஜைனுல் ஆபிதீன் என்பவரும், பின்னர் பிச்சுமணி அய்யரும் தலைமை ஆசிரியராக இருந்தார்கள்.

நாங்கள் படிக்கும்போது பெண்களுக்கு தனியே உயர்நிலைப்பள்ளி தொடங்கப்படவில்லை. ஆகவே பள்ளி இருபாலரும் படிக்கும் பள்ளியாகவே இருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் ஏ கிளாசில் மட்டும் மாணவிகள் இருப்பார்கள். அதனால் ஏ கிளாசுக்கு சோழநாடு என்றும் மற்ற கிளாசுகள் சஹாரா என்றும் அழைக்கப்படும். துடியாக உள்ள மாணவர்களை ஏ இலிருந்து பி க்கு மாற்றுவார்கள். அதிலிருந்து அவர்கள் ஏதோ சேட்டை செய்திருப்பார்கள் என்று உணரலாம்.

ஒவ்வொரு ஆசிரியர் குணங்களைப்பற்றி எழுதவேண்டுமானால் ஒரு தொடர் எழுதவேண்டி வரும் . ஆனாலும் மறக்கவே முடியாத சில செய்திகளை அசைபோட்டுப்பார்க்க விரும்புகிறேன். ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சிக்காக.

திரு.ரெங்கராஜன் சார் அவர்களை நினக்கும்போது இதயம் கனக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவர்தான் வகுப்பு ஆசிரியர். அறிவியலும் ஆங்கிலமும் நடத்துவார். இதயத்தை பற்றிய பாடம் நடத்துபோது அவரது கைவிரல்களை மடக்கி, ஒவ்வொரு மனிதருக்கும் இதயம் அவரவர் கைப்பிடி அளவு இருக்கும் என்று அன்று சொன்னது இன்றும் எனது நினைவுகளில் பதிந்து இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான வேளைகளில் நம்மைப்பார்த்து “ என்ன ஆயின” என்று கேட்பார். ஒருநாள் புதுத்தெருவைச்சேர்ந்த எனது வகுப்புத்தோழர் மதியம் பள்ளிக்கு தாமதமாக மூன்று மணிக்கு வந்தார். தாமதத்துக்கு காரணம் கேட்டபோது அவர் சொன்னது” சார் இன்னிக்கு வீட்டிலே வாழை மீன் சார். உம்மா ரெண்டு துண்டு பொரிச்சு வச்சிடுச்சு. முள் எடுத்து திங்க நேரம் ஆயிடுச்சு சார்” என்றார். இன்று அவர் ஒரு செல்வந்தராக இருக்கிறார்.

தொடரும்... 1/2

Anonymous said...

தொடர்கிறது... 2/2

திரு. சிங்காரம் பிள்ளை ஒரு முது பெரும் தமிழ் ஆசிரியர். மிகவும் கண்டிப்பு. அவரது குறை அவரது உடை . ஒரு தடவை போட்ட சட்டையை மாதக்கணக்கில் மாற்றமாட்டார். இதனால் என்ன செய்வோம் என்றால் சிங்காரம் பிள்ளை சட்டை மாற்றிய தேதி என்று அவரவர் நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துக்கொள்வோம். ஒருமுறை அவர் மனோன்மணீயம் செய்யுளில் “ ஓஹோ நான்கூழ் புழுவே உன் பாடோ ஓவாப்ப்பாடே” என்ற வரிகளை பாடம் நடத்தும்போது ஆலடித்தெருவைச்சேர்ந்த ஒரு தோழர் பேசிக்கொண்டு இருந்தார். சிங்காரம் பிள்ளை அவரை எழச்சொல்லி அந்த வரிகளை படிக்கச்சொன்னார். அதன்படி படித்த நண்பர் “ ஒவாப்ப்பாடே” என்பதை பிரித்து “ ஓ! வாப்பாடே” என்று படித்தார். வகுப்பில் ஒரே சிரிப்பு. என்னடா வாப்பாடே சின்னவாப்பாடே என்று சொல்லி அதை மறக்க முடியவில்லை.

அதேபோல் எங்களுக்கு முன்பு படித்தவர்கள் நமது பள்ளியில் ஒரு அரையாண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதன் பதில் அதற்கு பொருத்தமாக சுவைபட எழுதப்பட்டதாகவும் சொல்வார்கள்.

கேட்கப்பட்ட கேள்வி “ மண்புழு எங்கே வசிக்கும்?” எழுதப்பட்ட பதில் “ மண்புழு மாட மாளிகையிலும் கூட கூட கோபுரத்திலுமா வசிக்கும்? மண்புழு மண்ணில்தானே வசிக்கும்” என்று பதில் எழுதியதாக சொல்வார்கள். மண்ணுக்குரிய நகைச்சுவை.

எங்கள் வகுப்பில் பத்தாவது படிக்கும்போது புஹாரி அன்று ஒரு நண்பர் இருந்தார். புத்திசாலி ஆனால் சுறுசுறுப்பு இல்லாதவர். தேர்வுக்கு படிக்க மாட்டார். ஆனால் தேர்வு பக்கம் பக்கமாக கவித்துவமாக எழுதுவார். இன்று அவர் நல்ல நிலையில் இருப்பதாக கேள்விப்படுகிறேன். பறவை பறக்கும் விதத்தை விவரி என்று கேட்டிருந்தார்கள். நண்பர் பதில் எழுதி இருந்தார். பறவை பறக்கும்போது போர்க்காலங்களில் விமானங்கள் பறப்பது போலவும் , அவை எச்சிலை போடும்போது விமானங்கள் குண்டு போடுவதுபோலவும் இருக்கும் என்று எழுதினார். அதே நண்பர் ஏழாம வகுப்பில் எழுதியது இன்னும் வேடிக்கை. தென்னை மரம அல்லது பசு மாடு இரண்டில் ஒன்று தேர்வுக்கு கட்டாயமாக கட்டுரை கேள்வியில் வரும் இரண்டையும் படித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர் அபிராமம் ரெஜாக் சார் கூறி இருந்தார். நண்பர் புஹாரி பசு மாட்டைப்ப்றி மட்டும் படித்து விட்டார். ஆனால் தேர்வில் தென்னை மரம கேள்வியாக வந்தது. நண்பர் தயங்கவில்லை . தேர்வுத்தாளில் தலைப்பை தென்னை மரம என்று எழுதிவிட்டு கீழே பசுமாட்டைபற்றி படித்ததை கட்டுரையாக எழுதினார். ஆனாலும் கடைசியில் ஒரு வரி போட்டார் இந்த பசு மட்டை தென்னை மரத்தில் கட்டிவைக்கலாம் பசுவின் சாணத்தை போட்டால் மரம நன்றாக வளரும் என்று. அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் . நாலு எபிசொட் வரும் .

நாங்கள் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டில் நமது பள்ளி நண்பர் ஜெயிநுல்ஆபிதீன் தலைமையில் இறுதிப்போட்டியில் வென்றது. அந்த வெற்றி கோப்பையை மாறி மாறி தூக்கிகொண்டு வீரர்கள் ஷாகுல் ஹமீது, சிராஜுதீன், அஹமது ஹாஜா ( மற்றவர்கள் நினைவில் இல்லை) மற்றும் நமது பள்ளி மாணவர்களும் கூட்டமாக கோஷமிட்டுக்கொண்டு பட்டுக்கோட்டையிலிருந்து ஓடியே வந்தது ஒரு சரித்திர நிகழ்வு. அந்த தொடர் விளையாட்டில்தான் எனது நண்பர் தரகர் தெரு பரக்கத் அலி ( இன்று AAMF பொருளாளர்) அவர்கள் கை கோல் அடிக்கும் முயற்சியில் கீழே தள்ளப்பட்டு விழுந்து கை ஒடிந்தது.

இப்படி எல்லாம் இனிய நினைவுகளை அசை போட வைத்த அன்பு நண்பர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

வஸ்ஸலாம்.

இபுராகிம் அன்சாரி.

அப்துல்மாலிக் said...

//“ மண்புழு எங்கே வசிக்கும்?” எழுதப்பட்ட பதில் “ மண்புழு மாட மாளிகையிலும் கூட கூட கோபுரத்திலுமா வசிக்கும்? மண்புழு மண்ணில்தானே வசிக்கும்” என்று பதில் எழுதியதாக சொல்வார்கள். //

இதை எழுதியவர் அனைவராலும் மெம்பர் (12 வது வார்டு நெசவுத்தெரு) முஸ்தபா என்று அனைவராலும் அழைக்கப்படு ஜனாப் மர்ஹூம் எஸ். எம். முஸ்தபா, இவர்கள் ராஜாமடம் பள்ளியில் படித்தார்களாம், அப்போ அந்தப்பள்ளித்தேர்வில் இப்படி தாம்தான் எழுதியதாக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பார்கள்

A.J. Thajudeen said...

ஸ்கூல் போட்டோ எல்லாம் போட்டுட்டு பழைய நினைப்பை கிளறி வுட்டுட்டியே, ஆனா நம்மளை எல்லாம் வெளுத்துவாங்குன பச்ச கம்பு மரத்தையும் போட்டோ எடுத்து போடுங்கலம்பா!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு