Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூணுக்கு வந்த டவுட்டு ! - ரிலாக்ஸ் ப்ளீஸ்... 33

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2012 | , ,


'ஹ‌லோ நாங்க‌ டாக் எஃப் எம்மிலிருந்து பேசுறோம்'

'அப்ப‌ வாயிலிருந்து பேச‌லையா..?'

'வார‌ம் நாங்க‌ ஒரு ந‌ம்ப‌ருக்கு போன் போடுவோம்'

'என் ந‌ம்ப‌ர் மொத்த‌ம் ப‌த்து ந‌ம்ப‌ர் வ‌ருமே நீங்க‌ ஒரு ந‌ம்ப‌ர்'ன்னு சொல்ற‌து த‌ப்பு '

'ஹ‌லோ நீங்க‌ எவ்ளோ பேசினாலும் பேசுங்க‌ உங்க‌ பேரு சொல்லுங்க‌?'

'என் பேரு மூணு '

'மூணுன்னு ஒரு பேரா?'

'ஆமா, அதுச‌ரி உங்க‌ எஃப் எம் எங்கிருக்கு?'

'துறைமுக‌ம் தெரியுமா? '

'முத‌ல்ல‌ துறையே தெரியாது அப்புற‌ம் அவ‌ரு முகத்த‌ மட்டும் எப்ப‌டிங்க‌ தெரியும்..'
'ஹ‌லோ ஹ‌லோ துறைமுக‌ங்கிற‌து போர்ட் '

'ஃபோர்ட்டுன்னா?'

'க‌ப்ப‌ல்லாம் வ‌ந்து நிற்குமே அங்க‌'

'க‌ட‌ல்லேர்ந்தா பேசுறீங்க‌? '

'இது ம‌ட்டும் தெரியுது'

'என‌க்கு எல்லாம் ந‌ல்லா தெரியும் இதோ எதிர்'ல‌ போற‌ ஆட்டோ,அதோ அங்...'

'ஹ‌லோ அந்த‌ தெரியுற‌த‌ கேட்க‌ல‌'

'ச‌ரி விடுங்க‌ உங்க‌ளுக்கு என்ன‌ வேனும்? '

'நாங்க‌ ஒரு கேள்வி கேட்போம் அதுக்கு நீங்க‌ ப‌தில் சொல்ல‌னும்'

'ச‌ரி கொஸ்டீன ஈஸியா கேளுங்க‌ இல்லாட்டி க‌ட‌வாய்ப்ப‌ல் தெரியுற‌ அள‌வுக்கு கொட்டாவி வ‌ரும் '

'காத்ம‌ண்டு இது எந்த‌ நாட்டோட‌ த‌லைந‌க‌ர்?'

'பேருலேயே ம‌ண்டு இருக்கிற‌த‌ பார்த்தா க‌டுமையான‌ ம‌ண்டுக‌ள் இருக்கிற‌ நாடாயிருக்கும்'

'பேர‌ சொல்லுங்க‌'

'அதான் மூணு 'ன்னு சொன்னேனே'

டூன் டூன் டூன் டூன் டூன் டூன்.....
____________________________

அதிரைநிருப‌ரில் ஏதோ சீரியஸா பேசிகிட்டு இருந்தாங்களா அங்கே ஒரு பண்பலை வர்த்தக சேவை வானொலி டியூனிங்கில் கிராஸ் செய்தால் எப்படியிருக்கும் யோசனையிலிருந்தேனா அதான்... :)

- அஹ்மது இர்ஷாத்
................................................................
Keep Smiling

33 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹலோ... இர்ஷாத்ங்களா ?...

ஹைய்யா எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ சந்தோஷமா இருக்கு லைனு கிடைச்சதும்.... என்னா எழுதுறதுன்னு தெரியலீலீலீலீங்க....

நீங்க ரொம்ம்ம்ம்பா அழ்ழ்ழ்ழ்ழ்கா எலுடீறீங்க !!! ஹைய்ய்ய்ய்யோ... கையெல்லாம் நடுங்குதுங்க... உங்ளுக்கு பதில் தருவதற்கு....

இங்கே (தமிழ் பண்பலை) ஒன்னு ஆரம்பித்திருக்கானுங்க... என்னமா படுத்துறாய்ங்க... இருந்தாலும் ஒருசில குரல்கள் நன்றாக இருக்காமே (இதை நான் சொல்லவில்லை)?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹலோ,ஹலோ,ஹலோ. சாரி லைன் கிராஸ்.துறை முகத்திலேர்ந்து ( எஃப்.எம்) என்று சொன்னா ஃ பிஸ்ஸர் மேனா?

சேக்கனா M. நிஜாம் said...

சபாஷ் ! சரியான ஆ“ ரம்ப ” மாக இருக்குது.......முடியலிங்க !

வாரக்கடைசி நாள் என்பதால் இப்படியொரு “ ரிலாக்ஸ் “ பதிவோ ?

ZAKIR HUSSAIN said...

ஹலோ...ஹலோ..கொஞ்சம் உங்க டி வி வால்யூமை கம்மி பன்னுங்க>>....

எங்க வீட்லதான் டி வி யே இல்லையே..அப்புறம் எப்படி கம்மி பண்ரது??

Anonymous said...

இந்த வாரம் கவிதைப்போரில் ஆரம்பித்து இப்படி முடிகிறது.

அடிக்”கடி” வாங்க அஹமது இர்ஷாத்

Ebrahim Ansari

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நான் என்னம்மோ மூணுலெ மொதல்லெ ஆம்ஸ்ட்ராங்கு வலது காலெ வச்சாரா? இடது காலெ வச்சாரா? ரெண்டு காலையும் ஒன்னா வச்சிப்புட்டாரா? இல்லாட்டி அவருக்கு முன்னாடி வேறு யாராச்சும் காலெ, கையெ அங்கு வச்சிக்கிராங்களாண்டு புதுசா ஒரு கேள்வியெ அறிவியல் உலகமே எழுப்பி அதுக்கு பதில் இப்பொ தேட ஆரம்பிச்ச‌ மேட்டரா ஈக்கிமோண்டு நெனெச்சிக்கிட்டேன்....

செரமப்பட்டு படிச்சி லேட்டா தான் சிரிக்க முடிஞ்சிச்சி....

பரவாயில்லெ...இந்தெ வேலையிலேயும் எறங்கியாச்சா???

Shameed said...

ரொம்ப நாளைக்கு அப்புறமா போன் போட்டாலும் போட்டிங்க செம போட போட்டுடீங்க இப்புடி அடிக்கடி போன் போடுங்க !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதயம் இல்லைன்னா
எதையும் எழுதலாம்னு
யாரோ சொன்னோராமே ?

அது யாரு ?

Ahamed irshad said...

ஆஹா..வ‌ரிசை கட்டி நிக்கிறாங்க‌ளே..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அம்பி... ஒவ்வொரு callலா எடு.. ! பார்த்து எடு.. கேஸ் கீஸு புக்காகமா ? பார்த்துக(டா)ப்பா !

sabeer.abushahruk said...

இர்ஷாத்...
ரொம்ப நன்றி சிரிக்க வைத்தமைக்கு. செம டென்ஷனான பதிவுகளா தொடர்ந்து வந்ததற்கு உங்களில் பதிவு ரொம்ப ஆறுதலா இருக்கு.

இப்ப எல்லா எஃப் எம்களும் "கொலைவெறி"யோடு அலைவதால் உங்கள் எஃப் எம் ஒரு மருந்து.

அது சரி... இதுல நீங்க எஃப் எம்மா மூனா?

Ahamed irshad said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

இப்ப அந்த மூணு ஒரு பாட்டுக்கு 15 லட்சம் கேட்கிறானாம்

ஆனா இங்கிலீஷில்தான் ரைட்டுவானாம். அவனே படுத்துவானாம்...ஐ மீன் பாடுவானாம் :)

Ahamed irshad said...
This comment has been removed by the author.
Anonymous said...

மூன் அப்போ அப்போ வந்து கருத்துக்களை சொல்லி விட்டுபோவார். திடீர் என்று வருவார் எப்போ வருவார் எந்த நேரத்தில் வருவார் என்று சொல்ல முடியாது. மூன் இர்ஷாத் நன்றாக சிந்திக்க வைத்துள்ளார் மூனுக்கு வந்த டவுட்டு இப்போ கிளியர் ஆகியிருக்கும். இவ்வளவு பேர் விளக்கம் கொடுத்து விட்டார்கள் மூனுக்கு டவுட்டு வராது வந்தாலும் அதை ரிலாக்ஸ் பண்ணாமல் போகாது. மூன் அப்போ அப்போ வந்து கருத்துக்களை சொல்லி விட்டுபோவார். திடீர் என்று வருவார் எப்போ வருவார் எந்த நேரத்தில் வருவார் என்று சொல்ல முடியாது. மூன் இர்ஷாத் நன்றாக சிந்திக்க வைத்துள்ளார் மூனுக்கு வந்த டவுட்டு இப்போ கிளியர் ஆகியிருக்கும். இவ்வளவு பேர் விளக்கம் கொடுத்து விட்டார்கள் மூனுக்கு டவுட்டு வராது வந்தாலும் அதை ரிலாக்ஸ் பண்ணாமல் போகாது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மீன‌ வெச்சுக்கிட்டு ஏன் பாடுறீங்க‌ ..பூன‌ தூக்கிட்டு போயிற‌ போவுது..:)//

பொறிஞ்சுகிட்டு இருக்கிறது வந்து பாய்ந்திடப்போவுது !

அதெல்லாம் இருக்கட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒரு ஹாஸ்யம் (ஜோக்குன்னுதான் எல்லோரு சொல்றாங்களே) படித்தேன்...

"என்ன புலவரே! முன்னே மாதிரி இப்பொவெல்லாம் அதிகம் சபைக்கு வந்து பாட்டுக்கள் பாடுவதில்லையே?" - என்று மன்னர் கேட்க..

"மன்னா இப்பொவெல்லாம் ப்ளாக்கில் எழுதவே நேரம் போதவில்லை எங்கே இங்கேயெல்லாம் வரமுடியவில்லையே" என்றார் புலவர்...

ப்ளாக்(கும்)மெயில்(லும்) தொடர்வதாலே !

Ahamed irshad said...

ச‌மீப‌த்தில் ப‌டிச்சி சிரிச்ச‌து..:))

//

சாப்பிட்டுட்டு மாவாட்டினா ப‌சிக்குது,அத‌னால‌ முன்னாடியே மாவாட்டிடுறேனே..

//

Anonymous said...

// மீன‌ வெச்சுக்கிட்டு ஏன் பாடுறீங்க‌ ..பூன‌ தூக்கிட்டு போயிற‌ போவுது..:) //

மீன் பொறிஞ்சுகிட்டு இருக்கிறதோட பூனையும் சேர்ந்து பொரிய போகுது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி இர்ஷாத், வழக்கமா வலை மேய்ச்சலில் மூழ்கியிருக்கும்போது ஒரு வாரப் பத்திரிக்கையில் வாசித்தது...

வானம் பார்த்து ஜோஸியம் சொல்லும் "வாநிலையறிக்கை - ரமணன்" ஒரு கேள்விக்கு அளித்த பதிலால் இவரெல்லாம் வாநிலை-ஜோஸிய நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார்னு ஒரே கொல்ல்ல்ல்லப்ப்ப்ப்பமா இருக்கு(டா)ப்பா !!

"முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்தக் கோருகிறது தமிழகம்?

விடை: 142 (அடிதான் சரி...)

ரமணன்: "இருங்க... கொஞ்சம் யோசிச்சு சொல்றேன். 148 கன அடி. சரியா?"

மழை வருமா வராதா அப்படியே வந்தாலும் அந்த கன அடி ஞாபகத்திலேயே இந்த பதிலையும் சொல்லியிருக்கார் !!!!!!

உம்மஞ்சாண்டி இதைக் கேட்டாருன்னா பூரிச்சு போயிடுவார் !!!!!

KALAM SHAICK ABDUL KADER said...

நகைக்க வைத்த இர்ஷாத் அவர்களின் புகைப்படம் காண அவா. அ.நி. வலைத்தளம் ஒரு பல்கலைக்கழகம். மார்க்க அறிஞர்கள், கவிஞர்கள், புகைப்படக்கலைஞர்கள், சிறந்த எழுத்தாளர்கள், சுய முன்னேற்றக் கட்டுரையாசிரியர்கள் வரிசையில் வருங்காலத்தில் தனியாக வானொலி அமைத்துத் தேனொலிப் பாய்ச்சும் நகைச்சுவை மன்னராக விளங்கும் நண்பர் இர்ஷாத் வருகை எஙகளைப் போன்ற வயதில் மூத்தோர்க்கு மிகுந்த புத்துணர்வினை ஊட்டும் புன்னகை. இறுக்கமாய் இருந்த இவ்வாரத்தில் இப்படிப்பட்ட நகைச்சுவை விருந்து இதமானது இதயத்திற்கு.

sabeer.abushahruk said...

(நகைக்க வைத்த இர்ஷாத் அவர்களின் புகைப்படம் காண அவா.) 
அவர் தருமுன் முகத்தின் சாயலை யூகிக்க சில டிப்ஸ் கவியன்பன்:

சட்டென
மனதில் தங்கும்
இலகுவான முகம்

இளமை தேங்கியிருக்கும் முகத்தில்
முக்கால்வாசிப் புன்னகை
கால்வாசி சிந்தனை

எந்த 
அலைவரிசைக்கும்
ட்ட்யுனாகும் சாதுர்யமான
இளநகை

குழைந்த கேசம்
இழையோடும் மீசை

(இவ்வளவுதான் நான் எப்போதோ பார்த்த அந்த பஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் காணக்கிடைத்தன)

அ.நி.: ஓர் ஐடியா?
இங்கு பதியும் புகைப்படங்களை வைத்து நம்மாட்களின் தன்மையை யூகிப்போமா (இன்னொறு "இவர்களும் அதிரை நிருபரே"?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அ.நி.: ஓர் ஐடியா?
இங்கு பதியும் புகைப்படங்களை வைத்து நம்மாட்களின் தன்மையை யூகிப்போமா (இன்னொறு "இவர்களும் அதிரை நிருபரே"?///

அப்படியே ஆகட்டும் குருவே ! "இவர்களின் படங்கள் அதிரைநிருபரின் நிழற்படங்களே"

பழகிப் போச்சு "தலைப் பூ" சூட்டியே !

ZAKIR HUSSAIN said...

அதிரை மணத்தில் சில வலைப்பூக்கள் வெகுநாட்களாக அப்டேட் செய்யாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது புதிதாக அப்டேட் செய்தால் நல்லது. [ நாங்களும் வலைப்பூ ஆரம்பிப்போம்ல என ஆரம்பித்ததுதான் எங்கள் 'தேன் துளி' அது என்னமோ ஒஸ்வாஸ் பள்ளிக்கூடம் மாதிரி ஒரு மாற்றமும் இல்லை.. ஹாஜா...என்மேலெ காண்டு ஆவாதே...]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது புதிதாக அப்டேட் செய்தால் நல்லது.//

ஆமா ஆமா ! ரிலாக்ஸா இருக்கும்போதே சொல்ல வேண்டியதை சொல்லிடுங்க... :)

ZAKIR HUSSAIN said...

எங்கள் ரியாஸ் கூட வலைப்பூ ஆரம்பித்தான். மற்ற வலைப்பூவை விட ஒரு விசயத்தில் வித்யாசமானது இது.

# மற்ற வலைப்பூவில் என்ன வெளியிடப்பட்டிருக்கிறது என்று அதை நடத்துபவர்களுக்கு தெரியும். ரியாஸ் வலைப்பூவில் என்ன வெளியாகி இருக்கிறது என்று அவனுக்கே தெரியாது.

இந்த கமெண்ட்டுக்கு பதில் அவன் எழுதுவான் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஒரு ஆறு மாதம் கழித்து இந்த விசயத்தை "[சொடுக்கி---அது என்ன சொடுக்கி என கேட்கப்டாது..எல்லாரும் எழுதுறாய்ங்கனு நானும் எழுதரேன்] சொடுக்கி பார்க்கவும்.

அவன் கமென்ட்ஸ் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியம் மாதிரி...ஹால்ஃப் இயர்லி , குவார்டர்லி..இப்படித்தான் இருக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவன் கமென்ட்ஸ் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியம் மாதிரி...ஹால்ஃப் இயர்லி , குவார்டர்லி..இப்படித்தான் இருக்கும்//

என்னா காக்கா இபப்டி சொல்லிபுட்டியே... எனக்கு ரெகுலராக மெயில் வருவதே... ரியாஸ் காக்காவிடமிருந்து ! (அது இவங்க இல்லைன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ்) :)

Anonymous said...

அபுல்க‌லாம் காக்கா..முன்னாடி என் ஃப்ரோஃபைலில் என் புகைப்ப‌ட‌ம் இருந்த‌து..சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு எடுத்துவிட்டேன்..என் புகைப்ப‌ட‌ம் காணும் அள‌விற்க்கு உங்க‌ளுக்கு ஆர்வ‌ம் ஏற்ப‌ட‌ நான் என்ன‌ செய்தேன்'னு விள‌ங்க‌வில்லை..

அஹ்மது இர்ஷாத்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தம்பி இர்ஷாத்து....

மூணு மாதிரி மூக்கும்,முழியுமா ஈப்பியளாக்குண்டு தான்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இது நகைச்சுவை பகுதியாதலால் ஊரில் நடந்த ஒரு சுவையான‌ நகைச்சுவையை இங்கு பதியலாமுண்டு நெனெக்கிறேன்.

குடும்பத்தில் உள்ள ஒருவர் ஒரு வெள்ளைக்கார நாட்டில் இருக்கும் அவர் குடும்பத்தைப்பார்க்க ஊரிலிருந்து செல்ல வேண்டி இருந்தது. அங்கு பிள்ளைப்பேறு நடந்திருப்பதால் அதற்கு வேண்டிய நாட்டு மருந்துகள் முறையே வாங்கி சுத்தம் செய்து, பொடி செய்து தனித்தனி பேக்கிங் செய்தும் கையோடு கொண்டு செல்ல திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்தும் அதில் அந்த நாட்டு சட்டப்படி முறையே பொருளுக்கு வெளியே ஆங்கிலத்தில் பொருளின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதனால் நானும் ஒவ்வொரு பொருளுக்கு மேலே எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கருப்பு மார்க்கர் பேனாவில் எழுதி வந்தேன்.

உதாரணத்துக்கு...

சுக்கு (ட்ரை ஜின்‍ஞ்சர்)

ஊறுகாய் (பிக்ள்)

அரிசி மாவு (ரைஸ் ஃப்ளோர்)

தேயிலை (டீ ப‌வுட‌ர்)

அப்ப‌டி ஒரு மாதிரியா ச‌மாளிச்சி எழுதிக் கொண்டு வரும் பொழுது
திடீரென‌ ஒரு பொட்ட‌ல‌த்தை காண்பித்து இது 'உம்மாச‌லிமா கொட்டை' என்றார்க‌ள். குபீரென‌ சிரித்து விட்டு சொன்னேன் இத‌ற்கு உல‌கில் எந்த‌ டிக்ஸ‌ன‌ரியில் தேடினாலும் அர்த்த‌ம் கிடைக்காதே என்று...விடவில்லை பிற‌கு இன்னொரு பொட்ட‌ல‌த்தை எடுத்து இது 'புள்ளெப்பெத்த‌ ம‌ருந்து' என்றார்க‌ள் (இதற்கு பேபி டெலிவ‌ர்டு மெடிசின் என்றா எழுத‌ முடியும்?)

நாட்டு ம‌ருந்து பொருட்க‌ளுக்கு த‌னியே ஒரு த‌மிழ்/இங்கிலீஸ் டிக்ஸ‌ன‌ரியும் அந்த‌ க‌டையில் மருந்துகளுடன் சேர்த்து வைத்து விற்றால் இது போன்ற‌ ச‌ம‌ய‌த்தில் ப‌ய‌ன்ப‌டும்.

முறையான‌ ஆங்கில‌ அறிவு இல்லாமையால் எவ்ளோ கூத்து பாத்திய‌ளா?

உங்க‌ளுக்கு யாருக்காச்சும் இப்ப‌டி ந‌ட‌ந்த‌துண்டா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முறையான‌ ஆங்கில‌ அறிவு இல்லாமையால் எவ்ளோ கூத்து பாத்திய‌ளா?//

ஆங்கில அறிவு மட்டுமா ? முறையான தமிழ் அறிவும் ஆர்வமும் இருக்கனுமே ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி இர்ஷாத் புன்னகைச் சிந்த வடிக்கும் இக்கட்டுரையினைப் படித்ததும் அவர் அகத்தின் அழகு முகத்தில் உறுதியாய்த் தெரியும் என்று என் மனம் சொன்னதால், அதனை உறுதி செய்யவே உங்களின் புன்னகை முகம் காண வேண்டினேன். கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதைத் தூரிகை வரைந்தக் குறிப்புகளை வைத்துப் பார்த்தால் என் கணிப்புச் சரியாகவே இருக்கும்.

அப்துல்மாலிக் said...

இர்ஷாத்தின் தனக்கேயுறிய நக்கல் வரிகள்... அருமை

Yasir said...

நக்கல் + நாசூக்கு + நகைச்சுவை + நல்ல கருத்து + கலக்கல் = அஹமது இர்ஷாத்...வாழ்த்துக்கள் சகோதரரே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு