அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
(அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
முன் பகுதி ஆக்கத்திற்கு உலகநடைமுறையில் தங்களுக்கு தெரிந்த பல கருத்துக்களை பதிந்தீர்கள். மார்க்கத்தின் அடிப்படையில் நமது குழப்பத்திற்கு எவ்வாறு ஆலோசனை பெற்று தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
(அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
முன் பகுதி ஆக்கத்திற்கு உலகநடைமுறையில் தங்களுக்கு தெரிந்த பல கருத்துக்களை பதிந்தீர்கள். மார்க்கத்தின் அடிப்படையில் நமது குழப்பத்திற்கு எவ்வாறு ஆலோசனை பெற்று தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
ஒவ்வொருவரும் தமது சிறிய தேவைகள் முதல் பெரிய தேவைகள் வரை அனைத்தையும் நிறைவேற்றித்தரும்படி வல்ல அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதை காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள்:
“செருப்பின் வார் அறுந்து போனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” என நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். (திர்மிதி)
இஸ்திகாரா தொழுகை:
நம் மார்க்கம் எல்லாவற்றுக்கும் வழி சொல்கிறது. இந்த உலகில் நாம் செய்ய நினைக்கும் காரியங்களை வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைத்து வெற்றி பெறும் வழியை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்துள்ளதை கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகிறது:
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்காஅத்கள் தொழுது கொள்ளுங்கள்.
பிறகு அல்லாஹ்விடம்,
اَللّهُمَّ إِنِّى أَسْتَخِيرُكَ بِعِلْمِك وَأَسْتَقْدِرُكَ
بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ
(தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)
خَيْرٌ لِّـي فِـي دِيـنِـي
وَمَعَاشِى وَعَاقِبَةِ أَمْرِى فَاقْدُرْهُ لى وَيَسِّرْهُ لى ثُمَّ بَارِكْ لى فيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلأَمْرَ شَرٌّ لى فِى دينى وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرى فَاصْرِفْهُ عَنِّى وَاصْرِفْنى عَنْهُ وَاقْدُرْ لِى الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنى بِهِ
‘‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பிஇல்மிக்க வஅஸ்தக்திருக்க பி குத்ரதிக்க வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அழீம். ஃபஇன்னக தக்திரு வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)
கைருன்லீ ஃபீ தீனி வமஆஷீ வ ஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹுலீ. வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன்லீ ஃபீதீனீ வமஆஷீ வ ஆகிபதி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி’’.
(அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையை வேண்டுகிறேன். உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றல் பெற்றவன். நான் ஆற்றல் இல்லாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நான் அறியாதவன். மறைவானவை அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன். அல்லாஹ்வே! இந்தக் காரியம் (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)
எனது மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் பரக்கத் செய்! இந்த காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி) அவர்கள், புகாரி : 6382,7390 ).
யார் ஒருவர் அல்லாஹ்விடம் நன்மையை நாடி பிரார்த்திக்கிறாரோ. பிறகு நல்ல நம்பிக்கையாளர்களிடம் ஆலோசனை செய்து தனது காரியத்தில் உறுதியுடன் இருந்தாரோ. அவர் ஒருபோதும் நஷ்டமடையமாட்டார்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! திருமண காரியங்கள், வேலையில் சேருவது, வேறு இடத்திற்கு வேலை மாற்றி செல்வது, தொழில் தொடங்குவது, பிள்ளைகளுக்கு எந்த காலேஜ் தேர்ந்தெடுப்பது, என்ன படிப்பது, மனை வாங்குவது, மனையை விற்பது, வீடு வாங்குவது, கட்டுவது, விற்பது போன்ற பெரிய காரியங்கள் முதல் நாம் சாதாரணமாக நினைக்கும் சிறிய காரியங்கள் வரையும். (நாம் செய்து முடித்து விடுவோம் என்று நினைக்கும் காரியங்கள்) மேலும் வாழ்வில் நமக்கு ஏற்படும் குழப்பமான காரியங்கள் எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்ய வேண்டியது (நஃபிலான) இரண்டு ரக்காஅத்கள் தொழ வேண்டும். தொழுத பிறகு மேற்கண்ட துஆவை கேட்க வேண்டும்.பிறகு நம் காரியங்களில் முயற்சிகள் செய்ய வேண்டும்.
நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து காரியங்களிலும், ஈடுபடுவதற்கு முன் இஸ்திகாரா தொழுகையை கடைபிடித்து வல்ல அல்லாஹ்வின் அருளால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைய முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்!.
வல்ல அல்லாஹ் பொறுப்பேற்க போதுமானவன்:
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும். (அல்குர்ஆன்: 3:109)
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன்: 4:132)
S.அலாவுதீன்
21 Responses So Far:
இம்மை மறுமைக்கு நன்மை தரும் பதிவு!
'இஸ்திகாரா' தொழுகையின் மகத்துவத்துவம் மற்றும் ஹலாலான தேவைகள் எதையுமே அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும் என்பதும் தெளிவாக்கி இருக்கிறீர். ஜஸாக்கல்லாஹ்.
// யார் ஒருவர் அல்லாஹ்விடம் நன்மையை நாடி பிரார்த்திக்கிறாரோ. பிறகு நல்ல நம்பிக்கையாளர்களிடம் ஆலோசனை செய்து தனது காரியத்தில் உறுதியுடன் இருந்தாரோ. அவர் ஒருபோதும் நஷ்டமடையமாட்டார். //
யாரும் இந்த நஃ பிலான தொழுகைகளை தொழுது இறைவனிடம் துஆ கேட்பதில்லை. இஸ்திகாரா தொழுகையை பற்றி யாரும் இன்னும் விளங்கவில்லை அதை பற்றி விளங்கி இருந்தால் மக்கள் அதிலேயை மோகம் கொள்வார்கள். மனிதனுடைய தேவைகளை பற்றி இறைவனிடமே கேட்க வேண்டும் அதிலும் இஸ்திகாரா தொழுகையில் தான் இருக்கிறது என்று தெளிவாக்கி இருக்கிறீர்கள் ஜஸாக்கல்லாஹ்.
தெளிவான தீர்வு !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...
உண்மை,வாய்மையுள்ள கட்டுரை.நன்றி அலாவுதீன் காக்கா
பகிர்வுக்கு நன்றி காக்கா
Assalaamu alaikum.
Dear S.Alavudeen kaka,
When we read your article in the way of beloved Islam is making us free of mind and release from the disgust and unnecessary stresses from the mind. The way of presence of the article with reliable sources (Hadees) making authenticated your each publications.
Keep it up in between the world things/articles.
சுலபமான தீர்வு ஆனால் நிரந்தர நிம்மதி கேரண்டி....அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் இத்னை நம் வாழ்வில் எந்நேரமும் எல்லாசெயலிலும் கடைபிடிக்க அருள் செய்வானக
To Brother S. Alaudeen,
நாம் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு அருளியவனாக, அனைத்தையும் தருபவனாக இருக்கிறான் எனும் உன் ஆக்கம் எல்லோருக்கும் பயன்பட்டிருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறுதியான தீர்வு இஸ்திகாரா தொழுகை என்பதை எங்களையெல்லாம் காத்திருக்க வைத்து கச்சிதமா சொல்லி இருக்கிறீங்க அலாவுதீன் காக்கா .
அதை நாம் அனைவரும் கடை பிடிப்போம்.
அலாவுதீன் காக்கா,
ஜஸக்கல்லாஹ்...
உண்மையில் பயன் தந்துவரும் தீர்வு இஸ்திகாரா தொழுகையும் இந்த துஆவும். அனுபவித்து வருகிறேன்.
இந்த துஆவை மனப்பாடம் செய்ய கடினமாக இருந்தால் பிரின்ட் அவுட் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாசித்து துஆ கேட்கலாம் தவறில்லை.
இந்த பதிவை படித்த பிறகு நிறைய குழப்பங்கள் தீரும் என்று நம்பலாம்.
தொடர்ந்து நல்ல விடையங்களை எல்லோரும் பயனடையும் வகையில் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களுடன் தெளிவுபடுத்திவரும் தங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
to Brother Thajudeen,
//பிரின்ட் அவுட் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாசித்து துஆ கேட்கலாம் தவறில்லை.//
நான் பிரின்ட் எடுத்து வீட்டில் தொழுகும் இடத்தில் வைத்ததை [ For my family members to use] பார்த்து விட்டீர்களா?
// ZAKIR HUSSAIN சொன்னது…
நான் பிரின்ட் எடுத்து வீட்டில் தொழுகும் இடத்தில் வைத்ததை [ For my family members to use] பார்த்து விட்டீர்களா? //
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
ஹஹ்ஹா...
நாம் எப்போது சந்திக்க போகிறோம் என்ற கேள்வியை கேட்காமல் கேட்டுவிட்டீர்கள். குழப்பமில்லாமல் விரையில் சந்திப்போம், என்னுடைய எண்ணம் உங்களை மலேசியாவில் சந்திக்க வேண்டும் என்று.இன்ஷா அல்லாஹ்.
//என்னுடைய எண்ணம் உங்களை மலேசியாவில் சந்திக்க வேண்டும் என்று.இன்ஷா அல்லாஹ்.// ஆமா காக்காவை கூப்பிட்டு பார்த்தாச்சு வர்ராப்ல தெரியல....எப்போண்டு சொல்லுங்க...கூட்டமாக போய் மலேசியாவில் இறங்கிடுவோம் :) சிரியஸாதான் சொல்றேன்
ஆஹட்டும்...மலேசியாவிற்கு கூட்டமாப்போய் இறங்கி ஜாஹிர் காக்காவுக்கு வேட்டு வைக்காமல் இருந்தால் சரி....
(வேட்டு வக்கிறதுண்டா கன்னாபின்னாண்டு செலவு பண்ணிட்டு பில்லை மட்டும் யாரு தலையிலயாச்சும் கச்சிதமா கட்டி உட்ரதுண்டு புதிய அர்த்தம் இனி வரும் தமிழ் அகராதியில் இடம் பெறும்).
சும்மா ஒரு தமாசுக்கு......
இஸ்திகாரா தொழுகையையும் துஆவையும் பற்றி ஓர் இக்கட்டான சூழலில் அலாவுதீனிடம் யோசனைக்கேட்டபோது சொன்னான்.
அவன் சொன்னபடி செய்தேன் என் பிரச்னைகள் விலகுவதைக்கண்டேன். அவனுக்க்கு ஃபோன் செய்து நன்றியைச் சொன்னேன்.
பி.கு.: ஃபீஸ் ஏதும் கேட்கவில்லை.
அல்லாஹ் போதுமானவன். அலாவுதீனுக்கு அல்லாஹ்விடம் துஆச்செய்தவனாக...
மலேசியா திட்டத்தில் என்னையும் சேர்த்துக்குங்க -ப்பா.
இப்பதான் கவனிச்சேன். "டிவியில் விற்கும் மருந்தை ஒரு மண்டலத்திற்கு வாங்கி உட்கொண்டதால் தனக்குண்டான ஆணிக்கால் நீங்கியதாக பேட்டி தரும் செட்டப் செய்யப்பட்ட நோயாளி சொல்வது போலல்லவா இருக்கு பின்னூட்டம். :("
அன்புச்சகோதரர்கள் அனைவருக்கும்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நானும், என்னுடன் உள்ள சகோதரர்களும் கடைபிடித்து வந்த இஸ்திகாரா தொழுகையைப்பற்றி தாங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து இங்கு பதிவு செய்தேன்.
இஸ்திகாரா தொழுகையைப்பற்றி அறிந்த பிறகு மொபைல் வாங்க நினைத்தாலும் இஸ்திகாரா தொழுகையை தொழுது விட்டு ஆலோசனை செய்து விட்டுத்தான் மொபைல் வாங்குவோம்.
சிறிய விஷயம் என்று எதையும் அலட்சியம் செய்தது கிடையாது.
இந்த துஆவை மனனம் செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் இந்த துஆவை தமிழ் அர்த்தத்தோடு பிரிண்ட் செய்து வைத்துக்கொண்டு பார்த்துக்கூட துஆ கேட்கலாம். அரபியில் கேட்பவர்கள் தமிழ் விளக்கத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டால் நல்லது. அரபி தெரியாதவர்கள் தமிழில் கேட்கலாம்.
இஸ்திகாரா தொழுகையை அலட்சியமாக நினைத்து விடாதீர்கள். தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து பாருங்கள் வல்ல அல்லாஹ்வின் அருளால் நல்ல மாற்றங்களை தங்களின் அனுபவத்தில் பார்க்க முடியும்.
கருத்திட்ட சகோதரர்கள்: அனைவருக்கும் நன்றி!
அலாவுதீன் காகா வின் ஆக்கங்கள் அனைத்தும் நம்மை இறை வழியில் அழைத்து செல்கின்றது
மலேசியாவுக்கு யாசிர், தாஜுதீன் , நெய்னா யாவரும் செலாமத் டத்தாங் [ நல்வரவு ]. எப்போது என்று சொல்லுங்கள். நான் ரெடி உங்களை வரவேற்று உபசரிக்க.
// ZAKIR HUSSAIN சொன்னது…
மலேசியாவுக்கு யாசிர், தாஜுதீன் , நெய்னா யாவரும் செலாமத் டத்தாங் [ நல்வரவு ]. எப்போது என்று சொல்லுங்கள். நான் ரெடி உங்களை வரவேற்று உபசரிக்க. //
Thanks for your formal Invitation... June or July... Yasir and MSM(N) your views?
//நான் ரெடி உங்களை வரவேற்று உபசரிக்க// காக்கா நன்றி ஃபார் யுவர் “செலாமத் டத்தாங்”..ஆனால் நான் முன்று குட்டீஸ்கூட(என் குழந்தைகள்தான் ) வருவேன் .யோசிச்சுதான் சொல்றீங்களா ??
தாஜூதீன் ...ஜுன் அல்லது ஜுலை ஒகே ஃபார் மீ,குழந்தைகளுக்கு விடுமுறை அப்பதான்
Post a Comment