Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோல்விகள் காட்டிடும் ஆயிரம் வழிகள் ! - அனுபவம் பேசுகிறது 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2012 | , , , , ,


என் தகப்பனார் ஒரு முறை எங்கோ நடந்த ஒரு நேர்முகத்தேர்வு பற்றி எனக்கு வாழ்க்கைப்பாடமாக சொல்லியதுண்டு. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக நேர்முகத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ள பல பட்டதாரிகளும், அனுபவசாலிகளும் வந்திருந்தனர். நேர்முக தேர்வில் அதை நடத்தும் அதிகாரி ஒவ்வொருவராக நேர்காணல் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு வாலிபனிடம் நேர்காணல் செய்யும் சமயம் அவர் நன்கு படித்து பட்டங்கள் பல பெற்றும், அவரின் உடை, நடை, உரையாடல் முறை எல்லாம் மிக நேர்த்தியாகவும், மிடுக்காகவும் இருந்தது. அந்த வாலிபர் கலந்து கொண்ட எல்லாத்தேர்வுகளிலும், போட்டிகளிலும் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருந்தார். அதற்கான சான்றிதழ்களை முறையே அடுக்கி வைத்திருந்தார். எல்லாவற்றையும் நன்கு கவனித்த பின் அந்த அதிகாரி அந்த வாலிபனிடம் கேட்டார் "தாம் வாழ்வில் தனிப்பட்ட முறையில் அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் எதிலேனும் தோல்வியை எப்பொழுதேனும் சந்தித்ததுண்டா?" என்று. உடனே அந்த வாலிபன் இல்லை ஒருபோதும் நான் தோல்வியை சந்தித்ததே இல்லை என்று உற்சாகத்துடன் கம்பீரமாக பதில் சொன்னான்.

அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அந்த அதிகாரி உடனே அந்த நேர்முகத்தேர்வில் அவனை தகுதியிழப்பு செய்து மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் அறையை விட்டு வெளியேற வேண்டிக்கொண்டார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபன் வெளியேறுமுன் காரணமேதும் அறியாதவனாய் "ஐயா, தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயக்கமின்றி பதில் சொன்னேனே, வேண்டிய ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தேனே என்னை தாங்கள் தகுதியிழப்பு செய்ததற்கு காரணம் என்னவென அறிந்து கொள்ளலாமா?" என்றான்.

உடனே அந்த அதிகாரி அந்த வாலிபனை நோக்கி 'மன்னிக்கவும், நீ சொல்வது எல்லாம் முற்றிலும் சரியே. ஆனால் நீ வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்காதவனாக இருக்கின்றாய். எனவே காலச்சூழ்நிலையில் வரும் காலத்தில் நம் நிறுவனம் ஏதேனும் இடரில் சிக்குண்டு தோல்வியை (Rescue Management) சந்திக்க நேரிட்டால் அதிலிருந்து நம் நிறுவனத்தை காப்பாற்ற உன்னால் எதுவும் செய்ய இயலாது. காரணம் தோல்வியை எதிர்கொண்ட அனுபவம் உனக்கில்லை. ஆதலால் தோல்வியையும் வாழ்வில் பலமுறை சந்தித்து அதை எதிர்கொண்டு மீண்டு வந்த வேறொரு நபரே இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஆவார் என்று அமைதியாக பதில் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்ததாக என் தகப்பனார் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

என் தகப்பனார் இதன் மூலம் எனக்கு நடத்திய பாடம் என்னவெனில் "வாழ்வில் வெறும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு வாழாதே. தோல்விகள் பல வந்தாலும் அதனால் துவண்டு விடாமல் அதை துணிவுடன் எதிர்கொண்டு தலை நிமிர்ந்து வாழ கற்றுக்கொள்".

மற்றும் அமெரிக்கா செல்ல முடியவில்லையே? ஆஸ்திரேலியா செல்ல இயலவில்லையே? இங்கிலாந்து சென்று காசு பணம் அதிகம் சம்பாதித்து ஊரில், சென்னையில் கட்டிடங்கள் வாங்கிப்போட முடியவில்லையே? நல்ல காரில் பவனி வர முடியவில்லையே? என்றெல்லாம் ஏக்கத்துடன் வாழ்க்கையை ஓட்டாமல் கடன் ஏதும் இல்லாமல் கடைசி வரை வாழ்ந்து விட்டு போக உள்ளத்தில் உறுதி கொள் என்று சொல்வார்கள்.

நம் அனைவருக்கும் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத நல்ல பல அனுபவங்களையும், சில சங்கடங்களையும் தனிக்கட்டுரை மூலம் அடிக்கடி இங்கு பகிர்ந்து கொண்டால் படிக்கும் பலருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் நெளிவு,சுளிவான வாழ்க்கையை நேர்த்தியாக்கி எளிதாக ஓட்ட கற்றுக்கொள்ளலாமல்லவா?

இன்ஷா அல்லாஹ்...

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

21 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நெய்னா வின் புரட்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

//கடன் ஏதும் இல்லாமல் கடைசி வரை வாழ்;. தோல்விகள் பல வந்தாலும் அதனால் துவண்டு விடாமல் அதை துணிவுடன் எதிர்கொள்.//
மாமா வின் அருமையான அறிவுரை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்! தந்தையின் அழகிய வாழ்க்கைப் பாட அறிவுரை!

/// கடன் ஏதும் இல்லாமல் கடைசி வரை வாழ்ந்து விட்டு போக உள்ளத்தில் உறுதி கொள் என்று சொல்வார்கள். ///

கடன்தான் மனிதனை பலவழிகளிலும் பொய் என்ற வலையில் தள்ள வைக்கிறது. சில சமயங்களில் பிற சமுதாயத்தில் தற்கொலைக்கும் வழி செய்கிறது.

அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், சுய மேம்பாட்டுக் குழு என்று எல்லோரும் சேர்ந்து மக்களை கடன் என்னும் படு குழியில் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விழித்துக்கொள்ளவில்லையானால் மரணம் வரை மீள முடியாது.

Noor Mohamed said...

அனுபவங்களையும் அறிவுரைகளையும் ஆற்றல்களையும் அடுக்கடுக்காய் அவ்வப்போது ஆர்வத்துடன் அழகு ஆக்கங்களாய் அள்ளித்தரும் தம்பி MSM NM அவர்களே, உங்கள் ஆக்கங்களை காணும் நான் உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை என்னிடத்தில். தொடரட்டும் உங்கள் பணி. மலரட்டும் மக்கள் வாழ்வு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னா நூர் முஹம்மதாக்கா இப்புடி சொல்லிட்டியெ.....

எதோ நம்ம வாழ்க்கையிலெ நடந்த நல்ல பல சம்பவங்களையும், சில சங்கடமான நிகழ்வுகளையும், என்றும் இனிக்கும் மலரும் நினைவுகளையும் எனக்கே உரித்தான பாங்கில் என்னால் ஞாபகத்துக்கு வருவதை இங்கே அவ்வப்பொழுது கிறுக்கித்தள்ளி வருகிறேன். அதையும் நம் மக்கள் படித்து விட்டு வாழ்த்தும் வாழ்த்துக்களும், பாராட்டும் பாராட்டுக்களும் அந்த வல்லோனுக்கே போய்ச்சேரும். காரணம், சிறுவயதிலிருந்து மூளை என்னும் ஹார்ட் டிஸ்க்கிற்குள் எந்த வைரஸும் உள்ளே நுழைந்து இதுவரை சேமித்து வைத்ததை அழித்து நாசம் செய்து விடாமல் இன்றும் பாதுகாத்து வரும் அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், பெருமைகளும் போய்ச்சேரும்.

உங்களுடைய உற்சாக வார்த்தைகள் நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் இட்டு இன்னும் சுத்திக‌ரிப்பு செய்த‌ க‌ணிப்பொறி போல் உள்ள‌த்திற்கு உற்சாக‌மாக‌ உள்ள‌து காக்கா.

நம் ச‌ந்தோஷ‌ங்க‌ள் தொட‌ர‌ட்டும் இன்ஷா அல்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல அறிவுரை வாழ்த்துக்கள். சைக்கிளை தள்ளுவதில் நல்ல முயற்ச்சியும்

// கடன் ஏதும் இல்லாமல் கடைசி வரை வாழ் //

ஆமா இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் கடன் இருக்காமே!

sabeer.abushahruk said...

அனுபவமே மிகச்சிறந்த ஆசான். பாடம் மிகவும் ஆக்கபூர்வமாக நடந்து வருகிறது. இவை கிறுக்கல்கள் அல்ல நெய்னா, போதனைகள்.

நன்றியும் வாழ்த்துகளும்!

அந்த நேர்காணலில் ஒரு சின்ன நெருடலும் உண்டு! எல்லாவற்றிலும் வென்றவன் தோல்வி நேராமல் பார்த்துக்கொள்வானே?

தவிர, தோற்றவனை ஊக்கப்படுத்த அந்த வேலை அவ்வாறு கொடுக்கப்பட்டால் கடுமையாக உழைத்து எல்லாவற்றிலும் வென்றவனுக்கு எப்படி ஞாயம் கற்பிப்பது?

இருந்தாலும், பெரியவங்க சொன்னதில் நிச்சயம் உள்ளர்த்தம் இருக்கவே செய்யும்.

ZAKIR HUSSAIN said...

//எல்லாவற்றிலும் வென்றவன் தோல்வி நேராமல் பார்த்துக்கொள்வானே? //

எல்லாவற்றிலும் வென்றவனுக்கும் ஏதாவது வீக்னஸ் இருக்கும். அதை வைத்து ஊழைக்கும்பிடு போடுபவர்கள் கவிழ்த்து விடவும் சான்ஸ் இருக்கிறது

//தோற்றவனை ஊக்கப்படுத்த அந்த வேலை அவ்வாறு கொடுக்கப்பட்டால் கடுமையாக உழைத்து எல்லாவற்றிலும் வென்றவனுக்கு எப்படி ஞாயம் கற்பிப்பது?//


ஜெயித்துக்கொண்டிருக்கும்போது தோற்க நேரிட்டால் எப்படி மறுபடியும் ஜெயித்துவருவது என்று...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///தவிர, தோற்றவனை ஊக்கப்படுத்த அந்த வேலை அவ்வாறு கொடுக்கப்பட்டால் கடுமையாக உழைத்து எல்லாவற்றிலும் வென்றவனுக்கு எப்படி ஞாயம் கற்பிப்பது?///

படிகட்டுகள் கட்டும் காக்கா சொல்லிட்டதால நானும் அடுத்த படி எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்கேன்...

அது சரி கவுத்துட்டாய்ங்க ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்னா ?

அதெல்லாம் இருக்கட்டும்... ஆஃபீஸில போயி என்ன கிழிக்கிறீங்கன்னு ஏன்னு வூட்டுல கேக்கிறாங்க !?

sabeer.abushahruk said...

//அதெல்லாம் இருக்கட்டும்... ஆஃபீஸில போயி என்ன கிழிக்கிறீங்கன்னு ஏன்னு வூட்டுல கேக்கிறாங்க !?//

இதானே வேணாங்கிறது. கொஸ்டின் பேப்பர் அவுட் பண்றீங்களே?

zakir://
//எல்லாவற்றிலும் வென்றவனுக்கும் ஏதாவது வீக்னஸ் இருக்கும். // எனில் அவன் எல்லாவற்றிலும்... ஐ மீன்...எல்லாவற்றிலும் வென்றவனல்ல அம்பி.அந்த வீக்னஸில் தோற்றவனே

//ஜெயித்துக்கொண்டிருக்கும்போது தோற்க நேரிட்டால் எப்படி மறுபடியும் ஜெயித்துவருவது என்று//
...னா, தோல்வி என்பது ஒருவன் தன் முயற்சியில் தோற்பதுங்னா! எல்லாவற்றிலும் வென்றவனுக்கு அவனுக்கான வேலையை தகுதி அடிப்படையில் கொடுக்காதது அவனுக்கு எதிரான த்ரோகம் நண்பா. ஒருவனுக்கு தோல்வியை கற்றுக்கொடுக்க யாருக்கும் உரிமையில்லைங்னா. 

தவிர, இங்கு தோல்வி மட்டும்தான் திணிக்கப்படுகிறது. மீண்டு வருவத கற்றுக்கொடுக்கப்படவில்லை.

இதை அப்படியே எடுத்துக்கொள்வது அபாயகரமானது. அப்புறம் எல்லோரும் ஃபயிலாகித்தான் பாஸாவாங்க. பரவால்லயா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதானே வேணாங்கிறது. கொஸ்டின் பேப்பர் அவுட் பண்றீங்களே?//

சார்... நான் இல்லைசார்... நொழைஞவுடனே கேட்டாங்க சார் அதத்தான் சார் சொன்னேன்...

நான் எல்லோத்தையும் நல்லா படிப்பேன் சார் படிச்சுட்டுதான் சார் பதில் எழுதுவேன்.... :)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//அந்த நேர்காணலில் ஒரு சின்ன நெருடலும் உண்டு! எல்லாவற்றிலும் வென்றவன் தோல்வி நேராமல் பார்த்துக்கொள்வானே?//

வெற்றி மட்டும் கண்டவருக்கு வெற்றின் அனுபவம் மட்டுமே இருக்கும் வெற்றியும் தோல்வியும் கண்டவனுக்கு இரண்டிலும் அனுபவம் இருக்கும்

(நைனா சப்போர்ட் எப்படி)

sabeer.abushahruk said...

சரிதான் ஹமீது,
ஒரு தகுதியற்றவனை ஊக்குவிப்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக தகுதி வாய்ந்தவனைப் பலி யிடுதல் ஏற்புடையதல்ல.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//அதற்காக தகுதி வாய்ந்தவனைப் பலி யிடுதல் ஏற்புடையதல்ல//


தகுதி வாய்ந்தவனுக்கு தோல்வின் அனுபவமும் அங்கு கிடைத்துவிட்டது அல்லவா

KALAM SHAICK ABDUL KADER said...

//தோல்வியை எதிர்கொண்ட அனுபவம் உனக்கில்லை. ஆதலால் தோல்வியையும் வாழ்வில் பலமுறை சந்தித்து அதை எதிர்கொண்டு மீண்டு வந்த வேறொரு நபரே இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஆவார்//

இக்கட்டுரையின் முத்தாய்ப்பான விடயம்.

“இனியவை நாற்பது” என்ற என் குறட்பாவில் கீழ்க்காணும் குறட்பாக்கள் இக்கருத்தினை ஒட்டியுள்ளவைகளாகும்:

அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
விடாதுழைப்புச் செய்து விடல்.


ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
கோபத்தை விலக்கி விடல்.

தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்
ஆர்வமுடன் செய்யப் பழகு.

வாழ்க்கைப் புயலை வரவேற்றுக் கொண்டால்
வாழ்க்கைப் பழகிடும் பார்

பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.

sabeer.abushahruk said...

//தகுதி வாய்ந்தவனுக்கு தோல்வின் அனுபவமும் அங்கு கிடைத்துவிட்டது அல்லவா//

சாரே, இங்கு அவன் தோல்வியின் அனுபவம் கேட்டு வரவில்லை. வேலை கேட்டு வந்துள்ளான். இங்கும் தோற்கவில்லை. துரோகம் இழைக்கப்பட்டான் என்பதே உண்மை. அட்லீஸ்ட் அவனுக்கு பதில் தெரியாத கேள்விகள் கேட்டு தோற்றவனுக்கு இலகுவான கேள்விகள் கேட்டு 'திறமையானவனுக்கு உழைப்பின்மீதான பிடிப்பை தளர்த்தாதிருந்திருக்கலாம். தோற்று தோற்று ஜெயிப்பவனைவிட ஜெயித்துக்கொண்டே இருப்பவன்தான் மேல். முதலாமவனை ஊக்குவிக்க இரண்டாவதாளை discourage செய்தல் பாவம்.

ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸானவனுக்கு வேலை கொடுக்காமல் அர்ரியர்ஸ் உள்ளவனுக்கு வேலை கொடுப்பது நீதம் என்று வாதிடுவது நேர்மையற்றது.

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

//ஒருவனுக்கு தோல்வியை கற்றுக்கொடுக்க யாருக்கும் உரிமையில்லைங்னா. //

இதில் தோல்வி கற்றுக்கொடுக்கப்படவில்லை...தோல்வியை அனுபவிக்காதவன் செயல்களில் அமைதி/நிதானம் இருக்காது.

அமைதியும் நிதானமும் கார்ப்பரேட் உலகத்தின் முடிவுகளை தீர்மானிக்க ஏற்கனவே பட்டுவந்த அந்த தோல்விகளின் சூழ்நிலை உதவியாக இருக்கும். இது வேலைக்கான தகுதியாக அந்த இன்டர்வியூ செய்தவர் நினைத்திருக்களாம்.

//தவிர, இங்கு தோல்வி மட்டும்தான் திணிக்கப்படுகிறது. மீண்டு வருவத கற்றுக்கொடுக்கப்படவில்லை.//

அப்ஜெக்சன் யுவர் ஆனர்...மீண்டுவருவதை கற்றிருக்கிறானா என சோதிக்கப்படுகிறது.

மு.செ.மு நெய்னாவின் கட்டுரையின் ஜிஸ்ட் "தோல்வியடைந்தவன் பல அனுபவங்களையும் பெற்றவன்' என்பதே...மார்க் சீட்டை மட்டும் வைத்து முடிவெடுக்க இ-மெயில் இன்டர்வியூ போதும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பாவம் அந்த நேர்முகத்தேர்வை நடத்தியவர் ஒவ்வொரு சப்ஜகட்டிலும் உக்காந்து, உக்காந்து எழும்பியவராக‌ இருக்கலாம்? நம்ம என்னா செய்யிறது? திடீர்ண்டு கம்பெனிக்கு வர்ர கஷ்ட, நஷ்டங்களை கண்டு பேஸ்மண்ட்டு கடகடண்டு ஆடிடக்கூடாதில்லையா? அதனால் கூட இருக்கலாம்.

ஒரு விசயத்தில் இறங்கும் பொழுது ப்ளேன் பண்ணித்தான் இறங்கனும். அதில் பாஸிட்டிவும் இருக்கும், நெகடிவ்வும் இருக்கும். வெறும் பாஸிட்டிவ்வை பத்தியே நெனச்சிக்கிட்டு திடீர்ண்டு நெகடிவ் எதாச்சும் வந்தா என்னா செய்வியெ? அதுக்காக கூட இருக்கலாம்.

நல்லாத்தான் ஓடிக்கிட்டு இருந்திச்சி "கோஸ்ட்டா கான்கார்டியா"ங்கற சொகுசு கப்பல். திடீர்ண்டு மாலுமி கரைக்கு பக்கத்துலெ இருந்த பாறையிலெ மோதவுட்டுட்டாரு. ( டைட்டானிக் பார்ட் 2 ல ஹீரோவா ஆயிடலாமுன்டு ம‌ன‌சுலெ நெனெச்சிக்கிட்டாரோ என்ன‌மோ? யாருக்குத்தெரியும்?)

க‌ப்ப‌ல் பார்க்கிற‌துக்கு பிர‌ம்மாண்ட‌மா சும்மா கான்கார்டு விமான‌ம் போல் காட்சிய‌ளித்தாலும் த‌ண்ணியிலெ க‌வுந்து போவும் பொழுது அதுலேர்ந்து உயிர் த‌ப்பிக்க‌ நீச்ச‌ல் தெரிஞ்சிருக்க‌னுமா? இல்லையா? மாலுமி மட்டும் ரொம்ப சூச்சியமா லைஃப் போட்லெ ஏறி யாருக்கு தெரியாம தப்பிச்சி வந்துட்டாரு. அந்த கப்பல்லெ பயணிச்ச மத்தவங்களையும் தன் உயிரே போனாலும் கடைசி வரை நிண்டு காப்பாத்தனுமா? இல்லையா? சொல்லுங்க.....

இங்கு நீச்ச‌ல் குள‌த்தை க‌ட்டி பல வருசம் நிர்வகிச்ச‌ ச‌ர்டிபிகேட்லாம் ப‌ய‌ன‌ளிக்காது. நீச்ச‌ல் தெரியுமாங்கிற‌து தான் முக்கிய‌ம்.

ஒருத்த‌ன் ந‌ல்லா ப‌டிப்பான். அறிவாளியும் கூட. அவ‌ன் வாங்காத‌ ச‌ர்டிபிகேட்டே இல்லைண்டு சொல்ல‌லாம். ஆனால் அவ‌னுக்கு நெருப்பை க‌ண்டால் அல‌ர்ஜி. அதை பார்த்தாலோ அல்ல‌து கிட்ட‌க்க‌ நெருங்கினாலோ ம‌ய‌க்க‌ம் வ‌ந்து விடும் அவ‌னுக்கு. க‌ம்பெனியிலெ மேனேஜ‌ர் ரூம்லெ திடீர்ண்டு நெருப்பு புடிச்சிக்கிடுச்சிண்டு வ‌ச்சிக்கிடுங்க‌. அந்த நேர‌த்துலெ ஓடுப்போயி அதை அணைக்க‌ முடியாம‌ல் போனாலும் ப‌ர‌வாயில்லை. தீய‌ணைப்பு நிலைய‌த்து ஃபோன் ப‌ண்ணுற‌துக்காச்சும் உஷார் இருக்க‌னுமா? இல்லையா? அப்படியே ம‌ச‌க்க‌ம் போட்டு உழுந்துட்டா? க‌ம்பெனி நெலெமெ என்னா ஆவுற‌து? ச‌ர்டிபிகேட்டோடெ ந‌ம்ம‌ ஒட‌ம்பும் க‌ருகிடுமா? இல்லையா?

அதுக்காக‌ எல்லாரும் ஃபைலாப்போயி தான் பாஸாக‌னும்டு சொல்ல‌லெ...ந‌ல்லா ப‌டிக்கிற‌த்தோட‌ வாழ்வில் குறுக்கிடும் இட‌ர்க‌ளையும் இல‌குவாக‌ கையாண்டு அதிலிருந்து வரும் பெரும் கஷ்ட, நஷ்டங்களிருந்து எல்லாத்தையும் காப்பாத்த‌ க‌த்துக்கிட‌னும்ண்டு சொல்ல‌ வ‌ந்த‌ க‌ட்டுரை தான் இது.

வாழ்க்கையிலெ ப‌ல‌ தோல்வியைக்க‌ண்டு ம‌ன‌ம் நொந்து துவ‌ண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் கொஞ்ச‌ம் உற்சாக‌ம் கொடுக்க‌ வேனுமா? இல்லையா?

மேற்க‌ண்ட‌வைக‌ளெல்லாம் என்னுடைய தன்னிலை விள‌க்க‌ம். இதுலெயும் எட‌க்கும‌ட‌க்கா கேள்வியெ கேட்டுப்புடாதியெ ச‌பீர் காக்கா...

அப்துல்மாலிக் said...

அனுபவப்பாடத்தால் இன்று உயர்ந்த நிலையில் இருப்போர் பலபேர்...

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//மார்க் சீட்டை மட்டும் வைத்து முடிவெடுக்க இ-மெயில் இன்டர்வியூ போதும்.//

அப்பாடா நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல தீர்ப்பு வந்துள்ளது

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//மேற்க‌ண்ட‌வைக‌ளெல்லாம் என்னுடைய தன்னிலை விள‌க்க‌ம். இதுலெயும் எட‌க்கும‌ட‌க்கா கேள்வியெ கேட்டுப்புடாதியெ ச‌பீர் காக்கா...//


விசயங்களை வெளிக்கொண்டு வரத்தான் இந்த கேள்விகள். எல்லாம் ஒரு ப்ளான் தான் நெய்னா

Yasir said...

நல்லதொரு ஆக்கம்...சுவையில் கசப்பு,உவர்ப்பு,இனிப்பு வருவதுபோல ,,வாழ்விலும் கஷ்டம்,சந்தோஷம்,வெற்றி,தோல்வி என்று வரவேண்டும் அப்பொழுதுதான் வாழ்வை சீராக எப்பொழுதும் கொண்டு செல்லும் பக்குவத்தை அடையமுடியும்....தோல்வி ஏற்படுவது சகஜம்தான்,தோல்வி வந்திடா வண்ணம் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டே நகர்த்த வேண்டும்..தொடர்ந்த வரும் தோல்விகளால் மன உளைச்சல் ஏற்பட்டு....மடிந்துவிடும் சுழ்நிலை ஏற்படும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு