Scene-1 “மாப்ளெ, இது என்னோட விசிட்டிங் கார்டு...கவர்மென்ட்லெ உனக்கு ஆக வேண்டிய விசயங்களில் எது குறுக்கு வழியிலெ கெடைக்க கஷ்டமா இருக்குதோ உடனே எனக்கு சொல்லு...உடனே முடிச்சி தர்றேன்...டீலிங்குக்கு தகுந்தாப்லெ நாமெ ரேட் பேசிக்கலாம்.”
Scene-2 “நான் முஸ்லீம்தான், அதுக்காக சாமி படம் கல்லா பக்கத்திலெ வச்சிருக்கிறதிலெ என்ன தப்பு? மத்த ஆளுங்க வரணும்னா நான் இப்படி செஞ்சாத்தான் முடியும்.”
Scene-3 “கல்யாணம் பண்ணும்போது பணம் எதுவும் வாங்கலீங்க...ஆனால் மாமனார் கொடுக்கனும்னு சொல்றது எதுக்கு ? அவர் அவருடை மகளுக்குதானே கொடுக்க சொல்றோம்..”.
Scene-4 “வியாபாரத்திலெ ரொம்ப ஞாயம் அநியாயம் பார்க்க முடியாதுங்க அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டா லாபத்தை பார்க்க முடியாதுல...”
Scene-5 “நான் செய்றது மார்க்கப்படி தப்புதான்....இப்ப நான் செய்யாட்டி இன்னொருத்தன் செய்யத்தான் போறான்..அதுக்கு நானே செஞ்சிட்டு நாலு காசு பார்க்கலாமே...”
Scene-6 “நம்மல்லாம் எப்ப மாப்ளே படிக்கிறது..நமக்கு தெரிந்த ஒரே வழி பேப்பர் ச்சேசிங்தான்.’
Scene-7 “என் முதலாளி ஒரு கேப்மாரி , அவனுக்கு சின்சியரா வேலைபார்க்கனும்னா நான் ஒன்னும் தியாகி இல்லை...அதனாலே இருக்கும்போதே என்னென்ன திருட்டுத்தனம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சி நாலு காசு தேத்தீக்கிட்டாதான் உண்டு’
Scene-8 “நல்லா இருக்கும்போது மட்டும் போட்ட ஆட்டத்தை பார்க்கனுமே....இப்போ பாயிலெ படுத்தபிறகு...உறவு உரிமையெல்லாம் கண்ணுக்கு தெரியுதா...இன்னும் படட்டும்....அப்போதான் புத்திவரும்...”
மேற்குறிப்பிட்ட வசனங்கள் எதுவும் நான் ஏதோ சீரியலில் பார்த்தது...திரைப்படத்தில் உள்ள வசனம் என நினைக்க வேண்டாம். அனைத்தும் நான் பார்த்த, கேட்ட விசயங்கள்.
இப்படி மனிதர்கள் விஷம் கக்க யார் அல்லது என்ன காரணம் என நினைத்திருக்கிறோமா?.
இதன் காரணங்கள் முக்கியமாக எதுவாக இருக்கும். மார்க்கம் சொல்லித்தந்த விசயங்களில் அதிக கவனமின்மை. இன்னும் சொல்லப்போனால் தீர்ப்பு நாளைப்பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. இருந்தால் இப்படி உலக ஆதாயத்துக்காக மிருக வாழ்க்கை வாழ சப்பைக்கட்டுகள் இருக்காது.
இதுபோல் நேர்வழியில்லாமல் கேள்விப்பட்ட விசயங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்களேன்....[கயவர்களை அறியும் முயற்சிதான் - இதுக்கெல்லாம் கேலக்ஸி டேப் பரிசாக கேட்கக்கூடாது ]
ரசனையும் யோசனையும் !
இப்போது மீடியாவின் பங்கு பல விசயங்களில் "தீர்மானிக்கும் காரணி'யாகி விடுகிறது. 2 நாளைக்கு முன் "தினத்தந்தி' பத்திரிகை பார்த்தேன். பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் [பிரின்ட் ஃபார்மேட்] பழைய ஞாபகத்தில் இப்படித்தான் இருக்கும் என நினைத்த என் கற்பனைக்கே ஒரு சவால்....வரி விளம்பரங்கள் அனைத்தும் சாலையோர மருந்துக்கடை மாதிரி ஒரே லாட்ஜ்மருத்துவர் மாதிரி இதை வாங்கி சாப்பிட்டால்........ !
இந்த விளம்பரங்களில் மயங்கியவர்கள் பல பேர் இப்போது மருத்துவ மனைகளில் யாராவது ஒரு நல்ல டாக்டருக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கலாம். நிறைய 'மன்மதன்"ஸ் எல்லாம் கண்டதையும் சாப்பிட்டு விட்டு எமர்ஜன்ஸி வார்டில் வேலைபார்ப்பவர்களை ஒழுங்காக சாப்பிடக் கூட விடமாட்டார்கள். எப்படி செய்திப்பத்திரிகைகள் எல்லாம் இப்படி மருந்துவியாபாரிகள் ஆனது என்பதற்கு முதல் காரணம் வாசகர்களின் ரசனை ரொம்பத்தான் மாறிக்கிடக்கிறது.
மருத்துவக் கேள்வி பதில்களில் கூட தனது பெர்சனல் விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்கு ஒரு டாக்டர் பதில் சொல்வதுபோல் இருப்பதும் ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது. பேசன்ட்டை பார்க்காமல் டயாக்னாசிஸ் செய்வது எப்படி இந்த டாக்டர்களால் முடிகிறது??? [பெயர்,ஊர் எல்லாம் நாமே கற்பனையில போடுறதுதான். அப்படி போட்டாதானே சர்குலேசன் எகிறுது!!! - ஒரு உதவியாசிரியர் செப்பியது இப்படி.
சரி நம் வலைத்தலங்களுக்கு வந்து பார்த்தால்..சில வலைத்தளங்கள் “பஸ்ஸ்டான்ட் கக்கூஸ்”.. மத சம்பந்தமாக எழுதுவதில் உள்ள வலைத்தளங்கள் மற்ற மதங்களை விமர்சிக்க [திட்ட] மட்டும் ஆரம்பித்தது போல் இருக்கிறது. மற்ற மதங்களைத்திட்டி ஒரு மதம் வளர்க்கமுடியாது.
சீரியல் பார்க்கும் பெண்களைத்திட்டிக்கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்களை என்ன செய்வது??...யாராவது பெண்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.
சரி, ரசனை மாற யோசனை என்ன?. [அப்பாடா தலைப்புக்கு தகுந்தமாதிரி எழுதவில்லை என என்னை யாரும் குறை சொல்ல முடியாது] யோசனை சொல்வதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் [இதிலேயே தெரியலெ...எனக்கு யோசனை சொல்லத்தெரியலேனு]
குறிப்பு: தலைப்பு கொடுத்தால் எழுதுகிறேன் என்று எழுதி அபு இப்ராஹிம் கொடுத்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். திட்றதா இருந்தால் என்னை மட்டும் திட்டவும்.
ZAKIR HUSSAIN
23 Responses So Far:
யாரும் இணையதளம் பார்த்துக்கொண்டிருக்கும்போதோ,அல்லதுஅதை மூடிவிட்டு திரும்பும்போதோ புன்முறுவலுடன் திரும்பினால் அது ஜாகிர் எழுதிய ஆர்டிக்ளாகத்தான் இருக்கும்.
அசத்தல் காக்கா :
நான்கில் இரண்டு இங்கே மீதமிருக்கும் இரண்டு எங்கே ?
நேற்று முன் தினம் இரவு பாக்கிஸ்தானிய நண்பர் ஒருவர் ஃபோன் செய்திருந்தார் அது அவருடைய அவசரம் பொறுக்க முடியவில்லை அவருக்கு என்ன வென்றால்.
எப்படி மின்னஞ்சல் / ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டை உடைத்து எடுப்பது ?படுத்தியெடுத்தார் காரணம் அவர் வீட்டில் நெருப்பு பற்றிக் கொண்டதை (ஆரம்ப நாட்களில் எச்சரித்திருந்தேன் அப்போது குடும்பமே எதிர் வாக்குவாதம் செய்தது) உணர்ந்து சிக்கித் தவிக்கிறார்....
சொன்னால் நீ யாரு சொல்வதற்கு ? என்று மே(ல்)தாவிகளாக இருப்பவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கும் !
//திட்றதா இருந்தால் என்னை மட்டும் திட்டவும்.//
'எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லே' எனும் ஒரு பழைய உள்குத்து சொலவடைதான் ஞாபகத்திற்கு வருது.
ஜாயிரு,
என்ன பெருசா சீன் காட்டறான்னுதான் நெனச்சேன். கடைசியில் எல்லாவற்றையும் ஒரு முடிச்சியில் இணைத்தது உனக்கே சாத்தியமான லாவகம். வாசிக்க மட்டுமல்ல யோசிக்கவுமான சிறந்த பதிவு.
//சீரியல் பார்க்கும் பெண்களைத்திட்டிக்கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்களை என்ன செய்வது//
நிச்சயம் பார்க்கிறதில்லே. ஆனா, வீட்டின் எங்காவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு வேலையில் இருக்கும் எனக்கு வசனங்கள் காதில்தானே விழுகிறது? என்ன செய்யட்டும்?
//??...யாராவது பெண்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.//
ஓ... அப்ப...
-இப்படிக்கு சபீரா பானு!
அ.நி.:
இந்தப் படம் என்ன desert safaariயா sky safaariயா? GXR எல்லாம் தொங்குது?!!!
சூப்பரு!
பெண்ணொருத்தி பின்னூட்டமிட்டது ஹைலைட்டு!
//இதுபோல் நேர்வழியில்லாமல் கேள்விப்பட்ட விசயங்கள்//
-------------------------------------------------------------------
களவாடி பிழைப்பதைவிட மதுமூலம் கிடைக்கும் வருவாய் தேவலையாம்.
வந்தாச்சு.அப்பரம் அதுஇதுன்டு பிரிச்சு பார்த்தால் வந்திருக்கவே கூடாதாம்.
வரதட்சனை வாங்கலையாம். ஆனால் காலை பசியாற மட்டும் 200 சஹனாம்.
விலக்கப்பட்டதை சாப்பிடுவதில்லையாம்.பணி மட்டும் செய்து பணம் கிடைக்குதாம்.
ஆபீஸ் பணத்தில் கைவைப்பதில்லையாம்.ஆனால் அங்குள்ள பொருள் அனுமதியின்றி எடுத்து வரப்படுகிறது.
சும்மா என்று கேட்டால் ஒரு தொகை கிடைக்காதாம்.அதனால் கடன் என்று கேட்டு வாங்கி விட்டு கொடுப்பதில்லையாம்.
ஆஹா ஜாஹிரு காக்கா இப்புடி சீனு 1, சீனு 2 ண்டு பட்டியல் போட்டு எழுதுறதா ஈந்தா எக்கச்சக்கமான மேட்டரை எழுதலாமே?
சாராயம் (அதன் வகையராக்கள்) குடிப்பது என்பது எவ்வளவு பெரிய பாவம் என்று கொஞ்சமும் உணராமல் அதற்கு கொடுக்கப்படும் சைடு டிஸ் மட்டும் ஹலாலான முறையில் பரிமாறப்பட்டதா? என்று உற்று நோக்கினால் என்னத்தெ சொல்றது? சொல்லுங்க....
பிறந்ததிலிருந்து ஒரு சொட்டு கூட ஆல்கஹால் குடிச்சது இல்லையாம். ஆனால் 7 வருசமா சாராயக்கடையிலெ (பார்) மற்றவர்களுக்கு ஊத்தி கொடுக்குறது மட்டும் தான் வேலையாம்.....
மேற்கத்திய நாடுகளில் பணிபுரியும் ஒரு சிலர் தான் வேலை செய்யுமிடம் ஒரு ஹராமான (சாராயக்கடை) இடம் என்று தீர்க்கமாக தெரிந்தும் அங்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதற்காக வேலை செய்து சம்பாதித்து பிறகு அதில் ஒரு தொகையை ஊர் நலன் விரும்பி போல் நடித்து நமதூர் பொது தர்மஸ்தாபனமான பைத்துல்மால் மற்றும் புஹாரி ஷரீஃப் போன்றவைகளுக்கு (நார்சா) கொடுத்து விட்டால் நம் சம்பாத்தியம் ஹலாலாக்கப்பட்டு விடும் இறைத்தண்டணையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் போலும்....இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
பெரும்பாலும் நமதூரில் கலியாண சமயத்தில் பெண் வீட்டினரிடம் பிச்சை எடுத்து விட்டு வெளியில் வெள்ளையும், சொல்லையுமாகவும், தொப்பி அணிந்து கொண்டு காரிலும், பைக்கிலும் வலம் வருகிறார்கள். பள்ளியில் முன் சஃபில் நின்று வணங்குகிறார்கள். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
காலமெல்லாம் மாமியார் வீட்டில் இருந்து கொண்டு நன்கு உண்டு,திண்டு வரக்கூடிய ஹஜ்ஜுப்பெருநாளுக்கு கொடுக்க இருக்கும் குர்பானி கிடாய் போல் உடலை நன்கு வளர்த்து (மாமியார்) வீட்டுக்கு செய்யவேண்டிய கடமைகள், பொறுப்புகளை மறந்து வெளியில் வியாக்கியானம் பேசித்திரியும் மருமகன்கள் (மாப்பிள்ளைகளல்ல கடும் கசப்பைத்தரும் வேப்பிள்ளைகள்) யாரை ஏமாற்றுகிறார்கள்?
மூச்சுக்கு முன்னூறு தடவை மவுத்து, ஹயாத்து பேசி ஹயாத்தை மட்டும் மனதில் தேர்ந்தெடுத்து கள்ளத்தனமாக காய் நகர்த்திவரும் கயவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் அடக்கம்) யாரை ஏமாற்றுகிறார்கள்?
இறைநிராகரிப்போர் புடைசூழ அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் எங்கோ ஒரு நாட்டில்/இடத்தில் ஈமான் என்ற இறையச்சத்துடன் உண்மையாக வாழ்ந்துவருபவர்கள் மேலானவர்களா? பள்ளிகள் பல சூழ இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊரில் இப்படி போலி வேசதாரிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் மேலானவர்களா?
முன்னப்பின்ன மவுத்தா போயிருந்தா தானே அதன் வேதனைகளும், கப்ரின் கூக்குரல்களும், விச ஜந்துக்களின் பிடுங்கள்களும், இன்னும் என்ன,என்ன அதாப்கள் வந்து ஆட்சி செய்யும் என்று நமக்கு விளங்கி இருக்கும்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
அயோக்கியர்களின் செயல்களை தோலுரித்துக் காட்டிய ஜாஹிர் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்ன விசயங்கள் மிகைத்து விட்டால்.புகைப் படத்தில் கார்கள் இருப்பது போல் அல்லாஹ் இப்பூமியை தலை கீழ் புரட்டி அழித்து விடுவான் என்பதை அயோக்கியர்கள் உணரட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நெய்னா சொன்னது:
// பிறந்ததிலிருந்து ஒரு சொட்டு கூட ஆல்கஹால் குடிச்சது இல்லையாம். ஆனால் 7 வருசமா சாராயக்கடையிலெ (பார்) மற்றவர்களுக்கு ஊத்தி கொடுக்குறது மட்டும் தான் வேலையாம்.....//
என்ன கொடுமையா இது. குடிக்க கூடியவனாவது அவன் மட்டும்தான்.பாவத்தை சுமக்கிறான்.ஊத்திக் கொடுப்பவனோ அதிலுருந்து வரக்கூடிய ஹராமான சம்பளத்தின் மூலம் அவனும் உண்டு அவன் மனைவி மக்கள் .தாய் தந்தையையும்.உண்ணவைத்து பாவத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றான்.
ஜாஹிர் காக்காவிற்க்கு சவால் விட்டு இத்தகைய அரிய சிந்தனைகளை கிளரிவிட்ட அபு இபுராஹிம் காக்கா அவர்களை இனிமையாக கண்டிக்கின்றோம்....ஜாஹிர் காக்கா இப்படிபட்டவர்களின் தோலைமட்டும் உரிக்கவில்லை எலும்பையே உரித்து காட்டி இருக்கின்றீர்கள்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சைத்தானுடைய வலையில் சிக்கியவர்கள் எவ்வாறு தீமைகளை சரிகாண்கிறார்கள் என்பதை அழகாக விளகிகியுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
இது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் அதிலிருந்து மீண்டு அல்லாஹ்வின் பக்கம் வரவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
நீங்கள் குறிப்பிட்ட 8 உதாரணங்களும் இன்றும் நிறைய பேர்களுக்கு பொருந்தும்.
இன்னொன்றையும் விட்டுட்டியளே, அவன் இப்படி சம்பாதிக்கிறான்... இவன் அப்படி சம்பாதிக்கிறான்... என்று உசுப்பொத்தியே மார்க்க தெளிவாக இருக்கும் தன் பிள்ளையையும், கணவையும் மார்க்கத்துக்கு புரம்பான சம்பாத்தியத்திற்கு தள்ளும் பெற்றோர்களையும் மனைவிகளையும் லிஸ்டில் சேர்த்துக்களாமே..
சகோ. அபுஈசாவை தொடர்ந்து நானும் உங்களுக்காக துஆ செய்கிறேன்...
சைத்தானுடைய வலையில் சிக்கியவர்கள் எவ்வாறு தீமைகளை சரிகாண்கிறார்கள் என்பதை அழகாக விளகிகியுள்ளீர்கள் ஜாஹிர் காக்கா. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லருள் புரிவானாக!
ஒரு சினிமா டைரக்டரைப் போல காட்சி வடிவமைப்பில், நகைச்சுவையுடன் கூடிய இக்கட்டுரையை பதிந்துள்ள சகோ. ஜாகிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
என்னா.. பிச்சைக்காரர்கள் குளிக்காமல் அழுக்கு உடம்புடன் கிழிந்த சட்டையை அணிந்து கொண்டு வந்து நிற்கிறார்கள்.
இவர்கள் குளித்து விட்டு நல்ல வெள்ளையும், சொல்லையுமா, செண்ட் அடிச்சி தொப்பி போட்டு வந்து நிற்கிறார்கள் வேறொன்றும் பெரிய வித்தியாசமில்லை.
"இவர்கள்" என்பது எதாவது ஒரு வகையில் பெண் வீட்டினரை பிழிந்தெடுக்கும் கயவர்களும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் பரதேசிகள் அனைவரும் அடங்கும் (அது யாராக இருந்தாலும் சரி).
அஸ்ஸலாமு அலைக்கும்.
நெய்னாவின் ஆதங்கம் புரிகிறது சபூர் கரோ பாய்.அல்லாஹ்வின் பார்வைலிருந்து எதுவும் தப்பித்து விடமுடியாது.
குறுக்கு வழியா இருந்தாலும் நான் நேர்மையா சம்பாதிப்பேன் என்று சொல்லும் ஆசாமிகளுக்கு குறுக்கு எலும்பை உடைப்பது போல் அமைந்து இருந்தது இந்த கட்டுரை (ஆமா இந்த ஆசாமின்னா யாருங்கா எங்கே தப்பு நடந்தாலும் இவர் பெயரை தான் சொல்றாங்க!)
//(ஆமா இந்த ஆசாமின்னா யாருங்கா எங்கே தப்பு நடந்தாலும் இவர் பெயரை தான் சொல்றாங்க!)//
அதானே அது யாருங்க ?
ஆ சாமி !?
கருத்துக்களை கனிவாக பதிந்த சகோதரர்கள் அபூபக்கர், ஜஹபர் சாதிக், சேக்கனா நிஜாம், அபுஈசா, Zaeisa[உங்கள் கருத்தை படித்தவுடன் நான் மகிழ்ந்தேன்.
அனைவருக்கும் நன்றி.
தாஜுதீன்...நீங்கள் சொன்ன விசயம் உண்மையிலேயே சேர்த்திருக்க வேண்டியதுதான். சாகுல் கேட்ட 'ஆசாமி'' நான் சொன்ன தினத்தந்தியில் நிறைய இருந்தார்.
சபீரா பானு [ அவனா நீ???]
Thank you to Abu Ibrahim for your wonderful editing.
Brother Naina's comments can be published as an article.
காலமெல்லாம் மாமியார் வீட்டில் இருந்து கொண்டு நன்கு உண்டு,திண்டு வரக்கூடிய ஹஜ்ஜுப்பெருநாளுக்கு கொடுக்க இருக்கும் குர்பானி கிடாய் போல் உடலை நன்கு வளர்த்து (மாமியார்) வீட்டுக்கு செய்யவேண்டிய கடமைகள், பொறுப்புகளை மறந்து வெளியில் வியாக்கியானம் பேசித்திரியும் மருமகன்கள் (மாப்பிள்ளைகளல்ல கடும் கசப்பைத்தரும் வேப்பிள்ளைகள்) யாரை ஏமாற்றுகிறார்கள்?
---------------------------------------------------------------------
super naina
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடைசியில் பத,பதைப்போடு ஓடும் ரயிலில் ஏறும் மனனிலையில் இதை எழுதுகிறேன். ஊருக்கு போய் ஆக வேண்டிய கட்டாயம் சகோ.ஜஹீர் கட்டுரை படித்து கருத்து சொல்வதென்பது. அது நினைத்ததும் கருத்து எழுதக்கூடிய அளவில் மேலோட்டமா இருக்காது. நன்கு படித்து வாங்கி,செறித்து பின் எழுதனும். இல்லேன்ன விசயம் தெரியாதவனு நினைப்பாங்க!(விசயம் தெரியாதவந்தான் சும்ம ஒரு பில்டப்)அதுபோல் இவர்கட்டுரைக்கு கருத்து எழுதுவதே நம்மை நாமே பட்டை தீட்டி கொள்வது போல். வழக்கம் போல் கலக்கல்......தூள்!
//இதுக்கெல்லாம் கேலக்ஸி டேப் பரிசாக கேட்கக்கூடாது ]///
அசத்தல் காக்கா: நேற்று இங்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி சந்தப்பட்டவைகளை குவித்து வைத்து ஸாரி பரப்பி வைத்து குயில்களின் குரல்கள் கொண்டு வழிந்தோடும் (செயற்கை) புன்னகையின் ஊடுருவலுடன் விற்றுத் தள்ளும் ஒரு இடத்திற்கு சென்றேன் அங்கே ஒரு மூலையில் கூட்டம் வழிந்தது என்ன வென்றும் எட்டிப் பார்த்தால் ஒளி வட்டத்திற்குள் ஒருவர் சென்றால் அவர் என்ன செய்கிறாரோ அவைகள் அனைத்தையும் செய்யாதே என்று எதிர்மறையக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது. வட்டத்திற்குள் சென்றவர் என்ன செய்வதன்றே தெரியாமல் ஓடி வெளியில் வந்து விடுகிறார்...
காட்டு : வட்டத்திற்குள் சென்றதும், ஏன் வந்தாய்?, அதற்குள்ளேயே நகர்ந்தால் நகராதே !, உட்கார்ந்தால் - உட்காராதே !, திரும்பினால் - திரும்பாதே... இப்படியாக தொடர்கிறது...
என்னடா இதுன்னு தமிழ் அறவே தெரியாத ஃபிலிப்பினோவிடம் கேட்டால், ரோபோ உங்களை உசுப்புகிறது என்றார்... விலை ? - ஓ இதுக்குத்தான் காசு கொடுத்து வினை வாங்குவதோ !? என்று அங்கிருந்து நகர்ந்த எனக்கு தோன்றியது..
அடப்பாவிங்களா ! இதத்தானடா ஊட்டுல பெரியவங்க செய்றாங்க அங்கே மட்டும் ஏன் மொறைப்பு !
//அடப்பாவிங்களா ! இதத்தானடா ஊட்டுல பெரியவங்க செய்றாங்க அங்கே மட்டும் ஏன் மொறைப்பு !/// ஹா ஹா ஹா ஹா ...குசும்பு of த இயர்
//ஹஜ்ஜுப்பெருநாளுக்கு கொடுக்க இருக்கும் குர்பானி கிடாய் போல் //
To MSM Naina & Harmy Abdul Rahman
நானும் ரசித்த வரிகள்...இதுபோல் எழுத அதிராம்பட்டினத்து ஆட்களால்தான் முடியும். இயற்கையிலேயே சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் அதிகம் உள்ள ஆட்கள் நம் ஊர்காரர்கள்தான்.
முத்துப்பேட்டை ஆட்களும் [ எனக்கு தெரிந்து ] சளைத்தவர்கள் அல்ல..
Post a Comment